புதன், 10 ஆகஸ்ட், 2016

TRB PG TAMIL:காப்பியம்

காப்பியம்

1.0 பாட முன்னுரை
    இலக்கிய உலகில் காப்பியம் ஒரு தனி இடத்தைப் பெற்றுள்ளதுஇதனைச் செவ்விலக்கிய வகையில் (Classical Literature) அடக்குவர்இலக்கிய வளம் நிறைந்த பழமையான மொழிகளில் முதல் இலக்கியம் காப்பியமாக அமைவதைக் காணலாம்.சங்க இலக்கியமான புறநானூறும்பதிற்றுப்பத்தும் பத்துப்பாட்டில் பல பாடல்களும் இத்தகைய வீரயுகப் பாடல்கள்தாம்சீன மொழியிலும் இத்தகைய உதிரிப் பாடல்களே வீரயுகத்தில் எழுந்துள்ளன.
    தமிழ் இலக்கிய வரலாற்றில் வீரயுகத்தை அடுத்துத்தான் காப்பியக் காலம் தொடங்குகிறதுஇக்காப்பிய எழுச்சிக்கு வித்திட்டவர் இளங்கோ அடிகள் ஆவார்சிலப்பதிகாரத்திற்கு முன் பல காப்பியங்கள் எழுந்திருக்க வேண்டும் என அறிஞர்கள் கருத்துத் தெரிவித்தாலும் அவை அனைத்தும் ஊகங்களேதமிழில் தோன்றிய முதல் காப்பியமே சிலப்பதிகாரம்தான்இதனை அடியொற்றியே தமிழில் பல காப்பியங்கள் எழுதப்பட்டுள்ளன.

1.1 காப்பியம்
    காப்பியம் என்றால் என்னஇந்தச் சொல்லின் பொருள் என்னஇச்சொல் விளக்கும் இலக்கியம் எத்தகையது?ஒருவகையில் சிந்தாமணிசிலப்பதிகாரம் போன்றவை கதைப்பாடல்கள் என்பதை நாம் அறிவோம்இன்னொரு நிலையில்'காப்பியம்என்றால் என்னஇந்தச் சொல் எங்கிருந்தது வந்ததுஇதன் அடிப்படைப் பொருள் யாதுஇதற்கு விடை காண்பதே நமது நோக்கம்.
 சொல் விளக்கம்
    வடமொழியில் 'காவ்யாஎன்றால் பாட்டு என்பது பொருள்கவியால் படைக்கப்படுவன அனைத்தும் 'காவியமே'. எனவே காவ்யா காவியம் காப்பியம் என ஆகியது என்பர்தமிழில் தொல்காப்பியம்காப்பியக் குடிவெள்ளூர்த் தொல்காப்பியர்,காப்பியஞ் சேந்தனார்காப்பியாற்றுக் காப்பியனார் முதலான பெயர்கள் காணப்படுகின்றனஇவை காப்பு இயம் என்ற சொற்களின் சேர்க்கையாகக் கருதப்படுகின்றனபழமரபுகளைக் காப்பது 'காப்பியம்எனக் கருத இடம் உண்டுகாப்பியம் என்ற இலக்கியமேவரலாற்றுக்கு முற்பட்ட காலச் சமூக சமய அரசியல் வரலாற்றையோ அல்லது வரலாறாக நம்பப்படுவதையோதான் பாடுபொருளாகக் கொண்டுள்ளது. இவை வாய்மொழி மரபாகச் சொல்லப்பட்டு வந்த கதைகளாக அமைந்தனஇவ்வாறு வரலாற்றுக்கு முந்தைய கால மனிதனின் வாழ்வியல்சிந்தனை மற்றும் சமய நம்பிக்கை பற்றிச் சொல்லப்பட்டு வந்த கதைகளே ஹோமர் போன்ற கவிஞர்களால் காப்பியமாகத் தொகுக்கப் பட்டன.
    ஆங்கிலச் சொல்லான Epic என்பதும் 'epo' என்ற கிரேக்கச் சொல்லின் ஆக்கமாகக் கருதப்படுகிறது; 'epo' என்றால் 'to tell' என்றும், 'epos' என்றால் 'anything to tell' என்றும் பொருள்படும்எனவே Epic என்பது மரபுவழியாகச் சொல்லப்பட்டு வருவது என்பது பொருளாகிறதுஇவ்வகையில் காப்பியம்என்பதும் பழமரபுகளைக் காத்து இயம்புவது அதாவது'சொல்லப்பட்டு வருவதுஎன்பது விளங்குகிறது அல்லவா?

1.3 பெருங்காப்பியமும் சிறுகாப்பியமும்
    வடமொழியில் மகாகாவியம்காவியம் என்ற வகைமையையே பெருங்காப்பியம் -சிறுகாப்பியம் என்று தமிழில் குறிப்பிடுகின்றனர்வடமொழியில் இதிகாசங்களான இராமாயண -மகாபாரதக் கிளைக் கதைகளை எடுத்துக் கொண்டுஅவற்றைக் கலைத் தன்மையுடன் தண்டியலங்காரம் கூறும் இலக்கணப்படி பாடினர்இவையே மகாகாவியம் காவியம் எனப்பட்டனவடமொழி தமிழ்க் காப்பியங்களுக்கிடையே பெயரில் இந்த ஒற்றுமை காணப்பட்டாலும்பாடு பொருளில் இருமொழிக் காப்பியங்களும் வேறுபடுகின்றனதமிழில் எந்த ஒரு பெருங்காப்பியமோ அல்லது சிறு காப்பியமோ இதிகாசத் தழுவலாக இல்லை என்பது குறிப்பிடத் தக்கது.
1.3.1 பெருங்காப்பிய இலக்கணம்
    தமிழ்க் காப்பியக் கொள்கை பற்றிய விரிவான செய்தி பழந்தமிழ் இலக்கண நூலான தொல்காப்பியத்தில் இல்லை எனலாம்வடமொழி மரபை ஒட்டி எழுந்த தண்டியலங்காரமே முதல்முதலில் காப்பிய இலக்கணம் பற்றி விரிவாகப் பேசுகின்றது.தொடர்ந்து பன்னிரு பாட்டியல்நவநீதப் பாட்டியல்மாறன் அலங்காரம் முதலான பாட்டியல் நூல்கள் இவ்விலக்கணம் பற்றிப் பேசுகின்றன.
    பெருங்காப்பியம் தனக்கு ஒப்புமை இல்லாத தலைவனைப் பற்றிய கதையாக அமைய வேண்டும் என்று தண்டியலங்காரம் கூறுகிறது.
    பெருங்காப்பியம் வாழ்த்துவணக்கம்வருபொருள் கூறித் தொடங்கப் பட வேண்டும் என்பார் தண்டிஅவையடக்கம் இடம் பெற வேண்டும் என்பதை மாறன் அலங்காரம் வலியுறுத்தும்.காப்பியப் பாடுபொருள் அறம்பொருள்இன்பம்வீடு என்னும் நாற்பொருள் தருவதாக அமைதல் வேண்டும் என்பது இலக்கண நூலார் அனைவரின் கருத்தாகும்.
    பெருங்காப்பிய வருணனைக் கூறுகளாக மலைகடல்நாடுவளநகர்பருவம்இருசுடர்த் தோற்றம் என்பனவற்றைத் தண்டி கூறுகிறார்தென்றலின் வருகைஆற்று வருணனைகளை மாறன் அலங்காரம் சுட்டும்நவநீதப் பாட்டியல் மாலை (பொழுது), குதிரையானைகொடி,முரசுசெங்கோல் பற்றிய வருணனைகளைச் சேர்க்கும்.
    பெருங்காப்பிய நிகழ்ச்சிகளைப் பொது நிகழ்ச்சிஅரசியல் நிகழ்ச்சி என இரண்டாக வகைப்படுத்தலாம்திருமணம்பொழிலாடல்நீராடல்புதல்வர்ப் பேறுபுலவியிற் புலத்தல்,கலவியில் கலத்தல் ஆகியவற்றைப் பொது நிகழ்வுகளாகத் தண்டி ஆசிரியர் குறிப்பிடுவார்.மாறன் அலங்காரம் இல்வாழ்க்கைநிலையாமைகைக்கிளை ஆகியவற்றைச் சேர்க்கும்.குலவரவுஉலகின் தோற்றம்ஊழின் இறுதிதொன்னூற்று அறுவரது இயற்கைவேதியர் ஒழுக்கம் இவை பற்றிப் பேச வேண்டும் என்பவற்றைப் புராணக் காப்பிய நிகழ்வுகளாக வச்சணந்திமாலை முதலான இலக்கண நூல்கள் குறிப்பிடும்.
