வெள்ளி, 8 ஆகஸ்ட், 2014

ஒரு மாதத்துக்குள் ஆசிரியர் பணி நியமனங்கள்.

ஒரு மாதத்துக்குள் ஆசிரியர் பணி நியமனங்கள்.

இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள், முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணி நியமனங்கள்ஒரு மாதத்துக்குள் முடிக்கப்படும் என ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூத்த அதிகாரி கூறினார்

பட்டதாரி ஆசிரியர்களுக்கான தேர்வுப் பட்டியல், எஞ்சியுள்ள முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கான தேர்வுப்பட்டியல் ஆகியவை தொடர்பாக பெரும்பாலான பணிகள் நிறைவடைந்துள்ளன. எனவே, இந்த இரண்டு தேர்வுப் பட்டியல்களும் ஒரு வாரம் அல்லது 10 நாள்களுக்குள் வெளியிடப்படும்.

அடுத்ததாக, இடைநிலை ஆசிரியர் தேர்வுப் பட்டியல் வெளியிடப்படும். ஒரு மாதத்துக்குள் இப்போது நிலுவையில் உள்ள பெரிய அளவிலான ஆசிரியர் பணி நியமனங்கள் முடிக்கப்படும் என்றார் அவர்.

Source:dinamani