இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்களுக்கான தகுதித்தேர்வு கடந்த ஆகஸ்ட் மாதம் 17 மற்றும் 18ஆம் தேதிகளில் நடைபெற்றது. தேர்வு முடிவுகள் கடந்த ஜனவரி மாதம் 11ஆம் தேதி வெளியிடப்பட்டன.
தமிழகம் முழுவதும் வெற்றி பெற்றவர்களின் சான்றிதழசரிபார்ப்பு திங்கள்கிழமை தொடங்கி வரும் ஜன.28ஆமதேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது
தேர்வின் முதல் தாளில் ( இடைநிலை ஆசிரியர்கள் ) தேர்ச்சி பெற்றவர்களுக்கு வெயிட்டேஜ் மதிப்பெண்கள் வழங்கப்பட்டன.
வெயிட்டேஜ் மதிப்பெண்:
மேல்நிலைக் கல்வியில்
90 சதவீதத்துக்கு மேல் 15மதிப்பெண்கள்,
80 முதல் 90 சதவீதம் வரை 12 மதிப்பெண்கள்,
70 முதல் 80 சதவீதம் வரை 9 மதிப்பெண்கள்,
60 முதல் 70 சதவீதம் வரை 6 மதிப்பெண்கள்,
50 முதல் 60 சதவீதம் வரை 3 மதிப்பெண்கள் வழங்கப்படும்.
ஆசிரியர் பட்டயப்படிப்பு
70 சதவீதத்துக்கு மேல் 25 மதிப்பெண்கள்,
50 முதல் 70 சதவீதம் வரை 20மதிப்பெண்கள் கிடைக்கும்.
ஆசிரியர் தகுதித் தேர்வில்
90 சதவீதத்துக்கு மேல் 60 மதிப்பெண்கள்,
80 முதல் 90 சதவீதம் வரை 54 மதிப்பெண்கள்,
70 முதல் 80 சதவீதம் வரை 48 மதிப்பெண்கள்,
60 முதல் 70 சதவீதம் வரை 42 மதிப்பெண்கள்
வழங்கப்பட்டன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக