செவ்வாய், 13 ஆகஸ்ட், 2013

JOIND DIRECTOR -TRANSFER AND PROMOTIONS -in school education dept


பள்ளிக்கல்வித்துறையில் 12 இணை இயக்குநர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். 

 இடமாற்றம் 
1. ஏ.கருப்பசாமி – இணை இயக்குநர்–பணியாளர் தொகுதி 
 2. வி.பாலமுருகன் – இணை இயக்குநர் (மேல்நிலைக்கல்வி, பள்ளிக்கல்வி இயக்கம் 
3. எம்.பழனிச்சாமி – இணை இயக்குநர் (இடைநிலைக்கல்வி), பள்ளிக்கல்வி இயக்கம் 
 4. தர்ம.ராஜேந்திரன் – இணை இயக்குநர்–தொழிற்கல்வி 
5. என்.லதா – இணை இயக்குநர்–பணியாளர் தொகுதி, தொடக்கக்கல்வி இயக்ககம் 
6. சி.செல்வராஜ் – இணை இயக்குநர்–உதவி பெறும் பள்ளிகள், தொடக்கக்கல்வி இயக்ககம் (
7. எஸ்.சேதுராமவர்மா – இணை இயக்குநர்–மெட்ரிக் பள்ளிகள் 
8. வீ.ராஜேஸ்வரி – இணை இயக்குநர்–மேல்நிலைக்கல்வி, அரசு தேர்வுகள் இயக்ககம் 
9. டி.உமா – இணை இயக்குநர், இடைநிலைக்கல்வி, அரசு தேர்வுகள் இயக்ககம் 
10. எஸ்.உமா – இணை இயக்குனர்–பயிற்சிகள், மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் 
11. எஸ்.கார்மேகம் – கூடுதல் உறுப்பினர், ஆசிரியர் தேர்வு வாரியம் 
12. பி.ராமராஜ் – கூடுதல் உறுப்பினர், ஆசிரியர் தேர்வு வாரியம்

முதன்மை கல்வி அலுவலர்கள் 4 பேருக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டு இருக்கிறது
பதவி உயர்வு 
1. பள்ளிக்கல்வி இயக்ககத்தில் துணை இயக்குநராகப் (முதன்மை கல்வி அதிகாரி அந்தஸ்து) பணிபுரியும் ஜா.சுதர்சன் பதவி உயர்வுபெற்று மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் இணை இயக்குனராக (நிர்வாகம்) நியமிக்கப்படுகிறார். 

2. திருவள்ளூர் மாவட்ட கூடுதல் முதன்மை கல்வி அலுவலர் எஸ்.சுகன்யா பதவி உயர்வு பெற்று பள்ளி சாராக மற்றும் வயது வந்தோர் கல்வி இணை இயக்குநராக பணிஅமர்த்தப்படுகிறார். 

3. திருவள்ளூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் எஸ்.நாகராஜ முருகன் பதவி உயர்வு பெற்று அனைவருக்கும் கல்வி இயக்ககத்தில் இணை இயக்குநராக நியமிக்கப்படுகிறார். 

4. ஈரோடு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கே.ஸ்ரீதேவி பதவி உயர்வு பெற்று மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் இணை இயக்குநராக (பாடத்திட்டம்) பணிஅமர்த்தப்பட்டுள்ளார். இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

திங்கள், 12 ஆகஸ்ட், 2013

மதுரையில், தமிழுக்கு ஏற்பட்டுள்ள சோதனை

மதுரை மாவட்டத்தில், அரசு உயர்நிலை பள்ளிகளில் கணிதம், அறிவியல், சமூக அறிவியல் பாடங்களுக்கு இரண்டு ஆசிரியர்கள் உள்ளது போல், தமிழ் பாடத்திற்கும் இரண்டு ஆசிரியர்கள் நியமிக்க வேண்டும் என, தமிழாசிரியர்கள் எதிர்பார்க்கின்றனர்.

மாவட்டத்தில், 90க்கும்மேல் அரசு உயர் நிலை பள்ளிகள் உள்ளன. பல பள்ளிகளில் 200க்கும் மேல் மாணவர்கள் படிக்கின்றனர். இதில், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் பாடங்கள் நடத்த இரண்டு ஆசிரியர்கள் உள்ளனர். ஆனால், 300 மாணவர்கள் படிக்கும் பள்ளிகளில்கூட ஒரு தமிழாசிரியர் மட்டுமே உள்ளார். இதனால், தாய் மொழியை மாணவர்களுக்கு கற்றுக் கொடுப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அன்சுல் மிஸ்ரா கலெக்டராக இருந்தபோது, அப்போதைய மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் நாகராஜ முருகன் மேற்பார்வையில், 15 கல்வி ஒன்றியங்களில் மூன்றாம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை மாணவர்களிடையே தமிழ் பாடத்தில் "கல்வித்திறமை' குறித்த ஆய்வு செய்யப்பட்டது. இதில், 12,074 பேருக்கு உயிரெழுத்துக்களை கடைசி வரை வாசிக்க தெரியவில்லை. 27,556 பேர் பிழையாக வாசித்தனர். 14,053 பேருக்கு முழுவதுமாக எழுத தெரியவில்லை. 27,335 பேருக்கு வாக்கியம் அமைத்து எழுத தெரியவில்லை என கண்டறியப்பட்டது. ஆனால், இதற்கான தீர்வு குறித்து எந்த நடவடிக்கையும் கல்வி அதிகாரிகள் இதுவரை எடுக்கவில்லை. 

தமிழாசிரியர் கழக தலைவர் முனியாண்டி, செயலாளர் முருகேசன் ஆகியோர் கூறியதாவது:அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்ட உயர்நிலை பள்ளிகளுக்கு தமிழாசிரியர் தேவைப்பட்டது. அப்போது, பணிநிரவல் அடிப்படையில், உயர் நிலைப்பள்ளியில் இரண்டு தமிழாசிரியர்களில் ஒருவரை பணிமாற்றம் செய்தனர். ஆனால், புதிய ஆசிரியர்கள் இதுவரை நியமிக்கவில்லை. பற்றாக்குறையால், உடற்கல்வி, ஓவிய ஆசிரியர்களை கொண்டு தமிழ் பாடம் எடுக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது, என்றனர். சங்கம் வளர்த்த மதுரையில், தமிழுக்கு ஏற்பட்டுள்ள சோதனை குறித்து, கல்வி அதிகாரிகள் அக்கறை செலுத்த வேண்டும்.

Source : DINAMALAR

ஞாயிறு, 11 ஆகஸ்ட், 2013

TNTET EXAM LATEST NEWS : corected hall ticket down load now


ஆசிரியர் தகுதித் தேர்வைக் கண்காணிக்க ஒவ்வொரு மாவட்டத்துக்கும் பள்ளிக்
கல்வித் துறை சார்பில் பொறுப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். 

ஆசிரியர் தகுதித் தேர்வைக் கண்காணிக்க ஒவ்வொரு மாவட்டத்துக்கும் பள்ளிக் கல்வித் துறை சார்பில் பொறுப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான இறுதிக்கட்டப் பணிகள் இப்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன. ஒவ்வொரு மாவட்டத்திலும் தேர்வு தொடர்பாக அடுத்த வாரம் ஆலோசனைக் கூட்டங்கள் நடைபெறும் எனத் தெரிகிறது. ஆசிரியர் தகுதித் தேர்வு ஆகஸ்ட் 17, 18 ஆம் தேதிகளில் நடைபெற உள்ளது. ஆகஸ்ட் 17-ம் தேதி முதல் தாள் தேர்வு நடைபெற உள்ளது. மொத்தம் 687 தேர்வு மையங்களில் 2 லட்சத்து 71 909 பேர் இந்தத் தேர்வை எழுதுகின்றனர்.
ஆகஸ்ட் 18-ம் தேதி இரண்டாம் தாள் தேர்வு நடைபெறுகிறது. இந்தத் தேர்வை 1,070 மையங்களில் மொத்தம் 4 லட்சத்து 15, 942 பேர் எழுதுகின்றனர். சுமார் 7 லட்சம் பேர் எழுதும் இந்தத் தேர்வுக்கான ஏற்பாடுகளை ஆசிரியர் தேர்வு வாரியம் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட ஆட்சியர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவினர் வினாத்தாள் காப்பு மையங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு, பறக்கும் படைகளை அமைத்தல், தேர்வு மையங்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்குதல் போன்ற பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில், தேர்வு சுமூகமாகவும், எந்தவிதப் பிரச்னையும் இன்றி நடைபெற பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் மாவட்ட பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். 
1. விழுப்புரம் - இயக்குநர் தங்கமாரி
2. கடலூர் - இணை இயக்குநர் உமா
3. காஞ்சிபுரம் - இயக்குநர் இளங்கோவன்
4. திருவள்ளூர் - இணை இயக்குநர் உஷாராணி
5. சென்னை - DIRECTOR அறிவொளிஉள்பட 31 மாவட்டங்களுக்கு பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். . 
திருத்தப்பட்ட ஹால்டிக்கெட்டுகள் இணையதளத்தில் பதிவேற்றம் ஆசிரியர் தகுதித் தேர்வுக்குப் பிழைகளுடன் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்த ஹால் டிக்கெட்டுகள் திருத்தப்பட்டுள்ளன. ஹால் டிக்கெட்டுகள்  இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டன. 

முதல் தாள் தேர்வுக்கு 48 ஹால் டிக்கெட்டுகளும், இரண்டாம் தாள் தேர்வுக்கு 834 ஹால் டிக்கெட்டுகளும் திருத்தப்பட்டு பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். ஆசிரியர் தகுதித் தேர்வு தாள்களுக்கு வெவ்வேறு ஊரில் தேர்வு மையங்கள் போன்ற குறைபாடுகள் ஹால் டிக்கெட்டில் உள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரியத்துக்குப் புகார்கள் வந்தன. இதுதொடர்பாக செய்திகளும் வெளியாயின. இதையடுத்து, திருத்தப்பட்ட ஹால் டிக்கெட்டுகள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.



TRB PG CORECTED FINAL KEY EXPECTED SOON


முதுகலை ஆசிரியர் தேர்வு

முதுகலை ஆசிரியர் தேர்வுக்கான, இறுதி, "கீ-ஆன்சர்', வரும், 20ம் தேதிக்குள் வெளியிடப்படும் என, டி.ஆர்.பி., வட்டாரங்கள் தெரிவித்தன. 
கடந்த மாதம், 21ம் தேதி, முதுகலை ஆசிரியர் தேர்வு நடந்தது. 1.67 லட்சம் பேர், தேர்வை எழுதியுள்ளனர். இதற்கான, தற்காலிக, "கீ-ஆன்சர்', டி.ஆர்.பி., இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. கேள்வி மற்றும் விடைகள் குறித்து, 1,000 தேர்வர்கள், மாற்று கருத்துக்களை தெரிவித்துள்ளனர். 

தேர்வர்களின் கருத்துக்களை, பாட வாரியான நிபுணர் குழு, ஆய்வு செய்து வருகிறது. இது குறித்து, டி.ஆர்.பி., வட்டாரங் கள் கூறுகையில், "விடை தவறாக இருந்தால், அதற்குரிய மதிப்பெண், தேர்வர்களுக்கு வழங்கப்படமாட்டாது. மாறாக, சம்பந்தபட்ட கேள்வி, தேர்வில் இருந்து நீக்கப்படும். சரியான கேள்வி, பதில்களுக்கு மட்டும், மதிப்பெண்கள் வழங்கப் பட்டு, 20ம் தேதிக்குள், இறுதி, "கீ-ஆன்சர்' வெளியிடப்படும்,' என, தெரிவித்தன. 
ஒவ்வொரு கேள்விக்கும், 1 மதிப்பெண் வீதம், மொத்தம், 150 மதிப்பெண்களுக்கு, கேள்விகள் கேட்கப்பட்டன. இதில், 10 முதல், 15 கேள்விகளோ அல்லது அதற்கான 
பதில்களோ தவறாக கொடுக்கப்பட்டிருக்கலாம் என, கூறப்படுகிறது. எனவே, 150 மதிப்பெண்களில், 15 மதிப்பெண்கள் வரை நீக்கப்பட்டு, மீதமுள்ள மதிப்பெண்கள் அடிப்படையில், தேர்வுப் பட்டியல் வெளியிடப்படும் என்று கூறப்படுகிறது.

சனி, 10 ஆகஸ்ட், 2013

THE TEACHER...

                                        டில்லிக்குப் போறேன் .....


ஒரு ஆசிரியர் எப்படி இருக்க வேண்டும் என்பதை ஒரு பாடப்புத்தக வடிவில் சொல்லாமல் கொஞ்சம் இலக்கிய ரசனையோடும் சமூகப் பார்வையோடும் சொல்ல முயற்சிக்கும் ‘கனவு ஆசிரியர்’ தொகுப்பு நூலை வாசித்து முடித்தபோது, நூலில் மிகச்சிறந்ததாகத் தோன்றியது பொன்னீலன் எழுதிய இந்தக் கட்டுரை. உபதேசங்கள் ஏதும் இல்லாமல், அற்புதமான கதைவடிவில் இலட்சிய வகுப்பறை ஒன்றை கண்முன் நிறுத்தியது. கனவு ஆசிரியர் எப்படிப்பட்டவராக இருக்க வேண்டும் என்பதை இதைவிட
அழகாகச் சொல்லிவிட முடியாது. எனக்கு மிகவும் பிடித்துப்போன இந்தக் கட்டுரையை பதிப்பகத்தாரின்அனுமதி பெற்று பகிர்கிறேன். வாசித்துப் பாருங்கள், உங்களுக்கும் பிடிக்கும்.

                                                              * * * 

ஒரு காலத்தில் புகழ்பெற்று விளங்கிய பள்ளி அது. மேற்கத்திய சமயப் பிரச்சாரகர்கள் இந்தியாவின் தென்பகுதியில் கல்விப்பணி தொடங்கிய காலத்தில் முளைத்து வளர்ந்த முதல் பள்ளிகளில் ஒன்று. ... அந்த மேல்நிலைப்பள்ளி ஆய்வுதான் இரண்டு நாட்களாக நடந்து கொண்டிருக்கிறது. இரண்டாம் நாள் மத்தியானம் ஆயாச்சா, எல்லாருக்கும் சலிப்பு. எப்படா மணி மூணு ஆகும், ஆசிரியர் கூட்டம் நடக்கும், இந்தச் சனியன் பள்ளிக்கூடத்தை விட்டு எப்பப் போவான் என்ற எண்ணம்தான் ஆசிரியர் குலத்துக்கு. நானோ, பள்ளிக்கூடத்தின் இண்டு இடுக்கெல்லாம் தேவையில்லாமல் மோப்பம்
பிடித்துக்கொண்டு அலைகிறேன்.
 “அய்யா. ”
நீலப்பட்டு சரசரக்க, பின்னால் வந்து கொண்டிருந்த தலைமை ஆசிரியர் அம்மாவின் கனிந்த குரல் என் தோளைப் பிடித்து நிறுத்துகிறது.
“என்னம்மா...? ”
“மணி மூணாகுது பெல்லடிக்கச் சொன்னீங்கன்னா, ஆசிரியர் கூட்டத்துக்கு... ”
“கொஞ்சம் பொறுங்கம்மா. 7சி ஒண்ணு மட்டும் பாக்கி. இந்தாப் பாருங்க, எல்லா வகுப்புகளும் பாத்தாச்சி. அந்த வகுப்புக்கும் அழைச்சிக்கிட்டுப் போங்க. அஞ்சே நிமிசத்துல வேல முடிஞ்சிரும்.”
“கிழக்கு மூலையில இருக்கே, அதுதான்யா 7 சி. சத்துணவுக் கூடத்த ஒட்டி ஒரு தற்காலிகக் கொட்டாயில் நடக்குது.
புது வகுப்பறை கட்ட செக்கரட்ரிகிட்ட பலமுறை சொல்லியாச்சி. இந்த வருசம் எப்படியாவது கட்டிருவாங்க. ”
“அதுக்கென்ன, சும்மா எட்டிப் பார்த்திட்டு வந்திருவோம் வாங்க.”
“ஐயா, செக்கரட்டரி மூணு தடவ ஞாபகப்படுத்திட்டாருய்யா... உங்க பேச்சக் கேக்கறதுக்காக எல்லாரும் ஆவலோட காத்துக்கிட்டிருக்காங்க.”
 “அதெல்லாம் பிறகு, முதல்ல எனக்கு ஏழு சி வகுப்பு.” 
“உடைஞ்ச சுவரு. ஒடிஞ்ச மேச நாற்காலி. அங்க எந்தப் புதுமையும் இருக்காதுய்யா. தயவுசெய்து வாங்க.”
என் சந்தேகம் வலுக்கிறது.
முந்திய நாள் பிற்பகலில் நடந்த சிறிய சம்பவம் அது. “எம்எஸ்சியில் தங்கப்பதக்கம் வாங்கிய ஒரு மிகச்சிறந்த இளம் ஆசிரியையின்  வகுப்பு உங்களுக்கு நிச்சயம் பிடிக்கும்” என்று சொல்லி ஒரு ஒன்பதாம் வகுப்பறைக்கு அழைத்துச் சென்றிருந்தார் இதே தலைமையாசிரியர். வகுப்பறையை நெருங்கும்போதே தெரிந்துவிட்டது அங்கே ஏகப்பட்ட முன் தயாரிப்புகள் செய்யப்பட்டிருக்கிறது என்று. தோரணங்களும், வண்ண வண்ணப் படங்களுமாக வகுப்பறை அப்டீ சிலுசிலுத்தது. சுவர் பூராவும் அறிவியல் வரைபடங்களின் அணிவகுப்புகள். ஆசிரியரும் மாணவர்களும் செய்திருந்த ஒப்பனைகளோ, அதற்கும் மூணுபடி மேலே!
எல்லாவற்றையும் பார்த்துவிட்டு, “ரொம்ப நல்லதும்மா, உங்க பாடத்த நடத்துங்க” என்றேன். எல்லாமே தயாராக வைத்திருந்தார் அந்த அம்மா. சார்ட்டுகளைத் தொங்கவிட்டு, தேவைக்குக் கரும்பலகையையும் பயன்படுத்தி, ஒரு அறிவியல் சோதனை ஆலாபனையே செய்யத் தொடங்கி விட்டார். சோதனைக்குரிய கருவிகள் எல்லாம் மேசையில் தயாராக இருந்தன.
அவற்றையும் மெச்சத் தகுந்த வகையில் பயன்படுத்தினார். நாற்சந்தியில் மோடி மஸ்தானைப் பார்த்துக்கொண்டு நிற்கும் அப்பாவி மக்களைப் போலக் கண்கள் வியந்து பிளக்க, மாணவர்கள் அந்த ஆசிரியையின் அசைவுகளைக் கவனித்துக் கொண்டு உட்கார்ந்திருந்தார்கள்.
ஐந்து நிமிடத்திற்கு மேல் என்னால் தாக்குப்பிடிக்க முடியவில்லை.
“ஏம்மா, அந்தச் சாராய விளக்கைக் கொளுத்தறதுக்காவது ஒரு மாணவியை அழைத்திருக்கலாம்ல? ” என்றேன்.
“அது சார்…” என ஆசிரியர் ஏதோ சொல்லத் தொடங்க, அதை நான் காதில் வாங்கிக்கொள்ளாமலே வெளியே வந்து விட்டேன்.
இவ்வளவு தண்டனை போதாதா அவருக்கு. பின்தொடர்ந்து வந்த தலைமையாசிரியர் அம்மா திரும்பத் திரும்பக் கேட்டார். வகுப்பு “நல்லால்லையா அய்யா?”
“நீச்சலடிக்கக் கத்துக் கொடுக்கிறதுக்கு வகுப்பறையில படம் போட்டு விளக்கினா எப்படி?” என்றேன் நான்.இதை வைத்துக்கொண்டுதான் தலைமையாசிரியர் இப்போது இந்த வகுப்பைப் பார்வையிட விடாமல் என்னைத் தடுக்கிறாரோ என்ற சந்தேகம் எனக்குள் வலுத்தது. அந்த வகுப்பைப் பார்த்துவிட வேண்டும் என்ற பிடிவாதமும் வளர்ந்தது.
ஏற்கெனவே தலைமை ஆசிரியர் காட்டிய திசையில், சுள்ளென்று விழும் வெயிலில் நடக்கத் தொடங்கி விட்டேன். பின்னால் வந்து கொண்டிருந்த தலைமையாசிரியர் இப்போது என்னைத் தாண்டி முன்னால் போக முயன்றார். “அம்மா, என் பின்னாடி வாங்க,” தலைமையாசிரியரைச் சற்று அதட்டினேன். “அந்த வகுப்ப நான் என்ன பண்ணப்போறேன்? பதட்டப்படாம வாங்க.”
தலைமையாசிரியர் பதட்டப்பட்டது முற்றிலும் நியாயம்தான். நான் நினைத்ததைவிடப் பரிதாபமாகத் தோற்றமளித்தது அந்த வகுப்பறை. இடுப்புயரச் செம்மண் சுவரின் மேலே மூங்கில் தூண்களின் தாங்கலில், சாய்ந்து கிடந்தது கீத்துக்கூரை. வகுப்பறையிலோ ஒரே கூச்சல், யாரும் வந்து எட்டிப் பார்க்க மாட்டார்கள் என்கிற தைரியம் போல. குட்டை மண்சுவரின் அந்தப்பக்கம் மேசையைச் சுற்றிக் கூடிக் கிடந்தார்கள் மாணவர்கள். சிலர் நிமிர்ந்து நிற்க, பலர் முழங்கைகளை மேசையில் ஊன்றிச் சாய்ந்து கிடந்தார்கள். ஆசிரியர் எங்கே? பின்பக்கம் இருந்த உயரமான பூசப்படாத மண்சுவரில் சாய்ந்து கிடந்த நாற்காலியில்அவரும் சாய்ந்து கிடந்தார். கருப்பு முகம். தன் ஒற்றைச்சடையை ஒய்யாரமாக நெஞ்சில்
போட்டுக்கொண்டு  மாணவர்களோடு பேசிக் கொண்டிருந்தார் அவர். தலைமையாசிரியர் முகத்தில் கலவரம். மீண்டும்என்னைத் தாண்ட அவர் முயன்றார். நான் அவரைக் கையமர்த்தித் தடுத்துவிட்டு வகுப்பை உற்றுக்கவனித்தேன். ஏதோ ஒரு காரியத்தில் வகுப்பு தீவிரமாக ஈடுபட்டிருக்கிறது என்பது போலத் தெரிந்தது. வகுப்பின் கண்ணில் படாதவாறு ஒதுங்கி நின்று கொண்டு, என்ன நடக்கிறதெனப் பார்த்தேன். டீச்சரம்மாவின் கணீரென்ற குரலும் பளீரென்ற பல்வரிசையும் என்னைக் கூர்மைப்படுத்தின.
“ஞாபகம் வச்சிக்கோ, வேற இடத்துக்குப் போனா திரும்பி வர முடியாது. அங்கேயே கிடக்க வேண்டியதுதான், புரியுதா?”
“புரியுது டீச்சர்.”
“எங்கே போகணும், சொல்லுங்க.”
“டில்லிக்கு !” கோரசாகக் கூச்சலிடுகிறார்கள் குழந்தைகள்.
“யார் போறா?” “நான் போறேன் டீச்சர்.”
டீச்சர் கையிலிருந்த பிரம்பை மாணவன் ஒருவன் வெடுக்கெனப் பிடுங்கினான். மெலிந்த உருவம், கால்சட்டையின் பின்பக்கம்
கிழிசல். நான் படித்த காலத்தில் இம்மாதிரிக் கிழிசலைத் தபால் பெட்டியாக்கிக் கடிதம்
போட்டு விளையாடியது நினைவு தட்டியது.
“எதிலடா போற?”
“பிளேன்ல டீச்சர் !” குச்சியை உயர்த்தி விமானம் போல் உம்ம்ம் என இரைந்தபடி வகுப்பறையில் அங்குமிங்கும் ஓடுகிறான் மாணவன்.
இரண்டு மூன்றுமுறை சுற்றிவிட்டு ஆசிரியர் பின்பக்கம் இருக்கும் சுவருக்கு ஓடுகிறான். அப்போதுதான் சுவரைக்
கவனிக்கிறேன். டீச்சருக்கு இடப்பக்கம், நைந்துபோன ஒரு தேசப்படம், சொரசொரப்பான அந்த மண்சுவரில் ஆணியில்
மாட்டப்பட்டிருக்கிறது. டில்லிக்குப் போகும் சிறுவனைக் குழந்தைகள் மூச்சுவிட மறந்து உற்றுப் பார்த்துக்
கொண்டிருக்கிரார்கள். சிறுவன் விமானத்திலிருந்து இன்னும் இறங்கவில்லை. விமானத்தின் ஓசையும் குறையவில்லை.
கையிலிருந்த கம்பு தேசப்படத்தில் அங்குமிங்கும் ஓடி, கடைசியில் ஒரு இடத்தைத் தொடுகிறது. “சேகர் கல்கத்தாவுல இறங்கிட்டான் டீச்சர் !” ஒரு பெண் குழந்தை கூச்சலிட, மற்ற குழந்தைகளின் தொடர்கூச்சலும்
கேலிச்சிரிப்புமாகக் கொந்தளிக்கிறது வகுப்பறை.
“அட முட்டாளே, எப்படிடா இனி ஊருக்குத் திரும்புவ? அங்கேயே கிட !” அதற்கும் மேலாகச் சத்தம் போட்டபடி டீச்சர்
அவனிடமிருந்து குச்சியைப் பிடுங்குகிறார். “இனி யாரு?”
“நான் போறேன் டீச்சர்” கையைத் தூக்குகிறாள் ஒரு சிறுமி
“உம், போ.” டீச்சர் அனுமதி தரவும், அவர் கையிலிருந்து கம்பைப் பிடுங்கிக்கொண்டு பயணத்துக்குத் தயாராகிறாள். பின்னப்பட்ட அவள் சடை, தேள்கொடுக்குப்போல மேல்நோக்கி நிமிர்ந்து நிற்கிறது. அதன் நுனியில் கட்டப்பட்ட ரிப்பன் மீன்வால் போல இரண்டு பக்கமும் விரிந்தபடி ஆடுகிறது.
“எதுல போறடீ ?”
“ரயில்ல போறேன் டீச்சர்.”
குப் குப் குப் குப் ரயில் கிளம்புகிறது. வகுப்பறையில் அந்தப் பக்கமாகவும் இந்தப்பக்கமாகவும்
வளைந்து நெளிந்து இந்தியாவையே இரண்டுமுறை சுற்றிவிட்டு, மூன்றாவது முறை ரயில் திடீரென தேசப்படத்தில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் நின்றே விடுகிறது. குழந்தைகள் கைதட்டி ஆரவாரம் செய்கின்றனர்.
“டீச்சர் சோபியா டில்லியில இறங்கிட்டா. ”
“சரி, எல்லாரும் ஜோராக் கை தட்டுங்க. ”
காணக் கிடைக்காத அற்புதம். மனம் நிறைந்து பொங்குகிறது எனக்கு. கதவில்லாத வாசல்வழி மெதுவாக நுழைகிறேன். என்னைப்
பார்த்துவிட்ட குழந்தைகள் தங்கள் இடங்களுக்கு ஓடுகிறார்கள்.
“வணக்கம் அய்யா !” அப்படி ஒரு பூரிப்பு அதுகள் முகத்தில். ஆசிரியரைப் பார்க்கிறேன். மேசையைப்
பிடித்தபடி நாற்காலியை முன்னே சாய்த்து நிலைப்படுத்தி இவ்வளவு சிரமப்பட்டு எழுந்து நிற்கிறாரே, கால் ஊனமுற்றவரோ?
அவர் எழுந்ததும் அந்த நாற்காலி திரும்பவும் சுவரில் சடக்கென்று சாய்ந்து விழுகிறது. ஓஹோ, நாற்காலிதான் பின்னங்கால்
ஒடிந்ததா? இதனால்தான் அப்படிச் சாயந்து கிடந்தாரா டீச்சர்?
“வணக்கம் அம்மா. வகுப்பு பிரமாதம் !” இரண்டு கையையும் கூப்பி வணங்கினேன்.
கிட்டத்தட்ட 15 ஆண்டுகள் ஆகிவிட்டன அந்தக் காட்சியை நான் பார்த்து. இன்றும் அந்த டீச்சரின் கருப்பு முகமும் கருந்திராட்சைக் கண்களும் வலது தோள் வழியே மார்பில் கிடந்த ஒற்றைச் சடையும் வட்ட முகத்தில் பொலிந்து நின்ற
உற்சாகமும், அடேயப்பா ! எத்தனையோ பள்ளிகளைப் பார்த்திருக்கிறேன். நூலகம், ஆய்வகம், அந்த அகம், இந்த அகம் எல்லா அகமும் இருக்கும்,
பயன்படுத்தப்படாமல் சிலந்திவலை படர்ந்து இருக்கும். பயன்படுத்த வற்புறுத்தினால் முகஞ்சுழித்துக்கொண்டு செய்வார்கள்
ஆசிரியர்கள். இதுவரை சேமிக்கப்பட்ட அறிவைத் தன்வயப்படுத்திக்கொள்ள வேண்டியவர்கள் மட்டுமல்ல குழந்தைகள். அவற்றைத்
தன்வயப்படுத்திக்கொண்டு, நாளைய தேவைகளுக்கான அறிவை உருவாக்க வேண்டியவர்களும் அவர்கள். இந்தப்
பேருண்மையை உணர்ந்து செயல்பட வேண்டியவர்கள் ஆசிரியர்கள். இதை எத்தனை பேர் உணர்ந்திருக்கிறார்கள்? மாணவர்களைப்
பயன்படுத்தாமல் வசப்படுத்தி, வழிப்படுத்தி, அறிவு வளர்ச்சியில் எத்தனைபேர் ஈடுபடுத்துகிறார்கள்? உருவாக்கப்பட்ட
அறிவை மீறி வளர மாணவர்களின் அறிவைப் பயன்படுத்தித் திறன்களை வசப்படுத்தி எத்தனைபேர் அவர்களை வடிவைக்கிறார்கள்? * * * இந்நூல் ஆசிரியர்களுக்கு மட்டுமானதல்ல, பெற்றோருக்கும் பயன்தரக்கூடியது. நூலை வாசிக்க வாசிக்க, ஒவ்வொருவரும்
தன் ஆசிரியர்கள், பள்ளி அனுபவங்கள், வாங்கிய அடிகள், வகுப்பறைச் சம்பவங்கள், சக நண்பர்கள் பற்றிய உங்கள் அனுபவங்களும்
இணையாக மனதுக்குள் ஓடுவதை உணர்வீர்கள். உங்கள் கடந்த காலத்தை மறுபடி வாழ்ந்து பார்ப்பீர்கள். நீங்கள் அறியாமலே உங்கள்
இதழ்களில் புன்னகை நெளிவதை உணர்வீர்கள். அந்த அனுபவத்துக்காகவும் இதைப் படிக்கலாம். * * * கனவு ஆசிரியர், க. துளசிதாசன், பாரதி புத்தகாலயம், 421 அண்ணா சாலை, சென்னை-18. 978-93-81908570. ரூ. 90.

வெள்ளி, 9 ஆகஸ்ட், 2013

TNPSC GROUP 4 NEWS: VERIFY YOUR APPLICATION

குரூப் - 4 தேர்வுக்கு விண்ணப்பித்த தேர்வர்கள், தங்களது விவரங்கள் சரியாக உள்ளதா என்பதை, தேர்வாணைய இணைய தளத்தில்பார்த்து, உறுதி செய்துகொள்ளலாம்'  --டி.என்.பி.எஸ்.சி., 

வரும், 25ம் தேதி, குரூப் - 4 தேர்வு நடக்கிறது. 5,566 பணியிடங்களை நிரப்ப நடக்கும் இத்தேர்வை எழுத, 17 லட்சத்திற்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. சரியான முறையில் விவரங்களை பதிவு செய்து, உரிய விண்ணப்ப கட்டணம் மற்றும் தேர்வு கட்டணத்தை செலுத்திய விண்ணப்பத்தாரர்களின் விவரங்கள், www.tnpsc.gov.in என்ற தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. தேர்வுக்கு விண்ணப்பித்த தேர்வர்கள், தங்களது பதிவு எண்களை பதிவு செய்து, இணையதளத்தில் உள்ள விவரங்கள் சரியாக உள்ளதா என்பதை சரிபார்த்துக் கொள்ளலாம்.

 அனைத்தையும் சரியாக செய்தும், உரிய விவரங்கள், இணைய தளத்தில் இல்லா விட்டால், contacttnpsc@gmail.com என்ற "இ- மெயில்' முகவரிக்கு, தகவல் தெரிவிக்கலாம். மெயிலில், பெயர், பதிவு எண், விண்ணப்ப, தேர்வுக்கட்டணம் விவரம், கட்டணம் செலுத்திய இடம் (அஞ்சலகம்/இந்தியன் வங்கி), அதன் முகவரி போன்ற விவரங்களை தெரிவிக்க வேண்டும். 

தகுதியான விண்ணப்பத்தாரர்கள், "ஹால் டிக்கெட்'டை பதிவிறக்கம் செய்வது குறித்த அறிவிப்பு, விரைவில் வெளியிடப்படும்.

Posts included in GROUP-IV Services, 2013 - 2014
(Date of Written Examination:25.08.2013)
RECEIPT OF APPLICATION (ACKNOWLEDGEMENT)

          CLICK HERE FOR YOUR APPLICATION STATUS   


  

TET NEWS. B.Ed தேர்வில் தோல்வியடைந்து பின் வெற்றி பெற்றவர்களுக்கு ஆசிரியர் தகுதி தேர்வுச் சான்றிதழ் வழங்க ஐகோர்ட் உத்தரவு


பி.எட்., தேர்வில் தோல்வியடைந்து, பின் வெற்றி பெற்றவருக்கு, ஆசிரியர் தகுதி சான்றிதழ் வழங்க, சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
கடந்த ஆண்டு, ஜூன் மாதம் நடந்த ஆசிரியர் தகுதி தேர்வில், வினோத்குமார் என்பவர் கலந்து கொண்டார். விளக்க குறிப்பேட்டின்படி, பி.எட்., அல்லது ஆசிரியர் கல்வியில் டிப்ளமோ இறுதி ஆண்டு தேர்வை எழுதுபவர்களும், ஆசிரியர் தகுதி தேர்வை எழுத முடியும். வினோத் குமாரைப் பொறுத்தவரை, பட்டப் படிப்பு முடித்த பின், பி.எட்., இரண்டாம் செமஸ்டர் தேர்வு எழுத இருந்தார். இதற்கிடையில், ஆசிரியர் தகுதி தேர்வை எழுதி, 93 மதிப்பெண் பெற்றார். 60 சதவீத மதிப்பெண் பெற்றிருந்தால், அதாவது, 90 மதிப்பெண் பெற்றால், ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றதாக கருதப்படுவர். வினோத்குமார், 93 மதிப்பெண் பெற்றதால், தேர்வில் தேர்ச்சி பெற்று விட்டார்; ஆனால், பி.எட்., தேர்வில், வினோத்குமார் வெற்றி பெறவில்லை.
கடந்த ஆண்டு, மே மாதம் நடந்த, பி.எட்., தேர்வில், வினோத்குமார் தேர்ச்சி பெறாததால், அவருக்கு ஆசிரியர் தகுதி சான்றிதழ் வழங்கப்படவில்லை. இதையடுத்து, சென்னை ஐகோர்ட்டில் வினோத்குமார், மனுத் தாக்கல் செய்தார்.
மனுவில், "கடந்த ஆண்டு, டிசம்பரில் நடந்த, பி.எட்., தேர்வில் வெற்றி பெற்று விட்டேன். அதனால், ஆசிரியர் தகுதி சான்றிதழ் பெற, உரிமை உள்ளது. எனக்கு, தகுதி சான்றிதழ் வழங்கும்படி, ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு உத்தரவிட வேண்டும்" என கூறப்பட்டு உள்ளது.

மனுவை, நீதிபதி அரிபரந்தாமன் விசாரித்தார். மனுதாரர் சார்பில், வழக்கறிஞர் ஆர்.குமாரவேல், ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில், கூடுதல் அரசு பிளீடர் சஞ்சய்காந்தி ஆஜராகினர்.

நீதிபதி அரிபரந்தாமன் பிறப்பித்த உத்தரவு:
கடந்த ஆண்டு பிறப்பிக்கப்பட்ட, விளக்க குறிப்பேட்டில், இதுபோன்ற சூழ்நிலைகளில் சான்றிதழ் வழங்குவது பற்றி, எந்த தகவலும் இல்லை; ஆனால், இந்த ஆண்டில் வெளியிடப்பட்ட, விளக்க குறிப்பேட்டில், பி.எட்., சான்றிதழை தாக்கல் செய்யும் பட்சத்தில், தகுதி தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு, சான்றிதழ் வழங்கப்பட வேண்டும் என, கூறப்பட்டுள்ளது. எனவே, தகுதி தேர்வில் வெற்றி பெற்றதால், அதற்கான சான்றிதழை பெற, மனுதாரருக்கு உரிமை உள்ளது. பி.எட்., சான்றிதழ் சமர்ப்பிக்கும் பட்சத்தில், மனுதாரருக்கு ஆசிரியர் தகுதிக்கான சான்றிதழை, ஆசிரியர் தேர்வு வாரியம் வழங்க வேண்டும்.
 இவ்வாறு, நீதிபதி அரிபரந்தாமன் உத்தரவிட்டு உள்ளார்.

SOURCE : தினமலர் 

வியாழன், 8 ஆகஸ்ட், 2013

SSLC RESULT PUBLISHED


Web adress for. SSLC SPECIAL SUPLIMENTARY 2013

 தேர்வர்கள் மதிப்பெண் சான்றிதழ்களை 19.08.2013 மற்றும் 20.08.2013 ஆகிய நாட்களில் அவர்கள் தேர்வெழுதிய மையங்களிலேயே நேரில் சென்று பெற்றுக்கொள்ளுமாறு அறிவிக்கப்படுகிறார்கள். மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க வேண்டிய நாள் மற்றும் செப்டம்பர் / அக்டோபர் 2013 சிறப்புத் தேர்வுக்கு விண்ணப்பிக்க வேண்டிய நாட்கள் விரைவில் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.


Government of Tamil Nadu
Directorate of Government Examinations
SSLC Special Supplementary Examination Results  - June / July 2013
   
Click here for SSLC SPECIAL SUPLIMENTARY 2013 EXAM RESULT

IDE. MADRAS UNIVERSITY MAY 2013 RESULT PUBLISHED

University Of Madras - May 2013 UG - Distance Examination results clMay 2013 UG - Examination results (Published on 07/08/12..



IDE - UG DEGREE EXAMINATION RESULTS - MAY -2013 Examination   
Published on 07-08-2013

Clicke here for madras university IDE RESULT 

Click here for DECEMBER 2013 EXAM APPLICATION FORM

SEPARATE EXAMINATION APPLICATION FORM WILL NOT BE SENT.

STUDENTS ARE DIRECTED TO DOWNLOAD THE APPLICATION FORM THROUGH THE WEBSITE ONLY

SSLC SPECIAL SUPLIMENTARY EXAM RESULT TODAY (08.08.2013)

SSLC SPECIAL SUPLIMENTARY EXAM RESULT TODAY (08.08.2013). AT 12.00 noon.
You. Can get result from. DGE. website.

புதன், 7 ஆகஸ்ட், 2013

TN TET. 2013 HELP LINE FOR CANDIDATES



TN TET 2013
CANDIDATS WHO HAVE ANY CLARIFICATION REGARDING HALL TICKET 
,EXAM CENTRE , CHANGE IN NAME, CHANGE IN PHOTO  etc can now get help from TRB DIRECTLY THROUG THE  HELP LINE  PHONE NUMBERS  GIVEN BELOW

TNTET HELP LINE 
044 - 28272455, 64525208, 64525209

TN TET HALL TICKET DOWN LOADE HERE


TN TET. HALL TICKET DOWN LOAD HERE


Teachers Recruitment Board  College Road, Chennai-600006

          Tamil Nadu TET for the year 2012–2013

Paper 1 Details

horizontal rule

Tamil Nadu Candidate          Puducherry Candidate








Teachers Recruitment Board  College Road, Chennai-600006

          Tamil Nadu TET for the year 2012–2013

Paper 2 Details

horizontal rule

Tamil Nadu Candidate          Puducherry Candidate











செவ்வாய், 6 ஆகஸ்ட், 2013

TNTET. HALL-TICKET DOWNLOAD

Teachers Recruitment Board  College Road, Chennai-600006

TAMIL NADU TEACHERS ELIGIBILITY TEST - 2013
        
           

Dated: 06-08-2013

Chairman

TN TET HALL TICKET DOWNLOAD NOW


ஆசிரியர் தகுதி தேர்வு 7லட்சம் பேருக்கு இன்று (06.08.2013) ஹால் டிக்கெட்
வெளியீடு 
| TET - 7 Lakh Hall Ticket published Today 
அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர்களாக பணியாற்ற ஆசிரியர் தகுதி தேர்வு எழுதி தேர்ச்சி பெற வேண்டும் என்று 2011ல் அரசு உத்தரவிட்டது. இதையடுத்து கடந்த ஆண்டு ஆசிரியர் தேர்வு முதல் முறையாக தமிழகத்தில் நடந்தது. அந்த தேர்வில் 76லட்சம் பேர் எழுதினர். ஆனால் பணியிடங்களைவிட மிகக்குறைந்த அளவிலே பட்டதாரிகள், இடைநிலை ஆசிரியர்கள் தேர்ச்சி பெற்றனர். இதனால் கடந்த ஆண்டே 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்கள் காலி ஏற்பட்டன.  இந்த ஆண்டுக்கான காலி இடங்களையும் சேர்த்து 17000 பணியிடங்கள்  இப்போது நிரப்ப வேண்டி நிலை உள்ளது. இந்த
ஆண்டுக்கான ஆசிரியர் தகுதித்தேர்வு வரும் 17, 18ம் தேதிகளில் நடக்கிறது. இதற்காக 12 லட்சம்விண்ணப்பங்களை டிஆர்பி அச்சிட்டு கடந்த மே மாதம் 31ம் தேதி முதல் வினியோகம் செய்தது.   சுமார் 7லட்சம்இடைநிலை மற்றும் பட்டதாரிகள் டிஇடி தேர்வு எழுத. விண்ணப்பித்துள்ளனர்.
Particulars of tn tet  given below

TAMIL NADU TEACHERS ELIGIBILITY TEST - 2013

1. List of Admitted Candidates in Paper I                      -        271909     (687 Centres)

2. List of Admitted Candidates in Paper II                      -       415942     (1070 Centres)

Date of Examination: Paper I  : 17.08.2013 Timing: 10:00 A.M to 01:00 P.M

Date of Examination: Paper II : 18.08.2013 Timing: 10:00 A.M to 01:00 P.M
Now you can download your hall ticket from trb website
http://trb.tn.nic.in

TN TET HALL TICKET DOWNLOAD NOW


ஆசிரியர் தகுதி தேர்வு 7லட்சம் பேருக்கு இன்று (06.08.2013) ஹால் டிக்கெட்
வெளியீடு 
| TET  7 Lakh Hall Ticket published Today 
அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர்களாக பணியாற்ற ஆசிரியர் தகுதி தேர்வு எழுதி தேர்ச்சி பெற வேண்டும் என்று 2011ல் அரசு உத்தரவிட்டது. இதையடுத்து கடந்த ஆண்டு ஆசிரியர் தேர்வு முதல் முறையாக தமிழகத்தில் நடந்தது. அந்த தேர்வில் 76லட்சம் பேர் எழுதினர். ஆனால் பணியிடங்களைவிட மிகக்குறைந்த அளவிலே பட்டதாரிகள், இடைநிலை ஆசிரியர்கள் தேர்ச்சி பெற்றனர். இதனால் கடந்த ஆண்டே 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்கள் காலி ஏற்பட்டன.  இந்த ஆண்டுக்கான காலி இடங்களையும் சேர்த்து 17000 பணியிடங்கள்  இப்போது நிரப்ப வேண்டி நிலை உள்ளது. இந்த
ஆண்டுக்கான ஆசிரியர் தகுதித்தேர்வு வரும் 17, 18ம் தேதிகளில் நடக்கிறது. இதற்காக 12 லட்சம்விண்ணப்பங்களை டிஆர்பி அச்சிட்டு கடந்த மே மாதம் 31ம் தேதி முதல் வினியோகம் செய்தது.   சுமார் 7லட்சம்இடைநிலை மற்றும் பட்டதாரிகள் டிஇடி தேர்வு எழுத. விண்ணப்பித்துள்ளனர்.
Particulars of tn tet  given below

TAMIL NADU TEACHERS ELIGIBILITY TEST - 2013

1. List of Admitted Candidates in Paper I                      -        271909     (687 Centres)

2. List of Admitted Candidates in Paper II                      -       415942     (1070 Centres)

Date of Examination: Paper I  : 17.08.2013 Timing: 10:00 A.M to 01:00 P.M

Date of Examination: Paper II : 18.08.2013 Timing: 10:00 A.M to 01:00 P.M
Now you can download your hall ticket from trb website
http://trb.tn.nic.in

NATIONAL AWARD FOR TAMILNADU TEACHERS

ஆசிரியர் தினமான செப்டம்பர் 5-ஆம் தேதி இந்த ஆசிரியர்களுக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி விருதுகளை நேரில் வழங்குகிறார். விருதுடன் ரூ.25 ஆயிரம் ரொக்கம், வெள்ளிப் பதக்கம், பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும். இதுதொடர்பாக விருது பெறும் ஒவ்வொரு ஆசிரியருக்கும் தனித்தனியே மத்திய அரசு கடிதம் அனுப்பியுள்ளது. விருதுக்கான பட்டியல் மாவட்டவாரியாக தயாரிக்கப்பட்டு, மாநில அரசு மூலம் மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டது. அந்தப் பட்டியலில் இருந்து 2012- ஆம் ஆண்டு விருதுக்கான ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர் 

விருது பெறும் ஆசிரியர்கள் விவரம்: தொடக்கக் கல்வி ஆசிரியர்கள்
 1. ஆர்.ராஜராஜேஸ்வரி - தலைமை ஆசிரியர், சென்னை நடுநிலைப் பள்ளி, அண்ணாசாலை, சென்னை.
 2. எஸ்.ரங்கநாதன் - தலைமை ஆசிரியர், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, மலைப்பாளையம், மதுராந்தகம் ஒன்றியம், காஞ்சிபுரம் மாவட்டம்
. 3. சி.சேகர் - தலைமை ஆசிரியர், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, முப்பதுவெட்டி, வேலூர் மாவட்டம்.
 4. ஜி.வி. மனோகரன் - தலைமை ஆசிரியர், சேந்தங்குடி நகராட்சி தொடக்கப் பள்ளி, மயிலாடுதுறை. 5. ஆர்.மாணிக்கம் - தலைமை ஆசிரியர், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, நெடுவாக்கோட்டை, மன்னார்குடி.
 6. டி.விஜயராணி - தலைமை ஆசிரியர், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, முல்லைக்குடி, பூதலூர் வட்டம், தஞ்சாவூர் மாவட்டம்.
 7. வி.துரைராஜன் - தலைமை ஆசிரியர், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, ஸ்ரீபுரந்தன், அரியலூர் மாவட்டம். 
8. கே. உஷாதேவி - தென் அரங்கநாதர் நடுநிலைப் பள்ளி, ஸ்ரீரங்கம், திருச்சி. 
9. எஸ்.லலிதா - தலைமை ஆசிரியர், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, மருதூர் சமயபுரம், லால்குடி வட்டம், திருச்சி. 
10. டி.தாரகேஸ்வரி - தலைமை ஆசிரியர், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, சிவயம் (மேற்கு), குளித்தலை வட்டம், கரூர் மாவட்டம். 
11. ஆர். செல்வ சரோஜா - தலைமை ஆசிரியர், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, வேம்பார்பட்டி, திண்டுக்கல். 
12. பி. கீதா சரஸ்வதி - தலைமை ஆசிரியர், மங்கையர்கரசி நடுநிலைப் பள்ளி, மதுரை மாவட்டம்.
 13. ஆர்.தங்கவேலு - தலைமை ஆசிரியர், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, காளிப்பட்டி, திருச்செங்கோடு
. 14. எஸ்.ராஜேந்திரன் - பி.ரங்கநாதன், தலைமை ஆசிரியர், ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி, ஆதனி, பவானி வட்டம். 
15. பி.ரெங்கநாதன் - தலைமை ஆசிரியர், ஸ்ரீ ராமகிருஷ்ணா தொடக்கப் பள்ளி, திசையன்விளை, ராதாபுரம் வட்டம், திருநெல்வேலி. 


இடைநிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்கள் 
1. வி.குருநாதன் - தலைமை ஆசிரியர், முத்தியால்பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளி, தம்புச் செட்டித் தெரு, சென்னை.
 2. டபிள்யூ. ஜெக செல்வி - ஆசிரியர், அரசு உயர் நிலைப் பள்ளி, பேயன்குழி, கன்னியாகுமரி. 
3. ஆர்.ஜெயகுமார் - தலைமை ஆசிரியர், அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, நந்திவரம், காஞ்சிபுரம் மாவட்டம். 
4. தங்கம் மூர்த்தி - முதல்வர், ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, மாரியம்மன் கோயில் தெரு, திருக்கோகர்ணம், புதுக்கோட்டை. 
5. எச். கல்யாணசுந்தரம் - தலைமை ஆசிரியர், டி.வி.எஸ். மேல்நிலைப் பள்ளி, லட்சுமிபுரம், மதுரை. 
6. ஆர்.குழந்தைவேலு - தலைமை ஆசிரியர், அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, தொண்டாமுத்தூர், கோவை. 
7. எல். லட்சுமணன் - தலைமை ஆசிரியர், அரசு மேல்நிலைப் பள்ளி, நஞ்சநாடு, நீலகிரி மாவட்டம்.

ஞாயிறு, 4 ஆகஸ்ட், 2013

TNPSC. GROUP II ANOUNCEMENT EXPECTED VERY SOON


100 உதவி வணிக வரி அதிகாரி, 48 சார்–பதிவாளர், 1,000–க்கும் மேற்பட்ட வருவாய் உதவியாளர் பதவிகள் உள்பட 3,500 காலி பணி இடங்களை நிரப்ப விரைவில் குரூப்–2 தேர்வு நடத்தப்பட உள்ளது. இதற்கான அறிவிப்பு ஓரிரு நாளில் வெளியிடப்படும். நகராட்சி கமிஷனர் (கிரேடு–2) தலைமைச் செயலக உதவி பிரிவு அதிகாரி (ஏ.எஸ்.ஓ.), சார்–பதிவாளர், உதவி வணிக வரி அதிகாரி, உதவி தொழிலாளர் ஆய்வாளர், பேரூராட்சி நிர்வாக அதிகாரி, இளநிலை வேலைவாய்ப்பு அதிகாரி, கூட்டுறவு தணிக்கை அதிகாரி, உள்ளாட்சி தணிக்கை உதவி ஆய்வாளர், சிறைத்துறை நன்னடத்தை அதிகாரி, வருவாய் உதவியாளர், ஊராட்சி உதவியாளர் உள்பட பல்வேறு விதமான பதவிகளை நிரப்புவதற்காக டி.என்.பி.எஸ்.சி. குரூப்–2 தேர்வு நடத்தப்படுகிறது.
 ஏதேனும் ஒரு பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் குருப்–2 தேர்வு எழுதலாம். பொதுப்பிரிவினருக்கு மட்டும் வயது வரம்பு 30 என்று நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. மற்ற அனைத்து வகுப்பினருக்கும் விதவைகளுக்கும் (பொதுப்பிரிவைச் சேர்ந்தவர்கள் உள்பட) எவ்வித வயது வரம்பும் கிடையாது. குறிப்பிட்ட சில பதவிகளுக்கும் மட்டும் அனைத்து வகுப்பினருக்கும் வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. கடந்த ஆண்டு 3,631 காலி இடங்களை நிரப்ப குரூப்–2 தேர்வு நடத்தப்பட்டது. இந்த நிலையில், ஏறத்தாழ 3,500 காலி இடங்களை நிரப்புவதற்காக விரைவில் குரூப்–2 தேர்வு நடத்தப்பட உள்ளது. காலி இடங்களில், 100 உதவி வணிகவரி அதிகாரி, 48 சார்–பதிவாளர், ஆயிரத்திற்கும் மேற்பட்ட வருவாய் உதவியாளர் உள்ளிட்ட முக்கிய பதவிகளும் அடங்கும். மேலும், தலைமைச் செயலக உதவி பிரிவு அதிகாரி, நகராட்சி கமிஷனர் போன்ற பதவிகளும் கணிசமான எண்ணிக்கையில் இடம்பெற்றுள்ளன. 
குரூப்–2 தேர்வுக்கான அறிவிப்பினை டி.என்.பி.எஸ்.சி. அடுத்த ஓரிரு நாளில் வெளியிட உள்ளது. பொதுவாக அறிவிப்பு வெளியிட்டு தேர்வு எழுத 2 மாதங்கள் காலஅவகாசம் கொடுக்கப்படும். அதன்படி, எழுத்துத்தேர்வு அக்டோபர் மாதம் நடத்தப்படக்கூடும்.
 நேர்முகத்தேர்வு கொண்ட பணிகளுக்கு கூடுதலாக மெயின் தேர்வு நடத்தப்படும் என்று அண்மையில் டி.என்.பி.எஸ்.சி. அறிவித்தது. முதல்கட்ட தேர்வு அதன்பிறகு மெயின் தேர்வு நடத்தி அதைத் தொடர்ந்து நேர்முக தேர்வு நடத்தினால் காலதாமதம் ஆகும். எனவே, முன்பு இருந்துவந்ததை போல மெயின் தேர்வு இல்லாமல் ஒரே தேர்வு மூலம் மட்டுமே அனைத்து விதமான பதவிகளையும் நிரப்பிவிடலாமா? என்றும் டி.என்.பி.எஸ்.சி. பரிசீலனை செய்து வருகிறது. 

B.Ed admission notification

பி.எட்., படிப்பில் சேர்வதற்கான விண்ணப்பங்கள், வரும், 6ம் தேதி துவங்கி, 13ம் தேதி வரை வழங்கப்படுகின்றன. தமிழகத்தில், ஏழு அரசு கல்வியியல் கல்லூரிகளும், 14 அரசு உதவி பெறும் கல்லூரிகளும், 600க்கும் மேற்பட்ட தனியார் கல்வியியல் கல்லூரிகளும் உள்ளன. அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில், 3,000 பி.எட்., இடங்களும், தனியார் கல்லூரிகளில், 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பி.எட்., இடங்களும் உள்ளன. ஒற்றை சாரள முறை : அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் உள்ள இடங்கள், ஒற்றை சாரள முறையில்,
பொது கலந்தாய்வு முறையில் நிரப்பப்படும். தனியார் கல்லூரிகள், விருப்பப்பட்டு ஒப்படைக்கப்படும் இடங்களும், கலந்தாய்வு மூலமாகவே நிரப்பப்படுகின்றன.
பி.எட்., மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்பை, கல்லூரி கல்வி இயக்ககம், நேற்று அறிவித்தது. படிப்பிற்கான விண்ணப்ப படிவம், 6ம் தேதி துவங்கி, 13ம் தேதி வரை வழங்கப்படும். சனி, ஞாயிறு உள்ளிட்ட விடுமுறை நாட்களிலும், காலை, 10:00 மணி முதல், பிற்பகல், 3:00 மணி வரை, விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன. சென்னையில், திருவல்லிக்கேணி, லேடி வெலிங்டன் கல்வியியல் ஆராய்ச்சி நிறுவனத்திலும், சைதாப்பேட்டையில் உள்ள கல்வியியல் ஆராய்ச்சி நிறுவனத்திலும், விண்ணப்பங்களை பெறலாம்.விண்ணப்ப கட்டணம், 300 ரூபாய்; எஸ்.சி., - எஸ்.டி., மாணவருக்கு, 175 ரூபாய். விண்ணப்ப கட்டணத்தை, பணமாகவோ, "டிடி'யாகவோ செலுத்துவோர், "செயலர், தமிழ்நாடு பி.எட்., அட்மிஷன், சென்னை - 5' என்ற பெயரில், விண்ணப்பத்தை பெறலாம். எஸ்.சி., - எஸ்.டி., பிரிவினர், விண்ணப்பங்களை, ஜாதி சான்றிதழ் நகலை செலுத்தி, பெற்று கொள்ளலாம். கண்காணிக்க குழு : மருத்துவம், பொறியியல் படிப்பிற்கான மாணவர் சேர்க்கையை ஒழுங்குப்படுத்த, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதை போன்று, தனியார் கல்வியியல் கல்லூரிகளிலும் ஒழுங்குபடுத்த, திட்டமிடப்பட்டுள்ளது. இதையடுத்து, தனியார் பி.எட்., கல்லூரிகளில், மாணவர் சேர்க்கையை கண்காணிக்க, ஓய்வு பெற்ற ஐகோர்ட் நீதிபதி அல்லது மூத்த கல்வியாளர் தலைமையில், குழு அமைக்க, அரசு முடிவு செய்துள்ளது. இதன் மூலம், தனியார், பி.எட்., கல்லூரிகளில் விருப்பம் போல் மாணவர்களை சேர்ப்பதும், பி.எட்., படிக்க தகுதியில்லாத பட்ட படிப்பு அல்லது முதுகலைப் பட்ட படிப்பில், மாணவர்களை அட்மிஷன் செய்வதும், கட்டுப்படுத்தப்படும். கல்லூரிகளுக்கு செல்லாமலே, போலியாக வருகை பதிவு வழங்குப்படுவதற்கும், முற்றுப்புள்ளி வைக்கப்படும். புதிய பாடங்கள் : பி.எட்., படிக்கும் மாணவர்கள், படிப்பை முடித்த பிறகு, டி.இ.டி., தேர்வை எளிதில் எதிர்கொள்ளும் வகையில், பி.எட்., படிப்பில், புதிய பாடப்பிரிவு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், "கல்வியியல் புதுமை மற்றும் பாடத்திட்ட மேம்பாடு' என்ற பாடத் திட்டமும், வரும் கல்வியாண்டு முதல், புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மாணவர்களின் திறனை மேம்படுத்த, செய்முறை தேர்வு மதிப்பெண் கணக்கிடும் முறையிலும், மாற்றம் கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது. 

வெள்ளி, 2 ஆகஸ்ட், 2013

TRB PG TAMIL EXPECTED CUT OFF MARKS

 
TRB POST GRADUATE ASSISTANTS TAMIL 
EXAM HELD ON 21.07.2013 

CUT – OFF EXPECTED FOR Certificate verification 

OC (GENERAL)         105 ± 3 
OC (FEMALE)          103 ± 3 
BC (GENERAL)          101 ± 3 
BC (FEMALE)           100 ± 3 
BC (Mus) (GENERAL) 93 ± 3 
BC (Mus) (FEMALE)  90 ± 3 
MBC (GENERAL)       99 ± 3 
MBC (FEMALE).        98 ± 3 
SC (GENERAL)           98 ± 3 
SC (FEMALE)             96 ± 3 
SC A (GENERAL)        96 ± 3 
SC A (FEMALE)         90 ± 3 
ST (GENERAL)            86 ± 3 
ST (FEMALE)             82 ± 2 
    
This cut off marks are assumtion by VIDIYAL COACHIN CENTRE.
TRB CUT OFF MARKS ARE FINAL

TRB PG TAMIL CUT OF FOR CERTIFICATE VERIFICATION

         முதுகலைத் தமிழாசிரியர்தேர்வு எதிர்பார்க்கப்படும் கட் ஆப் மதிப்பெண்கள்  குறித்து விடியல் பயிற்சி மையம் வெளியிட்டுள்ளது .....அது தங்களின் பார்வைக்கு... இது ஒரு assumtion என்பதை கவனத்தில் கொள்ளவும் TRB யின் முடிவே இறுதியானது...

 
TRB POST GRADUATE ASSISTANTS TAMIL 
EXAM HELD ON 21.07.2013 

CUT – OFF EXPECTED FOR Certificate verification 

OC (GENERAL)         105 ± 3 
OC (FEMALE)          103 ± 3 
BC (GENERAL)          101 ± 3 
BC (FEMALE)           100 ± 3 
BC (Mus) (GENERAL) 93 ± 3 
BC (Mus) (FEMALE)  90 ± 3 
MBC (GENERAL)       99 ± 3 
MBC (FEMALE)        98 ± 3 
SC (GENERAL)           98 ± 3 
SC (FEMALE)            96 ± 3 
SC A (GENERAL)       96 ± 3 
SC A (FEMALE)        90 ± 3 
ST (GENERAL)          86 ± 3 
ST (FEMALE)           82 ± 2 

    THIS CUT OF MARKS ASSUMPTION  OF VIDIYAL COACHING CENTRE

    TRB CUT OFF IS FINAL

வியாழன், 1 ஆகஸ்ட், 2013

பள்ளிக்கல்வி இயக்குநராக திரு ராமேஸ்வர முருகன் பதவியேற்றார்.

பள்ளிக்கல்வி அமைச்சரின் கீழ், பல்வேறு துறைகள் இயங்கினாலும், தலைமைத் துறையாக, பள்ளிக் கல்வித் துறை விளங்குகிறது. நேற்று முன்தினம், ஏழு இயக்குனர்கள் மாற்றப்பட்டபோது, பள்ளிக்கல்வி இயக்குனர் தேவராஜனும் மாற்றப்பட்டு, தேர்வுத் துறை இயக்குனராக நியமிக்கப்பட்டார். பள்ளிக் கல்வித் துறையின், புதிய இயக்குனராக, ராமேஸ்வர முருகன் நியமிக்கப்பட்டார். இவர், நேற்று, புதிய பதவியை ஏற்றுக்கொண்டார். இவர், ஈரோடு மாவட்டம், கோபி அருகே உள்ள வெள்ளான் கோவிலைச் சேர்ந்தவர். எம்.எஸ்சி., - பி.எட்., - பிஎச்.டி., ஆகிய பட்டங்களைப் பெற்றுள்ளார். கடந்த, 1995, செப்டம்பரில், நேரடி நியமனம் மூலம், மாவட்ட கல்வி அலுவலராக பணியில் சேர்ந்து, படிப்படியாக, பதவி உயர்வு பெற்று, சி.இ.ஓ., - இணை இயக்குனர் ஆகிய நிலைகளில், பல்வேறு துறைகளில் பணியாற்றி, கடந்த ஆண்டு, இயக்குனராக பதவி உயர்வு பெற்று, தொடக்க கல்வித் துறை இயக்குனராக நியமிக்கப்பட்டார். 
வழக்கமாக, பணி ஓய்வு பெறும் நிலையில் இருக்கும் அதிகாரிகள் தான், பள்ளிக்கல்வி இயக்குனராக நியமிக்கப்படுவர். ஆனால், முதல் முறையாக, இவர், 42 வயதில், பள்ளிக்கல்வி இயக்குனர் பதவியை ஏற்றுள்ளார். 
           அரசு பள்ளி மாணவர்களுக்கு, 14 வகையான நலத்திட்டங்கள் செயல்படுத்திய போதும், கல்வித்தரம், தனியார் பள்ளிகளுக்கு நிகராக உயராதது, குறையாக உள்ளது. எனவே, கல்வித் தரத்தை உயர்த்துதல், அரசு பள்ளிகளில் சேரும் மாணவர் எண்ணிக்கையை உயர்த்துதல், பொதுத் தேர்வு "ரேங்க்' பட்டியலில், மாநில அளவில், அரசு பள்ளி மாணவர்களும், அதிகளவில் பங்கு பெற வைத்தல் ஆகிய, மூன்று இலக்குகளையும் எட்ட வேண்டிய பொறுப்பு, புதிய இயக்குனரிடம் உள்ள

நன்றி :தினமலர்:டி.இ.டி., தேர்வர்களுக்கு, வரும், 5ம் தேதி, டி.ஆர்.பி., இணைய தளத்தில், "ஹால் டிக்கெட்' வெளியிடப்படும்' - டி.ஆர்.பி.

டி.இ.டி., தேர்வர்களுக்கு, வரும், 5ம் தேதி, டி.ஆர்.பி., இணைய தளத்தில், "ஹால்
டிக்கெட்' வெளியிடப்படும்' - டி.ஆர்.பி.
"டி.இ.டி., தேர்வர்களுக்கு, வரும், 5ம் தேதி, டி.ஆர்.பி., இணைய தளத்தில், "ஹால் டிக்கெட்' வெளியிடப்படும்' என, டி.ஆர்.பி., வட்டாரங்கள் தெரிவித்தன. வரும், 17,18 தேதிகளில், டி.இ.டி., தேர்வு நடக்கிறது.
17ம் தேதி நடக்கும், முதல் தாள் தேர்வை (இடைநிலை ஆசிரியருக்கானது), 2,68,160 பேரும், 18ம் தேதி நடக்கும், இரண்டாம் தாள் தேர்வை (பட்டதாரி ஆசிரியருக்கானது), 4,11,634 பேரும் எழுதுகின்றனர்.
 தேர்வுகளுக்கான ஏற்பாடுகள், முழு வீச்சில் நடந்து வருகின்றன. தேர்வர்களுக்கு, வரும், 5ம் தேதி, www.trb.tn.nic.in என்ற டி.ஆர்.பி., இணையதளத்தில், "ஹால் டிக்கெட்' வெளியிடப்படுகிறது.

இதற்கிடையே, 27 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர், விண்ணப்பங்களை, சரியாக பூர்த்தி செய்யவில்லை என, தெரிய வந்துள்ளது. 44 பேர், ஆணா, பெண்ணா என்பதையே குறிப்பிடவில்லை. 2,500 பேர், தேர்வு மையத்தை குறிப்பிடவில்லை. விருப்ப பாடம் குறித்த தகவலை, 7,800 பேர் பூர்த்தி செய்யவில்லை என்பதையும், டி.ஆர்.பி., கண்டறிந்துள்ளது. 17 ஆயிரம் பேர், பல்வேறு தவறுகளை செய்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது. இந்த தவறுகளை சரிசெய்ய, தேர்வு நாளன்று வாய்ப்பு வழங்கப்படும் என, டி.ஆர்.பி., தெரிவித்துள்ளது. தேர்வு நாளன்று வழங்கப்படும் விடைத்தாளில், அதில் கேட்கப்பட்டுள்ள விவரங்களை, சரியாக பூர்த்தி செய்ய வேண்டும் என்றும், டி.ஆர்.பி., தெரிவித்துள்ளது. 

புதன், 31 ஜூலை, 2013

TRB PG TAMIL WRONG ANSWER KEY

      ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள முதுகலை ஆசிரியர் தமிழ் பாடத்துக்கான விடைக்குறிப்புகளில்  சில தவறாக உள்ளன.தாங்கள் தவறென கருதும் விடைக்குறிப்பு அதற்கான சரியான விடை ,அதற்கான ஆதாரம் ( நூல் ,ஆசிரியர் பெயர் , பக்க  எண் பதிப்பகம் ) ஆகியவற்றை தெரிவித்தால் அவற்றைத் தொகுத்து ஆ தே வாரியத்திற்கு அனுப்பிவைக்கலாம் .
அனுப்பவேண்டிய முகவரி velanthangvel @ gmail .com 
தொ.பே 7598299935

செவ்வாய், 30 ஜூலை, 2013

TRB ANOUNCEMENT REGARDING PG ANSWER KEY

Teachers Recruitment Board  College Road, Chennai-600006

Direct Recruitment of Post Graduate Assistants for the year 2012 - 2013
TENTATIVE ANSWER KEY - POST GRADUATE
As per the Notification No.2/2013 published on 09.05.2013, the Written Competitive Examination for the Direct Recruitment of Post of Post Graduate Assistants and Physical Education Director Grade - I Posts was held on 21.07.2013. A total No. of 1,67,664 candidates applied for the written examination. Out of this, 7914 candidates were absent for the Examination and 1,59,750 candidates attended the Written Examination.
Now, the Board has released the tentative key answers for all the subjects for the post of Post Graduate Assistants. Candidates are given time upto 05.08.2013 to submit their representation regarding objection if any on the tentative answer keys published along with the proof for the disputed answer keys. Their representation may be sent through post or may be dropped in the Box provided at Teachers Recruitment Board on or before 5.30PM on 05.08.2013
Utmost care has been taken in preparing the key answers list and in publishing it. Teachers Recruitment Board reserves the right to correct any errors that may have crept in. Incorrect key answer would not confer any right of enforcement.
          

Dated: 29-07-2013

Chairman