திங்கள், 28 அக்டோபர், 2013

TNPSC. GROUP I:பிரதான தேர்வு முடிவுகள் மூன்று மாதத்தில்

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய (டி.என்.பி.எஸ்.சி.) குரூப் 1
பிரதான தேர்வு முடிவுகள் மூன்று மாதத்தில் வெளியிடப்படும்
என்று தேர்வாணையத்  தலைவர் ஏ. நவநீதகிருஷ்ணன் தெரிவித்தார்.

துணை ஆட்சியர், துணை கண்காணிப்பாளர் உள்ளிட்ட 25 பதவிகளுக்கான
குரூப் 1பிரதான தேர்வு ஞாயிற்றுக்கிழமையுடன் நிறைவடைந்தது. சென்னையில்
கடந்த 3 நாள்களாக நடைபெற்று வந்த இந்தத்
தேர்விவை ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் எழுதினர். நூற்றுக்கும்
மேற்பட்டோர் இந்தத் தேர்வில் பங்கேற்கவில்லை.

குரூப் 1 தேர்வு முடிவுகள் தொடர்பாக டி.என்.பி.எஸ்.சி. தலைவர்
நவநீதகிருஷ்ணன் கூறியது: டி.என்.பி.எஸ்.சி. தேர்வுகளை எந்தவிதத்
தவறுக்கும் இடம் தராமல்நடத்துவதற்கு முன்னுரிமை வழங்கப்பட்டு வருகிறது.மிகவும்
வெளிப்படைத்தன்மையோடு குரூப் 1 பணிகளுக்கு ஆள்கள்                                                                                                                                           
தேர்வு செய்யப்படுவார்கள். பிரதான தேர்வு முடிவுகள் 3 மாதங்களில் வெளியிடப்படும்.அதன்பிறகு நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டு, தேர்ச்சியானவர்கள் விரைவில்
பணி நியமனம் செய்யப்படுவார்கள் என்றார் அவர்.

TRB PG CV NEWS UPDATE:நீதிமன்ற அடுத்தக்கட்ட  நடவடிக்கைகள்  இன்று(அக் 28 )மாலை தெரியவரும்


2 ஆயிரத்து 881 முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான போட்டித் தேர்வு கடந்த ஜூலை 21-ஆம் தேதி நடைபெற்றது. இதில் தமிழ் தவிர மீதமுள்ள பாடங்களுக்கானதேர்வு முடிவுகள் அக்டோபர் 7 ஆம் தேதி ஆசிரியர் தேர்வு வாரிய
இணையதளத்தில் வெளியிடப்பட்டன. தமிழ் தவிர மீதமுள்ள  முதுநிலைப் பட்டதாரி
போட்டித் தேர்வில் வெற்றி பெற்ற. 2,276,பேருக்குஆசிரியர் தேர்வு வாரியத்தால் அக்.22, 23 ஆம் தேதிகளில் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெற்றது.

சான்றிதழ். சரிபார்ப்பிற்கு டிஆர்பி விளக்கக்  குறிப்பேட்டில்  குறிப்பிட்டவாறு  வகுப்புவாரி  இடஒதுக்கீட்டின் கீழ்  இறுதி கட் -ஆப்  மதிப்பெண்  பெற்றவர்கள்  அனைவரும்  அழைக்கப்படவில்லை .வயதில்  மூத்தோர்  மட்டுமே  அழைக்கப்பட்டுள்ளனர் .இதனை      எதிர்த்து திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவிலைச் சேர்ந்த ஜோதி ஆபிகாரம் உள்ளிட்ட  மூவர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதி எஸ்.நாகமுத்து
,தேர்வு எழுதியவர்களில்தகுதியானவர்கள், விடுபட்டவர்கள் ஆகியோர் அடங்கிய ஒருங்கிணைந்தபட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் தாக்கல் செய்ய வேண்டும் என
 உத்தரவிட்டார். மேலும், சான்றிதழ் சரிபார்ப்பு முடிவை வெளியிடவும்இடைக்காலத் தடை விதித்து விசாரணையை அக்.28 ஆம்தேதிக்கு ஒத்திவைத்தார்.

 நீதிமன்ற  உத்தரவுப்படி  123  பேர்கள்  அடங்கிய  கூடுதல்  பட்டியல்   ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் ஏற்கெனவே வெளியிடப்பட்டுள்ளது.
       இதற்கிடையில்  முதுகலை பட்டதாரி ஆசிரியர் நியமனம்தொடர்பாக மேலும்  5 வழக்குகள்  தொடுக்கப்பட்டுள்ளன

 இன்று (அக் 28) நீதியரசர்  எஸ் .நாகமுத்து  முன்னிலையில்  6 வழக்குகள் மீண்டும்   வருகின்றன  இவை வெவ்வேறு  கோரிக்கைகளுக்காக  தொடுக்கப்பட்டுள்ளதால்  3   தொகுப்பாக  பட்டியளிடப்பட்டுள்ளதாக  தெரியவருகின்றது. இன்று  TRB சார்பில்  சான்றிதழ் சரிபார்க்கப்பட்டோர்  மற்றும்  நீதிமன்ற  உத்தரவுப்படி  சான்றிதழ் சரிபார்ப்பிற்கு அழைக்கப்பட்டார்  பட்டியல்  நீதிமன்றத்தில்  சமர்ப்பிக்கப்படும்  எனவும்  தெரியவருகின்றது.  நீதிமன்ற அடுத்தக்கட்ட  நடவடிக்கைகள்  இன்று  மாலை  தெரியவரும் . 

ஞாயிறு, 27 அக்டோபர், 2013

TRB PG VACANT LIST FOR PHYSICS

Subject  -Physics  district - dharmapuri
 1 GHSS Bandahalli Physics
 2 GHSS Amanimallapuram Physics 
 3 GBHSS Pennagaram Physics 
 4 GHSS Mangarai Physics 
5 GBHSS Marandahalli Physics 
6 GHSS. Narippalli  Physics 
 7 GBHSS B.Mallapuram Physics 
8 GHSS Kottappatty Physics 
9 GHSS Bairnatham Physics  

Please verify corectness with official

பெண் தேர்வாளருக்கு வேலை வழங்க ஆசிரியர் தேர்வு

தவறான கேள்விக்கு சரியான விடை எழுதிய பெண்
தேர்வாளருக்கு வேலை வழங்க ஆசிரியர்
தேர்வு வாரியத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால
உத்தரவு பிறப்பித்துள்ளது.

சேலம் மாவட்டம், கசகனூர் கிராமத்தைச் சேர்ந்த
பி.தேன்மொழி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவிவரம்: 2012-2013-ஆம்
ஆண்டு முதுநிலை உதவி ஆசிரியர் பணிக்காக ஆசிரியர் தேர்வு வாரியம்
தேர்வு நடத்தியது. தேர்வில் கேட்கப்பட்ட கேள்விக்கு தவறான பதில்
கொடுக்கப்பட்டிருந்தது.தவறான பதில் கொடுக்கப்பட்டிருந்தும் நான் சரியான 
பதில் எழுதினேன்.இது போன்ற கேள்விக்கு பதில் அளித்தால் அதற்கு ஒரு 
மதிப்பெண் வழங்கவேண்டும். ஒரு மதிப்பெண் வழங்கினால் பிற்படுத்தப்பட்டோர் 
ஒதுக்கீட்டுக்கு தேவையான 94 மதிப்பெண் எனக்கு கிடைக்கும். அதனால், கட்-ஆஃப்
மதிப்பெண்ணுக்கு தேவையான ஒரு மதிப்பெண்ணும், வேலையும்
எனக்கு வழங்க ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு உத்தரவிட வேண்டும் என
மனுவில் கோரப்பட்டது.

இந்த மனு நீதிபதி என்.கிருபாகரன் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர்
தரப்பில் வழக்குரைஞர் அன்பரசு ஆஜரானார். விசாரணைக்குப்
பிறகு நீதிபதி பிறப்பித்த உத்தரவு: தேர்வில் கேட்கப்பட்ட
கேள்விக்கு வினாத்தாளில் தவறான பதில் கொடுக்கப்பட்டிருந்தும் மனுதாரர்
சரியான பதில் எழுதியுள்ளார். கேள்விக்கு பதில் அளித்ததால்
அதற்கு ஒரு மதிப்பெண் வழங்க வேண்டும். இதன் மூலம்,
மனுதாரருக்கு தேவையான கட்- ஆஃப் மதிப்பெண்
கிடைத்துவிடும். அதனால், மனுதாரரை முதுநிலை உதவி ஆசிரியர் பணியில்
நியமிக்க வேண்டும் என ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு நீதிபதி இடைக்கால
உத்தரவு பிறப்பித்தார்.

News source: dinamani
There is no details about the case,subject,qustion etc -THAMIL THAMARAI
--------------------------------------------------------------------------------------------------------------------------
NEWS IN DETAIL
முதுகலை ஆசிரியர் பணிக்கான தேர்வில்,விண்ணப்பதாரர் ஒருவரை, சான்றிதழ் சரிபார்க்க
அழைக்கவும், ஒரு இடத்தை காலியாக வைத்திருக்கவும்,சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால உத்தரவிட்டுள்ளது.
 சேலம் மாவட்டம், கசகரனூரைச் சேர்ந்த,தேன்மொழி என்பவர் தாக்கல் செய்த மனு: தாவரவியலில்,முதுகலை பட்டம், பி.எட்., பட்டம் பெற்றுள்ளேன்.
பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவள்.முதுகலை ஆசிரியர் பணிக்கு விண்ணப்பித்தேன். கடந்தஜூலையில், எழுத்துத் தேர்வு நடந்தது. எனக்கு, 93 மதிப்பெண் கிடைத்தது. 'கீ" விடைத்தாளை பார்க்கும் போது, மூன்று கேள்விகளுக்கு தவறான விடைகள்
அளிக்கப்பட்டது தெரிய வந்தது. முதுகலை தாவரவியல் ஆசிரியர் பணிக்கு, பிற்படுத்தப்பட்ட பிரிவில், குறைந்தபட்சம், 94 மதிப்பெண் எடுக்க வேண்டும். ஒரு மதிப்பெண் கூடுதலாக கிடைத்தால், நான் தகுதி பெற்று விடுவேன். மூன்று கேள்விகளுக்கும் எனக்கு மதிப்பெண் கிடைத்தால், பணி நியமனம் கிடைத்து விடும். இதுகுறித்து, ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு, இம்மாதம், 15ம் தேதி, மனு அனுப்பினேன். எனவே, முதுகலை தாவரவியல்
ஆசிரியர் பணியிடங்களில், ஒரு இடத்தை காலியாக வைக்க, இடைக்கால உத்தரவிட வேண்டும். மூன்று மதிப்பெண் வழங்கவும், சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொள்ள அனுமதிக்கவும், பணி நியமனம் வழங்கவும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது. 

இம்மனு, நீதிபதி கிருபாகரன் முன், விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில், வழக்கறிஞர்கள்
தாட்சாயணி ரெட்டி, ஜி.அன்பரசு, அரசு தரப்பில், கூடுதல் அரசு பிளீடர் சஞ்சய்காந்தி ஆஜராகினர்.நீதிபதி கிருபாகரன் பிறப்பித்த, இடைக்கால உத்தரவு: ஒரு கேள்விக்கு, மனுதாரர் சரியான பதில் அளித்துள்ளார். அதற்கு, ஒரு மதிப்பெண் வழங்கினால், 94 பெற்று விடுவார். எனவே, இடைக்கால நடவடிக்கையாக, சான்றிதழ் சரிபார்ப்புக்கு, மனுதாரரை அழைக்க வேண்டும்; ஒரு இடத்தை காலியாக வைக்க வேண்டும். இவ்வாறு,
நீதிபதி கிருபாகரன் உத்தரவிட்டுள்ளார்v

சனி, 26 அக்டோபர், 2013

1.2 கோடி மாணவர்களின் விவரம இணையதளத்தில் பதிவு -பள்ளி கல்வித்துறை,  முதன்மை செயலர்  சபிதா

1.2 கோடி மாணவர்களின் விவரம்: இணையதளத்தில் பதிவு 

 தமிழகத்தில், அனைத்து விதமான பள்ளிகளில்
படிக்கும், 1.3 கோடி மாணவ, மாணவியரில், 1.2
கோடி பேரின் முழுமையான விவரங்கள்,
இணையதளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன. மீதம் உள்ள,
10 லட்சம் மாணவர்களின் பதிவுகள், நவம்பர் இறுதிக்குள்,
பதிவு செய்யப்படும்,'' என, பள்ளி கல்வித்துறை, 
முதன்மை செயலர், சபிதா தெரிவித்தார்.

 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார்
பள்ளிகள் என, அனைத்து வகையான பள்ளிகளில் பயிலும்,
மாணவ, மாணவியரைப் பற்றிய விவரங்களை,
இணையதளத்தில் பதிவு செய்து, அவர்களுக்கு, "ஸ்மார்ட்
கார்டு' வழங்க,
பள்ளி கல்வித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது
. இத்திட்டத்தின் கீழ், ஒரு மாணவரைப் பற்றிய,
அனைத்து விவரங்களும் பதிவு செய்யப்படுகின்றன.
மாநிலத்தில், பிளஸ் 2 வரை, 1.3 கோடி மாணவ,
மாணவியர் படிக்கின்றனர். இவர்களில், இதுவரை, 1.2
கோடி மாணவ, மாணவியரின் விவரங்கள்,
இணையதளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளதாக, 
பள்ளி கல்வித் துறை முதன்மை செயலர்,
சபிதா தெரிவித்தார்.

 இது குறித்து, அவர், மேலும் கூறியதாவது:
இணையதளத்தில் தகவல்கள் பதிவேற்றம் செய்யப்பட்ட
மாணவர்களுக்கு, படிப்படியாக, "ஸ்மார்ட் கார்டு'
வழங்கப்பட்டு வருகிறது. மீதம் உள்ள, 10 லட்சம்
மாணவர்கள் குறித்த விவரங்களை, நவம்பர் இறுதிக்குள்
பதிவு செய்ய திட்டமிட்டுள்ளோம். ஒரு மாணவர், ஒரு 
பள்ளியை விட்டு, வேறொரு பள்ளியில் சேர,
"ஸ்மார்ட் கார்டை' பயன்படுத்திக் கொள்ளலாம்.
அதேபோல், ஒரு மாணவர், தற்போது என்ன
வகுப்பு படிக்கிறார்; படிக்கிறாரா, இல்லையா;
படிப்பை பாதியில் நிறுத்தி விட்டாரா என்பது உட்பட,
அனைத்து தகவல்களையும், ஒருங்கிணைந்த பள்ளி 
மேலாண்மை தகவல் அமைப்பு முறை மூலம் அறிய
முடியும். அதேபோல், மாணவர்களுக்கு வழங்கப்படும்
நலத்திட்ட பணிகளையும், இத்திட்டத்தின் கீழ்
கண்காணிக்க முடியும். இவ்வாறு, செயலர் தெரிவித்தார்.

TRB PG :தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த 184 பேர் தேர்ச்சி

 தருமபுரியில் புதன்கிழமை முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள் பணிக்கான
போட்டித் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டன. தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்பட்ட முதுநிலைப்
பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடங்களுக்கான போட்டித் தேர்வில்
தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த 184 பேர் தேர்ச்சிப் பெற்றனர். இவர்களது சான்றிதழ்களை சரிபார்க்கும் பணி செவ்வாய், புதன்கிழமை ஆகிய
இரண்டு நாள்கள் தருமபுரி அதியமான் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில்
நடைபெற்றது. இதில், ஆசிரியர் பயிற்சி நிறுவன இயக்குநர் கண்ணப்பன், பள்ளிக்
கல்வி துணை இயக்குநர் புகழேந்தி, முதன்மைக் கல்வி அலுவலர் மகேஸ்வரி,
அனைவருக்கும் கல்வி இயக்கத் திட்ட கூடுதல் முதன்மைக் கல்வி அலுவலர்
ஆறுமுகம் உள்ளிட்டோர் கலந்து கொண்டு முதல் நாளில் 92 பேரின்
சான்றிதழ்களையும், இரண்டாம் நாளில் 92 பேரின் சான்றிதழ்கள் என மொத்தம்
184 பேரின் சான்றிதழ்களை சரிபார்த்தனர்.

PG VACANT FOR COMMERCE DHARMAPURI DIST

Subject  -Commerce 
 1 GBHSS Pennagaram Commerce 
 2 GHSS Navalai Commerce 
 3 GHSS Indur Commerce 
4 GHSS Venkatampatti Commerce 
 5 GHSS Maniyathahalli Commerce 
6 GHSS Periyampatti Commerce 
7 GHSS Begarahalli Commerce
 8 GHSS Hanumanthapuram Commerce 
9 GGHSS Karimangalam Commerce 
10 GHSS Nathamedu Commerce
11 GHSS V.Muthampatty Commerce
12 GHSS Jollypudur Commerce 
13 GGHSS Palacode Commerce 
  
Please verify  corectness with official

விரிவாக விடை அளிக்கும் முறையால் தேர்வெழுத நேரம் போதவில்லை: குரூப்1 தேர்வர்கள்

தற்போதைய தேர்வு முறையில், "அப்ஜக்டிவ்' முறையிலான கேள்விகள் இல்லை.
அனைத்து கேள்விகளும், விரிவாக விடை அளிக்கும் வகையில் இருப்பதால், தேர்வெழுத, நேரம் போதவில்லை' என, குரூப்1 தேர்வர்கள் புலம்பினர்.
 தமிழக அரசு தேர்வாணையம் மூலம், புதியபாடத்திட்டத்தின் அடிப்படையில், முதல் முறையாக, குரூப்1, மெயின் தேர்வு, சென்னையில் மட்டும், நேற்று, 14 மையங்களில் நடந்தது. டி.எஸ்.பி., துணை கலெக்டர்,மாவட்ட பதிவாளர் உள்ளிட்ட பதவிகளில், காலியாகஉள்ள, 25 பணியிடங்களை நிரப்ப, நடந்த இத்தேர்வில், மாநிலம் முழுவதிலும் இருந்து, 1,372 பேர் பங்கேற்றனர்.
காலை, 10:00 மணி முதல், பகல், 1:00 மணி வரை,தேர்வு நடந்தது. திருவல்லிக்கேணி, என்.கே.டி., பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த தேர்வு மையத்தை,டி.என்.பி.எஸ்.சி., தலைவர், நவநீதகிருஷ்ணன், பார்வையிட்டார். என்.கே.டி., பள்ளியில், கோவை, ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த, 100 தேர்வர்கள், தேர்வெழுதினர்.

 கோவையைச் சேர்ந்த, ரேஷ்மா கூறுகையில், ""நான், முதல் முறையாக, இப்போது தான், குரூப்1 தேர்வை எழுதினேன். முதல்நிலைத் தேர்வில் தேர்வு பெற்று, தற்போது,
மெயின் தேர்வை எழுதியுள்ளேன். கேள்விகள், கடுமையாக இல்லை. நன்றாக எழுதினேன்,'' என்றார். 
ஈரோட்டைச் சேர்ந்த, தினேஷ் கூறியதாவது: பழைய பாடத்திட்டத்தில், இரு தேர்வுகள் மட்டுமே நடக்கும். தற்போது, மூன்று தாள் தேர்வுகள் நடக்கின்றன. பழைய
பாடத்திட்டத்தில், முதல்தாள் தேர்வில், 40 கேள்விகளும், இரண்டாம் தாள் தேர்வில், 35 கேள்விகளும், "அப்ஜக்டிவ்' முறையில் இருக்கும். இதர கேள்விகள், விரிவாக விடை எழுதும் வகையில் இருக்கும். ஆனால், தற்போது, "அப்ஜக்டிவ்' முறையிலான கேள்விகள் கிடையாது.
அனைத்து கேள்விகளுமே, விரிவாக விடை எழுதும் வகையில் தான் அமைக்கப்பட்டுள்ளன. இதனால், விடை எழுத, போதிய நேரம் கிடைக்கவில்லை. பாடத்திட்டத்திற்கு உட்பட்டு தான், கேள்விகள் கேட்கப்பட்டன. கேள்விகள், ஓரளவிற்கு நன்றாக இருந்தபோதும், விடை எழுத, நேரம் கிடைக்காதது தான் குறை. இவ்வாறு, தினேஷ் கூறினார்.

இதேபோல், பல தேர்வர்கள், நேரம் போதவில்லை என, தெரிவித்தனர். நேற்று, 300 மதிப்பெண்களுக்கு, தேர்வு நடந்தது. தொடர்ந்து, இன்றும், நாளையும், தலா, 300 மதிப்பெண்களுக்கு தேர்வு நடக்கும். இந்த தேர்வில், அதிக மதிப்பெண் பெறுபவர்கள், நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவர். பின், மெயின் தேர்வு மதிப்பெண் மற்றும் நேர்முகத்தேர்வு மதிப்பெண் (120 மதிப்பெண்) ஆகியவற்றின் அடிப்படையில்,
இறுதி தேர்வுப்பட்டியல் வெளியாகும். நவம்பர் இறுதிக்குள், இறுதி பட்டியலை எதிர்பார்க்கலாம்.



Source dinamalar

உயர் நிலைப் பள்ளிகளில் தலைமையாசிரியர் பணியிடங்கள் நிரப்பகோர்ட் உத்தரவிற்கு பின் நடவடிக்கை பள்ளிக் கல்வித்துறை இயக்குனர்


உயர் நிலைப் பள்ளிகளில் தலைமையாசிரியர் பணியிடங்கள் நிரப்பகோர்ட்
.உத்தரவிற்கு பின் தான் நடவடிக்கை எடுக்கப்படும்- பள்ளிக் கல்வித்துறை இயக்குனர்  ராமேஸ்வரமுருகன் தெரிவித்தார்
"பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வுகளில் மாணவர்கள்தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க, இந்தாண்டு முதல்சிறப்புத் திட்டம் அமல்படுத்தப்படவுள்ளது,'' என்றும் தெரிவித்தார்

 மதுரையில் அவர் கூறியதாவது: பள்ளிக் கல்வித் துறையில் தணிக்கை தடைகள் ஏற்படாமலும், நிர்வாக ரீதியாகவும் தலைமையாசிரியர்களின் பணி எவ்வாறு அமைய வேண்டும் என்பது குறித்து தணிக்கை அதிகாரிகளுடன் மதுரையில் ஆலோசனை நடத்தப்பட்டது. இதுகுறித்து அனைத்து தலைமையாசிரியர்களுக்கும், சிறப்பு வழிகாட்டி புத்தகங்கள் வழங்கப்படவுள்ளன. 
பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 அரசு பொதுத் தேர்வுகளில் மாணவர்கள்
தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க, கல்வித் துறையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. குறிப்பாக, பள்ளிகளுக்கு சென்று மாணவர்களுக்கு சிறப்பு "கவுன்சிலிங்' அளிப்பதற்காக, 10 "மொபைல்' வேன்கள் துவக்கப்பட்டுள்ளன. தேர்வில் குறைவான மதிப்பெண் எடுக்கும் மாணவர்கள் தற்கொலைக்கு முயற்சிப்பது இந்த "கவுன்சி லிங்' முறையால் தவிர்க்கப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது. காலாண்டு தேர்வில் குறைந்த மதிப்பெண்கள் பெற்ற மாணவர்கள் (ஸ்லோ லேனர்ஸ்) பட்டியல் தயாரிக்க
உத்தரவிடப்பட்டுள்ளது. அவர்களுக்கு பாடவாரியாக சிறப்பு கையேடுகள் தயாரித்து வழங்கவும், 100 சதவிகிதம்தேர்ச்சி பெற்ற பள்ளிகளில் இருந்து சிறப்பு ஆசிரியர்கள் குழு ஏற்படுத்தி, சிறப்பு வகுப்புகள் நடத்தும் திட்டம் இந்தாண்டு செயல்படுத்தப்பட உள்ளது. இதற்காக, மாவட்ட அளவில் சிறப்பு ஆசிரியர்கள் குழுக்கள் ஏற்படுத்தப்படவு உள்ளன. 

மாணவர்களுக்கு வழங்கப்படும் 14 வகையான நலத்திட்டபொருட்களை வைப்பதற்கு மாவட்டங்கள் தோறும் அரசு குடோன்கள் ஏற்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை குறித்து ஆய்வு செய்யப்படும். 
மாணவர்கள் படிக்கும் பள்ளிகளில், ஆண் ஆசிரியர்களும்,மாணவிகள் மட்டும் படிக்கும் பள்ளிகளில், ஆசிரியைகளை மட்டும் நியமிக்க வேண்டும் என்ற அரசு உத்தரவு,நடப்பாண்டு முதல் தீவிரமாக்கப்படும். இதன்மூலம் ஆசிரியர்கள்- மாணவர்கள் இடையே இணக்கமான சூழ்நிலை ஏற்படும். 
மாநிலம் முழுவதும் 650 உயர் நிலைப் பள்ளிகளில் தலைமையாசிரியர் பணியிடங்கள்
நிரப்பப்படாமல் உள்ளன. இதுதொடர்பான வழக்கு கோர்ட்டில் நிலுவையில் உள்ளது. எனவே கோர்ட்உத்தரவிற்கு பின் தான் நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்

TRB ADDITIONAL CV: நவம்பர் 5, 6-ஆம் தேதிகளில் சென்னையில் சான்றிதழ்சரிபார்ப்பு

முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் நியமனத்துக்காக 212 தேர்வர்கள் அடங்கிய
கூடுதல் பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. ஆசிரியர் தேர்வு வாரியத்தின் www.trb.tn.nic.in என்ற இணையதளத்தில் இந்தப்பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வகுப்பு வாரியாக ஒரே கட்-ஆஃப்மதிப்பெண் பெற்றவர்களையும் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்க வேண்டும்என உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. இதையடுத்து, மொத்தம் 212பேர் அடங்கிய பட்டியலை ஆசிரியர்
தேர்வு வாரியம் வியாழக்கிழமை இரவு வெளியிட்டது. இவர்கள் அனைவருக்கும் நவம்பர் 5, 6-ஆம் தேதிகளில் சென்னையில் சான்றிதழ்சரிபார்ப்பு நடைபெறும் எனத் தெரிகிறது. சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும்இடம், நேரம் ஆகியவை பின்னர் அறிவிக்கப்படும் என ஆசிரியர்
தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. 2,881 முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான
போட்டித் தேர்வு ஜூலை 21-ஆம் தேதி நடைபெற்றது. தமிழ் பாடம் தவிர
மீதமுள்ள பாடங்களுக்கான தேர்வு முடிவுகள் அக்டோபர் 7-ஆம்
தேதி வெளியிடப்பட்டன. சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்டவர்களின் பட்டியல் அக்டோபர் 11-ஆம் தேதி வெளியிடப்பட்டது. இந்தத் தேர்வு முடிவுகளை வெளியிடவும் உயர் நீதிமன்ற
மதுரை கிளை தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


வெள்ளி, 25 அக்டோபர், 2013

தொழிற்கல்வி ஆசிரியர்களுக்கும் பதவி உயர்வு வழங்க பரிசீலனை?

 அரசு மேல்நிலைப் பள்ளிகளில், 34
ஆண்டுகளாக பதவி உயர்வு இல்லாமல் அவதிபட்டு வரும்
தொழிற்கல்வி ஆசிரியர்களுக்கு,
பதவி உயர்வு அளிக்க, பள்ளிக்கல்வித்
துறை பரிசீலனை செய்து வருகிறது.

தமிழகத்தில் உள்ள, 2,595 அரசு மேல்நிலைப் பள்ளிகளில்
, 1,605 பள்ளிகளில் மட்டும், பிளஸ் 1, பிளஸ் 2
வகுப்புகளில், தொழிற்கல்விப்
பிரிவு இயங்கி வருகிறது. இவற்றில், 4,000
தொழிற்கல்வி ஆசிரியர் பணிபுரிந்து வருகின்றனர்.
பட்டதாரி, முதுகலை ஆசிரியர்களைப் போல்,
தொழிற்கல்வி ஆசிரியர்களுக்கு, பதவி உயர்வு
அளிக்கப்படுவதில்லை. 34 ஆண்டுகளாக,
ஆசிரியர்களாகவே பணியாற்றி, எவ்வித பதவி உயர்வும்
இல்லாமல், ஓய்வு பெறுகின்றனர்.

இந்த விவகாரம்குறித்து, தமிழ்நாடு மேல்நிலைப்
பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர் கழக பொதுச் செயலர்,
ஜனார்த்தனன் மற்றும் நிர்வாகிகள், பள்ளிக்கல்வி இயக்குனர் மற்றும்
இணை இயக்குனரை (தொழிற்கல்வி) சந்தித்து பேசினர்.
இது குறித்து, ஜனார்த்தனன் கூறுகையில், எங்களுக்கு,
உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்
அல்லது மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்
பதவி உயர்வை வழங்க வேண்டும் என, இயக்குனரிடம்
வலியுறுத்தினோம். நியாயமான இந்த
கோரிக்கையை பரிசீலனை செய்து, நடவடிக்கை எடுப்பதாக,
 இயக்குனர், உறுதி அளித்தார், என்றார்.

TRB PG CV:புதிய முறையில் சான்றிதழ் சரிபார்ப்பு

புதிய முறையில் சான்றிதழ் சரிபார்ப்பு : ஆசிரியர் தேர்வு வாரியம் நடவடிக்கை
ஆசிரியர் தேர்வு வாரியம், வழக்கமான
பாணியை மாற்றி, புதிய முறையில்,
முதுகலை ஆசிரியர்களுக்கு, சான்றிதழ்
சரிபார்ப்பை நடத்தியுள்ளது. வழக்கமாக, சான்றிதழ்
சரிபார்ப்பு பணிகள் முடிந் ததும், தேர்வர்களுடைய
ஆவணங்கள் அனைத்தும், டி.ஆர்.பி., அலுவலகத்திற்கு கொண்டு வரப்படும்.
பின், அதிகாரிகள் அடங்கிய குழு, ஒவ்வொரு தேர்வரின்
சான்றிதழ்களையும், ஆய்வு செய்யும். இந்தப் பணிகள்
முடிவதற்கே, பல நாட்கள் ஆகிவிடும். இந்நிலையில்,
23, 24ம் தேதிகளில், மாநிலம் முழுவதும், 14
மையங்களில், முதுகலை ஆசிரியர் பணிக்கான சான்றிதழ்
சரிபார்ப்பு நடந்தது. இதில், வழக்கத்திற்கு மாறாக,
புதிய முறையை, டி.ஆர்.பி., கையாண்டுள்ளது.
அதன்படி, ஒவ்வொரு மையத்திற்கும், சி.இ.ஓ.,
தலைமையில், நான்கு அலுவலர்கள், சான்றிதழ்
சரிபார்ப்பிற்கு பொறுப்பு ஏற்கச் செய்தது.
தேர்வர்களுடைய சான்றிதழ்களை, மையத்தில் உள்ள
பல்வேறு குழுக்கள் ஆய்வு செய்து முடித்ததும்,
அது குறித்த விவரங்களை, அங்கே இருந்தபடி,
டி.ஆர்.பி., இணையதளத்தில், அப்லோட் செய்தனர்.
மேலும், தேர்வர்களின் சான்றிதழ்கள்
ஏற்றுக்கொள்ளப்பட்டது என்றும், ஆசிரியர் பணிக்கு,
தகுதியானவர் என்றும், தேர்வு செய்யப்பட்ட தேர்வரின்
ஆவணத்தில், சி.இ.ஓ., உட்பட, நான்கு பேரும்
கையெழுத்திட்டு, அதன் நகலை,
தேர்வர்களுக்கு வழங்கவும், டி.ஆர்.பி.,
நடவடிக்கை எடுத்தது. இதன்மூலம், டி.ஆர்.பி.,
அலுவலகத்தில், மீண்டும் ஒரு முறை தனியாக, சான்றிதழ்
சரிபார்ப்பு பணிகள் நடக்காது. நேரடியாக, தேர்வுப்பட்டியல்
தயாரிக்கப்பட்டு, பட்டியல்
வெளியிடப்படும்.

முதுகலை ஆசிரியர் சான்றிதழ்   சரிபார்ப்பு TRB கூடுதல்  பட்டியல் வெளியிட்டது

முதுகலை ஆசிரியர் சான்றிதழ் சரிபார்ப்பு,வரும், 22, 23ம் தேதிகளில், மாநிலம் முழுவதும், 14இடங்களில் ந. இதில் பங்கேற்பதற்கானஅழைப்பு கடிதங்கள், டி.ஆர்.பி., இணையதளத்தில் வெளியிடப்பட்டன.         
சான்றிதழ் சரிபார்ப்பிற்கு டிஆர்பி விளக்கக்  குறிப்பேட்டில்  குறிப்பிட்டவாறு  வகுப்புவாரி  இடஒதுக்கீட்டின் கீழ்  இறுதி கட் -ஆப்  மதிப்பெண்  பெற்றவர்கள்  அனைவரும்  அழைக்கப்படவில்லை .வயதில்  மூத்தோர்  மட்டுமே  அழைக்கப்பட்டுள்ளனர் .இதனை  எதிர்த்து   மதுரை ஐகோர்ட் கிளையில்   நெல்லை  மாவட்டத்தைச் சேர்ந்த  இரு  தேர்வர்களும்  இராமநாதபுரம் மாவட்டதைச்  சேர்ந்த ஒருவர் என 3 வழக்குகள் தொடுக்கப்பட்ட
இவ் வழக்குகள் இன்று   நீதியரசர்   நாகமுத்து அவர்கள் முன்னிலையில்  விசாரணைக்கு.வந்தது  வழக்கு  விசாரணைக்குப்பின்  மனுதாரர்களை  சான்றிதழ் சரிபார்ப்பில் சேர்த்து தகுதியின் அடிப்படையில்  பரிசீலிக்க உத்தரவிட்ட  நீதிபதி தேர்வுமுடிவினை  வெளியிட  இடைக்கால தடை உத்தரவையும்  பிறப்பித்ததார்

  முதுகலை ஆசிரியர் சான்றிதழ் சரிபார்ப்பிற்கு டிஆர்பி   கூடுதல்  பட்டியல் வெளியிட்டது.அவர்களுக்கு அழைப்புக்கடிதம் ,சான்றிதழ் சரிபார்ப்பு தேதிவிரைவில்  இணையதளத்தில்  வெளியிடப்படும்  என தெரிகின்றது     
 No of candidates called for CV
ENGLISH    37
PHYSICS.   20
MATHS.    34
CHEMIS.    25
BOTANY.   15
ZOO.         16
HIST.         20
GEO.          06
ECNO.        05
COM.        28
M.BIO.      05
P D.           OI
TOTAL.   212

Trb pg flash news : additional cv list realeased

Teachers Recruitment Board  College Road, Chennai-600006

Direct Recruitment of Post Graduate Assistants for the year 2012 - 2013
ADDITIONAL PROVISIONAL LIST FOR CERTIFICATE VERIFICATION
(Except for Tamil Subject)

In pursuance of the directions of the Madurai Bench of the Hon’ble High Court Madras, the Additional list of candidates who have secured the same cut off marks in each communal category and in each subject are called for certificate verification.
Call letters for certificate verification along with necessary forms will be uploaded in TRB website. Candidates have to take printouts of those prescribed papers. No call letter will be sent through post.
It may be noted that the lists now released are purely tentative. Calling for Certificate Verification is not a guarantee for selection. And it is also informed that this is subject to the outcome of final judgement in W.P.Nos. 17084, 17097, 17109, 17156, 17191, 17270 and 17256 of 2013 filed in the Madurai Bench of the Hon’ble High Court, Madras.
Utmost care has been taken in preparing and publishing the list. Teachers Recruitment Board reserves the right to correct any errors that may have crept in inadvertently. Incorrect list due to inadvertent errors shall not confer any right of enforcement on the candidate.
          

Dated: 24-10-2013

Member Secretary
Home













C
lick HERE FOR ADDITIONAL CV LIST

வியாழன், 24 அக்டோபர், 2013

PG VACANT LIST FOR CHEMISTRY

 Subject  -Chemistry  
DHARMAPURI DIST
1 GBHSS Paupparappatti Chemistry 
 2 GHSS Narippalli Chemistry 
3 GHSS Perumbalai Chemistry 
4 GHSS Eriyur Chemistry 
 5 GHSS Panjappalli Chemistry 
 6 GBHSS B.Mallapuram Chemistry 
 7 GHSS Neruppur Chemistry
 8 GHSS Kottappatti Chemistry 
9 GHSS Eriyur Chemistry 
10 GHSS. Sellamudi  Chemistry 
 11 GHSS Krishnapuram Chemistry 
12 G.Model.S. Pennagaram(Chinn) Chemistry
 13 GHSS M.Doddampatti Chemistry 

Please confirm the list with official

12 மற்றும் 10ம்வகுப்புதனித்தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு

 பிளஸ் 2 மற்றும் 10ம்வகுப்பு தனித்தேர்வு முடிவுகள் அடங்கிய 
மதிப்பெண் பட்டியல் நாளை முதல், 30ம் தேதி வரை, மாணவர்
தேர்வெழுதிய மையங்களில் வினியோகிக்கப்படும், என,
தேர்வுத் துறை இயக்குனர், தேவராஜன் அறிவித்துள்ளார்.
பிளஸ் 2 தேர்வை, 40 ஆயிரம் பேரும், 10ம் வகுப்பு தேர்வை,
50 ஆயிரம் பேரும் எழுதினர். இதற்கான
மதிப்பெண் சான்றிதழ்களை, அவரவர் தேர்வெழுதிய
மையங்களுக்கு, நேரில் சென்று, மதிப்பெண்
பட்டியலை பெற்றுக் கொள்ளலாம் எனவும்,
தேர்வு முடிவு, இணையதளத்தில்
வெளியிடப்படமாட்டாது எனவும், இயக்குனர் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு, பிளஸ் 2
தனித்தேர்வு மதிப்பெண் பட்டியல், டிச., 17ம் தேதியும்,
10ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், கடந்த ஜனவரி, 2ம்
தேதியும்வழங்கப்பட்டன. ஆனால், இந்த ஆண்டு, இரு மாதங்கள்
முன்கூட்டியே, தேர்வு முடிவு வெளியிடப்பட உள்ளது. மேலும்,
 கடந்த ஆண்டு வரை,
தேர்வு முடிவு ஒரு தேதியிலும், மதிப்பெண் பட்டியல்,
ஒரு தேதியிலும் வழங்கப்பட்டன. ஆனால், இந்த ஆண்டு,
இரு தேர்வுகளுக்கான மதிப்பெண் பட்டியலும்,
ஒரே நேரத்தில், வழங்கப்படுகின்றன. தேர்வுத் துறையில்,
சமீபத்தில் கொண்டு வந்த பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளால்,
தேர்வு முடிவை முன்கூட்டியே வெளியிட முடிந்ததாக,
தேர்வுத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

தனித்தேர்வுகளின் விடைத்தாள் நகல் பெறுதல் மற்றும்
மறுகூட்டல் ஆகியவற்றிற்கு,
விண்ணப்பம் செய்வது குறித்து, விரைவில் அறிவிப்பு வெளியிடப்படும்
என, இயக்குனர் தெரிவித்துள்ளார்
.

புதன், 23 அக்டோபர், 2013

TNTET 2012:ஆசிரியர் தகுதித்தேர்வு, "கீ' பதில்களில் 9 கேள்விகளுக்கு தவறான விடைகள்

ஆசிரியர் தகுதித்தேர்வு, "கீ' பதில்களில் 9
கேள்விகளுக்கு தவறான விடைகள்
அளிக்கப்பட்டுள்ளதால், அவற்றிற்கு முழு மதிப்பெண்
வழங்க கோரிய வழக்கில், அரசுத்தரப்பில் பதில்
மனு செய்ய, மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.

விக்கிரமசிங்கபுரம் சூர்யா தாக்கல் செய்த மனு:

எம்.எஸ்சி., பி.எட்., படித்துள்ளேன். ஆசிரியர்
தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.,) மூலம், 2012 அக்.,14 ல்,
பட்டதாரி ஆசிரியர் தகுதித் தேர்வு நடந்தது.
குழந்தை வளர்ச்சி மற்றும் கற்பிக்கும் கலை, தமிழ்,
ஆங்கிலம், கணிதம் என, 4 பகுதிகளை கொண்ட வினாத்தாள்
தயாரிக்கப்பட்டிருந்தது. எனக்கு "பி'
வரிசை வினாத்தாள் வினியோகித்தனர்.
பாடத்திட்டத்திற்கு அப்பாற்பட்டு, பல கேள்விகள் இடம்
பெற்றிருந்தன. டி.ஆர்.பி., இணையதளத்தில் "கீ' பதில்கள்
வெளியானது. இதில், 9 கேள்விகளுக்கு தவறாக
விடைகள் இடம்பெற்றுள்ளன. அவற்றிற்கு, நான் சரியான
விடைகளை எழுதியுள்ளேன். எனக்கு, 86 மதிப்பெண்
வழங்கியுள்ளனர். தேர்ச்சி பெற, 90 மதிப்பெண் வேண்டும்.
"கீ' பதில்கள் தவறாக உள்ளதால், எனக்கு கூடுதலாக 9
மதிப்பெண் வழங்க உத்தரவிட வேண்டும். இதனால்,
எனது மதிப்பெண் 95 ஆக உயரும், என குறிப்பிட்டார்.

நீதிபதி எஸ்.நாகமுத்து முன், விசாரணைக்கு மனு வந்தது.
 மனுதாரர் தரப்பில் வக்கீல் பன்னீர்செல்வம் ஆஜரானார்.
தேர்வு வாரிய தலைவர் பதில்
மனு செய்ய, நீதிபதி உத்தரவிட்டார்.

 முதுகலை ஆசிரியர்  பதவி உயர்வில் சிக்கல்

 
 தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.,) மூலம்
தேர்வு செய்யப்பட்டவர்கள், முதுகலை ஆசிரியர்
பணியிடத்தில் நியமிக்கப்பட உள்ள நிலையில்,
பதவி உயர்விற்கு காத்திருக்கும் பட்டதாரி ஆசிரியர்கள்
பாதிக்கப்படுவர் என, ஆதங்கம் ஏற்பட்டு உள்ளது. அரசுப் பள்ளிகளில் 
3,000  க்கும் மேற்பட்டமுதுகலை ஆசிரியர் பணியிடம் காலியாக உள்ளது.
காலியிடம் உள்ள பள்ளிகளில், பெற்றோர் ஆசிரியர்
கழகம் மூலம், தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க,
அரசு உத்தரவிட்டது. 
இந்நிலையில், 2013 ஜூலையில்,ஆசிரியர் தேர்வுவாரியத்தின் மூலம், தேர்வு செய்யப்பட்டவர்களை, முதுகலை ஆசிரியர்பணியிடத்தில் நியமிப்பதற்கான,
 சான்றிதழ் சரிபார்க்கும்பணி, 14 மாவட்டங்களில்,நேற்று துவங்கி இன்று முடிகிறது.        இவர்கள்நியமிக்கப்பட்டால், பதவி உயர்விற்காக, ஐந்து மாதமாக
காத்திருக்கும், 3,000 பட்டதாரி ஆசிரியர்கள் (முதுகலை பட்டம் பெற்றவர்கள்) பாதிக்கப்படுவர் என்ற நிலை ஏற்பட்டு உள்ளது.
"எங்களுக்கு பதவி உயர்வு அளித்த பின், டி.ஆர்.பி., யில்
தேர்வு செய்யப்பட்டவர்களை நியமிக்க வேண்டும்' என,
பட்டதாரி ஆசிரியர் சங்கங்கள் வலியுறுத்தி உள்ளன.
பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு துணைத் தலைவர் எட்வின் கூறுகையில்,
 ""ஒரே நேரத்தில் 2 "டிகிரி' முடித்த ஆசிரியர்கள்,
பதவி உயர்வு கோரி வழக்கு தொடர்ந்து உள்ளனர்.
இதனால், பதவி உயர்வு பட்டியல்நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. 
இந்நிலையில், புதிய நியமனங்கள் மூலம், மேலும் பாதிப்பு ஏற்படும். தகுதியான ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு அளித்தபின்,
டி.ஆர்.பி., யில் தேர்வானவர்களை நியமிக்க வேண்டும்,''
என்றார்.

TRB PG CV: DINAMALAR NEWS

ஒரு இடத்திற்கு, ஒருவர் வீதம், வெறும், 2,276 பேருக்கு,
சான்றிதழ் சரிபார்ப்பை நடத்தி, முதுகலை ஆசிரியர்,
இறுதி தேர்வு பட்டியலை, விரைந்து வெளியிட,
டி.ஆர்.பி., திட்டமிட்டிருந்த நிலையில், ஐகோர்ட்,
மதுரை கிளை வெளியிட்ட உத்தரவு காரணமாக,
தேர்வெழுதிய, 1.6 லட்சம் பேருக்கும், சான்றிதழ் சரிபார்ப்பு நடத்த உள்ளது.
 இதனால், இறுதி தேர்வுப்பட்டியல், இப்போதைக்கு வராது என, தேர்வர்கள் புலம்ப
ஆரம்பித்து விட்டனர்.
அரசு மேல்நிலைப் பள்ளிகளில், காலியாக உள்ள, 2,881
முதுகலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப, ஜூலை,
21ல், போட்டித்தேர்வு நடந்தது. அடுத்தடுத்த
பணிகளை, விரைந்து முடிக்க, டி.ஆர்.பி.,
நடவடிக்கை எடுத்த நிலையில், தமிழ் பாட
கேள்வித்தாளில், 47 கேள்விகள், பிழையாக அச்சடிக்கப்பட்டிருந்ததாக கூறி, ஐகோர்ட்,
மதுரை கிளையில், ஒரு தேர்வர், வழக்கு தொடர்ந்தார்.
தமிழ் பாடத்திற்கு, மறு தேர்வை நடத்த, கோர்ட்
உத்தரவிட்டுள்ளது. மறு தேர்வை நடத்துவதா,
அல்லது கோர்ட் தீர்ப்பை எதிர்த்து, மேல்
முறையீடு செய்வதா என, இதுவரை, டி.ஆர்.பி., முடிவு எடுக்கவில்லை.

 இந்நிலையில், தமிழ் பாடம்
தவிர்த்து, இதர பாடங்களுக்கு, ஒரு பணிக்கு, ஒருவர்
வீதம், 2,276 பேருக்கு, சான்றிதழ் சரிபார்ப்பு பணி,
நேற்று துவங்கியது. மாநிலம் முழுவதும், 14
மையங்களில், நேற்று, சான்றிதழ் சரிபார்ப்பு நடந்தது.
இன்றும், தொடர்ந்து நடக்கிறது.

 இந்நிலையில், வரலாறு பாடத்தில்,
111 மதிப்பெண் எடுத்தும், தமக்கு,
சான்றிதழ் சரிபார்ப்பிற்கான அழைப்புக் கடிதத்தை,
டி.ஆர்.பி., அனுப்பவில்லை என்றும், இதே மதிப்பெண்
எடுத்த மற்றவர்களுக்கு, அழைப்பு கடிதம்
அனுப்பப்பட்டுள்ளதாகவும் கூறி, நெல்லை மாவட்டத்தைச்
சேர்ந்த, ஜான் ஆபிரகாம் என்பவர், ஐகோர்ட், மதுரை கிளையில் வழக்கு                                    தொடர்ந்தார். இதேபோல்,விலங்கியல் பாடம் சம்பந்தமாகவும்,
வழக்கு தொடரப்பட்டுள்ளது.
 இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதி, நாகமுத்து,
ஒவ்வொரு பாடத்திலும், கடைசி, "கட்ஆப்' மதிப்பெண்
பெற்றவர் வரை, அனைவருக்கும், சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தி,
 அதன் பட்டியலை, கோர்ட்டில்
சமர்ப்பிக்க வேண்டும்' என, உத்தரவிட்டார். இதன்
காரணமாக, தேர்வெழுதிய, 1.6 லட்சம் பேருக்கும்,
சான்றிதழ் சரிபார்ப்பு நடத்த வேண்டிய நிலைக்கு,
டி.ஆர்.பி., தள்ளப்பட்டுள்ளது. இவ்வளவு பேருக்கும்,
சான்றிதழ் சரிபார்ப்பு நடத்துவது குறித்த அட்டவணையை,
விரைவில் தயாரிக்க, டி.ஆர்.பி.,
முடிவு செய்துள்ளது. எனவே, இப்போதைக்கு, தேர்வுப்
பட்டியல் வெளிவர வாய்ப்பில்லை என, தேர்வர்கள் புலம்ப
ஆரம்பித்து விட்டனர்.
NOTE: THIS NEWS SORCE IS  DINAMALAR. THAMIL THAMARAI  NOT THINK THAT TRB  
WILL CONDUCT CV FOR ALL CANDIDATES

TRB VACANCY IN DHARMAPURI ECNOMICS

Subject  - Economics     Dharmapuri dist
1 GHSS Thoppur Economics
2 GHSS Mangarai Economics 
3 GBHSS Palacode Economics 
4 GHSS Bantharahalli Economics 
5 GGHSS Palacode Economics 
6 GHSS Pulikarai Economics 
 7 GGHSS Marandahalli Economics 
8 GBHSS Karimangalam Economics
9 GHSS Laligam Economics 
 10 GHSS Kannipatti Economics 
 11 GGHSS Pappireddippatti Economics
 12 GHSS Bandahalli Economics 
 13 GHSS Maniyathahalli  Economics 
14 GGHSS Karimangalam Economics 
 15 GHSS. Periyampatti  Economics 
 16 GHSS Begarahalli Economics 
 17 GHSS. Hanumanthapuram  Economics 
 18 GHSS Thonganur Economics 
 19 GHSS. Hanumanthapuram  Economics 
20 GGHSS Kadathur Economics 
21 GHSS Nathamedu Economics 
 22 GHSS Navalai Economics 
23 GHSS Nallampalli Economics 
24 GHSS V.Muthampatty Economics 
 25 GHSS Jollypudur Economics 
26 GHSS Bommahalli Economics  

Note:  this is for information  please confirm this vacant with official