    பெருங்காப்பிய அரசியல் நிகழ்வுகளாக மந்திரம்தூதுசெலவுஇகல் வென்றிமுடிசூடல் ஆகியவை தண்டி கூறுவனஇவற்றுடன் ஒற்றாடல்திறை கோடல் ஆகியவற்றை மாறன் அலங்காரம் சேர்க்கும்.
    சுவைபாவம் (மெய்ப்பாடுகள்காப்பியத்தில் இடம் பெற வேண்டும்அத்துடன் சந்திபாவிகம் ஆகிய கதைப் பின்னல் அமைதல் வேண்டும் என்பார் தண்டிஇதனைச் சற்று விரித்து வித்து,எண்துளிகொடிகருப்பம் எனப் பன்னிரு பாட்டியல் குறிப்பிடும்.
    பெருங்காப்பியக் கட்டமைப்பாகச் சருக்கம்இலம்பகம்பரிச்சேதம் ஆகியவை அமையும் என்பார் தண்டிஇவற்றுடன் படலம்காண்டம் ஆகியவற்றை மாறன் அலங்காரம் குறிப்பிடும்.வெண்பாவிருத்தம்அகவல்கொச்சகம் என்னும் பாவகை காப்பியம் பாடச் சிறந்தவை எனப் பன்னிரு பாட்டியல் குறிப்பிடும்.
    இவை தவிர வழிப்படுத்துதல்வழிப்பயணம்பந்தாடல்அசரீரிசாபம் முதலான நிகழ்வுகளும்;சுடுகாடுதீஎரி முதலான வருணனைக் கூறுகளும்காதைபுராணம் ஆகிய கட்டமைப்புக் கூறுகளும் பெருங்காப்பியக் கூறுகளாக அமைவதைக் காணலாம்.
 தமிழில் பெருங்காப்பியங்கள்
    தமிழில் பெருங்காப்பியங்களை ஐம்பெருங் காப்பியங்கள் என்ற வகையுள் அடங்குகின்றனர்.அவை சிலப்பதிகாரம்மணிமேகலைசீவக சிந்தாமணிவளையாபதிகுண்டலகேசி ஆகியன.இவற்றுள் சிலப்பதிகாரம் மணிமேகலை இரண்டையும் இரட்டைக் காப்பியங்கள்என்பர்.ஆனால் இந்தப் பாகுபாடுகள் எதன் அடிப்படையில் செய்யப்பட்டனஇப்பாகுபாடு சரிதானா?என்ற சிந்தனை அறிஞரிடையே இன்னும் கேள்விக் குறியாகவே உள்ளதுஇங்கே குறிக்கப்பட்டுள்ள ஐம்பெருங் காப்பியங்கள் வரிசையில் குண்டலகேசியும்வளையாபதியும் கிடைக்கப் பெறவில்லைஅவை எப்படி இருந்தனஅவை பெருங்காப்பிய மரபில் பாடப் பட்டவைதானாஎன்பது யாருக்கும் தெரியாதுநன்னூல் மயிலைநாதர் உரையில் (நூ.387) 'ஐம்பெருங் காப்பியம்என்ற பெயர் காணப்படுகிறதுபின்னர் தோன்றிய தமிழ்விடுதூது 'கற்றார் வழங்கு பஞ்ச காப்பியம்என்று குறிப்பிடுகின்றதுஇந்த இரு நூல்களிலும் எவை 'பஞ்ச காப்பியம்என்பது குறிக்கப் படவில்லைகி.பி. 19-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த கந்தப்ப தேசிகர்,
    சிந்தா மணியாம் சிலப்பதிகாரம் படைத்தான் 
    நந்தா மணிமே கலைபுனைந்தான் நந்தா 
    வளையா பதிதருவான் வாசகனுக்கு ஈந்தான் 
    திளையாத குண்டலகே சிக்கும்
என்று ஐம்பெருங்காப்பியங்களை எண்ணிச் சொல்கிறார்.
1.3.2 சிறுகாப்பிய இலக்கணம்
    சிறு காப்பியங்களுக்கான தனி இலக்கணம் மேற்சுட்டிய இலக்கண நூல்களில் இடம் பெறவில்லைபெருங்காப்பியம் தரும் நாற்பொருளில் சில குறைந்து இயல்வது சிறு காப்பியம் என்பார் தண்டிதமிழிலுள்ள ஐஞ்சிறு காப்பியங்களில் இவை அளவில் குறைந்திருப்பது தெரிய வருகிறதுபெருங்காப்பியச் சுருக்கமும் சிறுகாப்பியமாக எண்ணப் படுகின்றது.பெருங்காப்பியங்களுக்கு உள்ள உயர்ந்தபரந்துபட்டநாடு தழுவிய ஓர் உன்னதத் தன்மை சிறுகாப்பியங்களுக்கு இல்லை என்றே சொல்லலாம்இவை குறிப்பிட்ட ஒரு கருத்தை,பகுதியை மட்டுமே மையப் படுத்துகின்றன எனலாம்.
 சிறுகாப்பியங்கள்
    தமிழில் சிறுகாப்பியங்களை ஐஞ்சிறு காப்பியங்கள் என்று வகை செய்வர்இந்த வகைப்பாடும் கூடக் கருத்து வேறுபாடுகளுக்கு உரியதாக உள்ளதுயசோதர காவியம்நீலகேசி,உதயணகுமார காவியம்நாககுமார காவியம்சூளாமணி ஆகியவற்றை ஐஞ்சிறு காப்பியங்களாகத் தமிழ் இலக்கிய வரலாற்றாசிரியர்கள் குறிப்பிடுவர்.
1.4 தொகுப்புரை
    இப் பகுதியில் காப்பியம் என்ற இலக்கிய வகை மேலைநாட்டு மற்றும் இந்திய மொழிகளில் எவ்வாறு வகைப்படுத்தப் பட்டுள்ளன என்று பார்த்தோம்தமிழ்க் காப்பிய வகைகளையும்பெருங்காப்பியம் சிறுகாப்பியம் என்ற வகைப்பாடுகளையும் கண்டோம்.பெருங்காப்பியசிறுகாப்பிய இலக்கணமும் இங்கு விளக்கப் பெற்றுள்ளதுகாப்பியம் என்ற சொல் பொருள் பற்றியும் அறிந்தோம்இவ்வகையான குறிப்புகள் மூலம் காப்பியம் என்றால் என்ன என்பதை ஓரளவு புரிந்து கொள்ளலாம்.

CBSE NET- JULY 2016TENTATIVE ANSWER KEY FOR Paper 3 – TAMIL

CBSE NET Answer Key Jul 2016 for Paper 3 – TAMIL

QuestionAnswerQuestionAnswerQuestionAnswer
13261512
21273524
34282531
41294543
53303553
61312564
71324571
82333582
93344594
104351603
11**363612
122371621&3
133384634
144391641
154403653
162411662
173423674
184433681
191442693
20wrong option454702
213462714
224473723
231481732
243494741
252503753

Kindly Note : this is not official key

 BY. THAMIL THAMARAI  -TRB PG TAMIL COACHING -DHARMAPURI- 8973975233