புதன், 30 மார்ச், 2016

ஐன்ஸ்டைனைவிட அதிக அறிவுத் திறன் குறியீட்டு எண்ணை பெற்றுள்ள 12 வயது சிறுமி

மொழித் திறன், பொது அறிவு, நினைவுத் திறன், கணிதத் திறன், சிக்கலுக்குத் தீர்வு காணும் திறன் ஆகியவற்றின் அடிப்படையில் அறிவுத் திறனை சோதிக்கும் 150 கேள்விகள் கொண்ட தேர்வை மென்ஸா அமைப்பு நடத்தி வருகிறது.
இந்தத் தேர்வில் லிடியா செபாஸ்டின் என்கிற 12 வயது சிறுமி 162 மதிப்பெண்களைப் பெற்றார். இவர் கேரளாவை பூர்வீகமாகக் கொண்ட இந்திய வம்சாவளிச் சிறுமி ஆவார். மென்ஸô அறிவுத் திறன் சோதனையில் இதுவே அதிகபட்ச மதிப்பெண் ஆகும்.

லிடியா பிறந்த 6 மாதங்களிலேயே பேசத் தொடங்கிவிட்டார் என்று மருத்துவர்களான இவரது பெற்றோர் கூறினர். புத்தகங்கள் படிப்பதில் மிகுந்த ஆர்வமுள்ள லிடியா, வயலின் வாசிப்பதிலும் வல்லவர். இந்தத் தேர்வை எழுதுவதற்காக, கடந்த ஓராண்டாகப் பல்வேறு விஷயங்கள் குறித்து அவர் படித்து வந்தார். உலகப் புகழ் பெற்ற விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டைனைவிட அதிக அறிவுத் திறன் குறியீட்டு எண்ணை இச்சிறுமி பெற்றுள்ளார். ஆனால் ஆல்பர்ட் ஐன்ஸ்டைன், எந்த அறிவுத் திறன் தேர்வும் எழுதியதில்லை. மென்ஸா சோதனை அடிப்படையில், அவரது அறிவுத் திறன் குறியீட்டெண் 160.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக