ஞாயிறு, 28 டிசம்பர், 2014

முதுகலைத் தமிழாசிரியர் தேர்வு-2014 வினாத்தாள் B2-13

                      தமிழ்த்தாமரை

                                   தருமபுரி                   7598299935

                        முதுகலைத் தமிழாசிரியர் தேர்வு-2014          வினாத்தாள் B2-13

 

1.குகைக் கல்வெட்டுகளின எழுத்து பிராமி என்றும் மொழி தமிழ் என்றும் கூறியவர்

A ஹிராஸ் பாதிரியர்        .B வில்லியம் கேரி               .C தெ.பொ.மீ         .D எல்லீஸ்

2 .பகுதியுடன்இடைநிலை விகுதிகளை ஒட்டிக்கொள்ளும் சொற்கள  உடைய மொழி

A .தனி நிலை              B. ஒட்டு நிலை         .C உட்பிணைப்பு நிலை   இவை அணைத்துமே.

3. .மூல திராவி  ொழியில் உயிர்கள்

A 10                         B 16                         .30                    .D 12

4 தமிழ் வேர்ச்சொல் ஆய்வில் மிகவும் புகழ் பெற்றவர்

ஸ்மீத்              .B கால்டுவெல்                 .C சி.ஆர்.ரெட்டி              .D தேவநேயப்பாவாணர்

5 மீட்டுருவாக்கம் மூலம் தொல் திராவிட மொழியி ஒலியன் அமைப்பை ஆராய்ந்தவர்

A.பிரிகேல்   B .எமனோ                             .C ஜான்பெர்சிவர்           .D லீச்

6.கன்னட மொழியின் முதல் இலக்கண நூல்

சமவாயங்க சூத்திரம்     B. லீலாதிலகம்         C சப்த மணி தர்ப்பனா       .D பாஷா பூஷணம்

7 திராவிடம் என்ற சொல்லிலிருந்துதான் தமிழ் என்ற சொல் தோன்றியது என்ற கருத்துடையவர்

A.கால்டுவெல்         B. சட்டர்ஜி               .C தீட்சதர்                      .D எல்லீஸ்

மைசூர் சந்தரகிரி,கல்யான்புரி என்ற ஆறுகளுக்கு இடைப்பட்ட பகுதிகளில் வழங்கும் மொழி

A. கோடா               B. கோண்டி .           C துளு                       .D மால்டோ

9. மொகஞ்சதாரோஹரப்பாவில் கண்டெடுக்கப்பட்ட மொழி திராவிட மொழியே என்று கூறியவர்

ஹிராஸ் பாதிரியர்         .B வில்லியம் கேரி                .C தெ.பொ.மீ          .D எல்லீஸ்

10 மூலத்திராவிட மொழியிலிருந்து இறுதியாக பிரிந்த மொழி

தெலுங்கு                  .B துளு                .C கன்னடம்           .D மலையாளம்

11.அகில் என்னும் தமிழ்ச்சொல் எந்த மொழியில் அஹாலத் என்று அழைக்கப்படுகின்றது

A. கிரேக்கம்                 B. ஆங்கிலம்              .C ஹிப்ரூ           .D சீனம்

12. மிக நெருங்கிய உறவுடைய ஒரு குழுவாக அமையும் முறையில் தமிழ்,ெலுங்கு,மலையாளம்

 கன்னடம் ஆகிய மொழிகளுக்கிடையேயானஒற்றுமைகளைச் முதலில் சுட்டிக்காட்டியவர்

ஹிராஸ் பாதிரியர்         .B வில்லியம் கேரி                .C தெ.பொ.மீ          .D எல்லீஸ்

13. திராவிட ஒழிகளின் இலக்கண அமைப்பு என்ற நூலின் ஆசிரியர்

A .ஸ்டன்நோவ்                   B .பரோ            .C ஜான்பெர்சிவர்    .D யூல்ஸ் பிளாக்

                     

14 திராவிட மொழியில் ஆராய்ச்சியில் மிகுதியும் ஈடுபட்ட இந்தியர்

A. சூரிய நாராயண சாஸ்திரியர்                                 B. எல்.வி.இராமசாமி ஐயர்

 நீலகண்ட சாஸ்திரி                                           .Dஇராமச்சந்திர தீட்சிதர்

15. திராவிட மொழிகளின் வேர்ச்சொல் அகராதி தயாரித்தவர்கள்

எமனோ                    .B பர்ரோ                .C இருவருமே            .D இருவருமில்லை

16.பர்ரோவுடன் உழைத்த இந்திய அரசு மானிடவியல் துறை அறிஞர்

A. பட்டாச்சாரியா           B. தீட்சிதர்               .C எல்.வி.இராமசாமி   .     தெ.பொ.மீ

17 1853 ல் கூய் மொழிக்கு இலக்கணம் ஒன்றை வெளியிட்டவர்

A.ராபர்ட்ஸ்    B. சூரிய நாராயண சாஸ்திரியர்   .C நீலகண்ட சாஸ்திரி    .D லெட்சுமாஜி                                            

18. திராவிட மொழிகளின் ------------------------------  ஒலியன் தன்மையதாகும்  என்கிறார் தெ.பொ.மீ

உயிர் நீட்சி              .B மெய் நீட்சி           .C மெய்            .D உயிர்

19. மூலத்திராவிட மொழியில் எத்தனை மூக்கொலியன்கள் இருந்ததாக எமனோ கருதுகிறார்

A. மூன்று                          B. ஆறு        எட்டு             ஐந்து

20 திராவிட மொழிகள்  

A. தனிநிலை மொழிகள B. உட்பினைப்புமொழிகள் .C.பிரிநிலைமொழிகள்   D ஒட்டுநிலை மொழிகள்

21.உலக மொழிகளில் உள்ள வரிவடிவ எழுத்துக்கள எத்தனை வகையாக பிரிக்கலாம்?

A.ஐந்து                     B. மூன்று               .C இரண்டு                   .D ஆறு

22. சொற்கள் ஒன்றோடொன்ற  ேர்ந்து தொடராகும் முறையை விளக்குவது

A. உருபனியல்           B. ஒலியனியல்         C எழுத்தியல்               .D தொடரியல்

23 தமிழ் தொடர் அமைப்பில் முன் பின் மாற்றி பொருள் கொள்ள முடியாதது

A பெயரடை       B. வினையடை C. இரண்டும D இரண்டும் இல்லை

24ஏறிணி. த்தொம். கலக்கு. தெளிவு பணிச்சம் ஆகியன எதனைக் குறிக்கும் மீனவர் மொழிச்சொற்கள்

A. தண்ணீர்             B.படகு          மீன்              கடல்  

25 யார் கால கல்வெட்டுகளில் வடமொழிச்சொற்கள் தமிழ்ப்படுத்தி எழுதப்பட்டது?

நாயக்கர்                    .B பாண்டியர்               .C பல்லவர்           .D சோழர்

 

261680 ல் இலத்தீன் மொழியில் தமிழ் இலக்கண நூலை எழுதியவர்  

,A கால்டுவெல்                  .B.. கோஸ்டா பால்த்சரா         சீகன் பால்கு         எல்லீஸ்

27 சிற்றிலக்கிய கால மொழி அமைப்பை அறிந்துகொள்ள உதவும் இலக்கண நூல்

A. வீரசோழியம்             B நன்னூல்                       முத்துவீரியம்         D நேமிநாதம்

 

28 பாண்டியர் என்ற சொல் மகாபாரத அரசன் பாண்டுவின் பெயரிலிருந்து வந்தது என்றவர்

A பதஞ்சலி             B. வரருசி                     தாலமி           D பிளினி

29 பாண்டிய நாட்டிலும் சோழ நாட்டிலும் நிலவிய சில மொழி வழக்குகளையும்உச்சரிப்புகளையும் கூறும் மலையாள இலக்கண நூல்

லீலாதிலகம்         B.. தந்திரிக வர்த்திகா                      பெரிப்ளுஸ்         மகாவம்சம்

30தமிழ் ஒலிகளின் உச்சரிப்பினை விளக்கும் தொல்காப்பிய இயல்

நூன்மரபு                        B. மொழிமரபு               பிறப்பியல்           D மரபியல்

31'எழுஎன்ற சொல்லை தொல்காப்பியர் எப்பொருளில் பயன்படுத்துகின்றார்?

A எழுதல்               .B எழுத்து                       C ஒலியை உச்சரித்தல்       D எழுதுதல்

32ஒலிப்பு முறைகளை அடிப்படையாகக் கொண்டு தொல்காப்பியர் உயிர் லிகளை எத்தனை பிரிவுகளாகப் பிரிக்கின்றார்?

A. மூன்று                  B. ஆறு                         இரண்டு                     ஐந்து

33. 'அஇஎன்பது எக்காலத்தில் 'அய்ஆயிற்று என மொழியிலார் கருதுகின்றனர்

சோழர்காலத்தில்   .B தொல்காப்பியர் காலத்தில  C.பல்லவர் காலத்தில்   D நாயக்கர் காலத்தில்

34தொல்காப்பியர் குறிப்பிடும் சார்பு எழுத்துக்களை தற்கால மொழியியலார் எவ்வாறு குறிப்பிடுகின்றனர்

A.ஒலியன்கள்         B. மாற்றொலிகள்           .C உருபன்கள்       .D இவற்றுள் எதுவும் இல்லை

35 தனி ஒலியாகவோ அல்லது தனி அசையாகவோ அல்லது பல அசைகளின் கூட்டாகவோ ஒலிக்கும் ஒலிக்கூறு

A.ஒலியன்                 B. மாற்றொலி            .C உருபன்           .D கூட்டுயிர்

36.தொல்காப்பியர் எல்லா வேர்களையும் பொதுவாக குறிக்க -------------------- எனும் வேரைப் பயன்படுத்துகின்றார்

செய்த                   .B .செய்                     .C செய்பு           .D செய்யும்

37மெல்லின மெய்மயக்கமுடைய சொற்களான மருண்ம்,ேண்ம்,சென்ம் போன்றவை எக்காலத் தமிழில் முதலில் இடம்பெறுகின்றன.

தொல்காப்பியர் காலம  .B. சங்ககாலம்    .C சோழர்காலம்       .D பல்லவர் காலம்

38. 'போர்பித்திலதே'  ன்ற ஈரேவல் வினைகள் அதிகமாக இடம்பெற்றுள்ள சங்கஇலக்கியம்

A கலித்தொகை       அகநானூறு           C .புறநானூறு         நற்றிணை

39 அட்டவை  கொன்றாய் ]  கொடியவை  [ நீ கொடியை ]  போன்ற முன்னிலை ஒருமை சொற்களை

 பயன்படுத்திய தனிச்சிறப்புடைய ஒரேசங்க இலக்கியம்.

A ஐங்குறுநூறு      குறுந்தொகை            C .புறநானூறு           D பரிபாடல்

40 .பன்மை விகுதியான 'கள்முதன்முதலில் தொல்கப்பியத்தில் இடம்பெறும் சொல்

மற்றையவர்கள்            B. க்கள்           C அவர்கள்                 .D பொருள்கள்

41பல்லவர் கால சோழர்காலத்திய தமிழை ஆராய உதவும் முக்கிய மூலாதாரங்கள்

இலக்கியங்கள்           B. வெளிநாட்டார் குறிப்பு         C..நாட்குறிப்பு       .D கல்வெட்டுகள்

42 யாருடை  ாடல்களில் ரகரமும் லகரமும் மொழி முதலில் வருகின்றன ?

ஒளவையார்             B. ஒட்டக்கூத்தர்           கபிலர்               .D திருத்தக்கத்தேவர்

43.சுரபத்தி உயிர்கள் என அழைக்கப்படுவன

A இகரமும் உகரமும்        B. எகரமும் உகரமும்      இகரமும் எகரமும்   அகரமும் உகரமும்                      

44. 'எனக்குஎன்பதை 'இனக்குஎன்றும், 'ஆயிரம்என்பத  'ஆஇரமஎன்றும் கூறுவது

நாகரீக ஆக்கம  .        B அளபெடை            C. போலி நாகரிக ஆக்கம்    மொழி மாற்றம்

45.பாகூர் செப்பேடு யாருடைய காலத்தைச் சேர்ந்தது

A பராந்தகன்               .B வரகுணன்      C. சுந்தரச்சோழன்      மூன்றாம் நந்திவர்மன்

46. 'சோர், 'அதர்', 'பாப்'.,'ால்', 'வைர்போன்ற திராவிட மொழி சொற்களை சமஸ்கிருதத்தில் 

மாற்றம் செய்து புதிய பொருள்தரும்சொற்களாக பயன்படுத்தலாம் என்று கூறியவர்

நன்னயபட்டர்              .B சு சக்திவேல்          குமரிலப் பட்டர்       தீட்சிதர்

47.வெடிப்பொலிகள் ஒரோ வழி மூக்கினச் சாயல் பெறுதல் என்பத  ------------------- காலத்தில் தொடங்கியது

சோழர்காலத்தில்   .B தற்காலத்தில  C.பல்லவர் காலத்தில்   D நாயக்கர் காலத்தில்

48. ளகர மெய்யும் ழகர மெய்யும் ஒன்றாகும் ஒலியன் மாற்றம் குறிப்பாக எக் கிளை மொழியில் காணப்படுக்ன்றது?

ஈரோட்டுக் கிளைமொழி                                 B தென் மாவட்டக் கிளைமொழி

கோவை மாவட்டக்கிளைமொழி                       Dநீலகிரிமாவட்டக் கிளைமொழி

49. 'கில்என்ற புதிய இடைச்சொல் யார் காலத்தமிழில் இடம்பெறுகின்றது?

சோழர்காலத்தில்   .B தற்காலத்தில  C.பல்லவர் காலத்தில்   D நாயக்கர் காலத்தில்

50. சமஸ்கிருதத்தை தமிழில் வரிவடிவத்தில் எழுதுவதற்கெனச் சில கிரந்த எழுத்துக்களை புகுத்தியமை 

யார் காலத்தில் ஏற்பட்ட முக்கியமாறுதல்? 

சோழர்காலத்தில்   .B பாண்டியர் காலத்தில  C.பல்லவர் காலத்தில்   D நாயக்கர் காலத்தில்

 

 

 

 

             வெற்றிப்பாதையில் நமது   பயணம்                                                                          

       

                     வாழ்த்துக்கள்          

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

     

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

புதன், 17 டிசம்பர், 2014

ஆசிரியர் இல்லாத வகுப்பறை....


ஆசிரியர் இல்லாத வகுப்பறை ஒன்றில் இருபதுக்கும் மேற்பட்ட மாணவர்கள் சலசலவெனப் பேசிக்கொண்டிருக்கிறார்கள். அவர்கள் முன்னே இருக்கும் சாம்பல் நிறச் சுவரில் ஒரு கரும்பலகை இருக்கிறது. வகுப்பறையின் கதவு மூடப்பட்டிருக்கிறது. திடீரென வகுப்பாசிரியர் கதவைத் திறந்து வகுப்புக்குள் நுழைய, மாணவர்கள் திடுக்கிட்டுப் பேச்சை நிறுத்திவிட்டு எழுந்து நிற்கிறார்கள்.

ஆசிரியர்தான் உள்ளே வந்துவிட்டாரே எனச் சிலர் உட்காரலாம் எனச் சற்றே குனியும் போது, சைகையில் அவர்களை நிற்கும்படி சொல்கிறார் ஆசிரியர். தன் கைக் கடிகாரத்தின் நொடி முள்ளை உற்றுப்பார்க்கிறார். உடனே வகுப்பறை சுவரில் பொருத்தப்பட்டிருக்கும் ஸ்பீக்கரில் ஒரு குரல் ஒலிக்கிறது. "நான் உங்கள் பள்ளித் தலைமை ஆசிரியர் பேசுகிறேன். பாடம் கற்கும் நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை. ஆனால் இன்று முதல் பள்ளியில் சில மாற்றங்கள் அமலாகும் என்பதைத் தெரிவிக்கிறேன்.

இனி உங்கள் ஆசிரியர் அறிவுரை கூறுவார். அவர் சொல்வதை அப்படியே பின்பற்றுங்கள். இந்தப் பள்ளிக்கும், உங்கள் சக மாணவர்களுக்கும் பெருமை சேர்ப்பீர்கள் என்று எனக்குத் தெரியும். நன்றி பசங்களா!."

2+2=5

அனைவரையும் உட்காரச் சொல்லிவிட்டு, ஒரு சாக்பீஸ் எடுத்து கரும்பலகையில் 2 + 2 = 5 என எழுதுகிறார் ஆசிரியர். எல்லா மாணவர்களும் பரபரப்படைய, 'ச்சூ' என அதட்டிவிட்டு, "இது தான் இன்றைய முதல் பாடம். இரண்டை இரண்டோடு கூட்டினால் ஐந்து. எல்லோரும் சொல்லுங்கள். திரும்பத் திரும்பச் சொல்லுங்கள்" என்கிறார். எல்லா மாணவர்களும் அப்படியே சொல்கிறார்கள்.

ஒருவன் மட்டும் தயக்கத்தோடு தன் கை விரல்களைத் தூக்கி, "2+2 நிச்சயமாக 4 என்று தானே நான் நினைத்தேன்" என மெல்லிய குரலில் கேட்கிறான். "நீ எதையும் யோசிக்க வேண்டிய அவசியமில்லை. 2+2=5 தான்" என மிரட்டலான குரலில் ஆசிரியர் சொல்கிறார். ஆனால் வேறொரு மாணவன் விருட்டென எழுந்து உரத்த குரலில், "எப்போதுமே 4-ஆக இருந்தது, இப்போது எப்படி 5-ஆக மாறும்?" எனக் கேட்கிறான். எரிச்சலுறும் ஆசிரியர் "யார் உனக்குப் பேச அனுமதி தந்தது? என்னையே கேள்வி கேட்கிறாயா? 2+2=5 எனச் சொல்லு" என்கிறார்.

ஆனால் அவனோ தன் சக மாணவர்கள் பக்கமாகத் திரும்பித் தன் கைவிரல்களைக் கொண்டு நான்குதான் எனச் சைகை காட்டுகிறான். ஆசிரியரிடமும் "4 என்று உங்களுக்கே தெரியும், பின்பு ஏன் சொல்ல மறுக்கிறீர்கள்?" என வாதாடுகிறான். கடும்கோபத்துடன் ஆசிரியர் வகுப்பறை விட்டு வெளியேறுகிறார்.

சிறந்த மாணவன் யார்?

அனைத்து மாணவர்களும் பதற்றமடைகிறார்கள். இப்போது மேல் வகுப்பைச் சேர்ந்த தலை சிறந்த மாணவர்கள் 3 பேரை வகுப்புக்குள் அழைத்து வருகிறார் ஆசிரியர். "நீங்கள் சொல்லுங்கள் 2 + 2 = என்ன?" விறைப்பாக நின்றபடி, முகத்தில் எந்தச் சலனமும் இன்றி அவர்கள் மூன்று பேரும் ஒரே குரலில் "சார், 5 சார்" என்கிறார்கள். "நன்று" என்கிறார் ஆசிரியர்.

கரும்பலகையில் தான் முன்பே எழுதிய ஈக்வேஷனில் 5-ஐ மட்டும் அழித்துவிட்டு இதுவரை மறுத்துப் பேசிய மாணவனிடம் "இப்போது நீ இதற்கான பதிலை எழுது" என்கிறார். இவன் கையில் சாக்பீஸ் எடுக்கிறான். மேல் வகுப்பைச் சேர்ந்த 3 மாணவர்களும் அவன் பின்னால் நின்றபடி மிஷின் கன் போல் தங்கள் கைகளை உயர்த்திப் பிடிக்கிறார்கள். "இது தான் உன் கடைசி வாய்ப்பு" என்கிறார் ஆசிரியர். இவனோ அவர்களை ஒரு முறை திரும்பிப் பார்த்துவிட்டு, கரும்பலகையில் அழுத்தந்திருத்தமாக "4" என எழுதிவிட்டு வகுப்பைப் பார்த்து நிற்கிறான்.

கடைசி வாய்ப்பு

3 மாணவர்களும் மிஷின் கன் போல வைத்திருக்கும் கைகளை வேகமாக இயக்க, கரும்பலகையில் எழுதப்பட்டிருக்கும் '4'- ன் மேல் ரத்தம் தெறிக்கிறது. மாணவனின் உடல் தரையில் சரிந்து விழுகிறது. மாணவர்கள் அனைவரும் உறைந்துபோய் பார்க்கிறார்கள்.

"இன்னைக்கு எடுத்த பாடம் வேறு யாருக்காவது புரியவில்லையா?" என கேட்டுவிட்டு "அதை இங்கிருந்து அப்புறப்படுத்துங்கள்" என ரத்தம் வழிந்தோடியபடி கிடக்கும் மாணவன் உடலைச் சுட்டிக்காட்டுகிறார் ஆசிரியர். மீண்டும் வகுப்பு தொடர்கிறது. கரும்பலகையில் வழிந்தோடும் ரத்தத்தை டஸ்டர் கொண்டு அழித்துவிட்டு, 2 + 2 = 5 என எழுதுகிறார் ஆசிரியர். எல்லாரும் அப்படியே நோட் புக்கில் எழுதும்படி கட்டளையிடுகிறார். எல்லோரும் 2+2 =5 என மீண்டும் மீண்டும் உரக்கச் சொல்லிக்கொண்டே எழுதுகிறார்கள்.

ஒரு மாணவன் மட்டும் தன் நோட்டில் 2 + 2 =5 என எழுதி, பின்பு அந்த 5-ஐ பென்சிலால் சரசரவென அடித்துவிட்டு '4' என எழுதுகிறான்.

குறுக்கு விசாரணை

இது "2+2=5" எனும் இரானிய குறும்படம். கல்வி அரசியல், சமூக அரசியல் குறித்து ஆயிரம் பக்கங்கள் கொண்ட புத்தகம் ஏற்படுத்த முடியாத தாக்கத்தை இந்த 7 நிமிட குறும்படம் ஏற்படுத்துகிறது. காட்சி மொழியின் வலிமை, படைப்பாளரின் காட்சி ரீதியான அறிவுத்திறன், கல்விமுறை மீதான கடும் விமர்சனம், சமூக அநீதி மற்றும் அரசியல் அடக்குமுறைக்கு எதிரான அறைகூவல் எனப் பல்வேறு படிமங்கள் இந்தத் திரை உரையில் விரிந்து கிடக்கின்றன.

ஒரு கருத்தைக் காட்சியாக மொழி பெயர்க்கும் விதம்தான் காட்சி ஊடகத்தின் மையம். '2+2=5' படம் அதற்கு சிறந்த உதாரணம். இந்தப் படத்தின் கதாபாத்திரங்கள் அதிகம் பேசவில்லை. ஆனால் ஒவ்வொரு ஃபிரேமும் நம்முடன் உரையாடிக்கொண்டே இருக்கிறது. மாணவர்களின் கலகலப்பான பேச்சு, அதிரடியான ஆசிரியர், அதன் பின் நிகழும் பதறவைக்கும் சம்பவங்கள் என அனைத்தையும் ஒரு மவுன சாட்சியாக அந்த வகுப்பில் மாட்டப்பட்டிருக்கும் கரும்பலகை பார்த்துக் கொண்டே இருக்கிறது.

சாம்பல் நிறத்தில் இருக்கும் சுவர் இது உயிரோட்டமற்ற இடம் என்பதை உருவகப்படுத்துகிறது. ஆசிரியரை எதிர்த்துப் பேசும் மாணவன் கண்கள் ஒளிர்கின்றன. ஆனால் அவர் அழைத்து வரும் சிறந்த மாணவர்களின் கண்களோ அசைவற்று இருக்கின்றன. அவர்களின் உடல் அசைவு கூட புரோகிராம் செய்யப்பட்ட ரோபோவைப் போல இருக்கிறது. இப்படிக் காட்சி ரீதியாகவும் அற்புதமாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

மாற்றுக் கல்வி தேவை

"நான் சொன்னதை மட்டும் செய். நீ சுயமாக யோசிக்க வேண்டிய அவசிய மில்லை" என்னும் வார்த்தைகள் குழந்தைக்கு எதிரான வன்முறையாகும். இந்த வார்த்தைகளைப் பெருவாரியான பள்ளி ஆசிரியர்களின் உதடுகள் உச்சரிக்கின்றன. சுடர்விடும் அறிவுடன் துள்ளித்திரியும் குழந்தையின் சுயசிந்தனையை வளர்த்தெடுக்க வேண்டிய கல்விக்கூடங்கள் அவர்களின் சுயத்தை அழிக்கின்றன.

"மவுனம் காக்கவும்" என்னும் வழிமுறை குழந்தையை முறைப்படுத்தி, ஒழுங்குபடுத்தி, அமைதியை நிலை நாட்டும் வழியல்ல. அது சுய சுந்தனையை மரணப்படுக்கையில் தள்ளுவதற்குச் சமம்.

தினம் தினம் ஒரே வகுப்பில், ஒரே வரிசையில் அமர்ந்து, ஒரே பாடத்தை எல்லோரும் ஒன்றுபோல ஒரு வருடம் முழுக்கக் கற்று, அடுத்த வகுப்புக்கு முன்னேற வேண்டும் என்கிறது தற்போதைய கல்வித் திட்டம். இந்த வழக்கத்திற்கு ஒத்துப்போக முடியாத குழந்தை நசுக்கப்படுகிறது. இத்தகைய கல்விமுறைக்கு மாற்றாக ஒரு மாற்றுக் கல்விமுறை சாத்தியம் என்று நாம் விவாதித்துக் கொண்டிருக்கும் பன்முக அறிவுத்திறன் பற்றிய கோட்பாடு சொல்கிறது.

அதிலும் காட்சி ரீதியான அறிவுத் திறன் படைத்தவர்களுக்கு மாற்றுக் கல்விமுறை உடனடித் தேவை என்கிறது. 


ஞாயிறு, 7 டிசம்பர், 2014

TRB PG TAMIL:இலக்கிய வகைச் சொற்கள்


1.4 இலக்கிய வகைச் சொற்கள்

இலக்கியங்களில் இடம் பெறும் சொற்களை நான்கு வகையாகப் பிரிக்கலாம். அவை,

1) இயற்சொல்
2) திரிசொல்
3) திசைச்சொல்
4) வடசொல்

என்பவை ஆகும்.

1.4.1 இயற்சொல்

கற்றவர், கல்லாதவர் ஆகிய அனைவருக்கும் எளிதில் பொருள் புரியும் வகையில் உள்ள சொற்கள் இயற்சொற்கள் எனப்படும்.

(எ.கா)     மரம்,   நடந்தான்

மேலே காட்டப்பட்ட சொற்கள் தங்கள் எளிமை இயல்பால் அனைவருக்கும் பொருள் விளங்கும் வகையில் உள்ளன. எனவே இவை இயற்சொற்கள் என்று அழைக்கப்படுகின்றன.

செந்தமிழ் ஆகித் திரியாது யார்க்கும்
தம்பொருள் விளக்கும் தன்மைய இயற்சொல்

(நன்னூல் : 271)

செந்தமிழ் நாட்டின் சொற்களில் கற்றவர், கல்லாதவர் என்று எல்லோருக்கும் எளிதில் பொருள் விளங்கும் தன்மை உடையவை இயற்சொல் என்பது இந்த நூற்பாவின் பொருள்.

● இயற்சொல் வகைகள்

இயற்சொல் இரண்டு வகைப்படும். அவை,

1) பெயர் இயற்சொல்
2) வினை இயற்சொல்

என்பவை ஆகும்.

● பெயர் இயற்சொல்

கற்றவர், கல்லாதவர் அனைவருக்கும் எளிதில் பொருள் விளங்கும் வகையில் வரும் பெயர்ச் சொற்களைப் பெயர் இயற்சொற்கள் என்று கூறுகிறோம்.

(எ.கா)   மரம்,  மலை,  கடல்

இந்தப் பெயர்ச் சொற்களின் பொருள் அனைவருக்கும் எளிதில் விளங்கும் வகையில் உள்ளன. எனவே இவை பெயர் இயற்சொற்கள் என்று அழைக்கப்படுகின்றன.

● வினை இயற்சொல்

கற்றவர், கல்லாதவர் அனைவருக்கும் எளிதில் பொருள் விளங்கும் வகையில் வரும் வினைச்சொற்களை வினை இயற்சொற்கள் என்று கூறுகிறோம்.

(எ.கா)   நடந்தான்,   சிரித்தாள்,   வந்தது.

இந்த வினைச் சொற்களின் பொருள் அனைவருக்கும் எளிதில் விளங்கும் வகையில் உள்ளன. எனவே, இவை வினை இயற்சொற்கள் என்று அழைக்கப்படுகின்றன.

1.4.2 திரிசொல்

கற்றவர்கள் மட்டும் பொருள் உணர்ந்து கொள்ளும் வகையில் அமைந்துள்ள சொற்கள்திரிசொற்கள் எனப்படும்.

(எ.கா)   தத்தை,  ஆழி,  செப்பினான்

மேலே காட்டப்பட்டுள்ள சொற்கள் எளிதில் பொருள் புரிந்து கொள்ள இயலாத வகையில் வந்துள்ளன.

தத்தை

-

கிளி

ஆழி

-

கடல்

செப்பினான்

-

உரைத்தான்

என்று கற்றவர்களால் பொருள் தெரிவிக்கப்பட்டால் மட்டுமே பொருள் விளங்கும் வகையில் உள்ளன. எனவே இவை திரிசொற்கள் என்று அழைக்கப்படுகின்றன.

● திரிசொல் வகைகள்

திரிசொல் இரண்டு வகைப்படும். அவை,

1)  ஒரு பொருள் குறித்த பல திரிசொல்
2)  பல பொருள் குறித்த ஒரு திரிசொல்

என்பவை ஆகும்.

1. ஒரு பொருள் குறித்த பல திரிசொல்

ஒரே பொருளைத் தரும் பல திரிசொற்கள் தமிழில் உள்ளன. அவை ஒரு பொருள் குறித்த பல திரிசொல் எனப்படும்.

