ஞாயிறு, 1 மே, 2016

லஞ்சம் வாங்கமாட்டேன்' என, பகிரங்க அறிவிப்பு! பெண் வி.ஏ.ஓ.,வுக்கு சமூக வலைதளங்களில் பாராட்டு

'லஞ்சம் வாங்க மாட்டேன்' என, தன் அலுவலகத்தில்,'போர்டு' வைத்து, துாய்மையான
நிர்வாகம் நடத்தி வரும், காளியாபுரம் கிராம நிர்வாக அதிகாரிமுத்துமாரிக்கு, சமூக வலைதளங்களில் பலரும் பாராட்டு தெரிவிக்கின்றனர்.
'தினமலர்' அளித்த உத்வேகமே இதற்கு முக்கியகாரணம் என்கிறார் இவர். நெஞ்சம் நிமிர்த்து 'வாங்க மாட்டேன் லஞ்சம்' என, வெளிப்படையாகஅறிவித்த அரசுத்துறை அதிகாரிகளின் விவரம், நமது
நாளிதழ், கோவை பதிப்பில், வாரம் தோறும் ஞாயிறு அன்று, தொடர் பட்டியலாக வெளியானது; அதில்,
முத்துமாரியின் பெயரும் இடம்பெற்றிருந்தது. இவர், கோவை மாவட்டம், பொள்ளாச்சி தாலுகா, காளியாபுரம் (வடக்கு) கிராம நிர்வாக அலுவலராகபணியாற்றி வருகிறார். இவரை தொலைபேசியில் அழைத்து, எண்ணற்ற, 'தினமலர்' வாசகர்கள்பாராட்டினர்.உத்வேகம் அடைந்த முத்துமாரி, தனது அலுவலகத்தில், 'லஞ்சம் தவிர்த்து, நெஞ்சம் நிமிர்த்து!'எனவும், 'லஞ்சம் வாங்க மாட்டேன்' எனவும், எழுதி வைத்து, துாய்மையான நிர்வாகத்தை நடத்தி வருகிறார்.அலுவலகத்தில் அவர் அமர்ந்திருக்கும் படம், 'பேஸ்புக்' மற்றும் 'வாட்ஸ் ஆப்'பில், 'வைரலாக' பரவி வருகிறது.
முத்துமாரி கூறியதாவது:என் சொந்த ஊர் மதுரை. கணவர் நவநீதன், பிசினஸ் செய்கிறார். 2012ல், வி.ஏ.ஓ.,வாகபணியில் இணைந்தேன். சான்றிதழ் உள்ளிட்ட கோரிக்கைகளுக்காக என்னைச் சந்திக்க வந்தவர்களில் பலரும்,நான் கேட்காமலே லஞ்சம் கொடுக்க முன் வந்தனர். 'தினமலர்' நாளிதழில், 'வாங்க மாட்டேன் லஞ்சம்' என்ற பகுதியில், போட்டோவுடன் என் விவரம் வெளியானதும்,எண்ணற்ற மக்கள், என் மொபைல் எண், 94873 74757ல் தொடர்பு கொண்டு, என்னை வாழ்த்தினர்; அது, எனக்குபுது உத்வேகத்தை அளித்தது.அதன் பின், 'லஞ்சம் வாங்க மாட்டேன்' என்ற அறிவிப்பை, எனது அலுவலகத்தில்வைத்தேன். என்னை சந்திக்க வரும் ஏழை, எளிய மக்கள், லஞ்சம் தராமல் காரியத்தை முடித்து செல்லும்போது வாழ்த்துகின்றனர்; பாராட்டுகின்றனர். இது, எனக்கு எல்லையற்ற மகிழ்ச்சியையும், மன நிம்மதியையும் தருகிறது.இவ்வாறு முத்துமாரி தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக