சனி, 13 ஆகஸ்ட், 2016
'செட்' தேர்வு முடிவு தாமதம் : பாதிக்கப்படும் பட்டதாரிகள்
உதவி பேராசிரியர் தகுதிக்கான, 'செட்' தேர்வு முடிவுகள், இன்னும் வெளியிடப்படாததால், பேராசிரியர் பணிக்கு செல்ல முடியாமல் பட்ட தாரிகள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.தமிழக இன்ஜினியரிங் கல்லுாரிகளில், 192உதவி பேராசிரியர் இடங்கள் நிரப்பப்பட உள்ளன.இதற்கு வரும், 17ம் தேதி முதல் விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன; செப்., 7க்குள் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து, அளிக்கவேண்டும். ஆனால், விண்ணப்பிக்க முடியாமல் இளம் பட்டதாரிகள் பாதிக்கப்பட்டு உள்ளனர். காரணம், பேராசிரியர் பணியில்mசேர்வதற்கான, 'செட்' தகுதி தேர்வு, கடந்த பிப்ரவரியில் நடந்தது; 85 ஆயிரம் பேர் எழுதினர். ஆனால், தேர்வு நடந்து ஆறு மாதங்கள் ஆகியும், இன்னும் முடிவுகள் வெளியிடப்படவில்லை. அதனால், உதவி பேராசிரியர் பணிக்கு, விண்ணப்பிக்க முடியாமல், அவதிக்குஆளாகி உள்ளனர். அதேபோல், மனோன்மணியம், பாரதியார் உள்ளிட்ட பல பல்கலைகளும், உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கு அழைப்புவிடுத்துள்ளன. பலருக்கு தகுதிஇருந்தும், செட் தேர்வு முடிவு தாமதத்தால், பணிக்கு விண்ணப்பிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக