விண்ணில் ஒரு சாகசம்
“ரிஸ்க் எடுக்கிறது எனக்கு ரஸ்க் சாப்பிடற மாதிரி” என்று மிதப்பவர்களின் சாகச விளையாட்டுதான் ஸ்கை டைவிங்…. அதில் பிரமிக்கவைக்கும் வான்வெளி
உலகச் சாதனையை ஒருவர் இருவர் அல்ல 138 ‘ஸ்கைடைவர்ஸ்’ ஒன்றாக
இணைந்து நிகழ்த்தியிருக்கின்றனர்
,அமெரிக்கவின் வடக்கு இல்லியனாய்ஸில் நிகழ்ந்த இச் சாதனைக்காக . இதற்காகவே உள்ள ஸ்பெஷல் விமானங்களின் உதவியுடன் விண்ணுக்கு சென்ற ‘ஸ்கைடைவர்ஸ்’ சுமார் 18, 500 அடி உயரத்திலிருந்து குதித்தனர்… ‘கரணம் தப்பினால் மரணம்’ எனும் மணிக்கு 220 மைல் வேகத்தில் பூமியை நோக்கி தலைகிழாக கீழிறங்கிய அவர்கள் . அனைவரும் இணைந்து 150 அடி அகலமுள்ள ‘ஸ்னோஃப்ளேக்’ வடிவத்தை ( snowflake formation) உருவாக்கினர்.
மூன்று நாட்களில் 15 முறைகளுக்கும் மேலாக முயற்சிசெய்து இந்த அபாயகரச்சதனையைச் அபாரமாகச் செய்ததன் மூலம் ஏற்கனவே 2009 ஆண்டில்
108 பேர்கள் இணைந்து நிகழ்த்திய சாதனையை முறியடித்துள்ளனர்.
பிரான்ஸ், ஸ்பெயின்,நார்வே,ஸ்விடன், சுஜர்லாந்து, உக்ரைன் ,ரஸ்யா,இத்தாலி,பெல்ஜியம்,ஆஸ்திரியா,பிரிட்டன் ஆகிய நாடுகளைச் சேர்ந்த13 பெண்கள் உள்ளிட்ட 138 ஸ்கைடைவர்ஸ் இதில் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக