ஞாயிறு, 9 மார்ச், 2014

மத்திய இடைநிலை கல்வி வாரிய மண்டல அலுவலகங்களில் பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத் துறையின் கீழ் செயல்பட்டு வரும்மத்திய இடைநிலை கல்வி வாரிய மண்டல அலுவலகங்களில்பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 132 பணியிடங்களை நிரப்ப
தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி மற்றும் துறைவாரியான காலியிடங்கள் விவரம்:
01. இணை செயலாளர் (டெபுடேசன்) - 02
02. இணை இயக்குநர் (அக்ரடிடேஷன் யூனிட்) - 01
03. இணை இயக்குநர் (இன்குலுசன் செல்) - 01
04. உதவி செயலாளர் (ஐடி) - 03
05. உதவி செயலாளர் - 04
06. துணை இயக்குநர் (வொகேஷனல்) - 02
07. துணை இயக்குநர் (அக்ரடிடேஷன் யூனிட்) - 04
08. துணை இயக்குநர் (இன்குலுசன் செல்) - 02
09. உதவி இயக்குநர் (வொகேஷனல்) - 05
10. அனலிசிஸ்ட் - 05
11. உதவி இயக்குநர் (இன்குலுசன் செல்) - 02
12. அசிஸ்டென்ட் புரோகிராமர் - 02
13. பிரிவு அலுவலர் - 01
14. பிரிவு அலுவலர் (சட்டம்) - 03
15. கண்காணிப்பாளர் - 01
16. உதவியாளர் - 09
17. மக்கள் தொடர்பு உதவியாளர் - 03
18. முதுநிலை உதவியாளர் (கம்ப்யூட்டர்) - 04
19. நிர்வாக உதவியாளர் - 22
20. சுருக்கெழுத்தர் - 12
21. இளநிலை உதவியாளர் (கம்ப்யூட்டர்) - 06
22. இளநிலை உதவியாளர் - 36,
23. இந்தி (டைப்பிஸ்ட்) - 05

விண்ணப்ப கட்டணம்: பொது மற்றும் ஓபிசியைச் சேர்ந்த ஆண்களுக்கு ரூ.500, பொது மற்றும்ஓபிசியைச் சேர்ந்த பெண்களுக்கு ரூ.250.
எஸ்சி, எஸ்டி,முன்னாள் ராணுவத்தினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள்,
துறை வாரியான விண்ணப்பதாரர்கள் கட்டணம் செலுத்த வேண்டியதில்லை.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத்தேர்வு அல்லது திறனறியும்
தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் www.cbse.nic.in
என்ற இணைய தளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 10.3.2014
மேலும் கல்வித்தகுதி, வயதுவரம்பு போன்ற முழுமையான விவரங்கள் அறிய
www.cbse.nic.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்இணையதளத்தில்
தெரிந்து கொள்ளலாம்.


Sent from my iPad

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக