வெள்ளி, 17 ஆகஸ்ட், 2012

              மெரைன் இகுவானா (marine iguana)

               நீருக்கடியில் மீன் ,முதலை, சுறா போன்ற பலவகை நீர்வாழ் உயிரினங்கள்  வாழ்கின்றன என்பது நாம் அறிந்ததுதான்.. ஆனால் சர்லஸ் டார்வின் பரிணமா வளர்ச்சிக் கொள்கையை உறுதிப்படுத்த உதவிய கலபகோஸ் (Galapagos Islands)  மற்றும் அதன் சுற்றுப் புறத்திலுள்ள தீவுகளில் மட்டுமே காணப்படும் அரியவகை பல்லி இனத்தைச் சார்ந்த மெரைன் இகுவானா (marine iguana) எனும் உயிரினம் வித்தியாசமான திறன் பெற்றதாக உள்ளது அது  நிலத்தில் வாழ்க்கூடிய உயிரினம் என்றாலும் தனது உணவுக்காக கடலின் அடியில்  45 அடி ஆழம் வரை நீந்திச் செல்வதுடன் சுமார் அரைமணி நேரம்வரை  நீருக்கு அடியில் இருக்கும் திறன் பெற்றுள்ளது..கடலின் அடியிலுள்ள பாறைகளில் காணப்படும்  ஆல்கேக்களை  இகுவானா உணவாக உட்கொள்கின்றன.

புதன், 15 ஆகஸ்ட், 2012

தியாகி சுப்பிரமணிய சிவா

                                 சிவாவின் அவா......


        எனது மதம் பாரதிய மதம், எனது சாதி பாரத சாதி,எனது தாய் பாரதமாதா, எனது தொழில் ஞானப்பிரச்சாரம்,பரிபூரண சுதந்திரமே எனது இலட்சியம்என்று தமிழகத்தின் பட்டி தொட்டிகளிலெல்லாம் நடந்தே சென்று சொற்பொழிவுகள், நாடகங்கள் மூலம் விடுதலைக்கனலைமூட்டியர்வர்தான் சுப்பிரமணிய சிவா.
   வத்தலக்குண்டு கிராமத்தில் ராஜம் அய்யர், நாகலட்சுமி அம்மையாருக்கு 04.10.1884 ல் பிறந்த இவருக்கு சுப்பராமன் என்று பெயரிட்டனர்.பின்னாளில் இவரது ஆன்மீக குருவான சதானந்த சுவாமிகள் சுப்பிரமணிய சிவாஎன்று சூட்டிய பெயரே இன்றும் நிலைத்து நிற்கிறது.
  1906 ல் வங்கபிரிவினையின்போது திலகரின் அடியொற்றி, சி யின் தோழனாகி, பாரதியாரின் பாடல்களை பாடியும்,‘வந்தேமாதரம்என்று முழங்கியும், ஆங்கில ஏகாதிபத்தியத்தை தடுமாற வைத்தார். ஆங்கிலேய அரசு சிவாவையும், சி யையும் கைது செய்து கோவை சிறையில்
 அடைத்தது. சி க்கு செக்கிழுக்கும் தண்டனையும், சிவாவுக்கு சுண்ணாம்பில் கம்பளியை நனைத்து ஊறவைத்து பதப்படுத்தும் கடும்
 தண்டனையையும் அளித்தது

கெளரிவிலாஸ்

.சிவா பின்னர் சேலம் சிறையிலும் அடைக்கப்பட்டார். இச் சிறைவாசங்கள் தீராத தொழு நோயை பரிசாக அளித்ததபோதும் தீரம் தனியாத சிவாவை தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அரவணைத்துக்கொண்டது.  தியாகி சின்னமுத்து முதலியார்
கெளரிவிலாஸ் ' என்ற மாளிகை போன்ற தனது வீட்டில் சிவாவுக்கு தங்க இடம் கொடுத்ததுடன்  உற்றதோழனாகவும் திகழ்ந்தார்..


சிவா வணங்கிய பாரதமாதா

  இதுபற்றி தியாகி சின்னமுத்து முதலியாரின் பேரன் ஜெயபால் மேலும் கூறுகையில், சிவா பாப்பாரப்பட்டியில் தங்கியிருந்தபோது மக்கள் சாதி மத வேறுபாடின்றி வழிபடும் வகையில் பாரதமாதாவுக்கு கோயில் கட்ட விரும்பினார் என் தாத்தா உள்ளிட்ட சுதந்திர போராட்ட தியாகிகளின் உதவியுடன் 7 ஏக்கர் நிலத்தினை வாங்கி அங்கு பாரத ஆஸ்ரமத்தைநிறுவி அதற்கு பாரதபுரம்என்று பெயரிட்டார். ஜுன் 1923 ல் காங்கிரஸ் தலைவர் சித்தரஞ்சன் தாஸை அழைத்துவந்து பாரதமாதா கோயிலுக்குஅடிக்கல் நாட்டினார்.சிரசில் இமயத்தையும் பாதத்தில் குமரிக்கடலும் பொருந்தியிருக்குமாறு தானே முன்னின்று வடிவமைத்த பாரதமாதாவின் சிலையை அங்கு நிறுவி ஓலைக்கூரைகளால் வேயப்பட்ட ஒரு சிறிய ஆலயத்தையும்அமைத்து வழிபட்டார். அக் காலத்தில் நவராத்திரியின்போது
 ஊரெ திரண்டுவந்து சிறப்பு வழிபாடுகளும் நடத்தப்பட்டதாம்!" என்று  கூறி முடித்தார். சிவா நிறுவிய அச் சிலையினை இவர்தான் இன்றும்
பாதுகாத்து வருகிறார்.

ஜெயபால்

 எல்லாம் வல்ல இறைவியாம் ஸ்ரீபாரதமாதாவை உருவகப்படுத்தி எல்லோரும் ஏக மனதுடனே தியானித்தால் இப்பரந்த பாரத நாட்டிலடங்கிக் கிடக்கும் அகண்டசக்தி தட்டுப்பாடின்றி தாராளமாகக் கிளம்பி அடிமைத்தனத்தைப் போக்கி தர்மத்தை வளர்த்து ஸ்வதந்தரத்தை யுண்டு பண்ணிவிடுமென்று நான் நிச்சயமாய் நம்புகின்றேன் என்று பாரதமாதா கோயிலுக்கான நோக்கத்தை 17.04.1924 தேதியிட்ட நவசக்திஇதழில் வெளியிட்ட சிவா, அந்நோக்கம் நிறைவேறாமலேயே தொழுநோயின் தீவிரத்தால் 23.07 1925 ல் மறைந்தார்

சிவா மணிமண்டபம்

.  தமிழக அரசு அவருக்கு பெருமை சேர்க்கும் வகையில் பாப்பாரப்பட்டியில் சுமார் 40 இலட்சம் செலவில் அமைத்த அழகிய மணிமண்டபத்தை முதல்வர் ஜெயலலிதா அவர்கள் திறந்து வைத்தார்.

 நாம் 66 வது சுதந்திரதினம் 
கொண்டாடும் இவ் வேளையில் அவரது விருப்பப்படி  பாரதமாதாவுக்கு கோயில் அமைத்து  எதிர்கால சந்ததியினருக்கு நாட்டுப்பற்றை ஊட்ட வேண்டும் என்பதே  அனைவரது விருப்பமாகும்.
 சுப்பிரமணிய சிவாவின் நாட்டுப்பற்று நம்மை  பாரதமாதாவுக்கு ஜே! போடச்சொல்லுதில்ல...

செவ்வாய், 14 ஆகஸ்ட், 2012

க்யூரியாசிட்டி -செவ்வாய்கிரகம் நாசாவின் லேட்டஸ்ட் படங்கள்

 நாசா செவ்வாயில் களமிறங்கிய கியூரியாசிட்டி எடுத்தனுப்பிய  லேட்டஸ்ட் அற்புதப் படங்களை  வெளியிட்டுள்ளது....  பாருங்கள்..

கியூரியாசிட்டி எடுத்தனுப்பிய செவ்வாயின் வண்ணப்படம்...



செவ்வாய் மலைப்பகுதி...
தொலைவில்...மலைப்பகுதி....

செவ்வாயில் கியூரியசிட்டி...

கியூரியாசிட்டி படங்களை ஆராயும் பெண் விஞ்ஞானி

வீடியோ கேமினால் க்ரியேட்டிவிட்டி வளருமா.? ஆய்வு முடிவு....

           கிரியேட்டிவிட்டியை வளர்க்கும் வீடியோ கேம்ஸ்….
 வீடியோ கேம்ஸைவிரும்பாத  சுட்டிகளே இருக்கமுடியது...விளயாட ஆரம்பிச்சிட்டா அதிலேயே ஒட்டிகொண்டு நேரம் காலம் தெரியாம விளையடுகின்றவர்களும் உண்டு,,. அளவோடு விளையாடி மகிழ்கின்றவர்களும் உண்டு..
  மிச்சிகன் பல்கலைக்கழகத்தின் உளவியல் பேராசிரியர் லிண்டா ஜாக்ஸன் தலமையிலான குழுவினர் 12 வயதுள்ள சுமார் 500 சுட்டிகளிடம் வீடியோ கேம்ஸ் விளையாடுவதற்கும் கிரியேட்டிவிட்டிஎனும் படைப்பாற்றலுக்கும் உள்ள தொடர்பை ஆரய்ந்திருக்காங்க..


சுட்டியின் கைவண்ணத்தில் பறவை

 சின்னதா ஒரு வலைக்கோட்டை கொடுத்து அதனை வித்தியாசமான புதுமையான படமா வரைந்து அதற்கேற்ற தலைப்பைக் கொடுக்கறது...அதனைப்பற்றி சுவையான கதை எழுதறது.. நகைச்சுவை உணர்வுடைய வாக்கியங்கள் எழுதறது உள்ளிட்ட பல்வேறு சோதனைகள் அடங்கிய டோரன்ஸ்  டெஸ்ட் ஆப் கிரியேட்டிவிட்டியை பயன்படுத்தி இந்த ஆய்வு நடத்தப்பட்டிருக்கு.

   வீடியோ கேம்ஸ் விளையடாத சுட்டிகளைக்காட்டிலும் விளையாடும் சுட்டிகளிடம் படம் வரைதல்,கதை எழுதுதல்,புதுமைப்புனைவு போன்ற கிரியேட்டிவிட்டிமிளிர்வதாகவும,.சிறுவர்கள் சிறுமிகளிடம் விளயாட்டை தேர்ந்தெடுப்பதில் வேறுபாடு இருந்தாலும் படப்பாற்றலில் எந்த வேறுபாடும் இல்லை என்றும் ஆய்வு முடிவு கூறுகின்றது.

இதுபற்றி  லிண்டா ஜாக்ஸன் கூறுகையில்,”தொழில்நுட்பத்துக்கும் கிரியேட்டிவிட்டிக்கும் உள்ள தொடர்பை ஆராயும் முதல் ஆய்வு இது... வீடியோ கேம்ஸ் தயாரிப்பாளர்கள் குழந்தைகளின் கிரியேட்டிவிட்டியை வளர்க்கும் வகையில் புதிய அம்சங்களுடன் கேம்ஸை உருவாக்குவதற்கு இந்த ஆய்வு முடிவுகள் உதவும்என்கிறார்.

 எதுவாக இருந்தாலும் அளவோடு இருந்தால்தான் நன்மை என்பதை நாம் மறந்துவிடக்கூடாது சுட்டீஸ்.....