புதன், 23 டிசம்பர், 2015

100 சதவீத தேர்ச்சிக்காக 5 மாண வர்களை வெளி யேற்றிய தனியார் பள்ளி!


பத்தாம் வகுப்பு தேர்வில் 100 சதவீத தேர்ச்சிக்காக 5 மாண வர்களை தனியார் பள்ளி வெளி யேற்றிய சம்பவம் 'தி இந்து' நாளி தழில் நேற்று முன்தினம் செய்தி வெளியானது. இந்த விவகாரத்தில் முதன்மை கல்வி அலுவலர் தலை யிட்டதைத் தொடர்ந்து மாணவர் கள் மீண்டும் பள்ளியில் சேர்க் கப்பட்டனர். மேலும், மாணவர் களை தகுந்த காரணமின்றி வெளி யேற்றினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தனியார் பள்ளிகளுக்கு அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மதுராந்தகம் அடுத்த கருங்குழி பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளி ஒன்று நூறு சதவீத தேர்ச்சிக்காக 10-ம் வகுப்பு படிக்கும் 5 மாணவர்களுக்கு மாற்று சான்றிதழ் வழங்கி பள்ளி யிலிந்து வலுக்கட்டாயமாக வெளி யேற்றியதாக பெற்றோர் தரப்பில் புகார் எழுந்தது. மீண்டும் பள்ளி யில் சேர்க்க வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் கஜலட்சுமியிடம் பெற் றோர் மனு அளித்தனர்.

இது முதன்மை கல்வி அலுவல ரின் கவனத்துக்கு நேரடியாக கொண்டு செல்லப்பட்டது. மேலும் இதுபற்றிய செய்தி 'தி இந்து' தமிழ் நாளிதழில் நேற்றுமுன்தினம் வெளியானது.

இதையடுத்து காஞ்சிபுரம் மாவட்ட முதன்மை கல்வி அலு வலர், தனியார் பள்ளியின் தலைமை ஆசிரியரை நேரில் அழைத்து விசாரணை நடத்தினார். இதில், வெளியேற்றப்பட்ட மாணவர்கள் மீது பள்ளி நிர்வாகம் தெரிவித்த புகார் ஏற்புடையதாக இல்லை எனக்கூறி 5 பேரையும் மீண்டும் பள்ளியில் சேர்க்க உத்தரவிட்டார். இதை தொடர்ந்து மாணவர்கள் மீண்டும் சேர்க்கப்பட்டனர்.

இதுகுறித்து, முதன்மை கல்வி அலுவலர் உஷா 'தி இந்து' விடம் கூறியதாவது: தனியார் பள்ளி நிர்வாகத்திடம் விளக்கம் கேட்கப் பட்டது. மேலும், ஒன்றாம் வகுப்பி லிருந்து 10-ம் வகுப்புவரை பள்ளியில் படித்து வந்த மாணவர் களை திடீரென, சரியாக படிக்க வில்லை எனக்கூறி வெளியேற்றி யது சரியான முடிவல்ல என தெரி வித்து மீண்டும் பள்ளியில் சேர்க்கப்பட்டுள்ளனர். மேலும், இதுமாதிரியான புகார்கள் தொடர்ந் தால், தனியார் பள்ளி நிர்வாகங்கள் மீது கல்வித்துறை சார்பில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அனைத்து பள்ளிகளுக்கும் இது தொடர்பாக சுற்றறிக்கை அனுப்பப் பட்டுள்ளது.

மாணவர்களின் நலன் கருதி, சரியாக படிக்காத மாணவர்களுக் காக சிறப்பு வகுப்புகளை நடத்தி, அவர்களை கல்வியில் சிறந்து விளங்கும் வகையில் மாற்ற வேண் டியது பள்ளி மற்றும் ஆசிரியர்களின் கடமை. இதை அனைத்து பள்ளி நிர்வாகங்களும் புரிந்து செயல்பட வேண்டும் என்றார்.

இதுகுறித்து, மாணவர்களின் பெற்றோர்கள் கூறியதாவது: தனி யார் பள்ளிகளின் நடவடிக்கைகள் குறித்து 'தி இந்து'தமிழ் நாளிதழில் செய்தி வெளியானதால்தான் கல் வித்துறை அதிகாரிகள் விரைந்து செயல்பட்டு பிள்ளைகளை மீண்டும் பள்ளியில் அனுமதித்துள்ளனர். பிள் ளைகள் நல்ல முறையில் கல்வி கற்பதற்கான அனைத்து முயற்சி களையும் பள்ளி நிர்வாகத்துடன் இணைந்து நாங்களும் செயல் படுவோம் என்றனர்.


 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக