செவ்வாய், 29 டிசம்பர், 2015

பேராசிரியர்களுக்கான, 'நெட்' தகுதித் தேர்வில் எதிர்காலத்தில் நெகட்டிவ் மதிப்பெண்கொண்டு வர, திட்டம் ?

நாடு முழுவதும், நேற்று முன்தினம் நடந்த பேராசிரியர்களுக்கான, 'நெட்' தகுதித் தேர்வில், தேர்வு அடிப்படை பொருளான பேனா, பென்சில் உட்பட எந்த பொருளுக்கும் அனுமதி அளிக்கப்படவில்லை.

பேராசிரியர் பணிக்கான, இந்த ஆண்டின், இரண்டாவது, நெட் தேர்வு, நாடு முழுவதும், 89 இடங்களில் நடந்தது. அதில், ஏழு லட்சம் பேர் பங்கேற்றனர்; தமிழகத்தில், 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். தேர்வர்கள் காப்பி அடிப்பதைதடுக்க, புதிய நிபந்தனைகள், இந்த தேர்வில் அமலானது. தேர்வர்கள் யாரும் பேனா உட்பட எந்த பொருளும் கொண்டு வரக்கூடாது என உத்தரவிடப்பட்டு, தேர்வறையில் பேனா வழங்கப்பட்டது; வாட்ச், ஹேர் பின் உட்படஎந்த பொருளும் கொண்டு
வர அனுமதிக்கப்படவில்லை.
ஒரே நாளில், மூன்று தாள்களுக்கும் தேர்வுகள் நடந்தன. மத்திய அரசின், 'இ - பாட சாலை'
குறித்தும், மத்திய அரசின் நிதியுதவியில் நடக்கும், 'ராஷ்ட்ரீய உச்சதர் சிக்ச அபியான்' குறித்தும் கேள்விகள் இருந்தன. மூன்றாம் தாளுக்கு, 'நெகட்டிவ்' மதிப்பெண் முறை அமலாகும் என, சில தினங்களுக்கு முன் தகவல் வெளியானது. அதனால், தேர்வர்கள் குழப்பம் அடைந்தனர்.

இதுகுறித்து, சி.பி.எஸ்.இ., தரப்பில் விசாரித்தபோது, எதிர்காலத்தில் நெகட்டிவ் மதிப்பெண்கொண்டு வர, திட்டமுள்ளதாக கூறினர்.இந்த முறை, 'நெட்' தேர்வில், கேள்வித்தாள் தரமாக தயாரிக்கப்பட்டிருந்தது. வரும் ஆண்டுகளில், நெட் தேர்வில் நெகட்டிவ் மதிப்பெண் திட்டம் கொண்டு வந்தால், பேராசிரியர்கள் நியமனமும் தர மேம்பாடு அடையும்.

திங்கள், 28 டிசம்பர், 2015

TENTATIVE KEY -CBSE UGC NET December 2015 Answer key for Paper 1 SET S

TENTATIVE KEY -CBSE UGC NET December 2015 Answer key for Paper 1 SET S
OFFICIAL KEY YET TO RLEASE BY CBSC

TENTATIVE KEY :CBSE UGC NET December 2015 Answer key for Paper 1 SET R

CBSE UGC NET December 2015 Answer key for Paper 1 SET R

TENTATIVE KEY- official key yet to release by CBSC



 

TENTATIVE KEY paper 1-NET December 2015

CBSE UGC NET December 2015 Answer key for Paper 1 SET P

THIS IS TENTATIVE  KEY - official key not yet released by CBSC



 

UGC NET 2015 நெட் தேர்வு தாள் 1 - விடைக் குறிப்புகள் விரைவில் தமிழ்த்தாமரையில் வெளியிடப்படும்

சனி, 26 டிசம்பர், 2015

National Eligibility Test (NET) TIPS AND TRICS

The National Eligibility Test (NET) conducted by University Grants Commission (UGC) under the National Educational Testing Bureau will be held on 27th December 2015. The national-levelNET qualifies candidates for the role of Assistant Professor and for Junior Research Fellowships (JRF) in Indian Universities and Colleges. The test consists of 3 Papers, 1 compulsory and 2 optional. As the exam approaches its time to study, after all soon you may be the one teaching! Here are some tips for the compulsory Paper I. 

Paper Pattern:
 
The Paper I exam tests the Teaching/Research aptitude of the aspirant and consists of 60 objective type multiple choice questions out of which 50 questions are to be attempted. Each question is worth 2 marks and the maximum marks for the exam is 100. Minimum qualifying marks are 40 marks (40%) for General and 35 marks (35%) for SC/ST/OBC/PWD. The Paper is divided into 10 sections, with 5 questions being based on each section. 

Syllabus:
1. Teaching Aptitude:
 nature, objectives, characteristics and basic requirements; Learner's characteristics; factors affecting teaching; Methods of teaching; Teaching aids; Evaluation systems
2. Research Aptitude: Research meaning, characteristics and types; steps of research; methods of research; research ethics; paper, article, workshop, seminar, conference and symposium; thesis writing its characteristics and format
3. Reading Comprehension
4. Communication: nature, characteristics, types, barriers and effective classroom communication
5. Reasoning (including mathematical): Number series, letter series, codes, relationships, classification
6. Logical Reasoning: Understanding the structure of arguments; evaluating and distinguishing deductive and inductive reasoning; verbal analogies, word analogy, applied analogy; verbal classification; reasoning logical diagrams; analytical reasoning
7. Data Interpretation: Sources, acquisition and interpretation of data; quantitative and qualitative data; graphical representation and mapping of data
8. Information and Communication Technology:
 ICT meaning, advantages, disadvantages and uses; General abbreviations and terminology; Basics of internet and emailing
9. People and Environment: People and environment interaction; sources of pollution; pollutants and their impact on human life, exploitation of natural and energy resources, natural hazards and mitigation
10. Higher Education System: Governance, Polity and Administration; Structure of the institutions for higher learning and research in India; formal and distance education; professional/technical and general education; value education; governance, polity and administration; concept, institutions and their interactions.

Tips:

- Understand the paper pattern thoroughly. Its important to answer 50 questions you know rather than answering more because if you answer more than 50 questions only the first 50 will be counted regardless if questions after the first 50 are answered correctly
- Follow a methodical pattern of studying for maximum benefits
- Prepare a study schedule including as many varied topics as you can and study accordingly
- Study basic concepts in mass communication for the communication topic
- Study each topic as 5 questions will definitely come from each topic
- Its important to study Teaching and Research in depth as the most difficult questions are usually in this section
- Revise basic mathematics concepts from class 10th, focusing mainly on understanding sets/patterns and improve approximation techniques
- Data Interpretation is generally based on statistics, so study statistics from class 10th to prepare
- Read any new material(not too long) and try summarizing it in a few points to practice for reading comprehension
- People and Environment should be prepared from Class 10th as well
- Information and Communication Technology and Higher Education System should be given sufficient time as both are material-heavy
- Prepare Information and Communication Technology and Higher Education System from books specified for UGC NET
- Use flash cards and charts for Information and Communication Technology, 
- Definitions, abbreviations and terminology are very important for Information and Communication Technology so make sure you know them well
- Study for Higher Education System Governance, Polity and Administration using flowcharts
- Practice as many sample papers/previous year papers as you can to gain speed and accuracy
- Remember to check the sample paper/previous paper soon after completing it so you can identify and improve on your weak areas

Paper I is generally where candidates find difficulty as a few topics are new whereas the optional subjects are chosen according to the expertise and interest of the candidates. It's most important to be calm and use logic and you can easily clear Paper I of UGC NET Dec 2015
Results are expected around April 2016    


 

நாளை 'நெட்' தகுதி தேர்வு :தமிழகத்தில், 50 ஆயிரம் பேர் இந்த தேர்வை எழுத உள்ளனர்

!கல்லுாரி பேராசிரியர் பதவிக்கான, 'நெட்' தகுதி தேர்வு, நாடு முழுவதும், நாளை நடக்கிறது

.கல்லுாரி மற்றும் பல்கலைகளில் பேராசிரியராக சேர, 'நெட்' தகுதி தேர்வில் தேர்ச்சி பெற
வேண்டும்; இல்லையெனில் பிஎச்.டி., ஆராய்ச்சி படிப்பு முடித்திருக்க வேண்டும். பெரும்பாலானோர், 'நெட்' தேர்வையேஎழுதுவர்.ஆறு மாதங்களுக்கு, ஒரு முறை இந்த தேர்வு நடக்கும்.

