தருமபுரி 7598299935
முதுகலைத் தமிழாசிரியர் தேர்வு-2014 வினாத்தாள் B2-13
1.குகைக் கல்வெட்டுகளின் எழுத்து பிராமி என்றும் மொழி தமிழ் என்றும் கூறியவர்
A ஹிராஸ் பாதிரியர் .B வில்லியம் கேரி .C தெ.பொ.மீ .D எல்லீஸ்
2 .பகுதியுடன், இடைநிலை விகுதிகளை ஒட்டிக்கொள்ளும் சொற்களை உடைய மொழி
A .தனி நிலை B. ஒட்டு நிலை .C உட்பிணைப்பு நிலை D இவை அணைத்துமே.
3. .மூல திராவிட மொழியில் உயிர்கள்
A 10 B 16 .C 30 .D 12
4 தமிழ் வேர்ச்சொல் ஆய்வில் மிகவும் புகழ் பெற்றவர்
A ஸ்மீத் .B கால்டுவெல் .C சி.ஆர்.ரெட்டி .D தேவநேயப்பாவாணர்
5 மீட்டுருவாக்கம் மூலம் தொல் திராவிட மொழியி ஒலியன் அமைப்பை ஆராய்ந்தவர்
A.பிரிகேல் B .எமனோ .C ஜான்பெர்சிவர் .D லீச்
6.கன்னட மொழியின் முதல் இலக்கண நூல்
A சமவாயங்க சூத்திரம் B. லீலாதிலகம் C சப்த மணி தர்ப்பனா .D பாஷா பூஷணம்
7 திராவிடம் என்ற சொல்லிலிருந்துதான் தமிழ் என்ற சொல் தோன்றியது என்ற கருத்துடையவர்
A.கால்டுவெல் B. சட்டர்ஜி .C தீட்சதர் .D எல்லீஸ்
8 மைசூர் சந்தரகிரி,கல்யான்புரி என்ற ஆறுகளுக்கு இடைப்பட்ட பகுதிகளில் வழங்கும் மொழி
A. கோடா B. கோண்டி . C துளு .D மால்டோ
9. மொகஞ்சதாரோ, ஹரப்பாவில் கண்டெடுக்கப்பட்ட மொழி திராவிட மொழியே என்று கூறியவர்
A ஹிராஸ் பாதிரியர் .B வில்லியம் கேரி .C தெ.பொ.மீ .D எல்லீஸ்
10 மூலத்திராவிட மொழியிலிருந்து இறுதியாக பிரிந்த மொழி
A தெலுங்கு .B துளு .C கன்னடம் .D மலையாளம்
11.அகில் என்னும் தமிழ்ச்சொல் எந்த மொழியில் அஹாலத் என்று அழைக்கப்படுகின்றது
A. கிரேக்கம் B. ஆங்கிலம் .C ஹிப்ரூ .D சீனம்
12. மிக நெருங்கிய உறவுடைய ஒரு குழுவாக அமையும் முறையில் தமிழ்,தெலுங்கு,மலையாளம்
கன்னடம் ஆகிய மொழிகளுக்கிடையேயானஒற்றுமைகளைச் முதலில் சுட்டிக்காட்டியவர்
A ஹிராஸ் பாதிரியர் .B வில்லியம் கேரி .C தெ.பொ.மீ .D எல்லீஸ்
13. திராவிட ஒழிகளின் இலக்கண அமைப்பு என்ற நூலின் ஆசிரியர்
A .ஸ்டன்நோவ் B .பரோ .C ஜான்பெர்சிவர் .D யூல்ஸ் பிளாக்
14 திராவிட மொழியில் ஆராய்ச்சியில் மிகுதியும் ஈடுபட்ட இந்தியர்
A. சூரிய நாராயண சாஸ்திரியர் B. எல்.வி.இராமசாமி ஐயர்
C நீலகண்ட சாஸ்திரி .Dஇராமச்சந்திர தீட்சிதர்
15. திராவிட மொழிகளின் வேர்ச்சொல் அகராதி தயாரித்தவர்கள்
A எமனோ .B பர்ரோ .C இருவருமே .D இருவருமில்லை
16.பர்ரோவுடன் உழைத்த இந்திய அரசு மானிடவியல் துறை அறிஞர்
A. பட்டாச்சாரியா B. தீட்சிதர் .C எல்.வி.இராமசாமி . D தெ.பொ.மீ
17 1853 ல் கூய் மொழிக்கு இலக்கணம் ஒன்றை வெளியிட்டவர்
A.ராபர்ட்ஸ் B. . சூரிய நாராயண சாஸ்திரியர் .C நீலகண்ட சாஸ்திரி .D லெட்சுமாஜி
18. திராவிட மொழிகளின் ------------------------------ ஒலியன் தன்மையதாகும் என்கிறார் தெ.பொ.மீ
A உயிர் நீட்சி .B மெய் நீட்சி .C மெய் .D உயிர்
19. மூலத்திராவிட மொழியில் எத்தனை மூக்கொலியன்கள் இருந்ததாக எமனோ கருதுகிறார்
A. மூன்று B. ஆறு C எட்டு D ஐந்து
20 திராவிட மொழிகள்
A. தனிநிலை மொழிகள் B. உட்பினைப்புமொழிகள் .C.பிரிநிலைமொழிகள் D ஒட்டுநிலை மொழிகள்
21.உலக மொழிகளில் உள்ள வரிவடிவ எழுத்துக்களை எத்தனை வகையாக பிரிக்கலாம்?
A.ஐந்து B. மூன்று .C இரண்டு .D ஆறு
22. சொற்கள் ஒன்றோடொன்று சேர்ந்து தொடராகும் முறையை விளக்குவது
A. உருபனியல் B. ஒலியனியல் C எழுத்தியல் .D தொடரியல்
23 தமிழ் தொடர் அமைப்பில் முன் பின் மாற்றி பொருள் கொள்ள முடியாதது
A பெயரடை B. வினையடை C. இரண்டுமே D இரண்டும் இல்லை
24. ஏறிணி. வத்தொம். கலக்கு. தெளிவு பணிச்சம் ஆகியன எதனைக் குறிக்கும் மீனவர் மொழிச்சொற்கள்
A. தண்ணீர் B.படகு C மீன் D கடல்
25 யார் கால கல்வெட்டுகளில் வடமொழிச்சொற்கள் தமிழ்ப்படுத்தி எழுதப்பட்டது?
A நாயக்கர் .B பாண்டியர் .C பல்லவர் .D சோழர்
26. 1680 இல் இலத்தீன் மொழியில் தமிழ் இலக்கண நூலை எழுதியவர்
,A கால்டுவெல் .B.. கோஸ்டா பால்த்சரா C சீகன் பால்கு D எல்லீஸ்
27 சிற்றிலக்கிய கால மொழி அமைப்பை அறிந்துகொள்ள உதவும் இலக்கண நூல்
A. வீரசோழியம் B நன்னூல் C முத்துவீரியம் D நேமிநாதம்
28 பாண்டியர் என்ற சொல் மகாபாரத அரசன் பாண்டுவின் பெயரிலிருந்து வந்தது என்றவர்
A பதஞ்சலி B. வரருசி C தாலமி D பிளினி
29 பாண்டிய நாட்டிலும் சோழ நாட்டிலும் நிலவிய சில மொழி வழக்குகளையும், உச்சரிப்புகளையும் கூறும் மலையாள இலக்கண நூல்
A லீலாதிலகம் B.. தந்திரிக வர்த்திகா C பெரிப்ளுஸ் D மகாவம்சம்
30. தமிழ் ஒலிகளின் உச்சரிப்பினை விளக்கும் தொல்காப்பிய இயல்
A நூன்மரபு B. மொழிமரபு C பிறப்பியல் D மரபியல்
31. 'எழு' என்ற சொல்லை தொல்காப்பியர் எப்பொருளில் பயன்படுத்துகின்றார்?
A எழுதல் .B எழுத்து C ஒலியை உச்சரித்தல் D எழுதுதல்
32. ஒலிப்பு முறைகளை அடிப்படையாகக் கொண்டு தொல்காப்பியர் உயிர் ஒலிகளை எத்தனை பிரிவுகளாகப் பிரிக்கின்றார்?
A. மூன்று B. ஆறு C இரண்டு D ஐந்து
33. 'அஇ' என்பது எக்காலத்தில் 'அய்' ஆயிற்று என மொழியிலார் கருதுகின்றனர்
A சோழர்காலத்தில் .B தொல்காப்பியர் காலத்தில் C.பல்லவர் காலத்தில் D நாயக்கர் காலத்தில்
34. தொல்காப்பியர் குறிப்பிடும் சார்பு எழுத்துக்களை தற்கால மொழியியலார் எவ்வாறு குறிப்பிடுகின்றனர்
A.ஒலியன்கள் B. மாற்றொலிகள் .C உருபன்கள் .D இவற்றுள் எதுவும் இல்லை
35 தனி ஒலியாகவோ அல்லது தனி அசையாகவோ அல்லது பல அசைகளின் கூட்டாகவோ ஒலிக்கும் ஒலிக்கூறு
A.ஒலியன் B. மாற்றொலி .C உருபன் .D கூட்டுயிர்
36.தொல்காப்பியர் எல்லா வேர்களையும் பொதுவாக குறிக்க -------------------- எனும் வேரைப் பயன்படுத்துகின்றார்
A செய்த .B .செய் .C செய்பு .D செய்யும்
37. மெல்லின மெய்மயக்கமுடைய சொற்களான மருண்ம்,கேண்ம்,சென்ம் போன்றவை எக்காலத் தமிழில் முதலில் இடம்பெறுகின்றன.
A தொல்காப்பியர் காலம் .B. சங்ககாலம் .C சோழர்காலம் .D பல்லவர் காலம்
38. 'போர்பித்திலதே' போன்ற ஈரேவல் வினைகள் அதிகமாக இடம்பெற்றுள்ள சங்கஇலக்கியம்
A கலித்தொகை B அகநானூறு C .புறநானூறு D நற்றிணை
39 அட்டவை [ நீ கொன்றாய் ] கொடியவை [ நீ கொடியை ] போன்ற முன்னிலை ஒருமை சொற்களை
பயன்படுத்திய தனிச்சிறப்புடைய ஒரேசங்க இலக்கியம்.
A ஐங்குறுநூறு B குறுந்தொகை C .புறநானூறு D பரிபாடல்
40 .பன்மை விகுதியான 'கள்' முதன்முதலில் தொல்கப்பியத்தில் இடம்பெறும் சொல்
A மற்றையவர்கள் B. மக்கள் C அவர்கள் .D பொருள்கள்
41. பல்லவர் கால சோழர்காலத்திய தமிழை ஆராய உதவும் முக்கிய மூலாதாரங்கள்
A இலக்கியங்கள் B. வெளிநாட்டார் குறிப்பு C..நாட்குறிப்பு .D கல்வெட்டுகள்
42 யாருடைய பாடல்களில் ரகரமும் லகரமும் மொழி முதலில் வருகின்றன ?
A ஒளவையார் B. ஒட்டக்கூத்தர் C கபிலர் .D திருத்தக்கத்தேவர்
43.சுரபத்தி உயிர்கள் என அழைக்கப்படுவன
A இகரமும் உகரமும் B. எகரமும் உகரமும் C இகரமும் எகரமும் D அகரமும் உகரமும்
44. 'எனக்கு' என்பதை 'இனக்கு' என்றும், 'ஆயிரம்' என்பதை 'ஆஇரம்' என்றும் கூறுவது
A நாகரீக ஆக்கம் . B அளபெடை C. போலி நாகரிக ஆக்கம் D மொழி மாற்றம்
45.பாகூர் செப்பேடு யாருடைய காலத்தைச் சேர்ந்தது
A பராந்தகன் .B வரகுணன் C. சுந்தரச்சோழன் D மூன்றாம் நந்திவர்மன்
46. 'சோர், 'அதர்', 'பாப்'.,'மால்', 'வைர்' போன்ற திராவிட மொழி சொற்களை சமஸ்கிருதத்தில்
மாற்றம் செய்து புதிய பொருள்தரும்சொற்களாக பயன்படுத்தலாம் என்று கூறியவர்
A நன்னயபட்டர் .B சு சக்திவேல் C குமரிலப் பட்டர் D தீட்சிதர்
47.வெடிப்பொலிகள் ஒரோ வழி மூக்கினச் சாயல் பெறுதல் என்பது ------------------- காலத்தில் தொடங்கியது
A சோழர்காலத்தில் .B தற்காலத்தில் C.பல்லவர் காலத்தில் D நாயக்கர் காலத்தில்
48. ளகர மெய்யும் ழகர மெய்யும் ஒன்றாகும் ஒலியன் மாற்றம் குறிப்பாக எக் கிளை மொழியில் காணப்படுக்ன்றது?
A ஈரோட்டுக் கிளைமொழி B தென் மாவட்டக் கிளைமொழி
C கோவை மாவட்டக்கிளைமொழி Dநீலகிரிமாவட்டக் கிளைமொழி
49. 'கில்' என்ற புதிய இடைச்சொல் யார் காலத்தமிழில் இடம்பெறுகின்றது?
A சோழர்காலத்தில் .B தற்காலத்தில் C.பல்லவர் காலத்தில் D நாயக்கர் காலத்தில்
50. சமஸ்கிருதத்தை தமிழில் வரிவடிவத்தில் எழுதுவதற்கெனச் சில கிரந்த எழுத்துக்களை புகுத்தியமை
யார் காலத்தில் ஏற்பட்ட முக்கியமாறுதல்?
A சோழர்காலத்தில் .B பாண்டியர் காலத்தில் C.பல்லவர் காலத்தில் D நாயக்கர் காலத்தில்
வெற்றிப்பாதையில் நமது பயணம்
வாழ்த்துக்கள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக