செவ்வாய், 27 ஆகஸ்ட், 2013

TNTET 2013 TRB RELEASED ANSWER KEY

Teachers Recruitment Board  College Road, Chennai-600006

TAMIL NADU TEACHERS ELIGIBILITY TEST - 2013
TENTATIVE KEY
         
           

Dated: 27-08-2013

Chairman

TNPSC GROUP IV TENATIVE OFFICIAL KEY RELEASED

TNPSC GROUP IV TENATIVE OFFICIAL KEY RELEASED

Tentative Answer Keys

Please cick to download on the subjects
 Sl.No.
Subject Name
 (Date of Examination:28.08.2013 FN)

POSTS INCLUDED IN GROUP-IV SERVICES
1
       2
        3
Note: Right Answer has been tick marked in the respective choices for each question. Representations if any shall be sent so as to reach the Commission's Office within 7 days. Representations received after 2nd September 2013 will receive no attention. 

திங்கள், 26 ஆகஸ்ட், 2013

TNPSC GROUP 4. TENTATIVE OFFICIAL ANSWER KEY RELEASED


TNPSC  TODAY RELEASED ITS OFFICIAL TENTATIVE ANSWER KEY FOR GROUP IV EXAM HELD ON  25.08.2013
Subject Name
 (Date of Examination:28.08.2013 FN)

POSTS INCLUDED IN GROUP-IV SERVICES

Right Answer has been tick marked in the respective choices for each question. Representations if any shall be sent so as to reach the Commission's Office within 7 days. Representations received after 2nd September 2013 will receive no attention


TNPSC GROUP IV TENATIVE OFFICIAL KEY RELEASED

Tentative Answer Keys

Please cick to download on the subjects
 Sl.No.
Subject Name
 (Date of Examination:28.08.2013 FN)

POSTS INCLUDED IN GROUP-IV SERVICES
1
       2
        3
Note: Right Answer has been tick marked in the respective choices for each question. Representations if any shall be sent so as to reach the Commission's Office within 7 days. Representations received after 2nd September 2013 will receive no attention. 

அரசு பள்ளிகளில் சேர மாணவர்கள் ஆர்வம்- உயர்கல்வித்துறை அமைச்சர்

                                                                                                                                                                                                            காரிமங்கலத்தை. அடுத்த.  பொம்மஹள்ளி. அரசு உயர்நிலைப்பள்ளி        மேல்நிலைப்பள்ளியாக        தரம் உயர்த்தப்பட்டதை அடுத்து,   தமிழக    முதல்வர் ஜெயலலிதாவுக்கு நன்றி தெரிவிக்கும் விழா பள்ளி வளாகத்தில் நடந்தது. கலெக்டர் விவேகானந்தன் தலைமை வகித்தார். எம்.எல்.ஏ., அன்பழகன், மாவட்ட பஞ்சாயத்து தலைவர் அன்பழகன், யூனியன் சேர்மன் தமிழ்செல்விகுமார், பஞ்சாயத்து தலைவர் இந்திராகாந்தி செல்வம், கூட்டுறவு சர்க்கரை ஆலை தலைவர் ரங்கநாதன், மாவட்ட பஞ்சாயத்து துணைத் தலைவர் நாகராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பி.டி.ஏ., தலைவர் மாதாசெட்டி வரவேற்றார். தரம் உயர்த்தப்பட்ட  மேல்நிலைப்பள்ளியை துவக்கி வைத்து, உயர்கல்வித்துறை அமைச்சர் பழனியப்பன் பேசியது: 

தமிழக முதல்வர் ஜெயலலிதா பள்ளி மற்றும் கல்லூரி கல்வியில் அதிக நாட்டம் கொண்டுள்ளார். இதன் காரணமாக, மாநிலம் முழுவதும் ஏராளமான புதிய பள்ளி, கல்லூரிகள் துவக்கப்பட்டு வருகிறது. மாணவர்களின் நலனில், அதிக அக்கரை கொண்ட முதல்வர், பல பள்ளிகளை தரம் உயர்த்தி ஆணையிட்டுள்ளார். கிராமப் புறத்தில் உள்ள பல அரசு துவக்கப்பள்ளிகள்  நடுநிலைப்பள்ளிகளாகவும், நடுநிலைப்பள்ளிகள் உயர்நிலைப்பள்ளிகளாகவும்,உயர்நிலைப்பள்ளிகள் மேல்நிலைப்பள்ளிகளாகவும் தரம் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால், கிராமப்புற மாணவர்களுக்கு, அவர்கள் வசிக்கும் இடத்திற்கு அருகே எளிதாக கல்வி கற்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு தனியார் பள்ளிகள் போல் உயர்தரமான கல்வி கற்பிக்கப்படுவதால், அரசு பள்ளிகளில் சேர அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்தியாவில், எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில், தமிழகத்தில் உள்ள அரசு பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா பாடபுத்தங்கள், லேப்டாப், ஸ்கூல் பேக், சீருடை, காலணி, எழுது பொருட்கள் உள்ளிட்டவைகள் வழங்கப்படுகிறது. இதனால், மாணவர்கள் அதிக ஆர்வத்துடன் அரசு பள்ளிகளில் சேர்ந்து கல்வி பெற்று வருவதுடன், தனியார்பள்ளிகளுக்கு நிகராக மாவட்ட, மாநில அளவில் மதிப்பெண்களை பெற்று வருகின்றனர். இவ்வாறு அவர் பேசினார்.
அரசு தேர்வு மற்றும் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்று சாதனை படைத்த மாணவர்களுக்கு  பரிசு மற்றும்சான்றிதழ்களை அமைச்சர் பழனியப்பன் வழங்கினார்.
சி.இ.ஓ.,மகேஸ்வரி, சி.இ.ஓ.,(எஸ்.எஸ்.ஏ.,) ஆறுமுகம், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்

Source : dinamalar

TNPSC GROUP IV ANOUNCEMENT BY CHAIRMAN

தமிழகம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் குரூப் 4 எழுத்துத் தேர்வில் 12 லட்சம் பேர்பங்கேற்றனர். இந்தத் தேர்வுக்கான விடைகள் (கீ ஆன்சர்) ஓரிரு நாள்களில் வெளியிடப்படும்என்று தேர்வாணையத் தலைவர் நவநீதகிருஷ்ணன் தெரிவித்தார். தமிழகத்தில் இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர்உள்ளிட்ட 5 ஆயிரத்து 566 காலியிடங்களை நிரப்புவதற்கானதேர்வு அறிவிக்கையை தமிழ் அரசுப் பணியாளர் தேர்வாணையம் கடந்த ஜூன் 14-ஆம் தேதி வெளியிட்டது. மொத்தம் 17 லட்சம் பேர் தேர்வுக்கு விண்ணப்பித்திருந்தனர். இதில் 3 லட்சம்பேரின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன. தேர்வு எழுத 14 லட்சம் பேர்இறுதியாகத் தகுதி பெற்றனர். இதற்கான தேர்வு மாநிலம் முழுவதும்244மையங்களில்ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி முதல் பிற்பகல் 1மணி வரை நடைபெற்றது. தேர்வர்கள் தேர்வு மையங்களை எளிதாக அடையாளம் காணும் வகையில் நுழைவுச் சீட்டில் தேர்வுக்கூட முகவரியுடன் அதன்தொலைபேசி எண் மற்றும் தேர்வுக்கூடத்தின் அருகில் அமைந்துள்ள பிரபலமான இடத்தின் பெயரும் குறிப்பிடப்பட்டிருந்தன. தேர்வாணையம் மேற்கொண்ட சிறப்பு ஏற்பாட்டால் எவ்வித குழப்பமும்இன்றி தேர்வு மையத்தை எளிதாக அடைய முடிந்ததாக தேர்வர்கள்தெரிவித்தனர். 70 ஆயிரம் கண்காணிப்பாளர்கள்: மாநிலம் முழுவதும் 4 ஆயிரத்து 755 முதன்மைக் கண்காணிப்பாளர்களும், சுமார் 70 ஆயிரத்து 230 கண்காணிப்பாளர்களும் தேர்வுப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். 
இதுகுறித்து தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத் தலைவர் நவநீத கிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறியது:
தேர்வுக்குத் தகுதியான 14 லட்சம்பேரில் 12 லட்சத்து 21 ஆயிரத்து 167 பேர் தேர்வை எழுதினர். 3 சதவீதம் அதிகம்: கடந்த ஆண்டு 10 ஆயிரத்து 266பணியிடங்களுக்கு நடைபெற்ற தேர்வில் 10 லட்சம் பேர் பங்கேற்றனர். தற்போது நடைபெற்று முடிந்த தேர்வில் 5 ஆயிரத்து 566பணியிடங்களுக்கு 12 லட்சம் பேர் பங்கேற்று உள்ளனர். இது கடந்த
ஆண்டைவிட 3 சதவீதம் அதிகமாகும். விடைத்தாள் மதிப்பீடு: தேர்வுக்கான விடைகள் (கீ ஆன்சர்) ஓரிரு நாள்களில்தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய இணையதளத்தில்
வெளியிடப்படும். தேர்வு முடிவுகள் விரைவில் வெளியிடப்படும். விடைத்தாள் மதிப்பீட்டின்போது எவ்வித முறைகேடுகளும் நடைபெறாமல்இருக்க விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் முழுவதும் விடியோவில்பதிவு செய்யப்படவுள்ளன என்றார் அவர்.

ஞாயிறு, 25 ஆகஸ்ட், 2013

அரசு நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும்பட்டதாரி ஆசிரியர்களுக்கு, இம்மாதம் சம்பளம் கிடைப்பது, கேள்விக்குறி!

அரசு நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும்பட்டதாரி ஆசிரியர்களுக்கு, இம்மாதம் சம்பளம் கிடைப்பது, கேள்விக்குறியாகி உள்ளது. 
நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு, எஸ்.எஸ்.ஏ., (அனைவருக்கும் கல்வி திட்டம்) நிதியில் இருந்து,சம்பளம் வழங்கப்படுகிறது. எஸ்.எஸ்.ஏ., திட்டம்இருக்கும் வரை, அதன் நிதியில் இருந்து, சம்பளம்வழங்கப்படும். எனவே, அதுவரை, பட்டதாரி ஆசிரியர்களின் சம்பள கணக்கு, தற்காலிகநிலையில் இருக்கும். திட்டம் முடிந்தபின்,பொது சம்பள கணக்கிற்கு, ஆசிரியர்கள் மாற்றப்படுவர்.இந்நிலையில், எஸ்.எஸ்.ஏ., நிதியில் இருந்து, சம்பளம வழங்குவதற்கு வசதியாக, பள்ளி கல்வித் துறை சார்பில்,அரசாணை பிறப்பிக்கப்படும். ஏற்கனவே வெளியிட்ட அரசாணை, 2011 உடன் முடிந்துவிட்டதாககூறப்படுகிறது. அரசாணை இல்லாமல்,ஒன்றரை ஆண்டுகளாக, ஆசிரியர்கள் சம்பளம்பெற்று வந்தனர்.இந்நிலையில்,அரசாணைஇல்லாததை காரணம் காட்டி,"நடப்பு மாதத்திற்கு, சம்பளம் வழங்க முடியாது' என, ஈரோடு மாவட்ட கருவூல அலுவலர் தெரிவித்துள்ளார்.இதை, சார் கருவூல அதிகாரிகளும், தெரிவித்துள்ளனர்.இதனால், அம்மாவட்டத்தில் பணிபுரியும், 2,000பட்டதாரி ஆசிரியர்களுக்கு, இந்த மாதம் சம்பளம்கிடைப்பது, கேள்விக்குறியாகி உள்ளது. இதேபோல்,பல்வேறு மாவட்டங்களில், "சம்பளம் வழங்க முடியாது' என, கருவூல அதிகாரிகள், கை விரித்துள்ளதாக,தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின்பொதுச்செயலர், ரமண்ட் பேட்ரிக் தெரிவித்தார்.பேட்ரிக், மேலும் கூறுகையில், ""இந்த பிரச்னையை,தொடக்க கல்வித் துறை இயக்குனரின்கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளோம். ஓரிரு நாளில், பிரச்னையை தீர்ப்பதாக, இயக்குனர்உறுதி அளித்துள்ளார்,'' என, தெரிவித்தார்.
Source dinamalar

கோவை மாநகராட்சி பள்ளி ஆங்கிலப் பாடஆசிரியர்களுக்கு, "இங்கிலீஷ் ஹெல்பர்' டிஜிட்டல்பாடத்திட்டம் குறித்து பயிற்சி


கோவை மாநகராட்சி பள்ளியில், "அமெரிக்கன் இந்தியா பவுண்டேஷன்'சார்பில், பல்வேறு கம்ப்யூட்டர் பயிற்சி அளிக்கப்படுகிறது. மாநகராட்சி பள்ளி மாணவர்களின் ஆங்கில
அறிவையும், பேச்சு திறனையும் மேம்படுத்த "அமெரிக்கன் இந்தியா பவுண்டேஷன்' சார்பில், "இங்கிலீஷ் ஹெல்பர்'என்ற "சாப்ட்வேர்' புதிதாக நிறுவப்பட்டுள்ளது.ஒப்பணக்கார வீதி (பெண்கள்), ஆர்.எஸ்.புரம், ரத்தினபுரி,ராமகிருஷ்ணாபுரம், பீளமேடு, ஒக்கிலியர் காலனி மாநகராட்சி மேல்நிலைப்பள்ளிகளிலும், செல்வபுரம்(பெண்கள்), கே.கே.புதூர், ராமலிங்கம்காலனி, கோவில்மேடு, புலியகுளம், வரதராஜபுரம், அனுப்பர்பாளையம் ஆகிய உயர்நிலைப்பள்ளிகளில் "இங்கிலீஷ் ஹெல்பர்' வகுப்பு துவங்கப்படுகிறது. இப்பள்ளில் 6-8ம்
வகுப்பு வரையுள்ள 2424 மாணவர்களுக்கு பயிற்சி அளிப்பதற்கு முன்,ஆங்கிலப் பாட ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது."அமெரிக்கன் இந்தியா பவுண்டேஷன்'
நிர்வாகி அலெக்ஸாண்டர் வரவேற்றார். டில்லி "இங்கிலீஷ் ஹெல்பர்' நிறுவன மேலாளர்
கல்பனா பேசியதாவது:மாநில அரசின் பாடத்திட்டம் டிஜிட்டல் முறையில் பதிவு செய்யப்பட்டுள்ளது. "இங்கிலீஷ்ஹெல்பர்' முறையில், "ரீடு டூ மி' என்ற பெயரிலுள்ள சாப்ட்வேரில் 6 - 8 ம் வகுப்பு வரையிலும் மூன்று பருவத்துக்கான பாடங்கள் அடங்கியுள்ளன. எந்த பாடத்தை வேண்டுமானாலும்தேர்வு செய்து கொள்ளலாம். ஒரு வார்த்தையை தேர்வு செய்தால், அதற்கான இணைச்சொல், எதிர்ச்சொல்,பொருள், உச்சரிப்பு போன்றவற்றை தெரிந்து கொள்ளலாம். ஒரு வாக்கியத்தை தேர்வு செய்தால், அதற்கான அர்த்தத்தை பெறலாம். பாடத்திட்டத்திற்கான புகைப்படங்கள், 12 வகையான அகராதிகள் உள்ளன.
அனைத்து விளக்கங்களும் ஆங்கிலத்தில் மட்டுமே உள்ளது.மாணவர்கள் பயிற்சியின் போது, "ஹெட் போன்'பொருத்திக்கொள்ள வேண்டும்; அவர்களின் ஆங்கில வார்த்தை உச்சரிப்புகள் கம்ப்யூட்டரில் பதிவாகும். இதன்மூலம் மாணவர்களின் ஆங்கில உச்சரிப்பு திறன் மேம்படும். பாடங்களை படித்தும், பார்த்தும், அர்த்தம்புரிந்தும் படிக்கும் போது, எளிமையாக இருப்பதுடன், திறனை வளர்த்துக்கொள்ளவும் உதவும். இவ்வாறு,கல்பனா பேசினார்.

பயிற்சி வகுப்பு குறித்து, ஒக்கிலியர் காலனி மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் பிரமிளா கூறுகையில்,
""ஆசிரியர்கள் ஒவ்வொருவரும் தனித்தனி பாணியில் பாடம் கற்பிக்கிறோம். "இங்கிலீஷ் ஹெல்பர்' திட்டத்தால், ஆங்கில உச்சரிப்பு ஒரே மாதிரி இருக்கும். ஆசிரியர், மாணவர் இருதரப்புக்கும் எளிதாக இருக்கும். இந்தமுறையை கடைபிடிக்கும் போது, மாணவர்கள் "ஸ்போக்கன் இங்கிலீஷ்' வகுப்புகளுக்கு செல்லவேண்டியதில்லை,'' என்றார்.

பதவி உயர்வின்போது ஆசிரியர் கல்வி டிப்ளமோவை பிளஸ்–2–க்கு சமமாக கருதலாம் ஐகோர்ட்டு உத்தரவு


பதவி உயர்வின்போது ஆசிரியர் கல்வி டிப்ளமோவை பிளஸ்–2–க்கு சமமாக
கருதலாம் ஐகோர்ட்டு உத்தரவு ஆசிரியர் கல்விக்கான இரண்டாண்டு டிப்ளமோ கல்வி, பிளஸ்–2– க்கு இணையானது - சென்னை ஐகோர்ட்டு 
 சென்னை ஐகோர்ட்டில் அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியின் தலைமை ஆசிரியை ஏ.முனியம்மாள் தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:– நான் கடந்த 1980–ம் ஆண்டில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்ச்சி பெற்று, 1985–ம் ஆண்டில் ஆசிரியர் கல்விக்கான டிப்ளமோ (டி.டி.எட்.) முடித்தேன். பின்னர் பி.லிட். (தமிழ்) பட்டம் பெற்றேன். ரத்து செய்ய வேண்டும் பணி மூப்பு அடிப்படையில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியையாக பதவி உயர்வு அளித்திருக்க வேண்டும். ஆனால் பிளஸ்–2 படிக்காதவர்களுக்கு இந்தப் பதவி உயர்வு பெறத் தகுதி இல்லை என்று கூறப்பட்டது. இதற்கு தொடக்கக் கல்வி இயக்குனரின் 13.9.2011 தேதியிட்ட வழிகாட்டி உத்தரவு சுட்டிக்காட்டப்பட்டது. எனவே இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
 
இந்த மனுவை விசாரித்த நீதிபதி டி.அரிபரந்தாமன் பிறப்பித்த உத்தரவு வருமாறு:– தொடக்கக் கல்வி இயக்குனரின் அந்த உத்தரவை மற்றொரு வழக்கில் கடந்த 2.7.12 அன்று ரத்து செய்து ஐகோர்ட்டு உத்தரவிட்டது. அதனடிப்படையில் மற்றொரு வழக்கில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவில், இரண்டு ஆண்டு ஆசிரியர் கல்வி டிப்ளமோ கல்வி, பிளஸ்–2 படிப்புக்கு இணையானது என்று கூறப்பட்டுள்ளது. அந்த உத்தரவு இந்த வழக்குக்கும் பொருந்தும். எனவே மனுதாரருக்கு பதவி உயர்வு பெறும் உரிமை உள்ளது. அதன்படி நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியையாக அவருக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும். அதற்கேற்ற பணப் பலன்களையும் வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

RTE IN TAMILNADU CBSESCHOOLS..

தமிழகத்தில் செயல்படும் சி.பி.எஸ்.இ.,பள்ளிகளில், கட்டாய கல்வி உரிமைச்சட்டம் (ஆர்.டி.இ.,)சுத்தமாக மதிக்கப்படவில்லை என்பது, தகவல் உரிமைச்சட்டத்தால் அம்பலமாகியுள்ளது.
பொருளாதாரத்தில் பின் தங்கிய மாணவர்களுக்கு தரமான கல்வி கிடைக்க
அரசு அமல்படுத்தியது. இச்சட்டத்தின் படி,அனைத்து வகை தனியார் பள்ளிகளிலும்,நுழைவு வகுப்புகளின் மொத்த சேர்க்கையில், 25சதவீதம் அளவுக்கு, பொருளாதாரத்தில் பின் தங்கியவழிவகை செய்யும் வகையில், இலவச கட்டாய கல்வி உரிமைச்சட்டத்தை, 2009ல் மத்தியஏழை மாணவர்களை கட்டணமின்றிச் சேர்க்க வேண்டும். இந்த சட்டத்தைக் கொண்டு வந்த மத்திய அரசு,இதற்கு முறையான செயல் வடிவம் கொடுக்கவில்லை;முறையான விதிகளையும் வகுக்கவில்லை;கண்காணிப்புக்கான எந்த ஏற்பாட்டையும் செய்யவில்லை.மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பள்ளிகளிலாவது,இதை ஆய்வு செய்ய அதிகாரிகள் உள்ளனர்.இங்குள்ள சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் இதற்கான கண்காணிப்பும இல்லை.இதன் காரணமாக, கட்டாய கல்வி உரிமைச் சட்டப்படி மாணவர் சேர்க்கை நடைபெறவில்லை.

ம.தி.மு.க., மாநில இளைஞரணி செயலாளர் ஈஸ்வரன்,இது தொடர்பான பல்வேறு தகவல்களை சி.பி.எஸ்.இ., நிர்வாக அலுவலகத்திலிருந்து தகவல் அறியும் உரிமை           சட்டப்படி வாங்கியுள்ளார். அதில் கிடைத்துள்ள தகவல்கள்,                      குற்றச்சாட்டுகளைஉறுதிப்படுத்துகின்றன.
இவர் கோரிய தகவல்களுக்கு,         390 சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் 128பள்ளிகள் மட்டுமே, தகவல் கொடுத்துள்ளன; மொத்தப்பள்ளிகளிலும் சேர்த்து, 25 சதவீத இடஒதுக்கீட்டின்படி 3055 ஏழை மாணவர்கள் சேர்க்கப்பட்டிருக்கவேண்டும். ஆனால், தற்போது வெறும் 762 மாணவர்களே சேர்க்கப்பட்டுள்ளனர். அதாவது 75 சதவீத இடங்களில் மாணவர்கள் சேர்க்கப்படவில்லை. இதில், 8சி.பி.எஸ்.இ., பள்ளிகளில், இச்சட்டத்தின் படி ஒரு மாணவர் கூட சேர்க்கப்படவில்லை; 262 சி.பி.எஸ்.இ., பள்ளிகள், தகவல் சமர்ப்பிக்கவில்லை.
மத்திய அரசின் மனித வள மேம்பாட்டுத்துறையின் கீழ், தமிழகத்தில் செயல்படும் ஒன்பது பள்ளிகளில்மட்டுமே (கேந்திரிய வித்யாலயா) இச்சட்டம் முழுமையாக அமல்படுத்தப்பட்டுள்ளது.
ம.தி.மு.க., மாநில இளைஞரணி செயலாளர் ஈஸ்வரன் கூறுகையில்,""கல்வி அதிகாரிகளுக்கே, சி.பி.எஸ்.இ., மாணவர்கள் சேர்க்கை சார்ந்த விபரங்கள் தெரிவதில்லை; அதனால், மக்களுக்கு கட்டாயம் தெரிந்திருக்க வாய்ப்பே இல்லை. ஆய்வு, கண்காணிப்பு, கட்டுப்பாடு எதுவுமே இல்லாமல், இந்த சட்டத்தை அமல்படுத்தியதே இதன் தோல்விக்கு காரணம். தமிழக சி.பி.எஸ்.இ., நிர்வாக அலுவலகத்திலேயே இந்த இட ஒதுக்கீடு குறித்த எந்த விபரமும் இல்லை என்பது வேதனைக்குரிய விஷயம். இந்த சட்டத்தின்படி, பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை நடைமுறைத்த நடவடிக்கை மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்காவிட்டால், இதற்காக பொது நல வழக்கு தொடர்ந்து இதற்கு தீர்வு காண்போம்,'' என்றார்.

COMPUTER TEACHER APPOINTMENT. HIGHCOURT ORDER IN DETAIL

அரசுப் பள்ளிகளில் காலியாகவுள்ள 652 கணினி ஆசிரியர் பணியிடங்களை 2
மாதங்களுக்குள் நிரப்ப வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர்
நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 இது தொடர்பாக தமிழ்நாடு கணினி அறிவியல் பி.எட்.பட்டதாரி ஆசிரியர்கள் நலச் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜி.முத்துராமன்நீதிமன்ற அவமதிப்புக்கான நடவடிக்கை கோரும் மனுவை தாக்கல்செய்துள்ளார். கணினி ஆசிரியர்கள் பணி நியமனம் தொடர்பாக கடந்த 20.12.2012
அன்று உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை தமிழக அரசு அமல்படுத்தாததால்,பள்ளிக் கல்வித் துறை செயலாளர், பள்ளிக் கல்வித் துறை இயக்குநர்ஆகியோர் மீது நீதிமன்ற அவமதிப்பு குற்றத்துக்கான நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அவர் தனது மனுவில் கோரியிருந்தார். 
இந்த மனு மீது நீதிபதிகள் ஆர்.பானுமதி, கே.கே.சசிதரன் ஆகியோரைக்கொண்ட அமர்வு விசாரணை மேற்கொண்டது. மனுதாரர்கள் சார்பில் மூத்த வழக்குரைஞர் ஹேமா சம்பத், வழக்குரைஞர் சி.உமா, அரசுத் தரப்பில் அரசு கூடுதல் தலைமை வழக்குரைஞர்பி.எச்.அரவிந்த் பாண்டியன்,  அரசு சிறப்பு வழக்குரைஞர் வி.எம்.வேலுமணி ஆகியோர் ஆஜராகி வாதிட்டனர். இந்த வழக்கில் கடந்த ஆகஸ்ட் 2-ஆம் தேதி பிறப்பித்த உத்தரவில், உச்சநீதிமன்ற உத்தரவுப்படி காலியாகவுள்ள கணினி ஆசிரியர்பணியிடங்களை நிரப்ப அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்என்று நீதிபதிகள் கூறியிருந்தனர். வேலைவாய்ப்பு அலுவலக
பதிவு மூப்பு அடிப்படையிலும், கடந்த 6.12.2007 மற்றும் 2.3.2009 ஆகிய தேதிகளில் மாநில அரசின் பள்ளிக் கல்வித் துறை பிறப்பித்த அரசாணைகளின் படியும் இந்த பணி நியமனம் நடைபெற வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதிகள், இதற்காக அரசுக்கு தேவைப்படும் கால அவகாசம் பற்றிய அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தனர்

. இந்த வழக்கு மீண்டும் ஆகஸ்ட் 12-ஆம் தேதிக்கு விசாரணைக்கு வந்தபோது பள்ளிக் கல்வித் துறைச் செயலாளர்சபீதா அறிக்கை தாக்கல் செய்தார். அதில் இந்த பணி நியமன நடவடிக்கைகளை ஆசிரியர் தேர்வு வாரியம்தான் மேற்கொள்ள வேண்டும் என்றும், இதற்காக ஆறு மாத காலம் அவகாசம் வேண்டும் என்றும் கோரியிருந்தார் . 
எனினும் மனுதாரர் தரப்பில் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. கணினி ஆசிரியர் பணி நியமனம் தொடர்பாக ஏற்கெனவே 845பட்டதாரிகளின் சான்றிதழ்கள் சரிபார்க்கும் பணி முடிந்து விட்டதாகவும், ஆகவே மீண்டும் இன்னொரு முறை தேர்வு நடவடிக்கைகளை மாநிலஅரசு மேற்கொள்ளக் கூடாது என்றும், எப்படியாயினும் பணி நியமன நடவடிக்கைகளை முடிப்பதற்கு 6 மாதங்கள் தேவைப்படாது என்றும் மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்ட்து. எனினும் 6 மாத காலம் தேவை என்று கோரி அரசுத் தரப்பில் வாதிடப்பட்டது.நீதிமன்ற உத்தரவுப்படி 652 கணினி ஆசிரியர் பணியிடங்களை ஆசிரியர் தேர்வு வாரியம் நிரப்ப வேண்டும். விதிகளின்படி 1:5 என்ற விகிதத்தின் அடிப்படையில் மாநிலமெங்கும் உள்ள வேலைவாய்ப்பு அலுவலகங்களில்இருந்து தகுதியானவர்கள் சுமார் 3500 பேரின் பட்டியலைப் பெற்று, அவர்களை சான்றிதழ் சரிபார்ப்புப் பணிக்கு அழைக்க வேண்டும். ஆக, இப் பணிகளை முடிக்க 6 மாத கால அவகாசம் என்பது அவசியம்என்று வாதிடப்பட்டது.

 இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், இந்த விவகாரத்தை 6 மாதகாலம் வரை நீட்டிக்க நீதிமன்றம் விரும்பவில்லை என்றும், எனவே பணி நியமனநடவடிக்கைகளை 2 மாதங்களுக்குள் அரசு முடித்திட வேண்டும் என்றும் உத்தரவிட்டனர். 
மேலும், இந்த வழக்கின் விசாரணையை அக்டோபர் 22-ஆம்தேதிக்கு ஒத்தி வைத்த நீதிபதிகள், அதற்குள் பணி நியமனம் தொடர்பானநடவடிக்கை அறிக்கையை பள்ளிக் கல்வித் துறைச் செயலாளர் நீதிமன்றத்தில்தாக்கல் செய்ய வேண்டும் என்று தங்கள் உத்தரவில் கூறியுள்ளனர்.

COMPUTER TEACHER APPOINTMENT HIGCOURT ORDER

                              தமிழகத்தில், பள்ளிகளில் உள்ள,கணினி ஆசிரியர் பணியிடங்களில்,இரண்டு மாதங்களில், 652 பேரை தேர்ந்தெடுக்கும்நடவடிக்கையை துவங்கி, கணிசமானபகுதியை முடிக்க, சென்னை ஐகோர்ட்உத்தரவிட்டு உள்ளது. தமிழ்நாடு கணினி அறிவியல் பி.எட்., பட்டதாரி ஆசிரியர் நலச் சங்கம் சார்பில், தாக்கல்செய்யப்பட்ட, கோர்ட் அவமதிப்பு மனுவை, நீதிபதிகள்

பானுமதி, சசிதரன் அடங்கிய, "டிவிஷன் பெஞ்ச்'விசாரித்தது. மனுதாரர் சார்பில், மூத்த வழக்கறிஞர் ஹேமா சம்பத், வழக்கறிஞர் சி.உமா ஆஜராகினர்.அரசு தரப்பில், கூடுதல் அட்வகேட் ஜெனரல் அரவிந்த் பாண்டியன், சிறப்பு அரசு பிளீடர்வேலுமணி ஆஜராகினர். மனுவை விசாரித்த, "டிவிஷன் பெஞ்ச்' பிறப்பித்தஉத்தரவு: வேலைவாய்ப்பக
சீனியாரிட்டி அடிப்படையிலும், பள்ளி கல்வித்துறையின் உத்தரவுகளின் அடிப்படையிலும்,
கணினி ஆசிரியர்களை தேர்வு செய்வதற்கானநடவடிக்கைகளை, உடனடியாக அரசு துவங்க வேண்டும் என, உத்தரவிடப்பட்டிருந்தது. 

பள்ளி கல்வித்துறை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், "ஆசிரியர் தேர்வு வாரியம் தான்,தேர்வு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.அதற்கு கணிசமான நேரம் வேண்டும். எப்படியும், ஆறு மாதம் தேவைப்படும்' என,கூறப்பட்டுள்ளது. மனுதாரர் சார்பில் ஆஜரான, மூத்த வழக்கறிஞர், "845 பேரிடம், சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்து விட்டது.எனவே, மீண்டும் ஒரு தேர்வு நடவடிக்கையை செய்யமுடியாது. எப்படி பார்த்தாலும், ஆறு மாத அவகாசம்தேவையில்லை' என்றார். 

கூடுதல் அட்வகேட் ஜெனரல், "652, காலியிடங்களை, ஆசிரியர் தேர்வு வாரியம் நிரப்ப வேண்டும். முதலில், வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இருந்து, ஒன்றுக்கு ஐந்து என்கிற விகிதத்தில், 3,500 பேர் அடங்கிய பட்டியல் பெறப்பட வேண்டும். மாநிலம் முழுவதிலும் இருந்து பட்டியல் பெற, கணிசமான நேரம்தேவை. தேர்வு நடவடிக்கைகளை முடிக்க, ஆறு மாதம் வழங்க வேண்டும்' என்றார்.
 மனுவை விசாரித்த, "டிவிஷன் பெஞ்ச்' பிறப்பித்தஉத்தரவு: இந்த வழக்கை, ஆறு மாதங்களுக்கு தள்ளிவைக்க, நாங்கள் விரும்பவில்லை. தேர்வு நடவடிக்கைகளை உடனடியாக, அரசு துவங்க வேண்டும். இரண்டு மாதங்களில், கணிசமான பகுதியை முடிக்க வேண்டும். இரண்டு மாதங்களுக்குப் பின், வழக்கை பட்டியலிட வேண்டும். அதற்குள்,நடவடிக்கை அறிக்கையை, பள்ளி கல்வித் துறையின், முதன்மை செயலர் தாக்கல் செய்ய வேண்டும்.
இவ்வாறு, "டிவிஷன் பெஞ்ச்' உத்தரவிட்டு உள்ளது.

Source dinamalar

சனி, 24 ஆகஸ்ட், 2013

14 LAKHS CANDIDATES FOR. TNPSC. GROUP 4 EXAM

 தமிழகம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை (ஆக. 25) நடைபெறவுள்ள குரூப் 4
காலிப் பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வை 14 லட்சம் பேர்
எழுதுகிறார்கள். இந்தத் தேர்வு 244 மையங்களில் நடைபெறுகிறது. புதிய நடைமுறையாக தேர்வு மையங்களை எளிதாக அடையாளம் காண
தேர்வுக்கூட நுழைவுச் சீட்டில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத் தலைவர் நவநீத கிருஷ்ணன்
தெரிவித்துள்ளார். தமிழகத்தில் குரூப் 4 பணியிடங்கள் 5 ஆயிரத்து 566 காலியாக உள்ளன. இந்த
காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு அறிவிக்கை கடந்த ஜூன் 14
ஆம் தேதி வெளியிடப்பட்டது. தேர்வை எதிர்கொள்ள மொத்தம் 17 லட்சம் பேர்
விண்ணப்பித்திருந்தனர். ஒன்றுக்கும் மேற்பட்ட விண்ணப்பங்களை 3 லட்சம் பேர்
அளித்திருந்தனர். தேர்வு எழுத மொத்தம் 14 லட்சம்
தகுதி பெற்றுள்ளனர்.சிறப்பு ஏற்பாடு: விண்ணப்பங்கள் பெறப்பட்டதற்கான ஒப்புகைச் சீட்டுகளும் முதல் முறையாக
இணையதளத்திலேயே (www.tnpsc.gov.in, www.tnpscexams.net)
வெளியிடப்பட்டது. குரூப் 4 தேர்வு தமிழகத்தில் 244 மையங்களில் 4
ஆயிரத்து 755 தேர்வுக் கூடங்களில் நடைபெறுகிறது. சரியான முறையில் விவரங்களைப் பதிவு செய்து உரிய விண்ணப்பக் கட்டணம்
மற்றும் தேர்வுக் கட்டணம் செலுத்திய தகுதியான விண்ணப்பதாரர்களுக்கான
தேர்வுக்கூட நுழைவுச் சீட்டு தேர்வாணைய இணையதளத்தில்
வெளியிடப்பட்டுள்ளது.தேர்வுக் கூடத்தை எளிதாக அறிந்து கொள்ளும்
வகையில், தேர்வுக்கூட முகவரியுடன் அதன் தொலைபேசி எண் மற்றும் அதன்
அருகில் அமைந்துள்ள பிரபலமான இடத்தின் பெயரும் தேர்வுக்கூட நுழைவுச் சீட்டில் இடம்பெற்றுள்ளது. தேர்வர்களின் வசதிக்காக தேர்வுக்கூட நுழைவுச்
சீட்டில் முதல் முறையாக இத்தகைய
சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தத் தேர்வுக்கென 4 ஆயிரத்து 755 முதன்மை கண்காணிப்பாளர்களும்,
சுமார் 70 ஆயிரத்து 230 கண்காணிப்பாளர்களும் தேர்வுப் பணியில் ஈடுபட
உள்ளனர். தொலை தூரங்களில் அமைந்துள்ள தேர்வுக் கூடங்கள் மற்றும்
சர்ச்சைக்குரிய தேர்வுக் கூடங்கள் இணையவழியாக அந்தந்த மாவட்ட
ஆட்சியர்கள் மற்றும் தேர்வாணைய தலைமையகத்திóன் முதன்மைக்
கட்டுப்பாட்டு அறையில் இருந்தும் கண்காணிக்கப்படும். செல்போனுக்குத் தடை: அனைத்துத் தேர்வுக் கூடங்களின் நடவடிக்கைகளும்
ஒளிப்பது செய்யப்படும். ஒவ்வொரு தேர்வுக் கூடத்துக்கும்
ஒரு ஒளிப்பதிவு கருவி வீதம் சுமார் 4 ஆயிரத்து 500 கருவிகள்
ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. தேர்வு எழுதச் செல்லும் விண்ணப்பதாரர்கள்
செல்போன் உள்ளிட்ட எந்த மின்னணுச் சாதனங்களையும் தேர்வுக்
கூடத்துக்கு எடுத்துச் செல்லக் கூடாது. மீறினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். தேர்வு எழுதுவதில் இருந்தும் விலக்கிó
வைக்கப்படுவர் என்று தேர்வாணையம் ஏற்கெனவே எச்சரிக்கை விடுத்துள்ளது.

குரூப்-4 தேர்வில் வெற்றி TIPS

 25ம் தேதி நடைபெறும் குரூப்-4 தேர்வை, எதிர்கொள்வது குறித்து, மதுரை நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் பேங்கிங் நிர்வாக இயக்குனர் வெங்கடாசலம் வழங்கும் டிப்ஸ்.
.. * தேர்வு நெருங்கும் நேரத்தில் புதிய பாடங்களை படிக்காமல், படித்த பாடங்களை திரும்பவும் படியுங்கள். 
* புதிய தேர்வு முறையில், ஆப்டிடியூட் பகுதியில் 25 வினாக்கள் கேட்கப்படுகிறது. எண்களின் வகைகள் தொடர்புடைய வினாக்கள், கனஅளவு பகுதி சூத்திரங்களை நினைவுப்படுத்தவும்.
 * வரலாறு பாடத்தில் உள்ள காலவரிசை, முக்கிய ஆண்டுகள், சங்க காலம் முதல் சுதந்திரம் பெற்ற காலம் வரையான போர்களின் ஆண்டுகள், இடம், போரிட்ட நபர்களை தெரிந்திருக்க வேண்டும். 
* உலகை வலம் வந்த பயணிகள், அவர்களின் இந்திய வருகையின் போது இருந்த மன்னர்கள், வரலாற்று நூல்கள், நூலாசிரியர், பத்திரிகைகள், சமய சீர்திருத்த இயக்கம் இவற்றை படிக்கவும்.
 * இயற்பியல் பகுதியில் அலகு, விதிகள், அறிஞர்களின் கண்டுபிடிப்புகள், அளவிடும் கருவிகள், பயன்கள், மதிப்புகளை பார்க்கவும்.
 * வேதியியல் பகுதியில் வேதிப்பெயர், சமன்பாடு, முக்கிய அமிலங்கள், தனிம வரிசை அட்டவணை சிறப்பம்சம், அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் வேதிச் சேர்மங்களை படிக்க வேண்டும். 
* தாவரவியல் பகுதியில் செல்லின் அமைப்பு, தாவர, விலங்கு செல்களில் உள்ள நுண்ணுறுப்பின் பணி, தாவர பாகம், வளர்ச்சி தொடர்புடைய காரணிகள், வைரஸ், பாக்டீரியாவில் ஏற்படும் தாவர நோய்களை பட்டியலிடவும்.
 * வகைபாட்டின் வளர்ச்சி, முதுகு நாணற்றவை தொகுதி, உதாரணங்கள் அறிவியல் பெயர், குரோமோசோம் நிலையை படிக்கவும். 
*மனித உடலியல் பகுதியில் ரத்தவகை, ரத்த செல்களின் சிறப்பம்சம், இருதய அமைப்பு, செயல்படும் விதம், நாளமில்லா சுரப்பி பண்பு, பயன், விட்டமின் பற்றிய தகவல்கள், எலும்புகளின் எண்ணிக்கை, மூளையின் அமைப்பு, பணி, வைரஸ், பாக்டீரியா, புரோட்டோசோவா, பூஞ்சையால் ஏற்படும் நோய்களை தெரிந்து கொள்ளவும்.
 * புவியியல் பகுதியில் மாநில தலைநகரம், மலை, காடு, சரணாலயம் படிக்கவும். 
* சூரியன், அக்குடும்ப கோள்கள், அட்சரேகை, தீர்த்தரேகை சிறப்பம்சங்கள், வானிலை, காலநிலை, கடல் நீரோட்டங்கள்.  நிலநடுக்கம், எரிமலை வெடிப்பு, கடற்கோள், நிலச்சரிவு, பனிப்பாறை வீழ்ச்சி. * இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் வளர்ச்சி, அட்டவணை, முக்கிய ஷரத்து, சட்ட திருத்தம், ஜனாதிபதி, பிரதமர், தேர்தல் ஆணையம் குறித்த தகவல்களை படிக்கவும். 
பொருளாதார கோட்பாடுகளை கூறியவர்களின் பெயர்கள். 
பொதுத் தமிழ் பாடப்பகுதிக்கு சமச்சீர் பாடப்புத்தகத்தில் ஆறு முதல் பத்தாம் வகுப்பு வரையான புத்தகங்களை படிக்க வேண்டும். ஹால் டிக்கெட், நீலம் அல்லது கருப்பு நிற "பால் பாயின்ட்" பேனா கொண்டு செல்ல வேண்டும்.
 *தேர்வுக்கு முதல்நாள் இரவு நன்கு தூங்கவும். மையத்திற்கு ஒருமணி நேரத்திற்கு முன்பாகவே செல்லவும். மூன்று மணி நேரம் தேர்வு நடக்கும். பொதுத்தமிழ் அல்லது பொது ஆங்கிலம் 100 வினாக்கள், ஆப்டிடியூட் உட்பட பொதுஅறிவு பகுதியில் 100 என, மொத்தம் 200 வினாக்கள்.
 *அனைத்து கேள்விகளுக்கும் நான்கு வினாக்கள் தரப்பட்டிருக்கும். தவறான விடைக்கு மதிப்பெண் குறைப்பு இல்லை. எனவே, அனைத்து வினாக்களுக்கும் கவனமாக படித்து, விடை அளிக்கவும் 

Source. TEACHER TN

TET LATEST NEWS:டி.இ.டி., தேர்வில் முறைகேடுகள் நடக்கவில்லை: தலைவர் உறுதி

"டி.இ.டி., தேர்வில், துளி அளவிற்குக் கூட, எவ்விதமுறைகேடுகளும் நடக்கவில்லை,'' என, டி.ஆர்.பி.,தலைவர் விபு நய்யர் தெரிவித்தார்.

இம்மாதம், 17, 18 தேதிகளில், டி.இ.டி., தேர்வு நடந்தது. இதனை, ஏழு லட்சம் பேர் எழுதி உள்ளனர். இதில், தர்மபுரி மாவட்டத்தில், மோசடி கும்பல் ஒன்று, தேர்வர்களிடம், லட்சக்கணக்கில் பணம் வாங்கிக்கொண்டு ஏமாற்றிய விவகாரம்,தேர்வு குறித்து, சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் தொடர்பாக, 15க்கும் மேற்பட்டோர் கைது. செய்யப்பட்டுள்ளனர். போலீஸ் விசாரணை,தொடர்ந்து நடந்து வருகிறது.        தேர்வு சர்ச்சை குறித்து, டி.ஆர்.பி., தலைவர், விபு நய்யர் கூறியதாவது: மோசடி கும்பல், போலியான கேள்விகளை. தயாரித்து,தேர்வு எழுதுவோரை ஏமாற்றி உள்ளது. இதற்கும் டி.ஆர்.பி.,க்கும் எவ்வித சம்பந்தமும் கிடையாது. இதை, தர்மபுரி மாவட்ட எஸ்.பி., எழுத்துப்பூர்வமாக தெளிவுபடுத்தி உள்ளார். தேர்வில், துளி அளவிற்குக் கூட, முறைகேடுகள் நடக்கவில்லை. இதை உறுதியாக கூற முடியும். முறைகேடாக தேர்வு எழுத முயற்சிக்கும் தேர்வர்களை, டி.ஆர்.பி., நடத்தும் தேர்வுகளை எழுத தடை விதிக்க, நடவடிக்கை எடுக்கப்படும். டி.இ.டி., தேர்வு விடைத்தாள்கள், "ஸ்கேன்' செய்யும் பணி,நேற்று துவங்கியது. டி.இ.டி., தேர்வு மதிப்பெண் மற்றும் கல்வித் தகுதிகளுக்கான மதிப்பெண் ஆகிய, இரண்டையும் சேர்த்து, ஒரே தேர்வுப் பட்டியலாக வெளியிடலாமா என, ஆலோசித்து வருகிறோம். விரைவாக, தேர்வு முடிவை வெளியிட, அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும். இவ்வாறு,விபு நய்யர் கூறினார்




Source: dinamalar reporter






இணையான படிப்பில் பட்டம் பெற்றவர்களுக்கும் ஆசிரியர் பணி: உயர் நீதிமன்றம் உத்தரவு

 பட்டதாரி ஆசிரியர் பணிக்காக நிர்ணயிக்கப்பட்ட கல்வித்தகுதிக்கு இணையான படிப்பில் பட்டம் பெற்றவர்களுக்கும் பணி வழங்கிடுமாறு ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
    இது தொடர்பாக எஸ்.ஹசினா பானு உள்ளிட்ட 17 பேர் மனு தாக்கல்செய்திருந்தனர். ஹசினா பானு தாக்கல் செய்த மனுவில், நான் 2008-ஆம்ஆண்டில் பி.ஏ. ஆங்கிலம் (கம்ப்யூட்டர் அப்ளிகேஷன்) படிப்பில் பட்டம்பெற்றேன். பின்னர் 2009-ஆம் ஆண்டில் பி.எட்., (ஆங்கிலம்) பட்டம் பெற்றேன்.பி.ஏ. ஆங்கிலம் (கம்ப்யூட்டர் அப்ளிகேஷன்) பட்டம், பி.ஏ. ஆங்கிலம்பட்டத்துக்கு இணையானது என்று 2009-ஆம் ஆண்டு பெரியார் பல்கலைக்கழகம் அளித்த சான்றிதழின் அடிப்படையில்வேலைவாய்ப்பு அலுவலத்தில் எனது பட்டங்களை பதிவு செய்தேன்.இந்நிலையில் பி.ஏ. ஆங்கில பட்டதாரி ஆசிரியர் பணி நியமனுத்துக்காக சான்றிதழ் சரிபார்ப்பு பணிக்கு வருமாறு ஆசிரியர் தேர்வு வாரியம் அழைத்ததன் அடிப்படையில், 15.11.2010 அன்று நடைபெற்ற சான்றிதழ் சரிபார்ப்புப் பணிக்குச் சென்றேன். எனினும் நான் பெற்ற பி.ஏ. ஆங்கிலம் (கம்ப்யூட்டர் அப்ளிகேஷன்) பட்டம் பி.ஏ. ஆங்கிலப் பட்டதாரி ஆசிரியர்
பணிக்கு தகுதியானது அல்ல என்று கூறி எனக்கு பணி நியமனம் வழங்க ஆசிரியர் தேர்வு வாரியம் மறுத்து விட்டது. நான் பெற்ற பி.ஏ. ஆங்கிலம் (கம்ப்யூட்டர் அப்ளிகேஷன்) பட்டம் பி.ஏ. ஆங்கில பட்டத்துக்கு இணையானது என்று பெரியார் பல்கலைக்கழகம் அங்கீகரித்துள்ளது. மேலும் 2010-ஆம் ஆண்டு வரை பி.ஏ. ஆங்கிலம் (கம்ப்யூட்டர் அப்ளிகேஷன்) பட்டம் பெற்றவர்களும் ஆங்கில பட்டதாரி ஆசிரியர்களாக பணியில் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், எனக்கு பணி வழங்க ஆசிரியர் தேர்வு வாரியம் மறுப்பது சட்ட விரோதமானது. ஆகவே, எனக்கு பணி வழங்கிடுமாறு நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று அவர் தனது மனுவில் கோரியிருந்தார். இதேபோல் மற்றொரு மனுதாரர் தாக்கல் செய்த மனுவில், நான் பி.எஸ்.சி. (புள்ளியியல்), எம்.எஸ்.சி. (புள்ளியியல்) மற்றும் பி.எட். (கணிதம்) ஆகிய பாடங்களில் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 8.1.2012 அன்று முதுநிலை கணிதப் பட்டதாரி ஆசிரியர் பணி நியமனத்துக்காக நடைபெற்ற சான்றிதழ் சரிபார்ப்புப் பணியில் கலந்து கொண்டேன். எனினும் நான் பெற்ற புள்ளியியல் பட்டங்கள் அந்தப் பணிக்கு தகுதியில்லாதவை என்று கூறி எனக்கு பணி வழங்க ஆசிரியர் தேர்வு வாரியம் மறுத்து விட்டது. எம்.எஸ்.சி. (புள்ளியியல்) படிப்பில் பெறும் பட்டமும், எம்.எஸ்.சி. (கணிதம்) படிப்பில் பெறும் பட்டமும் ஒன்றுக்கொன்று இணையானவை. இதற்கு முன்பு புள்ளியியல் பாடத்தில் பட்டம் பெற்ற பலர் கணித
ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். ஆகவே, எனக்கு பணி வழங்க  மறுப்பது சரியல்ல என்று அவர் மனுவில் கூறியிருந்தார். இதே போன்றகோரிக்கைகளோடு பிற மனுதாரர்களும் மனு தாக்கல் செய்திருந்தனர்.
 இந்த மனுக்கள் மீது விசாரணை நடத்திய நீதிபதி டி.ஹரிபரந்தாமன், மனுதாரர்கள் அனைவருக்கும் ஆசிரியர் பணி வழங்குமாறு ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு உத்தரவிட்டார். மனுதாரர்களை எந்தப் பணி நியமனத்துக்காக ஆசிரியர் தேர்வு வாரியம் அழைத்ததோ, அந்தப் பணிகளுக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ள கல்வித் தகுதியானது மனுதாரர்கள் பெற்றுள்ள பட்டங்களுக்கு இணையானவை என்று ஏற்கெனவே அரசு அறிவித்துள்ளது. ஆகவே, பணி நியமனம் பெறும் உரிமை மனுதாரர்களுக்கு உள்ளது என்று நீதிபதி தனது தீர்ப்பில் கூறியுள்ளார் 

Source: dinamani