கடந்த ஆண்டு நடைபெற்ற குரூப் 4 தேர்வில் வெற்றி பெற்றவர்களின் சான்றிதழ்
சரிபார்ப்புப் பணிகள் வரும் 4- ஆம் தேதி தொடங்கவுள்ளன. இதுகுறித்து, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:
516 காலிப் பணியிடங்களுக்கான நான்காம் கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும கலந்தாய்வு முறையிலான துறை ஒதுக்கீடு வரும் 4-ஆம் தேதி முதல்தொடங்குகிறது. இரண்டு நாள்கள் அவை நடைபெறும். சென்னையில் உள்ள அரசுப் பணியாளர் தேர்வாணைய அலுவலகத்தில் சான்றிதழ் சரிபார்ப்பு கலந்தாய்வு நடைபெறுகிறது. நான்காம் கட்ட கலந்தாய்வுக்கு அழைக்கப்படும் விண்ணப்பதாரர்களின பதிவெண்கள், எந்தத் தேதியில் அவர்கள்
கலந்தாய்வுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்கள் என்கிற விவரம் தேர்வாணையத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. கலந்தாய்வுக்கு அனுமதிக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் தங்களது மூலச் சான்றிதழ்கள், சான்றொப்பமிட்ட ஒளிநகல் சான்றிதழ்கள் இரண்டையும் கலந்தாய்வுக்கு வரும் போது தவறாமல் கொண்டு வர வேண்டும் எ தேர்வாணையத்தின் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Posts included in GROUP-IV Services, 2007 - 08 to 2012 -13
(Date of Written Examination:07.07.2012)
IV PHASE OF COUNSELLING SCHEDULE
JUNIOR ASST/BILL COLLECTOR GR.I/FIELD SURVEYOR/DRAUGHTSMAN
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக