செவ்வாய், 28 ஜனவரி, 2014

PG/TET I / TET II-வழக்குகள்   NEWS UPDATE


சென்னை உயர்நீதிமன்றத்தில்  இன்றய (29.01.2014)விசாராணக்கு பட்டியலிடப்பட்டிருந்த வழக்குகள் விவரம்

 1.WRIT PETITIONS CHALLENGING THE KEY ANSWERS  TET EXAMS 
 PAPER I-  FILED AFTER 26.11.2013    - No of writs 20

2.WRIT PETITIONS CHALLENGING THE KEY ANSWERS 
 TET EXAMS  PAPER II  -FILED AFTER 26.11.2013  -no of writs (more than )-74.

3.CHALLENGING KEY ANSWERS  PG ASSISTANT EXAMS  TAMIL- number of    writ 1
  இவ்வழக்குகள் நீதியரசர் சுப்பையா முன் விசாரணைக்கு வந்தன.              
இன்றய விசாராணக்கு பட்டியலிடப்பட்டிருந்த வழக்குகள் அனைத்தும் 26.11.2013 ம் தேதிக்கு பின்னர் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள்.  தமதமாக தாக்கல் செய்யப்பட்டுள்ள  வழக்குகள் என்பதால் இவ்வழக்குகள் அனைத்தையும் இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வு விசாரிக்க பரிந்துரை செய்வதாக நீதியரசர் தெரிவித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

CHALLENGING KEY ANSWERS  PG ASSISTANT EXAMS  TAMIL வழக்கிற்கு ஆசிரியர் தேர்வு வாரியம் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு ஒத்திவைக்கப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
 இது தவிர உரிய கால எல்லைக்குள் தாக்கல் செய்யப்பட்டு இன்னும் விசாரிக்கப்படாத  TET EXAMS  PAPER I,PAPER II   வழக்குகள் நாளை 30.01.2014 விசாரணைக்கு வரக்கூடும் எனவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

நாளைய வழக்குகள் குறித்த விரிவான செய்தி பின்னர் வெளியிடப்படும்

TET  நாளை சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும் - ஆசிரியர் தேர்வு வாரியம் தகவல்


ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று, சான்றிதழ் சரிபார்ப்புக்கு வர இயலாதவர்களுக்கு ஒரு வாய்ப்பளிக்கும்வகையில், நாளை (29.01.2014)மீண்டும் ஒரு சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும் என ஆசிரியர் தேர்வு வாரியம்தெரிவித்துள்ளது.
ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் ஆசிரியர் தகுதித் தேர்வு கடந்த ஆண்டு ஆகஸ்ட்17, 18 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. இத்தேர்வுகளில் தேர்ச்சிபெற்றவர்களுக்கு இம்மாதம் 20ம் தேதி முதல் 27-ம் தேதிவரை அந்தந்த மாவட்டங்களில் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெற்றது. இந்த சான்றிதழ் சரிபார்ப்பில் வருகை புரியாதவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பளிக்கும் வகையில்நாளை ஏற்கனவே ஒதுக்கப்பட்டுள்ள மையத்தில் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும்.
2012-ம் ஆண்டில் நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வுகளில் தகுதிபெற்று, சான்றிதழ் சரிபார்ப்புக்கு வருகைபுரியாத தேர்வர்களும், நாளை தத்தம் மாவட்டங்களில்
சான்றிதழ் சரிபார்ப்பு மையத்திற்கு உரிய ஆவணங்களுடன் சென்று கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
 2012 மற்றும் 2013-ம் ஆண்டு ஆசிரியர் தகுதித் தேர்வு சான்றிதழ் சரிபார்ப்புக்கு இதுவே இறுதி வாய்ப்பாகும் என்றும்,இனி எவ்வித வாய்ப்பும் வழங்கப்பட மாட்டாது என்றும் ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

முதன்மை கல்வி அதிகாரிகள் 7 பேர் மாற்றம்; பள்ளிக்கல்வி இயக்குனரகம் உத்தரவு


 தொடக்க கல்வித்துறை துணை இயக்குனர் புகழேந்தி( முதன்மை கல்வி அதிகாரி ரேங்க்) மாற்றப்பட்டு திருவண்ணாமலை அனைவருக்கும் கல்வி திட்ட கூடுதல் முதன்மை கல்வி அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.
 இதுவரை அந்த பணியில் இருந்து திருவண்ணாமலை கூடுதல் முதன்மை கல்வி அதிகாரி நூர்ஜகான் சென்னையில் உள்ள தொடக்க கல்வித்துறை துணை இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார்.
 திருவண்ணாமலை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி பி.அருண்பிரசாத், தமிழ்நாடு தொடக்க கல்வி துணை இயக்குனராக மாற்றப்பட்டார்.
 தொடக்க கல்வி துணை இயக்குனர் பொன்னையா, திருவண்ணாமலை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரியாக நியமிக்கப்பட்டார். 
தூத்துக்குடி கூடுதல் முதன்மை கல்வி அதிகாரி சரோஜா, கோவை மாவட்ட கூடுதல் முதன்மை கல்வி அதிகாரியாக மாற்றப்பட்டார்.
 கோவை கூடுதல் முதன்மை கல்வி அதிகாரி லத்திகா, தூத்துக்குடி மாவட்ட கூடுதல் முதன்மை கல்வி அதிகாரியாக மாற்றப்பட்டார்.
 சென்னையில் உள்ள தமிழ்நாடு பெற்றோர் ஆசிரியர் கழக செயலாளர் சுப்பிரமணியன் பள்ளிக்கல்வி மின் ஆளுமை துணை இயக்குனராக நியமிக்கப்பட்டார்.
 சேலம் மாவட்ட கல்வி அதிகாரி ஆர்.மனோகரன் சென்னையில் உள்ள தமிழ்நாடு பெற்றோர் ஆசிரியர் கழக செயலாளராக பதவி உயர்வு பெற்று நியமிக்கப்பட்டுள்ளார்.
 இந்த தகவலை பள்ளிக்கல்வி இயக்குனர் வி.சி.ராமேஸ்வர முருகன் தெரிவித்துள்ளார்

டி.இ.டி., மதிப்பெண்ணில் சலுகை இல்லையா?  தேசிய ஆதிதிராவிடர் ஆணையம்


பொது பள்ளிக்கான மாநில மேடை அமைப்பின்பொதுச்செயலர், பிரின்ஸ் கஜேந்திரபாபு, டி.இ.டி., தேர்வில், அரசாணையின்படி, இடஒதுக்கீடு பிரிவினருக்கு,மதிப்பெண் சலுகை அளிக்காதது குறித்து, தேசிய ஆதிதிராவிடர் ஆணையத்தின், சென்னை மண்டல இயக்குனருக்கு, புகார்
அளித்தார்.
அரசாணை: 
இந்த மனுவை ஆய்வு செய்து, மண்டல இயக்குனர், வெங்கடேசன், பள்ளி கல்வித் துறை செயலர் மற்றும் டி.ஆர்.பி., தலைவர் ஆகியோருக்கு பிறப்பித்துள்ள உத்தரவு: என்.சி.டி.இ., (தேசிய ஆசிரியர் கல்வி குழுமம்) வழிகாட்டுதலை ஏற்று, தமிழக அரசு வெளியிட்ட அரசாணை, 181ல், டி.இ.டி., தேர்வில், இட ஒதுக்கீடு பிரிவினர் தேர்ச்சி பெறுவதற்கு, குறைந்தபட்ச மதிப்பெண்ணில் சலுகை அளிக்க வழி செய்யப்பட்டு உள்ளது. ஆனால், தேர்வை நடத்தும், டி.ஆர்.பி., அதை அமல்படுத்தாமல்புறக்கணித்துள்ளது;
இடஒதுக்கீடு கொள்கைக்கு எதிராக, ஆசிரியர் தேர்வு வாரியம் செயல்பட்டுள்ளது. டி.இ.டி., தேர்வில், தமிழக அரசின் கொள்கையை, 12ம் தேதி, முதல்வர் தெளிவுபடுத்தி உள்ளார். அதில், 'கல்லூரி ஆசிரியர் நியமனத்திற்கு, 'நெட்' (தேசிய தகுதி தேர்வு), 'ஸ்லெட்' (மாநில தகுதி தேர்வு) எப்படி கட்டாயமாக்கப்பட்டு உள்ளதோ, அதுபோல் தான், ஆசிரியர் தகுதி தேர்வும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது' என, முதல்வர் தெரிவித்து உள்ளார். உரிய நடவடிக்கை தேவை: 'நெட் - ஸ்லெட்' தேர்வுகளில், எஸ்.சி., - எஸ்.டி., பிரிவினருக்கு, மதிப்பெண்சலுகை அளிக்கப்படுகிறது. எனவே, இந்தவிவகாரத்தில், ஆசிரியர் தேர்வு வாரியத்தின்நடவடிக்கை, இடஒதுக்கீட்டு கொள்கைக்கு எதிராகவும், தன்னிச்சையாகவும் அமைந்துள்ளது. கடந்த, 2011, நவ., 15ம் தேதியிட்ட அரசாணையில் (எண் 181) தெரிவித்த படி, ஆசிரியர் தகுதி தேர்வில், இடஒதுக்கீடு பிரிவினருக்கு,மதிப்பெண் சலுகை அளிக்க, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்துடன், இடஒதுக்கீடு பிரிவினருக்கான கொள்கையை அமல்படுத்தாத அதிகாரிகள் மீது, வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ்,நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த உத்தரவு மீது, எடுத்த நடவடிக்கை குறித்து, தேசிய ஆதிதிராவிடர் ஆணையத்தின் சென்னை மண்டல அலுவலகத்திற்கு, பதில் தெரிவிக்க வேண்டும். இல்லை எனில், இந்த புகார் தொடர்பான விவரம், தேசிய ஆணையத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும். இவ்வாறு, வெங்கடேசன் கூறி உள்ளார்.
இது குறித்து, பிரின்ஸ்   கஜேந்திரபாபு கூறுகையில், ''அரசாணையில், எந்த தவறும் இல்லை. மிக தெளிவாக உள்ளது. அமல்படுத்துவதில் தான், தவறு நடந்துள்ளது.'மதிப்பெண் சலுகை அளிக்க முடியாது' என, எந்த உத்தரவும் சொல்லவில்லை. கடும் போட்டிக்கு இடையே, டி.இ.டி.,தேர்வை எழுதுகின்றனர். அவர்களுக்கு, உரிய மதிப்பெண் சலுகையை அளிக்க, அரசு முன்வர வேண்டும்,'' என்றார்.

News source : DINAMALAR

6,275 மின் வாரிய ஊழியர் நேர்காணல் முடிவு: பிப்., முதல் வாரம் வெளியாக வாய்ப்பு


மின் வாரியத்தில், புதிதாக, 6,275 ஊழியர்களை நியமிப்பதற்காக நேர்காணல் நடத்தப்பட்டது.இதன் முடிவுகள், அடுத்த மாதம், முதல் வாரத்தில் வெளியாகும் என, தெரிகிறது.
மின்சார வாரியத்தில், தொழில்நுட்ப உதவியாளர், உதவி பொறியாளர் என, 80 ஆயிரம் பேர்
பணியாற்றுகின்றனர்; 25 ஆயிரம் பணியிடங்கள் காலியாக உள்ளன. இதனால், மின் உற்பத்தி,வினியோகம், கட்டணம் வசூலித்தல் உள்ளிட்ட பணிகள் பாதிக்கப்படுகின்றன. இதையடுத்து, புதிதாக, 4,000 கள உதவியாளர்; 1,000 கணக்கீட்டாளர்; 1,000 தொழில்நுட்ப உதவியாளர்; 275உதவி பொறியாளர் என, 6,275 பணியிடங்களை நிரப்ப, முடிவு செய்யப்பட்டது. இதற்காக, ஒரு பதவிக்கு,ஐந்து நபர் என்ற அடிப்படையில், வேலைவாய்ப்பு அலுவலகத்தில், பணி மூப்பு பட்டியல் பெறப்பட்டு, அதன்படி,
தகுதியான நபருக்கு, கடந்த அக்டோபரில், அழைப்பு கடிதம் அனுப்பப்பட்டது.

சென்னை, திருச்சி, மதுரை,கோவை, சேலம் உள்ளிட்ட, 15 மையங்களில், நவம்பரில், பல கட்டங்களாக நேர்காணல் நடந்தது. இதில், 15ஆயிரம் பேர் கலந்து கொண்டனர். சென்னை தவிர்த்து, மற்ற மையங்களில், நேர்காணலில் பங்கேற்றவர்களின் விவரம் மற்றும் மதிப்பெண், சென்னை,மின்சார வாரிய தலைமை அலுவலகத்திற்கு, கடந்த மாதம் அனுப்பப்பட்டது. தற்போது, மின்சார வாரியஅலுவலகத்தில், நேர்காணல் முடிவுகளை, இறுதி செய்யும் பணி, 90 சதவீதம் முடிவடைந்து விட்டது. வரும்பிப்ரவரி, முதல் அல்லது இரண்டாவது வாரத்தில், நேர்காணல் முடிவுகளை வெளியிட, மின் வாரியம்
முடிவு செய்துள்ளது. 
இது குறித்து, எரிசக்தி துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது; நேர்காணல் முடிவுகளை, இம்மாத இறுதியில் வெளியிட திட்டமிட்டோம். சில காரணங்களால், வெளியிடுவதில் தாமதமானது. பிப்ரவரி,இரண்டாவது வாரத்தில் வெளியிடுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சட்டசபை கூட்டத்தொடர், 30ம்தேதி துவங்குகிறது. இது, எத்தனை நாட்களுக்கு நடக்கும் என, தெரியாது. இதனால்,முடிவு வெளியிடுவதில், தாமதம் ஆனாலும் ஆகலாம். இருப்பினும், லோக்சபா தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன், முடிவுகள் வெளியிடப்படும். இவ்வாறு, அவர் கூறினார்.

  100 சதவீத தேர்ச்சி : பள்ளிகளுக்கு கேடயம் வழங்கப்பட்டது


சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் 100 சதவீத தேர்ச்சியை காட்டிய 51 பள்ளிகளுக்கு கேடயம் வழங்கப்பட்டது.10, பிளஸ் 2 தேர்வுகளில் 70 சதவீதத்துக்கும் குறைவாக தேர்ச்சி வீதம் பெற்ற பள்ளிகளுக்கான ஆய்வுக் கூட்டம் சென்னை சாந்தோமில் நேற்று நடந்தது. இதில், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த முதன்மை கல்வி அலுவலர்கள், கூடுதல் முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்டக் கல்வி அலுவலர்கள், மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர்கள், மெட்ரிக் பள்ளி ஆய்வாளர்கள் கலந்து கொண்டனர்.

பள்ளிக்கல்வி முதன்மைச் செயலர் சபிதா,தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் கழக மேலாண்மை இயக்குனர் மகேஸ்வரன், பள்ளிக்கல்வி துணை செயலர் பழனிச்சாமி, பள்ளிக்கல்வி இயக்குனர் ராமேஸ்வரமுருகன், மெட்ரிக் பள்ளிகள் இயக்குனர் பிச்சை மற்றும்
இணை இயக்குனர்கள் பங்கேற்றனர். கூட்டத்துக்கு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் வீரமணி தலைமை தாங்கினார்.சென்னை,காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் 2012-2013ம் கல்வி ஆண்டு நடந்த பொதுத் தேர்வில் 201 பள்ளிகள் 70 சதவீதத்துக்கும் குறைவான தேர்ச்சி வீதம் பெற்றுள்ளன. அந்த பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள்
வரவழைக்கப்பட்டு தேர்ச்சி சதவிகிதத்தை அதிகரிக்க ஆலோசனை கூறப்பட்டது. சென்னை மாவட்டத்தில் 10 மற்றும் 12ஆம் வகுப்புகளில் 100 சதவிகித தேர்ச்சி பெற்ற 51 பள்ளிகளுக்கு கேடயங்கள் வழங்கப்பட்டன.

மீண்டும் வேலை கேட்டு மக்கள் நல பணியாளர்கள் தொடர்ந்த வழக்கு தள்ளிவைப்பு


 மக்கள் நல பணியாளர்கள், கடந்த 2011–ம் ஆண்டு பணி நீக்கம் செய்யப்பட்டனர். இதையடுத்து, தங்களுக்கு மீண்டும் பணி வழங்கக்கோரி சென்னை ஐகோர்ட்டில் தமிழ்நாடு மக்கள் நல பணியாளர் முன்னேற்ற சங்கத்தின் அப்போதைய பொதுச்செயலாளர் பழனி வழக்கு தொடர்ந்தார்.
 இந்த வழக்கு நீதிபதிகள் சத்தீஸ் குமார் அக்னிகோத்ரி, கே.கே.சசிதரன் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழ்நாடு மக்கள் நல பணியாளர் முன்னேற்ற சங்கத்தின் தலைவர் மதிவாணன், தற்போதை பொதுச்செயலாளர் ராஜேந்திரன் ஆகியோர் ஒரு மனு தாக்கல் செய்தனர். அதில், ‘எங்கள் சங்கத்தின் முன்னாள் பொதுச்செயலாளரின் மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளக்கூடாது. எங்களுக்கு 2011–ம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் இன்று வரை சம்பளம் வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்’ என்று கூறியிருந்தனர்.
 இந்த மனுதாரர்கள் சார்பில் மூத்த வக்கீல் பி.வில்சன் ஆஜராகி வாதிட்டார். இதையடுத்து, வழக்கு விசாரணையை வருகிற பிப்ரவரி 10–ந் தேதிக்கு தள்ளிவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்

 டான்செட் தேர்வுக்கு விண்ணப்பிக்க அண்ணாபல்கலைக்கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது


அண்ணா பல்கலைக்கழகம், என்ஜினீயரிங் கல்லூரிகள், கலை அறிவியல் கல்லூரிகளில் எம்.பி.ஏ., எம்.சி.ஏ., எம்.இ., எம்.டெக்., எம்.ஆர்க்., எம்.பிளாண் முதலிய படிப்புகளில் சேர்வதற்கு ‘டான்செட்’ என்ற நுழைவுத்தேர்வை எழுதவேண்டும் இந்த தேர்வை அண்ணாபல்கலைக்கழகம் மார்ச் மாதம் 22– ந்தேதி நடத்துகிறது. அதில் மாணவர்கள் எடுக்கும் மதிப்பெண் அடிப்படையில் தான் மாணவர் சேர்க்கை நடைபெறும்.

 டான்செட் தேர்வுக்கு விண்ணப்பிக்க அண்ணாபல்கலைக்கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் www.annauniv.edu/tancet2014 என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். அதாவது தங்களின் பெயரை பதிவு செய்து கொள்ளலாம்.
 மேலும் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன், செயலாளர், டான்செட், அண்ணாபல்கலைக்கழகம், சென்னை என்ற முகவரிக்கு டிமாண்ட் டிராப்ட் எடுத்து, புகைப்படத்துடன் சான்றிதழ்களையும் இணைத்து பிப்ரவரி 20–ந்தேதிக்குள் அனுப்பவேண்டும்.
 சென்னை பல்கலைக்கழகத்தில் உள்ள மேலாண்மைத்துறை மற்றும் கணினி அறிவியல் துறைகளில் எம்.பி.ஏ. மற்றும் எம்.சி.ஏ. படிப்பில் சேரவும் இந்த டான்செட் தேர்வை எழுதவேண்டும். இந்த தகவலை சென்னை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது

திங்கள், 27 ஜனவரி, 2014

PG/TET I / TET II-  சென்னை உயர்நீதிமன்றத்தில் நாளை( 28 .01.14 ல்)விசாரணைக்குவருகின்ற  வழக்குகள்



சென்னை உயர்நீதிமன்றத்தில் ஏற்கனவே தாக்கல்செய்யப்பட்டு ஒத்திவக்கப்பட்டுள்ள ஏராளமான வழக்குகள் (200 க்கும் மேற்பட்டவழக்குகள் )ஒருங்கிணைக்கப்பட்டு PG,ஆசிரியர் தகுதித்தேர்வு தாள் 1, தாள் 2 என அனைத்து வழக்குகளும் ஒன்றாக இணைக்கப்பட்டு பட்டியலிடப்பட்டிருந்தது எனவே அவற்றை தனித்தனியாக விசாரிப்பதற்கு வசதியாக  தனியாக   பட்டியலிட நீதியரசர்  ஆர் சுப்பையா  ஏற்கனவே உத்தரவிட்டிருந்தார். அதன்படி நாளை. 28 .01.14 ல் வழக்குகள் தனித்தனியாக வகைப்படுத்தி  200 வழக்குகள் பட்டியலிடப்பட்டுள்ளது.இதைத்தவிர  முதுகலை ஆசிரியர் தமிழ்பாடத்தில் வெளியிடப்பட்ட இறுதி விடைக்குறிப்பில் சில விடைகள் தவறாக உள்ளது என அதனை எதிர்த்து  5 வழக்குகளும் இதர படங்களில்  4 வழக்குகளும் நாளை விசாரணைக்குவருகின்றன   என தகவல்கள் தெரிவிக்கின்றன.இந்த  PG/TET I / TET II   வழக்குகளின் நிலை நாளை   மாலையில்தான் தெரியவரும்.

PARTICULARS OF WRITS

GROUPING MATTERS- PAPER I
~~~~~~~~~~~~~~~~
1. WRIT PETITIONS CHALLENGING THE KEY ANSWERS  TET EXAMS 
PAPER I  CHALLENGING QUESTIONS ALREADY DECIDED BY MADURAI HIGH COURT

2. WRIT PETITIONS CHALLENGING THE KEY ANSWERS  TET EXAMS 
PAPER IFILED AFTER 26.11.2013  HIT BY DELAY AND LACHES

3.WRIT PETITIONS CHALLENGING THE KEY ANSWERS  TET EXAMS 
PAPER I CHALLENGING   QUESTIONS WHICH ARE YET TO BE DECIDED


~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
-                        
GROUPING MATTERS- PAPER II

4.   WRIT PETITIONS CHALLENGING THE KEY ANSWERS 
TET EXAMS  PAPER II  WHERE PETITIONERS HAVE PASSED THE EXAMS IN THE REVISED RESULTS AND NO FURTHER ORDERS REQUIRED



5. WRIT PETITIONS CHALLENGING THE KEY ANSWERS 
TET EXAMS  PAPER II  CHALLENGING QUESTIONS ALREADY DECIDED BY MADURAI HIGH COURT


6.    WRIT PETITIONS CHALLENGING THE KEY ANSWERS 
TET EXAMS  PAPER II  FILED AFTER  26.11.2013  HIT BY DELAY AND LACHES


7.WRIT PETITIONS CHALLENGING THE KEY ANSWERS 
TET EXAMS  PAPER II  CHALLENGING QUESTIONS WHICH ARE YET TO BE DECIDED

TET PAPER I PAPER II  Total no of writs more than 200
----------------------------------------------------------------------------------------------------------------
7.CHALLENGING KEY ANSWERS  PG ASSISTANT EXAMS  IN VARIOUS SUBJECTS -no of writs. 4

----------------------------------------------------------------------------------------------------------------

8.CHALLENGING KEY ANSWERS  PG ASSISTANT EXAMS  TAMIL
-no of writs. 5
----------------------------------------------------------------------------------------------------------------

முதுகலை பட்டதாரி தமிழ் ஆசிரியர்  பி  வரிசை கருணைமதிப்பெண்கள் வழங்கி  சென்னை உயர்நீதி மன்றம்  இன்று. (27.01.2014 )உத்தரவு


முதுகலை பட்டதாரி தமிழ் ஆசிரியர்  பி  வரிசை வினாத்தாளால் பாதிக்கப்பட்ட.மனுதாரர்களுக்கு   கருணை மதிப்பெண்கள் வழங்கி  சென்னை உயர்நீதி மன்றம்  இன்று(27.01.2014 )உத்தரவு

முதுகலை பட்டதாரி தமிழ் ஆசிரியர் பணி நியமனத்துக்கான தற்காலிகமாக தேர்ந்தெடுக்கப்பட்டோர் பட்டியல் வெளியிடப்பட்ட நிலையிலும்,
மேலும் பல  முதுகலை பட்டதாரி தமிழ் ஆசிரியர்  பி  வரிசை வினாத்தாளால் பாதிக்கப்பட்டோர் தொடர்ந்து சென்னை உயர்நீதி மன்றத்திலும் மதுரைக்கிளையிலும்  வழக்கு தொடுத்தவண்னம் உள்ளனர்

ஏற்கனவே   நீதியரசர்  சுப்பையா முன் விசாரணைக்கு வந்த  பல்வேறு வழக்குகளில்    சென்னை உயர்நீதிமன்ற மதுரைகிளையில் ஆண்டனி கிளாரா, விஜயலட்சுமி ஆகியோருக்கு 21 கருணைமதிப்பெண்கள் வழங்கி இடைக்கால உத்தரவு பிறப்பித்தது போன்று  மனுதாரர்களுக்கும்  21 கருணை மதிப்பெண்கள் வழங்கி உத்தரவிட்டிருந்தார்.

இன்றும் அதேபோன்று பலவழக்குகள் நீதியரசர் சுப்பையா முன் விசாரணைக்கு வந்தன. பல்வேறு மாவட்டங்களைசேர்ந்த வேடியப்பன், சாந்தி,முத்துலட்சுமி,உள்ளிட்ட பல மனுதாரர்கள் தங்களுக்கும் கருணை மதிப்பெண் வழங்கவேண்டும் என தங்கள் மனுவில் கோரியிருந்தனர்.அதனையேற்றுக்கொண்ட நீதிபதி அனைவருக்கும் 21 கருணை மதிப்பெண்கள் வழங்கி  உத்தரவிட்டதாக  தெரிகின்றது. மனுதாரர்கள்  சார்பில்  வழக்கறிஞர் விஜயன்  ஆஜரானர்.
இதைத்தவிர தமிழ்பாடத்தில் வெளியிடப்பட்ட இறுதி விடைக்குறிப்பில் சில விடைகள் தவறாக உள்ளது என அதனை எதிர்த்தும்  வழக்குகள் தொடுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


மதிப்பெண்கள் வழங்கி  சென்னை உயர்நீதி மன்றம்  இன்று(27.01.2014 )உத்தரவு

பிளஸ் 1 வகுப்புக்கு, , வரும் கல்வியாண்டில், மீண்டும், பழைய படத்திட்டமே. தொடர்வதற்கான வாய்ப்பு


பிளஸ் 1 வகுப்புக்கு, , வரும் கல்வியாண்டில், மீண்டும், பழைய பாடத்திட்டமே தொடர்வது உறுதியாகி உள்ளது. தமிழகத்தில், பிளஸ் 2 வகுப்புக்கான,பாடத்திட்டத்தை மாற்றியமைத்து, பல ஆண்டுகளாகி விட்டதால், இரு ஆண்டுகளுக்கு முன்,புதிய பாடத்திட்டம் அமல்படுத்த வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்தது. ஆனால், அதன்பின்,பாடத்திட்டம் எழுதும், ஆசிரியர் குழு அமைப்பது உள்ளிட்ட, பணிகள் துவங்கப்படவில்லை.

 இன்னும், நான்கு மாதங்களில், அடுத்த, கல்வியாண்டு துவங்கிவிடும்; அதற்குள், புதிய பாடத்திட்ட புத்தகங்கள்தயாராவது கடினம்.எனவே, வரும் கல்வியாண்டிலும், மீண்டும், பழைய பாடத்திட்டமே, தொடர்வது உறுதியாகி உள்ளது.வரும் கல்வியாண்டில், 10ம் வகுப்பில், முப்பருவக்கல்வி முறை மற்றும் தொடர் மதிப்பீட்டு முறை அமல்படுத்த,நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்கு பின், அதை பிளஸ் 1 வகுப்புக்கும், விரிவாக்கம் செய்யலாம்
எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
 இதுகுறித்து, கல்வித் துறை அலுவலர்கள் கூறியதாவது: வரும் கல்வியாண்டில், 10ம் வகுப்புக்கான,முப்பருவக்கல்வி முறை அமல்படுத்தப்படுமா என்பதே, சந்தேகமாக உள்ளது. அதற்கான பணிகள், மும்முரமாக நடந்து வந்தாலும், பொதுத்தேர்வு என்பதால், மதிப்பீடு செய்வதில், குளறுபடி வருமோ என்ற அச்சம், ஆசிரியர்களிடம் ஏற்பட்டுள்ளது. எனவே, 10ம் வகுப்புக்கு, முப்பருவக்கல்வி முறையை, சிக்கல் இல்லாமல், அமல்படுத்துவதில் மட்டுமே, அதிகாரிகள் கவனமாக உள்ளனர். பிளஸ் 1 பாடத்திட்டம் குறித்து,யோசிக்கும் நிலையில் இல்லை.கடந்த முறை, சமச்சீர் கல்வி புத்தகம் வழங்கப்பட்ட, அடுத்த ஆண்டே, மீண்டும், முப்பருவக்கல்வி முறை அமல்படுத்தப்பட்டது. இதே போன்று அமையாமல், 10ம் வகுப்பு,
முப்பருவக்கல்வி முறையை, நல்ல முறையில் அமல்படுத்திய பின், அடுத்த கல்வியாண்டில், பிளஸ் 1வகுப்புக்கும், அதே பாணியில், பிளஸ் 2 வகுப்புக்கும், முப்பருவக்கல்வி முறையை, மாற்றம் செய்யவாய்ப்பு உள்ளது.இதனால், வரும் கல்வியாண்டில், பிளஸ் 1 வகுப்புக்கு, பழைய பாடத்திட்டமே, தொடர்வதற்கான வாய்ப்புகள் உள்ளன.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

மதிப்பெண் சான்றிதழ் தன்மை :  தலைமையாசிரியர்களுக்கு அறிவுரை


 மதிப்பெண் பட்டியலில், உண்மை தன்மை அறிவதில், விதி மீறி செயல்படும் பள்ளி தலைமையாசிரியர்களுக்கு   அரசு தேர்வுத் துறை அறிவுரை
 போலி மதிப்பெண் சான்றிதழ்களை காட்டி,சிலர், உயர்கல்வி மற்றும் அரசு பணியில் சேர்ந்து விடுகின்றனர். இதை தவிர்க்க, அவர்களின் பிளஸ் 2, 10ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்கள் அரசு தேர்வுகள் துறைக்கு அனுப்பப்பட்டு, உண்மைத் தன்மை சான்றுபெறப்படுகிறது.மதிப்பெண் சான்றிதழ்களை, அரசு தேர்வுத் துறைக்கு அனுப்பும்போது, வகுப்புக்கு தகுந்தாற்போல்,முதன்மை கல்வி அலுவலர்கள், மாவட்ட கல்வி அலுவலர்கள், மாவட்ட தொடக்க கல்வி அலுவலர்கள் மூலம், அனுப்ப வேண்டும். ஆனால், சில பள்ளி தலைமை ஆசிரியர்கள், கல்வித் துறை பணியாளர்கள், நேரடியாக, அரசுதேர்வுத்
துறைக்கு சான்றிதழ்களை அனுப்பிவைத்து, உண்மைத் தன்மை சான்றை பெற்று வருகின்றனர். இதையடுத்து, விதிமுறையை மீறி, மதிப்பெண்சான்றிதழ்களை நேரடியாக அனுப்பி வைக்க கூடாது என, தலைமையாசிரியர்களுக்கு அரசு தேர்வுத் துறைஇயக்குனர் தேவராஜன் அறிவுறுத்தியுள்ளார்

15 ஆயிரம் புதிய ஆசிரியர்களை நியமிக்கும் முன்னர் "பணி நிரவல்' : ஆசிரியர் சங்கத்தினர் கோரிக்கை


.
 "பணி நிரவல்' கவுன்சிலிங் நடத்தாமல் புதிய பட்டதாரி ஆசிரியர்களை நியமிப்பதை தவிர்க்க வேண்டும் என, ஆசிரியர்சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 அரசு, அரசு உதவிபெறும் உயர், மேல்நிலைப்பள்ளிகளில் 40:1 என்ற விகிதாச்சார அடிப்படையில் பாடவாரி ஆசிரியர்கள் நியமிக்கப்படுகின்றனர். இந்த விதியை மீறி கூடுதலாக இருந்ததால் பணிநிரவல் கவுன்சிலிங் மூலம்காலியிடங்களுக்கு மாறுதல் வழங்குவது வழக்கம்.
 2012ல் நடந்த பணி நிரவலில் ஏராளமான ஆசிரியர்கள் மாவட்டத்திற்குள்
மாற்றினர். இதன் பின்னர், புதியதாக 15 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். இதன் மூலம் சில பாடங்கள்தவிர, பெரும்பாலான பாடங்களுக்கு 40:1 விகிதாச்சாரத்தை தாண்டி சில இடங்களில் அதிகமான ஆசிரியர்கள் தற்போது பணிபுரிகின்றனர். 

இந்நிலையில், மேலும் 15 ஆயிரம் புதிய ஆசிரியர்களை நியமிப்பதாக அரசு அறிவித்துள்ளது. தகுதித்தேர்வு தாள்-2 தேர்வான 13 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பட்டதாரி ஆசிரியர்களுக்கு சான்றிதழ் சரிபார்க்கும் பணி நடக்கும் நிலையில்,இவர்களில் பலருக்கு பணி வாய்ப்பு கிடைக்கும் என, நம்புகின்றனர். இதன் மூலம் சில உயர், மேல்நிலைப் பள்ளிகளில் ஒரேபாடத்திற்குரிய ஆசிரியர்கள் எண்ணிக்கை 40:1 விட அதிகரிக்க வாய்ப்புள்ளது.
பணி நிரவல் இன்றி, 2012 பணி நிரவலுக்கு பின் சேர்ந்த ஆசிரியர்கள் தங்களுக்கு சாதகமான இடத்திற்கு மாறுதல் பெறவாய்ப்பு இராது.
 பட்டதாரி ஆசிரியர் சங்கங்கள் கூறுகையில், "பணிநிரவல்என்பது பற்றாக்குறை பள்ளிக்கு, அதிகமுள்ள பள்ளிகளில் இருந்து ஜூனியர் நிலை ஆசிரியர்களை மாற்றம்செய்வது. இதில்,சிலருக்கு சாதகமான பள்ளி கிடைக்க வாய்ப்புள்ளது. 2012ல் பணி நிரவலுக்கு பின், நியமித்த 15 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்களில் சிலருக்கு பணிநிரவலில் மாறுதல் கிடைக்கும் நிலை உள்ளது.ஆனாலும், 15 ஆயிரம் புதிய ஆசிரியர்களை நியமிக்கும் சூழலால் ஏற்கனவே பணியில் சேர்ந்தவர்களின் பணிநிரவல் வாய்ப்பு பறிபோகும்.ஒவ்வொரு மாவட்டத்திலும், 20 முதல் 30 பேர் வரை பணிநிரவலில் மாறுதல் பெற வாய்ப்புள்ளது. புதிய ஆசிரியர்கள்
நியமனத்திற்கு முன், ஏற்கனவே பணியில் உள்ள பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணி நிரவல்,பதவி உயர்வு கவுன்சிலிங் நடத்த வேண்டும், என்றனர்.

எம்பில் படித்த ஆசிரியருக்கு  3வது ஊக்க தொகை பரிசீலனை செய்ய உயர்நீதிமன்றம்  உத்தரவு


.நாகை மாவட்டம் வேதராண்யம் தாலுக்காவை சேர்ந்த ஆசிரியர் மதியழகன் சார்பாக வக்கீல் காசிநாதபாரதி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தார். அதில் ஆசிரியர் மதியழகன் கூறியிருப்பதாவது:
நான் நாகை மாவட்டத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் இடைநிலை ஆசிரியராக பணியாற்றி வருகிறேன். நான் தமிழ் ஆசிரியர். எம்.ஏ. படித்த பிறகு எனக்கு ஒரு ஊக்க தொகையை அரசு வழங்கியது.இதன்பிறகு நான் பிஎட் படித்தேன்.அதற்கு 2வது ஊக்க தொகை அரசு கொடுத்தது. இதை தொடர்ந்து நான் எம்பில் படித்து முடித்தேன்.
இதற்கு 3வது ஊக்கதொகை கேட்டு விண்ணப்பித்தேன். இதை அரசு தரவில்லை. 3வது ஊக்க தொகை கேட்டு பல முறை மனு கொடுத்தும் எந்த பலனும் ஏற்படவில்லை.இதைத் தொடர்ந்து, கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 8ம்தேதி மீண்டும் மனு கொடுத்தேன்.இந்த மனுவை பரிசீலனை செய்து, எனக்கு 3வது ஊக்க தொகை தர அரசுக்கு உத்தரவிட வேண்டும்.அரசாணையின்படி எனக்கு 3வது ஊக்க தொகை தர வேண்டும். இதற்கு உயர்நீதிமன்றம் உரிய உத்தரவு பிறப்பிக்கவேண்டும்.இவ்வாறு அவர் வழக்கில் கூறியுள்ளார்
  
இந்த வழக்கை நீதிபதி சுப்பையா விசாரித்து மனுதாரரின் மனுவை தமிழக
அரசின் தொடக்க கல்வித்துறை இயக்குனர் பரிசீலனை செய்து 8 வாரத்திற்குள் மனுதாரருக்கு 3வது ஊக்க தொகை தருவது தொடர்பாக உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்

பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணியை புறக்கணிக்க முதுநிலை பட்டதாரிஆசிரியர்கள் முடிவு


 பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணியை புறக்கணிக்கப் போவதாக முதுநிலை பட்டதாரிஆசிரியர்கள் முடிவு செய்துள்ளனர்
.தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக செயலாளர் விஜயகுமார் வெளியிட்ட அறிக்கை:
அரசாணை 720ல் மாற்றம் செய்து உரிய பதவி உயர்வு வாய்ப்புகளை வழங்க வேண்டும், ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும், பழைய ஓய்வு ஊதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் உள்ளிட்டபல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து போராட்டங்கள் நடத்தினோம்.ஆனால் அரசு தரப்பில் உரிய நடவடிக்கை இல்லை.
அதனால் பிளஸ் 2 தேர்வு விடைத்தாள் திருத்தும் பணிகளை புறக்கணிப்பது என்று தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக மாநில செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.  எனவே  முதுநிலை பட்டதாரிகள் கோரிக்கைகள் மீது அரசு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்.இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.

அரசு வேலைவாய்ப்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு உரிய இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது


அரசு வேலைவாய்ப்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு உரிய இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
 மதுரை கருங்காலக்குடியை சேர்ந்தவர் சரசுவதி, மாற்றுத்திறனாளி. இவர், மதுரை ஐகோர்ட்டு கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறி இருந்ததாவது:– நான், 1997–ம் ஆண்டு டிப்ளமோ சிவில் என்ஜினீயரிங் படித்து முடித்தேன். வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ளேன். வேலை உறுதி அளிப்பு திட்டத்தை செயல்படுத்த வட்டார வளர்ச்சி அலுவலகங்களில் 618 ஓவர்சீயர் பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகின்றன இந்த பணியிடங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு உரிய இட ஒதுக்கீடு வழங்கப்படவில்லை. எனவே, மாற்றுத்திறனாளிகளுக்கு தனி ஒதுக்கீடு வழங்க உத்தரவிட வேண்டும். அதன் அடிப்படையில் எனக்கு ஓவர்சீயர் பணி வழங்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டு இருந்தது.
 இந்த மனு நீதிபதி கே.பி.கே.வாசுகி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வக்கீல் தாழை.முத்தரசு ஆஜராகி வாதாடினார். மனுவை விசாரித்த நீதிபதி, “சட்டத்தில் கூறப்பட்டுள்ள இட ஒதுக்கீட்டு கொள்கையை அரசு கடைபிடிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தி உள்ளது. எதிர்காலத்தில் காலிப் பணியிடங்களை நிரப்பும் போது மாற்றுத்திறனாளிகளுக்கு 3 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்“ என்று உத்தரவிட்டார்

ஞாயிறு, 26 ஜனவரி, 2014

அரசுக் கல்லூரி உதவி பேராசிரியர் தேர்வ Centre for the clarification&date


அரசுக் கல்லூரி உதவி பேராசிரியர் தேர்வு மதிப்பெண் பட்டியல்  இன்று (26.01.14 ) ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது 
அரசு கலை அறிவியல் கல்லூரிகளுக்கு 1093 உதவி பேராசிரியர்கள் சிறப்பு மதிப்பெண் முறை மற்றும் நேர்முகத்தேர்வு அடிப்படையில் தேர்வு செய்யப்படஉள்ளனர். உதவி பேராசிரியர் பணிக்கு மாநிலம் முழுவதும் ஏறத்தாழ 15 ஆயிரம் பேர் விண்ணப்பித்தனர். அவர்களுக்கு சென்னையில் கடந்த நவம்பர் மாதம் இறுதி முதல் டிசம்பர் முதல் வாரம் வரை சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்பட்டது. பணிஅனுபவம், பி.எச்டி. பட்டம், ஸ்லெட், நெட் தேர்ச்சி, எம்.பில். ஆகியவற்றுக்கு மதிப்பெண் வழங்கப்பட்டது.

மொத்த மதிப்பெண் 24ஆகும். நேர்முகத்தேர்வுக்கு 10 மதிப்பெண் ஒதுக்கீடுசெய்யப் பட்டுள்ளது.

.சான்றிதழ் சரிபார்ப்பின் போது, சில மையங்களில் உதவி பேராசிரியர் பணிக்கான குறைந்தபட்ச கல்வித்தகுதி பெறுவதற்கு (பி.எச்டி. அல்லது முதுகலை படிப்புடன் நெட், ஸ்லெட் தேர்ச்சி) முன்பு இருந்த பணிஅனுபவத்துக்கும் மதிப்பெண் வழங்கப்பட்ட தாகவும், தற்போது அந்த தவறுகளை கண்டறிந்து, குறைந்தபட்ச தகுதிக்கு பின்னர் பெற்ற பணிஅனுபவத்துக்கு மட்டுமே மதிப்பெண் வழங்கப் பட்டிருப்ப தாகவும் ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகள் தெரி வித்தனர்.

பணி அனுபவத்துக்கு ஓராண்டுக்கு 2 மதிப்பெண் வீதம் அதிகபட்சம் 7.5 ஆண்டு களுக்கு 15 மதிப்பெண் நிர்ணயிக்கப் பட்டுள்ளது.எனவே, உதவி பேராசிரியர் தேர்வில் இந்த மதிப்பெண் வெற்றி தோல்வியை முடிவு செய்யக்கூடிய தாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது வெளியிடப்பாட்டுள்ள மதிப்பெண் பட்டியலில் தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள மதிப்பெண்குறித்து விளக்கம் (clarification) பெற விரும்புவோர்அவர்களுக்கு ஒதுக்கியுள்ள தேதிகளில் சமந்தப்பட்டுள்ள மையங்களின் அலுவலரிடம் கீழ்குறிப்பிட்டவாறு நேரில்  ஆஜராக டிஆர்பி அறிவித்துள்ளது

While attending the Centre for the clarification, they have to bring the Xerox copy of the call letter issued for Certificate Verification and filled in Form (Form for Clarification) which has to be downloaded from the TRB Website along with all original documents and Ph.D Thesis

Certificate Verification Venue Date of CV already attended by the candidate Date on which candidate can clarify
Government Arts College, Nandanam, Chennai-35
25.11.2013 & 26.11.2013 30.01.2014

Government Arts College, Nandanam, Chennai-35
27.11.2013 & 28.11.2013         31.01.2014

Government Arts College, Nandanam, Chennai-35
29.11.2013 to 6.12.2013 01.02.2014

Lady Wellington Institute of Advanced Study in Education, Chennai-5
25.11.2013 & 26.11.2013 30.01.2014

Lady Wellington Institute of Advanced Study in Education, Chennai-5
27.11.2013 & 28.11.2013 31.01.2014

Lady Wellington Institute of Advanced Study in Education, Chennai-5
29.11.2013 to 6.12.2013.         01.02.2014

Quaid-E-Milleth Government Arts College for Women, Chennai-2
25.11.2013 & 26.11.2013          30.01.2014

Quaid-E-Milleth Government Arts College for Women, Chennai-2
27.11.2013 & 28.11.2013       31.01.2014

Quaid-E-Milleth Government Arts College for Women, Chennai-2
29.11.2013 to 6.12.2013.         01.02.2014

அடுத்த கட்ட தேர்வான நேர்முகத்தேர்வுக்கு ஒரு காலியிடத் துக்கு 5 பேர் என்ற வீதத்தில் ஏறத்தாழ 5,500 பேர் தேர்வு செய்யப்படுவர்
 நேர்முகத்தேர்வுக்கு அழைக்கப்படுவோர் பட்டியலை டிஆர்பி தனியாக வெளியிடும் எனத் தெரிகின்றத

அரசுக் கல்லூரி உதவி பேராசிரி யர் தேர்வு மதிப்பெண் பட்டியல் தேர்வு பட்டியல் இன்று (26.01.14 ) ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது


அரசுக் கல்லூரி உதவி பேராசிரி யர் தேர்வு மதிப்பெண் பட்டியல் தேர்வு பட்டியல் இன்று (26.01.14 ) ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது 
அரசு கலை அறிவியல் கல்லூரிகளுக்கு 1093 உதவி பேராசிரியர்கள் சிறப்பு மதிப்பெண் முறை மற்றும் நேர்முகத்தேர்வு அடிப்படையில் தேர்வு செய்யப்படஉள்ளனர். உதவி பேராசிரியர் பணிக்கு மாநிலம் முழுவதும் ஏறத்தாழ 15 ஆயிரம் பேர் விண்ணப்பித்தனர். அவர்களுக்கு சென்னையில் கடந்த நவம்பர் மாதம் இறுதி முதல் டிசம்பர் முதல் வாரம் வரை சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்பட்டது. பணிஅனுபவம், பி.எச்டி. பட்டம், ஸ்லெட், நெட் தேர்ச்சி, எம்.பில். ஆகியவற்றுக்கு மதிப்பெண் வழங்கப்பட்டது.மொத்த மதிப்பெண் 24ஆகும். நேர்முகத்தேர்வுக்கு 10 மதிப்பெண் ஒதுக்கீடுசெய்யப் பட்டுள்ளது.

சான்றிதழ் சரிபார்ப்பின் போது, சில மையங்களில் உதவி பேராசிரியர் பணிக்கான குறைந்தபட்ச கல்வித்தகுதி பெறுவதற்கு (பி.எச்டி. அல்லது முதுகலை படிப்புடன் நெட், ஸ்லெட் தேர்ச்சி) முன்பு இருந்த பணிஅனுபவத்துக்கும் மதிப்பெண் வழங்கப்பட்ட தாகவும், தற்போது அந்த தவறு
களை கண்டறிந்து, குறைந்தபட்ச தகுதிக்கு பின்னர் பெற்ற பணிஅனுபவத்துக்கு மட்டுமே மதிப்பெண் வழங்கப் பட்டிருப்ப தாகவும் ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகள் தெரி வித்தனர்.
பணி அனுபவத்துக்கு ஓராண்டுக்கு 2 மதிப்பெண் வீதம் அதிகபட்சம் 7.5 ஆண்டு களுக்கு 15 மதிப்பெண் நிர்ணயிக்கப் பட்டுள்ளது.

எனவே, உதவி பேராசிரியர் தேர்வில் இந்த மதிப்பெண் வெற்றி தோல்வியை முடிவு செய்யக்கூடிய தாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த கட்ட தேர்வான நேர்முகத்தேர்வுக்கு ஒரு காலியிடத் துக்கு 5 பேர் என்ற வீதத்தில் ஏறத்தாழ 5,500 பேர் தேர்வு செய்யப்படுவர்

அரசு பள்ளிகளின் தேர்ச்சி சதவீதம், கணிசமாக அதிகரிக்கும்-கல்வித்துறை அதிகாரிகள் நம்பிக்கை


'வரும் பொது தேர்வில், அரசு பள்ளிகளின் தேர்ச்சி சதவீதம், கணிசமாக அதிகரிக்கும்' என,கல்வித்துறை அதிகாரிகள், நம்பிக்கை தெரிவித்தனர்.
மாநிலம் முழுவதும், 5,691 அரசு உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளில் இருந்து, 10ம் வகுப்பு பொது தேர்வையும், 2,595 மேல்நிலைப் பள்ளிகளில் இருந்து, பிளஸ் 2 தேர்வையும்,மாணவ, மாணவியர் எழுத உள்ளனர். கடந்த தேர்வில், அரசு பள்ளிகள், 10ம் வகுப்பில், 79 சதவீத தேர்ச்சியையும், பிளஸ் 2 தேர்வில், 80 சதவீத தேர்ச்சியையும் பெற்றன. பத்தாம் வகுப்பு தேர்வில், 453அரசு பள்ளிகளும், பிளஸ் 2 தேர்வில், 100 பள்ளிகளும், 100 சதவீத தேர்ச்சியை பெற்றன. வரும் தேர்வில், இந்தசதவீதத்தை அதிகரிக்கவும், 100 சதவீத தேர்ச்சியை பெறும் பள்ளிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும்,அதிகாரிகள் குழு, தீவிரமாக பணியாற்றி வருகிறது. இதற்காக, பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக,பள்ளி கல்வி இயக்குனர், ராமேஸ்வர முருகன் தெரிவித்தார். 
நன்றாக படிக்கக்கூடிய மாணவர்களை அடையாளம் கண்டு, அவர்கள், மாநில அளவில், "ரேங்க்' பெறும் வகையில்,மேலும் ஊக்கப்படுத்தி, சிறப்பு பயிற்சி அளித்து வருகிறோம். சுமாராக படிக்கக் கூடிய மாணவர்களுக்கு,விடுமுறை நாட்களிலும், சிறப்பு வகுப்புகள் நடத்துவதுடன், அதிக மதிப்பெண் பெறுவதற்காக, "வெற்றி உங்கள்கையில்' என்ற வழிகாட்டி கையேட்டை தயாரித்து வழங்கி உள்ளோம். அனுபவம் வாய்ந்த ஆசிரியர் குழுவைக்கொண்டு, மாணவர்களுக்கு, சிறப்பு வகுப்புகளும் எடுக்கப்பட்டு வருகின்றன.
மாதிரி தேர்வுகளும், தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றன. அறிவியலில், ஒரு மதிப்பெண் கேள்விகள் எப்படி வரும், அவற்றுக்கான விடை அளிப்பது எப்படி என்பது குறித்தும், விளக்கி உள்ளோம். இதனால், வரும்தேர்வில், அரசு பள்ளிகளின் தேர்ச்சி சதவீதம், கண்டிப்பாக உயரும். இவ்வாறு, இயக்குனர் கூறினார்.
 சமீபத்தில்,சென்னையில் நடந்த ஒரு விழாவில் பேசிய, பள்ளி கல்வித்துறை செயலர், சபிதா, "இரு தேர்வுகளிலும்,ஒட்டுமொத்த தேர்ச்சியை, 95 சதவீதமாக உயர்த்த, இலக்கு நிர்ணயித்துள்ளோம்' என, தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இடைநிலை ஆசிரியர் நியமனத்தில்  பாடப் பிரிவுக்கு ஏற்ப ஒதுக்கீடு வழங்க  கோரிக்கை



அரசுப் பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர் நியமனத்தில் மேல்நிலைப் பள்ளியில் படித்த பாடப் பிரிவுக்கு ஏற்ப ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 3 ஆயிரம் இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை  நிரப்ப தமிழக அரசு முடிவு செய்தது.இதற்காக அண்மையில் ஆசிரியர் தேர்வு வாரியம் ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தியது. இடைநிலை ஆசிரியர் பணிக்காக ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் 1-ஐ ஏராளமானோர் எழுதியிருந்தனர்.இதில் 12,596 இடைநிலை ஆசிரியர்கள் தேர்வு பெற்றிருந்தனர். 3 ஆயிரம் பணியிடங்களுக்கு 12 ஆயிரம் பேர் தேர்வு பெற்றதால், இடைநிலை ஆசிரியர் நியமனத்தில் சில மாற்றங்கள் கொண்டு வரப்பட்டன.

அதாவது ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் 1 தேர்ச்சிப் பெற்று பதிவுமூப்பு அடிப்படையில் நியமனம் செய்யப்படுவர் என்று ஏற்கெனவே கல்வித் துறை அறிவித்திருந்தது.
ஆனால் பட்டதாரி ஆசிரியர்கள் நியமனத்தில் பதிவுமூப்புக்கு பதிலாக வெயிட்டேஜ் மதிப்பெண் அடிப்படையில் நியமனம் செய்வது போல, இடைநிலை ஆசிரியர் நியமனமும் இருக்கும் என்று திடீரென அறிவிக்கப்பட்டது.
அதாவது பிளஸ் 2-வில் எடுத்த மதிப்பெண், இடைநிலை ஆசிரியர் பயிற்சி தேர்வு, ஆசிரியர் தகுதிச் தேர்வு முறையே 15, 25, 60 மதிப்பெண்கள் என வெயிட்டேஜ் மதிப்பெண்கள் கணக்கிடப்பட்டன.இது தேர்ச்சி சதவீதத்துக்கு ஏற்ப மாறுபடும். இதனால் பதிவுமூப்பு அடிப்படையில் வேலை கிடைத்துவிடும் என்று எண்ணியவர்கள் கலக்கமடைந்தனர்.

சான்றிதழ் சரிபார்க்கும் பணி: இந்நிலையில் கடந்த திங்கள்கிழமை ஆசிரியர் தகுதித் தேர்வு முதல் தாளில் தேர்வு பெற்ற இடைநிலை ஆசிரியர்களுக்கு சான்றிதழ் சரிபார்க்கும் பணி ஜனவரி 20-ஆம் தேதி தொடங்கியது.. வியாழக்கிழமை வரை இடைநிலை ஆசிரியர்களுக்கான சான்றிதழ் சரிபார்க்கும் பணி நடைபெற்றது. வெள்ளிக்கிழமை முதல் ஜனவரி 28-ஆம் தேதி வரை பட்டதாரி ஆசிரியர்களுக்கான சான்றிதழ் சரிபார்க்கும் பணி நடைபெறும்.

மேல்நிலை பள்ளி பாடப்பிரிவு அடிப்படை: சான்றிதழ் சரிபார்க்க வந்த இடைநிலை ஆசிரியர்கள் சிலர் கூறியது:இடைநிலை ஆசிரியர் நியமனம், வெயிட்டேஜ் மதிப்பெண் அடிப்படையில் நடைபெற உள்ளது. இதனால் பதிவு மூப்பு அடிப்படையில் காத்திருந்தவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளோம்.மேலும் இடைநிலை ஆசிரியர் நியமனத்தில் இதுவரை மேல்நிலைப் பள்ளியில் மாணவர்கள் படித்த பாடப்பிரிவுக்கு ஏற்ப ஒதுக்கீடு செய்யப்பட்டது.
அதாவது மேல்நிலைப் பள்ளியில் அறிவியல் பிரிவு படித்த மாணவர்களுக்கு 50 சதவீத இடங்கள், கலைப் பிரிவு மாணவர்களுக்கும், தொழிற்பிரிவு மாணவர்களுக்கும் தலா 25 சதவீத இடங்கள் என்ற அடிப்படையில் இடைநிலை ஆசிரியர்கள் நியமனம் இருந்தது.

இப்போது அந்த முறையும் கடைப்பிடிக்கப்படுவதில்லை.
தொழில் பிரிவு மாணவர்களுக்கு ஆய்வக தேர்வு மூலமே 400 மதிப்பெண்கள் கிடைத்துவிடும். இதனால் வெயிட்டேஜ் முறையில் கணக்கிடப்படும்போது தொழில் பிரிவு மாணவர்கள் அதிக அளவில் தேர்வு பெறுகின்றனர்.இதேபோல் கலைப்பிரிவு மாணவர்களும் அதிக அளவில் தேர்வு பெறுகின்றனர்.ஆனால் மேல்நிலைப் பள்ளியில் அறிவியல் பிரிவு படித்தவர்கள் இடைநிலை ஆசிரியர்கள் நியமனத்தில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளோம்.
எனவே இடைநிலை ஆசிரியர் நியமனத்தில் மேல்நிலைப் பள்ளியில் படித்த பாடப்பிரிவுக்கு ஏற்ப ஒதுக்கீடு செய்ய தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.