ஞாயிறு, 24 ஜனவரி, 2016
அரசியல் விளம்பரத்துக்காக, தமிழ் ஆய்வை சமரசம் செய்து கொள்ளாதவர், ஜப்பானை சேர்ந்த தமிழ் ஆர்வலர் நொபுரு கராசிமா'
சேர்ந்த தமிழ் ஆர்வலர் நொபுரு கராசிமா' என, தமிழ் அறிஞர்கள் புகழாரம்
சூட்டியுள்ளனர்.உலக தமிழ் ஆராய்ச்சி கழக முன்னாள் தலைவர், ஜப்பானை சேர்ந்த நொபுரு
கராசிமா; 2015, டிச., 26ல் மறைந்தார். இவரது நினைவேந்தல் நிகழ்ச்சி, சென்னை, அண்ணா
சாலையில் உள்ள, ஆனந்த் வளாகத்தில், 'நிமிர்' அமைப்பு சார்பில், நேற்று மாலை நடந்தது.
நிகழ்ச்சியில் தமிழ் அறிஞர்கள் பேசியதாவது:ஜப்பான் நாட்டை சேர்ந்த நொபுரு கராசிமா, தமிழ் மீது அதீதபற்று கொண்டிருந்தார். பிற்கால சோழரின் பொருளாதாரம் பற்றி எழுதிய இவர், தென் இந்தியாவின்இடைக்கால வரலாறு பற்றியும் நுால் எழுதியுள்ளார். சமூக, பொருளாதார மாற்றங்களுக்கும், மத இயக்கங்களுக்கும், 12 - 13ம் நுாற்றாண்டில் இருந்த
தொடர்புகளை ஆய்வு செய்தவர். தமிழ் ஆராய்ச்சியில் தொடர்ந்து தன்னை ஈடுபடுத்திக் கொண்ட கராசிமா',உலக தமிழ் ஆராய்ச்சி கழக தலைவராகவும் பொறுப்பு வகித்தார்.
இவர் தலைவராக இருந்தபோது தான், உலக தமிழ் மாநாட்டை நடத்த, தி.மு.க., தலைமையிலான அரசு முடிவுசெய்தது. இதற்கு, மூன்று விதமான நிர்பந்தங்களை, தி.மு.க., அரசுக்கு அவர் விதித்தார்.
'மாநாடு நடத்த குறைந்தது, ஒரு ஆண்டு அவகாசம் வேண்டும்; மாநாட்டிலிருந்து அரசியல் நிகழ்வு களை ஒதுக்கி வைக்க வேண்டும்; தஞ்சை உலக தமிழ் மாநாட்டு ஆய்வு கட்டுரைகளை புத்தகமாக வெளியிட
வேண்டும்' என்றார். மாநாட்டை, நான்கு மாதங்களுக்குள் நடத்த வேண்டும் என்பதில், தி.மு.க., அரசு தீவிரமாக இருந்தது. இதற்கு,நொபுரு கராசிமா ஒப்புக் கொள்ளவில்லை. இதனால், உலகத் தமிழ் மாநாட்டிற்கு பதிலாக, 'செம்மொழிமாநாடு' என, பெயர் மாற்றி, நடத்தப்பட்டது. நொபுரு கராசிமா, அரசியல் ஆதாயங்களுக்காகவும்,விளம்பரத்துக்காகவும், தமிழ் ஆய்வை ஒருபோதும் சமரசம் செய்து கொண்டது கிடையாது. இவ்வாறு தமிழ் அறிஞர்கள் புகழாரம் சூட்டினர்.
சனி, 23 ஜனவரி, 2016
செட்' தேர்வுக்கான கட்டணம் உயர்வு:விண்ணப்பதாரர்கள் அதிர்ச்சி
கல்லூரி உதவிப் பேராசிரியர் பணிக்கு தேசிய அளவிலும், மாநில அளவிலும் தகுதித் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. தேசிய அளவிலான தகுதித் தேர்வு (நெட்) யுஜிசி சார்பில் நடத்தப்பட்டு வந்தது. இப்போது இந்தத் தேர்வு மத்தியஇடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) சார்பில் நடத்தப்படுகிறது.
இந்த தேசிய அளவிலான தகுதித் தேர்வுக்கான கட்டணம் முன்னர் ரூ. 500-ஆக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இப்போது ரூ. 600-ஆக உள்ளது.
மாநிலஅளவிலான தகுதித் தேர்வு மாநிலத்திலுள்ள ஏதாவது ஒரு பல்கலைக்கழகம் சார்பில் நடத்தப்படும். இதற்கு யுஜிசி அனுமதி பெற வேண்டும். அவ்வாறு 2016-ஆம் ஆண்டுக்கான மாநில அளவிலான (செட்) தகுதித் தேர்வு, கொடைக்கானல் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம் சார்பில் நடத்தப்படுகிறது. பிப்ரவரி 21-ஆம் தேதி நடத்தப்பட உள்ள இந்தத் தேர்வுக்கு பிப்ரவரி 10-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். இதற்கான தேர்வுக் கட்டணம் ரூ. 1,500 என்ற அளவில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு ரூ. 1,250-ம், எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு ரூ. 500-ம் என்ற அளவில் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டண நிர்ணயம் விண்ணப்பதாரர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
இதுகுறித்து இந்தத் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள தனியார் கல்லூரி பேராசிரியர் முருகானந்தம் கூறியதாவது: "நெட்', "செட்' இரண்டு தேர்வுகளையும் நடத்துவதற்கான அனுமதியை யுஜிசி-தான் வழங்குகிறது. இந்த நிலையில்"நெட்' தேர்வுக்கு கட்டணமாக ரூ. 600 வசூலிக்கப்படும் நிலையில், "செட்' தேர்வு கட்டணம் ரூ. 1,500-ஆக நிர்ணயிக்கப்பட்டிருப்பது எந்த விதத்திலும் நியாயமில்லை என்றார்.
தமிழகத்தில் கடைசியாக கடந்த 2012-இல் கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தின் சார்பில் "செட்' தேர்வு நடத்தப்பட்டபோது தேர்வுக் கட்டணமாக ரூ. 1,000 வசூலிக்கப்பட்டது. இப்போது மேலும் ரூ.500 உயர்த்தப்பட்டிருப்பது ஏழை மாணவர்களை கடுமையாகபாதிக்கும். எனவே, கட்டணத்தைக் குறைக்க பல்கலைக்கழகம் முன்வர வேண்டும் என்றார்.
இதுகுறித்து தேர்வை நடத்தும் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழக பதிவாளர் என். கலா கூறியது:விசாரிக்கப்படும்..: "செட்' தேர்வுக்கு முந்தைய ஆண்டுகளில் வசூலிக்கப்பட்ட கட்டணங்களின் அடிப்படையிலேயே, இப்போதையக் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. எனவே, இதைக் குறைப்பதற்கு வாய்ப்பில்லை என்றார்.
இதுகுறித்து யுஜிசி துணைத் தலைவர் ஹெச். தேவராஜ் கூறியது:"செட்' தேர்வை நடத்த இந்த ஆண்டு அனுமதித்துள்ளோம். இந்தத் தேர்வை நடத்த அன்னைத் தெரசா மகளிர் பல்கலைக்கழகம் எடுத்துள்ள முடிவு இன்னும் யுஜிசி-க்கு வந்து சேரவில்லை. இதனால் தேர்வுக் கட்டணம் குறித்த தகவல் தெரியவில்லை. எனவே, விவரங்கள் யுஜிசி-க்கு கிடைத்ததும் கட்டணம் குறித்து விசாரிக்கப்படும் என்றார்.
நெட் டிசம்பர் 2015 தேர்வுக்கான விடைக் குறிப்புகள் வருகின்ற பிப்ரவரி 2 ஆம் தேதி வெளியாகின்றது.
CBSE UGC NET Answer Key December 2015: OFFICIAL KEY WILLBE RELEASED ON 02 FEB 2016-ANNOUNCED BY CBSE
நெட் டிசம்பர் 2015 தேர்வுக்கான விடைக் குறிப்புகள் வருகின்ற பிப்ரவரி 2 ஆம் தேதி வெளியாகின்றது என சிபிஎஸ்சி அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. தேர்வர்களின் OMR SHEET ம் பதிவேற்றம் செய்யப்படுவதால் அதனையும் அன்றே சர்பார்க்கலாம்
CBSE UGC NET ANSWER KEY DECEMBER 2015: OFFICIAL KEY WILLBE PUBLISHED ON 02 FEB 2016
Central Board of Secondary Education successfully has conducted the National Eligibility Test NET 2015 examination on December 27th, 2015 (Sunday) in various examination centers located at different states in India. Now it is going to publishing the CBSE UGC NET 2015 Answer Key. So candidates who have participated in the NET 2015 exam will able to get their CBSE UGC NET December 2015 Answer Key from the official website, Check cbsenet.nic.in NET December Exam Paper Solutions which will be published ON 02 FEB 2016
Lakhs of Students has attempted in the NET 2015 examination which was conducted by the CBSE on December 27, 2015 with a hope to score qualified marks. The purpose is to Indian Nationals for the Eligibility for Assistant Professor only or Junior Research Fellowship and Eligibility for Assistant Professor both in Indian Universities and colleges. .
About CBSE Central Board of Secondary Education, CBSE is a central board of education which is situated at New Delhi, India. It was formed in November 03, 1962 and exists under the Ministry of Human Resource Development. It is a board of duration for public and private schools. It grants the affiliation to the schools in India and also makes the syllabus and conducts the board exam. CBSE also conducts the National Eligibility Test NET annually.
பள்ளிக்கு தாமதமாக வந்த ஏழு ஆசிரியர்களுக்கு, ஒருநாள், 'ஆப்சென்ட்'
திருவண்ணாமலை மாவட்டத்தில், மாணவர்களின் கல்வித்தரத்தை உயர்த்துவதற்காக,
கல்வித் துறை அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். குறிப்பாக, 10ம்
வகுப்பு, பிளஸ் 2 மாணவர்களின் தேர்ச்சி விகிதத்தை அதிகரிப்பதற்காக, சிறப்பு வகுப்புகள்
நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில், தி.மலை முதன்மைக்கல்வி அலுவலர் பொன்குமார், கடந்த 20ம் தேதி, போளூர் பகுதி அரசுமேல்நிலைப் பள்ளிகளில், அதிரடி ஆய்வு நடத்தினார். அப்போது, சந்தவாசல் பள்ளியில், ஐந்து ஆசிரியர்கள்,கஸ்தம்பாடி பள்ளியில், இரண்டு ஆசிரியர்கள், பள்ளிக்கு தாமதமாக வந்தது தெரிவந்தது. அவர்களுக்குஒருநாள், 'ஆப்சென்ட்' போட்டு, முதன்மைக்கல்வி அலுவலர் பொன்குமார் நடவடிக்கை எடுத்தார்.
சிறப்பாசிரியர்கள் நியமனம்:ஆசிரியர் தேர்வு வாரியம் போட்டி தேர்வு அறிவிக்காததால் ஆசிரியர்கள் விரக்தி
2015 செப்.,2 ல் 1,188 விளையாட்டு, ஓவியம், தையல்சிறப்பாசிரியர்கள் பணியிடங்களுக்கு போட்டி தேர்வுகள் நடத்தி நிரப்பப்படும் எனஅறிவிக்கப்பட்டது. இதில் பார்வையில்லாதவர், காது கேளாதோர், உடல் ஊனமுற்றோர் ஆகியமாற்றுத்திறனாளிகளுக்கான 3 சதவீத ஒதுக்கீட்டில் ஒவ்வொரு பிரிவுக்கும் தலா 1 சதவீதம் ஒதுக்க வேண்டுமென உச்ச நீதிமன்றம் உத்தரவை பிறப்பித்தது.
இதன்படி தற்போது ஆசிரியர் தேர்வு வாரியம் ஊனமுற்றோருக்கான 3 சதவீத ஒதுக்கீட்டில் விளையாட்டு,
ஓவியம், தையல் போன்ற சிறப்பு ஆசிரியர்களில் எத்தனை இடஒதுக்கீடு வழங்குவது குறித்து அரசிடம்
அனுமதி கேட்டிருப்பதாக சொல்லி போட்டித் தேர்வை நடத்தாமல் காலதாமதப்படுத்தி வருகின்றனர்.
தையல் ஆசிரியை பிரியதர்ஷினி கூறுகையில், "2012 ஏப்ரலுக்கு பின் 4 ஆண்டுகளாக சிறப்பு ஆசிரியர்
நியமனம் செய்யவில்லை. தற்போது சிறப்பு ஆசிரியர் பணிக்காக சுமார் 90ஆயிரம் பேர் தயார் நிலையில் இருக்கின்றனர். ஆனால் ஆசிர
விழி இழந்தாலும் தன்னம்பிக்கை இழக்காமல் மாணவர்களின் எதிர்காலத்துக்கு வழிகாட்டி வருகிறார் வரலாற்று ஆசிரியை வள்ளி
திருநெல்வேலி மாவட்டம் புளியங்குடியை சேர்ந்தவர்வள்ளி,34. 5 வயதுவரை சக பெண் குழந்தைகளுடன்
ஓடி, சாடி விளையாடிய வள்ளியை திடீரென்றுஅம்மை நோய் தாக்கியது. கண் வலி அதிகரிக்கவே
இவரது தாயார் டாக்டர்களிடம் ஆலோசனைகேட்காமல் மருந்துகடையிலிருந்து வாங்கிய சொட்டு மருந்தை வள்ளியின் கண்ணில்விட்டுள்ளார். விளைவு இரண்டு கண்ணும் பார்வை பறிபோனது. மனம் தளராத வள்ளி பள்ளி படிப்பைபாளையங்கோட்டை மேரி சார்ஜன் பெண்கள் பள்ளியில் முடித்தார். பட்டப் படிப்பை மதுரையில் உள்ளகல்லூரியில் முடித்துள்ளார். இவருக்கு 4 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. கணவர் அப்பாத்துரை.இவரும் பார்வை இழந்தவர். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். டி.ஆர்.பி., தேர்வு மூலம் ஆசிரியராக தேர்ந்தெடுக்கப்பட்ட இவர் ரெகுநாதபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில்வரலாற்று ஆசிரியராக பணியில் சேர்ந்து கடந்த 6 மாதமாக பணியாற்றி வருகிறார். பாடங்களை மணிக்கணக்கில்நடத்தினாலும் எளிதில் புரிந்து கொள்ளும் விதமாக உரிய விளங்கங்களுடன் அவர்களது மனதில்பதியவைக்கிறார். மாணவிகளின் துணையோடு வீட்டிலிருந்து பள்ளிக்கும், பள்ளியிலிருந்து வீட்டுக்கும்செல்கிறார்.
ஆசிரியர் வள்ளி கூறியதாவது: நான் 5 வயது சிறுமியாக இருக்கும் போது, அம்மை நோய் தாக்கியது. தவறுதலாக சொட்டு மருந்தை எனது கண்ணுக்குள் அம்மா விட்டு விட்டார். அதன் விளைவாக கண் பார்வைபறிபோனது. பெற்றோர்களின் முயற்சியால் சிறப்பாசிரியர்கள் மூலம் எனது கல்விக்கான தீபத்தை
விடாமுயற்சி, தன்னம்பிக்கை எனும் திரியால் சுடர் ஏற்றினேன். தற்போது மாணவர்களுக்கு பாடத்துடன்,
எளிதில் வெற்றி பெறுவதற்கான தன்னம்பிக்கையையும் ஊட்டி வருகிறேன். இளமையில் கற்கும் அடித்தள மானகல்வியே, உயர்கல்விக்கும், வேலை வாய்ப்பிற்கும் மகுடமாக திகழ்கிறது.தன்னம்பிக்கை இழந்தவர்களுக்கு,எனது நிலையை பார்க்க செய்து தூண்டுகோலாக இருப்பதில் பெருமை கொள்கிறேன், என்றார்.
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு:தனியார் பள்ளி மாணவர்களுக்கு, 115 ரூபாய் தேர்வு கட்டணம்
கட்டணம் வசூலிக்க, தேர்வுத் துறை இயக்குனர் வசுந்தரா தேவி உத்தரவிட்டுள்ளார்.அரசு
மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும், உயர் பிரிவு மாணவர்கள் தவிர,
மற்றவர்களுக்கு தேர்வு கட்டணத்தில் விலக்கு அளிக்கப்படுகிறது. பிற்படுத்தப்பட்ட, மிகவும்
பிற்படுத்தப்பட்ட இன மாணவர்களது பெற்றோரின் ஆண்டு வருமானம், இரண்டு லட்சத்துக்கு
அதிகமாக இருந்தால், அவர்களுக்கு தேர்வு கட்டணம் உண்டு. மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு
கட்டணம் இல்லை.
ஆஸ்கர் விருதுக்கு,கோவையை சேர்ந்தகோட்டலாங்கோ லியோன் என்ற பொறியாளர் தேர்வு
இந்த ஆண்டு, சினிமாதுறைக்கு தொழில்நுட்பகண்டுபிடிப்புகளை அளித்து
சாதனை படைத்ததற்கான ஆஸ்கர் விருதுக்கு,கோவையை சேர்ந்தகோட்டலாங்கோ லியோன் என்ற பொறியாளர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
ஒவ்வொரு ஆண்டும் சிறந்த திரைப்படம், நடிப்புபோன்றவற்றுக்கு ஆஸ்கர் விருதுகள்
வழங்கப்படுகின்றன. இவ்விருதுகளுக்கு முன்,சினிமா துறைக்கு அறிவியல், பொறியியல் போன்றதொழில்நுட்பத்தில் சிறந்த கண்டுபிடிப்புகளைதந்ததற்காக விருதுகள் வழங்கப்படுவது வழக்கம். இந்த விருதுகளுக்கு இந்த ஆண்டு இந்தியாவைjதாயகமாகக் கொண்ட ராகுல் தாக்கர், ''அறிவியல் மற்றும் தொழில்நுட்ப சாதனை'க்காக தேர்வுசெய்யப்பட்டிருந்தார். முதலில் இந்த தகவல் மட்டுமே வௌியே வந்தது. தற்போது இவருடன் இன்னொரு
இந்தியரும் விருது பெறும் தகவல் தெரிய வந்துள்ளது. அவர் பெயர் கோட்டலாங்கோ லியோன் . கோவையை பூர்வீகமாகக் கொண்டவர். 'டிசைன், பொறியியல்,
தொடர் மேம்பாடு'' விருதுக்காக இவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
அமெரிக்காவில் கலிபோர்னியாவில் கல்வர்சிட்டியில் மனைவி, குழந்தைகளுடன் வசிக்கிறார் இவர். ஆஸ்கார் அறிவியல் விருதுக்கு தேர்வுசெய்யப்பட்டதை அறிந்ததும் மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தாராம் இவர்.
இதுபற்றி தனது முகநுால் பக்கத்தில் எழுதும்போது அவர், ''நான் வழக்கம்போல் எனது வேலைகளைப்பார்த்துக்கொண்டு இருக்கும்போது இத்தகவல் கிடைத்தது. மகிழ்ச்சியை என்னால் அடக்கவே முடியவில்லை.இதற்காக என் மேல் அக்கறை கொண்ட என் குடும்பத்தினர், நண்பர்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். வௌிச்சத்திற்கு வருவதை நான் விரும்புவதில்லை. இருப்பினும் என் மகிழ்ச்சியைஅனைவருடனும் பகிர்ந்து கொள்கிறேன்'' என கூறியுள்ளார். அடுத்த மாதம் 13ம் தேதி ஆஸ்கர் தொழில்நுட்ப விருதுகள் வழங்கப்பட உள்ளன. மற்ற முக்கிய விருதுகள்அடுத்த மாதம் 28ம் தேதி வழங்கப்படும்.
சூரிய குடும்பத்தில் 9வது கோள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. .
சூரிய குடும்பத்தில் ஏற்கனவே 8 கோள்கள் இருக்கின்றன. நெப்டியூனை தனி கோளாக
கருதுவதில்லை. இந்நிலையில் கற்பனைக்கும் எட்டாத தூரத்தில் இருந்தபடி சூரியனை சுற்றிவரும் புதிய கோளை கலிபோர்னியா இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். சூரியனில் இருந்து பூமி இருக்கும் தூரத்தை விட, 50 மடங்கு தூரத்தில் இக்கோள்இருக்கலாம் எனவும் அவர்கள் கூறியுள்ளனர். விண்வௌி விஞ்ஞானி கான்டான்டின் பாத்திஜின் மேலும் கூறும்போது, ''சூரிய குடும்பத்தில் இன்னமும் கண்டுபிடிக்க வேண்டியது நிறைய உள்ளன. புதியகோளை நாங்கள் நேரடியாக காணவில்லை. அதற்கான அறிகுறிகள் தெறிகின்றன. அக்கோளின் ஈர்ப்பு விசை நன்கு உணரப்படுகிறது'' என்றார். 'நெப்டியூனை ஒரு கோளாக கருத முடியாது'' என 2006ம் ஆண்டு ஒரு பிரச்னையை எழுப்பி, அதை'பதவியிறக்கம்' செய்தவர் இதே விஞ்ஞானி தான்.
வெள்ளி, 22 ஜனவரி, 2016
கைநிறைய சம்பளம் வாங்கியும் வாழ்வில் நிம்மதியில்லை..!
அதிக சம்பளம் பெறும் தகவல் தொழில்நுட்பத்துறை ஊழியர்களே விவாகரத்து வழக்கு தொடுப்பதில் முதலிடத்தில் உள்ளனர்.
தமிழகத்தில் புதிதாக திருமணம் முடிக்கும் இளம் தம்பதியரில் 10 சதவீதம் பேர் 6 மாதங்களுக்குள், நீதிமன்ற படியேறி விவாகரத்து வழக்கு தொடுக்கின்றனர். "இதற்கு விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை, சகிப்புத்தன்மை இல்லாததே முக் கிய காரணம்" என்கிறார் தமிழ் நாடு பெண் வழக்கறிஞர்கள் கூட்டமைப்பின் மாநிலத் தலைவர் வழக்கறிஞர் சாந்தகுமாரி.
இதுகுறித்து அவர் 'தி இந்து' விடம் கூறியதாவது:
'கல்லானாலும் கணவன், புல் லானாலும் புருஷன்' என்று இருந்த காலம் இப்போது மலையேறிவிட் டது. கல்வி, வேலை, கைநிறைய சம்பளம் என இந்த மூன்றும் பெண் களுக்கு தனித்து இயங்கும் சக்தி யைக் கொடுத்துள்ளது. இதனால் ஆண்களை சார்ந்துதான் வாழ வேண்டும் என்ற நிர்ப்பந்தம் இப்போது பெண்களிடம் இல்லை.
மேலை நாடுகளில் திருமணம் ஒரு காகித ஒப்பந்தமாகத்தான் பார்க்கப்படுகிறது. ஆனால், இந்தி யாவில் திருமணம் என்பது புனிதச் சடங்கு. இதில் கணவன், மனைவி என்ற பந்தத்தைத் தாண்டி மூன்றா வது நபர் குறுக்கிடும்போதுதான் பிரச்சினை பெரிதாக வெடிக்கிறது.
இப்போது மலட்டுத்தன்மை, குழந்தையின்மை போன்ற கார ணங்களாலும் இளம் தம்பதியர் அதி கமாக விவாகரத்து கோருகின்றனர்.
விவாகரத்து கோரி வழக்கு தொடர்பவர்களில் தகவல் தொழில் நுட்பத்துறையினர் முதலிடத்தில் உள்ளனர். கைநிறைய சம்பளம் வாங்கியும் அவர்கள் வாழ்வில் நிம்மதியில்லாமல் நீதிமன்ற படியேறி வருகின்றனர்.
இரண்டாவதாக கல்வி நிலை யங்களில் பணிபுரிபவர்களும், அதற்கு அடுத்த இடத்தில் போலீஸ் உள்ளிட்ட இதர துறையினரும் உள்ளனர்.
சில நேரங்களில் பாலியல் இச்சை தீர்ந்ததும் திருமண பந்தம் புளித்து விவாகரத்து தேட வைக்கிறது. அதேபோல் காதலித்தபோது பார்த்த காதலனின் பிம்பம், கல் யாணத்துக்குப் பிறகு நிஜ வாழ்க் கையில் மாயமாகி விடுகிறது என்ற கோபமும் பெண்களை விவாகரத்து வாங்கத் தூண்டுகிறது.
10 ஆண்டுகளுக்கு முன்பு சென் னையில் 2 ஆயிரத்துக்கும் குறை வான விவாகரத்து வழக்குகளே தாக்கல் செய்யப்பட்டன. ஆனால் தற்போது 8 ஆயிரத்துக்கும் மேற் பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. சென்னையில் உள்ள 4 குடும்ப நல நீதிமன்றங்கள் போதவில்லை எனக்கூறி, மேலும் 4 நீதிமன்றங்களை புதிதாகத் திறக்க நீதித்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. அந்தளவுக்கு விவகாரத்து வழக்குகளின் பெருக் கம் பெரும் தாக்கத்தை ஏற்படுத் தியுள்ளது.
செட் தேர்வுக்கு தருமபுரியும் ஒரு தேர்வு மையமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புக்கு
7502971085
exam details
Tamilnadu SET 2016 Paper Pattern:-
The Test will consist of three papers. All the three papers will consist of only objective type questions and will be held on 21.02.2016 (SUNDAY) in three separate sessions as under:
Session Paper Marks Number of Question Duration
First I 100 60 out of which 50 question to be attempted
1¼ Hours (09:30 A.M. to 10:45 A.M.)
Second II 100 50 questions all are compulsory
1¼ Hours (11:15 A.M. to 12:30 P.M.)
Third III 150 75 questions all are compulsory
2½ Hours (02:00 P.M. to 04:30 P.M.)
Paper-I shall be of general nature, intended to assess the teaching/research aptitude of the candidate. It will primarily be designed to test reasoning ability, comprehension, divergent thinking and general awareness of the candidate. 60 (sixty) multiple choice questions of 2 marks each will be given, out of which the candidate would be required to answer any 50 (fifty). In the event of the candidate attempted more than 50 questions, the first 50 questions attempted by the candidate would be evaluated.
Paper-II shall consist of 50 objective type compulsory questions based on the subject selected by the candidate. Each question will carry 2 marks.
Paper-III will consist of 75 objective type compulsory questions from the subject selected by the candidate. Each question will carry 2 marks.
All the questions of Paper – II and Paper – III will be compulsory, covering entire syllabus (including all electives, without options).
The candidate will have to mark the responses for questions of Paper – I, Paper - II and Paper – III on the Optical Mark Reader (OMR) Sheet provided along with the test booklet.
There are no negative marks for incorrect answers.
Apply online at website:- www.setexam2016.in from 20.01.2016 to 10.02.2016.
TNSET 2016 Date:- 21.02.2016 (Sunday)
Paper-1 - 09.30 AM to 10.45 AM
Paper-2 - 11.15 AM to 12.30 PM
Paper-3 - 02.00 PM to 04.30 PM
செட் தேர்வு : தருமபுரியில் பயிற்சி SET EXAM 2016 COACHING IN DHARMAPURI
தொடர்புக்கு
7502971085
வியாழன், 21 ஜனவரி, 2016
Tamilnadu SET 2016 Paper Patten
Session Paper Marks Number of Question Duration
First I 100 60 out of which 50 question to be attempted 1¼ Hours (09:30 A.M. to 10:45 A.M.)
Second II 100 50 questions all are compulsory 1¼ Hours (11:15 A.M. to 12:30 P.M.)
Third III 150 75 questions all are compulsory 2½ Hours (02:00 P.M. to 04:30 P.M.)
Paper-I shall be of general nature, intended to assess the teaching/research aptitude of the candidate. It will primarily be designed to test reasoning ability, comprehension, divergent thinking and general awareness of the candidate. 60 (sixty) multiple choice questions of 2 marks each will be given, out of which the candidate would be required to answer any 50 (fifty). In the event of the candidate attempted more than 50 questions, the first 50 questions attempted by the candidate would be evaluated.
Paper-II shall consist of 50 objective type compulsory questions based on the subject selected by the candidate. Each question will carry 2 marks.
Paper-III will consist of 75 objective type compulsory questions from the subject selected by the candidate. Each question will carry 2 marks.
All the questions of Paper – II and Paper – III will be compulsory, covering entire syllabus (including all electives, without options).
The candidate will have to mark the responses for questions of Paper – I, Paper - II and Paper – III on the Optical Mark Reader (OMR) Sheet provided along with the test booklet.
There are no negative marks for incorrect answers.
TNSET- 2016 :Subject Code - Medium of Question Paper
Subject Code - Medium of Question Paper :-
01 Chemical Sciences - English & Tamil
02 Commerce - English & Tamil
03 Computer Science & Application - English& Tamil
04 Economics - English & Tamil
05 Education - English& Tamil
06 Electronics - English& Tamil
07 English - English
08 Geography - English& Tamil
09 Hindi - Hindi
10 History - English & Tamil
11 Home science - English & Tamil
12 Journalism & Mass Communication - English & Tamil
13 Law - English & Tamil
14 Sanskrit - Sanskrit
15 Life Sciences - English & Tamil
16 Management - English & Tamil
17 Mathematical Sciences - English & Tamil
18 Tamil - Tamil
19 Telugu - Telugu
20 Physical Sciences - English & Tamil
21 Political Sciences - English & Tamil
22 Psychology - English& Tamil
23 Social Work - English& Tamil
24 Sociology - English & Tamil
25 Earth, Atmospheric, Ocean and Planetary sciences - English & Tamil