செவ்வாய், 18 செப்டம்பர், 2012

இந்தியா விண்வெளியில் நூற்றுக்கு நூறு




விக்ரம் சாராபாய்

                          சதத்தைப் போற்றுவோம்

  இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் 100வது திட்டமாகிய பி.எஸ்.எல்.வி-சி21 ராக்கெட் பிரான்ஸ் மற்றும் ஜப்பான் நாட்டின் செயற்கை கோள்களை சுமந்துகொண்டு விண்ணில் வெற்றிகரமாக சீறி பாய்ந்ததைக் கண்டு மகிழ்ந்து கைதட்டிய இந்திய பிரதமர்
 இந்தியா  போன்ற ஏழை நாடுகள் விண்வெளி ஆய்வுக்காக ஏராளமாக செலவிடுவது தேவைதானா? என்று பலரும் கேட்கிறார்கள்…. இத்தகைய ஆய்வுகளாளும் தொழில் நுட்பத்தாலும்தான் நம்முடைய வளர்ச்சியே சாத்தியமானது என்பதுதான் அவர்களுக்கு அளிக்கும் பதில்என்றார் பெருமிதத்துடன்.

 இந்த சதத்தை கொண்டாடும் வேளையில் அதற்கு அடித்தளமிட்ட பலரை நாம் நினைகூர்வது அவசியமாகும்.. இந்தியாவின் விண்வெளி ஆய்வின் வரலாறு 1920ல் கொல்கத்தாவில் அறிவியலார் சிசிர் குமார் மித்திராவின் செயல்பாடுகளில் துவங்கியது..மித்திரா தரையளாவிய வானொலி அலைகள் மூலம் அயனி வெளியை ஆய்வு செய்ய சோதனைகளை நிகழ்த்தினார். அதன் பின்னர், இந்திய அறிவியலாளர்கள் சி. வி. ராமன் , மேக்நாத் சாகா போன்றோர் விண்வெளி அறிவியலுக்கு உதவும் பலஅறிவியல் கொள்கைகளை வெளியிட்டனர்.
. 1945ஆம் ஆண்டிற்குப் பின்னரே இத்துறையில் ஒருங்கிணைக்கப்பட்ட ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டன.  அகமதாபாத்தில் அமைந்துள்ள இயற்பியல் ஆராய்ச்சி ஆய்வகத்தை நிறுவிய இந்திய விண்வெளி ஆராய்ச்சியின் தந்தை எனப் போற்றப்படும் விக்கிரம் சாராபாய் மற்றும் டாட்டா அடிப்படை ஆராய்ச்சிக் கழகத்தை நிறுவனர் ஹோமி ஜெஹாங்கீர் பாபா  ஆகியோரின் பங்களிப்பு அளப்பரியது..
விண்வெளித் துறையில் துவக்கத்தில் அண்டக் கதிரியக்கம், உயர்வெளி மற்றும் காற்றுவெளி சோதனைக் கருவிகள், கோலார் சுரங்கங்களில் துகள் சோதனைகள் நடத்தப்பட்டன.ஆராய்ச்சி ஆய்வகங்கள், பல்கலைக்கழகங்கள் மற்றும் தனியிடங்களில் நிகழ்ந்த ஆய்வுகள் ஒருங்கிணைக்கப்பட்டன. அணு ஆற்றல் துறைக்கு ஓமி பாபா செயலாளராகப் பொறுப்பேற்றப் பின்னர் அணுவாற்றல் துறை இந்தியாவெங்கும் விண்வெளி ஆராய்ச்சிக்கு நிதியுதவி வழங்கியது
      1960 ல் திருவணந்தபுரத்துக்கு அருகில் உள்ள தும்பாவிலிருந்து செய்யப்பட்ட உயர் வளிமண்டல மற்றும் அயனமண்டல ஆராய்ச்சிகள் நமது விண்வெளி ஆராய்ச்சியின் மைல்கல் எனலாம்….   1969 ல் இஸ்ரோ நிறுவப்பட்டபின்னர் 1972 ல் தலைவராக பொறுப்பேற்ற சதிஷ் தவன்,. ஆரியபட்டா, பாஸ்கரா ,ஆப்பிள், ரோகினி, என பல இந்தியச் செயற்கைகோள்களை விண்ணில் வெற்றிகரமாக செலுத்திய  முன்னாள் தலைவர் பேராசிரியர் யு.ஆர் ராவ், அவருக்குபின் பொறுப்பேற்றவர்களான. கே.கஸ்தூரிரங்கன், ஜி.மாதவன் நாயர்,தற்போதைய தலைவர் டாக்டர் ராதகிருஷ்ணன் ஆகியோருடன் தமிழகத்தைச் சேர்ந்தமுன்னாள் குடியரசுத்தலைவர் டாக்டர் ஏ.பி.ஜேஅப்துல்கலாம், சந்திராயன் திட்ட இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை  பிரம்மோஸ் ஏவுகணைத்திட்ட இயக்குநர் முனைவர்.ஆ.சிவதாணுப்பிள்ளைஆகியோரும் விண்ணில் நாம் வெற்றிகொடி நாட்ட உறுதுணையாக நின்றிருக்கின்றார்கள் அவர்கள் மட்டுமல்ல அவர்களுக்கு பின் நின்ற ஆயிரமாயிரம் விஞ்ஞானிகளின் ஒருமித்த உழைப்பும்தான் இந்த சதமடித்த சாதனை!. இத்தருணத்தில் அவர்களையும்  நாம் போற்றுவோம்..







  
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக