வியாழன், 24 நவம்பர், 2016

TRB DIET LECTURER- Provisional Selection List After Certificate Verification released


Teachers Recruitment Board 
 College Road, Chennai-600006

 

Direct Recruitment for the Post of Senior Lecturer / Lecturer / Junior Lecturer in SCERT 2016

Provisional Selection List After Certificate Verification


                                             As per the Notification No.3/2016 Published on 28.06.2016, the Board conducted written Competitive Examination for the Direct Recruitment of Senior Lecturer / Lecturer / Junior Lecturer in SCERT 2016 on 17.09.2016. Board also conducted first phase of Certificate Verification on 05.11.2016 based on Written Examination marks.

                                             Now, the Board releases the Provisional Selection list for all subjects in Senior Lecturer. For Lecturer in Maths, Physics, Chemistry, Geography and Physical Education and Junior Lecturer in Telugu also the Board releases the Provisional Selection List. The list is prepared based on the Written Examination marks and Certificate Verification data for Senior Lecturer / Lecturer / Junior Lecturer following merit-cum-communal rotation, as per rules in vogue.

                                            This Selection is purely provisional and is subject to the outcome of various writ petitions pending before the Hon'ble High Court of Madras and the decision of User Department on eligibility of candidate.

                                            For remaining subjects, from the available Merit list, candidates are called for Second Phase of Certificate Verification.

                                            The appointment order for the eligible candidates after verifying and satisfying all conditions will be issued by the Director of State Council for Education Research and Training seperately after due process and verifications.

                                            Utmost care has been taken in preparing the list and in publishing it.  Teachers Recruitment Board reserves the right to correct any errors that may have crept in.  Incorrect list would not confer any right of enforcement.

 

Dated:23-11-2016

 

Member Secretary

NEXT

Home

 

செவ்வாய், 22 நவம்பர், 2016

TRB PG : 1,600 காலியிடங்களை நிரப்ப ஆசிரியர் தேர்வு வாரியம்விரைவில் அறிவிப்பு பள்ளிக்கல்வி இயக்குநர்

விரைவில் ஆசிரியர் தகுதித்தேர்வை நடத்த ஆசிரியர் தேர்வு வாரியம் ஏற்பாடுகளைச் செய்து வருகிறது.
இந்த புதிய தகுதித்தேர்வானது அரசு உதவி பெறும் பள்ளிகளில் சேரவும், ஏற்கெனவே பணியில் உள்ள ஆசிரியர்கள் தகுதித்தேர் வில் தேர்ச்சி பெற உதவுமே தவிர அரசு பள்ளிகளில் முன்பு போல ஆயிரக்கணக்கான பட்டதாரி ஆசிரி யர்,இடைநிலை ஆசிரியர் பணி யிடங்களை நிரப்பப்படுவதற்கு வாய்ப்பில்லை என்றே கருதப் படுகிறது.
இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகளிடம் கேட்ட போது, "அரசு பள்ளிகளில் காலி யாக இருந்த பட்டதாரி,இடைநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் அதிக எண்ணிக்கையில் முந் தைய தகுதித்தேர்வுகள் மூலம்நிரப்பப்பட்டுவிட்டன. தற்போது மாணவர் பற்றாக்குறை காரண மாக காலியிடங்களும் இல்லா மல் போய்விட்டன. பள்ளிக்கல்வித்துறையில் 500 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களும், குறிப் பிட்ட சில பாடங்களில் சுமார் 450 பின்னடைவுபணியிடங்களும் (பேக்லாக் வேகன்சி) என ஆயிரத்துக்கும் குறைவான காலியிடங்களே நிரப்ப வாய்ப் பிருக்கிறது" என்று
தெரிவித்தனர். இந்த ஆண்டு தகுதித்தேர்வு மூலம் சுமார் 4,500 ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும் என்று பள்ளிக்கல்வி அமைச்சர் கே.பாண்டியராஜன் அறிவித் திருப்பதால் எஞ்சிய 3,500 காலியிடங்கள் தொடக்கக் கல்வித்துறை, ஆதி திராவிடர் நலத்துறைபள்ளிகள் மற்றும் மாநகராட்சிப் பள்ளிகளில் இருக் கக்கூடும்.
இதற்கிடையே, முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியில் சுமார் 1,600 காலியிடங்களை நிரப்ப ஆசிரியர் தேர்வு வாரியம்விரைவில் அறிவிப்பு வெளியிட இருப்பதாக பள்ளிக்கல்வி இயக்குநர் எஸ்.கண்ணப்பன் தெரிவித்தார்.

புதன், 16 நவம்பர், 2016

CBSE extends UGC NET 2017 last date of form submission to November 23

UGC NET 2017: CBSE has extended the deadline to file the National Eligibility Test (NET) 2017 to November 23, 2016. The last date of submission of fee has been extended upto November 24 throughE-Challan/debit/credit card at designated branches of Syndicate/Canara/ICICI/HDFC bank. The CBSE,on behalf of the University Grants Commission (UGC), will conduct the examination on January 22,2017. For correction in the candidate's data (particulars) will be operational on the official websitecbsenet.nic.in from November 28 to December 3, 2016. The examination will be held in 84 subjects at 90 selected cities across the country. The admit cards willrelease on December 21.
Examination fees: The general category candidates has to pay Rs 600, for OBC it is Rs 300 while for SC/ ST, Rs 100 is the exam fees. Steps to apply for UGC NET 2017 Visit the official website mentioned aboveBefore filling the application form, read the detailed notification. Choose the password and security question and enter your answer. Application number will be generated and it will be used to complete the remaining 'Steps of the Application Form'.
Remember your login details as it will be required for all future correspondence

CBSE NET JAN 2017 SUBMISSION OF APPLICATION EXTENDED UP TO 23 Nov 2016

UGC NET JAN 2017
Reschedule of Important Dates
Online Application Form Submission
Last date for Applying Online 23 Nov 2016
Last date of submission of Fee through online generated Bank
Challan, at any branch of (SYNDICATE/CANARA/ICICI/HDFC
BANK) 24 Nov 2016
Correction in Particulars of application form on the website 28 to 03 Dec, 2016
Uploading of Admit Card 21st Dec 2016
Date of Examination 22nd Jan 2017

குரூப் - 2: மெயின் தேர்வு வினாத்தாள் முறை மீண்டும் மாற்றம்


குரூப் - 2 மெயின் தேர்வு வினாத்தாள் முறையில் மீண்டும் மாற்றம் கொண்டுவரப்பட உள்ளது. 15, 30 மதிப்பெண் வினாக்களை சேர்க்க டிஎன்பிஎஸ்சி முடிவு செய்துள்ளது.

நகராட்சி ஆணையர் (கிரேடு-2) துணை வணிகவரி அலுவலர், சார்-பதிவாளர் (கிரேடு-2) தலைமைச் செயலக உதவி பிரிவு அலுவலர், சிறைத்துறை நன்னடத்தை அலுவலர், உதவி தொழிலாளர் ஆய்வாளர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், உள்ளாட்சி தணிக்கை உதவி ஆய்வாளர், கூட்டுறவு சங்கங்களின் முதுநிலை ஆய்வாளர், கைத்தறி ஆய்வாளர், வருவாய் உதவியாளர், பேரூராட்சி நிர்வாக அலுவலர் (கிரேடு-2) உள்ளிட்ட பதவிகளை நேரடி யாக நிரப்புவதற்காக டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தேர்வு நடத்தப்படுகிறது. இத்தேர்வு எழுதுவதற்கான குறைந்த பட்ச கல்வித் தகுதி ஏதேனும் ஒரு பட்டப் படிப்பு முடித்திருக்க வேண்டும்.

கடந்த 2013-ம் ஆண்டு வரை குரூப்-2 பணிகளுக்கு ஒரே தேர்வு தான் நடத்தப்பட்டு வந்தது. அதுவும் அப்ஜெக்டிவ் முறையில் அமைந்தி ருக்கும். அதன்பிறகு புதிதாக மெயின் தேர்வு முறை அறிமுகப்படுத்தப்பட்டது. அதில் 50 மதிப்பெண்ணுக்கு அப் ஜெக்டிவ் முறையிலான கேள்விகளும், 250 மதிப்பெண்ணுக்கு விரிவாக பதிலளிக்கும் கேள்விகளும் கேட்கப் பட்டன. இதைத் தொடர்ந்து, இந்த ஆண்டு மெயின் தேர்வில் அப்ஜெக் டிவ் முறையிலான கேள்விகள் நீக் கப்பட்டன. அனைத்து கேள்விகளுக் கும் விரிவாக பதிலளிக்கும் புதிய முறை கொண்டுவரப்பட்டது. அதில் 3, 5, 8 மதிப்பெண் கேள்விகள் கேட்கப்பட்டன.

இந்நிலையில், குருப்-2 மெயின் தேர்வு வினாத்தாள் முறையில் டிஎன்பிஎஸ்சி மீண்டும் மாற்றம் செய்திருக்கிறது. அதன்படி, ஏற் கெனவே இடம்பெற்றிருந்த 5 மதிப் பெண் கேள்விகள் முற்றிலுமாக நீக்கப்பட்டுள்ளன.

அதற்குப் பதில் புதிதாக 15 மதிப் பெண் கேள்விகளும், 30 மதிப்பெண் கேள்விகளும் சேர்க்கப்பட்டுள்ளன. வழக்கம்போல் ஒவ்வொரு பகுதி யிலும் கூடுதல் வினாக்கள் கொடுக் கப்பட்டு அவற்றில் தேர்வர்கள் தங்களுக்குப் பிடித்தமான கேள்வி களை தேர்வுசெய்து (Choice) விடையளிக்கலாம்.

இந்த புதிய வினாத்தாள் முறை குறித்து சென்னை வெங்கடேஸ்வரா போட்டித்தேர்வுகள் பயிற்சி நிறுவனத் தின் இயக்குநர் பி.அங்கமுத்து கூறும்போது, "3 மதிப்பெண், 5 மதிப்பெண் கேள்விகள் எனில் நன்றாக விடையளித்திருந்தால் அதற்கு முழு மதிப்பெண் பெறும் வாய்ப்பு உண்டு. ஆனால், 15 மதிப்பெண், 30 மதிப்பெண் கேள்விகளுக்கு நன்றாக விடையளித்திருந்தாலும் மதிப்பீட் டாளர் எதிர்பார்க்கும் விவரங்கள் முழுமையாக இல்லாவிட்டாலோ, அல்லது பதிலில் அவர் திருப்தி அடையாவிட்டாலோ மதிப்பெண் பெருமளவு குறைக்கப்படலாம். இருப்பினும், நல்ல எழுத்தாற்றலும், விடைகளை நல்ல முறையில் வழங்கும் ஆற்றலும் மிக்க தேர்வர்களுக்கு 15 மதிப்பெண், 30 மதிப்பெண் கேள்விகள் வரப்பிரசாதமாகவே இருக்கும்" என்றார்.

குரூப்-2 தேர்வுக்கான அறிவிப்பு விரைவில் வெளியிடப்பட உள்ளது. நகராட்சி ஆணையர், சார்-பதிவாளர், உதவி பிரிவு அலுவலர், வருவாய் உதவியாளர், பேரூராட்சி நிர்வாக அலுவலர் (கிரேடு-2) உள்ளிட்ட பதவிகளில் ஏறத்தாழ 1,700 இடங்கள் நிரப்பப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த குரூப்-2 மெயின் தேர்வில் புதிய வினாத்தாள் முறையை பின்பற்ற டிஎன்பிஎஸ்சி முடிவுசெய்துள்ளது.

புதிய பாடத்திட்டம் - குரூப்-2 மெயின் தேர்வுக்கான புதிய பாடத்திட்டம்

*

பிரிவு 1: இந்தியா மற்றும் தமிழ்நாட்டின் வளர்ச்சியில் அறிவியல் மற்றும் தொழில் நுட்பத்தின் பங்கு மற்றும் அவற்றின் தாக்கங்கள்.

*

பிரிவு 2 மற்றும் 3: மத்திய, மாநில அரசுகளின் நிர்வாகம் (தமிழ்நாடு நிர்வாகத்துக்கு அதிக முக்கியத்துவம்), இந்தியா மற்றும் தமிழகத்தின் சமூக, பொருளாதார பிரச்சினைகள்.

*

பிரிவு 4 மற்றும் 5: தேசிய அள வில் தற்போதைய பிரச்சினை கள், தமிழக அளவில் தற் போதைய பிரச்சினைகள்.

புதிய வினாத்தாள் முறை

*

3 மதிப்பெண் கேள்வி - 35 வினாக்கள் கொடுக்கப்பட்டு அவற்றில் 30 வினாக்களுக்கு விடையளிக்க வேண்டும் (மதிப்பெண் 90).

*

8 மதிப்பெண் கேள்வி - 18 வினாக்கள் கொடுக்கப்பட்டு 15 வினாக்களுக்கு பதிலளிக்க வேண்டும் (மதிப்பெண் 120).

*

15 மதிப்பெண் கேள்வி - 3 கேள்விகள் கொடுக்கப்பட்டு இரண்டுக்கு விடையளிக்க வேண்டும் (மதிப்பெண் 30).

*

30 மதிப்பெண் கேள்வி - 4 கேள்விகள் கொடுக்கப்பட்டு இரண்டுக்கு பதிலளிக்க வேண்டும் (மதிப்பெண் 60).



வெள்ளி, 11 நவம்பர், 2016

TN SET 2016 ISSUE OF CERTIFICATE- ANOUNCEMENT

The date & mode of issue of Certificate for Qualified Candidates will be announced in due course. Till such time such candidates are advised not to visit MTW University for this purpose.

TNTET RESULT ANOUNCEMENT REGARDING issue of Certificate

The date & mode of issue of Certificate for Qualified Candidates will be announced in due course. Till such time such candidates are advised not to visit MTW University for this purpose.

வியாழன், 3 நவம்பர், 2016

அதிசய அணு...


மிக நுண்ணிய பொருட்கள், விஷயங்களைப் பற்றிப் பேசும்போது நம் மொழியில் 'அணுவளவு', 'இம்மியளவு' போன்ற சொற்றொடர்கள் தவறாமல் இடம்பெறும். இப்படி சிறியவை, நுண்மை போன்றவை குறித்த உரையாடல்களில் அணு அடிப்படையாக இருந்தாலும், இந்தப் பிரபஞ்சத்தின் பருப்பொருட்கள் அனைத்துக்கும் அணு அடிப்படையாக இருந்தாலும் இரண்டு கேள்விகளை நாம் கேட்டுப் பார்க்க வேண்டும். சிறியது,பெரியது என்பதையெல்லாம் எப்படி வேறுபடுத்திப் பார்க்கிறோம்? அணுக்கள்தான் சிறியவையா?

ஒப்பீடுதான் தீர்மானிக்கிறது

நாம் அறிந்தனவற்றில் இரண்டு அல்லது அதற்கும் மேற்பட்ட பொருட்கள், விஷயங்களை ஒப்பிட்டுப் பார்த்துத்தானே சிறிது பெரிதைத் தீர்மானக்கிறோம்! நம்முடன் யானையை ஒப்பிட்டு 'அம்மாடி! எவ்வளவு பெருசா இருக்கு!' என்று வியந்துபோவோம். நம்முடன் எறும்பை ஒப்பிட்டு 'இவ்வளவு குட்டியா இருக்கு' என்று சொல்வோம். தன்னைவிட 16 மடங்கு பெரிதாக இருக்கும் நீலத் திமிங்கிலத்தை ஒரு யானை பார்க்குமென்றால், அதனால் பேச முடியும் என்றால், 'அடேயப்பா! எவ்ளோ பெருசா இருக்கு?' என்று சொல்லுமல்லவா? இப்படித்தான் ஒன்றுடன் ஒன்று ஒப்பிட்டு மற்றதன் அளவைத் தீர்மானிக்கிறோம்.

இந்தப் பிரபஞ்சம் முழுவதுமே இப்படிச் சார்பியல் பண்பு கொண்டதாகத்தான் இருக்கிறது. பிரபஞ்சத்திலேயே பெரிது பிரபஞ்சம்தான் என்று நாம் ஒப்புக்கொள்வோம். ஆனால், நமது பிரபஞ்சம் தவிர வேறு பிரபஞ்சங்கள் இருந்து, அவையெல்லாம் நமது பிரபஞ்சத்தைவிட பல கோடி மடங்கு பெரிதாக இருந்தால் நமது பிரபஞ்சத்தைப் பெரிது என்று சொல்வோமா? அதுபோல்தான் அணு மிகவும் சிறியது என்று சொல்வதும் ஒப்பிடல் முறையில்தான். ஆனால், அணுவுக்குள்ளே புகுந்து அதற்குள் இருக்கும் உலகத்தைப் பார்க்க நம்மால் முடிந்தால் அணு சிறியது என்று சொல்ல மாட்டோம்.

அதிசய அணு

அணு எவ்வளவு பெரியது என்று தெரிந்துகொள்வதற்கு முன் நம் கண்ணுக்கு அணு எவ்வளவு சிறியது என்பதைத் தெரிந்துகொள்ளலாம். முதலில் அணுவைக் கண்ணால் மட்டுமல்ல; பெரும்பாலான நுண்ணோக்கிகளால்கூடப் பார்க்க முடியாது. 'ஐந்து லட்சம் அணுக்களை ஒன்றுடன் ஒன்று நெருக்கி வைத்தாலும் ஒரே ஒரு முடிக்குப் பின்னால் அவை மறைந்துவிடும்' என்று பில் பிரைசன் எழுதுகிறார். ஒரு சொட்டு நீரில் உள்ள அணுக்களை நாம் பார்க்க வேண்டுமென்றால் அந்த ஒரு சொட்டை 15 மைல்கள் குறுக்களவு கொண்டதாகப் பெரிதுபடுத்த வேண்டும் என்றும் அவர் சொல்கிறார்.

ஒரு தனிமத்தை அந்தத் தனிமமாக நாம் அடையாளம் காண்பதற்கு மிக மிக அடிப்படையான கூறு அணுதான். அந்த அணுவும் வேறு பலவற்றால் ஆனதே. ஒரு அணுவை எடுத்துக் கொண்டால் அதன் உட்கரு, அதைச் சூழ்ந்த எதிர் மின்னணு (எலெக்ட்ரான்) ஆகியவை அடிப்படைப் பகுதிகள். உட்கருவை எடுத்துக்கொண்டால் அது நேர் மின்னணுக்களாலும் (புரோட்டான்) நியூட்ரான்களாலும் ஆனது. விதிவிலக்காக, ஹைட்ரஜன் உட்கருவில் ஒரே ஒரு நேர் மின்னணு மட்டுமே இருக்கும்; நியூட்ரான் கிடையாது.

உட்கருவில் ஒரு நேர் மின்னணு இருந்தால் அது ஹைட்ரஜன். இரண்டு நேர் மின்னணுக்களும் இரண்டு அல்லது மூன்று நியூட்ரான்களும் இருந்தால் அது ஹீலியம் அணு. அணுவின் நேர் மின்னணுக்களின் எண்ணிக்கையும் எதிர் மின்னணுக்களின் எண்ணிக்கையும் சமமாக இருக்கும். நேர் மின்னணுக்கள் அல்லது எதிர் மின்னணுக்களின் எண்ணிக்கையை வைத்து ஒரு தனிமத்தின் அணு எண் குறிப்பிடப்படுகிறது. ஹைட்ரஜன் =1, ஹீலியம் = 2, லித்தியம் = 3 என்று போய்க்கொண்டே இருக்கும் தனிமவரிசைப் பட்டியல், அணு எண் 118 கொண்ட உனுனாக்டியத்தில் முடிகிறது.

அணுவாக மாறினால் புரியும்!

ஒரு மில்லிமீட்டரைச் சம அளவிலான ஒரு கோடிப் பங்குகளாகப் பிரித்தால் அதில் ஒரு பங்கின் நீளம்தான் ஒரு அணுவின் நீளம்.

அணுவே இவ்வளவு சிறியதாக இருக்கும்போது அதன் உட்கரு எவ்வளவு சிறியதாக இருக்கும்! வில்லியம் எச். கிராப்பர் என்ற அறிவியல் எழுத்தாளர் உட்கருவின் அளவை விவரிக்கும்போது, 'ஒரு அணுவை ஒரு தேவாலயம் அளவுக்கு நாம் பெரிதுபடுத்தினோம் என்றால் அந்த தேவாலயத்தில் பறந்துகொண்டிருக்கும் ஈயின் அளவுக்குத்தான் அதன் உட்கரு இருக்கும். ஆனால், ஈயின் (அதாவது உட்கரு) நிறையோ தேவாலயத்தைவிட (அதாவது அணு) பல்லாயிரக்கணக்கான மடங்கு அதிகமாக இருக்கும்'என்கிறார்.

ஒரு அணுவின் நிறையில் 99.9% உட்கருவுக்கே சொந்தம். ஆனால், அணுவில் இருக்கும் இடத்தில் 10 கோடி கோடியில் ஒரு பங்கு இடத்தைதான் உட்கரு அடைத்துக்கொள்கிறது என்பது எவ்வளவு விசித்திரமானது (1-க்குப் பிறகு 15 பூஜ்ஜியங்கள் போட்டால் 10 கோடி கோடி வரும்). சின்ன இடம் பெரிய நிறை!

நேர் மின்னணு, எதிர் மின்னணு, நியூட்ரானுடன் கதை முடிந்துவிடவில்லை. இவ்வளவு நுண்மையான நேர்மின்னணுக்களும் நியூட்ரான்களும் குவார்க்குகள் எனப்படும் இன்னும் நுண்மையான அடிப்படைப் பொருட்களால் ஆனவை. அணுவைப் பற்றிய வரையறையான 'படித்தர மாதிரி' (Standard Model) கிட்டத்தட்ட 200 மீயணுத் துகள்களைப் (subatomic particles) பட்டியலிடுகிறது.

ஆக, ஒரு அணு எவ்வளவு பிரம்மாண்டமானது என்று உங்களுக்குத் தெரிய வேண்டுமானால் ஒரு நேர் மின்னணுவாகவோ எதிர் மின்னணுவாகவோ, அல்லது அதனினும் சிறிய அணுத்துகளாகவோ இருந்துபாருங்கள், முடிந்தால். அப்போது புரியும்!



 

கடுமையான பயிற்சி முதல் முயற்சியிலேயே யூ.பி.எஸ்.சி. பாஸ்.....


ஒரு வருடம் மட்டுமே படித்து முதல் முயற்சியிலேயே யூ.பி.எஸ்.சி. பாஸ் செய்தவர் கே.கார்த்திக். 2011 பேட்ச்சில் ஐ.பி.எஸ். பெற்றவருக்குக் கேரள மாநிலப் பிரிவு கிடைத்துள்ளது. பாலக்காடு மாவட்ட ஆலத்தூரின் ஏ.எஸ்.பி., திருச்சூர் நகர காவல்துறை துணை ஆணையர், கேரள ஆளுநரான நீதிபதி ஆர்.சதாசிவத்தின் ஏ.டி.சி., திருச்சூர் மாவட்ட ஊரகக் காவல்துறைக் கண்காணிப்பாளர் ஆகிய பணிகளில் இருந்தவர் தற்போது வயநாடு மாவட்ட எஸ்பியாகப் பதவி வகிக்கிறார்.

திருவண்ணாமலை மாவட்டத்தின் துறிஞ்சாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் கார்த்திக். தந்தை கண்ணன் அடிப்படையில் விவசாயி. தமிழக அரசின் வனத்துறையில் கார்டு பணியில் இருக்கிறார். கார்த்திக் படிப்பில் படு சுட்டி. பிளஸ் டூவில் 1111 மதிப்பெண் எடுத்து சென்னையில் எலக்ட்ரானிக்ஸ் பி.இ. படித்தார். துறிஞ்சாபுரம் கிராமத்துக்குக் கிடைத்த மூன்றாவது பொறியாளர் இவர். 2008-ல் எல் அண்ட் டி நிறுவனத்தில் வேலையில் சேர்ந்தார். அடுத்த ஆண்டு யூ.பி.எஸ்.சி. எழுத முடிவெடுத்து வேலையை ராஜினாமா செய்தார். சென்னையில் உள்ள தமிழக அரசின் அண்ணா இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மெண்ட்டில் சேர்ந்து கடுமையான பயிற்சி எடுத்து முதல் முயற்சியிலேயே ஐ.பி.எஸ். ஆகத் தேர்வுபெற்றார்.

"படிப்பு மட்டும்தான் கைகொடுத்து நம்மை வளர்த்துவிடும்னு அப்பா அடிக்கடி என்கிட்ட சொல்லுவார். நான் கஷ்டப்பட்டு படிச்சு முன்னேறி மாவட்ட ஆட்சியர் ஆகி சமூகத்துக்கு சேவை செய்யணுங்குறது அவரோட கனவு. பி.இ. இறுதியாண்டு படிக்கும்போது முதன்முதலில் யூ.பி.எஸ்.சி. தேர்வு எழுதும் ஆர்வம் எனக்கு வந்துச்சு. ஆனால் உடனடியாக அதில இறங்காமல் வேலையில் சேர்ந்தேன். சொல்லப்போனால் நான் வேலை செய்த பத்து மாதங்களில்தான் என்னுடைய வேலையை மேற்பார்வையிட்ட உயர் அதிகாரிகளைப் பார்த்து வியந்து யூ.பி.எஸ்.சி. மீது மேலும் ஈர்ப்பு உண்டானது" என்கிறார் கார்த்திக்.

விருப்பப் பாடம் எடுத்ததன் பின்னணி

விருப்பப் பாடமாகப் புவியியலையும் பொது நிர்வாகத்தையும் தேர்ந்தெடுத்து எழுதி முதல் முயற்சியிலேயே வெற்றி பெற்றார் கார்த்திக். சிறு வயது முதல் நிலம், வானிலை போன்றவற்றில் ஆர்வம் இருந்ததால் புவியியலைத் தேர்ந்தெடுத்திருக்கிறார். அரசுப் பணிக்குப் பொது நிர்வாகம் தெரிந்துவைத்திருப்பது அவசியம் எனக் கருதி அதையும் தேர்ந்தெடுத்தார். அண்ணா இன்ஸ்டிடியூட்டில் பெற்றதை விடக் கூடுதலான பயிற்சி தேவைப்பட்டதால், பொது நிர்வாகத்தில் தயாராக சென்னை கணேஷ் ஐ.ஏ.எஸ். அகாடமியில் ஆறு மாதங்கள், புவியியலில் தேர்ச்சி பெற சங்கர் ஐ.ஏ.எஸ். அகாடமியில் நான்கு மாதங்கள் பயின்றார். இரண்டாம் நிலைத் தேர்வுக்காக பிரத்யேகப் பயிற்சி ஏதுமின்றித் தானாகப் படித்தார்.

தினந்தோறும் 12 மணி நேரம் படித்திருக்கிறார். இதில் என்ன படிக்க வேண்டும், எதைப் படிக்கக் கூடாது எனவும் அவர் முக்கியமாகத் தெரிந்துவைத்திருக்கிறார். கிட்டத்தட்ட 13 மாதங்கள் செய்த இடைவிடாத உழைப்பால் முதல் முயற்சியிலேயே வெற்றி கிடைத்தது. நேர்முகத் தேர்வை எதிர்கொள்ள சைலேந்திரபாபு ஐ.பி.எஸ்., உதயசங்கர் ஐ.ஏ.எஸ். ஆகியோர் நடத்திய மாதிரித் தேர்வுகளில் கிடைத்த பயிற்சி போதுமானதாக இருந்தது.

ஐ.பி.எஸ். ஆனவுடன்…

கார்த்திக் ஐ.பி.எஸ். ஆக கம்பீரமாக நடைபோடத் தொடங்கிய சில மாதங்களில் கேரளாவில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. அப்போது கேரள ஆளும் கட்சியின் முக்கிய அரசியல் பிரமுகர் ஒருவர் தேர்தல் முறைகேடு மற்றும் அரசு அதிகாரிகளை மிரட்டிய குற்றத்துக்காகக் கைது செய்யப்பட்டார். ஆனால் அவரை விடுவிக்க சிபாரிசு செய்யப்பட்டது. இதற்காக, கார்த்திக்கிடம் போனில் பேசியதாகக் கூறப்படுபவர், மாநிலத்தின் மிக முக்கியமான பொறுப்பை வகித்தவர். ஆனால் அதிகாரத்துக்குக் கீழ்ப்படியாமல், நிதானமாகப் பேசியிருக்கிறார் கார்த்திக். குற்றவாளியை விடுவித்தால் ஏற்படும் விளைவு, அதனால் அவரது கட்சிக்கும் ஏற்படும் இழப்புகள் போன்றவற்றை கார்த்திக் எடுத்துரைத்திருக்கிறார். இதைக் கேட்டு தன் கோரிக்கையை வாபஸ் பெற்றுள்ளார் அந்தப் பிரமுகர்.

இதுபோன்ற சமயங்களில் திரைப்பட நாயகன் போல் ஏட்டிக்குப் போட்டியாகவும், சவாலாகவும், கோபமாகவும், அதிகாரத் தொனியிலும் பேசாமல் நம் அறிவைப் பயன்படுத்தி அவர்களிடம் பொறுமையாக எடுத்துரைத்தால் கடமையைச் செய்ய முடியும் என்பது கார்த்திக்கின் நம்பிக்கை.

நேர்முகத் தேர்வு அனுபவம்

நேர்முகத் தேர்வு என்பது ஒருவரது திறனை அறிந்துகொள்ளும் தேர்வு. இதில் குடும்பம், கிராமம், ஊர், வாழ்க்கை, அரசாங்கம் என நமக்குச் சம்பந்தப்பட்ட அனைத்தையும் குறித்துக் கேள்விகள் கேட்கப்படும். உதாரணமாக, நீங்கள் விவசாயம் செய்திருந்தால் தேசிய அளவில் விவசாயத்தின் நிலை பற்றி நன்கு அறிந்திருக்க வேண்டும். அதில் நிலவும் பிரச்சினைகளையும் முன்னேற்றங்களையும் அறிந்திருக்க வேண்டும். நீங்கள் வசிக்கும் கிராமத்தில் உள்ளவர்கள் எத்தனை பேர்? அதன் பொருளாதார நிலை என்ன? இப்படிப் பலவற்றை அறிந்திருக்க வேண்டும்.

தற்போதைய நிகழ்வுகள் குறித்தும் கேள்விகள் இருக்கும். இதை எதிர்கொள்ள அன்றாடம் ஆங்கிலம் மற்றும் தமிழ் நாளிதழ்களைத் தவறாமல் வாசிப்பது அவசியம். ஒரு நிர்வாகியாக இருக்கும்போது எழும் பிரச்சினைகளுக்கு நாம் காணும் தீர்வு என்ன என்பதையும் சோதிப்பார்கள். இந்த நேர்முகத் தேர்வு என்பது சில நிபுணர்களுடனான உரையாடலாகத்தான் இருக்கும். இதில், பயம் இல்லாமல், தயங்காமல் பதிலளிக்க வேண்டும்.

வடகிழக்கு மாநிலங்களில் உள்ள பயங்கரவாத நடவடிக்கைகள் குறித்து என்னிடம் கேள்விகள் கேட்கப்பட்டன. இதைச் சுற்றிப் பல துணைக் கேள்விகளும் பத்து நிமிடங்கள் கேட்கப்பட்டன. நான் முதலில் செய்த வேலையில் அகல ரயில் பாதை பணியில் இருந்ததால் ஆங்கிலேயர் காலத்தில் அத்திட்டம் எப்படி முன்னெடுக்கப்பட்டது போன்ற கேள்விகளையும் கேட்டார்கள். அத்தனைக்கும் நான் பதில் அளித்தேன்

என்னை உருவாக்கிய நூல்கள்

6 முதல் பிளஸ் டூ வரையிலான சி.பி.எஸ்.இ. பாட நூல்களில் உள்ள வரலாறு, அறிவியல், புவியியல் பாடங்களை முழுமையாகப் படிப்பது அவசியம். இவற்றைப் படிக்காமல் நேரடியாகப் பேராசிரியர்களின் நூல்களைப் படிப்பதில் பலனில்லை.

# ஸ்பெக்ட்ரம் பதிப்பகத்தின் 'ஃபேசட்ஸ் ஆஃப் இந்தியன் கல்சர்'

(Spectrum Publishers' Facets of Indian Culture)

# 'இந்தியாஸ் ஸ்டிரகிள் ஃபார் இண்டிபெண்டன்ஸ்'- பிபின் சந்திரா

(Indian Struggle for Independence - Bibin Chandra)

# 'ஃபிஸிக்கல் ஜியாக்ரஃபி'- சவிந்த்ரா சிங்,

(Physical Geography by Savindra Singh)


 

பெண்கள் ஐ.ஏ.எஸ் ஆக அவர்களுக்குத் திருமணம் ஒரு தடை இல்லை


பெண்கள் ஐ.ஏ.எஸ் ஆக அவர்களுக்குத் திருமணம் ஒரு தடை இல்லை!' என்கிறார் ஆர்.விமலா. இவருக்கு மணமாகி ஏழு வருடங்களுக்குப் பின் யூ.பி.எஸ்.சி. எழுதி ஐ.ஏ.எஸ். வெற்றிபெற்றபோது இவருக்கு இரட்டை குழந்தைகள் இருந்தன. மேற்கு வங்க மாநிலப் பிரிவின் 2010 பேட்ச் அதிகாரியான விமலா, மேற்கு மேதினிப்பூர் மாவட்ட கடக்பூரின் சப் டிவிஷனல் அதிகாரியாக செயல்பட்டு பின்னர் தற்போது, சிலிகுரி-ஜல்பாய்குரி வளர்ச்சி ஆணையத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக உள்ளார்.

பிளஸ் டூவில் வேதியியலில் முதல் மதிப்பெண் பெற்றவர் விமலா. இதனால், பட்டப் படிப்பிலும் வேதியியல் பிரிவைத் தேர்ந்தெடுத்து கோயம்புத்தூர் பி.எஸ்.ஜி. மகளிர் கல்லூரியில் படித்தார். 1998-ல் கல்லூரியில் இறுதியாண்டு படித்தபோது கோவையில், நிகழ்ந்த தொடர் குண்டுவெடிப்பு உட்பட மூன்று சம்பவங்கள் விமலாவின் மனதில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன.

அந்த மூன்று சம்பவங்கள்

"அப்போதுதான், என் வாழ்க்கையில் முதன்முறையாக 144 தடை உத்தரவை நேரில் பார்த்தேன். ஒரு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மற்றும் ஆட்சியரின் பணிகள் என்ன என்பதையும், பாதுகாப்பில் அரசு நிர்வாகத்தின் பங்கையும் நேரில் கண்டறிந்தேன்" என்கிறார் விமலா. அதையொட்டி படிப்பு முடிந்ததும் திருமணமாகி திருச்சிக்கு இடம்பெயர்ந்தார் விமலா. திருச்சியில் அவருடைய கணவர் கே.குமார் அச்சகம் நடத்திவருகிறார். "எங்களுக்கு இரட்டைக் குழந்தைகள் பிறந்த பின்பு 2004-ல் கும்பகோணம் சிறுவர் பள்ளியில் நடந்த தீவிபத்து என்னைக் கலங்கடித்தது. அடுத்து வந்த சுனாமி, என் மனதையும் புரட்டிப் போட்டது. இந்த மூன்று சம்பவங்களில் நானும் நேரடியாகப் பாதிக்கப்பட்டது போல் உணர்ந்தேன். இந்த நிலையில் யூ.பி.எஸ்.சி தேர்வை எழுத முடிவு செய்தேன்" என்கிறார்.

அரசு வேலைவாய்ப்பு அதிகாரியின் சேவை

விமலாவின் முடிவுக்குக் கணவர் குமாரும் அவரது வீட்டாரும் சம்மதித்துவிட்டார்கள். குழந்தைகள் பள்ளிக்குச் சென்ற நேரங்களில் மட்டும் படித்தவர், பயிற்சி வகுப்புகளுக்குச் செல்லவில்லை. திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சென்று அதன் துணை இயக்குநர் சுரேஷ்குமார் செய்திருக்கும் வசதிகளைப் பயன்படுத்திக்கொண்டது விமலாவுக்கு அதிக பலன் தந்தது. அங்கு போட்டித் தேர்வு எழுதுபவர்களுக்கு வழிகாட்டும்படியான ஒரு நூலகம் அமைத்திருந்தார். அத்துடன் அங்கு யூ.பி.எஸ்.சி. வெற்றியாளர்கள் பலரும் வந்து கலந்துரையாடியிருக்கிறார்கள். இப்படியாக, யூ.பி.எஸ்.சி. எழுத விமலாவுக்கு சுரேஷ்குமார் வழிகாட்டினார்.

யூ.பி.எஸ்.சி.யின் மூன்றாவது முயற்சியில் முதல்நிலை மற்றும் நான்காவது முயற்சியில் மெயின்ஸ் தேர்வில் வெற்றிபெற்றவருக்கு ஐந்தாவது முறை ஐ.ஏ.எஸ். கிடைத்தது.

வெற்றிப்படிக்கட்டான தோல்விகள்

"யூ.பி.எஸ்.சி.யின் பாடத்திட்டத்துக்கு ஏற்ற நூல்களை நானே தேர்ந்தெடுத்துக்கொண்டேன். தமிழ் இலக்கியத்தை விருப்பப் பாடமாக எடுத்திருந்தேன். தமிழ்ப் பண்டிதரான தாத்தாவின் தமிழ்த் தாக்கம் எனது தந்தை மூலமாக என்னிடம் இருந்தது. முதல்நிலையின் பொது அறிவுக்காக நான் 6 முதல் 10 வரையிலான தமிழக அரசின் வரலாறு மற்றும் அறிவியல் பாடநூல்கள் மற்றும் இணையதளங்களில் பயின்றதும் போதுமானதாக இருந்தது. பிளஸ் டூவில் சி.பி.எஸ்.சி. பாடத்திட்டத்தின் வரலாறு மற்றும் அறிவியல் பாட நூல்களை வாங்கிப் படித்தேன். எனது ஒவ்வொரு தோல்வியிலும் எனது தவறுகளைக் கண்டுபிடித்துத் திருத்திக்கொண்டது வெற்றிப் படிக்கட்டானது. மூன்று முறை தோல்வி அடைந்தாலும் துவண்டுபோய்விடாமல் புதிய வேகத்துடன் அடுத்தது முயன்றேன். நான்காவது முயற்சியின்போது நேர்முகத்தேர்வுக்குப் பயிற்சி தேவை என்பதை உணர்ந்தேன். இதற்காக மட்டும் சென்னையின் மனிதநேயம் பயிற்சி நிலையத்தில் இரண்டு மாதப் பயிற்சி பெற்றேன். இந்தப் பயிற்சி எனது கடைசி முயற்சியில் ஐ.ஏ.எஸ். பெற பெரிதும் உதவியது" என்கிறார் விமலா.

கணவர் அளித்த ஒத்துழைப்பு

"எதையாவது சாதிக்க வேண்டும் என்று பெண்கள் முடிவு செய்துவிட்டால் அதற்கு திருமணம் ஒரு தடை கிடையாது. முயற்சி செய்வோருக்கு வெற்றி கிடைக்கவில்லை எனினும், அதன் பெயர் தோல்வி இல்லை. எனக்குக் கிடைத்த தோல்விகள் என்னைத் தளர்வடையச் செய்யவில்லை. இன்றுவரை திருச்சியில் இருந்தபடி அவ்வப்போது வந்து என்னை கவனித்துக்கொண்டு, எனது கணவர் அளிக்கும் ஒத்துழைப்பை என்னால் வார்த்தைகளால் விவரிக்க முடியாது" என்கிறார் விமலா.

தற்போது விமலாவுக்குக் கிடைத்த மாநிலப் பிரிவான மேற்கு வங்காளம், மாவோயிஸ்டுகள் நடமாட்டம் அதிகம் கொண்டது. அந்தப் பகுதி மாவட்டங்களிலும் ஆட்சியராகப் பணியாற்றும் வாய்ப்பு வரும் நாட்களில் அவருக்குக் கிடைக்கும். அப்படிப்பட்ட சூழலிலும் பணியாற்றும் வகையில், ஐ.ஏ.எஸ்.ஸில் கிடைக்கும் பயிற்சி ஒருவரை நன்கு தயார்படுத்திவிடும் என நம்புகிறார் விமலா.

பிடித்து படித்த எழுத்தாளர்கள்:

கல்கி, சாண்டில்யன், நாஞ்சில் நாடன், கி. ராஜநாராயணன், ஜெயகாந்தன், சுஜாதா, எஸ். ராமகிருஷ்ணன், மேலாண்மை பொன்னுசாமி.

விருப்பப் பாடத் தமிழ் நூல்கள்:

பாரதியார், பாரதிதாசன் கவிதைகளும் நூல்களும்.

விருப்பப் பாட வரலாற்று நூல்கள்:

பழங்கால இந்தியாவுக்கு ஏ.எல்.பாஷம், ஆர்.சி.மஜும்தார், ஆர்.எஸ்.சர்மா, ரொமிலா தாப்பர் போன்றோர் எழுதிய நூல்களும், இடைக்கால இந்தியாவுக்கு ஜே.எல். மெஹ்தா, சதிஷ் சந்திரா போன்றோரின் நூல்களும். நவீன இந்தியாவுக்கு பிபின் சந்திரா, குரோவர், சுமித் சர்க்கார் போன்றோரின் நூல்களும்.

 - விமலா


செவ்வாய், 25 அக்டோபர், 2016

செட்' தேர்வு: 14 சதவீதம் பேர் தேர்ச்சி

பேராசிரியர் பணி தகுதிக்காக, தமிழக அரசு நடத்திய, 'செட்' தேர்வில், 14 சதவீதம் பேர் மட்டுமே தகுதி பெற்றுள்ளனர்.தமிழகத்தில் உள்ள கல்லுாரிகள் மற்றும்பல்கலைகளில், பேராசிரியர் பணியில் சேர்வதற்கான, செட் தேர்வு, பிப்ரவரியில்நடந்தது.
இதன் முடிவை, தேர்வை நடத்திய, அன்னை தெரசா பல்கலை நேற்று வெளியிட்டது.தேர்வு எழுதிய, 53 ஆயிரத்து, 803பேரில், 23 ஆயிரத்து, 271 பேர், நிர்ணயித்த, 'கட் - ஆப்' மதிப்பெண்பெற்றனர். அதில், பல்கலை மானியக்குழு விதிகளின்படி, பொதுப்பிரிவில், 3,704 பேர்; பாட வாரியான பிரிவில், 3,832 பேர் என, 7,536 பேர் மட்டுமே, பேராசிரியர் பணியில் சேர தகுதி பெற்றுள்ளனர். தேர்வு எழுதியோரில்,இது, 14 சதவீதம்.
இது குறித்து, செட்தேர்வு குழு உறுப்பினர் செயலர், பேராசிரியர் கலா கூறுகையில், ''தேர்வர்களின் மதிப்பெண், கட் - ஆப் மதிப்பெண், தேர்ச்சிஉள்ளிட்ட அனைத்து தகவல்களும், அவரவரின் தேர்வு முடிவு அறிக்கையில், குறிப்பிடப்பட்டு உள்ளது. விடைத்தாள் நகல்,வினாத்தாள், விடைக்குறிப்புபோன்ற அனைத்தும், இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளன,'' என்றார்.
நெட், செட் சங்க தலைவர் நாகராஜன் கூறுகையில், ''அனைத்து தேர்வர்களின் மதிப்பெண் பட்டியலையும், இணையதளத்தில் வெளியிடவேண்டும்,'' என்றார்.
தேர்வர்களுக்கு மட்டும் 'ரிசல்ட்' :
பல்கலையின் இணையதளத்தில், பதிவு எண், வரிசை எண், மொபைல் போன் எண், தேர்வு எழுதிய பாடம், தேர்வு மையம், இ - மெயில் முகவரி ஆகியவற்றை பதிவு செய்த, தேர்வர்களுக்குமட்டும், ஆன்லைனில் முடிவுகள் அனுப்பப்பட்டன.பதிவு எண், வரிசை எண்ணை மறந்தோர், தெரசா பல்கலைக்கு, இ -மெயில் அனுப்பி,மதிப்பெண்ணை தெரிந்து கொள்ளலாம்.

திங்கள், 24 அக்டோபர், 2016

TNSET 2016 RESULT PUBLISHED செட் தேர்வின் RESULT வெளியிடப்பட்டுள்ளது

தமிழக அரசின் உதவிப் பேராசிரியர் பணிக்கான, செட் 2016 result published

கல்லுாரி மற்றும் பல்கலைகளில் உதவிப் பேராசிரியர் பணியில் சேர, மத்திய அரசின்,
'நெட்' அல்லது மாநில அரசின், 'செட்' தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.
'செட்' தேர்வு, மாநில அரசால் நடத்தப்படுகிறது.செட் தேர்வின் result
வெளியிடப்பட்டுள்ளது Plead see the web ADRESS.
http://www.setresult2016.in

 

வெள்ளி, 14 அக்டோபர், 2016

அமெரிக்காவின் பிரபல பாடலாசிரியர், பாடகர் மற்றும் இசை ஆளுமையான பாப் டைலனுக்கு (75) 2016-ம் ஆண்டுகான இலக்கிய நோபல் பரிசு

அமெரிக்காவின் பிரபல பாடலாசிரியர், பாடகர்
மற்றும் இசை ஆளுமையான பாப் டைலனுக்கு
(75) 2016-ம் ஆண்டுகான இலக்கிய நோபல்
பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு பாடலாசிரியருக்கு நோபல்
வழங்கப்படுவது இதுவே முதல்முறை. இது பல
உலக இலக்கிய ஆர்வலர்களுக்கு ஆச்சரியத்தை
ஏற்படுத்திய அறிவிப்பாக திகழ்கிறது.
"அமெரிக்காவின் சிறந்த பாடல் மரபில் புதிய
கவித்துவ வெளிப்பாடுகளை படைத்ததற்காக"
பாப் டைலனுக்கு நோபல் வழங்குவதாக
நோபல் அகாடமி தனது செய்திக்குறிப்பில்
கூறியுள்ளது.
பாப் டைலன்: வாழ்க்கைக் குறிப்புகள்
பாப் டைலன் 1941-ம் ஆண்டு மே மாதம்
அமெரிக்காவின் மினசோட்டாவில் உள்ள
டியூலுத்தில் பிறந்தார். ஹிப்பிங் என்ற நகரில்
நடுத்தர யூத குடும்பத்தில் வளர்ந்தார். பதின்ம
வயதில் நிறைய இசைக்குழுக்களில் இவர்
பாடியும் எழுதியும் வந்துள்ளார். நாளடைவில்
அமெரிக்க நாட்டுப்புற இசை மீது
ஈர்க்கப்பட்டார்.
இவரது பல ஆதர்சங்களில் குறிப்பிடத்தகுந்தவர்
நாட்டுப்புற பாடகர் வுடி கத்ரி ஆவார்.
மேலும் பீட் தலைமுறை மற்றும் நவீனத்துவ
கவிஞர்களும் இவர் மீது தனிப்பட்ட தாக்கம்
செலுத்தியுள்ளனர். 1961-ம் ஆண்டு நியுயார்க்
குடிபெயர்ந்த டைலன் கிரீன்விச் கிராமத்தில்
கிளப்கள், விடுதிகளில் இசை நிகழ்ச்சிகளை
நடத்தி வந்தார். இந்நிலையில்தான் இசைத்தட்டு
தயாரிப்பாளர் ஜான் ஹேமண்ட் என்பவரை
சந்தித்து தனது முதல் ஆல்பமான 'பாப்
டைலன்' (1962) என்பதற்கு ஒப்பத்தத்தில்
கையெழுத்திட்டார்.
அடுத்த சில ஆண்டுகளில் பல ஆல்பங்களை
பாப் டைலன் வெளியிட வெகுஜன இசையில்
இது மிகப்பெரிய தாக்கத்தை அமெரிக்காவில்
ஏற்படுத்தியது. குறிப்பாக Bringing It All Back
Home, Highway61 Revisited-1965, Blonde On
Blonde-1966 and Blood On The Tracks-1975.
ஆகியவை பிரபலமடைந்தன.
இதன் பிறகு இவரது மாஸ்டர் பீஸ் என்று
கருதப்படும் Oh Mercy (1989), Time out of
mind (1997) மற்றும் Modern Times (2006)
ஆகியவை இவரை புகழின் உச்சிக்குக்
கொண்டு சென்றது.
மனிதனின் சமூக சூழ்நிலைமைகள், மதம்,
அரசியல் மற்றும் காதல், அன்பு ஆகியவற்றை
பாடுபொருள்களாகக் கொண்டு இவரது
ஏகப்பட்ட இசைத்தொகுப்புகள் வெளிவந்தன.
இவரது பாடல் வரிகள் பத்திரிகைகளில்
வெளியாகின. ஒரு கலைஞராக பன்முகத் திறமை
வாய்ந்தவர் பாப் டைலன். ஓவியராக, நடிகராக,
திரைக்கதாசிரியராக இவர் பன்முக ஆளுமை
கொண்டவர்.
ஆல்பங்கள் நீங்கலாக டைலன் பரிசோதனை
படைப்புகளையும் வெளிக்கொணர்ந்துள்ளார்.
இவரது Tarantula (1971) மற்றும் எழுத்துகள்,
ஓவியங்கள் தொகுப்பு (1973), மற்றும் இவரது
சுயசரிதை நூலான Chronicles (2004)
ஆகியவையும் குறிப்பிடத்தக்கது. சுயசரிதை
நூலில் இவரது ஆரம்பகால நியூயார்க்
நினைவுகள் வெகுஜனக் கலாச்சாரத்தில்
தனிப்பட்ட வாழ்வின் அம்சங்களை
எடுத்துரைப்பதாக அமைகிறது.
1980களிலிருந்து பாப் டைலன் தொடர்ச்சியாக
பயணத்தில் இருந்தார். பாப் டைலன்
அமெரிக்காவின் ஒரு ஆளுமை. சமகால
இசையில் இவரது தாக்கம் ஆழமானது.

வெள்ளி, 30 செப்டம்பர், 2016

முதுகலை ஆசிரியர் காலியிடங்களை நிரப்புவதில் சுணக்கம் காட்டும் ஆசிரியர் தேர்வு வாரியம்: அரசாணை வெளியிட்டு 7 மாதங்கள் ஆகியும் நடவடிக்கை இல்லை

அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 1,062 முதுகலை பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிடங்களை நிரப்ப அரசாணை வெளியிட்டு 7 மாதங்கள் ஆகியும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் சுணக்கம் காட்டிவருகிறது ஆசிரியர் தேர்வு வாரியம்.

அரசு மேல்நிலைப் பள்ளிகளில் முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் 50 சதவீதம் நேரடி நியமனம் மூலமாகவும், 50 சதவீதம் பதவி உயர்வு மூலமாகவும் நிரப்பப்படுகின்றன. நேரடி நியமனங்கள் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் போட்டித்தேர்வு மூலம் செய்யப்படுகின்றன. அந்த வகையில், கடந்த ஆண்டு 1,807 முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நிரப்பப்பட்டன. அந்த காலியிடங்கள் 2013-14, 2014-15-ம் கல்வி ஆண்டுகளில் ஏற்பட்டவை ஆகும்.

இந்நிலையில், 2015-16-ம் கல்வி ஆண்டில் ஏற்பட்ட 2,125 முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணி யிடங்களை நிரப்ப பள்ளிக்கல்வி துறை கடந்த 10.2.2016 அன்று அரசாணை (எண் 24) வெளியிட் டது. பதவி உயர்வுக்கு ஒதுக்கப் பட்ட காலியிடங்கள் அனைத்தும் நிரப்பப்பட்ட நிலையில், நேரடி நியமனத்துக்கு ஒதுக்கீடு செய்யப் பட்ட 1,062 காலியிடங்கள் இன்னும் நிரப்பப்படவில்லை.

அரசாணை வெளியிட்டு 7 மாதங்கள் ஆகியும் இன்னும் போட்டித் தேர்வுக்கான அறிவிப்பை கூட ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிடவில்லை.

இதுகுறித்து ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு பள்ளிக்கல்வித் துறை பலமுறை நினைவூட்டல் களையும் அனுப்பிவிட்டது. ஆனாலும், ஆசிரியர் தேர்வு வாரியம் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேல்நிலைப் பள்ளிகளில் 40 மாணவர்களுக்கு ஒர் ஆசிரியர் என்ற அடிப்படையில் ஆசிரியர்-மாணவர் விகிதாச்சாரம் நிர்ணயிக் கப்பட்டுள்ளது. அந்த அடிப்படை யில் அரசு மேல்நிலைப் பள்ளி களில் புதிதாக 1,600 முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங் களுக்கு பள்ளிக்கல்வித்துறை அரசிடம் அனுமதி கேட்டிருக்கிறது.

அரசுப் பள்ளிகளில் முதுகலை பட்டதாரி ஆசிரியர் காலிப்பணி யிடங்கள் நிரப்பப்படாதது குறித்து தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் கழக மாநிலத் தலைவர் வே.மணி வாசகனிடம் கேட்டபோது, "அனு மதிக்கப்பட்ட காலியிடங்களே 2,200-க்கு மேல் இருக்கிறது. ஆசிரியர்-மாணவர் விகிதாச்சார அடிப்படையில் புதிதாக 1600 பணியிடங்களை தோற்றுவிக்க பள்ளிக்கல்வித்துறை ஒப்புக் கொண்டுள்ளது. காலியிடங்கள் விழுப்புரம், வேலூர், கிருஷ்ணகிரி உள்ளிட்ட வடமாவட்டங்களில்தான் அதிகம் உள்ளன. வடமாவட்டங் களில் தேர்ச்சி விகிதம் குறைவு என்கிறார்கள்.

காலியிடங்களை நிரப்பா விட்டால் தேர்ச்சி விகிதம் எப்படி அதிகரிக்கும்? அரசுப் பள்ளி களில் முதுகலை ஆசிரியர் பணி யிடங்கள் காலியாக இருப்பதால் கிராமப்புற மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, அனுமதிக்கப்பட்ட காலியிடங்கள், புதிதாக தோற்றுவிக்கப்பட்ட காலி யிடங்கள் இரண்டையும் சேர்த்து நிரப்ப அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.

தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் சங்க மாநிலத் தலைவர் கே.பி.ஓ.சுரேஷ் கூறும் போது, "அரசு மேல்நிலைப் பள்ளி களில் முதுகலை ஆசிரியர் பணிகளில் 3 ஆயிரத்துக்கும் மேற் பட்ட காலியிடங்கள் உள்ளன. குறிப்பாக ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல் பாட ஆசிரியர்கள் இல்லாததால் கிராமப்புற அரசுப் பள்ளிகளில் படிக்கின்ற மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள். இது போன்று முக்கியப் பாடங்களில் ஆசிரியர் இல்லாவிட்டால் பிளஸ் 2 தேர்ச்சி விகிதம் குறையும்" என்றார்.

இதற்கிடையே, அரசுப் பள்ளி களில் 10-ம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தேர்வுகளில் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட் டுள்ளன? என்ற விவரத்தை அனுப்புமாறு அனைத்து பள்ளி களுக்கும் கல்வித்துறை அதிகாரி கள் மூலம் அரசு உத்தரவு பிறப் பித்துள்ளது.

இந்த நிலையில், தற்போது உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டிருப்ப தால், தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளன. எனவே, முது கலை ஆசிரியர் நியமனத்துக்கான அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிடுவதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.



ஞாயிறு, 25 செப்டம்பர், 2016

FLASH NEWS: 1620 முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்பட உள்ளன பள்ளி கல்வி இயக்குனர் கண்ணப்பன்

இன்னும் சில தினங்களில் அறிவிப்பு வரும் 1,620 முதுகலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப முடிவு: பள்ளி கல்வி இயக்குனர் தகவல்

'`1620 முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்பட உள்ளன'' என்று பள்ளி கல்வி இயக்குனர் கண்ணப்பன் கூறினார்.நாகர்கோவில் கல்வி மாவட்டத்தில் பிளஸ்-2, 10-ம் வகுப்பு தேர்வுகளில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்களுக்கு பரிசளிப்பு விழா, நாகர்கோவிலில் நேற்று நடந்தது. நிகழ்ச்சியில், தமிழக பள்ளி கல்வி இயக்குனர் கண்ணப்பன், பாராட்டு சான்றிதழ்களை வழங்கி பேசியதாவது:- மாணவர்களின் படைப்பாற்றல் திறனை ஊக்குவிக்கும் சக்தி, ஆசிரியர்களுக்குத்தான் உண்டு. பள்ளியில் கணிதம் பாடத்தில் 200க்கு 200 எடுக்கும் மாணவர்கள் கூட, அண்ணா பல்கலைக்கழக தேர்வில் 50 மதிப்ெபண்கள் எடுப்பதற்கு, திணறும் நிலை உள்ளது. நமது வகுப்பறைகளின் செயல்பாடுகளில் மாற்றம் வேண்டும். எம்.பி.பி.எஸ்., பி.இ. மட்டும்தான் படிப்பு என்பதை மாற்ற வேண்டும். ஏராளமான உயர்கல்வி படிப்புகள் உள்ளன. எந்தெந்த படிப்புகளுக்கு என்னென்ன வேலைவாய்ப்புகள் கிடைக்கும் என்பதை மாணவர்களுக்கு விளக்க வேண்டும். தமிழகம், கல்வியில் வேகமாக முன்னேறி வருகிறது. 400-க்கும் மேற்பட்ட பள்ளிகள் தரம் உயர்த்தப்பட்டு உள்ளன. 1000-த்துக்கும் மேற்பட்ட தொடக்க, நடுநிலைப்பள்ளிகள் தொடங்கப்பட்டு உள்ளன. தற்போது, 1620 முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்பட உள்ளன. இதற்கான அறிவிப்பு இன்னும் 10 அல்லது 15 நாட்களில் வெளியிடப்படும். இவ்வாறு அவர் பேசினார். இந்த நிகழ்ச்சியில் 1,536 பேருக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. 12ம் வகுப்பு மாணவர்களுக்கான புதிய ஆன்ட்ராய்டு செயலியையும் கண்ணப்பன் வெளியிட்டார்.

சனி, 24 செப்டம்பர், 2016

தமிழில் சிற்றிலக்கியம்

தமிழில் சிற்றிலக்கியம் தோன்றி வளர்ந்த வரலாற்றினை முன் வைக்கும் முனைவர் ந.வீ.ஜெயராமன் "தொல்காப்பியர் காலத்தில் இடம்பெற்ற சிற்றிலக்கிய வித்து சங்க காலத்தில் ஆற்றுப்படையாக முளைவிட்டுஇ ஐந்தாம் நூற்றாண்டில் அந்தாதியாகத் துளிர்த்துஇ ஏழாம் நூற்றாண்டில் கோவையாகிச் செடியாகிஇ எட்டாம் நூற்றாண்டில் உலாவாக மரமாகி ஒன்பதாம் நூற்றாண்டில் கலம்பகமாகக் கிளைத்துஇபதினோராம் நூற்றாண்டில் சதகமாகவும் பரணியாகவும் அரும்பி பன்னிரண்டாம் நூற்றாண்டில் பிள்ளைத் தமிழாக மொட்டாகிஇ பதினான்காம் நூற்றாண்டில் பள்ளாகக் காய்த்துஇ பதினெட்டாம் நூற்றாண்டில் குறவஞ்சியாகக் கனிந்தது" என்று குறிப்பிடுகிறார்.

பெருங்கதை

வேறு எந்தத் தமிழ்க் காப்பியத்திற்கும் இல்லாத தனிச் சிறப்புப் பெருங்கதைக்கு உண்டு என்று அறிஞர் கருதுவர். இது பலவகைக் கருவிகள், பழக்க வழக்கங்கள், கட்டட அமைப்புகள், விளையாட்டுகள் பற்றிய சமுதாயச் செய்திகளை எல்லாம் நுட்பமாகப் பேசும் ஒரு காப்பியம்.


பெருங்கதை பற்றிப் பழைய உரையாசிரியர்கள் பலர் புகழ்ந்து பாராட்டியுள்ளனர். சிலப்பதிகார உரையாசிரியர் அடியார்க்கு நல்லார் இக்காப்பியத்தைப் பாராட்டி உள்ளார். "கபாடபுரத்தில் இருந்த இடைச் சங்கத்தில் இயற்றப்பட்டவை கலியும் குருகும் வெண்டாளியும் முதலிய செய்யுள் இலக்கியங்கள்; இந்த இலக்கியங்களை எல்லாம் ஆராய்ந்து செய்ததே உதயணன் கதை" என்று அவர் கூறியுள்ளார் (உதயணன் கதை - பெருங்கதை). பேராசிரியர் தொல்காப்பியத்திற்கு உரை எழுதிய உரையாசிரியர். தொன்மை முதலிய இலக்கணக் கூறுகளை விளக்கும் இவர் இயைபு என்ற இலக்கணத்தை விளக்கி, அதற்குச் சான்றுகளாகச் சீத்தலைச் சாத்தனாரால் செய்யப்பட்ட மணிமேகலையையும், கொங்குவேளிரால் செய்யப்பட்ட இந்தப் பெருங்கதையையும் குறிப்பிட்டுள்ளார்.

இவர்களே அன்றி நச்சினார்க்கினியர், மயிலை நாதர், நேமிநாத உரையாசிரியர், யாப்பருங்கல விருத்தி உரையாசிரியர், வீரசோழிய உரையாசிரியர் முதலியோர் உரைகளிலும் பெருங்கதை மேற்கோளாக இடம் பெற்றுள்ளது. இத்தகைய பெருமை பெற்ற பெருங்கதை, உதயணன் என்னும் காவியத் தலைவனின் வாழ்க்கையை விவரித்துச் செல்கிறது. இக்காப்பியத்தை இயற்றிய கொங்குவேளிர் சமண சமயத்தைச் சேர்ந்தவர். எனவே இக்காப்பியம் சமணக் கொள்கைகளை மிகுதியும் முன்னிலைப்படுத்துவதாக அமைந்துள்ளது. இப்பெருங்கதை பற்றிய அறிமுகமாக இப்பாடப் பகுதி அமைக்கப்பெற்றுள்ளது.