புத நேற்று மத்திய அமைச்சரவையில் 19 பேர் புதிதாக சேர்க்கப்பட்டு, அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டது. மேலும் அமைச்சர்கள் பலரின் இலாக்காக்கள் மாற்றி அமைக்கப்பட்டது. அதன்படி ஸ்மிருதி இரானி கவனித்து வந்த மனிதவள மேம்பாட்டுத் துறை பிரகாஷ் ஜவடேகரிடம் வழங்கப்பட்டுள்ளது.
அமைச்சரவை மாற்றம் செய்யப்பட்ட பிறகு முதல் முறையாக இன்று காலை செய்தியாளர்களிடம் பேசிய பிரகாஷ் ஜவடேக்கர், மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்திற்கு மாற்றப்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த துறையில் ஸ்மிருதி இரானி பல நல்ல பணிகளை சிறப்பாக செய்துள்ளார். மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சராக நாளை பொறுப்பேற்க உள்ளேன். ஸ்மிருதி இரானியிடம் இத்துறை குறித்து ஆலோசித்த பிறகு பணியை துவங்க உள்ளேன்.
நாட்டில் மாற்றத்தை கொண்டு வருவதற்கான சிறந்த கருவி கல்வி தான். நவீன இந்தியாவை உருவாக்க கல்வியின் தரத்தை உயர்த்துவது அவசியம். கல்வியின் தரத்தை உயர்த்துவதற்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். கல்வி என்பது பா.ஜ.,வின் பாடம் பிரிவு அல்ல. ஒவ்வொருவரின் வாழ்க்கையையும் தொட்ட விஷயம். அதனால் இந்த துறையின் வளர்ச்சிக்காக ஒவ்வொருவரிடமும் ஆலோசிக்க உள்ளேன் என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக