ஐஐடி மாணவர் சேர்க்கை முறையில் அடுத்த ஆண்டு அதிரடி மாற்றம் கொண்டுவரப் படுகிறது. மெரிட் பட்டிய லுக்கு பிளஸ் 2 மதிப்பெண் கணக்கில் கொள்ளப்படாது. அதேநேரத்தில், பிளஸ் 2 தேர்வில் பெற்றிருக்க வேண் டிய குறைந்தபட்ச மதிப்பெண் உயர்த்தப்பட்டுள்ளது.
இந்தியாவில் சென்னை, மும்பை, ஹைதராபாத், கான் பூர், கரக்பூர், டெல்லி உட்பட 22 இடங்களில் ஐஐடி எனப் படும் உயர் தொழில்நுட்பக் கல்வி நிறு வனங்கள் இயங்கி வருகின்றன.
மொத்தமுள்ள 10,575 இடங்களுக்கு அகில இந்திய அளவில் 6 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவி கள் ஆண்டுதோறும் போட்டியிடுகிறார்கள்.
2017-ம் ஆண்டு முதல் ஐஐடி மாணவர் சேர்க்கை யில் அதிரடி மாற்றத்தைக் கொண்டுவர மத்திய அரசு முடிவுசெய்துள்ளது. அதன் படி, இனி மெயின் தேர்வு மெரிட் பட்டியலுக்கு பிளஸ் 2 மதிப்பெண் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாது. நுழைவுத் தேர்வு மதிப்பெண் ணுக்கே 100 சதவீத வெயிட் டேஜ் கொடுக்கப்படும்.
அதேநேரத்தில் பிளஸ் 2 தேர்வில் மாணவர்கள் பெற்றி ருக்க வேண்டிய குறைந்தபட்ச மதிப்பெண் தகுதியும் மாற் றியமைக்கப்பட உள்ளது. தற்போது, பிளஸ் 2 தேர்வில் குறைந்தபட்சம் 45 சதவீத (இட ஒதுக்கீட்டுப் பிரி வினருக்கு 40 சதவீதம்) மதிப்பெண் அவ சியமாக உள்ளது. இது 75 சதவீதமாக உயர்த்தப்படு கிறது. இட ஒதுக்கீட்டுப் பிரி வினருக்கு 65 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனவே, ஜெஇஇ மெயின் தேர் வில் மெரிட் பட்டியலுக்கு வெயிட்டேஜ் தரப்படவில் லையே என்று பிளஸ் 2 மதிப்பெண்ணை (இயற் பியல், வேதியியல், கணிதம்) மாணவர்கள் உதாசீனப் படுத்திவிட முடியாது.
என்ஐடி, ஐஐஐடி உள்ளிட்ட உயர் தொழில்நுட்பக் கல்லூரி களில் மாணவர் சேர்க்கைக் கான இந்த புதிய நடைமுறை 2017 முதல் பின்பற்றப்படும் என்று மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து பேராசிரியர் ப.வே.நவநீதகிருஷ்ணனிடம் கேட்டபோது, "ஜெஇஇ மெயின் தேர்வில் பிளஸ் 2 மதிப்பெண்ணுக்கான வெயிட் டேஜ் நீக்கப்பட்டிருப்பது தமிழக மாணவர்களுக்குப் பாதிப்புதான். காரணம், பிளஸ் 2 தேர்வுக்கு தமிழக மாணவர்கள் அதிக முக்கியத்துவம் கொடுத்து படிப்பார்கள். அந்தவகை யில், பிளஸ் 2 தேர்வில் அதிக மதிப்பெண் பெறும் மாணவர்களுக்கு முந்தைய நடை முறை சாதகமாக இருந்திருக்கும். புதிய முறையில் பிளஸ் 2 மதிப்பெண்ணுக்கு வெயிட்டேஜ் தரப்படாததால் பாதிப்பு தான்" என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக