சனி, 30 நவம்பர், 2013

1,064 அலுவலர் பணியிடங்களை நிரப்ப, நாளை (01.12.2013) குரூப் - 2 முதல்நிலைத் தேர்வு நடக்கிறது

தமிழக அரசின், பல்வேறு துறைகளில், காலியாக உள்ள, 1,064 அலுவலர் பணியிடங்களை நிரப்ப, நாளை, குரூப் - 2 முதல்நிலைத் தேர்வு நடக்கிறது. 6.65 லட்சம் பேர் பங்கேற்கும் இந்த தேர்வுக்கான அனைத்து ஏற்பாடுகளையும், அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.,) முழுவீச்சில் செய்து முடித்துள்ளது. வணிக வரித்துறை உதவி அலுவலர், தொழிலாளர் நல ஆணையர், வேலைவாய்ப்பு இளநிலை அலுவலர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளில், 1,064 பணியிடங்கள் காலியாக உள்ளன.

2,269
மையங்கள் : இது குறித்த அறிவிப்பு, செப்., 4ல், டி.என்.பி.எஸ்.சி., அறிவித்தது. கடைசி தேதி முடிந்த பின், விண்ணப்பங்கள் பரிசீலனைக்குப் பின், 6.65 லட்சம் பேரின் விண்ணப்பங்கள், தகுதியானவையாக ஏற்கப்பட்டன. நாளை காலை, 10:00 மணி முதல், பகல், 1:00 மணி வரை, மாநிலம் முழுவதும், 2,269 மையங்களில், தேர்வு நடக்கிறது. அனைத்து மையங்களிலும், தேர்வுப் பணியை, வீடியோ பதிவு செய்ய, டி.என்.பி.எஸ்.சி., ஏற்பாடு செய்துள்ளது. 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அலுவலர்கள், பணியாளர்கள், தேர்வுப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
பறக்கும் படைகள் : தேர்வுக்கான அனைத்துப் பணிகளும், தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக, டி.என்.பி.எஸ்.சி., செயலர், விஜயகுமார் தெரிவித்தார்.
அவர், மேலும் கூறியதாவது: மாநிலம் முழுவதும், 226 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. மாவட்ட கலெக்டர்கள், முதுநிலை ஒருங்கிணைப்பாளர்களாக இருந்து, தேர்வை கண்காணிப்பர்.

79,550
பேர் : பறக்கும் படையில், வருவாய்த்துறை உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலர்கள் இடம் பெற்றுள்ளனர். 392, வாகன பறக்கும் படைகளும் அமைக்கப்பட்டுள்ளன. இந்த படையினர், தேர்வு மையம் வாரியாகச் சென்று, தேர்வை கண்காணிப்பர். சென்னையில் மட்டும், 263 மையங்களில் நடக்கும் தேர்வில், 79,550 பேர் பங்கேற்கின்றனர். அப்ஜக்டிவ் முறையில், 300 மதிப்பெண்களுக்கு தேர்வு நடக்கிறது.பாடத்திட்டங்கள் மாற்றி அமைக்கப்பட்ட பின், நடக்கும் முதல் குரூப் - 2 தேர்வு இது தான். குரூப் - 1 தேர்வுக்கு அடுத்து, மிகவும் முக்கிய தேர்வாக, குரூப் - 2 உள்ளது. இவ்வாறு, விஜயகுமார் தெரிவித்தார்.
ஜெனரல் ஸ்டடிஸ் : பகுதியில், 75 கேள்விகள்; திறன் அறிதல் பகுதியில், 25 கேள்விகள்; பொது தமிழ் அல்லது பொது ஆங்கிலம் பகுதியில் இருந்து, 100 கேள்விகள் என, மொத்தம், 200 கேள்விகள் இடம்பெறும்.ஒவ்வொரு கேள்விக்கும், தலா, 1.5 மதிப்பெண் வீதம், 300 மதிப்பெண்களுக்கு, தேர்வு நடக்கிறது.
முக்கிய காலி பணியிடங்கள்
வருவாய் துறையில் உதவியாளர் - 360கூட்டுறவு சங்க முதுநிலை ஆய்வாளர் - 165கைத்தறி துறை ஆய்வாளர் - 147பால்வள துறை, முதுநிலை ஆய்வாளர் - 137துணை வணிகவரி அலுவலர் - 66தொழிலாளர் நல ஆய்வாளர் - 9உள்ளாட்சி தணிக்கை ஆய்வாளர் - 7இந்து அறநிலைய துறை, தணிக்கை ஆய்வாளர் - 39

தமிழ் ஆசிரியர்கள் இனி பட்டதாரி தமிழாசிரியர்கள்: அரசு உத்தரவு

தமிழ் பண்டிட் என அழைக்கப்பட்ட தமிழாசிரியர்கள், பட்டதாரி தமிழாசிரியர்கள் என்றே அழைக்கப்படுவர் என, அரசு உத்தரவிட்டுள்ளது. பள்ளிகளில், 1988ல் உதவி ஆசிரியர்களாக நியமிக்கப்பட்ட தமிழாசிரியர்கள், 2000ல் பட்டதாரி தமிழாசிரியர்கள் என, அழைக்கப்பட்டனர். இந்நிலையில், கடந்த ஏப்ரல் அரசாணை, 263ன் படி தமிழாசிரியர்கள், தமிழ் பண்டிட் என, அழைக்கப்படுவர் என, அரசு உத்தரவிட்டது.
ஊதியத்தில் சிக்கல்: தமிழ் பண்டிட் என, அழைக்கப்பட்ட தமிழாசிரியர்களுக்கு தர ஊதியம், 4,400 ரூபாய், பட்டதாரி ஆசிரியர்களுக்கு, 4,600 ரூபாய் என, அரசு நிர்ணயம் செய்தது. தமிழாசிரியர்களாக பணியாற்றுபவர்கள், தமிழ் பண்டிட் என்பதால் தர ஊதியம், 4,600 ரூபாய் பெற்றவர்கள், தணிக்கையின் அடிப்படையில் கூடுதலாக பெற்ற தொகையை திரும்ப செலுத்த, தலைமையாசிரியர்கள் தமிழாசிரியர்களை வலியுறுத்தினர்.
தமிழக தமிழாசிரியர்கள் கழகம் கோரிக்கை: தமிழாசிரியர்கள் அனைவரும், தமிழ் பண்டிட் என்பதை விடுத்து, பட்டதாரி தமிழாசிரியர்கள் என, அழைக்கப்பட வேண்டும். பட்டதாரிஆசிரியர்கள் பெறும் தர ஊதியம் 4,600, தமிழாசிரியர்களுக்கு வழங்க வேண்டும் என, கோரிக்கை விடுத்தனர். தமிழாசிரியர்களின் கோரிக்கையினை ஏற்று, தமிழ் பண்டிட் என்ற சொல் நீக்கப்பட்டு தமிழ் ஆசிரியர்கள், பட்டதாரி தமிழாசிரியர்கள் என அழைக்கப்படுவர், என்று பள்ளிக்கல்வித் துறை முதன்மை செயலர் உத்தரவிட்டுள்ளார்

TRB PG TAMIL: HEARING ON MONDAY (02.12.13)

முதுகலைப் பட்டதாரி தமிழ்ஆசிரியர்களுக்கான போட்டித் தேர்வில்,பி வரிசை வினாத்தாளில் 40 கேள்விகள் எழுத்துப் பிழைகளுடன் இருந்தன.பிழையான கேள்விகளுக்கு முழு மதிப்பெண் வழங்க வேண்டும் எனக் கோரி சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல்செய்யப்பட்டதுஇந்த மனுவை விசாரித்த நீதிபதி எஸ்.நாகமுத்து, தமிழ்ப்பாடத்துக்கு மறுதேர்வு நடத்த ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு உத்தரவிட்டார்
. இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசின் பள்ளிக் கல்வித் துறை முதன்மைச்செயலர், இயக்குநர், டிஆர்பி செயலர் ஆகியோர் மேல்முறையீடு மனுவைத்தாக்கல் செய்தனர் விதித்து  வழக்கினை.தனி  நீதிபதியின் தீர்ப்புக்கு நீதியரசர்கள்  எம்.ஜெயச்சந்திரன், எஸ். வைத்தியநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வு இடைக்கால தடை ஒத்திவைத்தது.

அவ் வழக்கு .மீண்டும் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தலைமை நீதிபதி மற்றும் நீதி அரசர் ஜெயச்சந்திரன் ஆகியோர் அடங்கிய அமர்வுக்குமுன் 21.11.2013  அன்று விசாரணைக்கு வந்தது.
முதுகலைப் பட்டதாரி தமிழ் ஆசிரியர்களுக்கான போட்டித் தேர்வில் தேர்வெழுதிய இரு மனுதாரர்கள் சார்பில் வழக்கறிஞர் தாழைமுத்தரசு ஆஜராகி  தங்கள் தரப்பு கருத்துக்களை எதிர்மனுவாக தாக்கல் செய்தார் .ஆனால் TRB சார்பில் அட்வகேட் ஜெனரல் அன்று ஆஜராக இயலாததால் வழக்கினை ஒத்திவைக்க கோரியதன்பேரில் வழக்கின் அடுத்த விசாரணையை 28.11.2013 க்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர் .பலரும் எதிர்பார்த்திருந்த நிலையில் வழக்குவிசாரணை  28.11.2013 அன்றும் நடைபெறவில்லை.
எதிர் மனுதாரர்கள்  அனைவருக்கும் நீதிமன்ற அரசின் மேல்முறையீட்டு வழக்கு குறித்த நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது வரும் 02.12.2013 அன்று அவ்வழக்கு நீதி அரசர்கள் ஆர்.சுதாகர், எஸ் வைத்தியநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வுக்குமுன் விசாரணக்கு வருகின்றது என்ற தகவல் உறுதி செய்யப்பட்டுள்ளது. வழக்கின் அடுத்தகட்டத்தை முதுகலை ஆசிரியர் பணிக்கு தேர்வெழுதியுள்ள  அனைவரும் மிகுந்த பரபரப்புடன் எதிர் நோக்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது