திங்கள், 11 ஆகஸ்ட், 2014

பட்டதாரி ஆசிரியர்கள்ஆசிரியர் பணிநியமனம் எப்போது?

பட்டதாரி ஆசிரியர்கள்ஆசிரியர் தகுதித்தேர்வில் (டி.இ.டி.,) வெற்றி பெற்ற, 43,242 பேரின் இறுதி மதிப்பெண் பட்டியலை,கடந்த மாதம், 14ம் தேதி, டி.ஆர்.பி., வெளியிட்டது. இதில், ஆசிரியர் பணிக்கு தகுதி வாய்ந்த, 10,726 பேரது பட்டியல்,விரைவில் வெளியாகும் என,அறிவிக்கப்பட்டது. இதன்படி, பட்டதாரி ஆசிரியர்கள், 10,726 பேருக்கான தேர்வுப்பட்டியலையும், டி.ஆர்.பி., நேற்று வெளியிட்டுள்ளது.

தேர்வு செய்யப்பட்டவர்கள் குறித்த பட்டியல், சம்பந்தப்பட்ட பிரிவுகளுக்கு அனுப்பப்பட்டு வருவதாக, டி.ஆர்.பி., அதிகாரிகள் தெரிவித்தனர். இம்மாத இறுதிக்குள், இவர்களுக்கான பணி நியமன ஆணை வழங்கப்படும் எனவும் தெரியவந்துள்ளது.