தேசிய ஆய்வு மற்றும் அங்கீகார கவுன்சில் (நேக்) அங்கீகாரம் அளிக்காத 21
கல்லூரிகளுக்கான எம்.எட்., தேர்வு முடிவுகளை பல்கலைக்கழகம்
நிறுத்திவைத்துள்ளது. இதன் காரணமாக தேர்வு முடிவுகள் தெரியாமல் மாணவர்கள்
அவதிப்படுவதோடு, அவர்களுடைய எதிர்காலமும் கேள்விக்குறியாகும்
நிலை உருவாகியுள்ளது. தமிழகத்தில் 674 கல்லூரிகளில் பி.எட்., படிப்புகள் வழங்கப்படுகின்றன.
இவற்றில் சில கல்லூரிகளில் எம்.எட்., படிப்புகளும் வழங்கப்படுகின்றன. இந்தக் கல்லூரிகள் அனைத்தும் தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல்
பல்கலைக்கழகத்துடன் இணைப்பு பெற்றுள்ளன. இணைப்புக் கல்லூரிகள் அனைத்துக்கும் பாடத் திட்டங்களை வகுப்பது,
தேர்வுகளை நடத்துவது, தேர்வு முடிவுகளை வெளியிடுவது என்பன
உள்ளிட்ட பணிகளைப் பல்கலைக்கழகம் மேற்கொண்டு வருகிறது. இது போல் கடந்த மே, ஜூன் மாதங்களில் நடத்தப்பட்ட எம்.எட்.,
தேர்வு முடிவுகளைக் கடந்த திங்கள்கிழமை (ஆக.26) பல்கலைக்கழகம்
வெளியிட்டது. இதில் 21 கல்லூரிகளுக்கான எம்.எட்.,
தேர்வு முடிவுகளை மட்டும் பல்கலைக்கழகம் நிறுத்தி வைத்துள்ளது. இதை அறியாமல், தேர்வு முடிவுகளைத் தெரிந்து கொள்வதற்காக
கல்லூரிகளுக்குச் சென்ற மாணவர்கள், தேர்வு முடிவுகள் வரவில்லை என
கல்லூரி நிர்வாகம் அளித்த பதிலைக் கேட்டு பெரும் அதிர்ச்சிக்குள்ளாகினர். வேறு கல்லூரிகளில் படித்த தங்களுடைய நண்பர்களுக்குத் தேர்வு முடிவுகள்
வெளிவந்துவிட்ட நிலையில், தங்களுடைய கல்லூரிக்கு மட்டும் ஏன்
வெளியிடவில்லை என மாணவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். எம்.எட்., நடத்த "நேக்' அங்கீகாரம் அவசியம்:
இது குறித்து தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழக துணைவேந்தர்
இடங்களுக்கு உள்பட்டு இருந்தால் "நேக்' அங்கீகாரம் பெறத் தேவையில்லை. ஆனால், பி.எட். படிப்பில் 100 இடங்கள் மற்றும் அதற்கு மேலும் இடங்களைப்பெற்றிருக்கும் கல்லூரிகள் தேசிய ஆசிரியர் கல்வியியல் கவுன்சில்
ஜி. விஸ்வநாதன் கூறியது: பி.எட்., கல்லூரிகளைப் பொருத்தவரை, கல்லூரியில் பி.எட்., படிப்பில் 100
(என்.சி.டி.இ.) அனுமதியோடு, "நேக்' அங்கீகாரமும் பெற்றிருக்க
வேண்டியது அவசியம். இது போல், எம்.எட்., படிப்பை நடத்துவதற்கும் "நேக்' அங்கீகாரம் அவசியம்.
இந்த அங்கீகாரம் இல்லாவிட்டால், எம்.எட்., படிப்பை நடத்தவே முடியாது. ஆனால், மாணவர்கள் இதை அறியாமல் எம்.எட்., படிப்பில்
சேர்ந்துவிடுகின்றனர். அங்கீகாரம் பெறாத கல்லூரிகள், எம்.எட்., படிப்பில் மாணவர் சேர்க்கையைச்
செய்யக் கூடாது என பல்கலைக்கழகத்தின் சார்பில்
தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டு வருகிறது. பல்கலைக்கழகத்துடன் இணைப்பு பெற்றுள்ள ஏராளமான கல்லூரிகள் (எம்.எட்.
நடத்தும் கல்லூரிகள்) "நேக்' அங்கீகாரம் பெற்றிருக்கவில்லை. இந்தக் கல்லூரிகள் மீது பல்கலைக்கழகம் நடவடிக்கை மேற்கொண்டபோது,
கல்லூரி சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த
வழக்கில் உயர் நீதிமன்றம் அளித்த உத்தரவின்பேரில், அந்தக் கல்லூரிகளில்
எம்.எட்., படித்த மாணவர்களுக்கு தேர்வு எழுத பல்கலைக்கழகத்தின் சார்பில்
அங்கீகாரத்துக்கு விண்ணப்பித்து, அதற்கான
அனுமதி வழங்கப்பட்டது. பின்னர், பல்கலைக்கழக அறிவுறுத்தலின்பேரில் சில கல்லூரிகள் "நேக்'
நடைமுறைகளை தீவிரப்படுத்தியுள்ளன. ஆனால், அவற்றுள் 21 கல்லூரிகள்
"நேக்' அங்கீகாரம் பெறுவதற்கான முயற்சியை இதுவரை எடுக்கவில்லை. எனவே, இந்த கல்லூரிகளுக்கான எம்.எட்., தேர்வு முடிவுகள்
நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. மேலும் இந்த கல்லூரிகளிடம் விளக்கம்
அதிகாரிகள், என்.சி.டி.இ. அதிகாரிகள் ஆகியோருடன் இந்தப்பிரச்னை தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட உள்ளது. அதன்
கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. செப்.14-க்குப் பின் வெளியிடப்படும்: வரும் செப்டம்பர் 14-ம் தேதி "நேக்'
பிறகு தேர்வு முடிவுகள் வெளியிடப்படும். அதே நேரம், குறிப்பிட்ட 21
கல்லூரிகள் மீது நடவடிக்கை எடுப்பது குறித்தும் முடிவு செய்யப்படும்
என்றார். இந்த நிலையில், இதுபோன்ற அங்கீகாரம் இல்லாத கல்லூரிகளில் படித்த
மாணவர்களின் எம்.எட்., படிப்பு, வேலைவாய்ப்புக்குச்
செல்லும்போது அங்கீகரிக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. எனவே,
பி.எட்., எம்.எட்., படிப்புகளில் மாணவர் சேர்க்கை நடைபெறும் முன்னர் "நேக்'
அங்கீகாரம் பெற்ற கல்லூரிகள் எவை, எந்தெந்தக் கல்லூரிகள் அங்கீகாரம்
பெறாதவை என்ற பட்டியலை மாணவர்கள் எளிதில் காணும் வகையில் பல்கலைக்கழகம் வெளியிட வேண்டும் என்கின்றனர் கல்வியாளர்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக