செவ்வாய், 13 மே, 2014

தமிழக சட்டப் பல்கலை, சட்டக்கல்லூரிகளில், ஐந்தாண்டு படிப்புகள் மற்றும் அரசு கலை, அறிவியல்கல்லூரிகளில் இளங்கலை பட்டப் படிப்புகளுக்கான விண்ணப்பவினியோகம், நேற்று துவங்கியது

தமிழக சட்டப் பல்கலை, சட்டக்கல்லூரிகளில், ஐந்தாண்டு படிப்புகள்மற்றும் அரசு கலை, அறிவியல்கல்லூரிகளில் இளங்கலை பட்டப்படிப்புகளுக்கான விண்ணப்பவினியோகம், நேற்று துவங்கியது. விண்ணப்பங்களை வாங்க, ஆயிரக்கணக்கான மாணவர்கள்குவிந்தனர்.

தமிழ்நாடு அம்பேத்கர் சட்டப் பல்கலை மற்றும்தமிழகத்தில் உள்ள அனைத்து சட்டக் கல்லூரிகளிலும்,மாணவர் சேர்க்கை, கலந்தாய்வு மூலம் நடத்தப்படுகிறது.
சட்டப் பல்கலையில், ஐந்தாண்டு பி.ஏ., - பி.எல்., மற்றும்பி.காம்., - பி.எல்., படிப்புகள்; சட்டக் கல்லூரிகளில்,ஐந்தாண்டு பி.ஏ., - பி.எல்., படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் நேற்று முதல் வினியோகிக்கப்பட்டன.
சென்னையில் உள்ள அம்பேத்கர் சட்டப் பல்கலையில்,துணைவேந்தர் வணங்காமுடி, விண்ணப்ப வினியோகத்தை துவக்கி வைத்தார். அப்போது அவர் கூறுகையில்,''விண்ணப்பங்களை, ஜூன், 6ம் தேதிக்குள் பூர்த்தி செய்து அளிக்க வேண்டும். அம்மாதம், 13ம் தேதி, 'ரேங்க்'பட்டியல் வெளியிடப்படும். மூன்றாண்டு சட்டப் படிப்புகளுக்கு, இம்மாதம், 26ம் தேதி முதல் விண்ணப்பங்கள்வினியோகிக்கப்படும்,'' என்றார். விண்ணப்பங்கள் வினியோகிக்கப்பட்ட முதல் நாளன்று, சட்டப் பல்கலையில்மட்டும், பி.ஏ., - பி.எல்., (ஹானர்ஸ்) - 227; பி.காம்., - பி.எல்., ஹானர்ஸ் - 90; சட்டக் கல்லூரிகளில் ஐந்தாண்டு பி.ஏ., - பி.எல்., - 122 விண்ணப்பங்கள் வினியோகிக்கப்பட்டு உள்ளன.
அரசு கலை, அறிவியல் கல்லூரிகள்: தமிழகத்தில் உள்ள அனைத்து கலை, அறிவியல் கல்லூரிகளிலும், கலந்தாய்வு மூலம்மாணவர்கள் சேர்க்கை நடக்கிறது. இதற்கான விண்ணப்ப வினியோகமும், நேற்று துவங்கியது. சென்னையில்,ராணி மேரி கல்லூரி, அரசு கல்லூரிகளில் விண்ணப்பம் வழங்கப்பட்டது. நீண்ட வரிசையில் காத்திருந்து, மாணவர்கள்
விண்ணப்பங்களை வாங்கிச் சென்றனர். அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர, ஆயிரக்கணக்கான மாணவர்கள்,விண்ணப்பங்களை வாங்கிச் சென்றதாகக் கூறப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக