வியாழன், 7 ஆகஸ்ட், 2014

TRB PG:இயற்பியல், பொருளியல் மற்றும் வணிகவியல் ஆகிய, மூன்று பாடங்களில் , புதிய சான்றிதழ் சரிபார்ப்பு பட்டியலில் கூடுதலாக, 49 பேர்.

சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், முதுகலை ஆசிரியர் தேர்வில்,
இயற்பியல், பொருளியல் மற்றும் வணிகவியல் ஆகிய, மூன்று பாடங்களுக்கு,
மாற்றி அமைக்கப்பட்ட புதிய சான்றிதழ் சரிபார்ப்பு பட்டியலை, டி.ஆர்.பி., (ஆசிரியர்
தேர்வு வாரியம்) வெளியிட்டு உள்ளது.
அரசு மேல்நிலைப் பள்ளிகளில், 2,895முதுகலை ஆசிரியர் நியமிக்கும் பணி, ஜவ்வாக இழுத்துக் கொண்டிருக்கிறது. தமிழ்பாடத்திற்கு மட்டும் பணி நியமனம் நடந்துள்ளது. உடற்கல்வி இயக்குனர், மைக்ரோ - பயாலஜி, புவியியல், விலங்கியல், பயோ - கெமிஸ்ட்ரி ஆகிய, ஐந்து பாடங்களுக்கு, சான்றிதழ் சரிபார்ப்பு நடந்துள்ளது.
இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், இயற்பியல், பொருளியல் மற்றும் வணிகவியல் தேர்வு விடைகளில், சில மாற்றங்களை, டி.ஆர்.பி., செய்தது.அதனடிப்படையில், புதிய சான்றிதழ் சரிபார்ப்பு பட்டியலை, www.trb.tn.nic.in என்ற இணையதளத்தில், நேற்றிரவு, டி.ஆர்.பி., வெளியிட்டது. இந்த மூன்று பாடங்களில், ஏற்கனவே, 259 பேருக்கு, சான்றிதழ்சரிபார்ப்பு நடத்தப்பட்ட நிலையில், தற்போது கூடுதலாக, 49 பேர், பட்டியலில் இடம்பெற்று உள்ளனர்.இவர்களுக்கு, வரும் 14ம் தேதி, விழுப்புரம், அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில், சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கிறது.