(எ.கா)

கமலம் 
கஞ்சம்
முண்டகம்
முளரி

இவை யாவும் தாமரை என்னும் ஒரே பொருளைக் குறிக்கும் பல திரிசொற்கள் ஆகும். இவை யாவும் பெயர்ச்சொற்கள். எனவே ஒரு பொருள் குறித்த பல பெயர்த் திரிசொற்கள் ஆகும்.

(எ.கா)

செப்பினான்
உரைத்தான்
மொழிந்தான்
இயம்பினான்

இவை யாவும் சொன்னான் என்னும் ஒரே பொருளைக் குறிக்கும் பல திரிசொற்கள் ஆகும். இவை யாவும் வினைச்சொற்கள். எனவே ஒரு பொருள் குறித்த பல வினைத் திரிசொற்கள் ஆகும்.

2. பல பொருள் குறித்த ஒரு திரிசொல்

பல பொருளைத் தரும் ஒரு திரிசொல்லும் தமிழில் உள்ளது. அது, பல பொருள் குறித்த ஒரு திரிசொல் எனப்படும்.

(எ.கா)      ஆவி

இச்சொல்லுக்கு உயிர், பேய், மெல்லிய புகை முதலான பல பொருள்கள் உள்ளன. ஆவி என்பது பெயர்ச்சொல். எனவே இதைப் பலபொருள் குறித்த ஒரு பெயர்த் திரிசொல் என்கிறோம்.

(எ.கா)     வீசு

இச்சொல்லுக்கு எறி, சிதறு, பரவச்செய், ஆட்டு முதலான பல பொருள்கள் உள்ளன. வீசு என்பது வினைச்சொல். எனவே இதைப் பல பொருள் குறித்த ஒரு வினைத் திரிசொல் என்கிறோம்.

ஒரு பொருள் குறித்த பல சொல் ஆகியும் 
பல பொருள் குறித்த ஒரு சொல் ஆகியும்
அரிது உணர் பொருளன திரிசொல் ஆகும்

(நன்னூல் : 272)

ஒரு பொருளைக் குறிக்கும் பலசொற்களாகவும் பலபொருள்களைக் குறிக்கும் ஒருசொல் ஆகவும் கற்றோர் மட்டுமே பொருளை உணரும் வகையில் வருவன திரிசொல் ஆகும் என்பது இதன் பொருள்.

1.4.3 திசைச்சொல்

தமிழ்நாட்டுக்கு அப்பால் உள்ள பிற பகுதிகளில் பேசப்படும் மொழிகளிலிருந்து வந்து தமிழ்மொழியில் கலந்து வரும் சொற்கள் திசைச் சொற்கள் எனப்படும்.

(எ.கா)   ஆசாமி,    சாவி

இவற்றில் ஆசாமி என்னும் சொல் உருதுமொழிச் சொல். சாவி என்னும் சொல் போர்த்துக்கீசிய மொழியில் உள்ள சொல். இச்சொற்கள் தமிழ்மொழியில் கலந்து வருகின்றன. இவ்வாறு தமிழ்நாட்டுக்கு நான்கு திசைகளிலும் உள்ள பகுதிகளிலிருந்து தமிழ் மொழியில் வந்து வழங்கும் சொற்கள் திசைச் சொற்கள் எனப்படும்.

செந்தமிழ் நிலத்துடன் சேர்ந்த பன்னிரு நாடுகளிலிருந்து தமிழ் மொழியில் வந்து வழங்கும் சொற்களும் திசைச் சொற்கள் எனப்படும்.

 

பெற்றம்-பசு-தென்பாண்டி நாட்டுச்சொல்
தள்ளை-தாய்-குட்ட நாட்டுச்சொல்
அச்சன்-தந்தை-குடநாட்டுச்சொல்
பாழி-சிறுகுளம்-பூழிநாட்டுச்சொல்

 

இவை போன்றவை செந்தமிழ்நிலத்துடன் சேர்ந்த நாடுகளிலிருந்து தமிழ் மொழியில் வந்து வழங்கும் சொற்கள் ஆகும்.

சில திசைச் சொற்களின் பட்டியலையும் அவற்றின் நாடுகளையும் காண்போம்.

திசைச்சொல்

மொழி

தமிழ்

கெட்டிதெலுங்குஉறுதி
தெம்புதெலுங்குஊக்கம்
பண்டிகைதெலுங்குவிழா
வாடகைதெலுங்குகுடிக்கூலி
எச்சரிக்கைதெலுங்குமுன் அறிவிப்பு
அசல்உருதுமுதல்
அனாமத்துஉருதுகணக்கில் இல்லாதது
இனாம்உருதுநன்கொடை
இலாகாஉருதுதுறை
சலாம்உருதுவணக்கம்
சாமான்உருதுபொருள்
சவால்உருதுஅறைகூவல்
கம்மிபாரசீகம்குறைவு
கிஸ்திபாரசீகம்வரி
குஸ்திபாரசீகம்குத்துச்சண்டை
சரகம்பாரசீகம்எல்லை
சுமார்பாரசீகம்ஏறக்குறைய
தயார்பாரசீகம்ஆயத்தம்
பட்டாபாரசீகம்உரிமம்
டாக்டர்ஆங்கிலம்மருத்துவர்
நைட்ஆங்கிலம்இரவு
பஸ்ஆங்கிலம்பேருந்து


செந்தமிழ் நிலம் சேர் பன்னிரு நிலத்தினும்
ஒன்பதிற்று இரண்டினில் தமிழ்ஒழி நிலத்தினும்
தம் குறிப்பினவே திசைச் சொல் என்ப

(நன்னூல் : 273)

செந்தமிழ் நிலத்தைச் சேர்ந்த பன்னிரண்டு பகுதிகளிலிருந்தும் பதினெட்டு மொழி பேசும் நாடுகளில் தமிழ்மொழி பேசும் பகுதி அல்லாத பிற பதினேழு நிலங்களில் உள்ள மொழிகளிலிருந்தும் தமிழ் மொழியில் கலந்து வரும் சொற்கள் திசைச் சொற்கள் என்பது இந்த நூற்பாவின் பொருள்.

பன்னிரண்டு நிலங்கள் (நாடுகள்)

1) தென்பாண்டி நாடு
2) குட்ட நாடு
3) குட நாடு
4) கற்கா நாடு
5) வேணாடு
6) பூழி நாடு
7) பன்றி நாடு
8) அருவா நாடு
9) அருவா வடதலை நாடு
10) சீதநாடு
11) மலாடு
12) புனல் நாடு

என்பவை பன்னிரண்டு நாடுகள் ஆகும்.

பதினெட்டு மொழி வழங்கும் நாடுகளில் தமிழ் தவிர்த்து ஏனைய பதினேழு நாடுகள்.

1) சிங்களம்
2) சோனகம்
3) சாவகம்
4) சீனம்
5) துளு
6) குடகம்
7) கொங்கணம்
8) கன்னடம்
9) கொல்லம்
10) தெலுங்கம்
11) கலிங்கம்
12) வங்கம்
13) கங்கம்
14) மகதம்
15) கடாரம்
16) கௌடம்
17) குசலம்

என்பவை பதினேழு மொழிகள் பேசப்படும் நாடுகள் ஆகும்.

1.4.4 வடசொல்

வடமொழி என்று குறிப்பிடப்படும் சமஸ்கிருத மொழியிலிருந்து தமிழ்மொழியில் கலந்து வரும் சொற்கள் வடசொற்கள் எனப்படும். வடசொல் இரண்டு வகைப்படும்.

1)   தற்சமம்
2)   தற்பவம்

1. தற்சமம்

வடமொழிச் சொற்கள் தமிழ்மொழியில் தமிழ்ச் சொற்கள் போன்றே மாற்றமின்றி வருவதுதற்சமம் எனப்படும்.

(எ.கா)

கமலம் 
காரணம் 
மேரு

இச்சொற்களில் வடமொழிக்குரிய சிறப்பு எழுத்து எதுவும் இல்லை. இவற்றில் தமிழ் எழுத்துகளே இடம் பெற்றுள்ளன. எனவே இச்சொற்கள் தற்சமம் என்று அழைக்கப்படுகின்றன.

2. தற்பவம்

வட மொழிக்குரிய சிறப்பு எழுத்துகள் தமிழ்த் தன்மைக்கு ஏற்ப மாறி வருவது தற்பவம்எனப்படும்.

(எ.கா)

பங்கஜம்

-

பங்கயம்

ரிஷபம்

-

இடபம்

ஹரி

-

அரி

பக்ஷி

-

பட்சி

சரஸ்வதி

-

சரசுவதி

வருஷம்

-

வருடம்

இவற்றில் வடமொழிக்கே உரிய ஒலிப்புகளைக் கொண்ட எழுத்துகள் தமிழ் மொழிக்கு ஏற்ப மாறி வந்துள்ளன. எனவே தற்பவம் என்று அழைக்கப்படுகின்றன..

தமிழில் தேவையில்லாத இடங்களில் திசைச்சொற்களையும் வடசொற்களையும் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.

பொது எழுத்தானும் சிறப்பு எழுத்தானும்
ஈர் எழுத்தானும் இயைவன வடசொல்

    (நன்னூல் : 274)

வடமொழிக்கும் தமிழ்மொழிக்கும் பொதுவாக உள்ள எழுத்துகளாலும் வடமொழிக்குச் சிறப்பாக உள்ள எழுத்துகளாலும் வடமொழியிலிருந்து தமிழ் மொழியில் வந்து வழங்கும் சொற்கள் வடசொற்கள் என்பது இதன் பொருள்.

 

செவ்வாய், 2 டிசம்பர், 2014

முயற்சியும் வெற்றிபெற அயராத உழைப்பும் உடையவரா நீங்கள்... உங்களுக்கு வெற்றி நிச்சயம் !

முதுகலை தமிழாசிரியர் தேர்வுக்கு தருமபுரியில் பயிற்சி மற்றும் வழிகாட்டு மையம்
வழிகாட்டுதலுடன் சிறந்த பயிற்சி வழங்கப்படும். சிறப்பு வசதியாக சென்ற முதுகலை தமிழாசிரியர் தேர்வில் நூலிழையில் வெற்றி வாய்ப்பை நழுவவிட்டவர்களுக்கு உதவும்வகையில் அலகு வாரியாக சுமார் 30 தேர்வுகள் நடத்ததிட்டமிடப்பட்டுள்ளது. சென்ற 2013 முதுகலை தமிழாசிரியர் -தேர்வில் 95 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றவர்கள் இதில்பங்கேற்கலாம்.ஏற்கனவே பாடத்திட்டத்தை ஒட்டி பாடப்பகுதிகளை முழுமையாக படித்துமுடித்து தங்கள் இல்லத்திலிருந்தோ அல்லது குழுவாக படித்து தேர்வுக்கு தயாரகுவோருக்கு இத்தேர்வுமுறை மிகுந்த பயன் உள்ளதாக இருக்கும். தேர்வுக்குப்பின் வினாவிடை அலசல்,தொடர்புடைய தேர்வில் எதிர்பார்க்கப்படும் வினாக்கள் போன்றவை விவதிக்கப்படும்.தமிழ் தவிர உளவியல் பொது அறிவு பகுதிகளுக்கும் பயிற்சி உண்டு.
தற்போது இத்திட்டத்தில் பல்வேறு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் சேர்ந்து, தேர்வுக்கு தயாராகி வருகின்றனர்.

பயிற்சியில் இணைந்தவர்களுக்கு உடனடியாகப் பாடப்பொருள் அனுப்பப்பட்டுஇதுவரை 9 தேர்வுகள் பாடத்திட்டத்தையொட்டி அலகு வாரியாக நடத்தப்பட்டுள்ளன.

இத்திட்டத்தில் சேர்ந்து பயனடைந்து வருவோர் சிலரின் கருத்துக்கள்....

ஞானப்பிரகாசம், காஞ்சிபுரம் 8807188270
வழங்கப்பட்ட பாடப்பொருள் மிகச்சிறப்பாக உள்ளது.குறிப்பாக இலக்கிய திறனாய்வு பகுதியில் அமைப்பியல் , பின்னமைப்பியல் ,நவினத்துவம் பற்றிய செய்திகள் வேறு எந்த நூல்களிலும் இல்லாத புதிய தகவல்கள் இந்திரா, சிதம்பரம்
ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்கங்களில் அனைத்துப்பகுதி தொகுத்து வழங்கியுள்ளது மிகவும் பயனுள்ளதாக உள்ளது.

நிஹாத் பெங்களூர்.
பெங்களூரில் உள்ள எனக்கு நேரடி பயிற்சிக்கு வாய்ப்பில்லையே எனும் குறையை போக்கிவிட்டது தங்களின் பாடப்பொருளும், வினாத்தாள்களும்.

ரிஹானா , மேலூர் நெல்லை
நான் திட்டமிட்டு பதிப்பதற்கும்,படித்தபின் மதிப்பீடு செய்வதற்கும் உங்கள் வினாத்தாள்கள் பயனுடயதாக உள்ளது.வெற்றி பெறமுடியும் எனும் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

தாமரை, திருவண்ணாமலை
தருமபுரிக்கு நேரில் வந்து பயிற்சி பெறமுடியாத சூழலில்.எனது ஊரிலேயெ பயிற்சியில் சேர்ந்துள்ளேன். உங்கள் பயிற்சியில் அளிக்கப்படும் வினாக்கள் மிகுந்த தரமுள்ளதாக உள்ளது.அதன் மூலம் நான் எப்படி படித்துள்ளேன் என நானே மதிப்பீடு செய்துகொள்கிறேன் பயிற்சி எனக்கு கூடுதல் பலத்தை அளித்துள்ளது

மஞ்சுளா, மயிலாடுதுறை
நான் முதன்முதலாக இப்போட்டித்தேர்வு எழுதவுள்ளேன்.பல புத்தகங்களைத் தேடி படிக்கவேண்டும் எனும் நிலயைமாற்றி தேவையான கருத்துக்கள் அனைத்தையும் தொகுத்து அளித்திருப்பது சிறப்பு.தங்களின் வினாத்தாள் எனது இலக்கை நோக்கிய பயணத்தின் அளவுகோலாக உள்ளது.
நன்றி

அருள்,திட்டக்குடி 9842197488
சேர்ந்த மறுநாளே எனக்கு உடணடியாக study meteriyal அனுப்பியமைக்கு நன்றி.
இபோதே திட்டமிட்டு அலகுவாரியான தேர்வுக்கு தயாராவதற்கு உங்கள் பாடப்பொருள் மிகவும் உபயோகமாக உள்ளது.

ஜெ.செந்தாமரைக்கண்ணன், விருத்தாசலம்
தங்களின் பாடப்பொருளுடன் வினா-விடை வடிவில் தமிழ் இலக்கிய வரலாற்றினை தொகுத்தளிதிருப்பது எனக்கு மிகவும் உபயோகமாக உள்ளது.இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட வினாக்கள் அடங்கிய அத்தொகுப்பு வெற்றிக்கு வழி வகுக்கும்


சுகந்தி மத்தூர்
நான் தேர்வுக்கு நன்கு தயாராகிவருகிறேன். தங்களின் வினாத்தாட்களைக் கொண்டு தேர்வெழுதி பார்த்தபின்தான் இன்னும் படிக்கவேண்டிய செய்திகள் அதிகம் உள்ளது என புரிந்துகொண்டேன். உங்களின் இந்த பணிக்கு எனது நன்றி

இளமுருகன், செங்கம்.
உங்களின் இந்த தேர்வுத்திட்டம் அருமை.பாடப்பொருளை நேரில் பெற்றுக்கொண்டேன். 4 தொகுதிகளாக பாடத்திட்டத்தை ஒட்டி தயாரித்தளித்திருப்பது சிறப்பு.

டெல்பின், வேலூர்
இன்று உங்களது பாடப்பொருள் கிடைத்தது.இது எனக்கு முன்பே கிடைத்திருந்தால் தேர்வுக்கு இன்னும் நன்கு தயாராகியிருக்கலாம் எனத் தோன்றுகின்றது. இன்றையிலிருந்து தீவிரமாக படிக்க ஆரம்பித்துவிட்டேன்.

மலர் வேதாரண்யம்:
பல இலக்கிய வரலாற்று நூல்களில் உள்ள செய்திகளின் தொகுப்போடு.,கூடுதலாக புதிய செய்திகள் இடம்பெற்றுள்ளது முக்கியமான செய்திகள் தொகுத்து தந்துள்ளது பாராட்டுக்குரியது

சோமசுந்தரம் செய்யாறு
மிக அருமையாக பாடப்பொருள் தரப்பட்டுள்ளது.என்னுடைய நன்பர்களுக்கும் இத்திட்டதில் சேரபரிந்துரை செய்துள்ளேன்

உஷா சென்னை.
சென்ற தேர்வில் ஒரு மதிப்பெண் காரணமாக வாய்ப்பினை இழந்தேன்.தங்களது பாடப்பொருளை படித்தேன் . இந்தமுறை நான் வெற்றி பெற்றுவிடுவேன் என்ற நம்பிக்கை பிறந்துள்ளது

முயற்சியும் வெற்றிபெற அயராத உழைப்பும் உடையவரா நீங்கள்... உங்களுக்கு வெற்றி நிச்சயம் !

கடின உழைப்பும்..இலக்கை அடையும் வரை ஓயமாட்டேன் எனும் மன உறுதியுடையவர்கள் தொடர்பு கொள்க.
வெற்றி- 7373967635

தேர்வுக்கு இன்னும் ஒரு மாத காலமே உள்ளதால்,இத்திட்டத்தில் சேருவதற்கு கடைசி நாள் 05.12.2014 என நிர்ணயிக்கப்பட்டள்ளது.

இணைந்தவுடன் உடனடியாக இதுவரையில் நடத்தப்பட்ட தேர்வு வினாத்தாள்கள் மின் அஞ்சல் மூலம் அனுப்பப்படும்
குறைந்த நாட்களே உள்ளன..... நீங்களும் இணையுங்கள் ! வெற்றிக்கனியை ருசியுங்கள்