செவ்வாய், 21 அக்டோபர், 2014

பழம்பெரும் எழுத்தாளரும் பெண்ணியவாதியுமான ராஜம் கிருஷ்ணன் காலமானார்



மறைந்த எழுத்தாளர் ராஜம் கிருஷ்ணன் 

பழம்பெரும் எழுத்தாளரும் பெண்ணியவாதியுமான ராஜம் கிருஷ்ணன் காலமானார். அவருக்கு வயது (89).

உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த அவரது உயிர் திங்கள்கிழமை இரவு பிரிந்தது.

உத்தர காண்டம், குறிஞ்சித்தேன், வளைக்கரம், கரிப்பு மணிகள், வேருக்கு நீர், மலர்கள்,முள்ளும் மலர்ந்தது, பாதையில் பதிந்த அடிகள், அலைவாய் கரையிலே, மண்ணகத்துப் பூந்துளிகள், சத்திய வேள்வி போன்ற அவரது படைப்புகள் இன்றும் மக்கள் மனதில் நீங்காமல் இருக்கின்றன. 80-க்கும் மேற்பட்ட புதினங்களை அவர் எழுதியுள்ளார்.

DETAILED NEWS :முதுகலை ஆசிரியர் நியமன 2-வது தேர்வு பட்டியல் வெளியீடு 31-ம் தேதி விழுப்புரத்தில் சான்றிதழ் சரிபார்ப்பு

முதுகலை பட்டதாரி ஆசிரியர் நியமனத்தில் 2-வது தேர்வு பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் நேற்று வெளியிட்டது.
அரசு மேல்நிலைப் பள்ளி களில் முதுகலை பட்டதாரி ஆசிரியர், உடற்கல்வி இயக்கு னர் பணிகளில் காலியிடங் களை நிரப்பும் பொருட்டு கடந்த 21.7.2013 அன்று எழுத்துத் தேர்வு நடத்தப்பட்டது. அதன் திருத்தப்பட்ட தேர்வு முடிவு 9.1.2014 மற்றும் 10.4.2014-ல் வெளியிடப்பட்டது. அதைத் தொடர்ந்து சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்பட்டு, பள்ளிக் கல்வித்துறைக்கு பணி ஒதுக்கீடு பெற்றவர்கள் பட்டியல் வெளியானது.

இந்த நிலையில், முது கலை பட்டதாரி ஆசிரியர் நியமனத்தில் 2-வது தேர்வு பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் நேற்று வெளியிட்டது. அதில், ஆதி திராவிடர் நலத்துறை பள்ளிகள், பிற்படுத் தப்பட்டோர் நலத்துறை பள்ளிகள், சென்னை, கோவை மாநகராட்சி மேல்நிலைப் பள்ளிகள் ஆகியவற்றுக்கு சான்றிதழ் சரிபார்ப்புக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள முதுகலை பட்டதாரி ஆசிரியர்களின் விவரம் இடம்பெற்றுள்ளது. ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் (www.trb.tn.nic.in) இப்பட்டியலை பார்க்கலாம்.

அவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு வருகிற 31-ம் தேதி விழுப்புரம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற உள்ளது. இதற்காக விண்ணப்பதாரர்களுக்கு தனித்தனியே அழைப்புக் கடிதம் எதுவும் அனுப்பப் படாது. ஏற்கெனவே சான்றி தழ் சரிபார்ப்புக்கு அழைக்கப் பட்டவர்கள் மீண்டும் அழைக் கப்படவில்லை. புதியவர்கள் மட்டுமே அழைக்கப்பட்டுள்ளனர். மேலும், முன்பு சான்றி தழ் சரிபார்ப்புக்கு வராதவர் களுக்கு மனிதாபிமான அடிப் படையில் மீண்டும் ஒரு வாய்ப்பு அளிக்கப்படுகிறது. அத்தகைய நபர்களும் 31-ம் தேதி நடைபெறும் சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்துகொள்ளலாம் என்று ஆசிரியர் தேர்வு வாரியத்தின் உறுப்பினர்-செயலர் தண்.வசுந்தராதேவி அறிவித்துள்ளார்.

SUbJECT. VACANT. CALLED FOR CV

ENGLISH. 20. 38

Maths. 13. 21

Physics. 18. 36

Chemistry. 19. 45

Botany. 08. 27

Zoo. 08. 17

History. 09. 36

Geography 02. 02

Economics 07. 26

Commerce 09. 35

Pol-sci. 02. 02

Home-sci. 03. 01

PD. 02. 02

Micro. 0. 02

Telugu. 01. 01

TOTAL. 119. 292

திங்கள், 20 அக்டோபர், 2014

உதவித் தொடக்கக் கல்வி அலுவலராகபணி மாறுதல் வழங்குவதற்கான கலந்தாய்வு 25.10.2014 அன்று சென்னையில்நடைபெறவுள்ளது

உதவித் தொடக்கக் கல்வி அலுவலராகபணி மாறுதல் வழங்குவதற்கான கலந்தாய்வு 25.10.2014 அன்று சென்னையில்நடைபெறவுள்ளது

தகுதிவாய்ந்த நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கு உதவித் தொடக்கக்
கல்வி அலுவலராக பணி மாறுதல் வழங்குவதற்கான கலந்தாய்வு 25.10.2014 அன்று சென்னையில் நடைபெறவுள்ளது.
முன்னுரிமைப் பட்டியல் வரிசை எண்.31 முதல் 160 வரை உள்ளவர்கள் கல்ந்துகொள்ள இயக்குனர் உத்தரவு.

முதுகலை ஆசிரியர் பிறதுறை காலிப்பணியிடங்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்புக்கு புதிய பட்டியல் வெளியீடு

முதுகலை ஆசிரியர் பிறதுறை காலிப்பணியிடங்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்புக்கு புதிய பட்டியல் வெளியீடு

தமிழ்ப்பாடம் தவிர்த்து இதர பாடங்களுக்கு 119 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.

Bc MBC. DEPT . 63

Ad welfare 33

Corporation schools

CHENNAI. 10

COIAMBATORE. 13

Total. 119

மாநிலத்தில்உள்ள பல மாவட்டங்களுக்கு இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

மாநிலத்தில்உள்ள பல மாவட்டங்களுக்கு இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

வடகிழக்கு பருவமழையால்தமிழகம் முழுவதும்கனமழை பெய்துவருவதால், மாநிலத்தில்
உள்ள பல மாவட்டங்களுக்கு இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர்,நாகை,திருச்சி, ஈரோடு, திருப்பூர்,
கோவை,கடலூர், தூத்துக்குடி மற்றும் தஞ்சாவூர்,திருவாரூர். அரியலூர், கரூர் விழுப்புரம் ஆகிய பலமாவட்டங்களில் இன்று பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்க
உத்தரவிடப்பட்டுள்ளது.

சாதகமான வானிலை ஏற்பட்டுள்ளதால், தமிழகம், கேரளா, ஆந்திரா பகுதிகளில், 48 மணி நேரத்தில்,வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து உள்ளது என, சென்னை வானிலை ஆய்வு மையம்தெரிவித்துள்ளது.இதற்கிடையில், வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள சாதகமான சூழல்கள், தமிழகம், கேரளா, ஆந்திரா,கர்நாடகா பகுதிகளில் வடகிழக்கு பருவமழை துவக்கத்திற்கான அறிகுறியாக கருதப்படுகிறது.தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த இரு தினங்களுக்கு, சில பகுதிகளில் கனமழை பெய்யக் கூடும் என,
வானிலை ஆய்வு மைய தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கிடையில், நேற்று காலை முதலே, சென்னை,காஞ்சிபுரம், திருவள்ளூர், மதுரை, நெல்லை உள்ளிட்ட தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் விட்டுவிட்டு,கனமழை பெய்து வருகிறது.

ஞாயிறு, 19 அக்டோபர், 2014

என் மீது பாசமும், பற்றும் கொண்டுள்ள தமிழக மக்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியை அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன்"- பொதுச் செயலாளர் ஜெயலலிதா .


தனது துயரங்களைக் கண்டு தாங்கிக்கொள்ள முடியாமல் உயிர்விட்ட 193 பேரின் குடும்பங்களுக்கு, அதிமுக சார்பில் தலா ரூ.3 லட்சம் ரூபாய் குடும்ப நல நிதியுதவி வழங்கப்படும் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், "எனது பொது வாழ்வு நெருப்பாற்றில் நீந்துவதற்கு ஒப்பானதாக இருந்து வருகிறது. பொது நலனுக்காக நம்மை அர்ப்பணித்து வாழ்வது, எத்தகைய இடர்பாடுகளை உடையதாக இருக்கும் என்பதை அரசியல் வாழ்வில் நுழைந்த நாளில் இருந்து நன்கு உணர்ந்திருக்கிறேன்.

"அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்னும் பேரியக்கத்தைக் காப்பாற்ற வேண்டும் என்பதற்காக உன்னையே நீ அர்ப்பணித்து பணியாற்ற வேண்டும்" என்று என்னிடம் எம்.ஜி.ஆர். பெற்றுக் கொண்ட சத்தியத்தை இதயத்தில் ஏற்று நாளும் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். தொடர்ந்து அந்தப் பாதையிலேயே என்னுடைய பயணம் அமையும்.

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் வளர்ச்சி; என் உயிரினும் மேலான எனதருமைக் கழக உடன்பிறப்புகளின் நலன்; எல்லாவற்றிற்கும் மேலாக தமிழக மக்களின் நல்வாழ்வு, முன்னேற்றம், உயர்வு, இவை தான் என் இதயத்தில் என்றைக்கும் நான் பதித்து வைத்திருக்கும் இலக்குகள். இந்தப் பாதையில் என்னுடைய பயணம் நடைபெறும் போது ஏற்படுகின்ற இன்னல்களைப் பற்றியோ, துயரங்களைப் பற்றியோ, சோதனைகளைப் பற்றியோ, வேதனைகளைப் பற்றியோ நான் சிறிதும் கவலைப்படுவதில்லை.

இந்தத் துயரங்கள் ஏற்படுத்துகின்ற வலி எவ்வளவு அதிகமாக இருந்தாலும் அதைத் தாங்கிக் கொள்கின்ற மனப் பக்குவத்தை இறைவன் எனக்கு அளித்திருக்கிறான்.

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக உடன்பிறப்புகளின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்பவும், தமிழக மக்களின் முன்னேற்றத்திற்காகவும் என்றைக்கும் நான் உழைப்பேன்; எந்தத் தியாகத்தையும் மேற்கொள்வேன் என்ற உறுதியை நான் உங்களுக்கு அளிக்க விரும்புகிறேன்.

எனக்கு நினைவு தெரிந்த நாளில் இருந்து என் வாழ்வில் எத்தனையோ சோதனைகளை நான் சந்தித்து வந்திருக்கிறேன். அவற்றில் இருந்து வெற்றிகரமாக மீண்டு வந்திருக்கிறேன். தொண்டர்களின் அன்பும், தமிழக மக்களின் பேராதரவும் எனக்கு இருக்கும் வரையில் எதைக் கண்டும் நான் அஞ்சப் போவதில்லை; மனம் தளரப்போவதில்லை.

தற்போது எனக்கு ஏற்பட்டிருக்கும் சூழ்நிலையைப் பார்த்து உள்ளம் வெதும்பி, நான் சந்திக்கும் துயரங்களைக் கண்டு தாங்கிக் கொள்ள முடியாமல், என் மீது மிகுந்த பேரன்பு கொண்டுள்ள தாய்மார்கள்; பொதுமக்கள்; கழக உடன்பிறப்புகள்; குறிப்பாக, என் இதயத்தின் ஆழத்தில் வேர் விட்டிருக்கும் மாணவச் செல்வங்கள் என மொத்தம் 193 பேர் மரணம் அடைந்துவிட்டனர் என்ற துயரச் செய்தி கேட்டும்; மேலும் தங்கள் இன்னு யிரை மாய்த்துக் கொள்ளும் முயற்சியில் ஈடுபட்ட 3 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்ற செய்தி கேட்டும் தாங்கொணா வேதனை அடைகிறேன். இந்தச் செய்தி எனக்கு மிகுந்த மன வலியைத் தருகிறது.

எனக்கு ஏற்பட்ட துயரத்தைத் தாங்கிக் கொள்ள முடியாமல் மரணமடைந்த 193 பேர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன், அவர்களது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் அமைதி பெற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு; மரணமடைந்தோர்களது குடும்பத்தினருக்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் தலா ரூ.3 லட்சம் ரூபாய் குடும்ப நல நிதியுதவி வழங்கப்படும் என்பதையும்; மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள 3 பேர்களின் மருத்துவ சிகிச்சைக்கு தலா ஐம்பதாயிரம் ரூபாய் வழங்கப்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்கள் விரைவில் பூரண நலம் பெற்று வீடு திரும்ப எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

எனக்கு ஏற்பட்ட சூழ்நிலையை தாங்கிக் கொள்ள முடியாமல் பல்வேறு காரணங்களால் மரணமடைந்தவர்கள் மற்றும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளேன். தன்னையே மாய்த்துக் கொள்ளும் இத்தகைய செயல்களில் இனி யாரும் ஈடுபடக் கூடாது என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

என் மீது பேரன்பு கொண்டுள்ள பல லட்சக்கணக்கான தாய்மார்களும், பொதுமக்களும், ஆதரவாளர்களும், தோழமைக் கட்சியினரும், மாணவ, மாணவியர்களும், என் உயிரினும் மேலான எனதருமைக் கழக உடன்பிறப்புகளும், நான் சோதனையில் இருந்து மீண்டு வர வேண்டும் என்பதற்காக திருக்கோயில்களிலும், தேவாலயங்களிலும், மசூதிகளிலும், பிற இடங்களிலும் சிறப்புப் பிரார்த்தனைகள் செய்துள்ள விவரங்களையும், நேர்த்திக் கடன் செலுத்தியுள்ள விவரங்களையும் அறிந்து நெகிழ்ச்சி அடைகிறேன்.

என் மீது பாசமும், பற்றும் கொண்டுள்ள தமிழக மக்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியை அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று ஜெயலலிதா கூறியுள்ளார்.

 

ஆசிரியர்களுக்கு தேர்வு நிலை அந்தஸ்து வழங்க கல்விச் சான்றிதழை மீண்டும் ஆய்வு செய்யத் தேவையில்லை: பள்ளிக்கல்வித் துறை உத்தரவு ·


ஆசிரியர்களுக்கு தேர்வு நிலை அந்தஸ்து வழங்க கல்விச் சான்றிதழை மீண்டும் ஆய்வு செய்யத் தேவையில்லை: பள்ளிக்கல்வித் துறை உத்தரவு

   ·  

அரசுப் பள்ளி முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு தேர்வு நிலை அந்தஸ்து வழங்க கல்விச் சான்றிதழ்களின் உண்மைத்தன்மை அறியத் தேவையில்லை என்று பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் உயர் கல்வித் தகுதி பெறும்போது அவர்களுக்கு ஊக்க ஊதியம் (இன்சென்டிவ்) வழங்கப்படுகிறது. ஓர் ஊக்க ஊதியம் என்பது 2 வருடாந்திர ஊதிய உயர்வுகளை (இன்கிரிமென்ட்) குறிக்கும். அடிப்படைச் சம்பளம், தர ஊதியம் சேர்த்து வரும் தொகையில் 3 சதவீதமும் அதற்கு இணையான அக விலைப்படியையும் உள்ளடக்கியது ஒரு இன்கிரிமென்ட். அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் தங்கள் பணிக்காலத்தில் அதிகபட்சம் 2 ஊக்க ஊதியங்கள் பெறலாம்.

தேர்வுநிலை அந்தஸ்து

உயர் கல்வித் தகுதிக்கு ஊக்க ஊதியம் வழங்கப்படுவதுபோல, ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் தொடர்ந்து 10 ஆண்டுகள் ஒரே பணியில் இருந்தால் அவர்களுக்கு தேர்வு நிலை அந்தஸ்து (செலக் ஷன் கிரேடு) வழங்கப்படும். அப்போது பணப் பயனாக ஒரு இன்கிரிமென்ட் கிடைக்கும். இதேபோல, தொடர்ந்து 20 ஆண்டுகள் ஒரே பணியில் இருந்தால் சிறப்பு நிலை அந்தஸ்து (ஸ்பெஷல் கிரேடு) அந்தஸ்து அளிக்கப்பட்டு அப்போதும் ஒரு இன்கிரிமென்ட் வழங்கப்படும்.

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்கள் தேர்வுநிலை அந்தஸ்து பெறுவதற்கு கல்விச் சான்றிதழ்களின் உண்மைத்தன்மை (ஜெனியூனஸ்) பெற வேண்டும். கல்விச் சான்றிதழ்கள் உண்மையா, இல்லையா என்பதை உறுதிசெய்ய உண்மைத்தன்மை ஆய்வு செய்யப்படுகிறது. அதன்படி, கல்விச் சான்றிதழ்கள் சம்பந்தப்பட்ட கல்வி வாரியத்துக்கும், பல்கலைக் கழகத்துக்கும் அனுப்பப்பட்டு உறுதி செய்யப்படும்.

தேவையற்ற தாமதம்

ஆசிரியர்கள் பணியில் சேரும்போதே கல்விச் சான்றிதழ் களின் உண்மைத்தன்மை உறுதி செய்யப்பட்டு விடுகிறது. எனவே, தேர்வுநிலை அந்தஸ்து வழங்கும்போது மீண்டும் சான்றிதழ்களின் உண்மைத் தன்மையை ஆராய்வதால் தேவையற்ற தாமதம் ஏற்பட்டு உரிய காலத்தில் தேர்வுநிலை அந்தஸ்து பெற முடியாமல் முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் பாதிப்புக்கு உள்ளாகின்றனர்.

மீண்டும் ஆய்வு வேண்டாம்

இந்த நிலையில், முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் தேர்வு நிலை அந்தஸ்து பெறுவதற்கு இருந்த கட்டுப்பாட்டை பள்ளிக்கல்வித் துறை தற்போது நீக்கியுள்ளது. அதன்படி, தேர்வுநிலை அந்தஸ்து வழங்குவதற்கு முதுகலை ஆசிரியர்களது கல்விச் சான்றிதழ்களின் உண்மைத் தன்மையை அறியத்தேவையில்லை என பள்ளிக்கல்வி இயக்குநர் வி.சி.ராமேஸ்வர முருகன் உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த நடைமுறையைப் பின்பற்றுமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.


 

பட்டப்படிப்புக்கு முன்பு பிளஸ்-2படிக்காத ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு மறுத்து தமிழக அரசு பிறப்பித்தஉத்தரவை ரத்து

பட்டப்படிப்புக்கு முன்பு பிளஸ்-2படிக்காத ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு மறுத்து தமிழக அரசு பிறப்பித்தஉத்தரவை ரத்து செய்து ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

பத்தாம் வகுப்பு தகுதியுடன், ஆசிரியர் பயிற்சி முடித்த தர்மன் உட்பட 6 பேர் கடந்த 1985-87-ம்ஆண்டுகளில் அரசுப்பள்ளி ஆசிரியராக நியமிக்கப்பட்டனர். பின்னர் அவர்கள் குறிப்பிட்டபல்கலைக்கழகங்கள் நடத்திய நுழைவுத் தேர்வை எழுதி பாஸ் செய்து, பி.லிட், பட்டம் பெற்றனர். அதன்பின்னர் பி.எட். படித்து முடித்தனர். இந்த நிலையில், 131 தமிழ் ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு பட்டியலை கடந்த ஆண்டு ஜனவரியில் பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டது. அந்தப்பட்டியலில் தர்மன் உட்பட 6 பேரின் பெயர் இல்லை. எனவே,பள்ளிக் கல்வித்துறையிடம் முறையிட்டனர். யு.ஜி.சி. விதிகள் பிளஸ்-2 படிக்காமல் பட்டம் படித்துள்ளதால், அதை பதவி உயர்வைப்பெறும் தகுதியாகக் கருத
முடியாது என்று அந்தத் "துறை கூறிவிட்டது. இதுகுறித்து ஐகோர்ட்டில் 6 பேரும் மனு தாக்கல்செய்தனர். அதில், யு.ஜி.சி. (பல்கலைக்கழக மானியக்குழு)விதிகளின்படி எங்களுக்கு பதவி உயர்வு பெறும் தகுதி உள்ளதால் பள்ளிக் கல்வித்துறையின்
உத்தரவை ரத்து செய்யவேண்டும் என்று கூறியிருந்தனர்.

இந்த மனுக்களை விசாரித்த நீதிபதி டி.அரிபரந்தாமன் பிறப்பித்த உத்தரவு வருமாறு:- உத்தரவு ரத்து யு.ஜி.சி. விதிப்படி, பிளஸ்-2 முடித்துவிட்டு பட்டப்படிப்பில் சேரலாம். பிளஸ்-2 படிக்கவில்லை என்றால், பல்கலைக்கழகங்களால் நடத்தப்படும் நுழைவுத்தேர்வில்
வெற்றிபெற்று பட்டப்படிப்பில் சேர்ந்து படிக்கலாம். இரண்டாவது முறைப்படி மனுதாரர்கள் பட்டம்படித்துள்ளனர். அதன்பிறகு அவர்கள் பிளஸ்-2-விலும் தேர்ச்சி பெற்றனர். ஆனாலும் யு.ஜி.சி. முறைப்படியே அவர்கள் பட்டம் படித்தனர். அதை அவர்கள் படித்த பல்கலைக்கழகங்களும் ஏற்றுள்ளன. எனவே, மனுதார்கள் பெற்ற பட்டம் செல்லும். அதன்படி, மனுதாரர்கள் பதவி உயர்வு பெறுவதற்கு தகுதியானவர்கள். எனவே பள்ளிக்
கல்வித்துறையின் உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. மனுதாரர்களுக்கு 8 வாரங்களுக்குள்
பதவி உயர்வு அளிக்கவேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் குரூப் 4-பொதுத் தமிழ் 2

ஆறாம் வகுப்பு: 2
இலக்கணமும் மொழித்திறனும்
* நாம் பேசும் மொழி மற்றும் எழுதும் மொழியை முறையாகப்
புரிந்து கொள்வதற்கு தேவைப்படுவது - இலக்கணம்.
* அ - எழுத்து குறிப்பது மனிதனை.
* |- என்ற முதுகுக்கோடு குறிப்பது - பழங்காலத்திலவேட்டை ஆடுவதற்கு மனிதன் முதுகில் சுமந்த அம்புக்கூட்டை குறிக்கிறது.
* மனிதர்களை போன்று இனமும் நட்பும் கொண்டது - எழுத்துக்கள்.
* ங் என்னும் எழுத்துக்கும் பின்னால் வரும் இன எழுத்து க. எ.கா: சிங்கம்,
தங்கை.
* ஞ் என்னும் எழுத்துக்கும் பின்னால் வரும் இன எழுத்து ச. எ.கா: மஞ்சள்,
அஞ்சாதே
* ண்ட, ந்த, ம்ப, ன்ற என்னும் எழுத்துகள் பெரும்பாலும் சேர்ந்தே வரும். எசகா:
பண்டம், பந்தல், கம்பன், தென்றல்.
* நட்பு எழுத்துக்களை இன எழுத்துகள் என இலக்கணம் கூறுகிறது.
* க், ச்,த், ப் ஆகிய மெய்யெழுத்துக்கள் தன் எழுத்துகளுடன் மட்டும் சேரும்.
எ.கா: பக்கம், அச்சம், மொத்தம், அப்பம்.
* தன் எழுத்துடன் சேராது பிற எழுத்துகளுடன் சேரும் மெய்யெழுத்து - ர், ழ்.
எ.கா: சார்பு, வாழ்க்கை
* முயற்சி திருவினை ஆக்கும் எனக் கூறியவர் - திருவள்ளுவர்.
* கவலையை மறக்க உரிய வழி - ஏதாவதொரு வேலையில் ஈடுபடுவது.
* எண்பத்தேழு வயதுவரை உ.வே.சா. தமிழுக்காக உழைத்தார்.
முயற்சிக்கு வயது வரம்பு கிடையாது.
* முயற்சிக்கு நோய் தடை இல்லை. நாலடியார் சொற்பொருள்:
* அணியார் = நெருங்கி இருப்பவர்
* என்னாம் = என்ன பயன்?
* சேய் = தூரம்
* செய் = வயல்
* அனையர் = போன்றோர்
* பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று - நாலடியார்
* நானூறு பாடல்களைக் கொண்டது - நாலடியார்.
* அறக்கருத்துக்களைக் கூறுவது - நாலடியார்.
* நாலடி நானூறு என்ற சிறப்பு பெயர் உடையது - நாலடியார்.
* சமண முனிவர்கள் பலர் பாடிய தொகுப்பு நூல் - நாலடியார்.

பதினெண்கீழ்க்கணக்கு - விளக்கம்:
* சங்க நூல்கள் எனப்படுபவை பத்துப்பாட்டும் எட்டுத்தொகையும்,
பத்துப்பாட்டில் பத்து நூல்களும், எட்டுத்தொகையில் எட்டு நூல்களுமாக
மொத்தம் பதினொட்டு நூல்கள்.
* இவற்றை மேல்கணக்கு நூல்கள் எனக்
கூறுவர்.
* சங்கநூல்களுக்குப்பின் தோன்றிய நூல்களின் தொகுப்பு -
பதினெண்கீழ்க்கணக்கு
* பதினெண் என்பது - பதினெட்டு என்று பொருள்.
* பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் பெரும்பாலானவை - அறநூல்களே.
* கீழ்க்கணக்கு நூல்கள் எனவும் கூறப்படும் நூல் -
பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள்.

* நன்மை செய்வோர் வாய்க்காலைப் போன்றவர்.

பாரத தேசம் சொற்பொருள்:
* வண்மை = கொடை (வன்மை = கொடுமை)
* உழுபடை = விவசாய கருவிகள்
* தமிழ்மகள் = ஒளவையார்.
* கோணி - சாக்கு
* தலை சாயுதல் - ஓய்ந்து படுத்தல்
* ஞாலம் - உலகம்
* உவந்து செய்வோம் - விரும்பிச் செய்வோம்
* நெறியினின்று - அறநெறியில் நின்று
* சாதி இரண்டொழிய வேறில்லை என்றவர் - ஒளவையார்.
* தமிழ்மகள் எனபடுபவர் - ஒளவையார்.
* தமிழ்நாட்டின் புகழ்பெற்ற கவிஞர் - பாட்டுக்கொரு புலவன் பாரதியார்.
* காலம்: 11.12.1882 - 11.09.1921
* பாட்டுக்கொரு புலவன் பாரதி என்றவர் கவிமணி.

உரைநடை: பறவைகள் பலவிதம்
* திருவெல்வேலி மாவட்டம் கூத்தனகுளத்தில் மக்கள்
பட்டாசு வெடிப்பதில்லை, ஏனென்றால் அங்கு கூடும் பறவைகள்
பயந்து விடாமல் இருக்கவே.
* உலகம் முழுவதும் இருந்து பல நாட்டுப் பறவைகள் வந்து தங்கி இருக்கும்
இடத்திற்குப் பெயர் - பறவைகள் சரணாலயம்.
* அதிக பணி அல்லது அதிக வெயிலின் காரணமாக புறவைகள்
ஒரு இடத்தை விட்டு மற்றொரு இடத்திற்கு பறந்து செல்வது - வலசை போதல்
* பறவைகள் நமக்கு பருவகால மாற்றத்தை உணர்த்துகின்றன.
* ஒரு நாட்டில் பழம் தின்றுவிட்டு, மற்றொரு நாட்டில் எச்சமிடுவதன்
காரணமாக அங்கு மரம், செடி, கொடி போன்றவை உருவாக பறவைகள்
காரணமாகின்றன.
* வயல்வெளிகளில் பயிர்களைத் தாக்கும் பூச்சிகள்,
வண்டுகளை தின்று விவசாயிகளுக்கு உதவுகின்றன. பறவைகள் ஐந்து வகையாக பிரிப்பர். 1. தென்னை குடித்து வாழும் பறவைகள் 2. பழத்தை உண்டு வாழும் பறவைகள் 3. பூச்சியை தின்று வாழும் பறவைகள் 4. வேட்டையாடி உண்ணும் பறவைகள் 5. இறந்த உடல்களை உண்டு வாழும் பறவைகள்.
* பூநாரையானது நிலத்திலும் அதிக உப்புத் தன்மையுள்ள நீரிலும்
வாழக்கூடியது. கடும் வெப்பத்தையும் எதிர்கொள்ளும் தன்மை கொண்டது.
* சமவெளி மரங்களில் வாழும் சில பறவைகள்: மஞ்சள் சிட்டு, செங்காகம்,
கடலைக்குயில், பனங்காடை, தூக்கணாங்குருவி.
* நீர்நிலையில் வாழும் சில பறவைகள்: கொக்கு, தாழைக்கோழி, பவளக் காலி,
ஆற்று உள்ளான், முக்குளிப்பான், நாரை, அரிவாள் மூக்கன், கரண்டி வாயன்,
ஊசிவால் வாத்து.
* மலைகளில் வாழும் சில பறவைகள்: இருவாச்சி, செந்தாலைப் பூங்குருவி,
மின்சிட்டு, கருஞ்சின்னான், நீலகிரி நெட்டைகாலி, பொன்முதுகு,
மரங்கொத்தி, சின்னக்குறுவான், கொண்டாய் உலவரான், இராசாளிப் பருந்து,
பூமன் ஆந்தை.
* தமிழகத்தில் உள்ள பறவைகள் சரணாலயம் = 13
* பருவ காலத்தை மனிதர்களுக்கு உணர்த்துபவை - பறவைகள்
* உலகம் முழுவதும் மரம், செடி, கொடிகளை பரப்புவது - பறவைகள்.
* நம் நாட்டில் சுமார் 2400 வகைப்பறவைகள் உள்ளன.
* பறவைகள் பருவ நிலை மாற்றத்தால் இடம் பெயருவதை - வலசை போதல் என
அழைப்பர்.
* வெயிலும், மழையும், பனியும் மாறி மாறி வருவதை - பருவநிலை மாற்றம்
என அழைப்பர்.
* அதிக பனிப்பொழியும் மாதம் - மார்கழி மாதம்.
* அதிகம் வெயில் அடிக்கும் காலத்தை - கோடைக்காலம் என அழைப்பர்.
* நிலத்திலும், அதிக உப்புத் தன்மையுள்ள நீரிலும்; கடும் வெப்பத்தை எதிர்
கொள்ளும் தன்மையுடைய பறவை - பூ தாமரை.
* தமிழ்நாட்டில் உள்ள பறவைகள் சரணாலயங்கள்: 1. வேடந்தாங்கல் 2. கரிக்கிளி(காஞ்சிபுரம் மாவட்டம்), 3. கஞ்சிரால்குளம் 4. சித்திரஸ்குடி 5. மேலக் செல்வனூர் (இராமநாதபுரம் மாவட்டம்) 6. பழவேற்காடு (திருவள்ளுவர் மாவட்டம்) 7. உதயமார்த்தாண்டபுரம்(திருவாரூர் மாவட்டம்) 8. வடுவூர் (தஞ்சை மாவட்டம்) 9. கரைவெட்டி(பெரம்பலூர் மாவட்டம்) 10. வேட்டங்குடி(சிவகங்கை மாவட்டம்), 11. வெள்ளோடு (ஈரோடு மாவட்டம்) 12. கூந்தன்குளம் (திருவெல்வேலி மாவட்டம்) 13. கோடியக்கரை(நாகப்பட்டினம் மாவட்டம்)

* தமிழ்நாட்டில் பட்டாசு வெடிக்காத ஊர் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள
கூந்தன் குளம்.
துணைப்பாடம்: பாம்புகள்
* பாம்புகள் ஊர்வன வகையை சார்ந்தவை.
* சில பாம்புகள் குட்டிபோடும், பெரும்பாலானவை குஞ்சி பொரிப்பன.
* பாம்பின் உலகில் மனித இனம்
தோன்றுவதற்கு பத்து கோடி ஆண்டுகளுக்கு முன்பே தோன்றியது.
* உலகம் முழுவதும் 2750 வகை பாம்புகள் உள்ளன. இந்தியாவில் 244
வகை பாம்புகள் உள்ளன.
* 52 வகை பாம்புகளில் மட்டுமே நச்சுத்தன்மை வாய்ந்தவை.
* பாம்பு பால் குடிக்காது. அவை விழுங்குகிற எலி, தவளைகள் உடம்பில்
உள்ள நீர்ச்சத்தே அதற்கு போதும்.
* பாம்பானது, தான் பிடிக்கும் இரையை கொள்ளவும், செரிமானத்திற்காகவும்
தான் தன்னுடைய பற்களில் நஞ்சு வைத்துள்ளது.
* பாம்புகளுக்கு காது கேட்காது. அவை தரையில் ஏற்படும்
அடிருகளை உணர்ந்து செயல்படும்.
* வயலிலுள்ள எலிகளை பாம்பு அழிப்பதால், பாம்புகளை விவசாயிகளின்
நண்பன் என்று அழைக்கப்படும்.
* பாம்புக்கு காற்றில் வரும் ஓசைகளை கேட்க இயலாது. தரையில் ஏற்படும்
அதிர்வுகளை உணர்ந்து, அதன்மூலம் பாம்பு முன்னெச்சரிக்கையாக
இருக்கிறது.
* பாம்பு கடித்தவுடன் கடிபட்ட இடத்தை அசையாமல் வைத்து, கட்டுபோட்டு,
மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டும்.
* இந்தியாவில் உள்ள இராஜநாகம் தான் உலகிலேயே மிக நீளமான பாம்பு. 15
அடி நீளமுடையது. கூடுகட்டி வாழும் ஒரே வகை பாம்பு இது. இராஜநாகம்
மற்ற பாம்புகளையும் உணவாக்கி கொள்ளும்.
* ஒரு பாம்பை கொன்றால், அதன் இணைபாம்பு பழி வாங்கும்
என்று சொல்வதுண்டு. இது உண்மையன்று, கொள்ளப்பட்ட ஒருவகை வாசனைத்
திரவியம் மற்றப் பாம்புகளையும் அந்த இடம் நோக்கி வரவழைக்கிறது.
பழிவாங்க, பாம்புகள் வருவதில்லை.
* பாம்பு தன் நாக்கை அடிகடி வெளியே நீட்டும். அவ்வாறு செய்வதால்
சுற்றுபுரத்தின் வாசனையை அறிந்து கொள்ளத் தான் அவ்வாறு செய்கிறது.

* நல்ல பாம்பின் நஞ்சு கோப்ராக்சின் (Cobrozincobrozin) எனும் வலி நீக்கும்
மருந்து தயாரிக்க பயன்படுகிறது.
* இந்திய அரசு வனவிலங்குப் பாதுகாப்புச் சட்டம் 1972-ன்படி, தோலுக்காகப்
பாம்புகள் கொள்ளபடுவதைத் தடுக்க சட்டம் நிறைவேற்றி உள்ளது.
* பாம்புகளின் பற்கள் உள்நோக்கி வளைந்திருக்கும். இரையைப் பிடித்தால்
தப்பவிடாது. பாம்புகள் இரையை மென்று தின்பதில்லை,
அப்படியே விழுங்குகின்றன.
இலக்கணமும் மொழித்திறனும்
* தமிழில் உள்ள முதல் எழுத்துகள் மொத்தம் - முப்பது.

அவை:
* உயிர் எழுத்துக்கள் - பன்னிரண்டு
* மெய் எழுத்துக்கள் - பதினெட்டு
* உயிரும் மெய்யும் சேர்ந்து 216 உயிர்மெய்
எழுத்துகள்ளை உருவாக்குகின்றன.

* அன்றாடப் பேச்சில் பயன்படும் உயிர்மெய் எழுத்துகள் - கி, சி, பி, டி, தி, மி
* அ, இ, உ, எ, ஒ - ஆகிய ஐந்தும் குறில் எழுத்துக்களும் மெய்
எழுத்துக்களோடு சேரும்போது உயிர்மெய்க்குறில் எழுத்துக்கள்
உண்டாகின்றன.
* ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஓள - ஆகிய நெடில் எழுத்துக்கள் மெய்
எழுத்துக்களோடு சேரும்போது உயிர்மெய்நெடில் எழுத்துக்கள்
உண்டாகின்றன.
* வண்மை - கொடைத் தன்மை
* வன்மை - கொடுமை
* மனிதர்கள் யானையை வேட்டையாடக் காரணம் - தந்தம்
* ஆறுகள் மாசு அடையக் காரணம் - தொழிற்சாலைக் கழுவு
* மழை குறையக் காரணம் - காடுகள் அழிப்பு
* உலகம் வெப்பமடையக் காரணம் - வண்டிகளின் புகை நான்மணிக்கடிகை

சொற்பொருள்
* மடவாள் - பெண்
* தகைசால் - பண்பில் சிறந்த
* உணர்வு - நல்லெண்ணம்
* புகழ்சால் - புகழைத் தரும்
* காதல் புதல்வர் - அன்பு மக்கள்
* மனக்கினிய - மனத்துக்கு இனிய
* ஓதின் - எதுவென்று சொல்லும்போது

நூல்குறிப்பு:
* பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று - நான்மணிக்கடிகை.
* கடிகை என்றால் அணுகலன்(நகை)
* நான்கு மணிகள் கொண்ட அணிகலன் என்பது இதன் பொருள்.
* ஒவ்வொரு பாட்டும் நான்கு அறக்கருத்துக்களை கூறுகின்றன.

ஆசிரியர் குறிப்பு: * பெயர்: விளம்பிநாகனார்.
* விளம்பி என்பது ஊர்பெயர், நாகனார் என்பது புலவரின் இயற்பெயர்.

உரைநடை: ஆராரோ ஆராரோ
* தாளில் எழுதாமல் பிறர் பாடுவதை கேட்டு பாடுவது நாட்டுப்புற பாடல்
* எழுதப்படாத வாய்வழியாக பரவுகிற கதைகள் வாய்மொழி இலக்கியம் என்பர்.
* கானாப் பாடல், கடலுக்கு சென்று மீன்பிடிக்கும் மீனவர்கள் பாடும் பாடலும்
நாட்டுப்புற பாடலே.
* நாட்டுப்புற பாடலை பல வகைகளாக பிரிப்பர்.
* தாலாட்டு பாடல்கள், விளையாட்டுப் பாடல்கள், தொழில் பாடல்கள், சடங்குப்
பாடல்கள், கொண்டாடப் பாடல்கள், வழிப்பாட்டுப் பாடல்கள், ஒப்பாரிப் பாடல்கள்.

துணைப்பாடம்: வீரச்சிறுவன்
* ஜானகிமணாளன் எழுதிய அறிவை வளர்க்கும் அற்புத கதைகள் என்னும்
நூலிலிருந்து எடுக்கப்பட்ட சிறுகதை இது.
* பதினான்கு வயதுள்ள சிறுவன் குதிரையை அடக்கினான். அச்சிறுவன்
விவேகானந்தர்.
* விவேகானந்தரின் இயற்பெயர் - நரேந்திரதத்.
* புரட்சி துறவி - வள்ளலார்.
* வீரத் துறவி - விவேகானந்தர்
இலக்கணமும் மொழித்திறனும்
* தமிழ்ச்சொற்கள் நான்கு வகைப்படும். அவை: பெயர்ச்சொல், வினைச்சொல்,
இடைச்சொல், உரிச்சொல். இவற்றில் முதன்மையானவை பெயர்ச்சொல்லும்
வினைச்சொல்லும்.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் குரூப் 4-பொதுத் தமிழ் 1

தமிழகத்தில் காலியாகவுள்ள 4 ஆயிரத்து 963 குரூப் 4 பணியிடங்களுக்கான
அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.
மேற்கண்ட பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு வருகின்ற டிசம்பர் மாதம் 21-ஆம்
தேதி நடைபெறுகிறது. இதற்கு பயன்படும் வகையில் 6 முதல் 12 ஆம்
வகுப்பு வரையான சம்ச்சீர் பாடப்பகுதிகள் அனைவருக்கும் பயன்பட
வேண்டுமென்ற நோக்கில் வினா - விடைகளாக .....


ஆறாம் வகுப்பு:
வாழ்த்து
திருவருட்பா
கண்ணில் கலந்தான் கருத்தில் கலந்தான்என் எண்ணில் கலந்தே இருக்கின்றான் - பண்ணில் கலந்தான்என் பாட்டில் கலந்தான் உயிரில் கலந்தான் கருணை கலந்து-திருவருட்பா
* திருவருட்பாவை எழுதியவர் - இராமலிங்க அடிகளார்
* சிறப்பு பெயர் - திருவருட்பிரகாச வள்ளலார்
* பிறப்பிடம் - கடலூர் மாவட்டம் மருதூரில் பிறந்தவர்.
* பெற்றோர் - இராமையா - சின்னமையார்
* வாழ்ந்த காலம்: 05.10.1823 - 30.01.1874
* எழுதிய நூல்கள்: ஜீவகாருண்ய ஒழுக்கம், மனுமுறைகண்ட வாசகம்.
* பசித்துயர் போக்கி மக்களுக்கு உணவளிக்க இராமலிங்க அடிகளார்
அமைத்தது - அறச்சாலை
* அறிவு நெறி விளங்க வள்ளலார் நிறுவியது - ஞானசபை
* சமர சன்மார்க்க நெறிகளை வழங்கியவர் - இராமலிங்க அடிகளார்.
* இராமலிங்க அடிகளார் பாடிய பாடலின் தொகுப்பிற்கு பெயர் - திருவருட்பா.
* வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடிய மனம் கொண்டவர் - இராமலிங்க
அடிகளார்
* வள்ளலார் பாட்டை "மருட்பா" என்று கூறியவர் - ஆறுமுக நாவலர்.
* கடவுளை "கண்ணில் கலந்தான் கருத்தில் கலந்தான்", என்றும் "உயிரில்
கலந்தான் கருணை கலந்து" என்றும் பாடியவர் - இராமலிங்க அடிகளார்.
* நூல்கள்: ஜீவகாரூன்ய ஓழுக்கம், மனுமுறை கண்ட வாசகம்.
* வள்ளலாரின் பாடல்கள் அனைத்தும் திருவருட்பா என்னும் தலைப்பில்
தொகுக்கப்பட்டுள்ளன.
* சிறப்பு: சமரச சன்மார்க்க நெறியை வழங்கினார்.
* மத நல்லிணக்கத்திற்கு சன்மார்க்க சங்கத்தையும், உணவளிக்க அறச்சாலை,
அறவுநெறி விளங்க ஞான சபையையும் நிறுவினார்.
* வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடிய கருணை மனம் இவருடையது.
* கருணை நிறைந்த இறைவன் என் கண்ணில், சிந்தனையில், எண்ணத்தில்,
பாட்டில், பாட்டின் இசையில், என் உயிரில் கலந்து இருக்கிறான்.

அறிவுரைப் பகுதி: திருக்குறள்:
அன்புடைமை
சொற்பொருள்: ஆர்வலர் - அன்புடையவர் புன்கணீர் - துன்பம் கண்டு பெருகும் கண்ணீர் என்பு - எலும்பு. இங்கு உடல், பொருள், ஆவியைக் குறிக்கிறது. வழக்கு - வாழ்க்கை நெறி நண்பு - நட்பு மறம் - வீரம், கருணை (வீரம் இரண்டிற்குமே அன்புதான் அடிப்படை என்பது பொருள்) அன்பிலது - அன்பில்லாத உயிர்கள் என்பிலது - எலும்பில்லாதது(புழு) பூசல் தரும் - வெளிப்பட்டு நிற்கும் ஆருயிர் - அருமையான உயிர் ஈனும் - தரும் ஆர்வம் - விருப்பம் (வெறுப்பை நீக்கி விருப்பத்தை உண்டாக்கும் என்று பொருள்) வையகம் - உலகம் என்ப - என்பார்கள் புறத்துறுப்பு - உடல் உறுப்புகள் எவன் செய்யும் - என்ன பயன்? அகத்துறுப்பு - மனத்தின் உறுப்பு, அன்பு

பிரித்து எழுதுக:
அன்பகத்தில்லா = அன்பு + அகத்து + இல்லா - அன்பு உள்ளத்தில் இல்லாத
வன்பாற்கண் = வன்பால் + கண் - பாலை நிலத்தில்
தளிர்த்தற்று - தளிர்த்து + அற்று - தளிர்த்ததுபோல
வற்றல்மரம் - வாடிய மரம் *

இவரின் காலம் கி.மு. 31 என்று கூறுவர்.
* இதனை தொடக்கமாக கொண்டே திருவள்ளுவர்
ஆண்டு கணக்கிடப்படுகிறது.
* சிறப்பு பெயர்: தெய்வப்புலவர், நாயனார், செந்நாப்போதர்
* இந்நூல் அறத்துப்பால், பொருட்பால், இன்பத்துப்பால் என மூன்று பெரும்
பிரிவுகளை உடையது.
* அதிகாரங்கள்: 133
* அதிகாரத்திற்கு 10 குறட்பாக்கள் வீதம் 1330 குறட்பாக்கள் உள்ளன.
* இது பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று.
* திருக்குறளின் வேறு பெயர்கள்: உலக பொதுமறை, முப்பால், தமிழ்மறை.
உலகப் பொதுமறை எனப் போற்றப்படுகிறது.
* திருவள்ளுவர் ஆண்டு கணக்கிடும் முறை: கிறித்து ஆண்டு (கி.பி) + 31 =
திருவள்ளுவர் ஆண்டு. எடுத்துக்காட்டு: 2013 + 31 = 2044. கி.பி.2013ஐத் திருவள்ளுவர்
ஆண்டு 2044 என்று கூறுவோம்.

உரைநடை: தமிழ்த்தாத்தா உ.வே.சா.
* உ.வே.சா ஓலைசுவடி வேண்டி ஒருவரிடம் உரையாடிய
நிகழ்ச்சி நடைபெற்ற இடம் ஈரோடு மாவட்டம் கொடுமுடி.
* ஊர் - திருவாரூர் மாவட்டம் உத்தமதானபுறம்
* இயற்பெயர் - வேங்கடரத்தினம்
* ஆசிரியர் - மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை.
* அவரின் ஆசிரியர் வைத்த பெயர் - சாமிநாதன்
* உத்தமதானபுரம் வேங்கடசுப்பையர் மகனான சாமிநாதன் என்பதன்
சுருக்கமே உ.வே.சா
* இவரின் தந்தை - வேங்கடசுப்பையா
* காலம் - 19.02.1855 முதல் 28.04.1942

* 1942 இல் உ..வே.சா நூல்நிலையம் சென்னை பெசன்ட் நகரில்
துவங்கப்பட்டது.
* உ.வே.சா நினைவு இல்லம் உத்தமதானபுரத்தில் உள்ளது.
* உ.வே.சா அவர்களின் தமிழ்ப் பணிகள் வெளிநாட்டு அறிஞர்களான
ஜி.யு.போப், சூலியல் வின்சோன் ஆகியோர் பெரிதும் பாராட்டியுள்ளனர்.
* இந்திய அரசு 2006 ஆம் ஆண்டு அஞ்சல் தலை வெளியிடப்பட்டது.
* பனை ஓலையைப் பக்குவப்படுத்தி, அதில் எழுத்தானி கொண்டு எழுவர்.
அவ்வாறு எழுத்தப்பட்ட ஓலைக்கு ஓலைச்சுவடி என்று பெயர்.
* ஓலை கிழியாமல் எழுதுவதற்காக ஓலைச்சுவடி எழுத்துகளில்
புள்ளி இருக்காது; ஒற்றைக்கொம்பு இரட்டைகொம்பு வேறுபாடு இருக்காது.

* ஓலைச்சுவடிகள் பாதுகாக்கப்படும் சில இடங்கள்: 1. கீழ்த்திசைச் சுவடிகள்
நூலகம், சென்னை. 2. அரசு ஆவணக் காப்பகம், சென்னை. 3. உலகத்
தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை 4. சரசுவதி நூலகம், தஞ்சாவூர்.

* குறிஞ்சிப்பாட்டு - பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்று; இதன் ஆசிரியர்
கபிலர்.
* தம் வாழ்க்கை வரலாற்றை ஆனந்தவிகடன் இதழில் தொடராக எழுதினார்.
அஃது என் சரிதம் என்னும் பெயரில் நூலாக வெளிவந்தது.
* ஓலைச்சுவடிகளைத் தேடி வந்த பெரியவர் - உ.வே.சா
* உ.வே.சா. தம் வாழ்நாள் முழுவதும் ஓய்வில்லாமல்
பதிப்பு பணியை மேற்கொண்டார்.
* உ.வே.சா. அவர்களை நாம் தமிழ்த்தாத்தா என அன்போடும் உரிமையோடும்
அழைக்கின்றோம்.
* ஓலைச்சுவடிகளை ஆடிப்பெருக்கு விடியற்காலையில் ஆற்றில் விட்டனர். * குறிஞ்சிப்பாட்டில் இடம்பெற்றுள்ள பூக்களின் எண்ணிக்கை -
தொண்ணூற்று ஒன்பது
* உ.வே.சா பதிப்பித்த நூல்கள்:
எட்டுத்தொகை - 8 பத்துப்பாட்டு - 10 சீவகசிந்தாமணி - 1 சிலப்பதிகாரம் - 1 மணிமேகலை - 1 புராணங்கள் - 12 உலா - 9 கோவை - 6 தூது - 6 வெண்பா நூல்கள் - 13 அந்தாதி - 3 பரணி - 2 மும்மணிக்கோவை - 2 இரட்டைமணிமாலை - 2 பிற பிரபந்தங்கள் - 4

துணைப்பாடம்: கடைசிவரை நம்பிக்கை
* கடைசிவரை நம்பிக்கை இச்சிறுகதை அரவிந்த் குப்தா எழுதிய டென்
லிட்டில் பிங்கர்ஸ் என்ற தொகுப்பில் உள்ளது.
* சடகோ சகாகி, 11 வயது ஜப்பான் நாட்டுச் சிறுமி.
* ஜப்பானில் ஹிரோமிமாவிக்கு அருகில் பெற்றோருடன் வசித்து வந்தாள்.
* அணுகுண்டு வீச்சால் ஏற்பட்ட கதிர்வீசின் காரணமாக
சடகோவிற்கு புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டது.
* சடகோவின் தோழி சிசுகோ, சடகோவிடம் காகிதத்தால் செய்யப்பட்ட
கொக்குகள் ஆயிரம் செய்தால் நோய் குணமாகும் என்றாள். இது நம்
நாட்டு நம்பிக்கை என்று கூறினாள்.
* ஜப்பானியர் வணங்கும் பறவை - கொக்கு.
* காகிதத்தால் உருவங்கள் செய்யும் ஜப்பானியர் ஒரிகாமி என்று கூறுவர்.
* 1955 அக்டோபர் 25ல் நல்ல சடகோ இறந்தாள்.
* மொத்தம் 644 காகித கொக்குகள் உருவாக்கி இருந்தாள்.
* சடகோவின் தோழிகள் கூடி மீதமுள்ள 356 காகித கொக்குகள்
செய்து எண்ணிக்கையை ஆயிரம் ஆக்கினர். சடகோவின்
விருப்பத்தை நிறைவு செய்தனர்.
* சடகோவிற்காக அவள் தோழிகள் பொதுமக்களிடம்
நிதி திரட்டி நினைவாலயம் கட்டினர். அதனுள்
சடகோவிற்கு சிலை எழுப்பினர்.
* அதன் பெயர் குழந்தைகள் அமைதி நினைவாலயம்.
* நினைவாலயத்தில் எழுதப்பட்ட வாசகம் - உலகத்தில் அமைதி வேண்டும்!
இது எங்கள் கதறல்! இது எங்கள் வேண்டுதல்!

'பிளஸ் 2 படிக்காமல், நுழைவுத் தேர்வு மூலம் தொலைதூர கல்வியில் பட்டப் படிப்பு முடித்தவர்களுக்கு, பதவி உயர்வு வழங்க வேண்டும்' என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது

'பிளஸ் 2 படிக்காமல், நுழைவுத் தேர்வு மூலம் தொலைதூர கல்வியில் பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு, பதவி உயர்வு வழங்க வேண்டும்' என, சென்னை உயர் நீதிமன்றம்உத்தரவிட்டு உள்ளது.
உயர்நிலைப் பள்ளிகளில், தருமன், உமா, சுகுணா உள்ளிட்ட, ஆறு பேர், ஓவிய ஆசிரியர்களாக,
1985 முதல் 1987 வரையிலான கால கட்டத்தில், நியமிக்கப்பட்டனர். இவர்கள், 10ம் வகுப்பு மற்றும் ஆசிரியர் பயிற்சி படிப்பு முடித்துள்ளனர். மனு தாக்கல் : சென்னை பல்கலைகழகம் மற்றும் அண்ணா பல்கலைக்கழகம் நடத்திய நுழைவு தேர்வை எழுதி,தொலைதூர கல்வி மூலம், பி.லிட்., படிப்பில் சேர்ந்து, பட்டம் பெற்றனர். அதைத்தொடர்ந்து, தமிழ் பண்டிட்பயிற்சியை சிலரும், பி.எட்., பட்டத்தை சிலரும் பெற்றனர்.தமிழ் பண்டிட் பதவிக்கான, தகுதி பட்டியலை, பள்ளி கல்விக்கான இணை இயக்குனர், கடந்த ஆண்டு,ஜனவரியில் வெளியிட்டார். அதில், 131, பெயர்கள் இடம் பெற்றிருந்தன. ஆனால், தருமன் உள்ளிட்ட ஆறு பேர், இடம் பெறவில்லை. அதற்கு, 'பட்டப் படிப்பில் சேர்வதற்கு முன், பிளஸ் 2 முடித்திருக்கவில்லை' என, காரணம் கூறப்பட்டது.
இதையடுத்து, பதவி உயர்வு பட்டியலை ரத்து செய்யவும், தமிழ் பண்டிட் ஆக, பதிவு உயர்வு வழங்கவும்
கோரியும், சென்னை உயர் நீதிமன்றத்தில், தருமன் உள்ளிட்ட, ஆறு பேரும், மனுத்தாக்கல் செய்தனர். மனுவில், 'பல்கலைக்கழக மானியக் குழுவின் (யு.ஜி.சி.,) விதிகளின்படி, நாங்கள் பெற்ற பட்டங்கள் செல்லும்;யு.ஜி.சி., விதிகளில், ஒருவர் பிளஸ் 2 படிக்கவில்லை என்றாலும் கூட, பல்கலைக்கழகம் நடத்தும் நுழைவுத்தேர்வில் வெற்றி பெற்று, பட்டப் படிப்பில் சேரலாம் என, கூறப்பட்டுள்ளது. எனவே, பதவி உயர்வு பெற,எங்களுக்கு தகுதி உள்ளது' என, கூறப்பட்டது.
மனுதாரர்கள் சார்பில், வழக்கறிஞர் ஆர். சசீதரன், கல்வித் துறை சார்பில், கூடுதல் அரசு பிளீடர் ரவிச்சந்திரன்,சென்னை பல்கலை சார்பில், வழக்கறிஞர் திலகவதி ஆஜராகினர். மனுவை விசாரித்த, நீதிபதி அரிபரந்தாமன், பிறப்பித்த உத்தரவு: யு.ஜி.சி., விதிமுறைகளின்படி,திறந்தவெளி பல்கலை முறையில், முதுகலை படிப்பில் சேர வேண்டும் என்றால், பட்டப் படிப்பு முடித்திருக்கவேண்டும். அண்ணாமலை பல்கலைக்கழக வழக்கில், 'யு.ஜி.சி., விதிமுறைகளுக்கு முரணாக, முதுகலை பட்டம் பெற்றால், அது செல்லாது' என, உச்சநீதிமன்றம் திட்டவட்டமாக கூறியுள்ளது. பட்டப் படிப்பில் சேர்வதைப் பொறுத்தவரை, யு.ஜி.சி., விதிமுறைகளின்படி, பிளஸ் 2 முடித்தவர்கள் அல்லது கல்வி பின்னணி இல்லாதவர்களும், சேரலாம். ஆனால், கல்வி பின்னணி இல்லாதவர்களைப்
பொறுத்தவரை, பட்டப் படிப்பில் சேர்வதற்கு முன், அந்த பல்கலைக்கழகம் நடத்தும் நுழைவுத் தேர்வில்
வெற்றி பெற்றிருக்க வேண்டும். இந்த வழக்கைப் பொறுத்தவரை, மனுதாரர்கள், பிளஸ் 2 படிக்காமல்,
தொலைதூர கல்வி மூலம், பட்ட படிப்பு முடித்துள்ளனர். ஆனால், இவர்கள், 10ம் வகுப்பில்
தேர்ச்சி பெற்றுள்ளனர். நுழைவுத் தேர்வில் வெற்றி பெற்று, பட்டப் படிப்பில் சேர்ந்துள்ளனர்.

சிறப்பு விதிகள் : இவர்கள் பெற்ற பட்டம் செல்லும் என, பல்கலைக்கழகங்களும் தெரிவித்துள்ளன. எனவே,யு.ஜி.சி., விதிமுறைகள், தமிழ்நாடு கல்வி அலுவலர் பணிக்கான சிறப்பு விதிகள்,
அண்ணாமலை பல்கலை வழக்கில், உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு ஆகியவற்றை பார்க்கும் போது,
பதவி உயர்வு பட்டியல், சட்டவிரோதமானது. எனவே, மனுதாரர்களுக்கு தகுதியில்லை என்ற உத்தரவு,
ரத்து செய்யப்படுகிறது. எட்டு வாரங்களுக்குள், மனுதாரர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும். இவ்வாறு,நீதிபதி அரிபரந்தாமன் உத்தரவிட்டுள்ளார்.

மெல்லகற்போருக்கு சிறப்பு கைடு தயாரித்து வழங்க,கல்வித்துறை உத்தரவிடப்பட்டுள்ளது

பொதுத்தேர்வு எழுதவுள்ள, எஸ்.எஸ்.எல்.சி., மற்றும் பிளஸ் 2 மாணவர்களில், மெல்லகற்போருக்கு சிறப்பு வகுப்பு மற்றும் கைடு தயாரித்து வழங்க,கல்வித்துறை உத்தரவிட்டுள்ளதால், அதற்கான பணியில், தனி ஆசிரியர் குழுவினர்ஈடுபட்டுள்ளனர்.
அரசுப் பள்ளிகளில், பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்களில், மெல்ல கற்கும் (ஸ்லோ லேனர்)
மாணவர்களை அடையாளம் கண்டு, சிறப்பு வகுப்பு (ஸ்பெஷல் கிளாஸ்) எடுக்கப்படுகிறது. மேலும், ஸ்லோ லேனர்களுக்காக, சிறப்பு கையேடு தயாரிக்க, மாவட்டம் வாரியாக,கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

கல்வி அதிகாரிகள் கூறியதாவது: அரசு பள்ளியில், வழக்கம்போல், பள்ளி வேலை நாட்களில்,
பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு, கூடுதலாக ஒரு மணி நேரம் சிறப்பு வகுப்புகள் நடத்தப்படும்.
மாலை, 4.30க்கு பள்ளியின் வேலை நேரம் முடிந்தவுடன், அடையாளம் காணப்பட்ட, 'ஸ்லோ லேனர்'
மாணவர்களுக்கு, சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள், கூடுதல் வகுப்பு எடுக்க வேண்டும். அந்த ஸ்பெஷல் கிளாஸில்,வகுப்பு தேர்வு, புரியாத பாடங்களை திரும்ப நடத்துதல், மாணவர்களின் சந்தேகங்களை தெளிவுப்படுத்துதல்ஆகிய பணிகளை, ஆசிரியர்கள் செய்ய வேண்டும். அதேபோல், சம்பந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியர்கள், 'ஸ்லோ லேனர்'களின் கல்வித்தரம் மேம்படுத்த, சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்.தேர்ச்சி சதவீதத்தை கூட்ட, கல்வித்துறை அனைத்து நடவடிக்கை எடுத்து வருகிறது. மாணவர்களுக்கு,பாடப்புத்தகம் மட்டுமின்றி, 'ஸ்லோ லேனர்'களுக்காக சிறப்பு கைடுகள் மூலம், பாடம் நடத்தஅறிவுறுத்தப்பட்டுள்ளது. எளிய முறையில் பாடங்கள் நடத்தி, அதிக தேர்ச்சி சதவீதம் எடுக்க,
அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.
மாவட்ட அளவில், பொதுத்தேர்வு மாணவர்களுக்கு வகுப்பு எடுக்கும் திறமையான ஆசிரியரை கொண்டு, சிறப்பு கைடு தயாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அதனால், கைடு தயாரிக்கும் பணியில், தனி ஆசிரியர்
குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர். தனி புத்தகமாக அச்சடித்து, அனைத்து அரசு பள்ளிகளுக்கும்
வழங்கப்படும். இதிலுள்ள குறிப்புகளை கற்றாலே, முழு தேர்ச்சியை காட்ட முடியும். இவ்வாறு, அவர்கள்
கூறினர்.

பிளஸ் 2 பாட புத்தகங்கள் அச்சிடும் பணி ஆரம்பம்

'அடுத்த ஆண்டுக்காக, பிளஸ் 2 பாட புத்தகங்களை அச்சிடும் பணியை துவக்கி உள்ளோம்.
அரசியல் அறிவியல் புத்தகத்தில், சில குறைகளை சரி செய்ய வேண்டி யிருப்பதாக,
கல்வித்துறை தெரிவித்துள்ளது. எனவே, அந்த புத்தகம் தவிர, இதர புத்தகங்களை அச்சிடும்
பணியை, விரைவில் ஆரம்பிப்போம்' என, பாடநூல் கழக வட்டாரம் தெரிவித்தது.

உத்தரவு : இது குறித்து, துறை வட்டாரம் கூறியத ாவது: வழக்கமாக, பாட புத்தகங்களை, முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்புவோம். தற்போது, நேரடியாக, மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு,
புத்தகங்களை அனுப்ப, அச்சக நிறுவனங்களுக்குஉத்தரவிட்டுள்ளோம். இதன்மூலம், புத்தகங்கள், விரைவாக சென்றடைவதுடன், அச்சக நிறுவனங்களுக்கு,போக்குவரத்து செலவும் குறையும்.

ஜனவரி மாதம், ஒன்பதாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, முப்பருவகல்வி திட்டத்தின் கீழ், மூன்றாம் பருவ பாட புத்தகங்கள் வழங்க வேண்டும். அதற்காக, பாட புத்தகங்கள்அச்சிடப்பட்டு வருகின்றன. முன்கூட்டியே பணிகளை துவக்கியதால், பணி, முடியும் நிலையில் உள்ளது. டிசம்பரில், புத்தகங்களை அனுப்புவோம். அடுத்த ஆண்டுக்காக, பிளஸ் 2 பாட புத்தகங்களை அச்சிடும்பணியையும் துவக்கி உள்ளோம். அரசியல் அறிவியல் புத்தகத்தில், சில குறைகளை சரி செய்ய
வேண்டியிருப்பதாக, கல்வித்துறை தெரிவித்துள்ளது. எனவே, அந்த புத்தகம் தவிர, இதர புத்தகங்களை அச்சிடும் பணியை, விரைவில் ஆரம்பிப்போம்.

சனி, 18 அக்டோபர், 2014

விமான நிலையத்தில் இருந்து பொதுமக்கள் உற்சாக வரவேற்புக்கு மத்தியில் மக்கள் முதல்வர் ஜெயலலிதா போயஸ் கார்டனில் உள்ள அவரது இல்லத்துக்கு வந்தடைந்தார்.





 

6.00 PM: விமான நிலையத்தில் இருந்து பொதுமக்கள் உற்சாக வரவேற்புக்கு மத்தியில் ஜெயலலிதா போயஸ் கார்டனில் உள்ள அவரது இல்லத்துக்கு வந்தடைந்தார்.

5.43 PM: கோட்டூர்புரம் விநாயகர் கோயில் வழியாக வந்த ஜெயலலிதாவின் கார் ஒரு சில நொடிகள் கோயில் முன் நிறுத்தப்பட்டது. ஜெயலலிதா காரில் இருந்தவாறே சாமி தரிசனம் செய்து கொண்டார்.


5.05 PM: சென்னை விமான நிலையம் வந்தடைந்த ஜெயலலிதாவுக்கு சுமார் 13 கி.மீ. தூரம் திரண்டிருந்த அதிமுக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். ஜெயலலிதாவும் தொண்டர்களைப் பார்த்து உற்சாகமாக கையசைத்தார்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். வழி நெடுகிலும் அவருக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்


 3.45 PM: முன்னதாக பரப்பன அக்ரஹார சிறை வளாகத்தில் இருந்து வெளியேவரும் ஜெயலலிதாவை வரவேற்க தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள், எம்.பி.கள், மேயர்கள் உள்பட 500-க்கு மேற்பட்டோர் சுமார் 4 மணி நேரம் மழையையும் பொருட்படுத்தாமல் காத்திருந்தனர்.

3.25 PM: ஜேமர் கருவிகள் பொருத்தப்பட்ட காரில் ஜெயலலிதா விமான நிலையம் செல்கிறார். அங்கிருந்து தனி விமானம் மூலம் சென்னை திரும்புகிறார்.

3.24 PM: ஜெயலலிதா, பரப்பன அக்ரஹார சிறை வளாகத்தில் இருந்து இந்துஸ்தான் ஏரோனாடிகல்ஸ் லிமிடெட் (ஹெச்.ஏ.எல்) விமான நிலையத்துக்குச் செல்கிறார். வழி நெடுகிலும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

3.16 PM: ஜெயலலிதா 11 பாதுகாப்பு வாகனங்கள் பின் தொடர சிறையில் இருந்து வெளியேறினார். வழி நெடுகிலும் அவருக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

3.15 PM: சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோரும் பரப்பன அக்ரஹார சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.

3.15 PM: முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். அவர் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் இருந்து வெளியேறினார்.



உச்ச நீதிமன்ற ஆணையை ஏற்று, மக்கள் முதல்வரை பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் விடுவித்தது.


11.50 AM: சசிகலா, இளவரசி, சுதாகரன் உள்ளிட்டோரையும் பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் விடுவித்தது.

11.48 AM: உச்ச நீதிமன்ற ஆணையை ஏற்று, ஜெயலலிதாவை பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் விடுவித்தது. சிறப்பு நீதிமன்ற நீதிபதி டி குன்ஹா இதற்கான உத்தரவை பிறப்பித்தார்.

11.40 AM: பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில், ஜாமீன் ஆணையை பரிசீலிக்கும் நடவடிக்கைகள் தொடங்கின.

11.30 AM: இன்று பிற்பகல் ஜெயலலிதா சென்னை வந்தடைவார் என எதிர்பார்க்கப்படுகிறது. விமான நிலையத்தில் அவரை வரவேற்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

11.20 AM: பெங்களூர் சிறப்பு நீதிமன்ற நீதிபதி மைக்கேல் டி குன்ஹாவிடம், ஜெயலலிதாவுக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கி பிறப்பித்த உத்தரவின் நகல் அளிக்கப்பட்டது.

11.15 AM: தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மிகுந்த மகிழ்ச்சியுடன் காணப்பட்டார். தமிழகத்தில் இருந்து முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் போலீஸ் பாதுகாப்பு இல்லாமல் வந்தடைந்தார்.

11.14 AM: பெங்களூர் பரப்பன அக்ரஹார நீதிமன்ற வளாகத்திற்கு வந்தடைந்தார் தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்.

10. 50 AM: பரப்பன அக்ரஹார சிறை வளாகத்தைச் சுற்றி அதிமுகவினர் அதிகளவில் திரண்டு வருவதால் ஆயிரக்கணக்கில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

10.40 AM: ஜாமீன் சூரிட்டி வழங்க ஒருவருக்கு 2 பேர் வீதம் மொத்தம் 8 பேர் தேவைப்படுவதால் அவர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். முன்னேற்பாடாக மேலும் 8 பேரும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.

10. 25 AM: காலை 11 மணியளவில் பெங்களூர் சிறப்பு நீதிமன்ற நீதிபதி மைக்கேல் டி குன்ஹா, நீதிமன்றம் வந்தடைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

10. 20 AM: ஜெயலலிதாவை வரவேற்பதற்காக வழக்கறிஞர்கள் பன்னீர்செல்வம், பரணிகுமார், பழனிக்குமார்,செல்வக்குமார் ஆகியோர் காலையில் இருந்து காத்திருக்கின்றனர்.

10.15 AM: பரப்பன அக்ரஹார சிறை வளாகத்தில் இருந்து 500 மீட்டர் தூரத்துக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

10.10 AM: சிறையில் இருந்து ஜெயலலிதா விடுதலையாவதை ஒட்டி பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறை வளாகத்தில் ஏராளமான அதிமுகவினர் இனிப்புகளுடன் காத்திருக்கின்றனர்.

சொத்துக்குவிப்பு வழக்கில் தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைத்து உச்ச நீதிமன்றம் வெள்ளிக்கிழமை ஜாமீன் வழங்கியது. படிக்க: சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன்: வழக்கை தாமதிக்கக் கூடாது என நிபந்தனை

இதைய‌டுத்து 21 நாட்கள் சிறை வாசத்துக்கு பிறகு அவர் இன்று ஜாமீனில் விடுதலை ஆகிறார்.

ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வ‌ழக்கில் பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் கடந்த 27-ம் தேதி அவருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.100 கோடி அபராதமும் விதித்தது. சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோருக்கும் தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனையும் தலா ரூ.10 கோடி அபராதமும் விதித்து உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து நால்வரும் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டனர்.

 

டி.இ.டி., 'விலக்கு'க்கு கிடைத்தது !கல்வி இயக்குனர் அலுவலகம் மூலம் தகவல்

டி.இ.டி., 'விலக்கு'க்கு கிடைத்தது !கல்வி இயக்குனர் அலுவலகம் மூலம் தகவல்

'தமிழகத்தில் 23.8.2010க்கு முன் சான்றிதழ் சரிபார்க்கப்பட்டு, அதன் பின் பணியில்
சேர்ந்த பட்டதாரி ஆசிரியர்களுக்கு தகுதி தேர்வு (டி.இ.டி.,) தேர்ச்சியில் விலக்கு அளிக்க
வேண்டும்,' என, அனைத்து முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் மீண்டும்
இயக்குனர் அலுவலகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதன்மூலம் 18 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்களுக்கு நிம்மதி கிடைத்துள்ளது. 'கடந்த 2010 ஆக., 23க்கு முன் ஆசிரியர்பணி நியமன சான்றிதழ் சரிபார்ப்பு அல்லது அதுதொடர்பான நடவடிக்கைக்கு உட்பட்டிருந்தால் 2013 ஆக., 23க்கு பிறகும் பணி நியமனம் செய்யப்பட்ட அந்த ஆசிரியர்களுக்கு தகுதி (டி.இ.டி.,) தேர்வில்விலக்கு அளிக்கப்படும்' என ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.,) அறிவித்தது.இதன் அடிப்படையில், 2010 முதல் 2013 வரை அரசு மற்றும் உதவிபெறும் பள்ளிகளில் 18 ஆயிரம்பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்கள் பணியில் சேர்ந்தனர். இவர்கள் தகுதி காண்பருவத்திற்கு விண்ணப்பித்தனர். அதை கல்வி அதிகாரிகள் ஏற்காமல், 'ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றபின் தான் தகுதி காண் பருவத்தை முடிக்க இயலும்' என விண்ணப்பங்களை திருப்பி அனுப்பினர். இதனால், ஊதிய உயர்வு, ஊக்க ஊதியம், பண்டிகை காலமுன்பணம், வங்கி கடன் வாய்ப்பு உட்பட எவ்வித பலனும் கிடைக்காமல் 18 ஆயிரம் ஆசிரியர்கள்பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது
கல்வி இயக்குனர் அலுவலகம் மூலம் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களுக்கும் 'இமெயில்' தகவல் அனுப்பப்பட்டது.இதில் '2010 ஆக., க்கு முன் சான்றிதழ் சரிபார்க்கப்பட்டு, பின் பணியில் சேர்ந்த பட்டதாரி ஆசிரியர்களுக்கு டி.இ.டி., தேர்ச்சியில் விலக்கு அளிக்க வேண்டும்' என தெரிவிக்கப்பட்டது.இதனால், தகுதிகாண் பருவம் உட்பட அனைத்து பலன்களும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு கிடைக்க
வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

மணவர் எண்ணிக்கைக்கேற்ப கூடுதல் பணியிடங்கள் :முதுகலை ஆசிரியர்கள் நிர்வாக மாறுதல் பெற்று பணியில் சேர்ந்துவருகின்றனர்

முதுகலை ஆசிரியர்கள் மணவர் எண்ணிக்கைக்கேற்ப கூடுதல் பணியிடங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அவ்வாறு ஏற்படுத்தப்பட்ட கூடுதல் பணியிடங்கள் சிலவற்றுக்கு ஆசிரியர்கள் சிலர் பள்ளிக்கல்வி இயக்குனரகத்தின் மூலம் நிர்வாக மாறுதல் பெற்று பணியில் சேர்ந்துவருகின்றனர் என நம்பகமான தகவல்கள் தெரிவிக்கின்றன.

வெள்ளி, 17 அக்டோபர், 2014

எந்த ஒரு ஜாமீன் வழக்கிலும் உச்ச நீதிமன்றம் குற்றவாளிக்கு ஜாமீன் வழங்குகிறதோ இல்லையோ, ஆனால் தனி மனித சுதந்திரத்தை வலியுறுத்தும் அரசியல் சட்டப்பிரிவு 21-ஐ இந்த நீதிமன்றம் மதிக்கிறது.


சொத்துக் குவிப்பு வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஜெயலலிதா தரப்பு வாதங்களை கேட்ட உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, ஹெச்.எல்.தத்து, மதன் பி லோகூர், ஏ.கே.சிக்ரி ஆகியோர் கொண்ட அமர்வு, "ஜெயலலிதாவுக்கு டிசம்பர் 18-ம் தேதி வரை இடைக்கால ஜாமீன் வழங்கப்படுகிறது. எந்த ஒரு ஜாமீன் வழக்கிலும் உச்ச நீதிமன்றம் குற்றவாளிக்கு ஜாமீன் வழங்குகிறதோ இல்லையோ, ஆனால் தனி மனித சுதந்திரத்தை வலியுறுத்தும் அரசியல் சட்டப்பிரிவு 21-ஐ இந்த நீதிமன்றம் மதிக்கிறது. எனவே வீட்டுக் காவலில் வைக்கும் உத்தரவை உச்ச நீதிமன்றம் பிறப்பிக்க முடியாது. இந்த வழக்கில் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய 4 பேருக்கும் ஜாமீன் வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிடுகிறது.

சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா கடந்த 18 ஆண்டுகளாக வழக்கை இழுத்தடித்தார். அதை கருத்தில் கொண்டால், அவருக்கு ஜாமீன் வழங்கினால் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள மேல் முறையீட்டு மனுவை இன்னும் 20 ஆண்டுகள்கூட இழுத்தடிப்பார்.

எனவே, ஜாமீன் வழங்கியத்தில் இருந்து 6 வாரத்துக்குள், அதாவது டிசம்பர் 18-ம் தேதிக்குள், கர்நாடக உயர் நீதிமன்றத்தில் ஜெயலலிதா தரப்பில் இருந்து சொத்துக் குவிப்பு வழக்கு தொடர்பான ஆவணங்கள் அனைத்தும் சமர்ப்பிக்கப் பட வேண்டும் என இந்த நீதிமன்றம் உத்தரவிடுகிறது.

கர்நாடக உயர் நீதிமன்றத்தில் ஆவணங்களை தாக்கல் செய்வதில் ஒரே ஒரு நாள்கூட தாமதிக்கக் கூடாது. குறிப்பிடப்பட்டுள்ள டிசம்பர் 18-ல் கட்டாயம் ஆவணங்கள் தாக்கல் செய்யப்படாவிட்டால் கடுமையான நடவடிக்கை பாயும்.

அதேபோல், ஜெயலலிதா மேல் முறையீட்டு மனு தொடர்பான ஆவணங்கள் சமர்ப்பிக்கட்டதில் இருந்து மூன்று மாத காலத்துக்குள் கர்நாடக உயர் நீதிமன்றம் வழக்கை முடிக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிடுகிறது. அதிமுக தொண்டர்கள் தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு பிரச்சினையை ஏற்படுத்தக் கூடாது என ஜெயலலிதா அவர்களுக்கு வலியுறுத்த வேண்டும். ஜெயலலிதா உத்தரவின் பேரில் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் நடவடிக்கைகளில் அதிமுகவினர் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். நீதிமன்றங்களையோ, நீதிபதிகளையோ விமர்சிக்கும் வகையில் ஜெயலலிதா கருத்துகள் வெளியிடக் கூடாது" இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.

ஜஅதிமுக பொதுச்செயலர் ஜெயலலிதாவுக்கு ஜாமீன் வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.





 12. 55 PM: அதிமுக தொண்டர்கள் தமிழகத்தில் சட்டம், ஒழுங்க்கு பிரச்சினையை ஏற்படுத்தக் கூடாது என ஜெயலலிதா அவர்களுக்கு வலியுறுத்த வேண்டும் என உச்ச நீதிமன்றம் அவருக்கு அறிவுறுத்தியுள்ளது.

12. 50 PM: சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய மூன்று பேருக்கும் ஜாமீன் வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

12.45 PM: ஜெயலலிதா இன்று (வெள்ளிக்கிழமை) மாலையோ அல்லது நாளை (சனிக்கிழமை) காலையோ சிறையில் இருந்து விடுதலையாவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

12.43 PM: ஜாமீன் சூரிட்டி வழங்கிய பின்னர், நீதிபதி மைக்கேல் டி குன்ஹா ஜெயலலிதாவை சிறையில் இருந்து விடுவிக்க முறைப்படி உத்தரவிட்ட பின்னர் அவர் விடுவிக்கப்படுவார்.

12.40 PM: ஜெயலலிதா ஜாமீன் மனு தீர்ப்பு நகலை பெற்று அதனை அவரது வழக்கறிஞர்கள் பெங்களூர் சிறப்பு நீதிமன்ற நீதிபதி மைக்கேல் டி குன்ஹாவிடம் சமர்ப்பிக்க வேண்டும்.

12.35 PM: நீதிபதிகள் கூறியதாவது: "ஜெயலலிதாவுக்கு டிசம்பர் 18-ம் தேதி வரை இடைக்கால ஜாமீன் வழங்கப்படுகிறது. 6 வாரத்துக்குள் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் ஜெயலலிதா தரப்பில் இருந்து சொத்துக் குவிப்பு வழக்கு தொடர்பான ஆவணங்கள் சமர்ப்பிக்கப் பட வேண்டும்" என்றனர்.

12.30 PM: டிசம்பர் 18-ம் தேதி வரை ஜெயலலிதாவுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.

12. 27 PM: ஜெயலலிதாவுக்கு ஜாமீன் வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

12.00 PM: ஜெயலலிதா ஜாமீன் மனு மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் தொடங்கியது. ஜெயலலிதா தரப்பில், ஃபாலி எஸ்.நாரிமன் வாதாடி வருகிறார்.

11. 30 AM: கட்சி மேலிட உத்தரவை அடுத்து உச்ச நீதிமன்ற வளாகத்தில் இன்று அதிமுகவினர் எவரும் குழுமவில்லை. படிக்க:கட்சி மேலிட ஆணை: உச்ச நீதிமன்ற வளாகத்தில் அதிமுகவினர் ஆப்சென்ட்

11. 15 AM: ஜெயலலிதா ஜாமீன் மனு விசாரணையை ஒட்டி, உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி ஹெச்.எல்.தத்து அமர்வு விசாரணை நடத்தும் அறையில் ஏராளமான வழக்கறிஞர்கள் குவிந்தனர். இதனால், பெண் வழக்கறிஞர்கள் உள்ளே செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. தலைமை நீதிபதி கண்டனத்துக்குப் பிறகு வழக்கறிஞர்கள் கலைந்து சென்றனர்.

11. 12 AM: ஜெயலலிதா ஜாமீன் மனு, வரிசை எண்படி 65-வது மனுவாக இருந்தாலும், இன்று விசாரிக்கப்பட வேண்டிய 20 முதல் 45-வது எண் வரையிலான வழக்குகளில் ஆஜராக வேண்டிய வழக்கறிஞர்கள் வருகை தராததால் அவை ஒத்திவைக்கப்பட்டன. இதனால், ஜெயலலிதா ஜாமீன் மனு மீது இன்னும் ஒரு மணி நேரத்துக்குள் விசாரணை நடைபெறுகிறது.

11.10 AM: ஜெயலலிதா ஜாமீன் மனு மீதான விசாரணை இன்னும் ஒரு மணி நேரத்துக்குள் நடைபெறும்.

11. 05 AM: சுப்பிரமணியன் சுவாமி மனுவில், "ஜெயலலிதா வருமானத்துக்கு அதிகமாக சொத்துக் குவித்தது தொடர்பாக நான்தான் முதன்முதலாக‌ வழக்கு தொடுத்தேன். எனவே எனது கருத்தை கேட்ட பிறகே அவருக்கு ஜாமீன் வழங்குவது குறித்து முடிவெடுக்க வேண்டும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

10. 45 AM: பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி உச்ச நீதிமன்றம் வந்தடைந்தார். சுவாமி நேற்று உச்ச நீதிமன்றத்தில் புதிய மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

10. 43 AM: பெங்களூர் சிறப்பு நீதிமன்றம், கர்நாடக உயர் நீதிமன்றம் முன்பு அதிமுகவினர் குழுமியிருந்தது போல் இங்கு யாரும் இல்லை.

10.42 AM: உச்ச நீதிமன்ற வளாகத்தில் வழக்கமான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன

10.42 AM: கர்நாடக உயர் நீதிமன்றத்தில் ஜெயலலிதா ஜாமீன் மனு மீதான விசாரணையின் போது ஜெயலலிதா தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ராம் ஜெத்மலானியும் நீதிமன்றம் வந்துள்ளார்.

10.40 AM: ஜெயலலிதா தரப்பில் ஆஜராகி வாதிடும் வழக்கறிஞர் பாலி எஸ்.நாரிமன் நீதிமன்றம் வந்தடைந்தார்.

10.32 AM: ஜெயலலிதா ஜாமீன் மனு, 65-வது வழக்காக விசாரணைக்கு வருகிறது. சசிகலா, இளவரசி மனுக்களுக்கு 68, 69 எண்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. மூன்று மனுக்களும் ஒரு சேர விசாரிக்கப்படும் என தெரிகிறது.

10.30 AM: ஜெயலலிதா மனுக்களை விசாரிக்கும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஹெச்.எல்.தத்து, மதன் பி லோகூர், ஏ.பி.சிக்ரி ஆகியோர் நீதிமன்றம் வந்தடைந்தனர்.

10.27 AM: ஜெயலலிதா மனுக்களை விசாரிக்க உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தயக்கம் காட்டுவதற்கு இந்த வழக்கு அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததே காரணம் என கூறப்படுகிறது. மேலும், ஜாமீன் மனு மீதான தீர்ப்புகள் தமிழகத்தில் சட்டசிக்கலை ஏற்படுத்துவதாலும் நீதிபதிகள் தயக்கம் காட்டுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

10.20 AM: தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தாக்கல் செய்துள்ள ஜாமீன் மற்றும் மேல்முறையீட்டு மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகின்றன. இந்நிலையில், ஜெயலலிதா மனுக்களை விசாரிக்க உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தயக்கம் காட்டியுள்ளனர்.

10. 15 AM: ஜெயலலிதா தாக்கல் செய்துள்ள ஜாமீன் மனுவையும், சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோரின் மனுக்களையும் விசாரணைக்கு எடுத்துக்கொண்ட உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஹெச்.எல்.தத்து தலைமையிலான அமர்வு விசாரிக்கிறது.

10. 12 AM: ஜெயலலிதாவின் ஜாமீனுக்கு முட்டுக்கட்டை போடும் வகையில் பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி நேற்று உச்ச நீதிமன்றத்தில் புதிய மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

இது தவிர சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி, ஜெயலலிதா சார்பாக மூத்த வழக்கறிஞர் ஃபாலி எஸ்.நாரிமன் ஆஜராவதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதே போல தேமுதிகவைச் சேர்ந்த வழக்கறிஞர் ஜி.எஸ். மணி, இவ்வழக்கில் அர‌சு வழக்கறிஞர் பவானி சிங் ஆஜராவதை ஆட்சேபித்து உச்ச நீதிமன்றத்தில் ஒரு மனுவை தாக்கல் செய்திருக்கிறார்.

10.10 AM: தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தாக்கல் செய்துள்ள ஜாமீன் மற்றும் மேல்முறையீட்டு மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகின்றன.