சனி, 27 ஜூலை, 2013
.PG TRB Answer key 2013 Tamilnadu
தமிழ்த்தாமரை: TRB 2013 PG TAMIL TENTATIVE KEY DATED 21.07 2...: TRB 2013 PG TAMIL TENTATIVE KEY DATED 21.07 2013 1. மதுரையை தென் தமிழ் மதுரை எனக்குறிப்பிடும் நூல் B.மணிமேகலை 2...
தமிழ்த்தாமரை: PG TRB Answer key 2013 Tamilnadu
தமிழ்த்தாமரை: TRB 2013 PG TAMIL TENTATIVE KEY DATED 21.07 2...: TRB 2013 PG TAMIL TENTATIVE KEY DATED 21.07 2013 1. மதுரையை தென் தமிழ் மதுரை எனக்குறிப்பிடும் நூல் B.மணிமேகலை 2...
வியாழன், 25 ஜூலை, 2013
ஜூன் 19 முதல் ஜூலை 01, 2013 தேதி வரை நடைபெற்ற மேல்நிலை சிறப்புத் துணைத் தேர்வினை எழுதிய 83,510 தனித்தேர்வர்களின் தேர்வு முடிவுகள் நாளை 25.07.2013 நண்பகல் 12 மணிக்கு வெளியிடப்படுகிறது. தனித்தேர்வர்கள் அவர்கள் தேர்வெழுதிய மையங்களில் 30.07.2013 அன்று மதிப்பெண் சான்றிதழ்களை பெற்றுக் கொள்ளலாம். விடைத்தாள் நகல் மற்றும் மறுக்கூட்டலுக்கு விண்ணப்பிப்பதற்கான தேதிகள் விரைவில் வெளியிடப்படும் என தேர்வுத்துறை அறிவித்துள்ளது. செய்முறை அடங்கிய பாடத்தினை தேர்வு எழுதிய சில தனித்தேர்வர்கள் செய்முறை குறித்த ஆவணத்தை ஆன்-லைன் விண்ணப்பத்துடன் இணைந்து சமர்பிக்காததால், அவர்களது தேர்வு முடிவுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும் சில தனித்தேர்வர்களின் மார்ச் 2013 பருவத் தேர்வெழுதிய பதிவெண் தேர்வுத்துறை அலுவலக ஆவணத்துடன் tally ஆகாததால், அவர்களுடைய தேர்வு முடிவுகளும் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. இத்தகைய தனித்தேர்வர்கள் உடனடியாக அவர்கள் வருவாய் மாவட்டத்தில் உள்ள அரசுத் தேர்வுகள் மண்டலத் துணை இயக்குனர் அலுவலகத்தில் தொடர்பு கொண்டு மார்ச் 2013 மேல்நிலைத் தேர்வெழுதிப் பெற்ற மதிப்பெண் சான்றிதழினை ஒப்படைக்க வேண்டும் என தேர்வுகள் துறை உத்தரவிட்டுள்ளது. அதன் பிறகு தான் அவர்களின் தேர்வு முடிவுகள் வெளியிட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு தேர்வுகள் துறை அறிவித்துள்ளது.
புதன், 24 ஜூலை, 2013
TRB PG ANSWER KEY NEWS
TRB. PG ANSWER KEY
முதுகலை ஆசிரியர் தேர்வில், தமிழ் மற்றும் வணிகவியல் பாட கேள்வித்தாளில் ஏற்பட்ட பிரச்னையால், தேர்வர்கள் பாதிக்கப்பட மாட்டார்கள். "கீ-ஆன்சர்' வெளியிடுவதற்கு முன், கேள்வித்தாளில் ஏற்பட்ட பிழைகள் குறித்து, பாட வல்லுனர்களின் ஆலோசனையை பெற்று, உரிய முடிவு எடுக்கப்படும்' என, டி.ஆர்.பி., வட்டாரங்கள், நேற்று தெரிவித்தன. அரசு மேல்நிலைப் பள்ளிகளில், 2,881 முதுகலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப, நேற்று முன்தினம், முதுகலை ஆசிரியர் போட்டித் தேர்வு நடந்தது. 1.59 லட்சம் பேர், தேர்வை எழுதினர். இதில், தமிழ்ப் பாட தேர்வர்களுக்கு தரப்பட்ட கேள்வித்தாளில், பல்வேறு கேள்விகளில், எழுத்துப் பிழைகள் இருந்தன. மேலும், வணிகவியல் பாட கேள்வித்தாளில், ஆங்கிலத்தில் இருந்து, தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட கேள்வியில், பிழை ஏற்பட்டது. இந்த இரு பிரச்னைகள் குறித்தும், டி.ஆர்.பி.,யின் கவனத்திற்கு, உடனடியாக தெரிய வந்தது. இந்த விவகாரம் குறித்து, டி.ஆர்.பி., வட்டாரங்கள், நேற்று கூறியதாவது: தமிழ்ப் பாடத்திற்கான கேள்வித்தாளில், எழுத்துப்பிழைகள் அதிகம் ஏற்பட்டிருப்பது உண்மை தான். அச்சக நிறுவனம், கேள்வித்தாளில், பிழை இருக்கிறதா என்பதை சரிபார்த்து, செயல்பட்டிருக்க வேண்டும். அச்சகங்களில், பாட வாரியாக, நிபுணர்கள் இருக்கின்றனர். அவர்கள், கேள்வியை படித்துப் பார்த்து, ஏதாவது பிழைகள் இருக்கிறதா என்று சரிபார்ப்பர். தமிழ்ப் பாடத்தில், சரிபார்ப்பு நடந்ததா என, தெரியவில்லை. இது குறித்து, விசாரிக்கப்படும். வணிகவியலில், ஒரே ஒரு கேள்வி, தமிழில், சரியாக மொழிபெயர்க்கப்படவில்லை. இந்த பிரச்னைகள் குறித்து, "கீ-ஆன்சர்' வெளியிடுவதற்கு முன், பாட நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தி, தேர்வர்கள் பாதிக்காத வகையில், உரிய முடிவு எடுக்கப்படும். ஒரு வாரத்திற்குள் "கீ-ஆன்சர்' வெளியிடப்படும். அதன்பின், விடையில் ஏதாவது ஆட்சேபனை இருந்தால், சம்பந்தப்பட்ட தேர்வர்கள், டி.ஆர்.பி.,யின் கவனத்திற்கு கொண்டு வரலாம். அது குறித்தும், பாட நிபுணர்களுடன்
ஆலோசனை நடத்தி, முடிவை எடுப்போம். இதன்பிறகே, விடைத்தாள் மதிப்பீடு செய்யும் பணி நடக்கும். இவ்வாறு, டி.ஆர்.பி., வட்டாரங்கள் தெரிவித்தன. மாவட்டங்களில் இருந்து, சீலிடப்பட்ட விடைத்தாள் கட்டுகள், நேற்று, சென்னைக்கு, போலீஸ் பாதுகாப்புடன் கொண்டு வரப்பட்டன. விரைவில், விடைத்தாள்களை, "ஸ்கேன்' செய்து, 20 நாட்களுக்குள், தேர்வு முடிவை வெளியிட, டி.ஆர்.பி., திட்டமிட்டுள்ளத
7598299935

செவ்வாய், 23 ஜூலை, 2013
TRB 2013 PG TAMIL TENTATIVE KEY DATED 21.07 2013
TRB 2013 PG TAMIL TENTATIVE KEY DATED 21.07 2013
1.மதுரையை தென் தமிழ் மதுரை எனக்குறிப்பிடும் நூல்
B.மணிமேகலை
2.பதினெண் கீழ் கணக்கில் இடம்பெறும் அக நூல்கள்
C. 6
3 ‘.சமயக்கணக்கர் தம் திறம் கேட்ட காதை’ இடம்பெரும் நூல்
B. மணிமேகலை
4. வைர வியாபாரி இடம்பெறும் நூல்
C. வளையாபதி
5 ‘பாளையாம் தன்மை செத்தும் பாலனாம் தன்மை செத்தும்’ என்ற வரிகள் இடம்பெற்ற நூல்
D. குண்டலகேசி
11. உவமை தோன்றும் நிலைக்களன்
B. காதல்
12. பொறி நுதல் வியர்த்தல்
C. முதல்நிலை மெய்ப்பாடு
13.உவமப் போலி
D. ஐந்து
14.உள்ளுறை உவமத்தின் பயன்
A சுவை
15.தளிர் அடி மென் நகை மயிலைத் தாது அவிழ்தார்க் காளைக்குஇவ்வடிகளில் அமைந்துள்ளது
16 “போர்க்குறிக்காயமே புகழின் காயம்….” என்று கூறிய கதாபாத்திரம்
C சீவக வழுதி
17.பவளக்கொடி நாடக ஆசிரியர்
D. சங்கரதாஸ் சுவாமிகள்
18.தமிழ் நாடகத் தந்தை எனப் போற்றப்படுபவர்
B.பம்மல் சம்பந்த முதலியார்
19.வாசகர்தான் பனுவலுக்கான அர்த்தங்களை வெளிக்கொணர்கிறார்- என்று கூறும் கோட்பாடு
D.அமைப்பியல்
20 சிட்டுக்குருவி எனது பலகணியின் வழியே வரின் யான் எனை மறந்து சிட்டாகவே மாறி விடுகின்றேன் எனக் கூறிய கவிஞர்
********
21.புறப்பொருள்மாலை வெட்சி படலத்தின் ‘உண்டாட்டு ‘ எனப்படுவது
C.கள் அருந்தி களிப்பது
22 வெட்சி படலத்தின் துடிநிலை என்று கூறப்படுவது
A குடிப்பழமையைப் புகழ்தல்
23 .கரந்தை பூ பூக்கும் காலம்
C. ஐப்பசி,கார்த்திகை
24.வஞ்சி மறவரின் போர்த்தொழிலைச் சிறப்பித்து கூறும் துறை
D. கொற்றவை நிலை
25.வட்கார் மேல் செல்வது
D. வஞ்சி
26.தாண்டக வேந்தர்
A. திருநாவுக்கரசர்
27.சைவத்திருமுறைகளில் முதல் மூன்று திருமுறைகளின் ஆசிரியர்
C. திருஞான சம்பந்தர்.
28.பன்னிரு ஆழ்வார்களில் கடவுளைப் பாடாது அடியாராம் நம்மாழ்வாரை பாடியது யார்?
A. மதுரகவி ஆழ்வார்
29.தஞ்சைவாணன் கோவையின் ஆசிரியர் பெயர் தருக
A.பொய்யாமொழிப் புலவர்
30.திருமந்தரத்தின் உட்பிரிவாக எத்தனைத் தந்திரங்க்கல் இடம்பெற்றுள்ளன
C. 9
31.கட்டளைக் கலித்துறையில் அமைந்துள்ள யாப்பு நூல்
D. யாப்பருங்கலக்காரிகை
32.அணியிலக்கணம் கூறும் நூல்களில் முதன்மையானது
A. தண்டியலங்காரம்
33.தண்டியலங்கார பொருளணியியலில் தன்மையணி முதல் பாவிக அணிவரை உள்ள மொத்த அணிகள்
C. 35
34.தீயினால் சுட்டப்புண் உள்ளாறும் ஆறாதே நாவினால் சுட்ட வடு இதில் இடம்பெறும் அணி
B. வேற்றுமை அணி
35. ஐந்திலக்கணம் கூறும் முதல் இலக்கண நூல்
A. வீர சோழியம்
36.பெரும்பொழுதின் வகைகள்
B. ஆறு வகைப்படும்
37. மல்கு கார் மாலை
C. முல்லைக்கு உரித்தே
38.முல்லைத் திணை பறை
C. கோட்பறை D.ஏற்றுப்பறை ( சரியான விடை- ஏறுகோட் பறை )
39.அகப்பொருள் மெய்யுறு புணர்ச்சியின் உட்பிரிவுகள்
*******
40.களவிற்குரிய கிளவித்தொகைகள்
A.பதினேழு கிளவித் தொகைகள்
41. ஞாணபீட விருது பெற்ற புதினம்
D.சித்திரப்பாவை
42. வா.செ. குழந்தை சாமியின் சாகித்திய அகதமி விருது பெற்ற திறனாய்வு நூல்
B. வாளும் வள்ளுவம்
43.ஏறு தழுவுதலை கதைக்களமாக கொண்ட புதினம்
C. வாடிவாசல்
44.குடும்பத்தேர் சிறுகதையின் ஆசிரியர்
D. மெளனி
45. பொருத்துக
A. விந்தன் - I கமலாவின் கல்யாணம்
B. கு.அழகிரிசாமி – II அக்பர் சாஸ்திரி
C. கல்கி - III மவராசர்கள்
D தி.ஜானகிராமன் - IV திரிபுரம்
B. III IV I II
46.மூன்றாம் தமிழ்ச் சங்கம் இருந்ததாக கருதப்படும் இடம்
B. மதுரை
47.ஐங்குறு நூற்றின் கடவுள் வாழ்த்தைப் பாடியவர்
C. பெருந்தேவனார்
48.பொருநராற்றுப்படை எம் மன்னனின் சிறப்பை பாடுகின்றது?
A கரிகால் சோழன்
49. சரியான விடையைத் தேர்ந்தெடு
D.ஐந்தாம் பத்து – கடல் பிறகோட்டிய செங்குட்டுவன்
50.”ஆன்றோர் புகழ்ந்த ஆறிவினிற் ரெறிந்து சான்றோரு ரைத்த தண்டமிழ்த் தெரியல் ஒரு பது பாட்டும்” எனக்கூறியவர்
A. நச்சினார்க்கினியர்
51.தமிழ் உரைநடையின் தந்தை என்று அழைக்கப்படுபவர்
C.வீரமாமுனிவர்
52.பாரதியாரின் சின்ன சங்க்கரன் கதை என்னும் நூல்
B. உரைநடை நூல்
53.வரலாற்றுக் களஞ்சியம் என்று யாருடைய நாட்குறிப்பை குறிப்பிடுவர்
A ஆனந்தரங்கம் பிள்ளை
54. காட்டு வாத்து தொகுப்பினை வெளியிட்ட பதிப்பகம்
C.எழுத்து
55.உ.வே. சாமிநாதையர் முதன் முதலில் பதிப்பித்த நூல்
C. சீவகசிந்தமணி
56.வைகறை விடியல்
C. மருதத் திணக்குரிய காலம்
57.இருத்தலின் உரிப்பொருளுக்குரிய திணை
C.முல்லைத்திணை
58. மருத நில தலை மக்கட்பெயர்
A. ஊரன், மகிழ்நன்
59. முல்லைத் திணைக்குரிய தெய்வம்
B. கண்ணன்
60. மருதத் திணக்குரிய பூ
C. தாமரை
66. உழவர்களின் வாழ்வியலைக் கூறும் சிற்றிலக்கியம்
A பள்ளு
67.பிள்ளைத்தமிழ் முதலாவதாக எப் பருவம் அமைகிறது
C. காப்பு பருவம்
68.முதலாழ்வார்களின் எண்ணிக்கை
D 3
69 “.கொல்லா விரதம் குவலயமெல்லா மோங்க ……. இச்சை பராபரமே” என்று உரைத்தவர் யார்?
A . தாயுமானவர்
70. குற்றாலக் குறவஞ்சியின் ஆசிரியர் பெயர் தருக
C. திரிகூட ராசப்ப கவிராயர்
76. தமிழ் மொழி உயர் தனிச்செம்மொழி என்று முதன் முதலில் கூறியவர்
C. பரிதிமாற்கலைஞர்
77.தொல்காப்பியர் சுட்டும் உரசொலிகள்
D. ர, ழ
78 என் என்னும் சொல் யார் காலத்தில் அன் என்று மாறியது ?
*****
79. முதன் முதலாக ‘ தமிழன்’ என்ற சொல்லாட்சி காணப்படும் இலக்கியம்
C. அப்பர் தேவாரம்
80 எந்த அளபெடை சோழர் காலத் தமிழில் காரணவினை காட்டும் உருபாக இருந்தது
*****
86.அவர் வந்தார் என ஒருவரை மட்டும் குறிப்பது
B. பால் வழுவமைதி
82.துஞ்சினார் என்று செத்தாரைக் குறிப்பது
A மங்கல வழக்கு
88. அண்ணாக் கயிறு என்பது
C. அரைஞான் கயிறு
89 தமிழிலிருந்து ஆங்கிலத்துக்கு கடன் வாங்கப்பெற்ற சொற்கள்
A .ஓலை,கறி,காசு தேக்கு
90. BICYCLE எனதன் கலைச்சொல்லாக்கம்
C .ஈருருளி
91.ஒலியை ஆராயும் முறையை எத்தனைப் பிரிவாக வகுக்கின்றனர்
97. அரேபியா எகிப்து போன்ற பகுதிகளில் பேசப்படும் மொழியினம்
D. செமிட்டிக் இனம்
98.குவி மொழி எந்த மானிலத்தில் பேசப்படுகின்றது ?
A. ஒரிஷா
99.திராவிட மொழிகளின் திணை பால் பாகுபாடு ஸிறந்தது என்று கூறியவர்
C. கால்டுவெல்
100.’ தமிழ் மொழி மிக்க பழைய வரலாறு உடையதாகும்’’ என்று உரைத்தவர்
A. தீட்சிதர்
106 ஒலி வடிவிலும் வரி வடிவிலும் அமைந்த எழுத்துக்களின் தனித்தன்மையை விளக்குவது
C. நூன் மரபு
107. சகார ஞகாரம் பிறப்பு
B.இடைநா அண்ணம்
108 .கி.பி. 17. ஆம் நூற்றாண்டு சொல்லிலக்கண நூல்
A. பிரயோக விவேகம்
109. சொல்லும் பொருளும் ஒரு தாளின் இரண்டு பக்கம் போன்றது என்று கூறியவர்
******
110 யாப்பிலக்கண கலைக்களஞ்சியம் என அழைக்கப்படுவது
A.யாப்பருங்கலக்காரிகை
111. கி.பி 3 ஆம் நூற்றாண்டு முதல் கி.பி 6 ஆம் நூற்றாண்டு வரை உள்ள காலம்
A.நீதி நூல் காலம்
112. காப்பிய விதிகளைக்கூறும் இலக்கண நூல்
A. தண்டியலங்காரம்
113. உலக நிலையாமையை எடுத்துக்காட்டும் நீதி நூல்
D. முதுமொழிக்காஞ்சி
114. இலத்தின் மொழியில் திருக்குறளை மொழி பெயர்த்தவர்
C வீரமாமுனிவர்
115. புகார்க்காண்டத்தின் இறுதிக்காதை
A. நாடுகாண் காதை
116.ஆதி நிகண்டு என அழைக்கப் பெறுவது
C. திவாகர நிகண்டு
117.கம்பராமாயணம் நூலுக்கு கம்பர் சூட்டிய பெயர்
A.இராமாவதாரம்
118.வினாவிடைவடிவில் அமைந்த இஸ்லாமிய இலக்கியம்
D. மசாலா
119. உடம்பார் அழியின் உயிரால் அழிவர்- யாருடைய கூற்று
C. திருமூலர்
120 விக்கிரம சோழன் உலாவின் ஆசிரியர்
A. ஒட்டக்கூத்தர்
121. ஆற்றுப்படையில் அடியளவில் பெரிய நூல்
C. மலைபடுகடாம்
122 ‘வஞ்சி நெடும்பாட்டு ‘ என வழங்க்கப்பெறும் நூல்
B. பட்டினப்பாலை
123. வடக்கிருந்து உயிர் நீத்த சோழ மன்னன்
D. கோப்பெருஞ்சோழன்
124. சரியான விடை தேர்ந்தெடுக்க
D. பெருங்கடுங்கோ
125. நக்கீரர் பத்துப்பாட்டில் பாடிய நூல்கள்
B. திருமுருகாற்றுப்படை நெடுநல் வாடை
131. சொற்களை சிறந்த முறையில் வைப்பது வசனம். சிறந்த சொற்களைச் சிறந்த முறையில் வைப்பது கவிதை என்று கூறியவர்
C. கோல்ரிட்ஜ்
132.ஒவ்வொரு சொல்லையும் சுண்டிப்பார்த்து ஓசைநயம் செவ்வனே உள்ளதா என்று ஆராய்ந்து பயன்படுத்தும் கதையாசிரியர்
D. ல.சா.ராமாமிர்தம்
133 நிஜ நாடகம் நிகழ்த்திய நவீன நாடகம்
B.துர்க்கிர அவலம்
134.தொல்காப்பியத்தில் ஆய்தல் என்ற சொல்லுக்கு கூறப்படும் பொருள்
A. உள்ளதன் நுணுக்கம்
135.‘அர்த்தங்கள் மையம் இழந்தவை, நிலையற்றவை, ஒத்தி வைப்புக்க்ள்ளானவை ‘ என விளக்கிய கோட்பாடு
D. பின் அமைப்பியல்
141. கவிதை இலக்கியங்க்களில் பேரிலக்கியமாகத் திகழ்வது
A. காப்பியம்
142. மணநூல் என்று அழைக்கப்படுவது
D சீவகசிந்தாமணி
143. அடிகள் நீரே அருளுக என்ற கூற்றுக்கு உரியவர்
D. இளங்கோவடிகள்
144. மணிமேகலையால் யானைத்தீ பசி நோய் தீர்க்கப்பட்டவள்
D காயச்சண்டிகை
145.குண்டலகேசிக்கு எதிராக தோன்றிய வாத நூல்
A. நீலகேசி
146. “ குழவி இறப்பினும் ஊன்தடி பிறப்பினும்” என மான உணர்ச்சி மிகுந்த பாடலைப் பாடிய மன்னர்
A சேரமான் கணைக்கால் இரும்பொறை
147. பெரியோரை வியத்தலும் இலமே சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே” எனப் பாடியவர்
C.கணியன் பூங்குன்றனார்
148. உவமையால் பெயர் பெற்றவர்
D.கல்பொரு சிறு நுரையார்
149. கோப்பெருஞ்சோழனோடு பிசிராந்தையார் போல் நட்புக்கொண்ட மற்றொரு புலவர்
A. பொத்தியார்
150.” எத்திசை செல்லினும் அத்திசைச்சோறே” எனப் பாடிய புலவர் யார் ?
D. ஒளவையார்
குறிப்பு :
வினா எண் 91. விடை 3
வினா என் 116 விடை திவாகரம், நேமிநாதம் இரண்டு விடைகளும் சரியே
7598299935
குறிப்பு: ****** இவ்விடைகளுக்கு பின்னர் விடைகள் அறிவிக்கப்படும்
தற்காலிக விடைக்குறிப்பு தங்களின் தகவலுக்காக TRB யின் விடக்குறிப்பே இறுதியானது
தொடர்புக்கு 759899935
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)