இந்த ஆண்டுக்கான, இரண்டாவது, 'நெட்' தேர்வு, நாளைநடக்க உள்ளது. நாடு முழுவதும், 89 இடங்களில் உள்ள தேர்வு மையங்களில், 10 லட்சம் பேர் எழுத உள்ளனர். தமிழகத்தில், சென்னை, கோவை,மதுரை மற்றும் திருச்சியில் உள்ள தேர்வு மையங்களில், 50 ஆயிரம் பேர் விண்ணப் பித்துள்ளனர்; மூன்று தாள்களுக்குவிடையளிக்க வேண்டும்.தேர்வர்கள் தங்கள் ஹால் டிக்கெட்களை, www.cbsenet.nic.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம்
செய்யலாம்.
இப்படித் தான் இருக்கும் வினாக்கள்
* 'அப்ஜெக்டிவ்' வகை வினாக்கள் வழங்கப்படும்
* 100 மதிப்பெண் - 60 கேள்விகள் அடங்கிய முதல் தாளுக்கு, 75 நிமிடங்கள் வழங்கப்படும்.
இதில், 50 கேள்விகளுக்குமட்டுமே தேர்வு எழுத வேண்டும்
* இரண்டாவது தாளுக்கும், 100 மதிப்பெண் - 50 கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டும்
* மூன்றாவது தாளுக்கு, 150 மதிப்பெண் - 75 கேள்விகளுக்குவிடைஅளிக்க வேண்டும்
இந்த தாளுக்கு,இரண்டரை மணி நேரம் வழங்கப்படும்.

புதன், 23 டிசம்பர், 2015

அரசியல் : சகாயத்தை நோக்கி நீளும் அழைப்புகள்



எப்படி யோசித்தாலும் இப்படியொரு நிகழ்வு நினைவில் இல்லை; பணியிலிருக்கும் ஒரு அதிகாரியை அரசியலுக்கு அழைக்க மக்கள் கூட்டம் திரண்டதும் அதைத் தடுக்க அரசு இயந்திரம் தலைகீழாக நின்று தண்ணீர் குடிக்க முயன்றதும்!

சமூக வலைதளங்களில் வசிப்பவர்களுக்கு ஐஏஎஸ் அதிகாரி சகாயத்தை முதல்வர் பதவிக்கு முன்னி றுத்தி நடந்துகொண்டிருக்கும் கோஷங்களும் பிரச் சாரங்களும் புதிதாக இருக்காது. பல்லாயிரக்கணக் கானோர் இந்த முழக்கங்களுடன் சுற்றிச் சுழன்று கொண்டிருக்கின்றனர். இணையத்தில் இருந்தவர்கள் இப்படி ஒரு கோரிக்கையோடு வீதியில் இறங்குவது தமிழகத்தில் அநேகமாக இதுவே முதல் முறை.

நேரடித் தேர்தல் அரசியலில் சகாயத்துக்கு எந்த அளவுக்கு ஆர்வம் இருக்கிறது; அவருக்கு அப்படியான கனவுகள், திட்டங்கள் ஏதும் இருக்கின்றனவா என்பது நமக்குத் தெரியாது. ஆனால், 'அரசியலில் சகாயம்' எனும் வார்த்தைகளே அரசியல்வாதிகள், கட்சி அரசியல் எழுத்தாளர்கள் மத்தியில் அமிலத்தைப் போன்ற எரிச்சலை உருவாக்குவதை உணர முடிகிறது.

அதற்குள்ளேயே சிலர் கேட்கிறார்கள், "நேர்மையாக இருந்தால் மட்டும் போதுமா? சமூக நீதி தொடர்பாக சகாயத்தின் கருத்து என்ன, சமய நல்லிணக்கத்தைப் பற்றி அவர் என்ன நினைக்கிறார், தனியார்மயம் குறித்த அவருடைய கருத்து யாது?"

அது சரி, தமிழ்நாட்டில் இன்றைக்கு ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் எத்தனை பேருக்கு இதுபற்றியெல்லாம் என்ன கருத்து இருக்கிறது என்று நமக்குத் தெரியும்? மேலும், இதுவரை இதுபற்றியெல்லாம் பேசாததாலேயே ஒருவருக்கு எதுவுமே தெரியாது என்று முடிவெடுக்க நாம் யார்? எல்லாவற்றுக்கும் மேல் அரசியல் அரங்கில் புதிதாக ஒருவர் பெயர் உச்சரிக்கப்பட்டால் ஏன் இவ்வளவு பதற்றம்?

உமாசங்கர் ஞாபகங்கள்

என்னுடைய பள்ளி நாட்களில் திருவாரூர் மாவட்ட ஆட்சியராக உமாசங்கர் ஐஏஎஸ் பணியாற்றிய நாட்கள் ஞாபகத்துக்கு வருகின்றன. இளமைத் துடிப்போடு பணிக்கு வந்திருந்த உமாசங்கர் கலக்கிக்கொண்டிருந்தார். புது சினிமா வந்தால் டிக்கெட்டைப் பல மடங்கு உயர்த்தி விற்பது அங்குள்ள திரையரங்குகளின் வழக்கம் (மன்னார்குடி திரையரங்குகளில் அப்போது முதல் வகுப்புக் கட்டணம் ரூ.10 என்று நினைவு). ஒருநாள் இரவுக் காட்சியின்போது ஒரு திரையரங்கில் உள்ளூர் விவசாயிபோல, லுங்கி-முண்டாசோடு உள்ளே புகுந்தார் உமாசங்கர். ரூ.10 டிக்கெட்டை ரூ.100-க்கு விற்ற திரையரங்க சிப்பந்தியை கவுன்ட்டரிலேயே வைத்து கையும் டிக்கெட்டுமாகப் பிடித்தார். இன்னொரு நாள் இப்படித்தான். பெட்ரோல் நிலையங்களுக்கு மாறுவேஷத்தில் போன அவர், அளவு குறைவாக பெட்ரோல் நிரப்பியவர்களைக் கையும் பெட்ரோல் போத்தலுமாகப் பிடித்தார். இப்படி ஆற்றில் அத்துமீறி மணல் அள்ளியவர்களைப் பிடித்துவிட்டார், ரேஷன் அரிசி கடத்தியவர்களைப் பிடித்துவிட்டார் என்று ஏதாவது சேதிகள் வந்துகொண்டே இருக்கும். மக்கள் சதா பேசிக்கொண்டே இருப்பார்கள்.

தமிழ்நாட்டிலேயே முன்னோடியாக திருவாரூர் மாவட்டத்தை மின் ஆளுகை மாவட்டமாகக் கொண்டு வந்தவர் உமாசங்கர். பள்ளி, கல்லூரி மாணவர்கள் மத்தியில் நிறையப் பேச வருவார். எவரும் அவரை எளிதில் சந்திக்க முடியும். எங்களூர் பக்கம் பள்ளி மாணவ-மாணவியர் பலர் வெகுநாட்களுக்கு, "உமா சங்கர்போல நானும் ஒரு ஐஏஎஸ் அதிகாரியாவேன்" என்று சொல்வதை சக மாணவனாகப் பார்த்திருக்கிறேன்.

தன்னுடைய பணிநாட்களில் சுழன்றடிக்க அனுமதிக்கப்பட்ட காலத்தைவிடவும் காற்றில்லா பிரதேசத்தில் தனித்துவிடப்பட்ட காலமே உமாசங்கருக்கு அதிகம். திமுக, அதிமுக இரு ஆட்சிக் காலங்களிலும் அவர் கொடூரமாகப் பந்தாடப்பட்டார்; பல சமயங்களில் அவருடைய நேர்மையான, துணிச்சலான செயல்பாடே அவருக்கு எதிரியாக அமைந்தது என்று அதிகார வட்டாரங்களில் பேசிக்கொண்டார்கள். இன்றைக்கு ஒரு மதகுருபோல, "பாவத்தின் சம்பளம் மரணம்; கடவுளின் வருகை சமீபத்துவிட்டது" என்று பிரசங்கம் செய்துகொண்டிருக்கும் உமாசங்கரைக் கிண்டலடிக்கும் தலைமுறையினர் பலருக்கு, அந்த நாள் உமாசங்கரைத் தெரிந்திருக்க நியாயம் இல்லை. ஒரு உமாசங்கரின் மனஅழுத்தத்துக்குப் பின்னிருக்கும் இந்த அரசியல் சமூகத்தின் குற்றங்கள் மிகக் குரூரமானவை; ரகசியமானவை. பல நேரங்களில் நான் எனக்குள் கேள்வி எழுப்பிக்கொள்வது உண்டு: உமாசங்கர் நிலைமையில் நான் இருந்தால் என்னவாகியிருப்பேன்? பைத்தியம் பிடித்துத் தெருத் தெருவாகத் திரிந்துகொண்டிருக்கலாம். அவர் அந்தப் பரிதாபத்துக்கு ஆளாக நேராமல், அவர் நம்பும் - நாம் கிண்டலடிக்கும் கடவுள்தான் காப்பாற்றியிருக்க வேண்டும்!

அற வறட்சி

இந்த வெள்ளத்திலும் இடையறாது ஓடிக்கொண்டிருந்த வர்களில் ஒருவரான அரசு பஸ் ஓட்டுநர் ஜெயராமனைச் சமீபத்தில் பேட்டியெடுத்தேன். "நீங்கள் எப்படி இந்த வேலையைத் தேர்ந்தெடுத்தீர்கள்?" என்றபோது ஜெயராமன் சொன்னார். "சின்ன வயசுல எங்க ஊர்ல பஸ் ஓட்டுன ஒரு அண்ணனை எனக்கு ரொம்பப் பிடிக்கும். அவரு ரொம்ப நல்லவரு. யாராவது உடம்புக்கு முடியலைன்னு சொன்னா, அவங்க நிறுத்தச் சொல்ற எடத்துல வண்டியை நிறுத்துவாரு. பாதி வழியில பெரியவங்க கை நீட்டினாலும் வண்டியை நிறுத்தி ஏத்திக்குவாரு. பஸ்ல நாங்க பள்ளிக்கூட பசங்க நின்னுக்கிட்டு வந்தோம்னா, கூப்பிட்டு அவருக்குப் பின்னாடி உக்காரச் சொல்லுவாரு. அந்த அண்ணனப் பாக்கும்போதெல்லாம் நம்மளும் இப்படி வண்டி ஓட்டணும்னு தோணிக்கிட்டே இருக்கும்; அப்படியே ஓடியாந்துட்டேன்."

நாமெல்லாம் அப்படித்தானே வளர்ந்தோம்! ஒரு நல்ல ஆசிரியரைப் பார்த்து நாமும் ஆசிரியராக வேண்டும் என்று நினைப்பது, ஒரு நல்ல மருத்துவரைப் பார்த்து நாமும் நல்ல மருத்துவராக வேண்டும் என்று நினைப்பது, ஒரு நல்ல காவல் அதிகாரியைப் பார்த்து நாமும் காவல் அதிகாரியாக வேண்டும் என்று நினைப்பது! பல தலைமுறைகள் அப்படித்தானே உருவாயின? இன்றைய பிள்ளைகள் எடுத்த எடுப்பில் கண்ணுக்குத் தெரியாத லட்ச ரூபாய் வேலைகளைப் பற்றிப் பேசுகிறார்கள் என்றால், அதற்கான காரணங்களில் ஒன்று, நேர்மையான முன்னுதாரணங்களையும் விழுமியங்களைச் சுமந்த மனிதர்களையும் நாம் அழித்தொழித்ததும்கூட!

லோகநாதன் ஞாபகங்கள்

மொழிபெயர்ப்பாளரும் பேராசிரியருமான ஏ.வி.தனுஷ்கோடியின் தந்தை ஏ.வி.லோகநாதன். தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியராக இருந்தவர். "அப்பா சொத்துன்னு எதுவும் எங்களுக்கு மிஞ்சலை. ரொம்ப சாதாரணப் பின்னணியிலதான் வாழ்ந்தோம். ஆனா, காமராஜரே அப்பாவை உயர்வா பேசுவார். ஒருமுறை காமராஜருக்கு மிக நெருக்கமான ஒருத்தர், தன் நெருக்கத்தைச் சொல்லி ஒரு காரியத்துக்காக அப்பாகிட்ட வந்திருக்கார். 'விதிகளுக்குப் புறம்பா எதுவும் செய்ய மாட்டேன். நீங்கள் முதல்வர்கிட்டேயே வேணும்னாலும் சொல்லிக்குங்க' என்று வழக்கம்போலச் சொல்லி அனுப்பியிருக்கார் அப்பா. விஷயம் காமராஜர் காதுக்குப் போயிருக்கு. 'நான் நேர்மையானவன்னு சொல்லித்தானே என்னை இங்கெ உக்கார வெச்சிருக்கீங்க? எனக்குக் கீழ இருக்கவங்களையும் அப்படி நேர்மையானங்களாக இருக்க விட்டாத்தானே நிர்வாகம் நேர்மையா நடக்கும்? எனக்கு நெருக்கமானவங்களே அதைக் கெடுக்கலாமா? கலெக்டரு அப்படித்தான் இருப்பாரு. நீங்க செஞ்சதுதான் தப்பு!'ன்னு சொல்லி அந்த நண்பரைத் திருப்பி அனுப்பிச்சுட்டாராம் காமராஜர். நேர்மை தவறி எத்தனை வீடு வாங்கி வெச்சிட்டுப்போயிருந்தாலும், இந்தப் பெருமையை எங்களுக்கு எங்கப்பாவால கொடுத்திருக்க முடியாது" என்று அடிக்கடி சொல்வார் தனுஷ்கோடி.

ஏன் கூப்பிடுகிறார்கள்?

அன்றைக்கெல்லாம் யாரும் லோகநாதனை அரசியலுக்கு வா என்று கூப்பிட்டிருக்க மாட்டார்கள். களத்தில் காமராஜர்களும் கக்கன்களும் இருக்கும்போது ஐஏஎஸ் அதிகாரிகளை அரசியலுக்குக் கூப்பிட மக்களுக்கு என்ன கிறுக்கா பிடித்திருக்கிறது! இப்போது வீதிக்கு வந்து சகாயத்தைக் கூப்பிடுகிறார்கள் என்றால், என்ன அர்த்தம்? இன்றைய அரசியல் களத்தில் நிற்கும் உங்கள் மீது அவர்களுக்கு நம்பிக்கை இல்லை என்று அர்த்தம்; உங்களுடைய நம்பிக்கைத் துரோகங்களால் அவர்கள் வெறுத்துப்போயிருக்கிறார்கள் என்று அர்த்தம். அரசியலில் சூனியம் நிலைகொண்டிருக்கிறது என்று அர்த்தம்!

சகாயத்தின் மீதான கவர்ச்சி அல்ல; ஒரு புதிய அரசியல் மாற்றத்துக்கான பசியே தமிழக மக்களை இப்போது வாட்டியெடுக்கிறது. முடிந்தால் அந்தப் பசியைப் போக்க மக்களுக்கு ஏற்ற செயல்திட்டங்களோடும் நல்ல தலைமையோடும் மக்களைச் சந்தியுங்கள்; இல்லையேல் வாயை மூடிக்கொள்ளுங்கள்!

- சமஸ், 


 

100 சதவீத தேர்ச்சிக்காக 5 மாண வர்களை வெளி யேற்றிய தனியார் பள்ளி!


பத்தாம் வகுப்பு தேர்வில் 100 சதவீத தேர்ச்சிக்காக 5 மாண வர்களை தனியார் பள்ளி வெளி யேற்றிய சம்பவம் 'தி இந்து' நாளி தழில் நேற்று முன்தினம் செய்தி வெளியானது. இந்த விவகாரத்தில் முதன்மை கல்வி அலுவலர் தலை யிட்டதைத் தொடர்ந்து மாணவர் கள் மீண்டும் பள்ளியில் சேர்க் கப்பட்டனர். மேலும், மாணவர் களை தகுந்த காரணமின்றி வெளி யேற்றினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தனியார் பள்ளிகளுக்கு அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மதுராந்தகம் அடுத்த கருங்குழி பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளி ஒன்று நூறு சதவீத தேர்ச்சிக்காக 10-ம் வகுப்பு படிக்கும் 5 மாணவர்களுக்கு மாற்று சான்றிதழ் வழங்கி பள்ளி யிலிந்து வலுக்கட்டாயமாக வெளி யேற்றியதாக பெற்றோர் தரப்பில் புகார் எழுந்தது. மீண்டும் பள்ளி யில் சேர்க்க வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் கஜலட்சுமியிடம் பெற் றோர் மனு அளித்தனர்.

இது முதன்மை கல்வி அலுவல ரின் கவனத்துக்கு நேரடியாக கொண்டு செல்லப்பட்டது. மேலும் இதுபற்றிய செய்தி 'தி இந்து' தமிழ் நாளிதழில் நேற்றுமுன்தினம் வெளியானது.

இதையடுத்து காஞ்சிபுரம் மாவட்ட முதன்மை கல்வி அலு வலர், தனியார் பள்ளியின் தலைமை ஆசிரியரை நேரில் அழைத்து விசாரணை நடத்தினார். இதில், வெளியேற்றப்பட்ட மாணவர்கள் மீது பள்ளி நிர்வாகம் தெரிவித்த புகார் ஏற்புடையதாக இல்லை எனக்கூறி 5 பேரையும் மீண்டும் பள்ளியில் சேர்க்க உத்தரவிட்டார். இதை தொடர்ந்து மாணவர்கள் மீண்டும் சேர்க்கப்பட்டனர்.

இதுகுறித்து, முதன்மை கல்வி அலுவலர் உஷா 'தி இந்து' விடம் கூறியதாவது: தனியார் பள்ளி நிர்வாகத்திடம் விளக்கம் கேட்கப் பட்டது. மேலும், ஒன்றாம் வகுப்பி லிருந்து 10-ம் வகுப்புவரை பள்ளியில் படித்து வந்த மாணவர் களை திடீரென, சரியாக படிக்க வில்லை எனக்கூறி வெளியேற்றி யது சரியான முடிவல்ல என தெரி வித்து மீண்டும் பள்ளியில் சேர்க்கப்பட்டுள்ளனர். மேலும், இதுமாதிரியான புகார்கள் தொடர்ந் தால், தனியார் பள்ளி நிர்வாகங்கள் மீது கல்வித்துறை சார்பில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அனைத்து பள்ளிகளுக்கும் இது தொடர்பாக சுற்றறிக்கை அனுப்பப் பட்டுள்ளது.

மாணவர்களின் நலன் கருதி, சரியாக படிக்காத மாணவர்களுக் காக சிறப்பு வகுப்புகளை நடத்தி, அவர்களை கல்வியில் சிறந்து விளங்கும் வகையில் மாற்ற வேண் டியது பள்ளி மற்றும் ஆசிரியர்களின் கடமை. இதை அனைத்து பள்ளி நிர்வாகங்களும் புரிந்து செயல்பட வேண்டும் என்றார்.

இதுகுறித்து, மாணவர்களின் பெற்றோர்கள் கூறியதாவது: தனி யார் பள்ளிகளின் நடவடிக்கைகள் குறித்து 'தி இந்து'தமிழ் நாளிதழில் செய்தி வெளியானதால்தான் கல் வித்துறை அதிகாரிகள் விரைந்து செயல்பட்டு பிள்ளைகளை மீண்டும் பள்ளியில் அனுமதித்துள்ளனர். பிள் ளைகள் நல்ல முறையில் கல்வி கற்பதற்கான அனைத்து முயற்சி களையும் பள்ளி நிர்வாகத்துடன் இணைந்து நாங்களும் செயல் படுவோம் என்றனர்.


 

திங்கள், 21 டிசம்பர், 2015

டிசம்பர் 25-ம் தேதி வானில் உதிக்கவுள்ள முழுநிலவு மிகவும் அரிதானது-நாசா விண்வெளி ஆய்வு மையம்

கிறிஸ்துமஸ் தினமான டிசம்பர் 25-ம் தேதி வானில் உதிக்கவுள்ள முழுநிலவு மிகவும் அரிதானது என அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த முழுநிலவு பெரியதாகவும் மிகவும் பிரகாசமனதாகவும் இருக்கும் என நாசா தெரிவித்துள்ளது.

மேலும், 1977-ம் ஆண்டுக்குப் பிறகு இந்த ஆண்டு டிசம்பர் 25-ம் தேதியன்று முழு நிலவு தோன்றவுள்ளதாக நாசா தெரிவித்துள்ளது.

இவ்வாறாக டிசம்பர் 25-ல் தோன்றும் முழுநிலவை ஃபுல் கோல்ட் மூன் (Full Cold Moon) என்ற அழைப்பது வழக்கமென்றும் அதற்குக் காரணம் குளிர்காலத்தின் துவக்கத்தில் இந்த நிலவு தோன்றுவதே என்றும் நாசா விளக்கியுள்ளது.

இதன் பின்னர் 2034-ல் தான் மீண்டும் டிசம்பர் 25-ல் அதாவது கிறிஸ்துமஸ் தினத்தன்று முழு நிலவு தோன்றும் என்றும் நாசா கணித்துள்ளது.



 

மழை வெள்ளத்தால் மாணவர்களுக்கு மனஅழுத்தம்: அனைத்து தேர்வையும் ரத்து செய்ய வேண்டும் - கருணாநிதி வலியுறுத்தல்


மழை வெள்ளம் காரணமாக மாணவர்களுக்கு மனஅழுத்தம் ஏற்பட்டுள்ளதால் தேர்வுகளை ரத்து செய்துவிட்டு அனைவரையும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஐஐடி,என்ஐடி, ஐஐஐடி உள்ளிட்ட மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் சேரு வதற்கான ஜேஇஇ நுழைவுத் தேர்வுகளை குஜராத்தியிலும் எழுத லாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சிறப்புச் சலுகையை தமிழ், தெலுங்கு, மலையாளம் உட்பட இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ள 22 மொழிகளுக்கும் வழங்க வேண்டும். எந்தப் பகுதியில் எப்போது எவ்வளவு மழை பெய்யும் என்பதை பிரதீப் ஜான் என்னும் இளைஞர் தனது பேஸ்புக் பக்கத்தில் (Tamilnaduweatherman) சரியாக சொல்வதாக பலரும் கூறுகின்றனர். அந்த இளை ஞருக்கு எனது பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்துக்கான ஆண்டு நிதியை மத்திய அரசு, ரூ.5 கோடி யாகக் குறைத்துவிட்டது. இயக் குநர், பதிவாளர் போன்ற பதவி களுக்கு நிரந்தரமாக யாரையும் நியமிக்கவில்லை. அந்த நிறுவனத் துக்காக சென்னை பெரும்பாக் கத்தில் 6.71 ஹெக்டேர் நிலம் திமுக அரசால் ஒதுக்கப்பட்டது. கட்டிடங்கள் கட்டுவதற்கு ரூ.250 கோடி வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. ஆனால், அதை செயல்படுத்தும் நடவடிக்கைகளில் அதிமுக அரசு ஈடுபடாதது வேதனை அளிக்கிறது.

பாதிப்புக்கு ஆளான விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் நிவாரணம் வழங்குவது டன், கூட்டுறவு கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும். கன்னியாகுமரி, திருநெல் வேலி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களிலும் நிவாரண நிதி வழங்க வேண்டும்.

மழை பாதிப்பால் மன அழுத் தத்துக்கு ஆளாகியுள்ள மாணவர் களுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில், இவ்வாண்டு தேர்வுகள் அனைத்தையும் ரத்து செய்துவிட்டு, அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிப்பதுதான் முறையாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.


 

உதவி பேராசிரியர் பணிக்கு ‘நெட்’ தகுதித் தேர்வு: சென்னையில் 11 ஆயிரம் பேர் எழுதினர்

உதவி பேராசிரியர் பணிக்கான சிஎஸ்ஐஆர் 'நெட்' தகுதித் தேர்வை சென்னையில் 11 ஆயிரம் பேர் எழுதினர்.கல்லூரிகள் மற்றும்பல் கலைக்கழகங்களில் அறிவியல், கணிதம் உள்ளிட்ட பாடப் பிரிவுகளில் உதவி பேராசிரியர் பணியில் சேருவதற்கு அறிவியல்மற்றும் தொழில்ஆராய்ச்சி கவுன்சில் (சிஎஸ்ஐஆர்) அமைப்பு நடத்தும் நெட் தகுதித் தேர்வில்தேர்ச்சி பெற வேண்டும்.
இந்ததேர்வு ஆண்டுக்கு இருமுறை (ஜுன், டிசம்பர்) நடத்தப்படுகிறது. இந்த ஆண்டுக்கான 2-வது நெட் தகுதித் தேர்வு தமிழகத்தில் சென்னை, காரைக்குடி உட்பட நாடு முழுவதும் பல்வேறு மையங்
களில் நடந்தது. சென்னையில்அடையாறு டாக்டர் எம்ஜிஆர் ஜானகி மகளிர் கல்லூரி, பேட்ரிசன் கலை அறிவியல் கல்லூரி,வேளச்சேரி குருநானக் கல்லூரி, கிண்டி ஐஐடி, அண்ணா ஜெம்ஸ் பார்க் பள்ளி உட்பட 7 மையங்களில் தேர்வு நடைபெற்றது.இந்த மையங்களில் 11 ஆயிரம் பேர் தேர்வெழுதியதாக சிஎஸ்ஐஆர் நெட் தேர்வு சென்னை மைய ஒருங்கிணைப்பாளர் பி.சுரேஷ்தெரிவித்தார்.

ஆனந்த அதிர்ச்சி தரும் ‘ஆப்பிள்’


இதயத்தின் ``லப் டப்'' தெரிய வேண்டுமா?

உங்கள் உடற்பயிற்சி செய்கிறீர்கள். எத்தனை கலோரிகள் இழந்தோம் என்று கண்டுபிடிக்கவேண்டுமா?

திருக்குறள் படிக்கவேண்டுமா?

ஆங்கில வார்த்தைக்குத் தமிழ் அர்த்தம் வேண்டுமா?

ஃபோன் பேச வேண்டுமா?

மெசேஜ் அனுப்பவேண்டுமா?

போட்டோ எடுக்கவேண்டுமா?

புதிய ஊரில் வழி தேட வேண்டுமா?

இப்படி 3500 க்கும் அதிகமான "வேண்டுமா"க்களுக்கு ஒரே பதில் ஏப்ரல் மாதம் அறிமுகமாகியிருக்கும் ஆப்பிள் வாட்ச் அமெரிக்க ஆப்பிள் கம்பெனியின் புதிய கண்டுபிடிப்பு. ஆமாம், இது வாட்ச்தான். கைக் கடிகாரம்தான். நேரம், நாள், கிழமை, மாதம், காலண்டர் பார்க்கலாம். அத்தோடு செயலிகள் மூலமாக 3500 தேவைகளைப் பூர்த்தி செய்யலாம்.

தன் தயாரிப்புகளுக்கு அதிக விலை வைப்பது ஆப்பிள் கம்பெனியின் பாரம்பரியம். ஐ போன், ஐ பேட், ஆப்பிள் கம்ப்யூட்டர் ஆகியவை அதிக விலை கொண்டவை, ஆப்பிள் வாட்ச் அப்படியான ஒன்று. மூன்று மாடல்கள். 349 டாலர் (சுமார் 21,000 ரூபாய்) தொடங்கி, 12,000 டாலர் (சுமார் ஏழரை லட்சம் ரூபாய்) வரை விலை.

இந்த வருடம் 1 கோடி வாட்ச்களும், அடுத்த வருடம் சுமார் 4 கோடி வாட்ச்களும் விற்பனையாகும் என்று பிசினஸ் ஜோதிடர்கள் கணிக்கிறார்கள்.

1976 - இல் கம்பெனி தொடங்கிய நாள் முதலே, ஆப்பிளுக்கும், நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸுக்கும் ஒரே ஒரு பொசிஷனிங் கொள்கைதான், ``வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளை மிஞ்சும் தயாரிப்புகளைத் தந்து அவர்களை ஆனந்த அதிர்ச்சியில் ஆழ்த்தவேண்டும்.'' ஒவ்வொரு தயாரிப்பிலும், இதைச் சொல்லி அடித்திருக்கிறார்கள்.

மாறுபட்ட சிந்தனை

அழகின் பரம ரசிகர் ஸ்டீவ். கம்ப்யூட்டரை எப்படி அழகுச் சாதனமாக்கலாம் என்று 24 x 7 சிந்தனை. சிறு சிறு நுணுக்கங்களைக்கூட மேலெழுந்த வாரியாகப் பார்க்கமாட்டார். ஒவ்வொன்றும் கனகச்சிதமாக இருக்கவேண்டும். அதனால், அவர் அணுகுமுறை மற்றவர் களிடமிருந்து முற்றிலும் மாறுபட்டதாக இருந்தது.

அந்த நாட்களில் கம்ப்யூட்டர் தயாரிப் பாளர்கள் எல்லோரும் கேஸிங் (Casing) உலோகத்தால் செய்தார்கள். தன் தயாரிப்புகள் பயன்படுத்த எளிதாக, பார்க்க பரம அழகாக இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். கேஸிங்கைப் பிளாஸ்டிக்கில் உருவாக்கினார். கண்களை ஈர்க்கும் புதுமை.

வண்ண கம்ப்யூட்டர்

1983, 1984 காலகட்டங்கள், ஸ்டீவ், லிஸா (Lisa), மக்கின்டாஷ் (Macintosh) என்னும் கம்ப்யூட்டர்களை வடிவமைத்துக்கொண்டிருந்தார். அதுவரை இருந்த கம்ப்யூட்டர்களைப் பயன்படுத்துவதில் பல சிரமங்கள். Hindu என்கிற ஃபைலை ஹார்ட் டிஸ்கிலிருந்து ஃப்ளாப்பி டிஸ்குக்கு காப்பி பண்ணவேண்டும் என்று வைத்துக்கொள்ளுங்கள்.

copy c:/docs/myfolder/Hindu:/ என்று கீபோர்டில் டைப் அடிக்கவேண்டும். இதேபோல் ஃபைலை நீக்க, Del c:/docs/myfolder/Hindu என்று டைப் செய்யவேண்டும். தவறுகள் அடிக்கடி வரும், செய்யும் வேலை தடைப்படும். ஜாப்ஸ் மவுஸ், ஐகான்கள் (Icons) ஆகியவற்றைத் தன் கம்ப்யூட்டர்களில் கொண்டுவந்தார். பிரச்சினைகள் போயே போச்சு!

பயன்படுத்துவது எளிது

ஸ்டீவ் அறிமுகம் செய்த இன்னொரு அட்டகாச வாடிக்கையாளர் நட்புத் தொழில் நுட்பம் கிராஃபிக் யூஸர் இண்டர்ஃபேஸ் (Graphic User Interface), சுருக்கமாக GUI. இது ஒரு கம்ப்யூட்டர் காட்சி வடிவமைப்பு.

அதுவரை, Word என்னும் பணியைச் செய்யவேண்டுமானால், கீபோர்டில் Word என்று டைப் செய்யவேண்டும். ஆப்பிள் கம்ப்யூட்டர்களில் GUI இருந்தது. Word என்னும் சின்னத்தில் மவுஸால் க்ளிக் செய்தால் போதும். Word திறக்கும். மவுஸ், GUI, இரண்டுமே வாடிக்கையாளர்கள் எதிர்பாராமல், ஆப்பிள் கம்பெனி அவர்களுக்குத் தந்த இன்ப அதிர்ச்சிகள்.

ஸ்டீவ் மனதில் ஒருநாள் மின்வெட்டல், கம்ப்யூட்டரை ஏன் வண்ண வண்ண நிறங்களில் தயாரிக்கக்கூடாது? நீலம், ஆரஞ்சு, பச்சை, சிவப்பு எனப் பல நிறங்களில் வந்தன. மக்கள் ஆப்பிளின் பரம ரசிகர்களானார்கள். அள்ளிக்கொண்டார்கள்.

ஸ்டீவ் இசைப் பிரியர். அப்போது கிடைத்த எல்லா MP 3 பிளேயர்களும் அவரைப் பொறுத்தவரை, `'குப்பை." அவற்றில் 16 பாடல்களுக்குமேல் சேமிக்க செய்யமுடியாது என்பதுதான் அதற்கு காரணம். 2001 வந்தது, 1000 பாடல்கள் சேமிக்கும் திறன் கொண்ட ஐபாட் (iPod). இத்தகைய தயாரிப்புக்காகத்தான் இத்தனை நாட்கள் காத்துக்கொண்டிருந்ததுபோல், மக்கள் வரிசையில் காத்திருந்து வாங்கினார்கள்.

தொலைநோக்கு சிந்தனை

ஸ்டீவ் தொலைநோக்கு கொண்டவர். செல்போன்கள் பிரபலமாகத் தொடங்கியிருந்த நாட்கள். 2005 இல் உலகம் முழுதும் 83 கோடி செல்போன்கள் விற்பனையாயின. இதில் கேமரா இருந்ததால், பெரும்பாலானோர் செல்போனில் போட்டோ எடுத்தார்கள்.

கேமரா வாங்குவதை நிறுத்தினார்கள். இதேபோல், செல்போனின் எம்பி 3 பிளேயர் ஐபாடைக் காணாமல் போகச் செய்துவிடும் என்று பயந்தார். செல்போனை அரங்கேற்ற முடிவு செய்தார். தன் செல்போனில் அதிரடி வித்தியாசமாக ஏதாவது செய்யவேண்டும். என்ன செய்யலாம்?

தொடு திரை செல்போன்

மனித உடல் அவயவங்களில் கை விரல்கள் அற்புதமான படைப்பு என்பது ஜாப்ஸ் எண்ணம். கைவிரல்களால் எப்போதும் ஏதாவது செய்து கொண்டேயிருப்பார். விரல்கள், விரல்கள், விரல்கள்... இவற்றை அடிப்படையாக வைத்து ஏதாவது வித்தியாசம் காட்டமுடியுமா? அவரும் டிசைன் டீமும் தூக்கம் மறந்தார்கள். வந்தது வடிவமைப்புப் புரட்சி. ஆப்பிள் செல்போனில் கீபோர்ட் கிடையாது. 26221614 என்னும் எண்ணுக்கு போன் செய்யவேண்டுமா? திரையில் இந்த எண்களைத் தொட்டால் போதும்.

இதேபோல், செல்போனின் எல்லா இயக்கங்களும் கீ அழுத்தலால் அல்ல, கை விரல் வருடலால். அதுவரை இருந்த ஸ்க்ரீன் பிளாஸ்டிக்கால் ஆனது. வருடல் சிரமமாக இருந்தது. ``கண்ணாடி ஸ்க்ரீன் போடுவோம்" என்றார் ஸ்டீவ். ஆனால், இது விசேஷக் கண்ணாடி. இந்தத் தயாரிப்பாளரைத் தேடித் கண்டுபிடித்தார்கள்.

இத்தனை உழைப்பும், இத்தனை மெனக்கெடலும் பயன்தந்தன. 2007 -ல் சந்தைக்கு வந்த ஐபோன் தான் உலக வரலாற்றிலேயே அதிக விற்பனை படைத்த எலெக்ட்ரானிக் கருவி என்னும் சிறப்புப் பெற்றது. வெற்றிச் சரித்திரம் கம்பீரம் குறையாமல் தொடர்கிறது.

தொழில்நுட்பத் தொழில் வேக வேகமான மாற்றங்கள் வரும் தொழில். இன்று முன்னணியில் இருக்கும் நிறுவனங்கள் நாளையே கால வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படும், காணாமல் போகும்.

39 ஆண்டுகளாக, ஆப்பிள் தொழில் நுட்பத் தில் நம்பர் 1 கம்பெனியாக வாடிக்கை யாளர்கள், பொதுமக்கள், கம்ப்யூட்டர் துறை வல்லுநர்கள் என எல்லோராலும் கொண்டாடப்படுகிறது.

சாதாரணமாகப் புதுப் புதுப் பொருட் களைக் கண்டுபிடிக்கும் கம்பெனிகள் மட்டுமே இத்தகைய மேன்மையை அடைய முடியும். ஆனால், ஆப்பிள் கம்பெனி, மவுஸ், GUI, கம்ப்யூட்டர், டேப் ரெக்கார்டர், ஃபோன், வாட்ச் ஆகிய தன் தயாரிப்புகளில் ஒன்றைக்கூடக் கண்டுபிடிக்கவில்லை.

பிறர் கண்டுபிடித்த கம்ப்யூட்டர், டேப் ரெக்கார்டர், ஃபோன், வாட்ச் ஆகிய பொருட்களில்தாம் தங்கள் கைவரிசையைக் காட்டியிருக்கிறார்கள்.

தொட்ட பொருட்களையெல்லாம் துலங்க வைத்திருக்கிறார்கள். இது ஒரு பொசிஷனிங் மேஜிக். ஆப்பிள், வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளை மிஞ்சும் தயாரிப்புகளைத் தந்து அவர்களை ஆனந்த அதிர்ச்சியில் ஆழ்த்தும் நிறுவனம் என்று உலகம் முழுக்க மக்கள் மனங்களில் இருக்கும் அழுத்தமான நம்பிக்கை.




 

சனி, 19 டிசம்பர், 2015

மிலாது நபி, கிறிஸ்துமஸ், புத்தாண்டு விழாக்கள்: பள்ளிகளுக்கு 24-ந் தேதி முதல் ஜனவரி 1-ந் தேதி வரைவிடுமுறை; பள்ளிக்கல்வி இயக்குனர் அறிவிப்பு

மிலாது நபி, கிறிஸ்துமஸ், புத்தாண்டு விழாக்களையொட்டி 24-ந் தேதி முதல் ஜனவரி 1-ந் தேதி வரை அனைத்துபள்ளிகளுக்கும் விடுமுறை என்று பள்ளிக்கல்வி இயக்குனர் ச.கண்ணப்பன் தெரிவித்தார். மழை வெள்ள பாதிப்பு மழை வெள்ளம் காரணமாக பாதிக்கப்பட்ட சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், கடலூர் ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு 33 நாட்கள் விடுமுறை விடப்பட்டது. இதனால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டது.இந்த நிலையில், 24-ந் தேதி மிலாது நபி, 25-ந் தேதி கிறிஸ்துமஸ், ஜனவரி 1-ந் தேதி புத்தாண்டு ஆகியவை வருகின்றன. இந்த 3 நாட்களும் பள்ளிகளுக்கு விடுமுறை
விடப்படுமா? என்ற குழப்பத்தில் ஆசிரியர்களும், மாணவர்களும் இருந்தனர். இதுகுறித்து பள்ளிக்கல்வி இயக்குனர் ச.கண்ணப்பனிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-24-ந் தேதி முதல்
விடுமுறை2015-2016-ம் கல்வி ஆண்டுக்கான பள்ளிக்கூட விடுமுறைகள் ஏற்கனவே முடிவு செய்யப்பட்டு அச்சிடப்பட்டுஉள்ளது. அதன்படி தமிழ்நாடு முழுவதும் அனைத்து பள்ளிகளுக்கும் 24-ந் தேதி முதல் ஜனவரி 1-ந் தேதி வரைவிடுமுறைவிடப்பட்டுள்ளது. மிலாது நபி, கிறிஸ்துமஸ், புத்தாண்டு விழாக்கள் இந்த விடுமுறையில்அடங்கும்.சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், கடலூர் ஆகிய 4 மாவட்டங்களில்எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் 24,
25, 27, ஜனவரி 1-ந் தேதி ஆகிய 4 நாட்கள் மட்டும் நடத்தக்கூடாது. மற்ற நாட்களில் சிறப்பு வகுப்புகள் இந்த 4 மாவட்டங்களில் மட்டும் நடத்தப்பட வேண்டும்.
இவ்வாறு ச.கண்ணப்பன் தெரிவித்தார்.

வியாழன், 17 டிசம்பர், 2015

ஆ.மாதவனுக்கு இந்த ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது


தமிழ் எழுத்தாளர் ஆ.மாதவனுக்கு இந்த ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அவரது 'இலக்கிய சுவடுகள்' என்ற திறனாய்வு நூலுக்காக இந்த விருது வழங்கப்படுகிறது.

கேரளாவில் பிறந்து அங்கேயே வளர்ந்தவர். குடும்பச் சூழ்நிலை காரணமாக பள்ளிப்படிப்பை நிறுத்திவிட்டு வேலைக்குச் சென்றார். பின்னர், செல்வி ஸ்டோர் என்று சொந்தமாக கடை நடத்தி வந்தார். 

இவரது சிறுகதைகள் முழு நூலாக வெளிவந்துள்ளது, கிருஷ்ண பருந்து உட்பட 3 நாவல்களையும் படைத்துள்ளார் ஆ.மாதவன். குறுநாவல்கள் சிலவும் இவரது படைப்புகளில் அடங்கும். 

திருவனந்தபுரத்தின் சாலைத்தெருவை பின்னணியாகக் கொண்டு இவர் எழுதிய சிறுகதைகள் தமிழ் நவீன சிறுகதை இலக்கியங்களில் குறிப்பிடத்தகுந்த இடம் பெற்றுள்ளது. திருவனந்தபுரத்தின் வணிக வீதியான சாலைத்தெருவில் அன்றாடம் நடக்கும் வாழ்க்கைப் போராட்டங்களை தனக்கேயுரிய நடை மற்றும் வடிவத்தில் வழங்கினார். மானுட கதாபாத்திரங்களாயினும் விலங்காயினும் வாழ்க்கைப் போராட்டமே இவரது கதைக்கரு. வாழ்க்கைப் போராட்டத்தை அதன் தன்மையிலேயே நவிற்சி கொள்ளச் செய்யும் எழுத்து வகை இவருடையது.

குறிப்பாக தீபம் இதழில் இவர் எழுதிய 'பாச்சி' என்ற கதையை குறிப்பிடலாம். தெருவில் குற்றுயிராகக் கிடக்கும் நாய் ஒன்றினை எடுத்து வளர்க்கும் ஏழைத் தொழிலாளியின் மனநிலையைச் சித்தரிக்கும் கதை ஆழமானது.

இவர் தனது எழுத்து நடை திராவிட இயக்கத்திலிருந்து பெற்றதாக பேட்டி ஒன்றில் குறிப்பிட்டுள்ளார். அதாவது தமிழ் மொழிவளர்ச்சியில் திராவிட இயக்கம் செய்த பங்களிப்பு மிக முக்கியமானது என்று கூறும் ஆ.மாதவன், அவர்களது அரசியல் வேறு என்று ஏற்கெனவே குறிப்பிட்டதும் கவனிக்கத்தக்கது. மேலும் தமிழின் சிறந்த படைப்பாளிகளான லா.ச.ராமாமிர்தம், புதுமைப்பித்தன், தி.ஜானகிராமன் ஆகியோரது படைப்புகளிலிருந்தும் தாக்கம் பெற்றார் அ.மாதவன். 

இவரது முதல் புத்தகம் மோகபல்லவி 1974-ல் வெளிவந்தது. ஆனால் தமிழில் இவரை அறிவித்தது 'கடைத்தெரு கதைகள்' என்ற தலைப்பில் வெளியான 16 சிறுகதைகள் கொண்ட தொகுதியே. இதுவும் 1974-ல் வெளிவந்தது. புனலும் மணலும் என்ற நாவலும் அதே ஆண்டு வெளியானது. 1980-ல் இவரது முக்கியமான நாவலாகக் கருதப்படும் 'கிருஷ்ணப் பருந்து' வெளிவந்தது. 

3-வது நாவல் தூவானம் 1987-ம் ஆண்டு வெளிவந்தது. எட்டாவது நாள் இவரது முதல் குறுநாவல், இதனைத் தொடர்ந்து காளை என்ற மற்றொரு குறுநாவல் வெளியானது. இவையிரண்டு கடைத்தெரு கதைகள் தொகுப்பில் இடம்பெற்றுள்ளன.

இவரது நூல்களை இவ்வாறாக பட்டியலிடலாம்: கடைத்தெரு கதைகள், மோகபல்லவி, காமினி மூலம், ஆனைச்சத்தம், மாதவன் கதைகள், அரேபிய குதிரை (1995), ஆ.மாதவன் கதைகள் (2002), ஆ.மாதவன் முத்துக்கள் பத்து என 7 தொகுப்புகள் இவருக்கு சொந்தமானவை.

2013-ம் ஆண்டு இலக்கியச் சுவடுகள் என்ற தலைப்பில் இவரது திறனாய்வுக் கட்டுரைகள் வெளிவந்தது. இந்தத் தொகுப்புக்குத்தான் தற்போது சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் மொழி மட்டுமல்லாது மலையாளத்திலும் புலமை பெற்றவர் ஆ.மாதவன். மலையாளத்திலிருந்து சில நாவல் மொழிபெயர்ப்புகளையும் அவர் செய்துள்ளார். காரூர் நீலகண்டப்பிள்ளை எழுதிய மலையாள நாவலை 'சம்மானம்' என்றும் பி.கே.பாலகிருஷ்ணன் எழுதிய நாவலை 'இனி நான் உறங்கட்டும்' என்றும் தமிழில் மொழியாக்கம் செய்துள்ளார்.

மேலும் தொகுப்பாசிரியராக, இதழாசிரியராகவும் இவர் பணி மேற்கொண்டுள்ளார். சாகித்ய அகாடமி விருது கிடைத்துள்ள 'இலக்கியச் சுவடுகள்' தொகுப்பைப் பற்றி ஆ.மாதவன் குறிப்பிட்டதை மேற்கோள் காட்டுவது பொருத்தமாக இருக்கும்:

"என்னைப் பொருத்தவரை எனது இலக்கிய வாழ்க்கை உலகின் பெருமை போர்த்தி வரும் முதல் கட்டுரைத் தொகுப்பு- இந்த இலக்கியச் சுவடுகள். இன்று எனக்கே பிரமிப்பாக இருக்கிறது."

முதல் விஷ்ணுபுரம் இலக்கிய விருதைப் பெற்றவர் ஆ.மாதவன் என்பதும் குறிப்பிடத்தக்கது.
 

திங்கள், 14 டிசம்பர், 2015

ஒரே நேரத்தில் இரு படிப்பை முடித்த ஆசிரியைக்கு பதவிஉயர்வு கிடையாது: உயர் நீதிமன்றம் உத்தரவு

பணியில் இருந்து கொண்டே ஒரே நேரத்தில் இரு படிப்பை முடித்த ஆசிரியைக்கு
பதவிஉயர்வு கிடையாது: உயர் நீதிமன்றம் உத்தரவு

பணியில் தொடர்ந்தவாறு ஒரே நேரத்தில் பி.எட். மற்றும் முதுநிலை ஆங்கில இலக்கிய பட்டப்படிப்பை முடித்த ஆசிரியைக்க ுமுதுகலை பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு வழங்க மறுத்தது சரிதான் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசு மேல்நிலைப் பள்ளியில் பட்டதாரி ஆசிரியையாகபணிபுரிந்து வருபவர், தனக்குமுதுநிலை பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு வழங்க உத்தரவிடக் கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல்செய்தார். அவர் மனுவை தனி நீதிபதி தள்ளுபடி செய்ததால், அவர் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார்.அந்த மனுவை
விசாரித்து நீதிபதிகள் வி.ராமசுப்பிரமணியன், என்.கிருபாகரன் ஆகியோர் பிறப்பித்த உத்தரவு:

மனுதாரர் இடைநிலை ஆசிரியராக 1986-ல் பணியில் சேர்ந்துள்ளார். 1988-ல் இளங் கலை ஆங்கில இலக்கியம் முடித்துள்ளார்.பின்னர் 1989-ல் ஓராண்டு பி.எட். மற்றும் 1990-ல் இரண்டாண்டு முதுகலை ஆங்கில இலக்கியம் முடித்துள்ளார். இவ் விரண்டு படிப்புகளையும் அவர் ஆசிரியராக பணிபுரிந்து கொண்டே படித்துள்ளார். இது எப்படி முடிந்ததுஎன்பதுதெரியவில்லை. பொதுவாக பணியில் இருக்கும் ஒருவரால் ஒரு படிப்புக்கே நேரம் ஒதுக்க முடியாது. இவர் இருபடிப்புகளை படித்துள்ளார். அந்த கல்வி தரமானதாகஇருக்குமா என்ற சந்தேகம் ஏற்படுகிறது.பணியில் இருந்துகொண்டே ஒரே
நேரத்தில் இரு படிப்புகளை முடித்த காரணத்தால் மனுதாரருக்கு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு வழங்க மறுத்துபள்ளிக் கல்வி இயக்குநர் கடந்த ஆண்டு உத்தரவிட்டுள்ளார்.

இதை எதிர்த்து மனுதாரர் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவிட்டதில் தவறில்லை.மேலும் மனுதாரர் யுஜிசி நிபுணர் குழுவின் தீர்மானத்தையும் மீறியுள்ளார்.

எனவே கூடுதல் கல்வித் தகுதி அடிப்படையில் தனக்கு பதவி உயர்வு வழங்க உத்தரவிடக் கோரிய மனுதாரர் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது எனநீதிபதிகள் உத்தரவில் கூறியுள்ளனர்.

சனி, 12 டிசம்பர், 2015

நெட் தேர்வுக்கான நுழைவுச்சீட்டு வெளியிடப்பட்டுள்ளது

டிசம்பர் 27 ல் நடைபெற உள்ள நெட் தேர்வுக்கான நுழைவுச்சீட்டு வெளியிடப்பட்டுள்ளது நுழைவுச்சீட்டினை தற்போது CBSC NET இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்

நெட் தேர்வினை தமிழ் பாடத்தில் எழுத உள்ளவர்கள்களுக்கு இலவச ஆலோசனை

டிசம்பர் 27 ல் நடைபெற உள்ள நெட் தேர்வினை தமிழ் பாடத்தில் எழுத உள்ளவர்கள்களுக்கு தாள் 1 உட்பட இலவச ஆலோசனை பெற தொடர்பு கொள்ளவும்
9698836047

செவ்வாய், 8 டிசம்பர், 2015

அடையாற்றில் மனைவியுடன் அடித்துச் செல்லப்பட்ட சீனிவாசன்: வெளியில் தெரியாமல் போன ஒரு தமிழ் நேசரின் இறுதிப் பயணம்

மனைவி சங்கராந்தியுடன் ஸ்ரீநிவாஸ்
மனைவி சங்கராந்தியுடன் ஸ்ரீநிவாஸ்

கொட்டித் தீர்த்த கனமழை சென் னையை வதம் செய்தது மட்டு மல்லாது வரலாற்றில் தடம் பதித்த சில முக்கியப் பிரமுகர்களின் மரணத்தைக் கூட அடுத்த வீட்டுக்குத் தெரியாமல் அடக்கிப் போட்டுவிட்டது.

ஸ்ரீநிவாஸ் - தமிழர்கள் அரசியல் அடிமைத்தனத்தை விட்டு தமிழால் முன்னுக்கு வரவேண்டும் என்ப தையே மூச்சாக கொண்டிருந்தவர். வி.எஸ்.என்.எல். நிர்வாகத்துடன் இணைந்து இணையம் வழியாக வும் பொதுத்தேர்வு முடிவுகளை வெளியிட வைத்ததில் பெரும் பங்காற்றியவர். இணையப் பயன்பாடு பணக்காரர்கள், கார்ப் பரேட் முதலாளிகளுக்கு மட்டுமான சொத்து என்பதை தகர்த்து சாமானி யர்களும் அதைப் பயன்படுத்தும் வகையில் தமிழ் மென்பொருட் களை அறிமுகம் செய்தவர்.

சைவத் தமிழ்

`தெய்வமுரசு' ஆன்மிக மாத இதழின் பதிப்பாளராக இருந்த இவர், எஸ்.ஆர்.எம். பல்கலைக் கழகத்தின் தமிழ் பேராயத்துடன் இணைந்து சைவத் தமிழ் பட்டயப் படிப்பை நடத்தியவர். ஸ்ரீநிவாஸ் இப்போது உயிரோடு இல்லை என்ற செய்தி அவரைச் சார்ந்தவர்களுக்கே கூட தெரியாது. ஆர்ப்பரித்து ஓடிய அடையாற்று வெள்ளம் அவரையும் அவரது மனைவி சங்கராந்தியையும் இணை பிரிக்காமல் இழுத்துச் சென்றுவிட்டது. இரண்டு நாட்கள் கழித்து ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அடையாளம் காணப்பட்ட இருவரது உடல்களும் ஞாயிற்றுக்கிழமை மாலை, பெசன்ட்நகர் மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டன.

ஈக்காட்டுத்தாங்கல் மாஞ் சோலை தெருவில் ஸ்ரீநிவாஸ் வீடு. பக்கத்து தெருவில் அவரது தம்பி கந்தசாமியின் வீடு. அடையாற் றில் வெள்ளம் வந்து கொண்டிருந் ததால் தம்பியின் வீட்டுக்குள் தண்ணீர் புகுந்துவிடுமோ என்று செவ்வாய்க்கிழமை இரவு முழுக்கத் தூங்காமல் உழன்று கொண்டே இருந்திருக்கிறார் ஸ்ரீநிவாஸ். புதன்கிழமை பொழுது விடிந்ததுமே அலைபேசியில் தம்பியைத் தொடர்புகொண்டவர், அவரை தனது தெரு முனைக்கு வரும்படி சொல்லியிருக்கிறார்.

அப்படிச் சொல்லிவிட்டு தனது வீட்டைவிட்டு இறங்கி தெருவில் இறங்கி நடந்தவரை பேயென பாய்ந்து வந்த வெள்ளம் அதன் போக்கிலேயே இழுத்துச் சென்று விட்டது. இதைப் பார்த்துக் கதறித் துடித்த சங்கராந்தியையும் விட்டு வைக்கவில்லை அடையாற்று வெள்ளம்.

தங்கர் பச்சான் புகழாரம்

தனது நண்பர் ஸ்ரீநிவாஸுடனான தனது நினைவுகளை `தி இந்து' விடம் பகிர்ந்து கொண்டார் திரைப்பட இயக்குநர் தங்கர் பச்சான். 2004-ல் `தென்றல்' படம் எடுத்தபோது ஸ்ரீநிவாஸோடு எனக்கு அறிமுகம். தமிழில் குடமுழுக்கு விழாக்களை நடத்த வேண்டும் என்ற முழக்கத்தை முன்னெடுத்த அவர், உலகத்தில் 16 இடங்களில் கோயில்களைக் கட்டி அங்கெல்லாம் தமிழ் வழிபாட்டுக்கு ஏற்பாடு செய்ததுடன், அங்கே தமிழ் முறைப்படி திருமணம் செய்பவர்களுக்கு இலவசமாகவே (திருமண) மண்டபமும் ஏற்பாடு செய்து தந்தார்.

அவரிடம் உதவி கேட்டு வரும் இளைஞர்களுக்கு தன்னுடைய சர்வதேச தொடர்புகளை வைத்து, இருந்த இடத்தில் இருந்தபடியே வேலை வாய்ப்புகளை அவர் ஏற்படுத்தித் தந்ததைப் பார்த்திருக் கிறேன்.

`தமிழ் வணிகர்களின் முன்னேற்றத்துக்காக' தமிழ் தொழில்முனைவோர் மையம் என்ற அமைப்பையும் தொழிலில் நலிந்துபோன தமிழர்களுக்கு தோள் கொடுப்பதற்காக ஒரு தனி அமைப்பையும் ஏற்படுத்தியவர் ஸ்ரீநிவாஸ்.

தமிழர்களை அரசியல் அடிமைத் தனத்தில் இருந்து மீட்பதற்காக இந்திய முன்னேற்றக் கழகம் என்ற அரசியல் சார்பற்ற அமைப்பை அவரது ஏற்பாட்டில் டிசம்பர் 7-ல் நானும் தமிழருவி மணியன் அண்ணனும் முறைப்படி தொடங்கி வைப்பதாக இருந்த நிலையில் அதற்கு ஒரு நாள் முன்னதாக நிவாஸை எரியூட்டும் கொடு மைக்கு இயற்கை எங்களை ஆட்படுத்திவிட்டதையும், தமிழுக் காக தன்னையே அர்ப்பணித்துக் கொண்ட அந்த மாமனிதருக்கு ஏற்பட்ட இறுதி முடிவு யாருக்குமே தெரியாமல் போய்விட்டதையும் என்னவென்று சொல்வது?'' வலியுடன் வார்த்தைகளை முடித் தார் தங்கர் பச்சான்.

"தமிழ் எழுத்தில் எண்களைக் கொண்ட கடிகாரம், தமிழ் எண் நாள்காட்டி, தமிழ் கடிகாரத் துக்கு மொபைல் செயலி உள்ளிட்டவைகளை உருவாக் கிய ஸ்ரீநிவாஸ், பன்னிரு திருமுறை களையும் மொபைலில் படிக்கும் வசதியை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தார். அதற்குள்ளாக அவருக்கு இப்படியொரு முடிவு ஏற்பட்டுவிட்டது'' என்று வருத்தப் பட்டுச் சொன்னார் ஸ்ரீநிவாஸின் சகோதரர் கந்தசாமி.


வியாழன், 3 டிசம்பர், 2015

தமிழகத்தின் வெள்ள சேதங்களை நேரில் பார்வையிடுவதற்காக, பிரதமர் இன்று சென்னை வந்தார்



 தமிழகத்தின் வெள்ள சேதங்களை நேரில் பார்வையிடுவதற்காக, பிரதமர் நரேந்திர மோடி (இன்று) வியாழக்கிழமை சென்னை வந்தார்.

டெல்லியில் இருந்து மோடி தனி விமானம் மூலம் இன்று பிற்பகல் அரக்கோணம் ராஜாளி கடற்படை விமானத் தளத்துக்கு வந்தடைந்தார். அங்கிருந்து அடையாறு ஐஎன்எஸ் விமான தளத்துக்கு வந்தார்.

இந்தியக் கடற்படைக்குச் சொந்தமான அடையாறு ஐஎன்எஸ் விமான ஏவுதளத்தில் இருந்து ஹெலிகாப்டர் வாயிலாக வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்வையிடுகிறார்.

பிரதமரிடம் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், வெள்ள பாதிப்புகளை விளக்குவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெள்ள பாதிப்புகளைப் பார்வையிட்டபின் முதல்வரைச் சந்தித்துப் பேசுவார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

மோடி தன் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் "கடுமையான வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னையின் நிலையை ஆய்வு செய்வதற்காக சென்னை புறப்படுகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

அமைச்சர்களுடன் மோடி ஆய்வு

முன்னதாக, தமிழகத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளம் தொடர்பாக உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், நிதி அமைச்சர் அருண் ஜேட்லி, நகர்ப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு உள்ளிட்ட அமைச்சர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி நேற்று ஆலோசனை நடத்தினார்.

இது தொடர்பாக மக்களவையில் அமைச்சர் வெங்கய்ய நாயுடு கூறும்போது, "தமிழகத்தின் வெள்ளச்சேதம் குறித்து இன்று பிரதமர் மோடி தீவிர ஆலோசனை நடத்தினார். அதில் நான், உள்துறை மற்றும் நிதி அமைச்சர் ஆகியோர் கலந்து கொண்டு வெள்ள சேதம் பற்றிய தகவல்களை தெரிவித்தோம். தமிழக முதல் அமைச்சர் ஜெயலலிதாவுடன் நேற்று தொலைபேசியில் பேசிய பிரதமர் வெள்ளசேதம் குறித்து விவர மாகக் கேட்டறிந்தார்.

அப்போது மத்திய அரசால் இயன்ற அனைத்து உதவிகளையும் அளிப்பதாக உறுதி அளித்திருந்தார். தமிழக வெள்ள சேதம் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் தலைமையில் உயர் நிலை ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது. நிவாரண நடவடிக்கைகளுக்காக, மத்திய அமைச்சகத்தின் உயர் அதிகாரிகள் பல்வேறு அமைப்புகளுடன் தொடர்பு கொண்டு பேச உள்ளனர். வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் ஈடுபட்டுள்ளனர்.

கடற்படை, தரைப்படை மற்றும் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். மேலதிக உதவிகளும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்"


சைகை மொழி :அதிசய கிராமம்!


பாலி நாட்டில் உள்ள பெங்கலா கிராமத்தில் 3 ஆயிரம் குடும்பங்கள் வசிக்கின்றன. இங்கு கடா கோலோக் என்ற நூற்றாண்டு பழமையான சைகை மொழி சரளமாக எல்லோராலும் பயன்படுத்தப்படுகிறது. இங்கே காது கேட்காத, வாய் பேச முடியாதவர்களை மிகவும் உயர்வாக மதிக்கிறார்கள். உலகிலேயே காது கேட்காத, பேச முடியாத மக்கள் அதிகமாக இருக்கும் இடம் பெங்கலா கிராமம்தான். அவர்களிடம் பேசுவதற்காக உருவானதே சைகை மொழி. தாய்மொழியைப் போலவே ஒவ்வொருவரும் இந்தச் சைகை மொழியையும் இயல்பாகக் குழந்தைப் பருவத்திலேயே கற்றுக்கொள்கிறார்கள்.

இவர்களின் சைகை மொழி தனித்துவம் வாய்ந்தது. கடந்த 7 தலைமுறைகளாக இங்கே காது கேட்கும் பெற்றோருக்கு, காது கேட்காத குழந்தைகளும், காது கேட்காத பெற்றோருக்குக் காது கேட்கும் குழந்தைகளும் பிறக்கின்றன. இதனால் சைகை மொழி தவிர்க்க முடியாததாகி விட்டது. குறைபாடு உடையவர்களை மட்டமாகப் பார்ப்பதோ, பரிதாபமாகப் பார்ப்பதோ இவர்களிடம் இல்லை. எல்லோரையும் ஒரே மாதிரி மதிக்கும் பழக்கம் இங்கே நிலவுவதால், யாருக்கும் தங்கள் குறையை நினைத்து வருத்தமே இல்லை. ''தேவா கோலோக் என்ற கடவுளின் பரிசுதான் காது கேளாமை என்று நாங்கள் நம்புகிறோம். வாய் பேச முடியாமல் போவதற்குக் காரணம், வெகு காலத்துக்கு முன்பு ஒருவரை ஒருவர் சபித்துக்கொண்டார்கள்.

அதிலிருந்து இந்த கிராமத்தில் 2 குறைபாடுகளும் சர்வ சாதாரணமாகிவிட்டன'' என்கிறார் கிராமத்து தலைவர் மர்டானா. பள்ளியிலும் மொழி பாடங்களோடு சைகை மொழியும் ஒரு பாடமாக இருப்பதால் பக்கத்து கிராமத்து குழந்தைகளும் இந்த மொழியைக் கற்றுக்கொள்கிறார்கள். பெங்கலா கிராமம் இப்பொழுது உலகப் புகழ் பெற்றுவிட்டது. சுற்றுலாப் பயணிகள், சமூக ஆர்வலர்கள், காது கேட்காதவர்கள் என்று பலரும் இங்கே வந்து செல்கிறார்கள். அவர்களுக்காகக் காது கேட்காதவர்கள் ஸ்பெஷல் நடன நிகழ்ச்சியை நடத்திக் காட்டுகிறார்கள்.



 

புதன், 2 டிசம்பர், 2015

EPIC Number / வாக்காளர் அடையாள எண் : IEB0877886