திங்கள், 11 ஆகஸ்ட், 2014

இடை நிலை ஆசிரியர் தகுதித் தேர்வு: இந்த மாதஇறுதிக்குள் இறுதிப்பட்டியல்

ஆசிரியர் தகுதித் தேர்வு இந்த மாதஇறுதிக்குள் இறுதிப்பட்டியல்
ஆசிரியர் தகுதித் தேர்வில் (2012-13) தேறியோரின் சான்றிதழ்கள் சரிபார்க்கும் பணி, 4 மண்டலங்களில்இன்று துவங்குகிறது.கடந்த 2012 ல் நடந்த ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சியடைந்து, இதர அரசுப் பணி கிடைத்தும்செல்லாமல் காத்திருப்போருக்கு, இந்த முகாமில் வாய்ப்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
இதன்படி மதுரை, திண்டுக்கல், தேனி,விருதுநகர், விழுப்புரம், கடலுார், காஞ்சிபுரம், வேலுார், திருச்சி, தஞ்சை, நாகபட்டினம், கரூர், சேலம், நாமக்கல்,தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களுக்கு இன்றும், நாளையும் நடக்கிறது.
சென்னை, திருவள்ளூர், திருவண்ணாமலை, திருவாரூர், பெரம்பலுார், அரியலுார், புதுக்கோட்டை, நெல்லை,துாத்துக்குடி, கன்னியாகுமரி, ராமநாதபுரம், சிவகங்கை, திருப்பூர், ஈரோடு, கோவை,நீலகிரி மாவட்டங்களுக்கு ஆக.,13, 14 ல் நடக்கிறது.

விழுப்புரம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, திருச்சி கன்டோன்மென்ட் வெர்சரி ஆங்கிலோ இந்தியன் பள்ளி, மதுரை ஓ.சி.பி.எம்., பெண்கள் மேல்நிலைப்பள்ளி, சேலம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளிகளில் 4 நாட்கள்இப்பணி நடக்கிறது.

பிறந்த தேதி, ஜாதி, மதிப்பெண் சான்றிதழ்களில் உள்ள பிழைகளை திருத்தம் செய்யவும், தமிழ் வழி பயின்றசான்றிதழை சமர்ப்பிக்கவும் அசல் சான்றிதழ்களுடன் இதில் பங்கேற்கலாம்.

இடை நிலை ஆசிரியர்கள், 4,000 பேருக்கான இறுதிப்பட்டியலும், இந்த மாதஇறுதிக்குள் தயாரிக்கப்பட்டு, அவர்களுக்கும் விரைவில், பணி நியமனம் வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது.