ஞாயிறு, 11 ஆகஸ்ட், 2013

TNTET EXAM LATEST NEWS : corected hall ticket down load now


ஆசிரியர் தகுதித் தேர்வைக் கண்காணிக்க ஒவ்வொரு மாவட்டத்துக்கும் பள்ளிக்
கல்வித் துறை சார்பில் பொறுப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். 

ஆசிரியர் தகுதித் தேர்வைக் கண்காணிக்க ஒவ்வொரு மாவட்டத்துக்கும் பள்ளிக் கல்வித் துறை சார்பில் பொறுப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான இறுதிக்கட்டப் பணிகள் இப்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன. ஒவ்வொரு மாவட்டத்திலும் தேர்வு தொடர்பாக அடுத்த வாரம் ஆலோசனைக் கூட்டங்கள் நடைபெறும் எனத் தெரிகிறது. ஆசிரியர் தகுதித் தேர்வு ஆகஸ்ட் 17, 18 ஆம் தேதிகளில் நடைபெற உள்ளது. ஆகஸ்ட் 17-ம் தேதி முதல் தாள் தேர்வு நடைபெற உள்ளது. மொத்தம் 687 தேர்வு மையங்களில் 2 லட்சத்து 71 909 பேர் இந்தத் தேர்வை எழுதுகின்றனர்.
ஆகஸ்ட் 18-ம் தேதி இரண்டாம் தாள் தேர்வு நடைபெறுகிறது. இந்தத் தேர்வை 1,070 மையங்களில் மொத்தம் 4 லட்சத்து 15, 942 பேர் எழுதுகின்றனர். சுமார் 7 லட்சம் பேர் எழுதும் இந்தத் தேர்வுக்கான ஏற்பாடுகளை ஆசிரியர் தேர்வு வாரியம் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட ஆட்சியர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவினர் வினாத்தாள் காப்பு மையங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு, பறக்கும் படைகளை அமைத்தல், தேர்வு மையங்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்குதல் போன்ற பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில், தேர்வு சுமூகமாகவும், எந்தவிதப் பிரச்னையும் இன்றி நடைபெற பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் மாவட்ட பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். 
1. விழுப்புரம் - இயக்குநர் தங்கமாரி
2. கடலூர் - இணை இயக்குநர் உமா
3. காஞ்சிபுரம் - இயக்குநர் இளங்கோவன்
4. திருவள்ளூர் - இணை இயக்குநர் உஷாராணி
5. சென்னை - DIRECTOR அறிவொளிஉள்பட 31 மாவட்டங்களுக்கு பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். . 
திருத்தப்பட்ட ஹால்டிக்கெட்டுகள் இணையதளத்தில் பதிவேற்றம் ஆசிரியர் தகுதித் தேர்வுக்குப் பிழைகளுடன் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்த ஹால் டிக்கெட்டுகள் திருத்தப்பட்டுள்ளன. ஹால் டிக்கெட்டுகள்  இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டன. 

முதல் தாள் தேர்வுக்கு 48 ஹால் டிக்கெட்டுகளும், இரண்டாம் தாள் தேர்வுக்கு 834 ஹால் டிக்கெட்டுகளும் திருத்தப்பட்டு பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். ஆசிரியர் தகுதித் தேர்வு தாள்களுக்கு வெவ்வேறு ஊரில் தேர்வு மையங்கள் போன்ற குறைபாடுகள் ஹால் டிக்கெட்டில் உள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரியத்துக்குப் புகார்கள் வந்தன. இதுதொடர்பாக செய்திகளும் வெளியாயின. இதையடுத்து, திருத்தப்பட்ட ஹால் டிக்கெட்டுகள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக