TN TET 2013 தமிழ் paper. I தேர்வுக்குரிய வினாவிடைகள் ( TENTATIVE ANSWER KEY)
1.நடுவணரசு தமிழைச் செம்மொழியாக அறிவித்த ஆண்டு
B. 2004
2.” மானம் பெரிதென உயிர்விடுவான் ; மற்றவர்க் காகத் துயர்படுவான்’”
என்ற பாடல் வரியின் ஆசிரியர்
B. நாமக்கல் கவிஞர்
3.’உரைமணிகள் என்ற நூலை எழுதியவர்
A கவிமணி
4.காமராசர் தமிழ் நாட்டின் முதல் அமைச்சராக பதவி ஏற்ற ஆண்டு
A.1954
5.திருக்குறளில் “உடைமை” என்னும் சொல்லில் அமைந்த அதிகாரங்களின் எண்ணிக்கை
C. 10
6 சரியான விடையைத் தேர்ந்தெடுக்க : பனாட்டு- பிரித்தறிக
A பனை+அட்டு
7. கீழ்கண்ட கூற்றில் எவை சரியானவை
I ஆய்த எழுத்து சார்பெழுத்து அல்ல
II ஆய்த குறுக்கத்துக்கு அரை மாத்திரை
III வெஃஃகுவார்க்கில்லை வீடு
IV. ஆய்த எழுத்து முதல் எழுத்தாகும்
D III சரி
8. கீழ்கண்டவற்றுள் எவை அஃறிணையை சாரதவை?
C நரகர்
9. கீழ்கண்ட கூற்றில் எவை தவறானவை?
1. பகுதி என்பது தத்தம் பகாப்பதங்களே
2 .பகுபதம் ஆறு எழுத்து ஈறாக வரும்
3. பகாபதம் ஒன்பது எழுத்து ஈறாக வரும்
4. இடை, உரி இரண்டும் பகுபதம் ஆகும்
B .2, 4 மட்டும் சரியானவை
10. சரியானவற்றைத் தேர்ந்தெடுக்க
D. அருமந்தப்பிள்ளை- மரூஉ
11.மன்னர்களை மட்டும் மகிழ்வித்துவந்த கவிதை மரபை மாற்றியவர்
D பாரதியார்
12. குமரகுருபரரின் காலம்
B .17 ஆம் நூற்றாண்டு ( ஆறாம் வகுப்பு பாடநூலில் 16 ஆம் நூற்றாண்டு என குறிபிடப்பட்டுள்ளது)
13 ‘நாஞ்சில் நாடு என்று அழைக்கப்படும் மாவட்டம்
. C. குமரிமாவட்டம்
14 “ தமிழ் மொழி அழகான சித்திர வேலைப்பாடமைந்த வெள்ளித்தட்டு ; திருக்குறள் அதில் வைக்கப்பட்டுள்ள தங்கஆப்பிள்” என்று கூறியவர்
D டாக்டர் கிரெளல்
15. பின்வரும் செய்யுள்வரிகளில் குமரகுருபரர் எழுதியது
. D “ வாங்கும் கவளத்து ஒரு சிறிது வாய்த்தப்பின்”
16. ஆசிரியப்பாவின் சிற்றேல்லை
B. 3 அடி
17 .பொருத்துக
A. 4 ஆம் வேற்றுமை 1.ஆக்கல்,அழித்தல் ஒத்தல்,உடைமை
B. 2 ஆம் வேற்றுமை 2..நீங்கல் ,ஒப்பு ,எல்லை,ஏது
C 5 ஆம் வேற்றுமை 3.கொடை ,பகை ,நட்பு,முறை
D. 3 ஆம் வேற்றுமை 4.கருவி கருத்தா உடனிகழ்ச்சி
C. 3 1 2 4
18. பின்வருவனவற்றுள் எவை இடைச்சொல் அல்ல
D கலி, கடி குரை, கிளவி
19 இன்மையுள் இன்மை விருந்தொரால் வன்மையுள்
வன்மை மடவார்ப் பொறை – இக்குறளில் பயின்று வரும் அணி யாது?
C.எடுத்துக்காட்டு உவமை அணி
20.ஆய்க
1. ஏ முன் உயிர் வர யகரம் வகரம் உடம்படு மெய்யாக வரும்
2. இ, ஈ,ஐ,முன் உயிர் வர் வகரம் உடம்படு மெய்யாக வரும்
A. 1 சரி 2 தவறு
21. கொஞ்சும் கிளியின் குரலும்-
கருங்குயிலின் இசையும் அடடா – என்று பாடியவர்
.D அழவள்ளியப்பா
22 தமிழுக்கான சிறப்பு அடைமொழிகள்
C. 130
23” இனிமைத் தமிழ்மொழி எமது- எமக்கு
இன்பம் தரும்படி வாய்த்த நல் அமுது “ – எனப்பாடியவர்
A. பாரதிதாசன்
24..பொதுமை வேட்டல் என்னும் நூலி இடம்பெற்றுள்ள பாடல்களின் எண்ணிக்கை
B. 430
25 “தனிப்பாடல் திரட்டு” என்னும் நூலை தொகுப்பித்தவர்
A இராமநாதபுரம் மன்னர் பொன்னுசாமி
26. தொழிலும் காலமும் தோன்றி பால் வினை ஒழிய நிற்பது
B. தெரிநிலை பெயரெச்சம்
27.. கூற்றை ஆய்க
1. சால. தவ எனும் உரிச்சொற்கள் பின் வரும் வல்லினம் மிகும்
2.விளித் தொடரை அடுத்த வல்லினம் மிகாது
3. ஒரெழுத்து ஒரு மொழியில் வரும் க் ச் த் ப் மிகாது
4. அது ,எது எனும் சுட்டுச் சொற்களை அடுத்துவரும் வல்லினம் மிகும்
B. 1,2 சரி
28 பொருத்தமில்லாதவற்றைத் தேர்ந்தெடுக்க
B.தகர ஞாழல் சென்றாள் – உவமைத்தொகை புறத்தே பிறந்த அன்மொழித்தொகை
29. பின்வருவனவற்றுள் எவை சரியானவை?
I- திணை வழுவமைதி -பசுங்கிளியார் சென்றார்
II பால் வழுவமைதி -ஏவல் இளையர் தாய்
III எம்பியை ஈங்கு பெற்றேன் - இட வழுவமைதி
IV யாம் முன்பு விளையாடுவது இச்சோலை - கால வழுவமைதி
A. I, II,IV மட்டும் சரி ( இவ் விடைக்கு மாற்று கருத்துள்ளோர் தெரிவிக்கவும்)
30.பிழை திருத்தும் மனப்பழக்கம் என்ற நூலை இயற்றியவர்
C.தமிழண்ணல் டாக்டர் பெரிய கருப்பன்
இவை தற்காலிக விடைகளே TRB வெளியிடும் விடைக்குறிப்பே இறுதியானது
7598299935
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக