வெள்ளி, 8 ஆகஸ்ட், 2014

எதிர்மறை சிந்தனை நம்மை ஒருபோதும்வெற்றிப்பாதைக்கு அழைத்துச்செல்லாது

"எதிர்மறை சிந்தனை நம்மை ஒருபோதும்வெற்றிப்பாதைக்கு அழைத்துச்செல்லாது,"என,
குன்றக்குடி பொன்னம்பல அடிகள் பேசினார்.
விருதுநகர்மாவட்டம் காரியாபட்டி சேது இன்ஜினியரிங்கல்லூரியில், முதலாம்ஆண்டு மாணவர்களுக்கு ஆசி வழங்கி, குன்றக்குடி பொன்னம்பல அடிகள் பேசியதாவது:
கற்கிற பருவத்தில் பல்வேறு இடர்பாடுகள் ஏற்படலாம். அதை தாண்டி சாதிப்பவன் உயர்ந்த இடத்திற்கு வரடியும். மாணவர்கள்ஒழுக்கத்தை முதலில் கற்றுக் கொள்ள வேண்டும். பட்டம் , பதவி உயர்வு பெற்று உலகில் எந்த இடத்தில்பணியாற்றினாலும் இந்த தாய் மண்ணை எப்போதும் நேசிக்க வேண்டும்.எதிர்மறை சிந்தனை நம்மை ஒரு போதும் வெற்றி பாதைக்கு அழைத்து செல்லாது. நேர்மறை சிந்தனையில்இருக்க வேண்டும். வெற்றிக்கு அடித்தளம் இறை நம்பிக்கை.வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கு இறைவன் அருள் தேவை, என்றார்.