சனி, 30 ஏப்ரல், 2016
தமிழ்நாடு வேளாண் பல்கலை:ஆன்லைன் விண்ணப்ப வினியோகம் மே 12ம் தேதி துவங்குகிறது.
சேர்க்கைக்கான, ஆன்லைன் விண்ணப்ப வினியோகம் மே 12ம் தேதி துவங்குகிறது.
பல்கலைதுணைவேந்தர்ராமசாமி, நிருபர்களிடம் கூறியதாவது:
தமிழ்நாடு வேளாண் பல்கலையால்நடத்தப்படும், 13 இளமறிவியல் படிப்புக்கு மே, 4ம் தேதி அறிவிப்பு வெளியிடப்படும். மொத்தம், 2,600 இடங்களுக்கு அரசு விதித்த விகிதாச்சாரப்படி, 65 சதவீதம் அரசுக்கும், 35 சதவீதம் தனியார்கல்லூரிகளுக்கும் இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.மே, 12ம் தேதி முதல் ஜூன், 11ம் தேதி வரைவிண்ணப்பிக்கலாம். தரவரிசை பட்டியல், ஜூன், 20ல் வெளியிடப்படும். சிறப்பு, ஒதுக்கீடுக்கான கலந்தாய்வுஜூன், 27, 28 ஆகிய தேதிகளில் நடக்கிறது.முதற்கட்ட கலந்தாய்வு, ஜூலை, 4 முதல், 10ம் தேதி வரையும்,தொழில் கல்விக்கான கலந்தாய்வு ஜூலை, 13ம் தேதியும், வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கான கலந்தாய்வு,ஜூலை, 15, 16ம் தேதிகளும் நடக்கிறது.இரண்டாம் கட்ட கலந்தாய்வு, ஜூலை, 25 முதல் 28ம் தேதி வரை நடக்கிறது. தேவைப்பட்டால் மூன்றாம் கட்ட கலந்தாய்வு நடைபெறும். சேர்க்கை தேதிகளில் எவ்வித மாற்றமும் இருக்காது.
அரசு மட்டுமின்றி, தனியார் இடஒதுக்கீடுக்கும் விண்ணப்பம் கட்டாயம் பதிவேற்றம் செய்யவேண்டும். இதில், திருநங்கைகளுக்கும் தனி இடஒதுக்கீடு உள்ளது. இதர பிரிவினர், 600 ரூபாயும், எஸ்.சி.,எஸ்.டி., பிரிவினர், 300 ரூபாயும் விண்ணப்ப கட்டணமாக செலுத்த வேண்டும்.இவ்வாறு, துணைவேந்தர்ராமசாமி கூறினார்.மாணவர்கள்,04226611345/46 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.
பத்து மாத மொழிக்கல்வி பயிற்சியில் பங்கேற்க விரும்பும் ஆசிரியர்களிடம் விருப்பப்பட்டியல் சேகரிக்கப்படுகிறது.
மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை சார்பில், மொழிக்கல்வியை மேம்படுத்த,ஆசிரியர்களுக்கு, பத்து மாதம் பயிற்சியளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதில்,இந்தியாவில் உள்ள, 20 மொழிக்கும், அந்தந்த மொழி ஆசிரியர்களை தேர்வு செய்து, ஏழு மையங்களில் பயிற்சி வழங்கப்படுகிறது.
மைசூரில் உள்ள தென்னிந்திய மொழிக்கல்வி மையத்தில், தமிழ், தெலுங்கு, மலையாளம், தெலுங்கு ஆகியமொழி ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்கப்பட உள்ளது. இதில், தமிழ்மொழிக்கல்வி பயிற்றுவிக்கும்
ஆசிரியர்களில், 44 பேருக்கு பயிற்சி வழங்கப்பட உள்ளது. இதில், பங்கேற்க விருப்பம் உள்ள தமிழாசிரியர்களின்விண்ணப்பங்களை சேகரித்து, இம்மாத இறுதிக்குள் அனுப்பி வைக்கும்படி, அனைத்து உயர்நிலை,மேல்நிலைப்பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
வரும் ஜூலை, 4ம் தேதி தொடங்கும் இப்பயிற்சி, 2017 ஏப்ரல் மாதம் வரை நடைபெற உள்ளது. இதில், பங்கேற்கும்ஆசிரியர்களுக்கு பயணப்படி, அகவிலைப்படி உள்ளிட்டவற்றையும், மண்டல மொழிக்கல்வி மையம் ஏற்றுக்கொள்கிறது.
வெள்ளி, 29 ஏப்ரல், 2016
ரூ.888-க்கு டோகோஸ் எக்ஸ்1 ஸ்மார்ட் ஃபோன்-இன்னொரு ஃப்ரீடம் 251?-
செய்யப்படவுள்ளதாக நிறுவனம் அறிவித்துள்ளது.
ஆனால் இந்தச் செய்தியை எழுதிக் கொண்டிருக்கும் போதே, நிறுவன இணையதளத்தின் பெரும்பாலானஇணைப்புகளை திறக்க முடியவில்லை. குறிப்பாக நிறுவனத்தைப் பற்றிய தகவல்கள் அடங்கிய இணைப்பையும் திறக்கமுடியவில்லை என்று தெரிய வந்துள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் ஃப்ரீடம் 251 என்ற மலிவு விலை ஸ்மார்ட் போன் அறிமுகம் செய்யப்பட்டது, ஆனால் இந்தக் குறைந்த
விலைக்கு 3ஜி ஸ்மார்ட் போன் அளிக்க முடியாது என்று பலதரப்பிலும் சந்தேகங்கள் எழுந்த நிலையில் மத்திய அரசின் கவனத்துக்குச் சென்றது. இதனையடுத்து ரிங்கிங் பெல்ஸ் நிறுவனம் தனது 'பிசினஸ் மாடல்' என்ன என்பதை விளக்குமாறு மத்திய அரசு கோரியிருந்தது. இதனையடுத்து ஃப்ரீடம் 251 ஸ்மார்ட் போன் நிலை என்னவானது என்று தெரியவில்லை. தற்போது ரூ.888-க்கு ஸ்மார்ட்
போன் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மருத்துவப் படிப்புக்கு தேசிய அளவில் பொது நுழைவுத் தேர்வு: தமிழகத்தில் மாநிலப் பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கு கடும் பாதிப்பு
வந்தன. நுழைவுத்தேர்வால் கிராமப்புற மாணவர்கள் பாதிக்கப்படுவதாக கருதிய தமிழக அரசு கடந்த 2007-ம் ஆண்டு நுழைவுத்தேர்வை ரத்து செய்தது. அதுமுதல் பிளஸ் 2 கட் ஆப் மதிப்பெண் அடிப்படையிலேயே மருத்துவப் படிப்புக்குமாணவர்கள் சேர்க்கப்பட்டு வருகிறார்கள். தமிழகத்தில் சென்னையில் மட்டும் ஒரேயொரு அரசு பல்மருத்துவக் கல்லூரிஉள்ளது. இங்கு பிடிஎஸ் படிப்புக்கு மொத்தம் 100 இடங்கள் இருக்கின்றன. இதில் 15 இடங்கள் அகில இந்தியஒதுக்கீட்டுப் போய்விடும். எஞ்சிய 85 இடங்களை தமிழக அரசு நிரப்புகிறது. எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்பில் சேர ஆண்டுதோறும் ஏறத்தாழ 35 ஆயிரம் மாணவர்கள் விண்ணப்பிக்கிறார்கள்.
இந்நிலையில் தற்போது மருத்துவ படிப்புக்கு தேசிய அளவில் பொது நுழைவுத்தேர்வு நடத்த வேண்டும் என்றுஉச்ச நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது. ஏற்கெனவே இந்த ஆண்டு மருத்துவப் படிப்பு மாணவர் சேர்க்கைக்கானவிண்ணப்ப படிவங்கள் மே 9-ம் தேதி முதல் வழங்கப்படும் என்று மருத்துவக் கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது. மருத்துவப் படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள் விண்ணப்பம் வழங்கப்படும் நாளை எதிர்நோக்கி காத்திருக்கும் நிலையில், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு அவர்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அகில இந்திய அளவிலான நுழைவுத்தேர்வு என்பது சிபிஎஸ்இ பாடத்திட்ட தரத்தில் இருக்கும். இதனால், மாநில பாடத்திட்டத்தில் படித்த மாணவர்கள் தேசிய அளவிலான பொது நுழைவுத்தேர்வில் வெற்றி பெறுவது மிகவும் கடினம். ஒரு விஷயத்தை பயன்பாடு சார்ந்த அடிப்படையில் படித்துவந்த சிபிஎஸ்இ மாணவர்களுடன் தேர்வுக்கு நேரடி வினா-விடை அடிப்படையில் படித்துவந்த மாநிலப் பாடத்திட்ட மாணவர்கள் போட்டிபோடுவது என்பது இயலாத காரியம்.
இதுகுறித்து தமிழக பள்ளிக்கல்வித் துறையின் முன்னாள் துணை இயக்குநரான சிவா தமிழ்மணி கூறும்போது,"இந்தியாவில் பள்ளி மாணவர்கள் வெவ்வேறு பாடத்திட்டத்தில் படிக்கிறார்கள். எனவே, கல்வியின் தரம் நிச்சயம் ஒரேமாதிரியாக இருக்காது. இந்த சூழலில் மருத்துவப் படிப்புக்கு தேசிய அளவில் பொது நுழைவுத்தேர்வு நடத்தினால் அதை எப்படி ஏற்க முடியும்?. இந்த நுழைவுத்தேர்வால் சிபிஎஸ்இ மாணவர்களும், நகர்ப்புற மாணவர்களும்தான் பயன்பெறுவார்களே தவிர மாநில பாடத்திட்டத்தில் படிக்கும் அரசுப் பள்ளி மாணவர்களும், கிராமப்புற மாணவர்களும்
கடுமையாகப் பாதிக்கப்படுவார்கள்" என்றார்.
தமிழ்நாடு முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவரான கே.பி.ஓ. சுரேஷ் கூறும்போது,"மருத்துவப் படிப்புக்கு அகில இந்திய அளவில் பொது நுழைவுத்தேர்வு நடத்தப்பட்டால் சிபிஎஸ்இ மற்றும் ஐசிஎஸ்இ பாடத்திட்டத்தில் படிக்கின்ற மாணவர்களுக்குத்தான் வெற்றி வாய்ப்பு அதிகம். மாநிலப் பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பு வாய்ப்புகள் கண்டிப்பாக குறையும்" என்றார்.
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 தேர்வெழுதிவிட்டு எம்பிபிஎஸ்சேரும் ஆசையில் இருக்கும் மாணவி மு.வெ.கவின்மொழி கூறும்போது, "சிபிஎஸ்இ பாடத்திட்டத்துக்கும், மாநிலப் பாடத்திட்டத்துக்கும் அதிக வேறுபாடுகள் உண்டு. தேசிய அளவிலான பொது நுழைவுத்தேர்வு என்றால் நிச்சயம் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின்படிதான் அமைந்திருக்கும். அகில இந்திய மருத்துவக் கல்வி நிறுவனத்தின் (எய்ம்ஸ்) நுழைவுத்தேர்வுக்கான மாதிரி விடைகளுக்கு விடையளிக்க முயன்றேன். மாநிலப் பாடத்திட்டத்தில் படித்த என்னால் 10
கேள்விகளில் வெறும் 2 கேள்விக்கு மட்டுமே சரியாக விடையளிக்க முடிந்தது. தற்போது திடீரென நுழைவுத்தேர்வு என்று அறிவித்தால் என்னைப் போன்ற மாநிலப் பாடத்திட்டத்தில் படித்த மாணவ, மாணவிகளால் எப்படி தயாராகமுடியும்?. தனியார் பள்ளிகளில் அகில இந்திய நுழைவுத்தேர்வுக்காக 11-ம் வகுப்பிலிருந்தே பயிற்சி அளிக்கத் தொடங்கிவிடுகிறார்கள். அதுபோன்ற மாணவர்களுக்கு நுழைவுத்தேர்வு எளிதாக இருக்கும் பிளஸ் 2 தேர்வில் அதிக கட் ஆப் மதிப்பெண் பெற்று எம்பிபிஎஸ் சேர்ந்துவிடலாம் என்ற கனவில் நிறைய மாணவ, மாணவிகள் உள்ளனர்.இந்நிலையில், மருத்துவப் படிப்புக்கு தேசிய அளவில் பொது நுழைவுத்தேர்வு என்ற அறிவிப்பு என்னைப் போன்ற
கிராமப்புற மாணவ, மாணவிகளுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்" என்றார்.
வியாழன், 28 ஏப்ரல், 2016
வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது ஐஆர்என்எஸ்எஸ்-1ஜி செயற்கைக்கோள்
முடிவு செய்யப்பட்டதில் 6 செயற்கைக் கோள்கள் ஏற்கெனவே விண்ணில் செலுத்தப்பட்டன. இந்நிலையில் 7-வது செயற்கைக் கோளை விண்ணில் செலுத்துவதற்கான கவுண்ட் டவுன் கடந்த செவ்வாய்க்கிழமைகாலை 9.20 மணியளவில் தொடங்கியது. 1,425 கிலோ எடை கொண்ட ஐ.ஆர்.என்.எஸ்.எஸ். 1ஜி செயற்கைக்கோள்இந்தியாவிலேயே வடிவமைக்கப்பட்டது. இதன்மூலம் இந்தியா ஜி.பி.எஸ். தொழில்நுட்பத்தில் தன்னிறைவு பெற்றுள்ளது. மேலும், அமெரிக்கா, ரஷ்யா ஆகிய
நாடுகளை அடுத்து இந்த தொழில்நுட்பத்தை சொந்தமாக பயன்படுத்தும் நாடுகளின் வரிசையில் இந்தியா
இடம்பெற்றுள்ளது.
கடல்சார் ஆராய்ச்சிக்காக 7 செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்த இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம்(இஸ்ரோ) முடிவு செய்திருந்தது. இதன்படி ஐஆர்என்எஸ்எஸ்-1ஏ என பெயரிடப்பட்ட முதல் செயற்கைக்கோள் 2013-ம் ஆண்டு ஜூலை 1-ம் தேதி வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. இதையடுத்து ஐஆர்என் எஸ்எஸ்-1பி, 1சி, 1டி,1இ, 1எஃப் ஆகிய 5 செயற்கைக்கோள்கள் குறிப்பிட்ட காலஇடைவெளியில் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் இந்த திட்டத்தின் இறுதி செயற்கைக்கோள் (7-வது செயற்கைக்கோள்) ஐஆர்என்எஸ்எஸ்-1ஜி, இன்றுமதியம் 12.50 மணிக்கு ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஸ் தவான் விண்வெளி நிலையத்தில் இருந்துஐஆர்என்எஸ்எஸ்-1ஜி செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்பட்டது. கடல் பகுதிகளின் பாதுகாப்பு, இயற்கை சீற்றம், இயற்கை பேரிடர் மேலாண்மை, திசை அறிதல் உள்ளிட்ட கடல்சார்ஆராய்ச்சிப் பணிகளை இந்த செயற்கைக்கோள் மேற்கொள்ளும். முழுவதும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டுள்ள இந்த செயற்கைக்கோளின் ஆயுட்காலம் 12 ஆண்டுகள் ஆகும்.
மருத்துவப் படிப்புக்கான அகில இந்திய அளவில் 2016-17 கல்வியாண்டுக்கு பொது நுழைவுத் தேர்வை நடத்த மத்தியஅரசுக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி
உத்தரவிட்டதோடு ஆகஸ்ட் 17-ம் தேதிக்குள் முடிவை வெளியிடவும், செப்டம்பர் 30-ம் தேதிக்குள் மாணவர்சேர்க்கையை நடத்தி முடிக்கவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நாடு முழுவதும் எம்பிபிஎஸ், பிடிஎஸ் மற்றும் முதுநிலை மருத்துவப் படிப்பு மாணவர் சேர்க்கைக்கு பல்வேறு கல்விமையங்கள் தனித்தனி யாக நுழைவுத்தேர்வு நடத்துவதால் மாணவர்கள் பெரும் குழப்பம் அடைந்தனர். இதை தடுக்கும்நோக்கத்துடன் இந்திய மருத்துவ கவுன்சில் மற்றும் இந்திய பல் மருத்துவ கவுன்சில் இணைந்து தேசிய தகுதி நுழைவுத்தேர்வு (என்இஇடி) நடத்த முடிவு செய்தன. இதை எதிர்த்து, வேலூர் சிஎம்சி உள்ளிட்ட தனியார் மருத்துவக் கல்லூரிகள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன.
அரசியல் சட்டத்தில் சிறுபான்மை கல்வி நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ள உரிமை பறிபோவதாக அவர்கள்வாதிட்டனர். இந்த வாதங்களை கேட்ட அப்போதைய தலைமை நீதிபதி அல்தமஸ் கபீர், நீதிபதிகள் அனில் தவே, விக்ரம்ஜித் சென் அடங்கிய அமர்வு, தேசிய நுழைவுத் தேர்வு நடத்த தடை விதித்து உத்தரவு பிறப்பித்தது. மாணவர் சேர்க்கை என்பது கல்வி நிறுவனத்தை நிர்வகிக்கும் சிறுபான்மையினரின் அடிப்படை உரிமையின் ஒரு பகுதி. எனவே, தேசிய நுழைவுத்தேர்வு
நடத்தி அவர்களது உரிமையைப் பறிப்பது சட்ட விரோதம் என்று தீர்ப்பளித்தனர். இதில் ஒரு நீதிபதி இந்த தீர்ப்புக்குஎதிர்ப்பு தெரிவித்தாலும், பெரும்பான்மை நீதிபதிகளின் முடிவு என்ற அடிப்படையில் இத்தீர்ப்பு அமலுக்கு வந்தது.
இதையடுத்து, இந்திய மருத்துவ கவுன்சில் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் தீர்ப்பை மறுபரிசீலனை செய்யக் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டபோது, ஏற்கெனவே பிறப்பித்த உத்தரவை வாபஸ் பெற்று, தேசிய அளவில் ஒரே மருத்துவ நுழைவுத்தேர்வு நடத்த அனுமதி அளித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
தற்போது மருத்துவப்படிப்புக்கான பொது நுழைவு மற்றும் தகுதித் தேர்வு உத்தரவினால் மாநிலம் மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகள் நடத்தும் தேர்வுகள் கேள்விக்குறியாகியுள்ளன. இந்தத் தீர்ப்பினை அடுத்து நாடு முழுதும் சுமார் 6.5 லட்சம் மாணவர்கள் பொது நுழைவுத் தேர்வு எழுதுவார்கள்
என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Supreme Court on Thursday said that National eligibility cum entrance test (NEET) will be conducted this academic year 2016-17 for admission in medical courses li
The apex court also approved the schedule proposed by Centre and Central Board of Secondary Education (CBSE).
Medical Council of India (MCI) and CBSE to conduct 1st phase of NEET on May 1 while the second phase will be held on July 24. The Centre and CBSE on Thursday had proposed to scrap All India Pre Medical test (AIPMT) as entrance exam for candidates aspiring for medical courses for the academic year 2016-17.
The Supreme Court on Thursday told the Centre to implement National Eligibility Entrance Test (NEET) instead of AIMPT. Centre has proposed to hold the examination in two phases. According to Centre and CBSE's proposed schedule 6.5 lakh candidates can appear in the first phase in the first phase of NEET which will be held on May 1.
While the second phase will be conducted on July 24 where 2.5 lakh candidates shall appear. Joint result will be announced on August 17. According to proposed schedule by Centre and CBSE admission procedure will be completed by September 30.
The proposal comes after Supreme Court asked the Centre, Medical Council of India and the CBSE to hold National Eligibility Cum Entrance Test (NEET) for admission to medical courses. After Supreme Court's direction to conduct a common entrance test (CET) for admission in medical colleges, medical entrance tests which were scheduled to happen over the next couple of months may get cancelled.
ஜே.இ.இ., முதன்மை தேர்வு முடிவு, நேற்று வெளியானது
தமிழகத்தில், 7,000 பேர் இந்த தேர்வை எழுதினர். காலை, மாலை என, இரண்டு வேளைகளில் நடந்த தேர்வில்,பி.இ., - பி.டெக்., படிப்புக்கான தாளில், கடந்த ஆண்டை விட கேள்விகள் எளிமையாகவே இருந்தன. ஜே.இ.இ.,முதன்மை தேர்வு முடிவு, நேற்று மாலை வெளியானது.
நாளை முதல்...
மொத்தம், 360 மதிப்பெண்களில், குறைந்தபட்ச, 'கட் ஆப்' மதிப்பெண், 100 என அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுப்பிரிவு மாணவர்கள், 100 மதிப்பெண், இதர பிற்படுத்தப்பட்டோர், 70; தலித் இனத்தவர், 52; பழங்குடியினமாணவர், 48 மதிப்பெண் பெற்றிருந்தால் அவர்கள், இரண்டாம் கட்ட தேர்வான,
ஜே.இ.இ., 'அட்வான்ஸ்ட்' தேர்வை எழுத முடியும்.'குறைந்தபட்ச, 'கட் ஆப்' மதிப்பெண் பெற்றவர்கள், மே, 22ல் நடக்க உள்ள, ஜே.இ.இ., அட்வான்ஸ்ட் தேர்வுக்கு, நாளை முதல் விண்ணப்பிக்கலாம்' என, அறிவிக்கப்பட்டு உள்ளது.
பள்ளி ஆய்வக உதவியாளர் தேர்வு முடிவு என்னாகும்? 8 லட்சம் பேர் பரிதவிப்பு!
அரசு மேல்நிலை மற்றும்உயர்நிலைப் பள்ளிகளில் 4,362 ஆய்வக உதவியாளர்கள்
பணியிடங்களை நிரப்புவதற்காக தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை 2015, மே 31ம் தேதி எழுத்துத்தேர்வு நடத்தியது.10ம் வகுப்புதேர்ச்சி பெற்றவர்கள் இத்தேர்வை எழுதலாம் என்பதால் சுமார் 8லட்சம் பேர் இந்த தேர்வை எழுதினார்கள். இத்தேர்வின் முடிவுஒரு மாதத்தில் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் ஜூலை வரை வெளியிடப்படவில்லை.அதன்பிறகு, 'எழுத்துத்தேர்வில் தேர்ச்சி பெறுபவர்களில் 'ஒரு காலியிடத்துக்கு5பேர்' என்ற விகிதத்தில் நேர்காணலுக்கு அழைக்கப்பட்டு அதில் பெறும் மதிப்பெண்ணைஅடிப்படையாகக் கொண்டேபணியிடங்கள் நிரப்பப்படும்' என்றுஅறிவிக்கப்பட்டது.நேர்காணலில், வேலைவாய்ப்பு அலுவலக பதிவுமூப்புக்கு (சீனியாரிட்டி)
10மதிப்பெண்கள், உயர் கல்வித் தகுதிக்கு 5 மதிப்பெண்கள், பணி அனுபவத்துக்கு 2மதிப்பெண்கள், கேள்வி-பதிலுக்கு 8மதிப்பெண்கள் என மொத்தம் 25 மதிப்பெண்கள்நிர்ணயிக்கப்பட்டது. எழுத்துத்தேர்வு மதிப்பெண் கணக்கில் கொள்ளப்படாதுஎன்றும்அறிவித்தார்கள்.
இது, தேர்வு எழுதியவர்கள் மத்தியில் பெரும் கொதிப்பையும் ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியது. இந்த நிலையில், காஞ்சிபுரத்தைச் சேர்ந்த சதீஷ்என்பவர் உயர்நீதிமன்றத்தை நாடினார். "எழுத்துத்தேர்வு மதிப்பெண்ணை கருத்தில்கொள்ளாமல் நேர்முகத்தேர்வு மதிப்பெண்களை மட்டும் கணக்கில்
எடுத்துக்கொண்டால்,பணி நியமனம் நேர்மையாக இருக்காது; ஊழலுக்கு வழி வகுக்கும், எனவே, குரூப்-IVதேர்வுக்கான நடைமுறைகளைப் போல, நேர்முகத்தேர்வு இல்லாமல் எழுத்துத் தேர்வில்வெற்றி பெற்றவர்களை நேரடியாக பணி நியமனம் செய்யவேண்டும்" என்று அந்த வழக்கில்கோரப்பட்டது. அதை விசாரித்த உயர்நீதிமன்றம், "ஆய்வக உதவியாளர் பணிக்குநேர்முகத்தேர்வு தேவையில்லை. எழுத்துத்தேர்வு மதிப்பெண்களை கண்டிப்பாககருத்தில் கொள்ள வேண்டும். எழுத்துத்தேர்வு
மதிப்பெண் மற்றும் இட ஒதுக்கீடுஅடிப்படையில் பணி நியமனம் செய்யவேண்டும்" என்று உத்தரவிட்டது. கடந்த ஆகஸ்ட்மாதம் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இன்றுவரை அரசு அதை நிறைவேற்றவில்லை.
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு விட்டதால் தேர்வு எழுதியவர்கள் பெரும் மனஉளைச்சலுக்கு ஆளாகியிருக்கிறார்கள். "உயர்நீதிமன்ற உத்தரவு வந்து 6 மாதங்கள்ஆகி விட்டன. தேர்வு முடிவும் வெளியிடவில்லை; பணி நியமனமும் நடைபெறவில்லை. இதுபற்றி பள்ளிகல்வித் துறை அதிகாரிகளிடம் கேட்டால்,"அரசு உத்தரவிட்டால்அடுத்த நிமிடமே முடிவை வெளியிடத்தயாராக இருக்கிறோம்" என்கிறார்கள்.
இந்தகுளறுபடிக்கு பின்னால் பெரும் முறைகேடுகள் நடந்துள்ளன என்று
நம்பத்தகுந்தவட்டாரங்களில் இருந்து தகவல்கள் வருகின்றன. பலஅரசியல் பிரமுகர்கள் இதன் பின்னணியில் இருக்கிறார்கள். பி.எட்., படித்தவர்கள் இந்தப் பணிக்குத் தேர்வானால் துறை ரீதியாக பிரமோஷன் பெற்று ஆசிரியராகிவிடலாம். மாத சம்பளம்18,000 ரூபாய்க்கு மேல் கிடைக்கும். அதனால் தான் பலர்லட்சக்கணக்கில் பணம் கொடுக்க தயாராக இருக்கிறார்கள். இப்போது உயர்நீதிமன்றம்தலையிட்டதால் அவர்களால் எதுவும் செய்ய முடியவில்லை. சுமார் 5000 பள்ளிகளின் ஆய்வகங்களில்ஆசிரியர்கள், உதவியாளர்கள் இல்லாததால் இந்தாண்டு தேர்வெழுதிய10ம் வகுப்பு, 2 மாணவர்கள் செய்முறை தேர்வுகளில் பெரும் சிரமத்துக்கு ஆளாகியிருக்கிறார்கள். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் தேர்வு எழுதிமுடிவுக்காக காத்திருப்பவர்கள் பதைபதைப்புக்கு உள்ளாகியிருக்கிறார்கள்.ஏற்கனவே உயர்நீதிமன்றத்தின் உத்தரவு இருப்பதால், தேர்தல் கமிஷனிடம் சிறப்புஅனுமதி பெற்று அrரசு தேர்வு முடிவுகளை வெளியிடலாம் என்றுநிபுணர்கள்கூறுகிறார்கள். அரசு மனதுவைக்குமா என்ற கேள்வியில் தான் தேர்வெழுதிய 8 லட்சம்பேரின் எதிர்காலம் தொக்கி நிற்கிறது.'' என்கிறார்கள்
புதன், 27 ஏப்ரல், 2016
செவ்வாய், 26 ஏப்ரல், 2016
ஆறு முதல் 12-ம் வகுப்பு வரையிலான பாடத்திட்டத்தில் திருக்குறள்: உயர் நீதிமன்றம் புது உத்தரவு
தமிழகத்தில் வரும் கல்வி ஆண்டு முதல் திருக்குறளின் 1330 குறட்பாக்களையும் பாடத்திட்டத்தில் சேர்க்கஉத்தரவிடக்கோரி ஓய்வு பெற்ற அரசு ஊழியர் எஸ்.ராஜரத்தினம் என்பவர் உயர் நீதிமன்ற கிளையில் மனுத் தாக்கல்செய்தார். அவர் தனது மனுவில், 'தற்போதைய சூழலில் சமுதாயத்தில் ஒழுக்கமும் நன்னடத்தையும் குறைந்து வருகிறது.
குறிபபாக இளைய சமுதாயத்திடம் ஒழுக்கம் பற்றிய சிந்தனை நன்னடத்தை, பெரியோரை மதித்தல் பெரிதும் குறைந்துள்ளது. இதனால் இளைய சமுதாயத்துக்கு குறிப்பாக ஆறாம் வகுப்பில் இருந்து 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு திருக்குறளில் அறத்துப்பால் மற்றும் பொருட்பாலில் உள்ள அனைத்து குறட்பாக்களையும் பயிற்றுவிக்க வேண்டும். இளம் பிராயத்தில் திருக்குறள் பயிற்றுவிக்கப்பட்டால் நேர்மையும், ஒழுக்கமும் உள்ள சமுதாயம் உருவாகும். சமீபகாலத்தில் இளம் சிறார்கள் குற்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவது பெருகி உள்ளது. அவர்களை சீர்த்திருத்த இளம் பருவம் தொட்டே திருக்குறளை பயிற்றுவிற்றால் நாளைய சமுதாயத்தின் சிறந்த குடிமக்களாக அவர்கள் வருவார்கள். இதனால் திருக்குறளை முழுவதுமாக பள்ளி மாணவர்களுக்கு விளக்கமாக கற்பிக்க உத்தரவிட வேண்டும் எனக் மனுவில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனு நீதிபதி ஆர்.மகாதேவன் முன் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் ஏ.சரவணகுமார் வாதிடும்போது, 'மனித வாழ்க்கையின் அனைத்து கூறுகளை மற்ற எந்த இலக்கியங்களும் குறிப்பிடாத அளவில் திருக்குறளில் கூறப்பட்டுள்ளது. உலகத்தின் ஒட்டுமொத்த மானுடத்திற்கான படைப்பாக்கம் திறக்குறள், ஒவ்வொரு நாள் வாழ்க்கைக்கான நெறிமுறைகள் திருக்குறளில் அடங்கியுள்ளது. கல்வி, நன்னடத்தை, விருந்தோம்பல், செய்நன்றியறிதல், வாய்மை, பெரியாரைத் துணைக்கோடல், நட்பு, நாடு, புகழ், ஒழுக்கம், அனைத்தையும் பற்றியும் தெள்ளத் தெளிவாக அறிவுறுத்தும் படைப்பு அது. திருக்குறளை மாணவர்களுக்கு விரிவான பாடத்திட்டமாக்கினால் இளம் வயதிலே, அவர்கள் மனதில் ஒழுக்கம், நன்னடத்தை மற்றும் பிற நற்குணங்கள் விதைக்கப்படும். இதனால் பாடத்திட்டத்தில் அனைத்து திருக்குறளையும் சேர்த்து, அடுத்த கல்வியாண்டில் இருந்து
மாணவர்களுக்கு கற்பிக்க வேண்டும் என்றார்.
அரசு வழக்கறிஞர் வி.ஆர்.சண்முகநாதன் வாதிடும்போது, 'ஏற்கெனவே மாணவர்களுக்கு பாடத்திட்டத்தில் திருக்குறள் சேர்க்கப்பட்டுள்ளது. அதை தவிர்த்து வேறு பல இலக்கியங்களும் கற்பிக்கப்படுகிறது. அரசின் கொள்கை முடிவில்
இதுபோன்ற கோரிக்கைகளை ஏற்க முடியாது. எனவே மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றார்.
இதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவு: இந்திய அரசிலமைப்புச் சட்டம் ஒவ்வொரு குடிமகனுக்கான வாழ்வாதாரத்தை உறுதி செய்கிறது. தனிமனித உரிமையும், ஒன்றுபட்ட வாழ்க்கையும், தராதரமும், ஆரோக்கியமும், சமத்துவமுமு, உணவு உடை, உறைவிடம், கல்வி போன்ற அடிப்படைத் தேவைகள் குறித்தும் அரசியலமைப்பு சட்டம் உத்திரவாதம் அளிக்கிறது. அதேபோல் ஒவ்வொரு குடிமகனும் கடமையுள்ளத்தோடு, சமுதாயத்தையும், நாட்டையும் காக்க வேண்டும் என்றும் வலியுறுத்துகிறது. ஆனால் இவற்றிற்கு எதிராக இன்றைய காலகட்டத்தில் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள், இளம்
சிறார்களின் குற்றங்கள், விவாகரத்து வழக்குகள் ஆகியன மலிந்து போனதுடன், முறையற்ற வாழ்க்கைத்தரமும் நிலவி வருகிறது. இந்நிலையில் இளம் பிராயத்தினரை முறையான கல்வியுடன் நேர்வழிப்படுத்த முடியுமானால் அவர்கள் சிறந்த குடிமகன்களாக வருவார்கள். திருக்குறளை விரிவான விதத்தில், மணப்படப் பகுதி என்ற குறுகிய அளவில் இல்லாமல், உரிய விளக்கங்களுடன், அனைத்துக் கூறுகளும், அலசப்பட்டு, மாணவர்களுக்கு பயிற்றுவிக்கும் போது அவர்களின் அறிவும் ஞானமும் மேம்படும். இன்றைக்கு சமுதாயத்தில் பெரும் பிரச்சினைகளாக இருக்கக்கூடிய பயங்கரவாதம், கொலை, கொள்ளை,
திருட்டு, பாலியல் குற்றங்கள், வேலையின்மை, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள், மதுவின் பாதிப்பு ஆகியவற்றை தெளிவாக உணர்ந்து, இளைய சமுதாயத்தினர் தங்களின் வாழ்க்கையை செம்மைப்படுத்திக்கொள்வார்கள். எனவே, இந்த விஷயங்களை கருத்தில்கொண்டு உலக மக்களுக்கு பொதுவானது என்று அறியப்படும் திருக்குறளை,
மனித வாழ்வு சம்பந்தப்பட்ட அனைத்து கூறுகளையும் உள்ளடக்கி எவ்வித வாழ்க்கை வாழ வேண்டும் என வலியுறுத்தும் திருக்குறளை இளம் பிராயத்தில், குறிப்பாக 6-ம் வகுப்பில் இருந்து 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு வெறும் மனப்பாட பகுதி என்று இல்லாமல் திருக்குறளில் அறத்துப்பால் மற்றும் பொருட்பால் பிரிவுகளில் உள்ள
அனைத்து குறட்பாக்களையும் விளக்கமாக பயிற்றுவிக்க வேண்டும். இதனை வரும் கல்வி ஆண்டில் இருந்து நடைமுறைப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிபதி உத்தரவில் தெரிவித்துள்ளார்.
நீதிபதி ஆர்.மகாதேவன் தனது தீர்ப்பில், 'கல்வி தொடர்பாக உலகின் பல்வேறு அறிஞர்கள் தெரிவித்த கருத்துக்களை ஒப்பிட்டு, 2000 ஆண்டுகளுக்கு முன்னரே திருவள்ளுவரால் தொலை நோக்கு பார்வையுடன் உருவாக்கப்பட்ட குறள்கள் மட்டுமே சமுதாயத்தை சீர்படுத்த முடியும், திருக்குறளை விளக்கமாக கற்பதும், பயில்வதுமே சிறந்த
வாழ்விற்கான வழி எனத் தெரிவித்து 50 குறள்களை உதாரணம் காட்டியுள்ளார். மேலும் ஒழுக்கத்தை பேணுதலும் ஞானம் மிக்கவர்களாக இளைஞர்களை மாற்றுவதுமே வருங்கால சமுதாயத்தின் மேன்மைக்கான வழி என்றும், பல்வேறு சிறந்த இலக்கியங்கள், இந்த மண்ணில் தோன்றியிருந்தாலும் திருக்குறள் போல் மனிதரின் வாழ்வை மேம்படுத்தும் சிறந்த படைப்பு வேறு ஒன்றும் இல்லை என திருக்குறளின் பெருமையை தீர்ப்பில் நீதிபதி பட்டியலிட்டுள்ளார்.
திங்கள், 25 ஏப்ரல், 2016
தேர்தல் பயிற்சிக்கு வரும் ஊழியர்களுக்கு, மதிய உணவுக்கு பதிலாக, உணவுப்படி 150 ரூபாய்
உணவுப்படி வழங்க, தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில், மே, 16ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இப்பணியில், 1.97 லட்சம் பெண்கள் உட்பட, 3.29 லட்சம் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஈடுபட உள்ளனர். இவர்களுக்கான பயிற்சி முகாம், நேற்று தமிழகம் முழுவதும் துவங்கியது. இவர்களுக்கு, மூன்று கட்டமாக பயிற்சி வழங்கப்பட உள்ளது. பயிற்சிக்கு வரும் ஊழியர்களுக்கு, மதிய உணவுவழங்க, ஒருவருக்கு, 150 ரூபாய் ஒதுக்கப்படுகிறது. ஆனால், பயிற்சி முகாமிற்கு ஏற்பாடு செய்யும்அதிகாரிகள், அந்தத் தொகையை, முறையாக செலவழிப்பதில்லை; தரமான உணவு வழங்குவதில்லை என,குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இப்பிரச்னைக்கு தீர்வு காண, பயிற்சிக்கு வரும் ஊழியர்களுக்கு, அவர்கள் கையில், 150 ரூபாயை வழங்கிவிடுங்கள். பயிற்சி முகாம் நடைபெறும் இடத்தில், ஏதேனும் ஓட்டல் நிறுவனத்தை ஸ்டால் அமைக்கசொல்லுங்கள். பயிற்சிக்கு வருவோர் விரும்பிய உணவை வாங்கி சாப்பிடட்டும் என, தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.
சனி, 23 ஏப்ரல், 2016
புதிய பென்ஷன் திட்டத்தில் குழப்பம்:சீரமைக்கும் பணியில் கருவூலத்துறை
எண் இருப்பதால் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இதனை சீரமைக்கும் பணியில் கருவூலத்துறை
ஈடுபட்டுள்ளது.தமிழகத்தில் 2003 ஏப்., 1ல் புதிய பென்ஷன் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தில் தமிழகத்தில் 4,23,441 அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.
அவர்களிடம் வசூலித்த சந்தா மற்றும் அரசு பங்குத்தொகை ரூ.8,543 கோடியை ஓய்வூதிய நிதி ஒழுங்காற்று மேம்பாட்டு ஆணையத்திடம், தமிழக அரசு செலுத்தவில்லை. இதனால் ஓய்வு பெற்ற மற்றும்
இறந்த அரசு ஊழியர், ஆசிரியர்களின் குடும்பங்கள் பாதிக்கப்பட்டன.
புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி அரசு ஊழியர்கள்,ஆசிரியர்கள் தொடர்ந்து போராட்டம்செய்தனர். தற்போது புதிய பென்ஷன் திட்டத்தை சீரமைக்கும் பணியில் கருவூலத்துறை ஈடுபட்டுள்ளது.
இதில் சிலருக்கு புதிய பென்ஷன் திட்டத்தில் இரு கணக்கு எண் இருப்பது தெரியவந்துள்ளது. இந்த
குழப்பத்தை தவிர்க்க பழைய கணக்கை, புதிய கணக்கு எண்களுடன் சேர்க்க கருவூலத்துறை திட்டமிட்டுள்ளது. இதற்காக அரசு ஊழியர், ஆசிரியர்களிடம் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன.
கருவூலத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: பணிமாறுதல், பதவி உயர்வில் செல்லும் ஊழியர்களுக்கு,
அவர்களது பழைய கணக்கு எண்ணில் சந்தா பிடித்தம் செய்யாமல், புதிய கணக்கு துவங்கப்படுகிறது.
இதனால் சிலருக்கு இரு கணக்கு எண் உள்ளது. அவற்றை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டுள்ளோம். மேலும்இதுவரை சந்தா செலுத்தாத கணக்குகளும் ரத்து செய்யப்படும், என்றார்.
பிளஸ் 2 தேர்வில் வினாத்தாளில் ஏற்பட்ட அச்சுப்பிழை 22 மதிப்பெண் 'கருணை' மதிப்பெண்ணாக வழங்கப்பட்டது
பாடங்களிலும் அதிக எண்ணிக்கையில் மாணவர்கள் 'சென்டம்' பெற்றனர். இதனால், விடைத்தாள்
மதிப்பீடு தொடர்பாக கல்வித்துறையில் பல்வேறு விவாதங்கள் எழுந்தன.இதனால் இந்தாண்டு மாணவர்கள் அதிக 'சென்டம்' எடுப்பதை தவிர்க்க வினாத்தாள் கடினமாக அமைக்கப்பட்டது. அதேநேரம்
வினாத்தாளில் அச்சுப்பிழை மற்றும் தவறுகள் அதிகம் இருந்தன.இதன் எதிரொலியாக, வேதியியலில் 6, இயற்பியலில் 2, கணிதத்தில் 4, வணிக கணிதத்தில் 10 என மொத்தம் 22 மதிப்பெண், கருணை மதிப்பெண்ணாக வழங்கப்பட்டது.பிளஸ் 2 தேர்வுகளில் கடந்த சில ஆண்டுகளில் வழங்கப்பட்ட கருணை மதிப்பெண்ணில் இது அதிகபட்சம்.இவ்வினாக்களை எழுத முயற்சி செய்த மாணவர்களுக்கு 22 மதிப்பெண் அப்படியே கிடைக்கும் என்பதால் அவர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.
இதுகுறித்து விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபட்ட ஆசிரியர்கள் சிலர் கூறியதாவது:
சில ஆண்டுகளுக்கு முன் இதுபோன்ற அச்சுப்பிழையால் வேதியியல் தேர்வுக்கு மட்டும் 22 மதிப்பெண்
கருணையாக வழங்கப்பட்டது.
அதன்பின் பல ஆண்டுகள் தொடர்ந்து சில மதிப்பெண்கள் மட்டுமே கருணை அடிப்படையில் வழங்கப்பட்டன.ஆனால் இந்தாண்டு அதிகபட்சமாக 22 மதிப்பெண் வழங்கப்பட்டுள்ளது. வினாத்தாள் தயாரிக்கும் பணியில் தேர்வுத்துறை அதிக கவனம் செலுத்த வேண்டும். அனுபவம் உள்ள அரசு பள்ளி
ஆசிரியர்களை ஈடுபடுத்த வேண்டும்.கல்லுாரி ஆசிரியர்களை தவிர்க்கலாம். 0.25 'கட்ஆப்' மதிப்பெண் வித்தியாசத்தில் கூட பொறியியல், மருத்துவ படிப்பு சேர்க்கை வரிசையில் ஆயிரம் மாணவர்களுக்கு பின்தங்கும் வாய்ப்புள்ளது. இதனால் அச்சுப்பிழை மற்றும் தவறு இல்லாமல் வினாத்தாள் தயாரிப்பதில் தேர்வுத்துறை அதிக கவனம் செலுத்த வேண்டும், என்றனர்.
இடைநிலை ஆசிரியர்நியமனத்துக்கு ஒப்புதல் வழங்க மறுப்பு தொடக்க கல்வி இயக்குனர் மேல்முறையீட்டு மனு -சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி
தள்ளுபடி செய்தது.
நாகை மாவட்டம், செம்பனார்கோவிலில் உள்ள, அரசு உதவிபெறும்பள்ளியில், சரவணபாபுஎன்பவர், இடைநிலைஆசிரியராக, 2012 பிப்., 20ல்நியமிக்கப்பட்டார்; அன்றே பணியிலும் சேர்ந்து விட்டார்.
அன்று முதல், பணிக்கான ஒப்புதல் வழங்கும்படி, நாகை மாவட்ட தொடக்க கல்வி அதிகாரிக்கு பரிந்துரைக்கப்பட்டது.ஆனால், ஒப்புதல் வழங்க, தொடக்க கல்வி அதிகாரி மறுத்து
விட்டார்.பஞ்சாயத்து ஒன்றியம் மற்றும் அரசு உதவி பெறும் தொடக்க பள்ளிகளில், பெண் ஆசிரியர், ஆண் ஆசிரியர் விகிதாசாரம், 75:25 என்ற அளவில் இருக்க வேண்டும். அந்தவிகிதாசாரப்படி இல்லாததால், தொடக்ககல்விஅதிகாரி ஒப்புதல் வழங்க மறுத்துள்ளார்.
இதை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில், பள்ளிநிர்வாகம் சார்பில், மனு தாக்கல் செய்யப்பட்டது.மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், சரவணபாபுவின் நியமனத்துக்கு ஒப்புதல் வழங்கும்படி, தொடக்க கல்வி அதிகாரிக்கு உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து, தொடக்க கல்வி இயக்குனர், நாகை மாவட்ட தொடக்க கல்வி அதிகாரி, உதவிதொடக்க கல்வி அதிகாரி, மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்தனர்.மனுவை விசாரித்த, நீதிபதிகள் அக்னிஹோத்ரி, வேணுகோபால் அடங்கிய, 'டிவிஷன் பெஞ்ச்' விசாரித்தது. பள்ளி நிர்வாகம்சார்பில், வழக்கறிஞர் எஸ்.என்.ரவிச்சந்திரன் ஆஜரானார்.'டிவிஷன் பெஞ்ச்' பிறப்பித்த உத்தரவு:'பெண்களுக்கான பணிஇடங்களில், தகுந்த பெண்தேர்வர் கிடைக்கவில்லை என்றால், ஆண் தேர்வரை நியமித்து கொள்ளலாம்' என,ஒரு வழக்கில்,உயர் நீதிமன்றம் கருத்துதெரிவித்துள்ளது.இந்த வழக்கை பொறுத்த வரை, தனி நீதிபதியின் உத்தரவில் எந்த குறைபாடும் இல்லை. எனவே, மேல்முறையீட்டுமனு தள்ளுபடிசெய்யப்படுகிறது.இவ்வாறு, 'டிவிஷன் பெஞ்ச்' உத்தரவிட்டுள்ளது
வியாழன், 21 ஏப்ரல், 2016
அணுசக்தி பேட்டரிகள்
வியாழன் கிரகத்துக்குப் போக சூரிய மின்பலகைகள் பயன்படாது
உங்கள் நண்பருக்கு அவசரமாக ஒரு செய்தியைத் தெரிவித்தாக வேண்டும். செல்போனில் நம்பரை அழுத்துகிறீர்கள். கனெக்ஷன் கிடைத்த அடுத்த விநாடி பொசுக். பேட்டரி அவுட். ஊருக்கு வெளியே எங்கோ இருக்கிறீர்கள். அருகே பொது டெலிபோன் கிடையாது. அடுத்தவரிடம் செல்போன் கடன் வாங்கிப் பேசலாம் என்றால், சுற்றுமுற்றும் யாரும் இல்லை. பேட்டரி அவுட் என்றால், செல்போன் இயங்க மின்சாரம் இல்லை என்று பொருள்.
நீண்ட தூர விண்வெளிப் பயணத்தில் மிக முக்கியமான பிரச்சினை மின்சாரம்தான். பூமியுடன் தொடர்புகொள்ளவும் விண்கலத்தில் உள்ள பல்வேறு கருவிகள் செயல்படவும் மின்சாரம் தேவை. நிறையவே தேவை.
சூரிய மின்பலகைகள்
சூரிய ஒளியை மின்சாரமாக மாற்றுவதற்கான சூரிய மின்பலகைகள் அதாவது, சோலார் செல்கள் 1954-ல்தான் உருவாக்கப்பட்டன. ஆரம்பத்தில் இதைத் தயாரிக்க நிறைய செலவானது. ஆனாலும், பூமியைச் சுற்றும் செயற்கைக்கோள்களில் செலவைப் பாராமல் சூரிய மின்பலகைகள் பயன்படுத்தப்பட்டன. ஆரம்பகால செயற்கைக்கோள்களின் வெளிப்புறத்தில் மின்பலகைகளாக இல்லாமல் சிறுசிறு துண்டுகள் ஒட்டப்பட்டன. பின்னர், செயற்கைக்கோளின் இரு புறங்களிலும் இறக்கைகள்போல சூரிய மின்பலகைகளைப் பொருத்தினார்கள்.
இன்றைய உலகில் சூரிய ஒளியைப் பயன்படுத்தி மின்சாரத்தை உற்பத்தி செய்யும் சூரிய மின்பலகைகள் பட்டிதொட்டிகளில்கூட சர்வசாதாரணம். அவற்றைத் தயாரிக்க எளிய முறைகள் தோன்றிவிட்டன. செலவுகளும் குறைந்துவிட்டன. அவை இன்றைய நிலையைச் சாத்தியப்படுத்தியுள்ளன.
பல ஆண்டுகாலமாக செவ்வாய் கிரகத்தைச் சுற்றி வருகின்ற ஆளில்லாத அமெரிக்க, ஐரோப்பிய விண்கலங்களும் அத்துடன் இந்தியாவின் மங்கள்யான் விண்கலமும் சூரிய மின்பலகைகள் மூலமே மின்சாரத்தைப் பெறுகின்றன.
அணுசக்தி பேட்டரிகள்
சூரியனிலிருந்து சுமார் 15 கோடி கி.மீ. தொலைவில் பூமி இருக்கிறது. இத்துடன் ஒப்பிட்டால் செவ்வாய் கிரகம் சுமார் 20 கோடி கி.மீ. தொலைவில் உள்ளது. சூரியனிலிருந்து மேலும் மேலும் தொலைவுக்குச் செல்லும்போது சூரிய ஒளியின் வெப்பத் திறன் குறையும். இது இயற்கை.
வியாழன் கிரகத்துக்கு ஆளில்லா விண்கலம் ஒன்றை அனுப்புவதானால், அதன் வெளிப்புறத்தில் சூரிய மின்பலகைகளைப் பொருத்துவதில் பயனில்லை. வியாழன் கிரகம் சூரியனிலிருந்து சுமார் 77 கோடி கி.மீ. தொலைவில் உள்ளது. வியாழனிலிருந்து பார்த்தால் சூரியன் கிட்டத்தட்ட பட்டாணி சைஸில் தெரியும். எனவே, சூரிய ஒளி வெப்பமாக இராது. ஆகவே, மிகப் பெரிய சூரிய மின்பலகைகளைப் பயன்படுத்தியாக வேண்டும். இதில் பிரச்சினைகள் உள்ளன.
எனவே வியாழன் கிரகம், சனி கிரகம் ஆகியவற்றையும் அவற்றுக்கு அப்பால் மிகத் தொலைவில் உள்ள கிரகங்களை ஆராய்வதற்கு நாஸா ஆளில்லா விண்கலங்களை அனுப்பியபோது, அவற்றில் அணுசக்தி பேட்டரிகளை வைத்து அனுப்பியது. நாஸா உருவாக்கிய இந்த அணுசக்தி பேட்டரிகள் ஆர்.டி.ஜி. என்று அழைக்கப்படுகின்றன. இந்த பேட்டரிகளில் புளூட்டோனியம்-238 எனப்படும் அணுசக்திப் பொருள் பயன்படுத்தப்படுகிறது. இதிலிருந்து இயற்கையாக வெளிப்படும் கடும் வெப்பமானது மின்சாரமாக மாற்றப்படுகிறது. சூரிய மண்டலத்திலிருந்தே வெளியேறிவிட்ட பயனீர் மற்றும் வாயேஜர் விண்கலங்களிலும் அணுசக்தி பேட்டரிகள் இடம்பெற்றிருந்தன.
சொல்லப்போனால், சந்திரனுக்கு ஆறு தடவை அமெரிக்க விண்வெளி வீரர்களை ஏற்றிச் சென்ற அப்போலோ விண்கலங்களிலும் அணுசக்தி பேட்டரிகள்தான் இடம்பெற்றிருந்தன. அணுசக்தி பேட்டரிகள் மின்உற்பத்திக்கு உதவுகின்றன என்றாலும், தொடர்ந்து ஆபத்தான கதிர் வீச்சை வெளிப்படுத்துபவை. அப்போலோ விண்கலங்களில் அமெரிக்க விண்வெளி வீரர்களை அந்தக் கதிர்வீச்சு தாக்காதபடி தக்க பாதுகாப்பு செய்யப்பட்டிருந்தது. அந்த அணுசக்தி பேட்டரிகள் அதிக கதிர்வீச்சை வெளிப்படுத்தாதவை. அதாவது, அவை குறைந்த திறன் கொண்டவை. தவிர, விண்வெளி வீரர்கள் அப்போலோ விண்கலத்தில் தங்கியிருந்த நாட்களும் குறைவு. ரஷ்யாவும் இதேபோல அணுசக்தி பேட்டரிகளை உருவாக்கிப் பயன்படுத்தியது. அவற்றில் வேறு வகை அணுசக்திப் பொருள் பயன்படுத்தப்பட்டது. இப்போதைக்கு அமெரிக்காவிடமும் ரஷ்யாவிடமும் மட்டுமே அணுசக்தி பேட்டரிகள் உள்ளன.
அணுசக்தி பேட்டரியிலும் பிரச்சினை
அண்டவெளியில் நீண்ட பயணம் மேற்கொள்ள சூரிய மின்பலகைகள் லாயக்கில்லை. புளூட்டோனியத்தைப் பயன்படுத்தும் அணுசக்தி பேட்டரிகளும் கைகொடுக்கும் என்று சொல்ல முடியாது. அணுசக்திப் பொருட்கள் தொடர்ந்து அழிந்து வருபவை. எனவே, நாள் செல்லச் செல்ல அணுசக்தி பேட்டரிகளிடமிருந்து கிடைக்கும் மின்சாரத்தின் அளவு குறைந்துகொண்டே போகும். வாயேஜர் -1 வாயேஜர்-2 ஆகிய இரு விண்கலங்களும் சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்னர் செலுத்தப்பட்டவை. இந்த இரு விண்கலங்களிலும் வைத்து அனுப்பப்பட்ட அணுசக்தி பேட்டரிகளின் திறன் இப்போது பெரிதும் குறைந்துவிட்டது. எனவே, அதிலிருந்து வரும் சிக்னல்கள் மிகவும் பலவீனமாக உள்ளன. 2025-ம் ஆண்டு வாக்கில் இவற்றிலிருந்து சிக்னல் வருவது நின்றுவிடும்.
ஆகவே, விண்வெளியில் மனிதன் நீண்ட தூரப் பயணத்தை மேற்கொள்ள வேண்டுமானால் முதலில் மின்சாரப் பிரச்சினைக்கு வழி கண்டுபிடித்தாக வேண்டும். நீண்ட காலம் தொடர்ந்து நிறைய மின்சாரத்தை அளிக்கிற அணுசக்தி பேட்டரியை உருவாக்கியாக வேண்டும்.
அமெரிசியம் -241 எனப்படும் அணுசக்திப் பொருளைப் பயன்படுத்துகிற பேட்டரி அண்டவெளிப் பயணத்துக்கு ஏற்றதாக இருக்கும் என்று கருதப்படுகிறது. தங்களது விண்கலங்களில் பயன்படுத்த ஐரோப்பிய விண்வெளி அமைப்பு அமெரிசியம் பேட்டரியை உருவாக்கி வருவதாகத் தகவல்கள் கூறுகின்றன. இந்த வகை பேட்டரிகள் சுமார் 1,000 வருடங்கள் வரை செயலில் இருக்கும் என்றும் கூறப்படுகிறது. பிரிட்டனில் இதற்கான பணிகள் நடைபெற்றுவருகின்றன.
ஆயிரம் வருட பேட்டரிகள்
அமெரிசியம் - 241 வெள்ளி போன்று பளபளக்கும் உலோகம். அணு மின்நிலையங்களின் ஒரு பகுதியாக விளங்கும் அணு உலைகளில் எரிந்து தீர்ந்த தண்டுகள் அவ்வப்போது வெளியே எடுக்கப்படும். இவற்றில் அமெரிசியம்-241 உட்பட பல வகையான அரிய அணுசக்திப் பொருட்கள் அடங்கியிருக்கும். எனவே, இவற்றைத் தூக்கி எறியாமல் பத்திரமாகச் சேகரித்து வைப்பார்கள். அணுசக்தித் தொழில்நுட்பத்தை அறிந்த எல்லா நாடுகளிடமும் இவை உண்டு. பிரிட்டனிடம் இவ்வித அணுசக்திப் பொருட்கள் நிறையவே உள்ளன. இவற்றிலிருந்து அமெரிசியம்-241 அணுசக்திப் பொருளைத் தனியே பிரித்தெடுக்கலாம்.
அமெரிசியம் -241 அணுசக்திப் பொருளும் ஓயாது வெப்பத்தை வெளிப்படுத்தும். இந்த வெப்பத்தை மின்சாரமாக மாற்ற முடியும். இவ்விதமாகத்தான் அமெரிசியம் அணுசக்தி பேட்டரிகள் மின்சாரத்தை உற்பத்தி செய்கின்றன.
செல்போன்களுக்கென அணுசக்தி பேட்டரிகளை உருவாக்க முடியாதா என்று கேட்கலாம். அப்படிச் செய்தால் பேட்டரிகளை சார்ஜ் செய்ய வேண்டிய அவசியமே இருக்காதே என்றும் கூறலாம். இந்த வகையில் பல முயற்சிகள் செய்யப்பட்டாலும் தக்க பலன் கிடைக்கவில்லை. செல்போன்களில் அணுசக்திப் பொருள் இடம்பெறுமானால், கதிர்வீச்சு ஆபத்து உருவாகும். கதிர்வீச்சு ஆபத்து இல்லாத அணுசக்தி பேட்டரி ஒரு வேளை எதிர்காலத்தில் உருவாக்கப்படலாம்.
- என். ராமதுரை, மூத்த பத்திரிகையாளர்,
தொடர்புக்கு: nramadurai@gmail.com
புதன், 20 ஏப்ரல், 2016
வாழ்க்கை வசப்படும்.
* எங்கேயாவது செல்ல வேண்டியிருந்தால் அதற்குரிய ஆடைகள், பொருட்களை முன்கூட்டியே எடுத்து வைத்துக்கொள்ளுங்கள்.
* ஒரு காகிதத்தில் அன்றைய தினம் செய்ய வேண்டிய பணிகளையும், எப்போது செய்யப் போகிறோம் என்பதையும் குறித்து வையுங்கள்.
* காத்திருப்பது சிரமம் என்று கருதாதீர்கள். ஒரு புத்தகத்தை கையில் வைத்திருப்பது காத்திருத்தலை சுகமாக்கும். தேவையற்ற மன அழுத்தத்தைக் குறைக்கும்.
* வேலைகளைத் தள்ளி வைப்பது மன அழுத்தத்தை அதிகரிக்கும்.செய்யவேண்டியதை தாமதப்படுத்தாமல் செய்யுங்கள்.
* முன்கூட்டியே திட்டமிடுங்கள். எதையும் கடைசி நேரம் வரை காத்திருந்தபின் செய்வதைத் தவிருங்கள்.
* வேலை செய்யாதவைகளைக் கட்டி அழாதீர்கள். சரி செய்ய முயலுங்கள் காலணிஆனாலும் கடிகாரம் ஆனாலும். இல்லையேல் அவை தேவையற்ற மன அழுத்தத்தைத் தரக்கூடும்.
* சற்று முன்கூட்டியே செல்ல பழக்கப் படுங்கள். பத்து நிமிடத்தில் செல்லமுடிந்த இடத்துக்கு இருபது நிமிடத்திற்கு முன்பாகவே புறப்படுங்கள்.
* காஃபி , டீ அதிகம் குடிப்பதைத் தவிருங்கள். புகை மது எல்லாம் வேண்டாம்.
* சில மாற்று யோசனைகளைக் கைவசம் வைத்திருங்கள். உதாரணமாக பஸ் தாமதமானால் இதை- இதைச் செய்வேன் என்பது போன்றவை.
* இறுக்கம் தளருங்கள். சில வேலைகள் தடைபடுவதாலோ, தாமதப்படுவதாலோ உலகம் முடிந்து விடப் போவதில்லை.
* தவறாய்ப் போன ஒரு விஷயத்தைக் குறித்து சிந்தித்துக்கொண்டே இருப்பதை விட, சரியாய் நிகழ்ந்த பலவற்றைக்குறித்து அடிக்கடி நினைத்து மகிழுங்கள்.
* செல்லும் இடங்கள் புதிய இடங்களாக இருந்தால் வழியை முதலிலேயேதெளிவாகக் கேட்டு வைத்துக் கொள்ளுங்கள்.
* சற்று நேரம் கைபேசிகளையும், தொலைபேசிகளையும் அணைத்துவிடுங்கள். ஓய்வு எடுங்கள் எந்தத்தொந்தரவும இன்றி.
* செய்வதற்கு இயலாத பணிகளோ, நேரமில்லாமையால் நாம் செய்யமுடியாது என்று நினைக்கும் பணிகளோ இருந்தால் , 'மன்னிக்கவும்.. என்னால ்செய்ய இயலாது' என்று சொல்லப்பழகுங்கள்.
* உணவு, உடை, உறைவிடம் தவிர்த்த எதுவும் உங்களை மன இறுக்கம் கொள்ளச் செய்யாமல் பார்த்துக்கொள்ளுங்கள். முன்னுரிமை எதற்குக்கொடுக்க வேண்டும் என்பதில் தெளிவு அவசியம்.
* எளிமையாக வாழுங்கள்.
* உற்சாகமான நண்பர்களுடன் பழகுங்கள் அதிக நேரம்.
* நன்றாகத் தூங்குங்கள். முடிந்தால் அலாரம் வைத்துத் தூங்குங்கள். தடையற்ற தூக்கத்துக்கு அது உதவும்.
* வீட்டில் பொருட்களை அதனதன் இடத்தில் ஒழுங்காக அடுக்கி வையுங்கள். அவசரமாய் தேடுகையில் அகப்படாத பொருள் மன அழுத்தத்தை த்தரும்.
* ஆழமாக , நிதானமாக மூச்சை உள்ளே இழுத்து மெதுவாக வெளியே விடுங்கள்.
* எழுதப் பழகுங்கள். கவலைகளை, எரிச்சல்களை, தோல்விகளை குறைக்க எழுத்து வடிகாலாகும்.
* குழப்பம், கவலைகளை உள்ளுக்குள் புதைக்காமல் நம்பிக்கைக்குரிய நண்பர்களிடம் பகிருங்கள்.
* தினமும் உங்கள் மனதை மகிழச்செய்யும் செயல்கள் எதையேனும் ஒன்றைச் செய்யுங்கள். அதில் பொருளாதாரப் பயன் ஏதும் இல்லாவிட்டாலும் கூட.
* பிறருக்காக எதையேனும் செய்யப் பழகுங்கள். செய்யும் அனைத்து செயல்களையும் ஆத்மார்த்தமான அன்போடு செய்யுங்கள்.
* என்னை யாரும் புரிந்து கொள்ளவில்லையே எனும் முனகல்களைத் தவிர்த்து பிறரைப் புரிந்து கொள்ள முயலுங்கள்.
* உங்கள் உடை, நடை பாவனைகளினல் தன்னம்பிக்கை மிளிரட்டும். உடைகளை நன்றாக அணிவதே தன்னம்பிக்கையை அதிகரிக்கும் என்பது நிரூபிக்கப்பட்ட உண்மை.
* நிறைய வேலைகளை ஒரே நாளில் முடிக்க நினைக்காதீர்கள்.ஒவ்வொரு வேலைக்கும் இடையே சரியான இடைவெளி விடுங்கள்.
* வார இறுதிகள், விடுமுறை நாட்களை மிகச் சிறப்பாகச் செலவிடுங்கள். வெளியே செல்வது, கடற்கரைக்குச் செல்வது என மனதைப் புத்துணர்ச்சியாக்குங்கள்.
* இன்றைய பணிகளை செவ்வனே செய்தால் நாளைய பணிகள் செவ்வனே நடைபெறும் என்பதை மனதில் கொள்ளுங்கள்.
* பிடிக்காத வேலை இருந்தால் அதை முதலிலேயே முடித்து விடுங்கள். அப்போது தான் தொடர்ந்து செய்யும் பிடித்தமான வேலைகள் மனதை இலகுவாக்கும்.
*மன்னிக்கும் மனப்பான்மையை வளர்த்துக் கொள்ளுங்கள், அடுத்தவர்களைக் காயப் படுத்தாமல் வாழப் பழகுங்கள்.
இவற்றில் சிலவற்றைப் பின்பற்றினாலே மன அழுத்தமற்ற வாழ்க்கை நமக்குவசப்படும்.
செவ்வாய், 19 ஏப்ரல், 2016
ஆசிரியர் தகுதித்தேர்வு சான்றிதழ் உண்மைத்தன்மை மூதன்மைக்கல்வி அலுவலர்களே சரிபார்த்து வழங்கவேண்டும்-ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு
சனி, 16 ஏப்ரல், 2016
பாமக தேர்தல் அறிக்கை:பல்வேறு அமைப்புகளின் பிரதிநிதிகள் கருத்துகள்
அ.வீரப்பன் (பொதுப்பணித் துறை முன்னாள் சிறப்பு தலைமை பொறியாளர்): நீர்ப்பாசனத்துக்கு தனி அமைச்சகம் மற்றும் தனி அமைச்சர், ரூ.50 ஆயிரம் கோடியில் நீர்ப்பாசன திட்டம்
செயல்படுத்துவது, ஆறு, கால்வாய்களில் தடுப்பணைகள் கட்டுவது, ஏரிகளை தூர் வாருவது போன்ற அறிவிப்புகள் மற்றும் இப்படிப்பட்ட சிந்தனைகள் அரசி யல்வாதிகளுக்கு வந்திருப்பது வரவேற்கத்தக்கது. ஆனால் துறை சார்ந்த அறிவு இல்லாத ஐஏஎஸ் அதிகாரிகளைக் கொண்ட நிர்வாக கட்டமைப்பைக் கொண்டு இத்திட்டங்களை செயல்படுத்த முயற்சிப்பது, எந்த அளவுக்கு சாத்தியமாகும் என்பது தெரியவில்லை.
பி.ஆர். பாண்டியன் (தமிழக அனைத்து விவசாயிகள் சங்க கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர்): இந்த தேர்தல் அறிக்கை முற் போக்கு சிந்தனையுடன் தயாரிக் கப்பட்டுள்ளது. தேர்தலில் அரசியல் கட்சிகள்
வேளாண்மைக்கும், நீர்ப் பாசனத்துக்கும் முக்கியத்துவம் அளிப்பது இதுவே முதல் முறை. இது தேர்தல் அறிவிப்பாக இல்லாமல் செயல்பாட்டுக்கும் வர வேண்டும். இஸ்ரேல் தொழில்நுட்பத்தை தமிழக வேளாண் பல்கலைக்கழகத்தில் புகுத்துவது, காவிரி பாசன பகுதியில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை அமைப்பது, நீர்ப்பாசன திட்டங்களுக்கு ரூ.50 ஆயிரம் கோடி ஒதுக்கீடு, மாவட்டம் தோறும் சிறப்பு பொருளாதார மண்டலங்கள் அமைப்பது போன்ற அம்சங்கள் வரவேற்கத்தக்கவை.
கே.வி.வி.கிரி (தி சென்னை கஸ்டம்ஸ் ஹவுஸ் ஏஜென்ட்ஸ் அசோசியேஷன் தலைவர்): தொழில்
முதலீட்டை ஈர்க்க தமிழகம் 5 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு, தனித்தனிப் பொருளாதார ஆணையரகங்களாக ஏற்படுத்தப்படும், தமிழகம் சர்வதேச தளவாடக் கிடங்கு மையமாக மாற்றப்படும் போன்ற அறிவிப்புகள்வரவேற்கத்தக்கவை. அதே சமயம் மதுரவாயல்-துறைமுகம் பறக்கும் சாலை திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.
சோம வள்ளியப்பன் (பொருளாதார நிபுணர்): தமிழ்நாட்டில் தொழில் முதலீடு செய்ய முன்வருபவர்களை சந்திக்க முதலமைச்சர் வாரம் 3 மணி நேரம் ஒதுக்குவதன்மூலம் முதலீட்டாளர்கள் முதல்வரை நேரில் சந்திக்கும் வாய்ப்பு கிடைப்பதோடு இது தொடர்பான பல்வேறு பிரச்சினைகள் குறையும். தென் மாவட்ட மக்கள் விவசாயத்தையே நம்பி உள்ளனர். குறிப்பாக, மிகவும் பழம்பெருமை வாய்ந்த மதுரை நகரில் கூட ஒரு பெரிய தொழிற்சாலை இல்லை. எனவே தென் மாவட்டங்களில் தொழில் தொடங்க
வேண்டும்.
ஜெ.இன்பன்ட் ஜெபக்குமார் (பி.எஸ்சி. கணிதம் 2-ஆம் ஆண்டு மாணவர், தூய சவேரியார் கல்லூரி,
பாளையங்கோட்டை): சிபிஎஸ்இ பாடத்திட்ட அளவுக்கு பாடத்திட்டத்தை உயர்த்தும்போது கல்வித்தரம் ஒரே மாதிரியாக இருக்கும் என்ற அம்சம் வரவேற்கத்தக்கது. அனைத்து மாணவர்களுக்கும் ஐ-பேட், தனியார் பள்ளிகளில் படிக்கும் கல்விக்கட்டணத்தை அரசே ஏற்பது என திட்டங்கள் கேட்பற்கு நன்றாக இருக்கிறது. ஆனால், அவற்றை எல்லாம் நடைமுறைப்படுத்த முடியுமா? என்று தெரியவில்லை.
பி.கே.இளமாறன் (மாநில தலைவர், தமிழ்நாடு ஆசிரியர் சங்கம்): ஒட்டுமொத்தமாக கல்வித் துறைக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்திருப்பது மிகவும் வரவேற் கத்தக்கது. எல்கேஜி
முதல் பிளஸ்-2 வகுப்பு வரை அனைவருக்கும் இலவச கல்வி, தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கும் அரசு பள்ளிஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் உள்ளிட்ட அனைத்து திட்டங்களுமே வரவேற்கத் தக்கவை.
டாக்டர் கே.செந்தில் (சர்க்கரை நோய் நிபுணர்): தமிழ்நாடு சுகாதார இயக்கம் மற்றும் மருந்து விலையை கட்டுப்படுத்த ஜெனிடிக் மருந்துகளை ஊக்குவிப்பது வரவேற்கத்தக்கது. மாவட்ட தலைமை மருத்துவமனைகளில் முதியோர் பிரிவு தேவையான ஒன்று. அதே நேரத்தில்
எல்லோருக்கும் இலவச மருத்துவம் மற்றும் மருத்துவக் காப்பீடு என்பது நடைமுறைக்கு சாத்தியமில்லை. ஏழை, எளியமக்களுக்கு இலவச மருத்துவம் சரியாக இருக்கும்.
டாக்டர் பி.பாலகிருஷ்ணன் (எலும்பு முறிவு, முடநீக்கியல் அறுவை சிகிச்சை துறை): பாமக தேர்தல் அறிக்கையில் மருத்துவத்துறைக்கு பல நல்ல திட்டங்கள் இடம்பெற்றுள்ளன. அனைத்தையும் ஒரே நேரத்தில் கொண்டு வருவதும் மிகவும் கடி னம். கிராமப்புற மக்களுக்குதான் சரியான மருத்துவ வசதிகள் கிடைப் பதில்லை. ஆரம்ப சுகாதார நிலை யங்களின் எண்ணிக்கையை அதி கரித்து முழுநேர மருத்துவ மனையாக மாற்ற வேண்டும்.
தே.இளையராஜா (இடைநிலை ஆசிரியர், மதுரப்பாக்கம்): அக விலைப்படியில் 50 சதவீதம் அடிப்படை ஊதியத்துடன் இணைக் கப்படும் என்கிற அறிவிப்பு வரவேற் கத்தக்கது.இப்போது நடைமுறை யில் இருக்கும் புதிய ஓய்வூதிய முறை ரத்து செய்யப்படும் என்பதோடு, பழைய ஓய்வூதிய
முறையே மீண்டும் தொடரும் என்பதும் மகிழ்வு தரும் அறிவிப் பாகும். அரசு ஊழியர்கள் மாதம் ஒருமுறை பெறுகிற ஊதியம் 15 நாட்களுக்கு ஒருமுறை வீதம் இரு தவணைகளில் வழங்கப்படும் என்கிற அறிவிப்பு ஏற்புடையதாய் இல்லை.
க.புனிதவதி (சத்துணவு அமைப்பாளர், அதியனூர்): அரசு ஊழியர் களுக்கு 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை பதவி உயர்வு கிடைப் பது உறுதி என்கிற அறிவிப்பும், அரசுத்துறைகளில் பணியாற்றும் பகுதி நேர ஊழியர்கள் அனை வரும் பணி நிலைப்பு செய்யப் படுவார்கள் என்கிற அறிவிப்பும்மிகுந்த வரவேற்புக்கு உரியவை. மகளிருக்கு தனியாக பஸ்கள் இயக்கப்படும் என்பதும் பெண்கள் முன்னேற்றத்திற்கான சிறப்பான திட்டங்களாக உள்ளன.
வெளிநாட்டில் டாக்டர்கள் படித்த 77 % மாணவர்கள் எம்சிஐ டெஸ்டில் பெயில்!!
வெளிநாடுகளில் சென்று மருத்துவப் படிப்பு படித்தாலும்இந்தியாவில் டாக்டர்களாக தொழில் செய்ய வேண்டுமென்றால் எம்சிஐ நடத்தும் தேர்வில் வெற்றி பெறவேண்டும். அவ்வாறு எம்சிஐ நடத்திய தேர்வுகளில் 77 சதவீத வெளிநாட்டில் டாக்டர்கள் படித்த மாணவர்கள் பெயிலாகியுள்ளனர்.கடந்த 12ஆண்டுகளில் நடந்தத் தேர்வு முடிவுகளாகும் இது.இந்தத் தேர்வை எம்சிஐ, நேஷனல் போர்ட் ஆஃப் எக்ஸாமினேஷன்ஸ்(என்பிஇ) உதவியுடன் நடத்துகிறது.தற்போது என்பிஇ கொடுத்த புள்ளி விவரங்கள் அனைவரையும் அதிர்ச்சியில்
ஆழ்த்தியுள்ளனர். கடந்த 2004-ம் ஆண்டு முதல் தேர்வு எழுதியவர்களில் 77 சதவீதம் பேர் தோல்வியுற்றுள்ளனர்.
ஒவ்வொரு ஆண்டு நடக்கும்தேர்விலும் 10 முதல் 20 சதவீதம் மாணவர்கள் மட்டுமே தேர்ச்சி பெறுகின்றனர்.2008-ம் ஆண்டு நடந்தத் தேர்வில் 58.7 சதவீதமாணவர்கள் தேர்ச்சி பெற்றனர்.2014-ம் ஆண்டு நடந்த 2 தேர்வுகளில் முறையே 10.4, 11.4 சதவீத மாணவர்கள் மட்டுமே தேர்ச்சி கண்டுள்ளனர்.
பா.ம.க.,வின் தேர்தல்அறிக்கை:கல்வி, வேலைவாய்ப்பு, விவசாயம், மருத்துவம், தொழில் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம்
வரும் சட்டசபை தேர்தலுக்கான, பா.ம.க.,வின் தேர்தல்அறிக்கையை, நேற்று வெளியிட்டு, கட்சியின் நிறுவனர் ராமதாஸ் பேசியதாவது:பா.ம.க., சார்பில்,13 ஆண்டுகளாக, வரைவு தேர்தல் அறிக்கையை வெளியிட்டு வருகிறோம். அதில், கல்வி, வேலை
வாய்ப்பு, விவசாயம், மருத்துவம், தொழில் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் தரப்படும்;
தமிழகத்தில், ஒரு கோடி இளைஞர்களுக்குவேலைவாய்ப்பு தரப்படும். தமிழகத்தில், 50 ஆயிரம் கோடி பனை மரங்கள் இருந்தன. இந்த மரங்களை, செங்கல் சூளை போடுவதற்காக,வெட்டி அழித்து விட்டனர். தற்போது, 4.5 கோடி பனை மரங்கள் மட்டுமே பாக்கி உள்ளன.பனை மரங்கள் அழிந்து வருவதைத் தடுத்து, அவற்றின் எண்ணிக்கையை அதிகரிக்க, சிறப்பு திட்டம் கொண்டு வரப்படும். நீரா, பானம், வெல்லம், பனங்கற்கண்டு உள்ளிட்ட பொருட்களின் உற்பத்தியும், விற்பனையும்ஊக்கப்படுத்தப்படும். இப்படி பல்வேறு தகவல்கள் இடம் பெற்றிருந்த பா.ம.க., வரைவு தேர்தல் அறிக்கையை
காப்பியடித்து தான், தி.மு.க., தேர்தல் அறிக்கை தயாரித்துள்ளது.
தமிழகம் முழுவதும் மது ஒழிப்புக்காக, 35 ஆண்டுகளாக, போராட்டம் நடத்தி
வருகிறேன். பா.ம.க., ஆட்சிக்கு வந்தால், முழு மதுவிலக்கு கொண்டு வரப்படும் என, மக்களுக்கு வாக்குறுதி கொடுத்து உள்ளோம்.மதுவை ஒழிக்க, பா.ம.க.,வால் மட்டும் முடியும் என, பெண்கள் உறுதியாக நம்புகின்றனர். தமிழகத்தில், 100 சதவீதம் இடஒதுக்கீடு கொண்டு வரப்படும். இதில், உயர்ந்த ஜாதியினருக்கும் இடஒதுக்கீடு வழங்கப்படும்.
இவ்வாறு ராமதாஸ் பேசினார்.
நிகழ்ச்சியில், பா.ம.க., இளைஞர் அணி தலைவர் அன்புமணி பேசியதாவது:
தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளுக்கும் வந்து செல்லும் மாணவர்களுக்கு, பேருந்து வசதி ஏற்பாடு செய்யப்படும். மாநிலத்தில், 17 மாவட்டங்களில், அரசு மருத்துவக் கல்லுாரிகள் உள்ளன. 15 மாவட்டங்களில்,அரசு மருத்துவ கல்லுாரிகள் இல்லை. இந்த மாவட்டங்களில் மருத்துவக் கல்லுாரி கொண்டு வரப்படும். கள்ளச் சாராயம் விற்பனை செய்தால், ஆயுள் தண்டனை வழங்கவும், வழக்குகளை விரைந்து ஆறு மாதங்களில் முடிக்க, தனியாக நீதிமன்றமும் அமைக்கப்படும். 12 லட்சம் மக்கள் தொகை அடிப்படையில், மாவட்டங்கள் உருவாக்கப்படும்; 65 மாவட்டங்கள் ஏற்படுத்தப்படும். 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில், 350 ரூபாயாக சம்பளம் உயர்த்தப்படும். ஜெயலலிதா, கருணாநிதி என,
யாராலும் மதுவிலக்கை கொண்டு வர முடியாது; பா.ம.க.,வால் மட்டுமே முடியும்.
புதன், 13 ஏப்ரல், 2016
NET JRF:உதவிப் பேராசிரியர் பணி december 2015 result Tamil subject
|
Examination Results 2016 |
CBSE-UGC NET RESULT - December 2015 |
Roll No | 69001344 |
Candidate Name | SINGARAVELAN T |
Subject | (026) Tamil |
PAPER | PAPER-1 | PAPER-2 | PAPER-3 | GRAND TOTAL |
MARKS OBTAINED | 58 | 62 | 108 | 228 |
MAXIMUM MARKS | 100 | 100 | 150 | 350 |
PERCENTAGE (%) | 58.00 | 62.00 | 72.00 | 65.14 |
Remark | QUALIFIED FOR ASSISTANT PROFESSOR ONLY |
Please click here for Subject-wise/category-wise cut off for Assistant Professor and JRF |
Disclaimer: Neither NIC nor CBSE is responsible for any inadvertent error that may have crept in the results being published on NET. The results published on net are for immediate information to the examinees.The result declared is provisional subject to fulfilment of eligibility conditions. |
T.SINGARAVELAN
NET DECEMBER 2016 :ALL INDIA FIRST RANKER IN TAMIL SUBJECT WITH MARKS
|
Examination Results 2016 |
CBSE-UGC NET RESULT - December 2015 |
Roll No | 69001344 |
Candidate Name | SINGARAVELAN T |
Subject | (026) Tamil |
PAPER | PAPER-1 | PAPER-2 | PAPER-3 | GRAND TOTAL |
MARKS OBTAINED | 58 | 62 | 108 | 228 |
MAXIMUM MARKS | 100 | 100 | 150 | 350 |
PERCENTAGE (%) | 58.00 | 62.00 | 72.00 | 65.14 |
Remark | QUALIFIED FOR ASSISTANT PROFESSOR ONLY |
Please click here for Subject-wise/category-wise cut off for Assistant Professor and JRF |
Disclaimer: Neither NIC nor CBSE is responsible for any inadvertent error that may have crept in the results being published on NET. The results published on net are for immediate information to the examinees.The result declared is provisional subject to fulfilment of eligibility conditions. |
செவ்வாய், 12 ஏப்ரல், 2016
டிசம்பர் 2015-நெட் தேர்வு முடிவினை தெரிந்துகொள்ள
The Central Board of Secondary Education (CBSE) has announced the results of National Eligibility Test (NET) examination conducted on 27th December 2015.
The candidates can access their results on the official website:
டிசம்பர் 2015-நெட் தேர்வு முடிவு சிபிஎஸ்சி வெளியிட்டது உங்கள் தேர்வு முடிவினை தெரிந்துகொள்ள
http://cbseresults.nic.in/UGC/net_dec2015.htm
டிசம்பர் 2015-நெட் தேர்வு முடிவு சிபிஎஸ்சி வெளியிட்டத CBSC NET DECEMBER 2015 RESULT DECLARED
ஞாயிறு, 10 ஏப்ரல், 2016
'செட்' தேர்வு ரிசல்ட் தாமதம்-''நெட்' தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியாமல், பட்டதாரிகள் குழப்பம் !
கல்லுாரிகளில் உதவி பேராசிரியர் பணியில் சேர, மத்திய அரசின், 'நெட்'தேர்வு அல்லது மாநில அரசின்,'செட்' தகுதி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டியது கட்டாயம். இதில், 'நெட்' தேர்வு ஆண்டுக்கு, இரண்டு முறை ஜூன் மற்றும் டிசம்பரில் நடத்தப்படுகிறது.'இந்த ஆண்டுக்கான தேர்வு,ஜூலை, 10ல் நடக்கும்' என, மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., அறிவித்துள்ளது. இதற்கு ஏப்., 12 முதல், மே,12 வரை மட்டுமே விண்ணப்பிக்க முடியும். ஆனால், தமிழகத்தில் இந்த தேர்வுக்கு விண்ணப்பிப்பதில் பட்டதாரிகள் குழப்பம்அடைந்துள்ளனர்.
தமிழக அரசு சார்பில் கடந்த பிப்ரவரியில், 'செட்' தகுதி தேர்வு நடந்தது. தேர்வை நடத்திய அன்னை தெரசா மகளிர் பல்கலை,இந்த தேர்வுக்கான விடைத் திருத்தத்தைக் கூட துவங்கவில்லை. மேலும், 'கீ ஆன்சர்' எனப்படும் விடைக்குறிப்பு கூட வெளியிடப்படவில்லை.மாநில அளவிலான தகுதி தேர்வான செட் தேர்வு முடிவுகள் வெளியிடப்படாத நிலையில், தேசிய அளவிலான தகுதி தேர்வானநெட் தேர்வுக்கு விண்ணப்பிப்பதில் பட்டதாரிகள் குழப்பம் அடைந்துள்ளனர்.
சனி, 9 ஏப்ரல், 2016
11, 12-ம் வகுப்புகளுக்கு பருவத்தேர்வு முறையை நடைமுறைப்படுத்த வேண்டும் -முன்னாள்துணைவேந்தரும் கல்வியாளருமான வே. வசந்திதேவி
நடுத்தர வர்க்க மக்களின் குழந்தைகளும், வசதி படைத்தவர்களின் குழந்தைகளும் அரசுப் பள்ளியில் படிக்கும் நிலை ஏற்பட வேண்டும். வசதி படைத்த குடும்பத்து குழந்தைகள் அரசுப் பள்ளிகளில் படிக்கும்போது, அந்த பள்ளிகளின் கட்டமைப்பு வசதிகளும் ஆசிரியர் பணியும் மேம்படும்.
இன்றைக்கு இருக்கும் சட்டங்களை முழுமையாக நடைமுறைப்படுத்தினால் 80 சதவீத தனியார் பள்ளிகளை மூடவேண்டிய நிலை ஏற்படும். தகுதியான ஆசிரியர்கள் இல்லாதது, கட்டமைப்பு வசதிகள் குறைபாடு போன்ற காரணங்களால் தற்போது 700-க்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகள் செயல்படுவதற்கு தகுதியற்றதாக கண்டறியப்பட்டுள்ளன. இப்பள்ளிகளை மூடிவிட்டு அங்கு படிக்கும் குழந்தைகளை வேறு அரசுப் பள்ளியிலோ அல்லது அரசு உதவி பெறும் பள்ளியிலோ சேர்க்க வேண்டும்.
இலவச கல்வி அனைவருக்கும் இலவசமாக அரசே கல்வி வழங்க முடியுமா என்று பலர் கேள்வி எழுப்புகிறார்கள். 1980-ம் ஆண்டு வரை அனைவரும் பொதுப் பள்ளியில் கட்டணமில்லா கல்வியைத்தான் பெற்றார்கள். உலகில் உள்ள பல நாடுகளிலும் கட்டணம் இல்லாமல்தான் கல்வி கற்பிக்கப்படுகிறது. எனவே அனைவருக்கும் கட்டணமில்லாமல் கல்வி வழங்க அரசியல் கட்சிகள் உறுதியளிக்க வேண்டும் என்றார் அவர்.
கல்விக் கோரிக்கைகள்
இந்த கூட்டத்தில் தமிழக அரசியல் கட்சிகளுக்கு முன்வைக்கப்பட்டுள்ள கல்வி தொடர்பான கோரிக்கைகள் வருமாறு: கல்வியில் வணிகமயத்தை ஒழிக்க வேண்டும். ஏற்றத்தாழ்வு இல்லாத கல்வி வழங்க பொதுப்பள்ளி முறையை உருவாக்க வேண்டும்.
மனப்பாடம் செய்யும் வகையிலான கல்விக்குப் பதிலாக, பிற மாநிலங்களில் உள்ளதுபோல் 11, 12-ம்
வகுப்புகளுக்கு பருவத்தேர்வு முறையை நடைமுறைப்படுத்த வேண்டும்.
முழுமையாக தாய்மொழி வழிக் கல்வியைநடைமுறைப்படுத்த சட்டம் இயற்ற வேண்டும்.
அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஆட்சியாளர்களின் குழந்தைகளை அரசுப் பள்ளியில் சேர்க்க சட்டம் இயற்ற வேண்டும்.
கல்வி உரிமைச் சட்டம் வலியுறுத்தியுள்ள வசதிகளை நிறைவேற்றாத தனியார் பள்ளிகளை அரசே ஏற்று நடத்த வேண்டும்.
இந்த கோரிக்கைகளை அரசியல் கட்சிகள் ஏற்று தேர்தல் அறிக்கையில் வெளியிடவேண்டும் என்று கூட்டத்தில்வலியுறுத்தப்பட்டது.
பேராசிரியர் கே.ஏ.மணிக்குமார், தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநிலச் செயலாளர்கள் எஸ்.முருகேசன், எம். மணிமேகலை, வான்முகில் அமைப்பின் இயக்குநர் பிரிட்டோ, மனித உரிமைக் கல்வி நிறுவனத்தின் தேசிய ஒருங்கிணைப்பாளர் செ.மரிய சூசை மற்றும் கல்வி மேம்பாட்டுக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர்கள் பங்கேற்றனர்.
புதன், 6 ஏப்ரல், 2016
CBSE NET / JRF July 2016 Online APPLY FROM 12TH APRIL (நெட் தேசிய அளவிலான தகுதித் தேர்வு )
Short Information : | Central Board of Secondary Education CBSE, University Gram Commission UGC Fellowship Exam for JRF / Assistant Processor NET July 2016 Session Are Invited to Online Application Form Those Candidates Are Interested to the Following Form and Completed the All Eligibility Criteria Can Read the Full Notification and Apply Online. |
Central Board of Secondary Education (CBSE)UGC NET / JRF July 2016 Online FormShort Details of Notification | ||||
Important Dates
| Application Fee
| |||
Eligibility
|
வெள்ளி, 1 ஏப்ரல், 2016
கல்விக்கான பிரதான கோரிக்கைகள்
பிரின்ஸ் கஜேந்திரபாபு பொதுச்செயலாளர், பொதுப்பள்ளிக்கான மாநில மேடை
* ஆரம்பகல்வி முதல் ஆராய்ச்சிக்கல்வி வரை இலவசமாக வழங்க வேண்டும்.
* 3 கிலோமீட்டருக்குள் ஒரு தொடக்கப்பள்ளி. 5 கிலோமீட்டருக்குள் ஒரு உயர்நிலைப்பள்ளி என்று 1950-ல் காமராஜர் ஏற்படுத்திய நிலையை மேம்படுத்தி ஒரு பகுதிக்கு ஒரு தரமான அரசுப் பள்ளி என்ற நிலையை அடைய வேண்டும்.
* அனைத்து அரசுப்பள்ளிகளிலும் மழலையர் வகுப்புகள் தொடங்க வேண்டும்.அரசுப்பள்ளிகளின் கட்டமைப்பை மேம்படுத்த வேண்டும்.
* பள்ளி செல்லும் வயதுள்ள மாணவர்கள் 100 சதவீதம் பள்ளிகளில் சேர்க்கப்பட வேண்டும்.
* தாய்மொழி மூலம் கல்வி வழங்க வேண்டும்.
* உடற்பயிற்சி ஆசிரியர் உள்பட ஒவ்வொரு பாடத்துக்கும் தனித்தனியாக ஆசிரியர்கள் நியமிக்கவேண்டும்.
* பள்ளிமாணவர்களுக்காக நடத்தும் விடுதிகளில் சத்தான உணவும் தரமான சுகாதாரமும் கிடைப்பதை பள்ளிக்கல்வித்துறை உறுதிப்படுத்தவேண்டும்.
* ஆசிரியர்களுக்கு தரப்படும் அதிகமான நிர்வாகப்பணிகளால் கற்றுக்கொடுக்கும் தரம் குறைவதால் அந்தமுறையை கைவிடவேண்டும்.
* தமிழகம் முழுவதும் உள்ள ஆசிரியர் காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்.
பேராசிரியர் விஜயகுமார் 'புதிய ஆசிரியன்' பத்திரிகையின் துணை ஆசிரியர்.
* பல்கலைக்கழகங்களில் ஊழல் பரவுவதைத் தடுக்க துணைவேந்தர் நியமனத்தை நியாயமான நடத்த வேண்டும்.
* தனியார் கல்லூரிகள் செய்கிற முறைகேடுகளைத் தட்டிக்கேட்கவும், அரசின் தவறான கல்விக் கொள்கையைச் சுட்டிக்காட்டவும் மாணவர் பேரவை அவசியம். கல்லூரிகளில் மாணவர் பேரவைத் தேர்தலை நடத்த வேண்டும்.
* பல்கலைக்கழகங்களில் சமூகத்துக்குப் பயன்படாத ஆய்வுகளே அதிக அளவில் நடைபெறுகின்றன. இதை முறைப்படுத்தவும், ஆசிரியர் - ஆய்வு மாணவர் உறவு மேம்படவும் நடவடிக்கை தேவை.
* அரசின் எந்தக் கட்டுப்பாடும் இல்லாமல் வானளாவிய அதிகாரத்துடன் செயல்படும் தனியார் சுயநிதிக் கல்லூரிகளை முறைப்படுத்த வேண்டும். அவற்றையும் தனியார் கல்லூரிகள் ஒழுங்காற்றுச் சட்டத்தின் கீழ் கொண்டு வர வேண்டும்.
* உயர் கல்வி நிறுவனங்களுக்கு அனுமதி தரும் முன்பே, அவற்றின் அடிப்படை வசதிகள், ஆசிரியர் பணியிடங்கள் குறித்து ஆய்வு செய்யப்பட வேண்டும். கண்துடைப்பாக ஆய்வு நடத்துவோருக்குக் கடும் தண்டனை விதிக்கப்பட வேண்டும்.
* வன்முறை, தற்கொலை, மது என்று தவறான வழியில் செல்லும் மாணவர்களை நல்வழிப்படுத்த பள்ளி, கல்லூரிகளில் மனநல ஆலோசகர்கள் நியமிக்கப்பட வேண்டும்.