2.7 ஆறாம் வேற்றுமை | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
1. அது என்னும் பெயருடைய வேற்றுமைச்சொல் ஆறாவதாகும். அதாவது ஆறாம் வேற்றுமைக்குரிய உருபு அது என்பதாகும். ஆறாம் வேற்றுமைப் பன்மைக்குரிய உருபு அ என்பதாகும். | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
2. இவ்வேற்றுமை 'இதனது இது'(இப்பொருளினுடையது இது) என்னும் கிழமைப் பொருள் (உடைமைப் பொருள்) தருவதாகும். | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
3. இக்கிழமைப் பொருள் தற்கிழமை, பிறிதின் கிழமை என இருவகைப்படும். தன்னோடு ஒன்றியிருக்கும் கிழமை தற்கிழமை. சாத்தனது கை. கை சாத்தனோடு ஒன்றிருப்பது. தன்னோடு ஒன்றாமல் பிறிதாக இருக்கும் கிழமை பிறிதின் கிழமை. சாத்தனது ஆடை. ஆடை, ஒன்றாத உடைமை. தற்கிழமை, 1) ஒன்றுபல குழீஇய தற்கிழமை 2) வேறுபல குழீஇய தற்கிழமை 3) ஒன்றியற் கிழமை 4) உறுப்பின் கிழமை 5) மெய் திரிந்து ஆய தற்கிழமை என ஐவகைப்படும். பிறிதின் கிழமை 1) பொருளின் கிழமை 2) நிலத்தின் கிழமை 3) காலத்தின் கிழமை என மூவகைப்படும். | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
இவற்றின் விளக்கங்களையும் எடுத்துக்காட்டுகளையும் அடுத்த நூற்பாவில் காண்போம். | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
நூற்பா கிழமைப் பொருளின் 16 விரிகளையும் அவைபோன்ற வேறு சிலவற்றையும் தொல்காப்பியர் வழிநின்று காணலாம். குழூஉக் கிழமை ஒரே வகைப்பொருள் குழுவாகச் சேர்ந்து(ஒன்றாகத் திரண்டு) உடைமைப் பொருளாக வருவது ஒன்று பல குழீஇய கிழமை. எள்ளது குப்பை : (குப்பை - குவியல்) வெவ்வேறு வகைப் பொருள்கள் குழுவாகத் திரண்டு உடைமைப் பொருளாக வருவது வேறுபல குழீஇய கிழமை. படையது குழாம் : (நால்வகைப் படைகளது கூட்டம்) இயற்கைக் கிழமை இயற்கை - ஒரு பொருளுக்கு இயல்பாகிய தன்மை. நீரது தண்மை, தீயது வெம்மை, சாத்தனது இயற்கை நிலைக் கிழமை நிலை - நிலைமை. சாத்தனது நிலைமை, சாத்தனது இல்லாமை. இயற்கைக் கிழமையும் நிலைக்கிழமையும் ஒன்றியற் கிழமை (ஒரே பொருளுக்குள் இயல்பாக ஒன்றியிருக்கும் கிழமை) ஆகும். உறுப்பின் கிழமை யானையது கொம்பு, எனது கை. செயற்கைக் கிழமை செயற்கையால் வரும் கிழமை. சாத்தனது கற்றறிவு. முதுமைக் கிழமை தந்தையது முதுமை வினைக் கிழமை வினை - செயல் சாத்தனது தொழில் மேற்கண்ட மூன்றும் (5,6,7) மெய்திரிந்து ஆய தற்கிழமை. மெய்திரிதல் - வினைமுதலின் வேறுபாடு. அறிவு, முதுமை, செயல் ஆகியவை அந்தந்த வினை முதலின் வேறுபாட்டை உள்ளடக்குவன. இதுவரை ஐவகைத் தற்கிழமையும் கண்டோம். உடைமைக் கிழமை : சாத்தனது தோட்டம். முறைமைக் கிழமை முறைமை - உறவுமுறை. கன்றினது தாய். கருவிக் கிழமை இசையது கருவி, சாத்தனது எழுதுகோல். துணைக் கிழமை சாத்தனது துணை இந்நாய். கலக் கிழமை கலம் - எழுதிய ஓலை, ஆவணம். இக்காலத்தில் 'பத்திரம்' என்று சொல்லப்படுவது. அரசனது பட்டோலை. முதற்கிழமை ஒரு செலவுக்காக வகுத்துக்கொண்ட பொருள், முதலீட்டுப் பொருள். வணிகரது முதல். தெரிந்துமொழிச் செய்தி செய்தி - செய்யுள். ஆராய்ந்த மொழியால் செய்யப்படும் செய்யுள். கபிலரது பாட்டு, கம்பரது காப்பியம். கிழமைக் கிழமை கிழமை - உரிமை. தொன்று தொட்டு உரிமையாய் வரும் உடைமை. முருகனது குறிஞ்சி நிலம். வெள்ளியது ஆட்சி (வெள்ளி - நாள், நட்சத்திரம்). வாழ்ச்சிக் கிழமை வாழும் இடம் பற்றி வருவது. யானையது காடு. இவ்விரண்டும் நிலப் பிறிதின் கிழமை. வெள்ளியது ஆட்சி என வருவது மட்டும் காலப்பிறிதின் கிழமை. 'திரிந்து வேறுபடூஉம் பிற' என நூற்பாவில் வருவது கொண்டு கீழ்க்கண்டவற்றையும் கூறலாம். எள்ளது சாந்து. எள் அரைத்த சாந்து. ஒரு பொருள் திரிந்து வேறுபடுவது. மாணவர்களே! பிற வேற்றுமைகளுக்கும் ஆறாம் வேற்றுமைக்கும் இடையே பெரும் வேறுபாடு ஒன்று உண்டு. ஆறாம் வேற்றுமை உடைமைப் பொருள் வேற்றுமை. அஃறிணைப் பொருள்களை மட்டுமே உடைமைப் பொருள்களாகக் கொள்ளமுடியும். ஆகவே ஆறாம் வேற்றுமையில் உடைமையைக் குறித்து, வருமொழியாக வரும் சொல் அஃறிணையாகவே இருக்கும். பிற வேற்றுமைகளில் வருமொழிச் சொல் இருதிணையாகவும் வரலாம். உயர்திணையில் உறவுப் பொருள் போன்றவற்றை வருமொழியில் சொல்லும்போது அங்கு அது உருபைப் பயன்படுத்தாமல் கு உருபைப் பயன்படுத்த வேண்டும் என்பதனைத் தொல்காப்பியர் வேற்றுமை மயங்கியலில் (நூ.11) குறிப்பிடுகிறார். (எ-டு) என் மகன் என்பதனை எனது மகன் என விரிக்காமல் இதற்கு விதிவிலக்காக இலக்கியங்களில் அது உருபு வருமொழி உயர்திணைக்கு வரும் சில இடங்களும் உண்டு. (எ-டு) 'அரசனது தோழன்' இக்காலப் பேச்சு வழக்கில் 'அது' திணை வேறுபாடின்றி இயல்பாக வழங்கி வருவதை அறிவீர்கள். எனது நண்பன், நண்பனது மனைவி, மனைவியது தாய். நூற்பா | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
வெள்ளி, 9 அக்டோபர், 2015
2.7 ஆறாம் வேற்றுமை
இரண்டு லட்சம் ஆசிரியர்கள் வேலைநிறுத்தப் போராட்டம் ! 50 ஆயிரம் பள்ளிகள் இயங்கவில்லை!
இரண்டு லட்சம் ஆசிரியர்கள் நேற்று வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு, வகுப்புகளை புறக்கணித்ததால், தமிழகம் முழுவதும், 50 ஆயிரம் பள்ளிகள் இயங்கவில்லை; பல தொடக்கப் பள்ளிகள் மூடப்பட்டன.
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களின் கூட்டுக் குழுவான, 'ஜாக்டோ' சார்பில், 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, நேற்று ஒரு நாள் வேலைநிறுத்தப் போராட்டம் நடந்தது.
காலை, 8:00 மணிக்கே பள்ளிக்கு வந்த ஆசிரியர்கள், தற்செயல் விடுப்புக் கடிதம் கொடுத்து விட்டு, கூட்டம் கூட்டமாக ஆர்ப்பாட்டத்துக்கு புறப்பட்டு சென்றனர்.
சென்னை மாநகராட்சி பள்ளிகள் பலவற்றில், வேன் ஏற்பாடு செய்து, ஆசிரியர்கள் ஒட்டு மொத்தமாக ஆர்ப்பாட்டத்துக்கு சென்றனர். தலைமை ஆசிரியர்கள் மட்டும், பணிகளை கவனித்தனர்; பல பள்ளிகளில் போலீஸ் பாதுகாப்பு போடப் பட்டிருந்தது.மற்ற மாவட்டங்களில், மேல்நிலைப் பள்ளிகளில் மட்டும், 50 சதவீத ஆசிரியர்கள் வந்திருந்தனர். தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி ஆசிரியர்கள் வரவில்லை; மாணவர்களும் வரவில்லை.குறைந்த எண்ணிக்கையில் வந்த மாணவர்களுக்கு, வட்டார வள ஆசிரியர் பயிற்றுனர்கள் மூலம், வருகை பதிவு குறிப்பிடப்பட்டு, மதிய உணவு வழங்கப்பட்டது.
மொத்தத்தில், தமிழகம் முழுவதும், 40 ஆயிரம் தொடக்க, நடுநிலைப் பள்ளிகள் மற்றும், 10 ஆயிரம் உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில்,
நேற்று வகுப்புகள் நடக்கவில்லை.மாநிலம் முழுவதும், இரண்டு லட்சம் ஆசிரியர்கள் பணியைப் புறக்கணித்ததாக, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்கள் மூலம், பள்ளிக் கல்வி இயக்குனரகத்துக்கு தகவல்கள் கிடைத்தன.
புறக்கணித்த தலைமை ஆசிரியர்கள் :
வேலைநிறுத்தப் போராட்டத்தில், பெரும்பாலான நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் பங்கேற்கவில்லை. அதனால், ஜாக்டோ கூட்டுக் குழுவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் கழக தலைவர் எத்திராஜுலு கூறியதாவது:திருவாரூர், கிருஷ்ணகிரி, திருவள்ளூர் உள்ளிட்ட சில மாவட்டங்களில், தலைமை ஆசிரியர்கள், 90 சதவீதம் பேர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்றனர். மற்ற இடங்களில், தங்களை அதிகாரிகளாக நினைத்துக் கொள்வதால் பங்கேற்கவில்லை.
தலைமை ஆசிரியர்களுக்கு ஊதியப் பிரச்னையோ, பதவி உயர்வு பிரச்னையோ இல்லை. மாறாக, இலவசத் திட்டங்களைக் கவனிக்க, தனி அலுவலர் இல்லாமல், கடுமையாக பாதிக்கப் படுகிறோம். ஆண்டில் மூன்று பருவங்களுக்கு, குறைந்தது, 30 முறையாவது இலவசத் திட்டங்களுக்கு கவனம் செலுத்த வேண்டியுள்ளது. அதனால், கல்விப் பணிகள் பாதிக்கப் படுகின்றன. இவ்வாறு அவர் கூறினார்.
மாவட்ட வாரியாக நிலவரம்:
சென்னை, கோவை, நெல்லை உட்பட, பல மாவட்டங்களில், பெரும்பாலான பள்ளிகள் திறந்திருந்தாலும், ஆசிரியர்கள் இல்லாததால் பாடங்கள் நடத்தப்படவில்லை.
சென்னையில், 20க்கும் மேற்பட்ட மாநகராட்சி பள்ளிகளில், ஒட்டுமொத்தமாக ஆசிரியர்கள், பணியை புறக்கணித்தனர்; உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் ஓரளவுக்கு வகுப்புகள் நடந்தன.
நாகையில்பெரும்பாலான பள்ளிகள் இயங்கவில்லை; திறந்திருந்த ஒரு சில பள்ளிகளும், மாணவர்கள் இல்லாமல் வெறிச்சோடின. திருவாரூர் மாவட்டத்தில், 5,432 ஆசிரியர்களில், 4,418 பேர் பணிக்கு வரவில்லை.திருப்பூரில், மாணவர்கள் பள்ளிக்கு வரவில்லை. பல வகுப்புகளின் மாணவர்களை, ஒரே வகுப்பில் அமர வைத்து, மதிய உணவுக்கு பின் வீட்டுக்கு அனுப்பினர்.நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில், உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்களை விட, தொடக்க, நடுநிலைப் பள்ளி ஆசிரியர்கள் அதிக எண்ணிக்கையில் போராட்டத்தில் பங்கேற்றனர்.
இந்தப் போராட்ட வெற்றி, எங்களை அடுத்த கட்டத்தை நோக்கி நகர வைத்துள்ளது. இனியும், எங்கள் கோரிக்கைக்கு, அரசு செவி சாய்க்காமல் இருக்கக் கூடாது.இளங்கோவன் ஜாக்டோ மாநிலஒருங்கிணைப்பாளர்.
புதுக்கோட்டை, திருவாரூர் மற்றும் திருச்சியைச் சுற்றியுள்ள மாவட்டங்களில், தலைமை ஆசிரியர்களும், ஆசிரியர்களும் ஒட்டுமொத்தமாக பணியைப் புறக்கணித்தனர். சாமி.சத்தியமூர்த்தி பொதுச்செயலர், உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை
ஆசிரியர் சங்கம்.
பள்ளியை மூடுவது எங்கள் நோக்கமல்ல. பேச்சில் எந்த முன்னேற்றமும் ஏற்படாததால், பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள், தங்கள் வெற்றியை காட்டி விட்டனர்; அடுத்த கட்ட போராட்டம் தீவிரமாக இருக்கும்.பேட்ரிக் ரைமண்ட்மாநில தலைவர், தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு.
தமிழகத்தில், 95 சதவீத தொடக்கப் பள்ளிகள் இயங்கவில்லை; இரண்டு லட்சத்துக்கும் அதிகமான ஆசிரியர்கள் பணிக்கு வரவில்லை. மாற்று ஏற்பாடு செய்தாலும், ஓராசிரியர், ஈராசிரியர் பள்ளிகளை நடத்த ஆட்களே இல்லை. ரெங்கராஜன்தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி.
- நமது நிருபர் -
வியாழன், 8 அக்டோபர், 2015
15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 1.5 லட்சம் அரசு ஆசிரியர்கள் வேலைநிறுத்தம்
புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்வது உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசுப் பள்ளி ஆசிரியர்கள் இன்று ஒருநாள் அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். தமிழகம் முழுவதும் சுமார் ஒன்றரை லட்சம் பேர் இதில் பங்கேற்றனர்.
கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் நவம்பர் இறுதி வாரம் முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக ஜாக்டோ எச்சரிக்கை விடுத்துள்ளது.
புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்வது, தொகுப்பூதிய காலத்தை பணிக்காலமாக கருதுவது, மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு (ஜாக்டோ) சார்பில் இன்று ஒருநாள் வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தப்பட்டது. போராட்டத்தில் பங்கேற்ற ஆசிரியர்கள் பள்ளிக்கு செல்லாமல் 'ஆப்சென்ட்' ஆனார்கள். கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை உட்பட மாவட்டத் தலைநகர்களில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இடைநிலை ஆசிரியர்கள், சிறப்பாசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள், முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்கள் என அனைத்து பிரிவு ஆசிரியர்களும் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர்.
சென்னை மாவட்டத்தில் மாநகராட்சிப் பள்ளி, அரசுப் பள்ளி ஆசிரியர்கள் சுமார் 2 ஆயிரம் பேர் வேலை நிறுத்தத்தில் பங்கேற்றனர். வள்ளுவர் கோட்டம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்டச் செயலாளர் கே.சத்தியநாதன், உடற்கல்வி ஆசிரியர்-இயக்குநர் சங்க மாவட்ட தலைவர் எஸ்.லிங்கேசன் ஆகியோர் தலைமை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தை ஜாக்டோ மாநில உயர்நிலைக்குழு உறுப்பினரும், உடற்கல்வி ஆசிரியர்-இயக்குநர் சங்க மாநிலத் தலைவருமான எஸ்.சங்கரபெருமாள் தொடங்கிவைத்தார். இதில், 500-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.
பெரம்பூர் எம்.ஹெச் சாலையில் உள்ள மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட ஒரு சில மேல்நிலைப் பள்ளிகளில் அனைத்து ஆசிரியர்களும் வேலைநிறுத்தத்தில் பங்கேற்றனர். கோட்டூர்புரம், சிந்தாதிரிப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் பள்ளிகள் வழக்கம்போல இயங்கின. சைதாப்பேட்டை ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, பெண்கள் மேல்நிலைப் பள்ளி உள்ளிட்ட சில பள்ளிகள் காலையில் இயங்கினாலும் மதியத்துக்கு பிறகு மூடப்பட்டன.
மாற்று ஏற்பாடு
ஜாக்டோ வேலைநிறுத்தப் போராட்டத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் பள்ளிகளுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. ஆசிரியர்கள் அதிக எண்ணிக்கையில் வராத பள்ளிகளில் மட்டும் சத்துணவு அமைப்பாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், ஆசிரியர் பயிற்றுனர்கள் மற்றும் பகுதிநேர ஆசிரியர்களைக் கொண்டு பாடங்கள் நடத்தப்பட்டன.
வேலைநிறுத்தப் போராட்டத்தில் தமிழகம் முழுவதும் 1.50 லட்சம் ஆசிரியர்கள் கலந்துகொண்டதாக ஜாக்டோ மாநில தொடர்பாளர் பெ.இளங்கோவன் தெரிவித்தார். அதே நேரத்தில் அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் 80 சதவீத ஆசிரியர்களும், தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் 30 சதவீதம் பேரும் பணிக்கு வந்ததாக பள்ளிக்கல்வி இயக்குநர் எஸ்.கண்ணப்பன் கூறினார்.
காலவரையற்ற போராட்டம்
தங்களின் கோரிக்கைகளை அரசு நிறைவேற்றாவிட்டால் நவம்பர் இறுதி வாரம் முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக ஜாக்டோ எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து ஜாக்டோ மாநில உயர்நிலைக்குழு உறுப்பினர் எஸ்.சங்கரபெருமாள் கூறும்போது, ''எங்களின் பெரும்பாலான கோரிக்கைகள் முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டியது தொடர்பானவை. எனவே, முதல்வர் எங்களை அழைத்துப் பேச வேண்டும். நவம்பர் 2-வது வாரத்தில் ஜாக்டோ உயர்மட்டக்குழு கூட்டம் நடைபெறுகிறது. கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் நவம்பர் இறுதி வாரம் முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவோம்'' என்றார்.
தோற்றத்தின் உள்ளே...
ஒரு முறை கிடைக்கும் தகவலை வைத்துக்கொண்டே "இது இப்படித் தான்!" என்று முடிவு கட்டுவது மனதின் முக்கியமான தன்மை. ஒரே முறை ஒரு ஓட்டலில் சாப்பாடு சரியில்லை என்றால் அந்த ஓட்டல் சரியில்லை என்று முடிவு கட்டும். முதல் முறை பார்க்கும்போது சரியாக முகம் கொடுத்துப் பேசாத உறவினரை மண்டைக் கனம் பிடிச்சவன் என்று எண்ண வைக்கும். முதல் முறையாகத் தோன்றும் அபிப்பிராயத்தை எப்படியாவது தக்க வைக்கத் துடிப்பதும் மனதின் இயல்புதான்.
நாடு, மதம், இனம், மொழி, ஊர், தொழில் இப்படி எல்லாவற்றைப் பற்றியும் கருத்து வைத்திருக்கிறோம். இந்தக் கருத்தைப் பெரும்பாலும் பத்திரமாக வளர்த்துவருகிறோம்.
தோற்றத்தின் உள்ளே..
டி.வியில் அறிவுசார்ந்த நிகழ்ச்சிகளை நடத்து பவரைப் பெரிய அறிவாளியாக நினைக்கிறோம். அவர் ஒவ்வொரு வார்த்தையையும் பின்னால் ஒருவர் சொல்ல 'டாக் பேக்கில்' உள்வாங்கி ஏற்றஇறக்கமாக பேசுகிறார் என்பதையும் தெரிந்துகொண்டால், அவ்வாறு நினைப்போமா? சினிமாவில் கதாநாயக நடிகர்களைப் பெரிய வீரர்கள் என்று நினைப்போம். அவர்கள் தங்கள் படம் வெளிவரவும் அதை ஓடவைக்கவும் எந்த அளவுக்கும் பணிந்துபோகிறார்கள் என்ற செய்திகளும் வரத்தானே செய்கின்றன.
அதற்குப் பிறகும் அவர்களை மாவீரர்கள் என கருதுவீர்களா? டாக்டர் என்றாலே அவர் எல்லா வியாதிகளுக்கும் தீர்வு தெரிந்தவர் என்று நினைக்கிறோம். அவரது மருத்துவத் துறையைத் தவிர மற்ற மருத்துவத் துறைகளில் நிபுணர் அல்ல என்று ஒரு மறுபக்கம் இருக்கிறதே. அதை நம்ப மறுக்கவும் ஆட்கள் இருக்கிறார்கள்.
ஏட்டுப்படிப்பு அதிகமாக இல்லாதவரை அறிவுஜீவியாக ஏற்றுக்கொள்ளத் தயங்குகிறோம். அதேபோல நிறைய பட்டங்கள் படித்தவர் என்பதாலே அவரை அறிவுஜீவி என்று நம்புகிறோம். ஏராளமான எழுத்தாளர்கள் பெரிய கல்வித் தகுதிகள் இல்லாதவர்கள். முனைவர் பட்டம் பெற்ற பலருக்கு பாடப்புத்தகமும், வாரப்பத்திரிகையும் தவிர மற்ற வாசிப்பு இல்லை இருந்தும் படித்தவர்கள் பற்றிய அபிப்பிராயத்தை அப்படியேதான் வைத்திருப்போம்.
கொட்டுமா, உதிருமா?
அதே போல காசுக்காக எதையும் செய்பவர்கள் வியாபாரிகள் என்று நினைக்கிறோம். விளம்பரம் இல்லாமல் சேவை புரியும் நிறைய வியாபாரிகள் இருக்கிறார்கள். மிக நாணயமாக, மக்களுக்குத் தீங்கு வரக்கூடாது என்று செயல்படுகிற பல வியாபாரிகள் இருக்கிறார்கள். சேவை செய்பவர்களில் பலர் மிகுந்த வியாபார நோக்குடனும் மக்கள் விரோதமாகச் செயல்படுபவர்களும் இருக்கிறார்கள்.
இப்படி நம் கற்பிதங்களுக்கு நேர்மாறாகப் பலர் பல திறமைகளுடனும் ஆளுமைகளுடனும் இருக்கிறார்கள்.
முரடானது காவல்துறை. அதன் அதிகாரியாக இருந்த திலகவதி ஐ.பி.எஸ் மென்மையாக எழுதுகிறார். அதேபோல இறையன்பு ஐ.ஏ.எஸ். ஜென் துறவி போலத் தத்துவம் பேசுகிறார். அரசியல்வாதியான வைகோ வரலாற்றுப் பேராசிரியர்களுக்குச் சவால் விடும் வகையில் பேசுகிறார். என் நண்பர் டாக்டர் விஜயராகவன் அற்புதமாகத் தமிழில் செய்யுள் இயற்றுவார். அதை விட அபாரமான நகைச்சுவைத் திறனும் அவருக்கு உண்டு. புற்று நோய்க்குச் சிகிச்சை அளித்தாலும் நம்பிக்கையும் நகைச்சுவையும் குறையாமல் செயல்படுவார்.
"முடி கொட்டுமா டாக்டர்?" என்பார்கள். " தேள்தான் கொட்டும். முடி உதிரும்!" என்று இலக்கணமும் நகைச்சுவையும் பேசி வைத்தியம் பார்ப்பார். அதே போல, சிவ ஆலயங்களைச் சுத்தம் செய்யும் உழவாரப் பணியில் ஈடுபடும் ஐ.டி. பணியாளர்களை எனக்குத் தெரியும். தங்கள் சொற்பமான சம்பளத்தின் பெரும்பங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் பணிகளுக்குச் செலவு செய்யும் தம்பதியை எனக்குத் தெரியும்.
அதே போல, கார்ப்பரேட் நிறுவனங்கள் போலச் செயல்படும் கட்சிகளும் மடங்களும் மதச் சார்பு நிறுவனங்கள் உண்டு. அரசியல் தலைவரை மிஞ்சுகிற கவர்ச்சி மிக்க சாமியார்கள் இருக்கிறார்கள். துறவிகளாக வாழும் அரசியல்வாதிகளும் இருக்கிறார்கள்.
வேண்டாம் பிம்பங்கள்
ஆனாலும் நம் மனம் சில அபிப்பிராயங்களை அப்படியே தக்க வைக்கத் துடிக்கிறது. "இவர்கள் இப்படித்தான்" எனும் அபிப்பிராயமே நமது சிந்தனையைக் கட்டிவைக்கும் ஒரு சங்கிலி. அதை உடைத்துவிட்டுச் சுதந்திரமாகப் பார்க்கும் பொழுது உலகம் இன்னமும் நிஜமாகவும் தெளிவாகவும் புரியும்.
எனக்குத் தமிழில் எழுத வராது. சில "ஆவி எழுத்தாளர்களை" பணித்துத் தான் கட்டுரைகளைச் சகட்டு மேனிக்கு எழுதித்தள்ளுகிறேன் என்று ஒரு பேராசிரியர் பேசிவந்தார். ஆவிக்குத் தரும் அங்கீகாரத்தை இந்தப் பாவிக்குத் தர அவர் மனம் மறுக்கப் பல காரணங்கள். " நீங்கள் சொல்வதை நிருபர்கள் எழுதுவார்கள் அல்லவா?" என்று பல முறை என் தொழில் முறை நண்பர்கள் கேட்பார்கள். "எழுத ஏது நேரம்?" என்பார்கள். "பேச்சு முழுதும் ஆங்கிலத்தில், எழுத்து மட்டும் எப்படி தமிழில்?" என்று லாஜிக்கலாக மடக்குவார்கள் சிலர்.
இவர்களின் பிரச்சினை நானல்ல. அவர்கள் என்னைப் பற்றி உருவாக்கி வைத்திருக்கும் பிம்பங்கள் தான்!
நான் கோபப்படுகையில் என் நண்பர்கள், "நீங்களே கோபப்படலாமா?" என்று என் உளவியல் பின்னணியை இணைத்துக் கருத்து சொல்வார்கள். உளவியல் படித்தவர்கள் எல்லாம் மனதை வென்ற மகான்கள் அல்ல என்று சொல்வேன். படைப்புகளை வைத்துப் படைப்பாளி பற்றிய அபிப்பிராயம் வளர்த்தல் ஆபத்தானவை.
இப்படித்தான் நடிகர்களிடம் நாட்டைக் கொடுக்கிறோம். அதிகம் தெரியாத சாமியார் காலில் குடும்பமாகச் சென்று காலில் விழுகிறோம். நன்கு பேசுகிறார் என்றால் உடனே அறிவுஜீவியாக உயர்த்திவிடுகிறோம். கூட்டத்தை வைத்துப் பிரபல்யத்தைக் கணக்கிடுகிறோம்.
இவை மனதின் செயல்பாடுகள் என்பதை மட்டும் புரிந்துகொள்வோம். வண்ணம் பூசாத கண்ணாடி கொண்டு வாழ்க்கையைப் பார்ப்போம். அதுதான் அழகு. அது தான் ஆரோக்கியம்!
ஆதார் : மக்கள் தெரிந்திருக்க வேண்டிய 10 தகவல்கள்
ஆதார் அட்டையை கட்டாயமாக்க கோரி தொடரப்பட்ட வழக்கை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றி உச்ச நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது. மேலும், ஆதார் அட்டையை கட்டாயப்படுத்தக் கூடாது என்று விதிக்கப்பட்ட இடைக்கால உத்தரவை மாற்றவும் உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.
இந்த வழக்கு தொடர்பாக மக்கள் தெரிந்திருக்க வேண்டிய 10 தகவல்கள் இதோ:
* மக்கள் அனைவருக்கும் பயோமெட்ரிக் அடிப்படையில் கை ரேகை மற்றும் கண் கருவிழியை முக்கிய ஆதாரமாகக் கொண்டு புகைப்படத்துடன் கூடிய ஆதார் அட்டையை மத்திய அரசு வழங்கி வருகிறது. வங்கி கணக்கு தொடங்குவது, காஸ் இணைப்பு, ஓய்வூதியம், திருமணப் பதிவு உட்பட அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகளுக்கு ஆதார் அட்டை கட்டாயமாக்கப்பட்டது. ஆதார் அட்டையை கட்டாயமாக்குவதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் 2012-ல் கர்நாடக உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி புட்டாசுவாமி பொதுநல வழக்கு தொடுத்தார்.
* இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், ஆதார் அட்டையை கட்டாயமாக்கக்கூடாது என்று உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று மத்திய அரசு மனு தாக்கல் செய்தது.
* வழக்கு முடிவடையும் வரை ஆதார் அட்டை வழங்க இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்று மனுதாரர்கள் தரப்பில் வைக்கப்பட்ட கோரிக்கையை உச்ச நீதிமன்றம் நிராகரித்தது. மேலும் ஒரு இடைக்கால உத்தரவைப் பிறப்பித்து, ரேஷன் பொருட்கள், காஸ் இணைப்புகளுக்கு மட்டும் ஆதார் அட்டையை வைத்துக் கொள்ளலாம் என்றும் மற்ற திட்டங்களுக்காக ஆதார் அட்டையை கட்டாயமாக்கக் கூடாது என்றும் தெரிவித்திருந்தது.
* குறிப்பாக, குற்ற வழக்குகளில் நீதிமன்றங்கள் கேட்டுக்கொள்ளும்போது மட்டுமே சம்பந்தப்பட்ட நபரின் ஆதார் அட்டை விவரங்களை பகிர்ந்துகொள்ள வேண்டும் என்றும் மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் தனது இடைக்கால உத்தரவில் அறிவுறுத்தியது.
* இதனிடையே, அரசின் சமூக நலத் திட்டங்கள் மக்களுக்கு சென்றடைவதில் உச்ச நீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவு பெரும் தடையாக உள்ளது. எனவே ஆதார் அட்டை திட்டத்துக்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று செபி, டிராய், ரிசர்வ் வங்கி, மத்திய அரசு ஆகியவை கோரிக்கை வைத்தன.
* இந்த மனுக்கள் தொடர்பான விசாரணை நேற்று முன்தினம் நீதிபதிகள் செல்லமேஸ்வர், பாப்தே, சி.நாகப்பன் ஆகியோரைக் கொண்ட உச்ச நீதிமன்ற அமர்வில் மீண்டும் நடைபெற்றது. ஆதார் அட்டை பெறுவதற்காக தனது சொந்த, தனியுரிமை அல்லது தனிப்பட்ட தகவல்களை விட்டுக் கொடுக்க நாட்டின் ஏழை மக்கள் தயாராக உள்ளனர், இது அவர்களுக்கு உணவையும் வருவாயையும் வழங்கும். எனவே ஆதார் அட்டை திட்டத்தை தடுக்க வேண்டாம் என்று மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அப்போது நீதிபதி செல்லமேஸ்வர், "ஏழை, எளியவர்கள் என்பதற்காக அவர்கள் தனியுரிமை கொள்கையை வைத்துக் கொள்ளக் கூடாதா" என்று கேள்வி எழுப்பினார்.
* நீதிபதியின் கேள்விக்கு பதிலளித்த அட்டார்னி ஜெனரல் முகுல் ரோத்தகி, "ஆதார் அட்டையை அனைவரும் விருப்பப்பட்டுதான் எடுத்துக் கொள்கின்றனர், ஆதார் அட்டை பயன்படுத்துவது ஒருவருக்கு பிரச்சினையாக இருந்தால் பயன்படுத்தாமல் இருந்துவிட்டுப் போகட்டும். தினக்கூலியை மட்டுமே தங்களின் வாழ்வாதாரமாக கொண்டுள்ளவர்கள், உணவுக்கு கஷ்டப்படுபவர்களுக்கு, ஆதார் அட்டை சரியான வழிமுறை. ஆதார் அட்டை பயன்படுத்துவதால் அரசின் நலத் திட்டங்களில் முறை கேடான வழிகளை கையாண்டு பயன்பெறுபவர்கள் தடுக்கப்பட் டுள்ளனர். இதனால் அரசுக்கு ஓர் ஆண்டுக்கு சுமார் ரூ.14 ஆயிரம் கோடி மிச்சமாகியுள்ளது" என்றார்.
* அட்டார்னி ஜெனரல் முகுல் ரோத்தகிக்கு ஆதரவாக மூத்த வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால் கூறும்போது, "நாட்டின் பெரும்பான்மையான மக்களுக்கு சேர வேண்டிய பயன்கள் சென்றடைவதை உச்ச நீதிமன்றம் ஏன் தடுக்க வேண்டும்? ஒரு ஏழை, 'எனது தனியுரிமையை எடுத்துக் கொள்ளுங்கள், பணம் கொடுங்கள்' என்று கேட்கும் போது, உச்ச நீதிமன்றமோ பணம் வேண்டாம் தனியுரிமையை வைத்துக் கொள் என்று கூறுகிறது" என்றார்.
* அதேவேளையில், ஆதாரை எதிர்த்து மனு தாக்கல் செய்த பல்வேறு தரப்பினர், என்.ஜி.ஓ.க்கள் சார்பாக ஆஜரான வழக்கறிஞர் ஷியாம் திவான் கூறும்போது, "பயோமெட்ரிக்தான் மனிதரின் தனி அடையாளம். இதனை வைத்துக்கொண்டு என்ன செய்வது என்பது பற்றி அரசுக்கு எவ்வித புரிதலும் இல்லை" என்றார்.
* இத்தகைய வாதங்களின் தொடர்ச்சியாக, ஆதார் அட்டைக்காக ஒருவர் தானே முன்வந்து தனது அந்தரங்க உரிமைகளை, தகவல்களை அளிக்க முடியுமா என்பதை அரசியல் சாசன அமர்வுதான் தீர்மானிக்க வேண்டும் என்று கூறிய நீதிபதிகள், இது தொடர்பான மத்திய அரசின் மனு உட்பட் அனைத்து மனுக்கள் மீதான விசாரணையையும் அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றி உத்தரவிட்டனர். மேலும், ஆதார் அட்டையை கட்டாயப்படுத்தக் கூடாது என்று விதிக்கப்பட்ட இடைக்கால உத்தரவை மாற்றவும் நீதிபதிகள் மறுத்துவிட்டனர்.
ஞாயிறு, 4 அக்டோபர், 2015
“பெரிசா என்ன செஞ்சுட்டீங்க...?”
புகை கசிந்தாலே அலறும் அலாரங்கள் பீதியூட்டுகின்றன. தீயணைப்புத் துறை இருக்கும் இந்தக் காலத்திலும் நெருப்பு என்றால் ஓடுகிறோம். நெருப்பைத் தேவைப்படும்போது உருவாக்கலாம் என்று லட்சம் வருஷங்களுக்கு முன் கண்டுபிடித்த ஆதி மனிதனே சாதனையாளன் என்கிறாள் எனது தோழி.
அரசன்குளத்தில் பிறந்த விஜயாவை ப்ளஸ் 2 முடித்த உடன் தறி ஓட்ட அனுப்பியது குடும்பம். அழுது புலம்பி மூன்று வருடங்களுக்குப் பிறகு கல்லூரியில் சேர்ந்து சில வருடங்களுக்குப் பிறகு- அரசுத் தேர்வில் வெற்றி பெற்று பெரியவர் ஒருவருக்கு இனிப்பு கொடுத்தாள் விஜயா. "அப்ப எல்லாம் எக்ஸாம் ரொம்பக் கஷ்டம்... இப்ப மாதிரி ஈஸி இல்ல "என்றார் அவர்.
பெற்றோர்?
"சாதனையாளர்கள் சிலரைச் சொல்லுங்கள்" என்றால் பலரும் "பில் கேட்ஸ், டோனி, சானியா மிர்ஸா, மண்டேலா..." இந்த ரீதியில்தான் பதில் சொல்வார்கள்.
இது அறிவார்ந்த பதில்தான். ஆனால், பெருந்தன்மையான பதில் அல்ல நிச்சயமாக, நியாயமான பதிலும் அல்ல.
ஏனென்றால், இன்றைய நெருக்கடியான உலகில், கழுத்தை நெறிக்கும் போட்டிச் சந்தையில் தன் வயது மற்றும் திறமையை மீறி ஓடி, நீங்கள் கேட்டதில் பாதியையாவது வாங்கிக் கொடுத்துவிட்டு, மீதிக்கு சமாளிப்புக் கண்ணீரைத் தன்னுள்ளேயே தேக்கும் வித்தையறிந்த உங்கள் பெற்றோர் சாதனையாளர் இல்லையா?
பாகுபலிதான் அதிகம்
யாரையெல்லாமோ சந்தித்து, நினைத்துக்கூடப் பார்க்காத பணிவுகளை வெளிப்படுத்தி, வெயில், மழையில் நனைந்து பொருளீட்டி, சந்தோஷத் துக்கான டிக்கெட் நீட்டப்படும். நிறைய பேர் "ஏன் இவ்வளவு நேரம்?" என்று அதைப் பிடுங்கிக்கொண்டு ஓடுவார்கள். கால் கடுக்க வரிசையில் நின்ற அவர்களின் பாதங்களுக்கு ஒரு ஒத்தடப் பார்வையை எத்தனை பேர் அளித்துப் போவார்கள்?
படகில் வைத்துக் குழந்தைகளை நதியில் கைவிடும் பெற்றோர்களும் இருக்கலாம். ஆனால் தான் நீரில் மூழ்கி, தன் குழந்தையைத் தலைக்கு மேல் தாங்கி வாழ்க்கையைக் கடக்கும் 'பாகுபலி' படக் காட்சி மாதிரிதான் அநேகப் பெற்றோர்கள்.
வீட்டிலிருந்து பெற்றோர்கள் இல்லாத இடங்களில், தாத்தா, பாட்டி என யாரோ ஒருவர் உங்களுக்காகத் தங்கள் கனவுகளை, சின்னத் தேவைகளைத் தியாகம் செய்து தான் உங்களைக் கரைசேர்க்கிறார்கள்.
அவர்களைப் பார்த்து, "பெரிசா என்ன செஞ்சுட்டீங்க...?" என்று நீட்டி முழக்குகிற நாக்கு எங்கோ ஒரு ஆட்டத்தில் சிக்ஸர் அடித்த விளையாட்டு வீரரைச் சாதனையாளர் என்பதில் என்ன அர்த்தம் இருக்கிறது?
ஆதிக் குரங்கிலிருந்து சாதனை யாளரைப் புகழ்வதில் தவறில்லை. ஆனால் அந்தப் பட்டியலை முதலில் வீட்டிலிருந்துதான் தொடங்க வேண்டும்.
சுற்றிலும் எத்தனை பேர்!
அந்த நேர்மையான மனதுதான் செருப்புக்கூட இல்லாமல் மூன்று கி.மீ. நடந்து, நடுவில் விட்டுப் போன கல்வியைத் தொடர்ந்து, ஒரு குட்டி நகரத்துக்கு வந்து, அதைவிடப் பெரிய நகரத்தில் உள்ளவர்களிடம் போட்டி போட்டு, வெற்றி பெற்று இனிப்பை நீட்டும் விஜயாவின் தறி ஓட்டிய கையின் ஈரத்தைப் புரிந்து கொள்ளும்.
அந்தத் திறந்த மனதுதான் எத்தனையோ '...பவன்கள் ' இருந்தாலும், ஒரு சந்தில் வயசான அம்மாளின் தட்டுக்கடைக்கு வழிகாட்டும். பெரிய உணவகங்கள், ஆயிரத்தெட்டு நடைமுறைப் பிரச்சினைகளை மீறி அவள் தயாரிக்கும் உணவுக்கு வெள்ளை வேட்டிக்காரர்களையும், டை அணிந்த எக்ஸிக்யூட்டிவ்களையும் தட்டை ஏந்தி நிற்க வைத்த சாதனையைப் புரிந்து கொள்ள வைக்கும்.
ரத்த அழுத்தம், கொழுப்பு என்று 30 வயசுக்காரர்களே ரிப்போர்ட்களுடன் அலையும்போது, முறையான வாழ்க்கை காரணமாக 60-வயதிலும் " சளி, காய்ச்சல்கூட பெருசா வந்ததில்லீங்க..." என்பவர்கள், ஒற்றை ஆளாய் 50 பேருக்கு அறுசுவை உணவை நம் வீடுகளில் தயாரிக்கும் மனுஷிகள், முறைகேடாய்ப் பணம் சம்பாதிக்க வாய்ப்பிருந்தும் நல்மதிப்பீடு கள் காரணமாக அதைத் தவிர்ப்பவர்கள் எனச் சுற்றிலும் எத்தனை பேர் !
பட்டியல் எடுங்கள்
நாம் "அவ கதையும் ஏதோ லக்ல ஓடுது", "பெருசா லெக்சர் அடிப்பான்..." என்போம்!
அருகில் இருப்பதாலேயே அமுதசுரபிகளின் அருமை புரிவதில்லை. உழைத்துக் களைத்த கோலத்தில், கிழிந்த விசிட்டிங் கார்டை நீட்டுவதாலேயே கடவுள்கள் அடையாளம் காணப்படுவதில்லை!
வீடு, தெரு, உலகம் என்றுதான் சாதனையாளர் பட்டியல் விரிய முடியுமே தவிர, எடுத்த எடுப்பிலேயே பிரபஞ்ச வீதியில் ஆள் தேடுவதில் என்ன அர்த்தம் இருக்கிறது...?
இன்னொன்றும் இருக்கிறது. உங்களின் சாதனையாளர்களும் இப்படித்தான்; "ஐசக், ஆப்பிளைச் சாப்பிடுவியா, அத விட்டுட்டு புவியீர்ப்பு விசை அது, இதுன்னு உளறிக்கிட்டு இருக்கற..."என்ற விமர்சனத்தையே முதலில் சந்தித்திருப்பார்கள்.
எனவே, சுற்றியிருக்கிற மனிதர்களின் எளிய சாதனைகளைப் பாராட்டக் கிடைக்கும் எந்த வாய்ப்பையும் நழுவவிட வேண்டாம். இதனால் உங்கள் மனம் விசாலம் அடையும். அடுத்தவரின் வலியை உணர்கிறபோது வாழ்க்கை பற்றிய பார்வை மாறும். இவர்களின் சின்னத் திறமைகளை மதிக்கும்போது உங்களின் சின்னத் திறமையையும் நீங்கள் அடையாளம் காண்பீர்கள்.
இப்போது சாதனையாளர் பட்டியலைத் தயாரியுங்கள் !
சுவைக்கு அடிமையாகாதீர்கள்! - எச்சரிக்கிறார் நல்லுணவு செயல்பாட்டாளர் வாணி ஹரி
"என் பெயர் வாணி ஹரி. ஆனால், அமெரிக்காவில் நான் படித்த பள்ளியில் இந்தப் பெயரை யாருக்கும் சரியாக உச்சரிக்கத் தெரியாது. அதனால் என் பெயரை நான் வெறுத்தேன். சில காலம் கழித்துத்தான் தெரிந்தது. 'வாணி' என்ற என் பெயருக்கு 'குரல்' என்பது அர்த்தம் என்று. இன்று பல கோடி மக்களின் சார்பாக நான் குரல் எழுப்பிக் கொண்டிருப்பதைப் பார்க்கும்போது, இது எனக்கு மிகவும் பொருத்தமான பெயராகவே தெரிகிறது!" - புன்னகை தவழத் தன்னை அறிமுகப்படுத்திக் கொள்கிறார் வாணி ஹரி. பார்ப்பதற்குத் திரைப்படத்தில் வாய்ப்பு கேட்டு 'ஆடிஷனு'க்கு வந்த பெண் போன்ற தோற்றம்.
ஆனால், அவருடைய புலனாய்வு எழுத்துகளால் அமெரிக்காவில் உள்ள பல பன்னாட்டு உணவு நிறுவனங்களை ஆட்டம் காண வைத்திருக்கிறார். கடந்த ஆண்டு வெளியான 'தி ஃபுட் பேப் வே' எனும் இவருடைய புத்தகம் அமெரிக்காவில் பெஸ்ட் செல்லர். பாதுகாப்பான உணவுக்கான கூட்டமைப்பு, ஆர்கானிக் ஃபார்மர்ஸ் மார்கெட் அமைப்புகளைச் சேர்ந்த அனந்து ஏற்பாட்டில் சென்னைவாசிகளைச் சந்திக்கச் சமீபத்தில் வந்திருந்தார் வாணி ஹரி. அவருடனான உரையாடலில் இருந்து...
சில மாதங்களுக்கு முன்பு 'ஆன்ட்டி பயாட்டிக்' செலுத்தப்பட்ட கோழிகள் குறித்து, ஓர் ஆய்வு வெளிவந்தது. அது குறித்து?
இன்று பல பன்னாட்டு உணவு நிறுவனங்கள் 'ஆன்ட்டிபயாட்டிக்' செலுத்தப்பட்ட இறைச்சியைத்தான் மக்களுக்குப் பரிமாறுகின்றன. அதனால் பல நேரங்களில் நல்ல பாக்டீரியா கொல்லப்பட்டு, ஆன்ட்டிபயாட்டிக்கை எதிர்க்கும் கிருமிகள் தோன்ற ஆரம்பித்துவிடுகின்றன. மாடு, வெண்பன்றி, ஆடு, கோழி உள்ளிட்ட இறைச்சி உயிரினங்கள் இப்படித்தான் வளர்க்கப்படுகின்றன.
அவற்றிடமிருந்து ஆன்ட்டிபயாட்டிக் எதிர்ப்புக் கிருமிகள் மனிதர்களுக்கு வரும். இதில் இறைச்சி உண்ணாமல் காய்கறிகளை மட்டுமே சாப்பிடுபவராக இருந்தாலும்கூட, பாதிப்பு ஏற்பட வாய்ப்புகள் உண்டு.
அமெரிக்காவில் ஓர் ஆண்டில் தேவையில்லாத ஆன்ட்டிபயாட்டிக் மருந்துகள் மூலம் சுமார் 23 ஆயிரம் பேர் இறந்துபோகிறார்கள். ஆன்ட்டிபயாட்டிக் செலுத்தப்பட்ட இறைச்சியை உண்டு, அதனால் ஏற்பட்ட பாதிப்புகளால் இறந்தவர்களைக் கணக்கிட்டால், இந்த எண்ணிக்கை நிச்சயம் எகிறும்.
இந்தியாவில் 'மேகி' நூடுல்ஸ் பிரச்சினை பல விவாதங்களைக் கிளப்பியது. ஆனால், அமெரிக்காவில் 'மோனோசோடியம் குளூட்டமேட்' (எம்.எஸ்.ஜி) பயன்பாட்டில் உள்ளதே?
அமெரிக்காவில் எம்.எஸ்.ஜி., பயன்பாடு பரவலாக இருப்பது உண்மைதான். ஆனால், அது மக்களின் பார்வைக்குத் தெரியாமல் 'ஈஸ்ட் எக்ஸ்ட்ராக்ட்', 'சாய் புரோட்டீன்', 'கால்சியம் குளுட்டமேட்' என வேறு பல பெயர்களில் பயன்படுத்தப்படுகிறது. அதனுடைய முக்கியப் பயன்பாடு, நாக்கின் சுவை மொட்டுகளைத் தூண்டிவிடுவதுதான். அதற்கு எம்.எஸ்.ஜி. எதற்கு? இயற்கையாகக் கிடைக்கும் உணவு மூலம் சுவையும் சத்தும் கிடைக்கும் என்பதை நாம் மறந்துவிட்டதன் விளைவே எம்.எஸ்.ஜி.யின் செயற்கை சுவை தூண்டல். இதனால் உடல் பருமன் உள்ளிட்ட பிரச்சினைகள் ஏற்படுவது நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்?
மான்சான்டோவுடன் தொடர்பு கொண்டிருந்த பேராசிரியர் ஒருவரை நீங்கள் அம்பலப் படுத்தினீர்கள். இந்தியாவில் இன்று பல வேளாண் பல்கலைக்கழகங்கள் அந்த நிறுவனத் துடன் ஒப்பந்தங்கள் போட்டிருப்பது பற்றி?
அந்தப் பேராசிரியர் கெவின் ஃபோல்டா. மான்சான்டோவுக்கு எதிராக நாங்கள் போராடியபோது, அவர் தானாகவே எங்களுக்கு எதிராகப் பேசினார். 'நீங்கள் மான்சான்டோவிடம் நிதியுதவி பெற்றிருக்கிறீர்கள்' என்று நாங்கள் குற்றஞ் சாட்டியபோது, முதலில் அதை மறுத்தார்.
பின்னர் 'தகவல் அறிவதற்கான சுதந்திரச் சட்டம்' மூலம் அந்த நிறுவனத்திடம் இருந்து, தனது ஆய்வுகளுக்கு அவர் நிதி பெற்றிருப்பது தெரியவந்தது. இதுபோன்று உணவு வணிகத்தைக் கைப்பற்ற நினைக்கும் நிறுவனங்களிடமிருந்து நிதி பெற்று ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்தால், அதன் முடிவுகள் எவ்வளவு தூரம் உண்மைத்தன்மையுடன் இருக்கும்? இது போன்ற ஆராய்ச்சிகள் முழுமையாகத் தடை செய்யப்படும்வரை நாம் போராட வேண்டும்.
எல்லா நிறுவனங்களையும் கேள்வி கேட்கும் உங்களுக்கு, எந்த ஆபத்தும் இல்லையா?
என்னை இழிவுபடுத்த மான்சான்டோ கங்கணம் கட்டி கொண்டிருக்கிறது. நான் ஏற்பாடு செய்யும் விழிப்புணர்வுக் கூட்டங்களுக்குக் கெவின் ஃபோல்டா போன்ற நபர்களை அனுப்பி 'வாணி கூறுவது சுத்தப் பொய். அவற்றில் துளியும் அறிவியல் உண்மை இல்லை' என்று கூட்டத்தின் நடுவே கத்துவதற்கு, அந்த நிறுவனம் சில ஆட்களை நியமித்துள்ளது.
நான் எங்குச் செல்கிறேன், யாருடன் பேசுகிறேன், எனது அடுத்த திட்டம் என்ன என்பதை எல்லாம் அந்த நிறுவனம் தெரிந்து வைத்திருக்கிறது. மான்சான்டோவால் நான் கண்காணிக்கப்படுகிறேன் என்பது உண்மைதான்!
அந்த நிறுவனத்தின் தயாரிப்பான 'ரவுண்டப்' களைக்கொல்லி புற்றுநோயை உண்டாக்கும் தன்மை கொண்டது என்று சமீபத்தில் தகவல் வெளியானது. அதன் விற்பனையைத் தடுக்க அமெரிக்க அரசு என்ன செய்திருக்கிறது?
ஐரோப்பாவில் இந்தக் களைக்கொல்லியின் விற்பனைக்குத் தடை விதிக்கப்பட்டிருப்பதை அறிந்தேன். ஆனால், அமெரிக்கா வில் அதற்குத் தடை விதிக்கப்படுமா என்பது சந்தேகம்தான். ஏனென்றால், அந்த நிறுவனத்துக்கு அரசியல் பலம் அப்படி. எந்த அளவுக்கு என்றால்... அடுத்த அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடவுள்ள ஹிலாரி கிளின்டனுக்குத் தேர்தல் நிதி அளிக்கும் அளவுக்கு!
பள்ளிகளில் மதிய உணவு கொடுக்கும் திட்டத்தின் கீழ் 'சப்வே' நிறுவனத்தின் உணவுப் பொருட்களை வழங்கலாம் என்று மிஷெல் ஒபாமா கூறியது குறித்து என்ன நினைக்கிறீர்கள்?
'சப்வே' உணவுப் பொருட்களில் 'அசோடிகார்பனமைடு' எனும் வேதி பொருள் கலக்கப்படுகிறது. இதே வேதிப்பொருள்தான் யோகா விரிப்புகள் செய்வதற்கும் பயன்படுத்தப்படுகிறது. அப்படியென்றால், அதன் உணவுப் பொருட்கள் எவ்வளவு விஷத்தன்மை கொண்டவை என்பதை நாமே முடிவு செய்துகொள்ளலாம்.
அதேபோல, பீட்ஸாவை மதிய உண வுக்கு வழங்கலாம் என்று அமெரிக்க நாடாளுமன்றம் கூறியிருந்ததே...
இதெல்லாம் கார்ப்பரேட் சூழ்ச்சி. வாய்ப்பு இருக்கும் இடங்களில் நிறுவனங்களே நேரடியாக விளம்பரப்படுத்திக் கொள்ளும். வாய்ப்பு இல்லாத இடங்களில் அரசியல் வாதிகள் அவற்றுக்காக 'லாபி' செய்வார்கள்.
சில ஆண்டுகளுக்கு முன்பு 'டிரபுள் ப்ரூவிங் டீ' என்ற தலைப்பில் தேயிலையில் பூச்சிக்கொல்லிகள் குறித்த ஆய்வைக் கிரீன்பீஸ் அமைப்பு வெளியிட்டது. 'இந்தியத் தேயிலை வணிகத்தை அந்த அமைப்பு குலைக்கப் பார்க்கிறது' என்று அந்த அமைப்புக்கு எதிராகக் குற்றஞ்சாட்டப்பட்டது பற்றி...
தேயிலைத் தூள் மட்டுமல்ல... தேயிலைத் தூளைச் சுமந்துவரும் பைகளும் (டீ பேக்) கூட ஆபத்தானவைதான்! அந்தப் பைகளைக் கொதிக்கும் நீரில் போடும்போது, 'பாலிலாக்டிக் ஆசிட்' மற்றும் 'பாலிஎதிலீன் டிரெப்தலேட்' ஆகிய வேதி பொருட்கள் தேநீரோடு கலந்துவிடுகின்றன. இவை புற்றுநோயைத் தூண்டக்கூடியவை.
அது மட்டுமல்லாமல், புற்றுநோயைத் தூண்டக்கூடிய பூச்சிக்கொல்லி தேயிலையின் மீது தெளிக்கப்பட்டிருந்தால், தேநீரோடு அந்த ரசாயனத்தையும் சேர்த்தே குடிக்கிறோம் என்று அர்த்தம். ரசாயன உரம், பூச்சிக்கொல்லி பயன்படுத்தப்பட்ட தேயிலையை எத்தனை முறை சுத்தப்படுத்தினாலும், அந்த ரசாயனப் பொருட்கள் போகாது, எச்சமாகத் தேங்கியிருக்கும்.
இயற்கை வேளாண்மையில் விளைவிக்கப்பட்ட உணவுப் பொருட்களை நாடும் பழக்கம் சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. அதேநேரம் அவற்றின் விலை அதிகமாக இருப்பதால், வசதியானவர்கள் மட்டுமே வாங்க முடிகிறது. இதற்கு என்ன தீர்வு?
நம் வசதிக்கு என்ன முடிகிறதோ, அந்த இயற்கை உணவையாவது வாங்கிச் சாப்பிடலாம். அது ஒரே ஒரு வாழைப்பழமாகக்கூட இருக்கலாம்.
நம் வீடுகளில் கொஞ்சம் இடம் இருந்தால், நாமே ஒரு சின்ன தோட்டத்தை உருவாக்கி இயற்கை முறையில் காய்கறிகள், பழங்களை விளைவிப்பது செலவு குறைவான, நம்பகமான வழி.
மரபணு மாற்ற உணவுப் பொருட்களை 'லேபிள்' செய்ய வேண்டும் என்று வாதாடி வருகிறீர்கள். அது எவ்வளவு தூரம் சாத்தியம்?
கடையில் வாங்கும் 'பேக்கேஜ்டு' உணவுப் பொருட்களில் என்னென்ன உட்பொருட்கள் சேர்க்கப்பட்டிருக்கின்றன என்பதை அறிய, அட்டையில் அச்சிடப்பட்டிருக்கும் தகவல்களைப் படித்துப் புரிந்துகொள்ள ஆரம்பிக்கும் விழிப்புணர்வு எவ்வளவு அதிகரிக்கிறதோ, அவ்வளவு தூரம் மரபணு மாற்ற உணவுப் பொருட்களுக்கு 'லேபிளிங்' செய்ய வேண்டும் என்ற எங்களுடைய கோரிக்கையும் நிச்சயம் மக்களிடையே விழிப்புணர்வைப் பரவலாக்கும்.
மருத்துவமனை போதிமரம்
"என் பெற்றோர் பஞ்சாபிகள். நான் பிறந்தது, வளர்ந்தது எல்லாமே அமெரிக்காவில்தான். சின்ன வயதில் எல்லாப் பெண்களையும் போலவே வீட்டில் அம்மா செய்துதரும் உணவை மறுத்தேன். எப்போதும் சப்வே, கிராஃப்ட், சிபோட்ல் எனப் பன்னாட்டு உணவு நிறுவனங்களின் உணவு வகைகளை விரும்பி சாப்பிட்டுவந்தேன்.
அதனால் நான் குண்டானேன். முகத்தில் பருக்கள் தோன்ற ஆரம்பித்தன. கேலிக்கு ஆளானேன். இறுதியில் அப்பென்டிசைட்டிஸ் அறுவைசிகிச்சை செய்யப்படும் மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டேன்.
மருத்துவமனையில் படுக்கையில் கிடந்தபோது, என்னுடைய இந்த நிலைக்கு என்ன காரணம் என யோசித்தேன். யோசித்து... யோசித்து... 'முறையற்ற உணவுப் பழக்கமும், நொறுக்கு தீனிகளும்தான் காரணம்' என்பதை உணர்ந்துகொண்டேன். அதன்பிறகு என் உணவுப் பழக்கத்தை மாற்றிக்கொள்ளத் தீர்மானித்து, நிறைய தேட ஆரம்பித்தேன். அதுவரை நான் சாப்பிட்டு வந்த உணவு வகைகளில், என்ன வகையான உட்பொருட்கள் உள்ளன என்பதைப் பற்றி யதேச்சையாக ஆய்வு செய்தபோது பெரும் அதிர்ச்சியாக இருந்தது.
முதல் விழிப்பு
நான் அதுவரை உட்கொண்ட பன்னாட்டு உணவு நிறுவனங்களின் உணவு வகைகளில் பலதரப்பட்ட ரசாயனப் பொருட்கள், மரபணு மாற்றப்பட்ட பொருட்கள், பெட்ரோலியப் பொருட்கள் உள்ளிட்டவை கலந்திருக்கின்றன என்பதை, என்னால் ஜீரணித்துக்கொள்ளவே முடியவில்லை.
அப்போது நானும் கார்ப்பரேட் நிறுவனம் ஒன்றில்தான் பணியாற்றிக் கொண்டிருந்தேன். ஒரு மாலை நேரத்தில் அலுவலகத்துக்கு அருகேயிருந்த 'யோஃபோரியா' என்ற உணவு நிறுவனம் நடத்தும் உணவகத்துக்குச் சென்று, சுவையூட்டப்பட்ட தயிர் ஒன்றை ஆர்டர் செய்து சாப்பிட்டேன்.
என் வாழ்வில் அப்படிப்பட்ட சுவையான தயிரை, அதுவரை நான் சாப்பிட்டதில்லை. அப்படி அதில் என்ன கலந்திருக்கிறது என்று, அங்கு வேலை பார்க்கும் என் தோழி ஒருவரிடம் கேட்டபோது மிகப்பெரிய அதிர்ச்சியாக இருந்தது. அவர் உணவகத்தின் உள்ளே அழைத்துச் சென்று காட்டினார். தயிரின் சுவையைக் கூட்டுவதற்காக அங்கே பலவிதமான பவுடர்கள் கலக்கப்படுவதைப் பார்த்தேன்.
முதல் வெற்றி
பிறகு வீட்டுக்கு வந்ததும், இதைப் பற்றி என் ஃபேஸ்புக் பக்கத்தில் எழுதினேன். அது பலரைச் சென்றடைந்தது. அதன் காரணமாக, அந்த நிறுவனத்தின் முதன்மை செயல் அலுவலர் என்னை அழைத்து, 'இனித் தயிரில் இப்படிப் பவுடர் கலக்க மாட்டோம்' என்று உறுதியளித்தார். பின்னர், அந்நிறுவனத்தில் அது நடைமுறைப்படுத்தப்பட்டது.
இந்தச் சிறு வெற்றி, நல்உணவுக்கான முழுநேரப் போராளியாக என்னை மாற்றியது. அந்தச் சம்பவத்துக்குப் பிறகு எனது வேலையை உதறினேன். 'ஃபுட் பேப்' எனும் வலைத்தளத்தை ஆரம்பித்தேன். தொடர்ந்து பன்னாட்டு உணவு நிறுவனங்களின் திரைமறைவு வேலைகளை ஆய்வு செய்து அம்பலப்படுத்தினேன்.!" - இதுதான் வாணி ஹரியின் முன்கதைச் சுருக்கம்.
சனி, 3 அக்டோபர், 2015
பொன்விழா காணும் தருமபுரி
தருமபுரி மாவட்டம் 02-10-1965-ம் ஆண்டு உதயமானது. இன்றுடன் தருமபுரி மாவட்டம் உதயமாகி 50 ஆண்டுகள் நிறைவடைகிறது. இந்த தருணத்தை சிறப்பாகக் கொண்டாட பல்வேறு அமைப்புகள் ஏற்பாடுகளை செய்துள்ளது. இந்நேரத்தில், கடந்த 50 ஆண்டு களில் இந்த மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள வளர்ச்சிகள், எதிர்பார்ப் பில் உள்ள திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை பார்க்கலாம்.
மாவட்டத்தின் பெருமைகள்
பொன்விழா காணும் தருமபுரி மாவட்டத்தின் பெருமை தரும் அம்ச மாக சுற்றுலா தலமான ஒகேனக்கல், ஆன்மிக தலமான தீர்த்தமலை ஆகிய வற்றை குறிப்பிடலாம். மேலும், அரசு மருத்துவக் கல்லூரி, ரயில் நிலையம், கேந்திரிய வித்யாலயா பள்ளி, சமீபத்தில் கொண்டுவரப்பட்ட அரசு பொறியியல் கல்லூரி உள்ளிட்டவை கூடுதல் சிறப்புகள்.
விவசாய வளம், அணைகள்
மாவட்ட மக்களுக்கு வாழ்வா தாரம் அளிப்பதுவிவசாயம் மற்றும் அதைச் சார்ந்த தொழில்கள் தான். மாவட்டம் முழுக்க சுமார் 1.5 லட்சம் ஹெக்டேர் நிலப் பரப்பு விவசாய பூமியாக உள்ளது. கரும்பு, நெல், தென்னை, சிறு தானியங்கள், பருப்பு வகைகள், மாம்பழம், புளி, மரவள்ளி, நிலக் கடலை மற்றும் தோட்டக்கலை பயிர்கள் என பல ரக பயிர்களுக்கும் உகந்த மண் வளம் உள்ளது. ஆனால், இவ்வளவு நிலத்தையும் வளப்படுத்த நீராதாரம் தான் சவாலாக உள்ளது. மழை பொய்த்துவிடும் காலங்களில் கிராமப்புற மக்கள் சிரமத்தில் தவிக்கும் நிலை ஏற்பட்டு விடுகிறது.
தருமபுரி மாவட்டத்தில் வாணி யாறு, தொப்பையாறு, சின்னாறு, கேசர்குளி, நாகாவதி, தும்பலஅள்ளி, ஈச்சம்பாடி, வரட்டாறு என 7 அணைகள் உள்ளன. இருந்தும் கூட ஓரிரு அணைகளைத் தவிர மற்றவை தொடர்ந்து பல ஆண்டுகளாக வறண்டே கிடக்கின்றன. இதனால் விவசாயத்தை முழு உத்திர வாதத்துடன் மேற்கொள்ள முடியாத நிலை உள்ளது. இது விவசாயிகளை யும், ஏழைத் தொழிலாளர்களையும் அவ்வப்போது வெளி மாநிலங்கள், மாவட்டங்களுக்கு பிழைப்பு தேட விரட்டி விடுகிறது.
தொழில் வாய்ப்புகள்
சுமார் 15 லட்சம் மக்கள் வசிக்கும் தருமபுரியில் விவசாயத்தை தவிர நிரந்தர தொழிலுக்கு பெரிய அளவிலான வாய்ப்புகள் இல்லை. தருமபுரியில் இருந்து (2004-ல்) பிரிந்து சென்ற கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் இருப்பது போன்று தொழில் வாய்ப்பு தரும் மண்டலத்தை உருவாக்கினால் மட்டுமே வேலை தேடி இடம்பெயரும் அவலத்துக்கு முடிவுகட்ட முடியும். தருமபுரியில் சிப்காட் மையம் அமைப்பது ஏட்டளவிலேயே இருந்து வருகிறது.
தலைநகர கட்டமைப்பு
மாவட்டம் பிரிந்து 50 ஆண்டுகள் ஆகிவிட்டது போலவே, தருமபுரி நகராட்சிக்கும் 50 ஆண்டுகள் ஆகிறது. பொன்விழா காணும் நகராட்சி தன் மக்களுக்கு சாலைகள், வடிகால் கட்டமைப்பு, பசுமை நகரம் என எதிலுமே திருப்தி தரும் வசதியை அளிக்கவில்லை. தருமபுரி நகரம் மேடும், பள்ளமும் கலந்த நிலவியல் அமைப்பு கொண்டது. இந்த நிலவியல் அமைப்பு நீர் வடிகாலுக்கு சிறந்தது. இருந்தும் கூட பல இடங்களில் கழிவு நீர் தேங்கியபடி நோய் பரப்பும் பணியை செய்து வருகிறது. சாலை கட்டமைப்பு விஷயத்தில் அலட்சியம் நிலவுகிறது. போதாக்குறைக்கு, பாதாள சாக்கடை திட்டத்தால் நகர சாலைகள் முழுக்க ஆங்காங்கே மேடு பள்ளமாக உள்ளது.
கல்வி வளர்ச்சி
தருமபுரி மாவட்டத்தில் 60 முதல் 70 சதவீதம் என்ற கல்வியறிவு வீதம் தான் நிலவுகிறது. மாவட்டத் தில் சமீபத்திய அரசு கலை, பொறியியல் கல்லூரிகளின் வரத்து எதிர்காலத்தில் கல்வியறிவு வீதத்தை அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மாவட்டத் தின் சிசுக்கொலை, கருக்கொலை, சாதிய மோதல்கள் ஆகிய அவலங்களுக்கு கல்வியறிவு பற்றாக்குறையும் ஒரு முக்கிய காரணம். மலை கிராமங்கள் அதிகம் உள்ள நிலையில் அந்த பகுதி யிலும் கல்வியறிவு வீதம் அதிகரிக்க, அரூரை தலைமையிடமாகக் கொண்டு கூடுதல் கல்வி மாவட்டம் உருவாக்கவேண்டும் என்பது கல்வியாளர்களின் கருத்து.
பெண் சிசுக்கொலை
தமிழகத்தில் பெண் சிசுக்கொலை யின் முதல் 5 முன்னோடி மாவட்டங்கள் என்ற வரிசையில் தொடர்ந்து தருமபுரி இருந்து வருகிறது. இங்கு அரசு தொட்டில் குழந்தை மையம் அமைக்கப்பட்ட பிறகு ஓரளவு இது குறைந்திருப் பினும் முற்றிலும் தடுக்கப்பட வில்லை. இதற்கிடையில் சிசுக் கொலையின் வடிவம் மருத்துவ வளர்ச்சியின் துணையுடன் கருக் கொலையாக ஆங்காங்கே அரங் கேறுவது வேதனையின் மறு வடிவம். தீவிர கண்காணிப்பு, விழிப் புணர்வு பணி, தனிநபர் வருமானத்தை அதிகரிக்கத் தேவையான திட்டங்கள் ஆகியவையே இதை தடுக்கும் வழிகள்.
ஒகேனக்கல் குடிநீர் திட்டம்
தருமபுரி மாவட்ட மக்களின் ஆரோக்கியத்துடன் தொடர்புடைய, நீண்ட கால அடிப்படை பிரச்சினையாக இருந்து வந்தது புளூரோசிஸ் பாதிப்பு. மனித உடலின் பலத்தையும், இயக்கத்தையும் முடக்கும் இந்த பிரச்சினைக்கு தீர்வு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்குவதே என அரசுக்கு தெரியும். இருப்பினும், 2007-ம் ஆண்டில் தான் ஜப்பான் நாட்டிடம் நிதியுதவி பெற்று ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டப் பணிகள் தொடங்கப்பட்டது. பின்னர் 2012-ம் ஆண்டு இந்த குடிநீர் திட்டம் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது. இருந் தபோதும் இந்த திட்டம் இதுவரை மாவட்டத்தின் 60 சதவிகிதம் மக்களுக்கு மட்டுமே சென்று சேர்ந்திருப்பது கவனிக்கப்பட வேண்டிய ஒன்று.
600 முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள் நிரப்புவதற்கான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும்.
கடந்த 2013-14, 2014-15-ஆம் கல்வியாண்டுகளில் காலியான 1,807 முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடங்களை நிரப்புவதற்காக, 2014- ஆம் ஆண்டு நவம்பரில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதற்கான போட்டித் தேர்வு இந்த ஆண்டு ஜனவரி 10-ஆம் தேதி நடத்தப்பட்டு, முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள் பணி நியமனம் செய்யப்பட்டனர்.
இந்த ஆண்டுக்கான காலிப் பணியிடங்கள், நியமனம் தொடர்பாக சட்டப் பேரவையில் அறிவிப்பு வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அறிவிப்பு வெளியாகவில்லை.
இந்த நிலையில், முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடங்களில் இந்த ஆண்டு 500 முதல் 600 காலியிடங்கள் உள்ளதாக கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.பட்டதாரி ஆசிரியர்களுக்கு முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு வழங்க வேண்டியுள்ளது. அதன்பிறகு, இதுதொடர்பான அறிவிப்பு வெளியிடப்படும் என்றும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
பின்னர் முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிடங்கள் தொடர்பான அரசாணை வெளியிடப்பட்டதும், இதற்கான நடவடிக்கைகளை ஆசிரியர் தேர்வு வாரியம் தொடங்கும்.
பெரும்பாலும், கடந்த ஆண்டு முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் போட்டித் தேர்வு நடைபெற்ற அதேகாலத்திலேயே இந்த ஆண்டும் போட்டித் தேர்வு நடைபெற வாய்ப்புள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
Source:DINAMANI
FLASH NEWS :முதுகலை ஆசிரியர் காலிப்பணியிடங்கள் நிரப்ப அரசின் கொள்கை முடிவின் அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் - பள்ளிக்கல்வி இயக்குனர்
தமிழக பள்ளிக்கல்வித்துறையின் கீழ் இயங்கும் அரசு மேல்நிலைப்பள்ளிகளில் தற்போது முதுகலை ஆசிரியர்பணியிடங்கள் காலியாக உள்ளன எனத்தெரியவருகின்றது. அவை நிரப்பப்பட்டால் மாணவர்கள் பயன் பெறுவர்.
2015-16 ஆம் கால்வியாண்டு கூடுதலாக மேனிலை வகுப்புகளில் சேர்க்கை நடைபெற்றுள்ளதால் அதற்கேற்ப பள்ளிகளுக்கு கூடுதல் முதுகலை ஆசிரியர் பணியிடங்களை உருவாக்கிட வேண்டுகிறேன்.
வேலைவாய்ப்புக்காக காத்திருக்கும் முதுகலை ஆசிரியர் பட்டம் பெற்றவர்களும் பயனடையும் வகையில் போட்டித் தேர்வு மூலம் 2015-16 ஆம் கால்வியாண்டு காலிப்பணியிட அடிப்படையில் நிரப்புவதற்கு ஆசிரியர் தேர்வு வாரியம் உரிய நடவடிக்கை மேற்கொள்ள பணிந்து வேண்டப்படுகின்றது.
அதற்கான நடவடிக்கைகள் எப்போது தொடங்கும் எனவும் எவ்வளவு பணியிடங்கள் 2015-16 ஆம் கால்வியாண்டு நிரப்பப்பட நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளன எனவும் தெரிவிக்க பணிந்து வேண்டப்படுகின்றது எனும் கோரிக்கைக்கு கிழ்கண்டவாறு பள்ளிக்கல்வி இயக்குனர் பதிலளித்துள்ளார்
பள்ளிக்கல்வி இயக்குனரின் பதில்:
2015-16 ம் ஆண்டு முதுகலை ஆசிரியர் காலிப்பணியிடங்கள் நிரப்ப வருங்காலங்களில் அரசின் கொள்கை முடிவின் அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்பதை மனுதாரருக்கு தெரிவிக்கலாகிறது - ப.க.இ. ந.க.எண்.069121/டபிள்யு2/2015 நாள் 29.09.2015
IMPORTANT NEWS :முதுகலை ஆசிரியர் காலிப்பணியிடங்கள் நிரப்ப கோரிக்கை :பள்ளிக்கல்வி பள்ளிக்கல்வி இயக்குனரின் பதில்
2015-16 ஆம் கால்வியாண்டு கூடுதலாக மேனிலை வகுப்புகளில் சேர்க்கை நடைபெற்றுள்ளதால் அதற்கேற்ப பள்ளிகளுக்கு கூடுதல் முதுகலை ஆசிரியர் பணியிடங்களை உருவாக்கிட வேண்டுகிறேன்.
வேலைவாய்ப்புக்காக காத்திருக்கும் முதுகலை ஆசிரியர் பட்டம் பெற்றவர்களும் பயனடையும் வகையில் போட்டித் தேர்வு மூலம் 2015-16 ஆம் கால்வியாண்டு காலிப்பணியிட அடிப்படையில் நிரப்புவதற்கு ஆசிரியர் தேர்வு வாரியம் உரிய நடவடிக்கை மேற்கொள்ள பணிந்து வேண்டப்படுகின்றது.
அதற்கான நடவடிக்கைகள் எப்போது தொடங்கும் எனவும் எவ்வளவு பணியிடங்கள் 2015-16 ஆம் கால்வியாண்டு நிரப்பப்பட நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளன எனவும் தெரிவிக்க பணிந்து வேண்டப்படுகின்றது எனும் கோரிக்கைக்கு கிழ்கண்டவாறு பள்ளிக்கல்வி இயக்குனர் பதிலளித்துள்ளார்
பள்ளிக்கல்வி இயக்குனரின் பதில்:
2015-16 ம் ஆண்டு முதுகலை ஆசிரியர் காலிப்பணியிடங்கள் நிரப்ப வருங்காலங்களில் அரசின் கொள்கை முடிவின் அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்பதை மனுதாரருக்கு தெரிவிக்கலாகிறது - ப.க.இ. ந.க.எண்.069121/டபிள்யு2/2015 நாள் 29.09.2015
இந்திய தொழில்நுட்பக் கழக (ஐஐடி) நுழைவுத் தேர்வை தமிழில் நடத்த வேண்டும்!-கல்வியாளர்கள் வேண்டுகோள்
இந்திய தொழில்நுட்பக் கழக (ஐஐடி) நுழைவுத் தேர்வை தமிழில் நடத்த வேண்டும் என்று கல்வியாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
'எது வளர்ச்சி' என்ற தலைப்பில் சென்னையில் இன்று கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் கல்வியாளர்கள் பிரின்ஸ் கஜேந்திர பாபு, பிரபா கல்விமணி, கிறிஸ்துதாஸ் காந்தி, வசந்திதேவி ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த கருத்தரங்கில் கல்வியாளர் பிரபா கல்விமணி பேசியதாவது:
பள்ளிகளில் 11-ம் வகுப்பு பாடத்தை நடத்தாமல் 12-ம் வகுப்பு பாடம் மட்டுமே நடத்தப்படுகிறது. இதனால் ஐஐடி போன்ற போட்டித் தேர்வுகளில் தமிழக மாணவர்களால் வெற்றி பெற முடிவதில்லை. கடந்த ஆண்டில் ஒருங்கிணைந்த ஆந்திராவிலிருந்து 2700 பேர் ஐஐடி நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்றனர். ஆனால், தமிழ்நாட்டிலிருந்து 450 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர். அவர்களில் 419 பேர் சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் படித்தவர்கள்.
ஐஐடியில் இந்தி வழிக்கல்வி இல்லாதபோதும் இந்தியில் நுழைவுத் தேர்வு எழுதலாம் என்று மத்திய அரசு கூறியுள்ளது. அது போலவே தமிழிலும் கேள்வித் தாள்கள் இருந்தால், தமிழக மாணவர்களுக்கு அதிக அளவில் தேர்ச்சி பெற வாய்ப்பு கிடைக்கும். கிராமப்புற ஏழை எளிய அரசுப் பள்ளி மாணவர்களை பாதுகாக்க கிராமப்புற மாணவர்களுக்கான இட ஒதுக்கீடு வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்நிகழ்வில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் வசந்தி தேவி பேசும்போது, "பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் பாடத்திட்டம் என்னவாக இருக்க வேண்டும் என்று கார்ப்பரேட் முதலாளிகள்தான் தீர்மானிக்கின்றனர். 18 ஆண்டுகள் படித்து முடித்துவிட்டு வரும் மாணவர்கள் வேலைக்கு தகுதியானவர்கள் இல்லை என்று நிறுவனங்கள் கூறுகின்றன. நிறுவனங்களுக்கு ஏற்றாற்போல, புகழ்பெற்ற பல்கலைக்கழகங்கள் கூட தங்கள் பாடத்திட்டத்தை மாற்றிக்கொள்கின்றன" என்றார்.
பொதுப் பள்ளிக்கான மாநில மேடையின் ஒருங்கிணைப்பாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபு கூறும்போது, "தமிழ்நாட்டில் 30 ஆண்டுகளாக ஆங்கில வழிக்கல்வியும் தனியார் கல்வியும் மாணவர்கள் எதையும் எதிர்த்து கேள்வி கேட்காமல் இருக்க பழக்கி வைத்திருக்கின்றன. மத்திய அரசு முன்மொழிந்திருக்கும் புதிய கல்விக் கொள்கை தங்கு தடையில்லாமல் வணிகமயத்தையும் வகுப்புவாதத்தையும் எடுத்துச் செல்லவே பயன்படும். டிசம்பர் மாதம் நடக்கவிருக்கும் உலக வர்த்தக 10-வது மாநாட்டில் கல்வியை வணிகமயமாக்குவதற்கு சட்டப்படியான ஒப்புதல் கிடைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்கிறது" என்றார்.
வியாழன், 1 அக்டோபர், 2015
National Eligibility Test for JRF (NET) December 2015
Last date of online payment : 01-11-2015
Last date for fee payment : 02-11-2015
Date of Examination: 27-12-2015