தமிழக அரசு நடத்திய, உதவி பேராசிரியர் ஆவதற்கான தகுதி தேர்வான, 'செட்' தேர்வு முடிந்து, இரண்டு மாதங்கள் நெருங்கும் நிலையில், இன்னும் விடைக்குறிப்பு வெளியிடவில்லை. எனவே, மத்திய அரசு நடத்தும், 'நெட்' தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியாமல், பட்டதாரிகள் குழப்பம் அடைந்துள்ளனர்.
கல்லுாரிகளில் உதவி பேராசிரியர் பணியில் சேர, மத்திய அரசின், 'நெட்'தேர்வு அல்லது மாநில அரசின்,'செட்' தகுதி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டியது கட்டாயம். இதில், 'நெட்' தேர்வு ஆண்டுக்கு, இரண்டு முறை ஜூன் மற்றும் டிசம்பரில் நடத்தப்படுகிறது.'இந்த ஆண்டுக்கான தேர்வு,ஜூலை, 10ல் நடக்கும்' என, மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., அறிவித்துள்ளது. இதற்கு ஏப்., 12 முதல், மே,12 வரை மட்டுமே விண்ணப்பிக்க முடியும். ஆனால், தமிழகத்தில் இந்த தேர்வுக்கு விண்ணப்பிப்பதில் பட்டதாரிகள் குழப்பம்அடைந்துள்ளனர்.
தமிழக அரசு சார்பில் கடந்த பிப்ரவரியில், 'செட்' தகுதி தேர்வு நடந்தது. தேர்வை நடத்திய அன்னை தெரசா மகளிர் பல்கலை,இந்த தேர்வுக்கான விடைத் திருத்தத்தைக் கூட துவங்கவில்லை. மேலும், 'கீ ஆன்சர்' எனப்படும் விடைக்குறிப்பு கூட வெளியிடப்படவில்லை.மாநில அளவிலான தகுதி தேர்வான செட் தேர்வு முடிவுகள் வெளியிடப்படாத நிலையில், தேசிய அளவிலான தகுதி தேர்வானநெட் தேர்வுக்கு விண்ணப்பிப்பதில் பட்டதாரிகள் குழப்பம் அடைந்துள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக