தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவிப் பெறும் 21 கல்லூரிகளில் 13 பாடப்
பிரிவுகளின் கீழ் உள்ள 2,118 பி.எட். இடங்களில், ஒற்றைச் சாளர
கலந்தாய்வு மூலம் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. 2013-14 கல்வியாண்டு கலந்தாய்வுக்கான விண்ணப்ப விநியோகம் ஆகஸ்ட் 9-ஆம் தேதி தொடங்கி 16-ஆம் தேதி வரை தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு மையங்களில் விற்பனை செய்யப்பட்டன.
இதுகுறித்து தமிழ்நாடு பி.எட். மாணவர் சேர்க்கை செயலர் ஜி.பரமேஸ்வரி கூறியது:
பி.எட். கலந்தாய்வு வரும் 30-ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 5-ஆம்
தேதி வரை நடத்தப்பட உள்ளது. இதற்கான கட்-ஆஃப் மதிப்பெண் வெள்ளிக்கிழமை வெளியிடப்படும். தரவரிசைப் பட்டியல் இணைய தளத்தில் ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்படும். முதல் இரு தினங்களில் மாற்றுத் திறனாளிகளுக்கும், கண்பார்வைபாதிக்கப்பட்டவர்களுக்கும், முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகளுக்கும், பழங்குடியின பிரிவு மாணவர்களுக்கும் கலந்தாய்வு நடத்தப்படும். மாணவர்களுக்கு அழைப்புக் கடிதங்கள் தபால் மூலம்அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. அழைப்புக் கடிதம் கிடைக்கப் பெறாதவர்கள் இணைதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்த நகலை தங்களுடன் எடுத்து வந்தால்போதுமானது என்றார் அவர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக