சனி, 16 ஏப்ரல், 2016

பாமக தேர்தல் அறிக்கை:பல்வேறு அமைப்புகளின் பிரதிநிதிகள் கருத்துகள்

கல்வி, தொழில், வேளாண்மை என அனைத்து துறைகளின் மேம்பாட்டு அம்சங்களை உள்ளடக்கிய பல வாக்குறுதிகள் பாமக தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ளன. இந்த வாக்குறுதிகள் குறித்து பல்வேறு அமைப்புகளின் பிரதிநிதிகள் கூறிய கருத்துகள் வருமாறு:
அ.வீரப்பன் (பொதுப்பணித் துறை முன்னாள் சிறப்பு தலைமை பொறியாளர்): நீர்ப்பாசனத்துக்கு தனி அமைச்சகம் மற்றும் தனி அமைச்சர், ரூ.50 ஆயிரம் கோடியில் நீர்ப்பாசன திட்டம்
செயல்படுத்துவது, ஆறு, கால்வாய்களில் தடுப்பணைகள் கட்டுவது, ஏரிகளை தூர் வாருவது போன்ற அறிவிப்புகள் மற்றும் இப்படிப்பட்ட சிந்தனைகள் அரசி யல்வாதிகளுக்கு வந்திருப்பது வரவேற்கத்தக்கது. ஆனால் துறை சார்ந்த அறிவு இல்லாத ஐஏஎஸ் அதிகாரிகளைக் கொண்ட நிர்வாக கட்டமைப்பைக் கொண்டு இத்திட்டங்களை செயல்படுத்த முயற்சிப்பது, எந்த அளவுக்கு சாத்தியமாகும் என்பது தெரியவில்லை.
பி.ஆர். பாண்டியன் (தமிழக அனைத்து விவசாயிகள் சங்க கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர்): இந்த தேர்தல் அறிக்கை முற் போக்கு சிந்தனையுடன் தயாரிக் கப்பட்டுள்ளது. தேர்தலில் அரசியல் கட்சிகள்
வேளாண்மைக்கும், நீர்ப் பாசனத்துக்கும் முக்கியத்துவம் அளிப்பது இதுவே முதல் முறை. இது தேர்தல் அறிவிப்பாக இல்லாமல் செயல்பாட்டுக்கும் வர வேண்டும். இஸ்ரேல் தொழில்நுட்பத்தை தமிழக வேளாண் பல்கலைக்கழகத்தில் புகுத்துவது, காவிரி பாசன பகுதியில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை அமைப்பது, நீர்ப்பாசன திட்டங்களுக்கு ரூ.50 ஆயிரம் கோடி ஒதுக்கீடு, மாவட்டம் தோறும் சிறப்பு பொருளாதார மண்டலங்கள் அமைப்பது போன்ற அம்சங்கள் வரவேற்கத்தக்கவை.

கே.வி.வி.கிரி (தி சென்னை கஸ்டம்ஸ் ஹவுஸ் ஏஜென்ட்ஸ் அசோசியேஷன் தலைவர்): தொழில்
முதலீட்டை ஈர்க்க தமிழகம் 5 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு, தனித்தனிப் பொருளாதார ஆணையரகங்களாக ஏற்படுத்தப்படும், தமிழகம் சர்வதேச தளவாடக் கிடங்கு மையமாக மாற்றப்படும் போன்ற அறிவிப்புகள்வரவேற்கத்தக்கவை. அதே சமயம் மதுரவாயல்-துறைமுகம் பறக்கும் சாலை திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.
சோம வள்ளியப்பன் (பொருளாதார நிபுணர்): தமிழ்நாட்டில் தொழில் முதலீடு செய்ய முன்வருபவர்களை சந்திக்க முதலமைச்சர் வாரம் 3 மணி நேரம் ஒதுக்குவதன்மூலம் முதலீட்டாளர்கள் முதல்வரை நேரில் சந்திக்கும் வாய்ப்பு கிடைப்பதோடு இது தொடர்பான பல்வேறு பிரச்சினைகள் குறையும். தென் மாவட்ட மக்கள் விவசாயத்தையே நம்பி உள்ளனர். குறிப்பாக, மிகவும் பழம்பெருமை வாய்ந்த மதுரை நகரில் கூட ஒரு பெரிய தொழிற்சாலை இல்லை. எனவே தென் மாவட்டங்களில் தொழில் தொடங்க
வேண்டும்.
ஜெ.இன்பன்ட் ஜெபக்குமார் (பி.எஸ்சி. கணிதம் 2-ஆம் ஆண்டு மாணவர், தூய சவேரியார் கல்லூரி,
பாளையங்கோட்டை): சிபிஎஸ்இ பாடத்திட்ட அளவுக்கு பாடத்திட்டத்தை உயர்த்தும்போது கல்வித்தரம் ஒரே மாதிரியாக இருக்கும் என்ற அம்சம் வரவேற்கத்தக்கது. அனைத்து மாணவர்களுக்கும் ஐ-பேட், தனியார் பள்ளிகளில் படிக்கும் கல்விக்கட்டணத்தை அரசே ஏற்பது என திட்டங்கள் கேட்பற்கு நன்றாக இருக்கிறது. ஆனால், அவற்றை எல்லாம் நடைமுறைப்படுத்த முடியுமா? என்று தெரியவில்லை.

பி.கே.இளமாறன் (மாநில தலைவர், தமிழ்நாடு ஆசிரியர் சங்கம்): ஒட்டுமொத்தமாக கல்வித் துறைக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்திருப்பது மிகவும் வரவேற் கத்தக்கது. எல்கேஜி
முதல் பிளஸ்-2 வகுப்பு வரை அனைவருக்கும் இலவச கல்வி, தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கும் அரசு பள்ளிஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் உள்ளிட்ட அனைத்து திட்டங்களுமே வரவேற்கத் தக்கவை.

டாக்டர் கே.செந்தில் (சர்க்கரை நோய் நிபுணர்): தமிழ்நாடு சுகாதார இயக்கம் மற்றும் மருந்து விலையை கட்டுப்படுத்த ஜெனிடிக் மருந்துகளை ஊக்குவிப்பது வரவேற்கத்தக்கது. மாவட்ட தலைமை மருத்துவமனைகளில் முதியோர் பிரிவு தேவையான ஒன்று. அதே நேரத்தில்
எல்லோருக்கும் இலவச மருத்துவம் மற்றும் மருத்துவக் காப்பீடு என்பது நடைமுறைக்கு சாத்தியமில்லை. ஏழை, எளியமக்களுக்கு இலவச மருத்துவம் சரியாக இருக்கும்.

டாக்டர் பி.பாலகிருஷ்ணன் (எலும்பு முறிவு, முடநீக்கியல் அறுவை சிகிச்சை துறை): பாமக தேர்தல் அறிக்கையில் மருத்துவத்துறைக்கு பல நல்ல திட்டங்கள் இடம்பெற்றுள்ளன. அனைத்தையும் ஒரே நேரத்தில் கொண்டு வருவதும் மிகவும் கடி னம். கிராமப்புற மக்களுக்குதான் சரியான மருத்துவ வசதிகள் கிடைப் பதில்லை. ஆரம்ப சுகாதார நிலை யங்களின் எண்ணிக்கையை அதி கரித்து முழுநேர மருத்துவ மனையாக மாற்ற வேண்டும்.
தே.இளையராஜா (இடைநிலை ஆசிரியர், மதுரப்பாக்கம்): அக விலைப்படியில் 50 சதவீதம் அடிப்படை ஊதியத்துடன் இணைக் கப்படும் என்கிற அறிவிப்பு வரவேற் கத்தக்கது.இப்போது நடைமுறை யில் இருக்கும் புதிய ஓய்வூதிய முறை ரத்து செய்யப்படும் என்பதோடு, பழைய ஓய்வூதிய
முறையே மீண்டும் தொடரும் என்பதும் மகிழ்வு தரும் அறிவிப் பாகும். அரசு ஊழியர்கள் மாதம் ஒருமுறை பெறுகிற ஊதியம் 15 நாட்களுக்கு ஒருமுறை வீதம் இரு தவணைகளில் வழங்கப்படும் என்கிற அறிவிப்பு ஏற்புடையதாய் இல்லை.
க.புனிதவதி (சத்துணவு அமைப்பாளர், அதியனூர்): அரசு ஊழியர் களுக்கு 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை பதவி உயர்வு கிடைப் பது உறுதி என்கிற அறிவிப்பும், அரசுத்துறைகளில் பணியாற்றும் பகுதி நேர ஊழியர்கள் அனை வரும் பணி நிலைப்பு செய்யப் படுவார்கள் என்கிற அறிவிப்பும்மிகுந்த வரவேற்புக்கு உரியவை. மகளிருக்கு தனியாக பஸ்கள் இயக்கப்படும் என்பதும் பெண்கள் முன்னேற்றத்திற்கான சிறப்பான திட்டங்களாக உள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக