வியாழன், 22 ஆகஸ்ட், 2013

அரசு மேனிலைப்பள்ளியில் 652 கணினி பயிற்றுநர் பணியிடங்கள் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு அடிப்படையில் நிரப்ப உயர் நீதி மன்றம் உத்தரவு

அரசு மேனிலைப்பள்ளியில் 652 கணினி பயிற்றுநர் பணியிடங்கள்
வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு அடிப்படையில் நிரப்ப உயர் நீதி மன்றம்
உத்தரவு 
2009ம் ஆண்டு நிலவரப்படி உச்ச நீதி மன்ற தீர்ப்பு மற்றும் உயர்நீதி மன்ற ஆணைப்படி அரசால் 652 கணினி பயிற்றுநர் பணியிடமானது காலியாக்கப்பட்டு, அப்பணியிடங்கள் B.Sc.,B.Ed., பட்டம் முடித்த கணினி ஆசிரியர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.  இதன் பொருட்டு அரசு மேனிலைப்பள்ளியில் காலியாக உள்ள 652 கணினி பயிற்றுநர்
பணியிடங்களை வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு அடிப்படையில் நிரப்ப உயர் நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது . மேலும், 22-10-2013 க்குள் நியமனத்திற்கான பெரும்பாலான பணிகளை விரைந்து முடிக்குமாறு அரசுக்கு சென்னை உயர்நீதி மன்ற
அமர்வு நீதிபதிகள் பானுமதி, சசிதரன் ஆகியோர் வலியுறுத்தி உள்ளார்கள் என்று கணினி அறிவியல் B.Ed., சங்கத்தலைவி திருமதி. குணவதி அவர்கள் தெரிவித்துள்ளார். 

THANKS TEACHERTN

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக