குரூப் 4 தேர்வின்போது செல்போன் உள்ளிட்ட மின்னணு சாதனங்களைப்
பயன்படுத்தினால் இதர போட்டித் தேர்வுகளை எழுத தடை விதிக்கப்படும்
என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் எச்சரித்துள்ளது.
தமிழகம் முழுவதும் குரூப் 4 தேர்வு வரும் 25- ஆம் தேதி நடைபெறுகிறது.இந்தத் தேர்வினை 14 லட்சத்துக்கும் அதிகமானோர் எழுதுகின்றனர்.தேர்வு குறித்து அனைத்து மாவட்டங்களிலும் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள்மற்றும் பாதுகாப்பு குறித்து மாவட்ட ஆட்சியர்களுடன் தேர்வாணைய தலைவர்நவநீத கிருஷ்ணன் மற்றும் தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் சோபனா ஆகியோர் விடியோ கான்பரன்சிங் முறை மூலம் புதன்கிழமை ஆலோசனை நடத்தினர். இதனைத் தொடர்ந்து சென்னை மாவட்ட தேர்வுக்கூட தலைமைக்கண்காணிப்பாளர்கள் கூட்டம், தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர்,தலைமை கல்வி அதிகாரி, மாவட்ட கல்வி அதிகாரி மற்றும் மெட்ரிக்பள்ளிகளின் ஆய்வாளர் ஆகியோர் முன்னிலையில்வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட 332 முதன்மைக் கண்காணிப்பாளர்களுக்கும் உரிய அறிவுரைகள் வழங்கப்பட்டன.
தேர்வுக்கான நடைமுறைகள்: தேர்வு நடைபெறும்அனைத்து தேர்வுக்கூடங்களும் ஒளிப்பதிவு செய்யப்படவுள்ளன.விண்ணப்பதாரர்கள் தேர்வு தொடங்கிய காலை 10 மணி முதல் காலை 10.30மணி வரை மட்டும் தேர்வுக்கூடத்துக்குள் அனுமதிக்கப்படுவார்கள்.
தேர்வு எழுதும் விண்ணப்பதாரர்கள்,தேர்வு முடியும்வரை தேர்வுக்கூடத்தைவிட்டு வெளியில் செல்லக் கூடாது. தீவிர பாதுகாப்பு: குரூப் 4 தேர்வுக்கு, அனைத்து மாவட்டங்களிலும்
தீவிரமான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.ஒவ்வொரு தேர்வுக்கூடத்திலும் ஓர் ஆய்வு அலுவலர்பணியமர்த்தப்பட்டுள்ளார். அவர் அந்த தேர்வுக்கூடத்தின்
அனைத்து தேர்வு நடவடிக்கைகளையும் கண்காணித்து, தேர்வுக்கட்டுப்பாடு அலுவலருக்கு அறிக்கை அனுப்புவார். இதுதவிர அனைத்து தேர்வு மையங்களையும் ஆய்வு செய்ய துணை ஆட்சியர்,வருவாய் கோட்டாட்சியர் மற்றும் அவர்களுக்கு இணையான பதவியில் உள்ள
அலுவலர்களைக் கொண்டு பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது. சர்சைக்குரிய தேர்வுக் கூடங்கள் அனைத்தும் இணையவழி நேரலை (வெப்காஸ்டிங்) மூலமாக தேர்வாணைய
அலுவலகத்திலிருந்து கண்காணிக்கப்படவுள்ளன
.தேர்வுக்கூடங்களை அடையாளம் காண... ஒரு மாவட்டத்தில்அல்லது தாலுகாவில் ஒரே பெயரைக் கொண்ட சில தேர்வுக் கூடங்கள்அமைந்துள்ளன. ஆகையால் விண்ணப்பதாரர்கள் தங்கள் தேர்வுக்கூடநுழைவுச்சீட்டில் குறிப்பிடப்பட்டுள்ள தேர்வுக்கூட முகவரியினை நன்கு கவனிக்க வேண்டும். தேர்வுக்கூடம் அமைந்துள்ள இடம் குறித்த சந்தேகம் ஏதேனும் இருப்பின்,தேர்வுக்கூட நுழைவுச்சீட்டில் குறிப்பிடப்பட்டுள்ள தேர்வுக்கூடதொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். தேர்வு மையஅல்லது தேர்வுக்கூட மாற்றங்கள் மற்றும் தேர்வு பாட மாற்றங்கள் கோரும் விண்ணப்பதாரர்களின் கோரிக்கை பரிசீலிக்கப்பட மாட்டாது.
மின்னணு சாதனங்களுக்குத் தடை:
செல்போன் உள்ளிட்டமின்னணு சாதனங்களை தேர்வுக்கூடத்துக்கு எடுத்து வரக்கூடாது.
மீறுபவர்களின் விடைத்தாள் செல்லாததாக்கப்படுவதுடன் தேர்வாணையம்
நடத்தும் இதர தேர்வுகளிலிருந்தும் விலக்கி வைக்கப்படுவார்கள்என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் எச்சரித்துள்ளது.
தேர்வுக்கூட நுழைவுச் சீட்டு:
இன்றும், நாளையும் பெறலாம் குரூப் 4 தேர்வுக்கான தேர்வுக்கூட நுழைவுச் சீட்டு கிடைக்கப் பெறாதவர்கள்வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் மாவட்ட ஆட்சியரை அணுகி பெற்றுக்
கொள்ளலாம் என்று தேர்வாணையம் அறிவித்துள்ளது. இது குறித்து தேர்வாணையம் வியாழக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு: குரூப்4 தேர்வுக்கு விண்ணப்பித்த தகுதியான விண்ணப்பதாரர்கள் அனைவருக்கும்தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு தேர்வாணைய இணையதளத்தில்வெளியிடப்பட்டுள்ளது. தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு கிடைக்கப் பெறாதவர்கள், தங்களின் விண்ணப்பம்மற்றும் உரிய தேதியில் பணம் செலுத்தியதற்கான
செலுத்துச்சீட்டு ஆகியவற்றின் நகலுடன், அவர்கள் தேர்வு எழுதுவதற்கென
தேர்வு செய்த தேர்வுமையம் அமைந்துள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்
பணியிலிருக்கும் தேர்வாணைய அலுவலரை வெள்ளி மற்றும்சனிக்கிழமைகளில் அணுகலாம். சென்னை தேர்வுமையத்தைப் பொருத்தவரை தேர்வுக்கூடநுழைவுச்சீட்டு கிடைக்கப்பெறாதவர்கள், தேர்வாணையஅலுவலகத்தை அணுகலாம் என்று தேர்வாணையம் தெரிவித்துள்ளது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக