செவ்வாய், 17 மே, 2016

பிளஸ் 2 தேர்ச்சி விகிதம் : வருவாய் மாவட்ட வாரியாக தேர்ச்சி பெற்றவர்கள் விவரம்


2016 பிளஸ் 2 தேர்வில், வருவாய் மாவட்ட அளவிலான தேர்ச்சி விகிதத்தில் ஈரோடு மாவட்டம் 95.7 சதவீதத்துடன் முதலிடத்தைப் பிடித்துள்ளது. வேலூர் மாவட்டம் 83.13 சதவீதத்துடன் கடைசி இடத்தில் உள்ளது. சென்னை 91.81 சதவீதத்துடன் 17-வது இடத்தைப் பிடித்துள்ளது.

பிளஸ் 2 தேர்ச்சி விகிதம் : வருவாய் மாவட்ட வாரியாக தேர்ச்சி பெற்றவர்கள் விவரம்

மாவட்டம்

தேர்வு எழுதியவர்கள்

தேர்ச்சி பெற்றவர்கள்

சதவீதம்

பள்ளிகளின் எண்ணிக்கை

ஈரோடு

25,522

24,737

96.92

201

கன்னியாகுமரி

24,472

23,419

95.7

220

திருநெல்வேலி

35,687

33,817

94.76

294

தூத்துக்குடி

19,988

19,082

95.47

177

ராமநாதபுரம்

14,420

13,705

95.04

129

சிவகங்கை

15,840

15,059

95.07

136

விருதுநகர்

24,007

22,981

95.73

199

தேனி

14,798

14,074

95.11

119

மதுரை

37,437

34,887

93.19

286

திண்டுக்கல்

21,953

19,864

90.48

183

ஊட்டி

7,942

7,250

91.29

71

திருப்பூர்

22,551

21,468

95.2

186

கோவை

35,553

33,472

94.15

336

சேலம்

38,263

34,780

90.9

286

நாமக்கல்

27,294

25,758

94.37

193

கிருஷ்ணகிரி

22,832

19,634

85.99

159

தருமபுரி

22,213

20,085

90.42

146

புதுக்கோட்டை

18,468

17,177

93.01

151

கரூர்

10,741

10,045

93.52

102

அரியலூர்

7,443

6,738

90.53

71

பெரம்பலூர்

8,747

8,461

96.73

67

திருச்சி

33,041

31,272

94.65

226

நாகப்பட்டினம்

17,888

15,527

86.8

127

திருவாரூர்

13,921

11,719

84.18

105

தஞ்சாவூர்

28,779

25,942

90.14

202

புதுச்சேரி

14,285

12,533

87.74

135

விழுப்புரம்

35,979

32,189

89.47

266

கடலூர்

29,899

25,304

84.63

196

திருவண்ணாமலை

24,135

21,882

90.67

208

வேலூர்

42,451

35,288

83.13

325

காஞ்சிபுரம்

44,107

40,012

90.72

325

திருவள்ளூர்

42,186

36,886

87.44

314

சென்னை

50,840

46,678

91.81

410

 

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் : இரண்டு பேர் 1195 மதிப்பெண் பெற்று மாநிலத்தில் முதலிடம் பிடித்துள்ளனர்.


ஆர்த்தி (இடது), ஜஸ்வந்த் (வலது)
ஆர்த்தி (இடது), ஜஸ்வந்த் (வலது)

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகின. கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் உள்ள வித்யா மந்திர் தனியார் பள்ளியைச் சேர்ந்த இரண்டு பேர் 1195 மதிப்பெண் பெற்று மாநிலத்தில் முதலிடம் பிடித்துள்ளனர்.

கிருஷ்ணகிரி அம்மன் நகரை சேர்ந்த வெங்கடாசலம் மகள் ஆர்த்தி 1195 மதிப்பெண் பெற்றுள்ளார். அதே பள்ளியைச் சேர்ந்த மாணவர் ஜஸ்வந்த் 1195 மதிப்பெண் பெற்று முதலிடம் இடம் பிடித்துள்ளார்.

இரண்டாம் இடத்தை திருவள்ளூர் மாவட்டம் ஸ்ரீநிகேதன் மெட்ரிக் பள்ளியின் மாணவி பவித்ரா பிடித்துள்ளார். அவர் பெற்ற மதிப்பெண் 1194.

மூன்றாம் இடத்தை நாமக்கல் கண்டம்பாளையம் எஸ்.கே.வி. பள்ளி மாணவி வேணுப்ரீதா பிடித்துள்ளார். அவர் 1200-க்கு 1193 மதிப்பெண் பெற்றுள்ளார்.

முதலிடம் பிடித்த மாணவி ஆர்த்தி பெற்ற மதிப்பெண் - பாடவாரியாக

தமிழ் 199

ஆங்கிலம் 197

இயற்பியல் 199

கணிதம் 200

வேதியியல் 200

உயிரியல் 200

மொத்தம் 1195

தேர்ச்சி விகிதம் அதிகரிப்பு:

கடந்த இரண்டு ஆண்டுகளைவிட இந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளது. இந்த ஆண்டு மொத்த தேர்ச்சி விகிதம் 91.4%. வழக்கம்போல் மாணவிகள் அதிகளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். 94.4% மாணவிகள்; 87.9% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

தமிழகம், புதுச்சேரியில் 8.72 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதியுள்ள பிளஸ் 2 தேர்வின் முடிவுகள் இன்று காலை 10.31 மணிக்கு வெளியானது.

அரசு தேர்வுத் துறை இயக்குநர் அலுவலகம் அமைந்துள்ள சென்னை டிபிஐ வளாகத்தில் தேர்வு முடிவுகள், ரேங்க் பட்டியலை அரசு தேர்வுகள் இயக்குநர் தண்.வசுந்தராதேவி வெளியிட்டார்.

 

தமிழகத்தில் பிளஸ் 2 தேர்ச்சி விகிதம் 91.4% ஆக உயர்வு

பிளஸ் 2 தேர்வின் முடிவுகள் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 10.31 மணிக்கு வெளியிடப்பட்டது. இந்த ஆண்டு மொத்த தேர்ச்சி விகிதம் 91.4%.

கடந்த இரண்டு ஆண்டுகளைக் காட்டிலும் இந்த ஆண்டு மொத்த தேர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளது. கடந்த 2014, 2015 ஆண்டுகளில் பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி விகிதம் 90.6% ஆக இருந்தது. இந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் 91.4% ஆக அதிகரித்துள்ளது.

மாணவிகளே அதிகம்..

வழக்கம்போல் மாணவிகளே மாணவர்களைவிட அதிகளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவிகள் தேர்ச்சி விகிதம்: 94.4%. மாணவர்கள் தேர்ச்சி விகிதம் 87.9%. இந்த ஆண்டு மாணவிகள் தேர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளது.

பாடவாரியாக நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்றவர்கள் எத்தனை பேர்:

இயற்பியல் - 5

வேதியியல் - 1,703

உயிரியல் - 775

தாவரவியல் - 20

விலங்கியல் - 10

கணிதம் - 3361

கணினி அறிவியல் - 303

வணிகவியல் - 3084

கணக்குப்பதிவியல் - 4341

பிசினஸ் கணிதம் - 1072

வேதியியல் பாடம் மிகக் கடினமாக இருந்ததாகக் கூறப்பட்ட நிலையில், அப்பாடத்தில் 1,703 பேர் முழு மதிப்பெண் பெற்றுள்ளனர்.

 

சனி, 14 மே, 2016

அஞ்சல் வழியிலேயே படித்து ஐஏஎஸ் தேர்வில் வெற்றி !

கல்லூரி செல்லாமலேயே பட்டப்படிப்பை அஞ்சல் வழியிலேயே படித்து ஐஏஎஸ் தேர்வில் வெற்றிபெற்றுள்ளார் கிராமத்துஇளைஞர் ஒருவர். தஞ்சை மாவட்டம் திருவோணம் அருகேயுள்ள சோழகன் குடிகாடு என்னும் குக்கிராமத்தைச் சேர்ந்த இளம்பகவத் என்ற34 வயது இளைஞர்தான் அந்த பெருமைக்குச் சொந்தக்காரர்.
சோழகன் குடிகாடு அரசு தொடக்கப் பள்ளியில் ஆரம்பக்கல்வி பயின்ற பின் பட்டுக்கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 தமிழ்வழியில் படித் தார். 1998-ம்ஆண்டு பிளஸ் 2 படித்துக்கொண்டிருந்த போது கிராம நிர்வாக அதிகாரியாக பணியாற்றி வந்த அவரது தந்தைகந்தசாமி திடீரென மரணம் அடைந்தார். குடும்பம் நிலைகுலைந்து போனது. இளம்பகவத்தால் கல்லூரிக்குச் சென்று படிக்க இயலவில்லை. தந்தை அரசு ஊழியர் என்பதால் அவரது மறைவுக்குப் பின் வாரிசு வேலைக்காக முயற்சி செய்தார். 1998 முதல் 2005-ம் ஆண்டு வரை இதற்காக அரசு அலுவலகங்களுக்கு நடை
யாய் நடந்ததுதான் மிச்சம். வேலை கிடைக்கவில்லை. இதற்கிடையே, 2001-ம் ஆண்டு சென்னை பல்கலைக்கழக தொலைதூரக்கல்வி நிறுவனத்தில் அஞ்சல் வழியில் பி.ஏ (வரலாறு) படித்து பட்டம் பெற்றார்.
வாரிசு வேலைக்காக நடத்திய நீண்ட போராட்டத்தில் வெறுத்துப்போன இளம்பகவத் இனிமேல் இந்த வாரிசு வேலைக்கு முயற்சி செய்ய மாட்டேன். போட்டித்தேர்வெழுதி அரசு வேலையில் சேருவேன் என்று தனக்குள் ஒரு சபதம் எடுத்துக்கொண்டார். அதற்கான முயற்சியிலும் இறங்கினார். கடந்த 2007-ல் டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வெழுதி வெற்றிபெற்று காவல்துறை அமைச்சுப்பணியில் இளநிலை உதவியாளராக பணி யில் சேர்ந்தார். அடுத்த 6 மாதத்தில் குரூப்-2 தேர்வெழுதி சென்னை தலைமைச் செயலகத்தில் உதவியாளர் ஆனார். மீண்டும் குரூப்-2 தேர்வெழுதி உள்ளாட்சி நிதி உதவி தணிக்கை ஆய்வாளராக பணியில் சேர்ந்தார். இன்னும் மேல்நிலைக்குச் செல்ல வேண்டும் என்று முயற்சி செய்துகொண்டே இருந்தார்.
2005-ல் சிவில் சர்வீஸ் தேர்வெழுதி நேர்முகத்தேர்வு வரைசென்றார். அடுத்த ஆண்டும் இதேநிலைதான். இதற்கிடையே, 2010-ல் குரூப்-2 தேர்வில் வெற்றிபெற்ற அவருக்கு இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர் பணி கிடைத்தது. 2011-ல் டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வில் தேர்ச்சி பெற்று ஊரக வளர்ச்சி உதவி இயக்குநர் ஆனார். ஒருபுறம் ஐஏஎஸ் தேர்வையும் எழுதி வந்தார். நேர்முகத்தேர்வு வரை சென்று விடுவார். நுனியில் வெற்றி வாய்ப்பை இழந்துவிடுவார். ஆனாலும் மனம் தளராமல் மீண்டும் மீண்டும் முயற்சி செய்தார். முயற்சிகள் தோற்கவில்லை. 2014-ல் சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றிபெற்று
ஐஆர்எஸ் (இந்திய வருவாய் பணி) பணி கிடைத்தது. இதற்கிடையே, குரூப் -1 தேர்வில் தேர்ச்சி பெற்று போலீஸ் டிஎஸ்பி பணியும் கிடைத்தது. 6 மாதங்கள் டிஎஸ்பி பயிற்சியில் இருந்த அவர் அதன்பிறகு அரியானா மாநிலத்தில் உள்ள நேஷனல் அகாடமி ஆப் கஸ்டம்ஸ், எக்சைஸ், நார்காட்டிக்ஸ் மையத் தில் ஐஆர்எஸ் அதிகாரியாக பயிற்சியில் சேர்ந்தார். அரசு பணியில் மிக உயர்ந்த பணியாக
கருதப்படும் ஐஏஎஸ் அதிகாரி ஆக வேண்டும் என்ற ஆசையால் கடந்த ஆண்டு மீண்டும் சிவில் சர்வீஸ் தேர்வெழுதினார். தேர்வு முடிவுகள் நேற்று முன்தினம் வெளியான நிலையில், தேர்வில் வெற்றிபெற்றார். அகில இந்திய அளவில் அவருக்கு117-வது ரேங்க் கிடைத்துள்ளது. அவர் சிவில் சர்வீஸ் தேர்வில் தமிழில் வெற்றிபெற்றிருக்கிறார் என்பதுகுறிப்பிடத்தக்கது.
தனது ஐஏஎஸ் தேர்வு அனு பவம் குறித்து இளம்பகவத் கூறும் போது, "வாரிசு வேலைக்காக அரசு அலுவலகங்களில் நடை யாய் நடந்து சந்தித்த கசப்பான அனுபவங்கள்தான் அரசுத்துறை யில் உயர் அதிகாரியாக வேண்டும் என்ற லட்சியத்தைஎன்னுள் ஏற்படுத்தின. ஏழை சொல் அம்பலம் ஏறவேண்டுமெனில் ஏழையே அம்பலம் ஏற வேண்டும். ஏறிய பின்னரும் அவன் ஏழை படும்பாட்டினை உரத்துச் சொல்ல வேண்டும். பட்டிக்காட் டானாக உள்ளே செல்பவன் பட்டின மயக்கங்களில்
விழாமல் கிராமத்தானின் துயரங்களைப் பேச வேண்டும்" என்கிறார் உணர்ச்சிப் பெருக்குடன்.

"நான் பிளஸ்-2 வரை தமிழ்வழியில்தான் படித்தேன். என்னால் ஐஏஎஸ் தேர்வை ஆங்கிலத்தில் எழுதி வெற்றிபெற முடியும். என் மேல் எனக்கு நம்பிக்கை இருந்தது. எனினும் தமிழ்வழியில் தேர்வெழுதினால் அதை விட இன்னும் சிறப்பாக எழுத முடியும் என்று கருதினேன். நமது சிந்தனை தாய்மொழி யில்தான் இருக்கும். எனவே, தமிழ்வழியில் தேர்வெழுத முடிவெடுத்தேன். நான் இதுவரை 5 முறை நேர்முகத்தேர்வுக்கு சென்றி ருக்கிறேன். ஆனாலும், நேர்முகத் தேர்வை ஆங்கிலத்தில் தான்
எதிர்கொண்டேன்" என்று தன்னம்பிக்கை மிளிர கூறுகிறார் இளம்பகவத். வாழ்க்கையில் முன்னேறத் துடிக்கும் இன்றையஇளைஞர்களுக்கு உத்வேகமாக திகழ்கிறார் இந்த கிராமத்து கலெக்டர்.

புதன், 11 மே, 2016

‘ஸ்லெட்’ தேர்வுக்கான தேர்வு முடிவுகள் விரைவில் வெளியிடப்படும்-

'ஸ்லெட்' தேர்வுக்கான உத்தேச விடைகள் (கீ ஆன்சர்) இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. சிபிஎஸ்இ மற்றும் சிஎஸ்ஆர்நெட் தேர்வுகளைப் போன்று இல்லாமல் தேர்வு எழுதியவர்கள் மட்டுமே கீ ஆன்சரை பார்க்க முடியும்.
தமிழகத்தில் மாநிலஅளவிலான தகுதித் தேர்வு (ஸ்லெட்) கடந்த பிப்ரவரி மாதம் 21-ம் தேதி சென்னை, மதுரை, கோவை, திருச்சி உட்பட தமிழகம் முழுவதும் பல்வேறு மையங்களில் நடைபெற்றது. 57 ஆயிரம் முதுகலை பட்டதாரிகள் தேர்வு எழுதினர். இந்நிலையில், தேர்வுக்கான உத்தேச விடைகள் இணையதளத் தில்(www.setexam2016.in) வெளியிடப்பட்டுள்ளன. சிபிஎஸ்இ மற்றும் சிஎஸ்ஐஆர் அமைப்புகள் நடத்தும் அகில இந்திய அளவிலான நெட் தேர்வைப் போல் அல்லாமல் தேர்வர்கள்மட்டும் உத்தேச விடைகளை பார்க்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. (நெட்தேர்வுக்கான உத்தேச விடைகள் அனைவரும் தெரிந்துகொள்ளும் வகையில் இணையதளத்தில் வெளியிடப்படும்). தேர்வர்கள் தங்கள் பதிவெண், மொபைல் எண், இ-மெயில் ஆகிய விவரங்களை குறிப்பிட்டு கீ ஆன் ஸரை தெரிந்து கொள்ளலாம்.
தேர்வு முடிவுகள் குறித்து கொடைக்கானல் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழக பதிவாளரும், ஸ்லெட் தேர்வுக் குழு செயலாளரு மான பேராசிரியை என்.கலாவிடம் கேட்டபோது, "தற்போது கீ ஆன்ஸர் வெளி யிட்டுள்ளோம். பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) அதிகாரி களுடன் கலந்தாலோசனை செய்து விரைவில் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும்"

செவ்வாய், 10 மே, 2016

திமுக ஆட்சிக்கு வந்தால் மருத்துவம், பொறியியல் நுழைவுத் தேர்வு ரத்து: கருணாநிதி உறுதி

திமுக ஆட்சிக்கு வந்தால் மருத்துவம், பொறியியல் நுழைவுத் தேர்வு ரத்து: கருணாநிதி உறுதி

திமுக ஆட்சிக்கு வந்தால் மருத்துவம், பொறியியல் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு ரத்து செய்யப்படும் என்றுஅக்கட்சியின் தலைவர் கருணாநிதி கூறியுள்ளார். இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''மருத்துவக் கல்லூரிகள் மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகள்
ஆகியவற்றில் மாணவர்கள் சேருவதற்கு நுழைவுத் தேர்வினை அனைத்து மாநிலங்களிலும் 2016ஆம் ஆண்டு முதல்நடத்தியே ஆக வேண்டுமென்று இந்திய உச்ச நீதிமன்றம் நேற்று (9-5-2016) உத்தரவிட்டிருக்கிறது. வசதிகள் குறைவான கிராமப்புற மாணவர்களுக்கும், நவீன வசதிகள் மிகுந்த நகர்ப்புற மாணவர்களுக்குமிடையே நிலவி வரும் வேறுபாடுகளை நீக்கவும், அனைவர்க்கும் தொழிற்கல்வியில் சமமான வாய்ப்புகளை உருவாக்கி வழங்கிடவும் சமூக நீதியை நிலைநாட்டவும், திமுக 2006-ம் ஆண்டு ஐந்தாவது முறையாக ஆட்சிக்கு வந்தவுடன் மருத்துவக்கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள், பல் மருத்துவக் கல்லூரிகள் உள்ளிட்ட தொழிற்கல்லூரிகளில் அனுமதி
பெறுவதற்குக் கட்டாயமாக அதுவரை திணிக்கப் பட்டிருந்த நுழைவுத் தேர்வு முறையை ரத்து செய்து சட்டம் இயற்றியது. அந்தச் சட்டம் இந்தியக் குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற்று 7-3-2007 முதல் நடைமுறைக்கு வந்தது. அதன் காரணமாக தமிழகத்தில் கடந்த ஒன்பதாண்டுகளாக நுழைவுத் தேர்வு எதுவும் இல்லாமலேயே தொழிற்கல்லூரிகளில் மாணவர்கள் பிளஸ் 2 தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் சேர்ந்து படிக்க முடிந்தது. இந்தச் சட்டம் நடைமுறைக்கு வருவதற்கு முன்பே நுழைவுத் தேர்வை ரத்து செய்து திமுகவால் அவசரச் சட்டம் பிறப் பிக்கப்பட்டது.
அந்த அவசரச் சட்டத்தை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. சென்னை உயர் நீதிமன்றத்தில் அந்த வழக்கு நிலுவையில் இருந்து வந்த போதே, நுழைவுத் தேர்வு ரத்து தொடர்பான சட்டம் அமலுக்கு வந்து விட்டது. வழக்கினை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதிகள் மிஸ்ரா மற்றும் சம்பத்குமார் ஆகியோர் 27-4-2007 அன்று திமுக அரசு கொண்டு வந்த சட்டம் சரியானதே என்று ஏற்றுக் கொண்டு தீர்ப்பளித்தனர். உயர் நீதிமன்றம் வழங்கிய அந்தத் தீர்ப்பின் 17வது பத்தியில், திமுக அரசு கொண்டு வந்த சட்டத்திற்கு ஆதரவான நிலைப்பாட்டினை மத்திய அரசு மேற்கொண்டதைப் பற்றி குறிப்பிடும்போது, "மத்திய அரசின் கோப்பு பார்வைக்கு வைக்கப்பட்டது. அதில் பல்வேறு துறைகள் பதிவு செய்த குறிப்புகளின் அடிப்படையில் குடியரசுத் தலைவர், தமிழக அரசின் சட்டத்திற்கு ஒப்புதலை வழங்கியிருக்கிறார். இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 254 (2) பிரிவின்படி மாநில
அரசு நிறைவேற்றியிருக்கும் சட்டத்தை, மத்திய அரசு நிறைவேற்றும் சட்டமோ அல்லது ஒழுங்கு முறை
ஆணைகளோ கட்டுப்படுத்தாது . மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள், தமிழக அரசின் சட்டத்தைக் கவனமாகப் பரிசீலனை செய்ததின் காரணமாக, அந்தச் சட்டம் வலிமை பெற்று, அரசமைப்புச் சட்ட ரீதியாக செல்லுபடியாகும் தன்மையைப் பெற்றிருக்கிறது" என்று மத்திய அரசின் கோப்பில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளதாக உயர்நீதி மன்றத்தின் தீர்ப்பிலேயே குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே மத்திய அரசு அமைச்சகங்களின் குறிப்புரைகளின் அடிப்படையில், குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப்
பெற்றதற்குப் பிறகு, தமிழக அரசின் சட்டத்தை மத்திய அரசின் வேறு எந்தச் சட்டமும் ஒழுங்கு முறை ஆணைகளும் கட்டுப்படுத்திட இயலாது. தமிழக அரசின் சட்டம் நடைமுறையில் இருந்தபோதே, 21-12-2010 அன்று இந்திய மருத்துவக் கவுன்சில் அறிவிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில் தேசிய நுழைவுத் தேர்வில் பெறும் மதிப்பெண்களின் அடிப்படையிலேயே மருத்துவக்கல்லூரிகளில் சேருவதற்கு அனுமதிக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த அறிவிக்கைக்கு எதிராக
சென்னை உயர் நீதிமன்றத்தில் திமுக அரசு வழக்கு தொடுத்தது. அந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம், கழக அரசின் எதிர்வாதங்கiளை ஏற்றுக் கொண்டு, தமிழக அரசு நுழைவுத் தேர்வினை ரத்து செய்து கொண்டு வந்த சட்டத்தை வேறு எந்த அறிவிக்கைகளும் கட்டுப்படுத்த முடியாது என்று தீர்ப்பளித்தது. மேலும் திமுக கோரியபடி இந்திய மருத்துவக் கவுன்சிலின் அறிக்கைக்கு தடை உத்தரவையும் உயர் நீதிமன்றம் வழங்கியது.

தற்போது உச்ச நீதிமன்றத்தில் நுழைவுத் தேர்வு பற்றிய வழக்கு நடைபெற்ற நேரத்தில், அதிமுக அரசின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், தமிழக அரசு 2007ஆம் ஆண்டு கொண்டு வந்த சட்டம், திமுக அரசின் காலத்தில் கொண்டு வரப்பட்டது என்ற காரணத்தாலோ, என்னவோ, திமுக கொண்டு வந்த சட்டத்தில் மேலே விவரிக்கப்பட்ட சட்ட ரீதியான நியாயங்களை எல்லாம் உச்ச நீதி மன்றத்தில் சரியாக எடுத்துச் சொல்லி வாதாடவில்லை. நுழைவுத் தேர்வை ரத்து செய்து தனிச் சட்டம் இயற்றப்பட்டு, பிளஸ் 2 தேர்வில் மாணவ, மாணவியர் பெறும் மதிப்பெண்களின் அடிப்படையில் மருத்துவக் கல்லூரிகளிலும், பல் மருத்துவக் கல்லூரிகளிலும் அனுமதிப்பது கடந்த ஒன்பது ஆண்டு காலமாகவே நடைபெற்று வருகின்ற காரணத்தினால் தமிழகம் ஒரு பிரத்தியேகமான நிலையில் இருக்கிறது என்பதையும், பல மாநிலங்களில் அந்த மாநிலங்களிலேயே நடைபெறும் நுழைவுத் தேர்வுகளின் அடிப்படையில் மாணவர் அனுமதி நடைபெறுவதால் அத்தகைய மாநிலங்களோடு தமிழகத்தை ஒப்பிட்டுப் பார்க்கக் கூடாது. வேறு பல மாநிலங்கள் உச்ச நீதிமன்றத்தில் தனித்தனியே தங்களுடைய நிலைப்பாடுகளை விளக்கி கோரிக்கை
மனுக்களைத் தாக்கல் செய்திருக்கும்போது தமிழகம் மட்டும், தமிழகத்தின் 2006ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட சட்டத்தைச் சுட்டிக்காட்டி, தன்னிலை விளக்க மனு எதையும் எழுத்துப் பூர்வமாக தாக்கல் செய்யாது தவிர்த்திருப்பது ஜெயலலிதா அரசு தமிழக மாணவர்களின் எதிர்காலத்தைப் பற்றி எத்தகைய அணுகுமுறையைக் கையாண்டிருக்கிறது என்பதை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்திருக்கிறது. ஜெயலலிதா அரசு உச்ச நீதிமன்றத்தில் கையாண்டிருக்கும் இத்தகைய அலட்சிய மனப்பான்மையை தமிழக மாணவர்களும்,அவர்களின் பெற்றோரும் நிச்சயமாக மன்னிக்க மாட்டார்கள்.

மேலும் தமிழக மாணவர்களில் 80 சதவிகிதம் பேர் சமச்சீர் கல்வியை அடிப்படையாகக் கொண்டவர்கள். ஆனால் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கும் தேசிய நுழைவுத் தேர்வு சிபிஎஸ்இ பாடத் திட்டத்தின்படி ஆங்கிலத்திலும், இந்தியிலும் மட்டுமே நடத்தப்படப் போகும் தேர்வாகும். எனவே,
மாநிலங்களுக்கிடையே தேசிய நுழைவுத் தேர்வின் காரணமாக பெரும் பாகுபாடு ஏற்பட்டிருக்கிறது. அரசமைப்புச் சட்டத்தின்படி தேசிய நுழைவுத் தேர்வு செல்லுபடியாகுமா என்பதைப் பற்றிய முடிவை உச்ச நீதி மன்றம் இன்னும் எடுக்கவில்லை. திமுக பொதுத் தேர்தல் முடிந்து, ஆட்சிப் பொறுப்பினை ஏற்குமானால், 7-3-2007 முதல் தமிழகத்தில் நுழைவுத் தேர்வினை ரத்து செய்து நடைமுறையில் இருந்து வரும் சட்டத்தின் அடிப்படையில், 21-12-2010 அன்று இந்திய மருத்துவக் கவுன்சில் வெளியிட்ட அறிக்கையினைத் திரும்பப் பெறவோ அல்லது திருத்தி அமைக்கவோ தேவையான
ஏற்பாடுகளை போர்க்கால அவசரத்தில் மேற்கொள்ளப்படும். தமிழக மாணவர்கள் தொடர்ந்து நுழைவுத் தேர்வு இல்லாமலே, மருத்துவக் கல்லூரிகளிலும், பொறியியல் கல்லூரிகளிலும், பல் மருத்துவக் கல்லூரிகளிலும் தங்களுடைய உயர் கல்வியைத் தொடருவதற்கு அனைத்து முயற்சிகளையும் திமுக மேற்கொள்ளும்'' என்று கருணாநிதி கூறியுள்ளார்.

“only NEET (National Eligibility cum Entrance Test) would enable students to get admission to MBBS or BDS studies”, the Supreme Court

Ruling that "only NEET (National Eligibility cum Entrance Test) would enable students to get admission to MBBS or BDS studies", the Supreme Court Monday turned down a batch of appeals by various states to conduct their ownmedical admission tests for the current academic session. A bench led by Justice Anil R Dave, however, allowed all candidates to appear for the second phase of NEET –scheduled for July 24, in view of grievances that the students did not have enough time to prepare for the exam.
In accordance with the court order, CBSE's AIPMT on May 1 was considered as the first phase of NEET wherein over six lakh students had appeared. "To allay any such apprehension, we direct that all such eligible candidates who could not appear in NEET-I and those who had appeared but have apprehension that they had not prepared well, be permitted to appear in NEET-II, subject to seeking an option from the said candidates to give up their candidature for NEET-I," said the bench, also comprising Justices Shiva Kirti Singh and Adarsh K Goel. The apex court permitted the central government, CBSE and Medical Council of India (MCI) to reschedule the date of holding NEET-II if they deem so necessary. The conduct of NEET will be monitored by a court-appointed panel, headed by former Chief Justice of India R M Lodha. It declined to modify its April 28 order whereby the bench had fixed the timeline for conducting the common all-India medical entrance test for admissions to MBBS and BDS courses while clarifying that its directive will supersede all other orders relating to medical admissions. With this clarification, the court had made it unequivocal that all other admission tests, already held or scheduled forlater, for admission to government colleges, deemed universities, private medical colleges, minority and linguistic minority colleges, stand scrapped.

Later, state governments, including Maharashtra, Tamil Nadu, Karnataka, Jammu and Kashmir, sought a modification of this order to enable them conduct their separate exam for this year as one-time measure. But the bench on Monday referred to a Constitution Bench judgment last week, in which the Supreme Court hadupheld the validity of a common admission test (CET) to be conducted by state governments as also the NEET for admissions to medical colleges. The five-judge Bench had said when the central government issues a notification for NEET and the state governments also want to conduct their own CETs, Article 254 of the Constitution would come into play. Under Article 254, higher education has been placed in a concurrent list with both the state and central governments having powers to make laws. But when the central government makes a law or issues a notification such as NEET, it would override the state governments' laws. Quoting from the larger bench judgment, the court on Monday said that while the state governments had the legislative competence to make laws for regulating standards of medical education under the Concurrent List but after the central government makes a law, the Centre's power under the Union List will prevail upon the states'
statutes.
"Prima facie, we do not find any infirmity in the NEET regulation on the ground that it affects the rights of the States or the private institutions. Special provisions for reservation of any category are not subject matter of the NEET nor rights of minority are in any manner affected by NEET. NEET only provides for conducting entrance test for eligibility for admission to the MBBS/BDS course," added the bench.

Supreme Court Pronounces NEET judgement

Putting an end to the long waiting game for lakhs of the medical students across the country, SupremeCourt has finally pronounced the judgment, defining the fate of National Eligibility-cum-Entrance Test this year.
Refusing the states in their plea to hold their respective exams, the court has clarified that ONLY NEET would enable students to get admissionsto MBBS or BDS studies The decision comes after a week-long discussions and arguments in the court, with various statesgiving their arguments opposing the exam to be the one and only exam to entrances in various medical
colleges of the country. While the fate of private medical colleges had been made clear in the previous order (No separate entrance for private medical colleges), the Supreme Court today made it clear that even the states will not be allowed to hold their separate exams. All entrances will go through the NEET
Slamming the arguments of the states on the jurisdiction over medical entrance examination, the court stated Prima Facie, we do not find any infirmity in the NEET regulation on the ground that it affects the rights of the states or private institutions. Special provisions for the reservation of any category are not subject matter of the NEET nor the rights of minority are in any manner affected by NEET. NEET only provides for conducting entrance test for eligibility for
admission to the MBBS/BDS course. We thus, do not find any merit in the applications seeking modification of order dated 28th April, 2016 While rejecting the plea of the states to hold their own exams , the hon'ble Supreme Court allayed the fears of those students,
who had lost precious time and energy and as a result of the ongoing confusion and hence not performed upto their mark in the first phase of NEET-I The only other contention relates to the perceived hardship to the students who have either applied for NEET-I but couldnot appear or who appeared but could not prepare fully thinking that the preparation was to be for only 15% All Indiaseats and there will be further opportunity to appear in other examinations. To Allay such apprehensions the Supreme Court has directed that All Such eligible Candidates who could not appear for NEET-I and those who had appeared but have apprehension that they had not prepared well, be permitted to appear in NEET-II, subject to seeking an option from the saidcandidates to give up their candidature for NEET- I. It would be open to the respondents. ( i.e UOI, MCI, CBSE) to reschedule the date of holding NEET-II, if necessary. To this extent the earlier ordered and modified.
The hon'ble court extended the scope of functioning of the earlier appointed ( for the MCI) directing them to oversee the NEET examination as well OVERSIGHT COMMITEE The court stated To ensure the total credibility of the examination to be held by the CBSE, the Oversight Committee appointed by this court vide the (aforesaid) judgment dated 2nd May, 2016 shall also oversee the NEET-II examination to be conducted by the CBSE.

புதன், 4 மே, 2016

ஒத்தக் கடையில் உள்ள ஊராட்சிஒன்றியத் தொடக்கப் பள்ளியில் அட்மிஷன் அதிசயம்!

மதுரை மாவட்டம் .ஒத்தக் கடையில் உள்ள ஊராட்சிஒன்றியத் தொடக்கப் பள்ளியில் அந்த அதிசயம்நடந்திருக்கிறது.மாவட்டத்தின் முதல் பெரியதொடக்கப்பள்ளியான இந்தப் பள்ளியில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கையில் ஏக தள்ளுமுள்ளு ஆகிப் போனதால், வரிசையில்நிற்க வைத்து, டோக்கன் கொடுத்து ஒலி பெருக்கியில் பெயர்களை அறிவித்து அட்மிஷன் நடத்தி இருக்கிறார்கள். தனியாரிலிருந்து மாறிய மாணவர்கள் அப்படி என்ன மோகம் இந்தப் பள்ளியின் மீது?
"2010-11-ல் நான் இங்கு வந்தபோது பள்ளியின் அடிப்படைக் கட்டமைப்பு மிகமோசமாக இருந்தது. அவற்றை எல்லாம் ஒவ்வொன்றாகச் சரி செய்தோம். மாணவர்கள் வருகை தானாகவே அதிகரித்தது. எங்கள் பள்ளியைச் சுற்றி 8 தனியார் பள்ளிகள் உள்ளன. அந்தப் பள்ளிகளிலிருந்து இந்த முறை 78 மாணவர்கள் எங்கள் பள்ளிக்கு மாறிஇருக்கிறார்கள்" என்கிறார் பள்ளியின் தலைமை ஆசிரியர் தென்னவன்.குழந்தைகளின் சுகாதாரத்தைக் கருத்தில் கொண்டு பள்ளி வளாகத்தில் 8 ஆயிரம் சதுர அடியில் 10 லட்ச ரூபாய் செலவில் ஃபேவர் பிளாக் கற்கள் பதித்திருக்கிறார்கள்.
கழிப்பறைகளைச் சுத்தம் செய்வதற்காக ஆசிரியர்களே பணியாளர்களை நியமித்திருக்கிறார்கள். பொதுமக்களில் நூறு பேரைப் புரவலர்களாகச் சேர்த்து அவர்களிடம் தலைக்கு 1,000 ரூபாய் வசூலித்து ஒரு லட்ச ரூபாயை வங்கியில் டெபாசிட்செய்திருக்கிறார்கள். இதிலிருந்து வரும் வட்டியைக் கொண்டு மின் கட்டணம், துப்புரவுப் பணியாளர் சம்பளம்உள்ளிட்டவற்றைச் சமாளித்துக் கொள்கிறார்கள். கணினி ஜாலம் தனியார் பள்ளிகள் பிரம்மாண்டமாக முன்னிறுத்தும் ஸ்மார்ட் கணினி அறையையும் பொதுமக்களின் பங்களிப்போடுஎளிமையாக இவர்கள் உருவாக்கியிருக்கிறார்கள். இங்குள்ள ஆறு கணிப்பொறிகளில் மாணவர்கள் தொழில்நுட்ப ஜாலங்கள்காட்டுகிறார்கள்.

இதற்கு முன்பு மாணவர்கள் தரையில் அமர்ந்து படித்துக்கொண்டிருந்தார்கள். ஆனால் இப்போது, நமக்குநாமே திட்டம் மற்றும் மாவட்ட ஆட்சியரின் நிதியைக் கொண்டு 30 லட்ச ரூபாய் செலவில் அனைவருக்கும் நாற்காலிகள்வாங்கிப் போட்டிருக்கிறார்கள். பள்ளி ஆண்டு விழாவை வழக்கமான சம்பிரதாயமாகக் கொண்டாடாமல் திறமைத்திருவிழாவாகக் கொண்டாடுகிறார்கள். கதையின் அருமை இந்த விழாவில் மாணவர்களுக்குள் பொதிந்து கிடக்கும் அத்தனை திறமைகளையும் வெளிக்கொணரக் களம் அமைத்துத் தருகிறார்கள். அவர்களின் கற்பனைத் திறனை வளர்க்க மார்ச் 22-ம் தேதி கதை சொல்லல்தினமாகக் கொண்டாடினார்கள். அன்றுதமிழகத்தின் முக்கியக் கதை சொல்லிகளை வரவழைத்துக் கதை சொல்லும் நிகழ்ச்சி அருமையாக அரங்கேறியது. இப்போதுபுரிகிறதா அட்மிஷனுக்கு ஏன் அடிதடி என்று?

"சக ஆசிரியர்களின் ஒத்துழைப்போடுதான் இதை என்னால் சாதிக்கமுடிந்தது. இந்த ஆண்டு மாணவர் சேர்க்கையில் 158 பேரைச் சேர்த்து மாநிலத்திலேயே முதலிடம் பிடித்திருக்கிறது எங்கள்
பள்ளி. இங்கிருந்து மேல் படிப்பிற்காக மற்றப் பள்ளிகளுக்குப் போன பிள்ளைகள் அங்கேயும் சாதிக்கிறார்கள். எங்கள் பள்ளிக்குக் கூக்கூ அமைப்பு 5 லட்சம் செலவில் நூலகம் அமைத்துத் தர சம்மதித்திருக்கிறது. அதேபோல் டி.வி.எஸ்.நிறுவனத்தின் ஆரோக்கிய டிரஸ்ட் 9 லட்சத்தில் நவீனக் கழிப்பறை கட்டித் தருவதாகச் சொல்லி இருக்கிறது. படிப்படியாகஇன்னும் கட்டமைப்பை மேம்படுத்தி இதை மாநிலத்திலேயே முதல் தரமான அரசுப் பள்ளியாக மாற்ற வேண்டும் என்பதுதான்
எங்களுடைய ஒரே லட்சியம்" என்கிறார் தென்னவன்.

மருத்துவப் படிப்புக்கான நுழைவுத் தேர்வு-செய்ய வேண்டியவை என்ன?


மருத்துவப் படிப்புக்கான நுழைவுத் தேர்வு நிச்சயம் நடத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பது நல்ல, சிறந்த ஆரம்பம். இந்த சந்தர்ப்பத்தை ஆக்கப்பூர்வமாக எப்படிப் பயன்படுத்திக்கொள்ளலாம் என்று யோசிக்க வேண்டும்.

இந்த வருடம் உடனடியாகப் படித்து நுழைவுத் தேர்வு எழுத முடியுமா என்பதுதான் மிகப் பெரிய கேள்வி, நியாயமானதும்கூட.

அதேநேரம், நுழைவுத் தேர்வை ஏற்றுக்கொள்ளும் பட்சத்தில் உடனடியாக இந்த ஆண்டு செய்ய வேண்டியவை என்ன?

1 . நமது மாநிலத்தில் உள்ள அனைத்து மருத்துவ இடங்களையும் நமக்கே ஒதுக்க வேண்டும்.

2. நமது மாநிலத்திற்கென்று ஒதுக்கப்பட்ட இடங்களில் 15 சதவீதத்தை தனியார் கல்லூரிகளின் நிர்வாகத்துக்கு வழங்கிவிட வேண்டும்.

3. மீதமுள்ள 85 சதவீதத்தை ஒரே நுழைவுத்தேர்வு மூலம் நிரப்ப வேண்டும்.

4. தமிழக பாடத்திட்டத்தின் அடிப்படையிலேயே நுழைவுத்தேர்வு நடத்தப்படவேண்டும்.

5. இடஒதுக்கீடு, மற்ற ஒதுக்கீடுகள் கடைபிடிக்கப்பட வேண்டும் .

6. கவுன்சலிங் முறையில், ஒற்றை சாளரம் அடிப்படையில் இடம் ஒதுக்கப்படவேண்டும்.

7. தர வரிசையில் ஒதுக்கீடு செய்யும்போது அரசு மற்றும் தனியார் கல்லூரி ஆகிய அனைத்துக் கல்லூரிகளுக்கும் ஒரே தரவரிசையை வெளியிட வேண்டும். அதன்படியே மாணவர்கள் சேர விரும்புவார்கள்.

8. தனியார் கல்லூரி கட்டணம் கட்டுப்படியானவர்கள், கட்டணம் செலுத்த விரும்புவர்கள் அங்கே சேரலாம். வேண்டாம் என்பவர்கள் அரசுக் கல்லூரியைத் தேர்ந்தெடுக்கலாம்.

9. அரசுக் கல்லூரி, தனியார் கல்லூரி, தனியார் பல்கலைக்கழகம் உள்ளிட்ட அனைத்திலும் தற்போதுள்ள இட எண்ணிக்கையையே பராமரிக்கலாம்.

10. இந்த முறைகள் கடைப்பிடிக்கப்பட்டால், வெளிப்படைத் தன்மை நிலை நாட்டப்படும். இந்த அடிப்படைகளில் நுழைவுத்தேர்வை ஏற்கலாம்.

அடுத்து வரும் ஆண்டுகளில் செய்ய வேண்டியவை:

1. அகில இந்திய அளவில் நுழைவுத் தேர்வை நடத்த ஒப்புக்கொள்ள வேண்டும்.

2. மிக முக்கியமாக தேர்வைத் தமிழில் எழுத அனுமதிக்க வேண்டும்.

3. அனைத்து வட்டங்களிலும் நுழைவுத்தேர்வுக்கு பயிற்சி மையங்கள் ஏற்படுத்த வேண்டும்.

4. ஒவ்வொரு மாநிலத்தில் உள்ள அனைத்து இடங்களுக்கும் அவ்வப்போது ஏற்படும் எண்ணிக்கை மாற்றத்துக்கு ஏற்ப, அந்த மாநில மாணவர்களுக்கு ஒதுக்கப்படவேண்டும். இம்முறையில் நமது மாநிலத்தின் உரிமை பாதுகாக்கப்படும்.

5. இப்படி செய்தால் சமூக நீதி பாதுகாக்கப்படுவது உறுதியாகும்

நுழைவுத் தேர்வினால் ஏற்படும் நன்மைகள் என்ன?.

1. வெளிப்படைத் தன்மை மாணவர்கள் மனதில் நம்பிக்கையை ஏற்படுத்தும்

2. இப்படிச் செய்தால் தேசிய அளவில் நாம் இழந்த பெருமையை மீட்கலாம்.

3. இந்திய அளவில் தமிழக மாணவர்கள் சளைத்தவர்கள் இல்லை என்று நிச்சயமாகக் கூற முடியும்

4. தமிழக மாணவர்களைக் குறைத்து மதிப்பிடத் தேவையில்லை.

5. பள்ளிகளில் மதிப்பெண்கள் பெறுவதற்காக மாணவர்கள் காலம்காலமாக சிரமப்படுகிறார்கள். நுழைவுத் தேர்வால் அது தவிர்க்கப்படும்.

6. சரி பாதி மாணவர்கள் குறைந்தது ஆறிலிருந்து பத்து நுழைவுத் தேர்வுகளை எழுதுகிறார்கள். அந்த சிரமம் நிச்சயமாக தவிர்க்கப்படும்.

7. அவற்றுக்காகப் பெற்றோர்கள் படும் அவஸ்தையில் இருந்து விடுதலை கிடைக்கும்.

8. சில கல்லூரிகள் பிரபலமானது எப்படி? நுழைவுத் தேர்வை வைத்தே இந்தக் கல்லூரிகள் இன்றும் பிரபலமடைகின்றன. அதுவும் தவிர்க்கப்படும்.

9. அடுத்து வரும் ஐந்து ஆண்டுகளில் நுழைவுத் தேர்வு சிறப்பாக செயல்பட ஆரம்பிக்கும்.

10. நுழைவுத் தேர்வால் மாணவர்கள் மத்தியில் நிச்சயத்தன்மையும் பாதுகாப்பு உணர்வும் ஏற்படும்.



 

செவ்வாய், 3 மே, 2016

TNSET 2016 OFICIAL ANSWER KEY FOR TAMIL SUBJECT

FLASH NEWS :TNSET 2016 KEY ANSWER AND QUESTION RELEASED

FLASH NEWS :TNSET 2016 KEY ANSWER AND QUESTION RELEASED
செட் தேர்வின் விடைக்குறிப்பும் வினாத்தாளும் வெளியிடப்பட்டுள்ளது.
தமிழக 'செட்' தேர்வு SET 2016 Date of Examination : 21.02.2016

தமிழக அரசின் உதவிப் பேராசிரியர் பணிக்கான, செட் 2016 தேர்வு நடந்து முடிந்து ஒரு மாதம் ஆகிவிட்டது. இன்னும் வினாக்களுக்குரிய விடைக்குறிப்புகள்கூட வெளியிடப்படவில்லை.

கல்லுாரி மற்றும் பல்கலைகளில் உதவிப் பேராசிரியர் பணியில் சேர, மத்திய அரசின்,
'நெட்' அல்லது மாநில அரசின், 'செட்' தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.
'செட்' தேர்வு, மாநில அரசால் நடத்தப்படுகிறது.செட் தேர்வின் விடைக்குறிப்பும் வினாத்தாளும் வெளியிடப்பட்டுள்ளது
Plead see the web ADDRESS
www.motherteresawomenuniv.ac.in/redirect_exampro.php

மாநில அளவிலான நுழைவுத் தேர்வை நடத்துவதற்கு அனுமதிக்க வேண்டும்' என,மனு தாக்கல்

'ஏற்கனவே திட்டமிட்டபடி, மருத்துவக் கல்விக்கான நுழைவுத் தேர்வைமாநில அளவில் நடத்திக் கொள்ளஅனுமதிக்க வேண்டும்' என்று,பல்வேறு மாநிலங்கள் தாக்கல் செய்த மனுக்களை, சுப்ரீம் கோர்ட் இன்று விசாரிக்கிறது.
நாடு முழுவதும் உள்ள அனைத்து மருத்துவக்கல்லுாரிகளுக்கும், தேசிய அளவிலான பொது
நுழைவுத் தேர்வு நடத்தப்பட வேண்டும் என்றும்,நுழைவுத் தேர்வை இந்த ஆண்டே நடத்த வேண்டும்
என்றும், சுப்ரீம் கோர்ட், சமீபத்தில் உத்தரவிட்டது.அதன்படி, 'மே, 1ம் தேதி மற்றும்
ஜூலை, 24 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாகதேசிய நுழைவுத் தேர்வு நடத்தப்படும்' என, அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பின்படி, முதல்கட்ட நுழைவுத்தேர்வு சமீபத்தில் நடத்தப்பட்டது. கடந்த மாதம், 28ம் தேதி இந்த வழக்கின் விசாரணையின் போது, 'நுழைவுத் தேர்வை ரத்து செய்ய வேண்டும்' என,தமிழகம் உள்ளிட்ட மாநிலங்கள் வலியுறுத்தின. ஆனால், அதை ஏற்க சுப்ரீம் மறுத்து விட்டது. இந்நிலையில்,'ஏற்கனவே திட்டமிட்டபடி, மாநில அளவிலான நுழைவுத் தேர்வை நடத்துவதற்கு அனுமதிக்க வேண்டும்' என,ஜம்மு - காஷ்மீர் உள்ளிட்ட மாநிலங்கள், நேற்று மனு தாக்கல் செய்தன. இந்த மனுக்கள் மீது, இன்று விசாரணைநடக்க உள்ளது.
லோக்சபாவில் எதிர்ப்பு:
மருத்துவ நுழைவுத் தேர்வு பிரச்னை, லோக்சபாவிலும் நேற்று எதிரொலித்தது. 'நுழைவுத் தேர்வை
எதிர்க்கவில்லை; அதே நேரத்தில் இவ்வளவு அவசரமாக நடத்தப்பட வேண்டியது ஏன்? அடுத்த ஆண்டு
முதல்பொது நுழைவுத் தேர்வை நடத்தியிருக்கலாம்' என, பல்வேறு கட்சி எம்.பி.,க்கள் பேசினர்.
குழு அமைப்பு:
நுழைவுத் தேர்வு விவகாரத்தில், இந்திய மருத்துவக் கவுன்சிலின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்ய,
நிபுணர் குழுவை சுப்ரீம் கோர்ட் நியமித்துள்ளது. ஓய்வு பெற்ற நீதிபதி ஆர்.எம்.லோதா, பிரபல மருத்துவர்
டாக்டர் ஷிவ் சரீன், முன்னாள் மத்திய கணக்கு தணிக்கை தலைமை அதிகாரி வினோத் ராய் ஆகியோர் இந்தக்குழுவில் இடம் பெற்றுள்ளனர்.

பிளஸ் 2 தேர்வு முடிவு மாணவ, மாணவியர் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர்!

ிளஸ் 2 தேர்வு முடிவு வெளியாகும் நாள் குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்புக்காக,
மாணவ, மாணவியர் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர்.பிளஸ் 2 தேர்வு,மார்ச், 4ல் துவங்கி, ஏப்., 1ல் நிறைவடைந்தது. விடைத்தாள் திருத்தும் பணி முடிந்து, மதிப்பெண் விவரங்கள் கம்ப்யூட்டரில்
பதிவு செய்யப்பட்டு,"சிடி' மூலம், அரசு தேர்வுகள்இயக்ககம் வசம் ஒப்படைக்கப்பட்டது. தேர்வு முடிவை
எதிர்பார்த்து மாணவ, மாணவியர், அவர்களது பெற்றோர் மற்றும் பள்ளி ஆசிரியர்கள், கல்வித்துறை அதிகாரிகள் ஆர்வமாக காத்திருக்கின்றனர்.கடந்தாண்டு, பிளஸ் 2 தேர்வு முடிவு, மே 7ல்
வெளியானது. அதேபோல், நடப்பு ஆண்டும் மே முதல் வாரத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. அரசுதேர்வுத்துறை இயக்ககத்தில் இருந்து, இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரவில்லை. கல்வித்துறை அதிகாரி ஒருவரிடம் கேட்ட போது, "பிளஸ் 2 தேர்வு முடிவு, மே 9 அல்லது, 10ல் வெளியாகலாம் என்பது உறுதிப்படுத்தப்படாத தகவல். அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கு, காத்திருக்கிறோம்' என்றார்.

திங்கள், 2 மே, 2016

கொளுத்தும் கோடை வெயிலைச் சமாளிக்க எளிய வழிகள்!


அக்னி நட்சத்திர வெயில் ஆரம்பிக்க இருக்கிறது. இந்த ஆண்டில் கோடைக் காலம் தொடங்கியதை அடுத்து தமிழகம், தெலங்கானா, ஆந்திரம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் வெயில் கடும் பாதிப்புகளை ஏற்படுத்தியிருக்கிறது. வெயிலின் தாக்கத்தால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. தமிழகத்திலும் இம்மாதிரி இறந்தவர்களின் எண்ணிக்கை தினமும் அதிகரித்துவருகிறது. கோடை வெப்பத்தால் சென்ற ஆண்டில் இறந்தவர்களின் எண்ணிக்கை 2,000-க்கும் அதிகம். இப்போதே முறையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்தால், உயிரிழப்புகளைப் பெருமளவு தடுக்க முடியும்.

வெப்பத் தளர்ச்சி

வெயிலின் ஆதிக்கம் அதிகரிக்கும்போது உடலின் வெப்பம் சிலருக்கு 106 டிகிரி ஃபாரன்ஹீட் அளவுக்கு மேல் தாண்டிவிடும். அப்போது உடல் தளர்ச்சி அடையும். களைப்பு உண்டாகும். நிறைய வியர்க்கும். தண்ணீர்த் தாகம் அதிகமாக இருக்கும். தலைவலி, வாந்தி, தலைச்சுற்றல், மயக்கம் ஆகிய அறிகுறிகள் தோன்றும். அளவுக்கு மீறிய வெப்பத்தின் காரணமாக உடலின் உப்புக்கள் வெளியேறிவிடுவதால், இந்தத் தளர்ச்சி ஏற்படுகிறது. இதற்கு 'வெப்பத் தளர்ச்சி' (Heat Exhaustion) என்று பெயர்.

நீண்ட நேரம் வெயிலில் நிற்பவர்கள், வேலை செய்பவர்கள், சாலையில் நடந்து செல்பவர்கள் திடீரென மயக்கம் அடைவதை அறிவீர்கள். இது 'வெப்ப மயக்க'த்தின் (Heat Syncope) விளைவு. 'சன் ஸ்ட்ரோக்' என்று அழைப்பது இதைத்தான். வெயிலின் உக்கிரத்தினால் தோலிலுள்ள ரத்தக் குழாய்கள் அதீதமாக விரிவடைந்து இடுப்புக்குக் கீழ் ரத்தம் தேங்குவதற்கு வழிசெய்துவிடுகிறது; இதனால், இதயத்துக்கு ரத்தம் வருவது குறைந்துவிடுகிறது. ரத்த அழுத்தம் கீழிறங்குகிறது. மூளைக்குப் போதுமான ரத்தம் கிடைப்பதில்லை. உடனே, தலைச்சுற்றல், மயக்கம் உண்டாகிறது. சிலருக்கு மரணமும் ஏற்படுகிறது.

வெப்ப மயக்கம் ஏற்பட்டவரைக் குளிர்ச்சியான இடத்துக்கு மாற்றி, ஆடைகளைத் தளர்த்தி, காற்று உடல் முழுவதும் படும்படி செய்ய வேண்டும். அவரைச் சுற்றி கூட்டம் சேர்வதைத் தவிர்க்கவும். தண்ணீரில் நனைத்த துணியால் உடலைத் துடைக்கவும். மயக்கம் தெளிந்ததும் குளுக்கோஸ் தண்ணீர், பழச்சாறு அல்லது நீர்மோர் கொடுப்பது அவசியம். இது மட்டும் போதாது. அவருக்கு மருத்துவ உதவி கிடைப்பதையும் உறுதிசெய்ய வேண்டும்.

புற ஊதாக் கதிர்களின் ஆபத்து

இந்தியா போன்ற வெப்ப மண்டல நாடுகளில் கோடை வெயிலில் வெளிப்படுகின்ற புற ஊதாக் கதிர்களால் ஏற்படுகிற உடல் பாதிப்புகள் அதிகம். இக்கதிர்களில் 'ஏ', 'பி' என்று இரு வகை உண்டு. 'ஏ'வகைக் கதிர்கள் இளங்காலையிலும் மாலைப்பொழுதிலும் வெளிப்படும். இவை எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்துவதில்லை. மாறாக, காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை தாக்கும் வெயிலில் 'பி'வகைக் கதிர்கள் வெளிப்படும். இவை 'சன் ஸ்ட்ரோக்' முதல் சருமப் புற்றுநோய் வரை உடலில் பலவித பாதிப்புகளை ஏற்படுத்தலாம். முக்கியமாக, சருமத்துக்குப் போதிய பாதுகாப்பு இல்லாமல் வெயிலில் அதிக நேரம் அலைகிறவர்களுக்குச் சருமம் கறுப்பாகிவிடுவதைக் கவனித்திருப்பீர்கள். இதற்குக் காரணம், சூரியக் கதிர்கள் அதிக வெப்பத்துடன் நேரடியாக சருமத்தைத் தாக்கும்போது, அதிலுள்ள 'பி'வகை புற ஊதாக் கதிர்கள் சருமத்தின் செல்களில் உள்ள டி.என்.ஏ.க்களை அழிக்கின்றன. அந்த அழிவை ஈடுகட்டுவதற்காகச் சருமத்துக்குக் கறுப்பு நிறம் தருகின்ற மெலனின் நிறமிகள் அதிக அளவில் உற்பத்தியாகின்றன. இதன் விளைவால், சருமம் கறுத்துவிடுகிறது.

அக்னி நட்சத்திரம் உச்சத்தில் இருக்கும்போது 42 டிகிரி செல்சியஸுக்கு மேல் வெயில் கொளுத்தும். அப்போது புற ஊதாக் கதிர்களின் உக்கிரத்தைத் தாங்க முடியாமல், சருமமும் அதைச் சார்ந்த ரத்தக் குழாய்களும் விரிந்து சிவந்துவிடும். அந்த வேளையில் 'CXCL5' எனும் புரதம் சருமத்தில் உற்பத்தியாகும். இது அருகிலுள்ள நரம்புகளைத் தூண்டும். இதன் விளைவால் சருமத்தில் எரிச்சல், வலி, வெப்பப் புண்கள் (Sun Burn) ஏற்படும்.

பலருக்கு சூரிய ஒளியே ஒவ்வாமையை உண்டாக்கும். வெயில் பட்டாலே உடலெங்கும் அரிக்கத் தொடங்கிவிடும். சருமம் சிவந்து வட்ட வட்டமாகத் தடிப்புகள் தோன்றும். அவற்றில் நீர் கோத்துக்கொள்ளும். இதைத் தொடர்ந்து சருமம் உரியும். இதற்கு 'சூரியஒளி நச்சு அரிப்பு' (Solar Urticaria) என்று பெயர். இவை தவிர, கோடையில் பொதுவாகத் தாக்கும் நோய்கள் வியர்க்குரு, வேனல் கட்டி, தேமல் தொற்று, அக்கி, அம்மை, வாந்தி, வயிற்றுப்போக்கு, நீர்க்கடுப்பு எனப் பட்டியல் நீளும்.

வெப்பத்தைத் தணிக்க…

கோடையில் தினமும் இரண்டு வேளை குளிக்க வேண்டும். மூன்றிலிருந்து ஐந்து லிட்டர் தண்ணீர் குடிப்பது அவசியம். ஐஸ் தண்ணீரைவிட, மண் பானைத் தண்ணீர் நல்லது. எண்ணெயில் பொரித்த, வறுத்த, கொழுப்பு அதிகமுள்ள உணவுகளைத் தவிர்க்க வேண்டும். சர்க்கரை அதிகமுள்ள இனிப்புப் பலகாரங்கள், கிரீம் மிகுந்த பேக்கரி பண்டங்கள், பர்கர், பீட்ஸா, ஐஸ்கிரீம் போன்றவற்றையும் தவிர்ப்பது நல்லது. அதேபோல், சூடான, காரமான, மசாலா கலந்த, உப்பு நிறைந்த உணவுகளைக் குறைத்துக்கொள்ள வேண்டும்.

இட்லி, இடியாப்பம், தயிர்சாதம், மோர் சாதம், கம்பங்கூழ், அகத்திக் கீரை, முருங்கைக் கீரை, பொன்னாங்கண்ணிக் கீரை, கேரட், பீட்ரூட், பீர்க்கங்காய், வெண்டைக்காய், முள்ளங்கி, பாகற்காய், புடலை, அவரை, முட்டைக்கோஸ், வாழைத்தண்டு, வெங்காயப் பச்சடி, தக்காளிக்கூட்டு முதலியவை சிறந்த கோடை உணவுகள். மாலை வேளைகளில் வெள்ளரி சாலட், தர்பூசணி சூப், தக்காளி சூப் வகைகளைச் சாப்பிடலாம். திராட்சை, சாத்துக்குடி ஆரஞ்சு, எலுமிச்சை, மாதுளை, முலாம் பழம், ஆப்பிள் போன்றவற்றின் பழச்சாறுகளையும் அருந்தலாம். நுங்கு, கிர்ணி, கொய்யா போன்றவையும் உடல் வெப்பத்தைத் தணிக்க உதவும்.

காபி, தேநீர் மற்றும் குளிர்பானங்கள் குடிப்பதைக் குறைத்துக்கொண்டு, இளநீர், நீர்மோர், நன்னாரி சர்பத், பானகம், பதநீர் முதலியவற்றை அதிகமாகக் குடிக்கலாம். இளநீரில் உள்ள பொட்டாசியம், சோடியம், கால்சியம், மெக்னீசியம் முதலிய தாதுக்கள் உடலின் வெப்பநிலையை உள்வாங்கி, சுற்றுச் சூழல் வெப்பநிலைக்கு ஏற்றபடி உடலின் வெப்பத்தைக் குறைக்கின்றன. இதனால், உடலில் நீரிழப் பால் ஏற்படுகின்ற பாதிப்புகள் உடனடியாகக் குறைகின்றன.

வெயிலைச் சமாளிக்க…

கோடைக் காலத்தில் தொடர்ந்து 2 மணி நேரத்துக்கு மேல் வெயிலில் இருப்பதைத் தவிர்க்க வேண்டும். பகல் 11 மணியிலிருந்து மாலை 4 மணி வரை வெளியில் செல்லாமல் இருப்பது நல்லது. பகலில் வெளியில் செல்ல வேண்டியது அவசியம் ஏற்பட்டால், தலைக்குத் தொப்பி போட்டுக்கொள்ள வேண்டும். அல்லது குடை கொண்டு செல்ல வேண்டும். கண்களுக்குச் சூரியக் கண்ணாடி அணிந்துகொள்ளலாம். சருமத்தில் 'சன் ஸ்கிரீன் லோஷ'னைப் பூசிக்கொள்ளலாம். கைவசம் சுத்தமான தண்ணீர் எடுத்துக்கொள்ள வேண்டியது மிகமிக முக்கியம். காற்றோட்டமான கதர், பருத்தி ஆடைகள் கோடைக் காலத்துக்கு ஏற்றவை. இறுக்கமான ஆடைகளைத் தவிர்த்து, தளர்வான ஆடைகளை அணிய வேண்டியது முக்கியம். ஒவ்வொரு வருடமும் அதிகரித்துவரும் வெயில் ஒரு சவால்தான். ஆனால், அதில் இருக்கும் ஆபத்துகளை முழுமையாகப் புரிந்துகொண்டால், அதன் பாதிப்புகளிலிருந்து நம்மைப் பாதுகாத்துக்கொள்ள முடியும். நம் ஆரோக்கியம் நம் கையில்!

கட்டுரையாளர் பொதுநல மருத்துவர்,

தொடர்புக்கு: gganesan95@gmail.com



 

ஞாயிறு, 1 மே, 2016

சிகரம் தொடும் அரசுப் பள்ளி!

                                       

பேருந்துகூட எட்டிப் பார்க்காத ஒரு குக்கிராமத்தில் உள்ள ஈராசிரியர் பள்ளியில் தலைமை ஆசிரியராகப் பொறுப்பேற்கும் ஒருவரது எண்ண ஓட்டம் என்னவாக இருக்கும்? கிராமத்து வாழ்க்கை பழகாதவராக இருந்தால் எவ்வளவு சீக்கிரம் முடியுமோ, அவ்வளவு சீக்கிரம் வேறொரு பள்ளிக்கு மாற்றல் வாங்கிக்கொண்டு செல்லலாம். வேறு வழியில்லாமல் பணிக்காலம் நிறைவடையும்வரை அந்தப் பள்ளியிலேயே பணிபுரியலாம். கடமை உணர்வு இருப்பவராக இருந்தால் மாணவர்களுக்கு நல்லபடியாகப் பாடம் நடத்தி, தேர்ச்சி விகிதத்தை உயர்த்தலாம். ஆனால், இப்படி எந்தவொரு வட்டத்துக்குள்ளும் சிக்கிக்கொள்ளாமல் அந்த அரசுப் பள்ளியோடு சேர்த்து மாணவர்களின் தரத்தையும் உயர்த்துவதையே தன் லட்சியமாகக் கொண்டு, அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார் ஆசிரியர் இந்திரா.

வேலூர் மாவட்டம் கந்திலி ஒன்றியத்தில் இருக்கிறது ராஜாவூர் கிராமம். அங்கிருக்கும் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியின் தலைமை ஆசிரியர்தான் இந்திரா. 2008-ம் ஆண்டு அவர் இந்தப் பள்ளியில் பொறுப்பேற்றபோது பதினேழு மாணவர்கள்தான் படித்துக்கொண்டிருந்தனர். தற்போது அந்த எண்ணிக்கை 39-ஆக அதிகரித்திருக்கிறது. ராஜாவூர் கிராமத்தின் மக்கள்தொகை முந்நூறுக்கும் குறைவு. அந்த விகிதப்படி பார்த்தால் இருபது மாணவர்களுக்கும் குறைவாகத்தான் அந்தப் பள்ளியில் படிக்க முடியும். அதனால் அருகில் இருக்கிற பள்ளியின் மாணவர்களை இங்கே பகிர்ந்தளித்து, எண்ணிக்கையை உயர்த்தியிருக்கிறார்கள். இந்தப் பள்ளியின் முன்னேற்றத்தின் ஒவ்வொரு படிக்கட்டிலும் உதவித் தலைமை ஆசிரியர் மகேந்திரனும் துணை நிற்பதாகப் பெருமையுடன் குறிப்பிடுகிறார் இந்திரா.

ஏழ்மையிலும் கல்வி

தன் வாழ்வும் வளர்ப்பும்தான் அரசுப் பள்ளி மாணவர்கள் மீது ஈடுபாடும் அக்கறையும் ஏற்படக் காரணம் என்று சொல்லும் இந்திரா, ஐந்து பெண்கள், இரண்டு ஆண்கள் கொண்ட குடும்பத்தில் பிறந்தவர். சொந்த ஊர் திருப்பத்தூர். அப்பா மெக்கானிக், அம்மா இல்லத்தரசி. ஏழு குழந்தைகளுக்கும் ஒரு வேளை சாப்பாடு போடுவதற்கே படாதபாடு பட்டிருக்கிறார் இந்திராவின் அப்பா.

"சாப்பாட்டுக்கே கஷ்டப்பட்டாலும் எங்களை எப்படியாவது படிக்கவைக்கணும்னு அப்பா உறுதியா இருந்தார். எங்களுக்கு நோட்டுப் புத்தகம் வாங்கித் தந்து உதவச் சொல்லி ஊர்ல இருக்கற பெரிய மனுஷங்க கிட்டே எங்கப்பா கையேந்தி நின்னது இன்னும் அப்படியே என் கண் முன்னால நிக்குது. அந்தக் காலத்துல பன்னிரெண்டாம் வகுப்புக்கு நாற்பது பைசாதான் ஃபீஸ். அதைக் கட்ட முடியாம, யூனிஃபார்ம் வாங்க முடியாம ஒரு மாசம் கழிச்சிதான் ஸ்கூலுக்குப் போனேன்" - வார்த்தைகளில் உறுதி இருந்தாலும் கண்களுக்குள் கண்ணீர் தளும்பி நிற்கிறது. அடுத்த நொடியே சமாளித்துக்கொண்டு தொடர்கிறார்.

"நான் பன்னிரெண்டாவது முடிச்சதுமே நல்ல வரன் வந்தது. உடனே கல்யாணம் பேசி முடிச்சிட்டாங்க" என்று சொல்லும் இந்திரா, திருமணத்துக்குப் பிறகு படிப்பைத் தொடர்ந்தார். தன் கணவருக்குக் கடற்படையில் வேலை கிடைக்க, அதற்குப் போக வேண்டாம் என்று தடுத்திருக்கிறார். பிறகு தனக்குப் பிடித்த காவல்துறையில் சேரச் சொல்லி, தேர்வெழுத ஊக்கப்படுத்தினார். இந்திரா விரும்பியபடியே அவரது கணவருக்குக் காவல்துறையில் வேலை கிடைத்தது.

"எனக்கும் போலீஸ் டிபார்ட்மெண்ட்ல வேலை பார்க்கணும்னு ஆசை. அதை இவர்கிட்டே சொன்னப்போ, பெண்களுக்கு டீச்சர் வேலைதான் பொருத்தமா இருக்கும், அதனால டீச்சர் டிரெயினிங்ல சேருன்னு சொன்னார். ஆரம்பத்துல வேண்டா வெறுப்பாதான் சேர்ந்தேன். ஆனா பயிற்சி காலத்துலதான் ஆசிரியர் பணி உண்மையிலேயே எவ்வளவு மகத்தானதுன்னு புரிஞ்சது. எனக்குக் கிடைச்ச மிகப் பெரிய பொக்கிஷமாதான் இந்த வேலையை நான் நினைக்கிறேன்" என்று நெகிழ்ந்துபோய் சொல்லும் இந்திரா, பதினோரு மாத மகனை அம்மா வீட்டில் விட்டுவிட்டு ஆசிரியர் பயிற்சியில் சேர்ந்தார்.

உத்வேகம் தந்த அங்கீகாரம்

பயிற்சி முடித்ததும் 1991-ம் ஆண்டு கே.வி. குப்பம் அரசுப் பள்ளியில் ஆசிரியராகப் பணியில் சேர்ந்தார். அந்தப் பள்ளியில் படித்த மாணவர்களைப் பார்த்தபோது இந்திராவுக்குத் தன் இளமைக் காலம் நினைவுக்கு வந்தது. தன்னைப் போலவே வறுமையை வெல்லும் கனவுடன் படிக்கும் மாணவர்களின் தரத்தை ஓரளவுக்காவது உயர்த்த வேண்டும் என்று நினைத்தார். பாடம் சொல்லித்தருவதுடன் மட்டும் நின்றுவிடாமல் ஒவ்வொரு மாணவரிடமும் புதைந்திருக்கும் திறமைகளை வெளிக்கொண்டுவரும் பணியையும் செய்தார். ஒவ்வொரு மாணவரையும் அவர்களது குடும்பச் சூழலோடு சேர்த்தே புரிந்துகொண்டார். இந்திராவின் இந்த அணுகுமுறை அந்த ஊர் மக்களிடம் நல்ல பெயர் வாங்கித் தந்தது. இவரது தாக்கத்தால் அந்த ஊரில் இரண்டு குழந்தைகளுக்கு இவரது பெயரை வைத்திருக்கிறார்கள்!

"ரெண்டு குழந்தைகளுக்கு என் பெயரை வச்சதைக் கேள்விப்பட்டதும் ரொம்ப நிறைவா இருந்தது. நம் கடமையை செய்ததுக்கே இவ்ளோ கொண்டாடுறாங்களேன்னு தோணுச்சு. அதுதான் இன்னும் நிறைய மாற்றங்களைச் செய்யணும்ங்கற உத்வேகத்தையும் கொடுத்தது" என்று சொல்லும் போதே பழைய நினைவுகளின் தாக்கம் அவர் முகத்தில் பிரதிபலித்தது.

அரசுப் பள்ளியும் பள்ளிதான்

எட்டு ஆண்டுகள் அந்தப் பள்ளியில் பணிபுரிந்த பிறகு திருப்பத்தூருக்குப் பக்கத்தில் இருக்கும் கும்மிடிக்கான்பட்டி என்ற கிராமத்துக்கு மாற்றலாகி சென்றார். இந்த முறை உதவித் தலைமை ஆசிரியர் பணி. அந்தப் பள்ளியில் மாணவர்களின் திறமையை வெளிக்கொண்டுவருவதுடன் ஆங்கிலப் பயிற்சியும் அளித்தார். பெயரளவுக்கு ஆண்டு விழா நடத்தாமல் கலை நிகழ்ச்சிகளுடன் அதை ஒரு கொண்டாட்டமாகவே மாற்றினார். அறிவியல் கண்காட்சியில் தன் பள்ளி மாணவர்கள் பங்கேற்க வேண்டும் என்பதற்காகப் பல்வேறு கருத்துக்களை மையமாக வைத்து மாதிரிகளை வடிவமைக்க உதவினார். பானையின் உட்புறம் முழுவதும் தார் பூசிவிட்டு, அதில் நட்சத்திரங்களையும் கோள்களையும் ஒட்டி இவர் செய்த, 'அண்டத்தை அருகில் பார்க்கலாம்' என்ற கருத்தாக்கத்துக்கு முதல் பரிசு கிடைத்ததை மகிழ்ச்சியுடன் குறிப்பிடுகிறார்.

மாற்றத்துக்கான களம்

அதன் பிறகு ராஜாவூர் தொடக்கப் பள்ளிக்கு மாற்றலுடன் தலைமை ஆசிரியராகப் பதவி உயர்வும் கிடைத்தது. தான் காண விரும்பும் மாற்றம் அனைத்தையும் இந்தப் பள்ளியில் செயல்படுத்திவருகிறார். அரசுப் பள்ளி என்றாலே பழுதடைந்த கட்டிடங்களும் அழுக்குச் சீருடை மாணவர்களும்தான் என்ற நினைப்பை உடைத்துக்காட்ட வேண்டும் என்று நினைத்தார். சீரூடையும் செருப்பும் அரசாங்கம் தருகிறது. தன் பள்ளி மாணவர்கள் தனியார் பள்ளி மாணவர்களுக்கு நிகரான தோற்றத்துடன் இருக்க வேண்டும் என்பதற்காக அவர்களுக்குத் தன்னுடைய செலவில் பெல்ட், டை, அடையாள அட்டை ஆகியவற்றை வாங்கித் தந்திருக்கிறார்.

மாணவர்களின் வாசிப்புத் திறனை மேம்படுத்துவதற்காக பல்வேறு புதுமைகளைக் கொண்டுவந்திருக்கிறார். மாணவர்களுக்குப் புத்தக அறிவுடன் பொது அறிவும் அவசியம் என்பதையும் இந்திரா உணர்ந்திருக்கிறார். அதனால்தான் தன் பள்ளி மாணவர்களுக்குப் பாடப் புத்தகத்தைத் தாண்டி, வெளியே பரந்து விரிந்திருக்கும் இந்த உலகத்தைப் புரிந்துகொள்ளும் வித்தையையும் கற்றுத்தருகிறார். ராஜாவூர் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்குப் பாடப் புத்தகம் எல்லாம் தலைகீழ் பாடம். உயிர்மெய் எழுத்துக்கள், எண்கள், வாய்ப்பாடு என அனைத்தையும் தலைகீழாகக் கேட்டாலும் சொல்கிறார்கள்.

சாதனை புரியும் மாணவர்கள்

இந்தப் பள்ளி மாணவர்கள், பல்வேறு சாதனைகளைச் செய்திருப்பது, இந்திராவின் உழைப்புக்கும் ஆர்வத்துக்கும் சான்று. பேச்சு, பாட்டு ஆகியவற்றில் மட்டுமல்ல நினைவாற்றலிலும் இந்த மாணவர்கள் மேம்பட்டு நிற்கிறார்கள். எந்த வகுப்பில் எத்தனை பாடம் என்று கேட்டால் பட்டென்று சொல்லும் இவர்கள், ஒவ்வொரு பாடத்தையும் அடி மாறாமல் சொல்கிறார்கள். சொல்வது என்றால் ஒப்பிப்பது அல்ல. பொருள் உணர்ந்து, நிறுத்தி, நிதானமாக ஒரு ஆசிரியர் பாடம் நடத்துவதைப் போலவே சொல்கிறார்கள்!

முதல் வகுப்பு படிக்கும் ஒரு மாணவி குறிஞ்சிப்பாட்டில் குறிப்பிடப்பட்டிருக்கும் 99 பூக்களின் பெயர்களை 32 விநாடிக்குள் சொல்கிறாள் என்றால், இரண்டாம் வகுப்பு படிக்கும் தரணி, 220 நாடுகளின் பெயர்களை அவற்றின் கொடிகளோடு அடையாளப்படுத்துகிறாள். உலகக் கோப்பை கிரிக்கெட்டில் பங்கேற்ற வீரர்களின் பெயர்களை அவர்களுடைய நாட்டுடன் சேர்த்துச் சொல்வது, தமிழ் இலக்கிய ஏடுகளின் பெயர்களைச் சொல்வது, கம்பன் பாட்டைச் சொல்வது என்று இந்த மாணவர்களின் சாதனைப் பட்டியல் நீள்கிறது.

செயல்வழி கற்றல்

பள்ளியின் முகப்பில் இருக்கும் மரங்களைச் சுற்றி மாணவர்களோடு நின்றிருக்கிறார் இந்திரா. மாணவர்கள் அனைவரும் காலி தண்ணீர் பாட்டிலுக்குள் மண்ணை நிரப்பி, ஒவ்வொரு மரத்தைச் சுற்றியும் சதுரம், செவ்வகம், வட்டம், முக்கோணம் என்று ஒவ்வொரு வடிவில் அடுக்குகிறார்கள். இப்படித்தான் அவர்கள் கணித வடிவங்களைப் படிக்கிறார்கள்!

"பாடங்களை இப்படிச் செயல்வடிவத்துடன் கற்றுத்தரும்போது மாணவர்களால் எளிதில் புரிந்துகொள்ள முடியும்" என்று சொல்லும் இந்திரா, ஒவ்வொரு வருடமும் பள்ளி இறுதித் தேர்வு முடிந்ததும் தன் ஒரு மாதச் சம்பளத்தை வைத்து அந்தக் கிராம மக்கள் அனைவருக்கும் சமபந்தி விருந்து கொடுக்கிறார். மாணவர்களுடன் அவர்களுடைய பெற்றோரும் அமர்ந்து சாப்பிடுவது, தனக்கு அளவில்லாத மகிழ்ச்சியைத் தருவதாகச் சொல்கிறார் இந்திரா.

பாடம் நடத்திவிட்டு, பாடத்திட்டத்தை ஒழுங்காக எழுதினாலே போதும் என்று தன் எல்லையைச் சுருக்கிக்கொள்ளாமல் மாணவர்களின் நலன் சார்ந்து இந்திரா செய்துவரும் பணிகள் அவருக்குப் பல்வேறு விருதுகளையும் அங்கீகாரத்தையும் பெற்றுத் தந்திருக்கின்றன. ஆசிரியப் பணி அறப்பணி என்பதை இந்திரா போன்றவர்கள் நம்மிடையே நிரூபித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்.


 

லஞ்சம் வாங்கமாட்டேன்' என, பகிரங்க அறிவிப்பு! பெண் வி.ஏ.ஓ.,வுக்கு சமூக வலைதளங்களில் பாராட்டு

'லஞ்சம் வாங்க மாட்டேன்' என, தன் அலுவலகத்தில்,'போர்டு' வைத்து, துாய்மையான
நிர்வாகம் நடத்தி வரும், காளியாபுரம் கிராம நிர்வாக அதிகாரிமுத்துமாரிக்கு, சமூக வலைதளங்களில் பலரும் பாராட்டு தெரிவிக்கின்றனர்.
'தினமலர்' அளித்த உத்வேகமே இதற்கு முக்கியகாரணம் என்கிறார் இவர். நெஞ்சம் நிமிர்த்து 'வாங்க மாட்டேன் லஞ்சம்' என, வெளிப்படையாகஅறிவித்த அரசுத்துறை அதிகாரிகளின் விவரம், நமது
நாளிதழ், கோவை பதிப்பில், வாரம் தோறும் ஞாயிறு அன்று, தொடர் பட்டியலாக வெளியானது; அதில்,
முத்துமாரியின் பெயரும் இடம்பெற்றிருந்தது. இவர், கோவை மாவட்டம், பொள்ளாச்சி தாலுகா, காளியாபுரம் (வடக்கு) கிராம நிர்வாக அலுவலராகபணியாற்றி வருகிறார். இவரை தொலைபேசியில் அழைத்து, எண்ணற்ற, 'தினமலர்' வாசகர்கள்பாராட்டினர்.உத்வேகம் அடைந்த முத்துமாரி, தனது அலுவலகத்தில், 'லஞ்சம் தவிர்த்து, நெஞ்சம் நிமிர்த்து!'எனவும், 'லஞ்சம் வாங்க மாட்டேன்' எனவும், எழுதி வைத்து, துாய்மையான நிர்வாகத்தை நடத்தி வருகிறார்.அலுவலகத்தில் அவர் அமர்ந்திருக்கும் படம், 'பேஸ்புக்' மற்றும் 'வாட்ஸ் ஆப்'பில், 'வைரலாக' பரவி வருகிறது.
முத்துமாரி கூறியதாவது:என் சொந்த ஊர் மதுரை. கணவர் நவநீதன், பிசினஸ் செய்கிறார். 2012ல், வி.ஏ.ஓ.,வாகபணியில் இணைந்தேன். சான்றிதழ் உள்ளிட்ட கோரிக்கைகளுக்காக என்னைச் சந்திக்க வந்தவர்களில் பலரும்,நான் கேட்காமலே லஞ்சம் கொடுக்க முன் வந்தனர். 'தினமலர்' நாளிதழில், 'வாங்க மாட்டேன் லஞ்சம்' என்ற பகுதியில், போட்டோவுடன் என் விவரம் வெளியானதும்,எண்ணற்ற மக்கள், என் மொபைல் எண், 94873 74757ல் தொடர்பு கொண்டு, என்னை வாழ்த்தினர்; அது, எனக்குபுது உத்வேகத்தை அளித்தது.அதன் பின், 'லஞ்சம் வாங்க மாட்டேன்' என்ற அறிவிப்பை, எனது அலுவலகத்தில்வைத்தேன். என்னை சந்திக்க வரும் ஏழை, எளிய மக்கள், லஞ்சம் தராமல் காரியத்தை முடித்து செல்லும்போது வாழ்த்துகின்றனர்; பாராட்டுகின்றனர். இது, எனக்கு எல்லையற்ற மகிழ்ச்சியையும், மன நிம்மதியையும் தருகிறது.இவ்வாறு முத்துமாரி தெரிவித்தார்.