ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான விடைகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. இந்தவிடைகளில் ஏதேனும் ஆட்சேபம் இருந்தால் அதற்குரிய ஆதாரங்களுடன்ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு செப்டம்பர் 2-ம் தேதி மாலை 5 மணிக்குள்தேர்வர்கள் மனு செய்யலாம். இந்த மனுக்களை ஆசிரியர் தேர்வு வாரியத்தில் வைக்கப்பட்டுள்ளபெட்டியிலோ அல்லது தபால் மூலமாகவோ செப்டம்பர் 2-ம் தேதிக்குள்வந்து சேருமாறு அனுப்ப வேண்டும் என ஆசிரியர் தேர்வு வாரியம்அறிவித்துள்ளது.
ஆசிரியர் தகுதித் தேர்வு முதல் தாள் தேர்வு ஆகஸ்ட் 17-ம்தேதியும், இரண்டாம் தாள் தேர்வு ஆகஸ்ட் 18-ம் தேதியும் நடைபெற்றது.இந்தத் தேர்வுகளை மொத்தம் 6.50 லட்சத்துக்கும் அதிகமானோர் எழுதினர். இந்த விடைத்தாள்கள் அனைத்தும் சென்னைக்கு எடுத்துவரப்பட்டு இப்போது ஸ்கேன் செய்யும் பணிகள்நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகள் அனைத்தும் சிசிடிவி கேமராக்கள்மூலம் முழுநேரமும் தீவிரமாகக்கண்காணிக்கப்பட்டு வருகிறது.இப்போது விடைகள்வெளியிடப்பட்டுள்ளன. இதைத் தொடர்ந்து, முக்கிய விடைகள் தொடர்பான ஆட்சேபங்கள் பெறப்பட்டவுடன் ஒவ்வொரு பாடவாரியாக அவை பரிசீலிக்கப்படும்.இதைப் பரிசீலிப்பதற்காக ஒவ்வொரு பாடத்துக்கும் தனித்தனியே மூன்று பேர் அடங்கிய நிபுணர் குழுக்கள் அமைக்கப்படும். அந்தக் குழுக்களின் பரிந்துரையின் அடிப்படையில் ஆட்சேபங்களை ஏற்பதா அல்லது நிராகரிப்பதா என ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவு எடுக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.ஆசிரியர் தகுதித் தேர்வு விடைத்தாள்களை ஸ்கேன் செய்யும் பணிகள் அடுத்த 2 வாரங்களுக்கு நடைபெற உள்ளது. அதையடுத்து, இறுதிசெய்ய்பட்ட
விடைகளுடன் விடைத்தாள்கள் மதிப்பீடு செய்யப்படும். மதிப்பீட்டுக்குப் பிறகு இறுதி விடைகள் மற்றும் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும். செப்டம்பர் மாத இறுதிக்குள் ஆசிரியர் தகுதித்
தேர்வு முடிவுகளை வெளியிடுவதற்கான பணிகள் வேகமாக. நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக