வியாழன், 12 ஜூன், 2014
கல்வித்துறை :அனைத்து அரசு மேல்நிலைப்பள்ளிகளிலும்,ஆங்கில வழிக்கல்வியை செயல்படுத்த வேண்டும்
'மாநிலத்தில் தரம் உயர்த்தப்பட்டுள்ள அனைத்து அரசு மேல்நிலைப்பள்ளிகளிலும்,
ஆங்கில வழிக்கல்வியை செயல்படுத்த வேண்டும்,' என, மாவட்டமுதன்மை கல்வி அலுவலர்களுக்கு கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.
அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள், ஆங்கில வழிக்கல்வியில் சிறந்து விளங்க வேண்டும்.நர்சரி, பிரைமரி, மெட்ரிக் பள்ளிகளில் கற்றுத்தருவதைப்போல் ஆங்கில வழியில் கற்றுக்கொடுக்க வேண்டும் என தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.
நடப்பாண்டு பத்தாம்வகுப்பு தேர்ச்சி பெற்ற பலர், அரசு பள்ளிகளில் இருந்து சுயநிதி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் பக்கம்செல்லத் துவங்கினர். கல்வித்துறை அதிகாரிகள் மூலம் இத்தகவல், அரசின்கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. உயரதிகாரிகள் ஆலோசித்து, மாவட்டமுதன்மை கல்வி அலுவலர்களுக்கு சுற்றிக்கை அனுப்பியுள்ளனர். அதில், தங்கள் மாவட்டத்தில் உள்ளஅரசு மேல்நிலைப்பள்ளிகளில், எத்தனை பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வி உள்ளது. எத்தனை பள்ளிகளில் துவக்கவில்லை? ஏன் துவக்கவில்லை? ஆசிரியர் பற்றாக்குறை குறித்து விவரம் கேட்கப்பட்டுள்ளது.
மேலும்,மாவட்டத்தில் உள்ள அனைத்து மேல்நிலைப்பள்ளிகளிலும் ஆங்கில வழிக்கல்வி கொண்டு வர வேண்டும் எனவும்அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2010க்கு பின், தரம் உயர்த்தப்பட்ட மேல்நிலைப்பள்ளிகள்பெரும்பாலானவற்றில் ஆங்கில வழிக்கல்வி இல்லை. 15 முதல் 20 ஆண்டுகளாக உள்ள மேல்நிலைப்பள்ளிகளில்மட்டுமே ஆங்கில வழிக்கல்வி உள்ளது.
பத்தாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் பொறியியல் மற்றும்இன்ஜினியரிங் சேர பிளஸ் 2 பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற வேண்டும் என்பதை நினைவில் கொண்டு, ஆங்கில வழி கல்வியில் மேல்நிலைப்படிப்புகளை கற்க விரும்புகின்றனர். சமீபத்தில் தரம்
உயர்த்தப்பட்ட பள்ளிகளில் ஆங்கில வழி கல்வி இல்லாததால், வெளியேறுகின்றனர். இவற்றை தடுக்க, ஆங்கிலவழிக்கல்வியை துவக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
புதன், 11 ஜூன், 2014
TRB PG TAMILசென்னை உயர்நீதிமன்றமதுரைக் கிளையில் முதுகலை பட்டதாரி தமிழ் ஆசிரியர் மேல்முறையீட்டு வழக்குகள் விசாரணை details
முதுகலை பட்டதாரி தமிழ் ஆசிரியர் மேல்முறையீட்டு வழக்குகள் (10.06 .14) சென்னை உயர்நீதிமன்ற மதுரைகிளையில் நீதிபதிகள் இராமசுப்ரமணியன் வேலுமணி, ஆகியோரடங்கிய அமர்வுக்கு முன் விசாரணைக்கு வந்தது
அரசு தரப்பில் அட்வகேட் ஜெனரல் இவ்வழக்கில் ஆஜராக வேண்டியுள்ளதால் அவகாசம் கோரினார்.பாதிக்கப்பட்டோர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் இதற்கு ஆட்சேபம் தெரிவித்தனர்.நீதிபதியும் இது குறித்து அதிருப்தி தெரிவித்து வழக்கு விசாரணையினை மீண்டும் அடுத்தவாரத்துக்கு ஒத்திவைத்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன
TRB PG TAMIL MEDIUM 2012: ஆசிரியர்கள் பணிநிரவல் மாறுதல் முடிந்தபின்னர் பணி நியமனம்
ஆசிரியர்கள் பணிநிரவல் மாறுதல் முடிந்தபின்னர் ஏற்படும் காலிப்பணியிடங்களுக்கு 2012 TRB PG தேர்வில் தமிழ் வழி இடஒதுக்கீட்டின்கீழ் தேர்வு செய்யப்பட்டுள்ளவர்களுக்கு பணிநியமன ஆணை வழங்கப்படும் என கல்வித்துறை உயர் அலுவலர்கள் தெரிவித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன
2013 முதுகலை தமிழ் ஆசிரியர் பணி நியமனம்செய்யப்பட்டு சில மாதங்கள் ஆன நிலையில் தங்கள் நியமனம் குறித்து எந்த ஒரு அறிவிப்பையும்வெளியிடாமல் இருப்பது வேதனயளிக்கின்றது என பாதிக்கப்பட்டோர் தெரிவிக்கின்றனர்.
கடந்த ஓராண்டுக்கும் மேலாக காத்திருக்கும் தங்களுக்கு அரசு விரைவில் பணி நியமனம் வழங்கவேண்டும் என தமிழ் வழி இடஒதுக்கீட்டுக்கான தேர்வர்கள் எதிர்பார்க்கின்றனர்
வருமான வரி வரம்பை ரூ.2 லட்சமாக உயர்த்த வேண்டும் !
மத்தியில் பொறுப்பேற்றுள்ள பாஜக தலைமையிலான அரசு வங்கியாளர்களுடன் ஆலோசனை நடத்தியது. இதில் வருமான வரி வரம்பை ரூ.2 லட்சமாக உயர்த்த வேண்டும் என்று வங்கியாளர்கள் நிதி அமைச்சரிடம் கேட்டுக்கொண்டார்கள்.
இது தவிர, வங்கிகளின் வாராக் கடனை வசூலிக்க பிரத்யேகமாக ஒரு நிறுவனத்தை (ஏஆர்சி) அமைப்பது, எல்.ஐ.சி. நிறுவனத்தை பங்குச்சந்தையில் பட்டியலிடுவது உள்ளிட்ட பல விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.
செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பட்ஜெட்டுக்கு முந்தைய ஆலோ சனைக் கூட்டத்தில் இது குறித்து ஆராயப்பட்டது. இந்த கூட்டத்தில் நிதித்துறை இணையமைச்சர் நிர்மலா சீதாராமனும் கலந்து கொண்டார். வங்கிகள் வாராக் கடனுக்காக ஒதுக்கும் தொகையில் 100 சதவீத வரி விலக்கு அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வங்கியாளர்கள் இந்த கூட்டத்தில் முன்வைத்தனர்.
நிரந்தர வைப்புத் தொகைக்கு கிடைக்கும் வட்டிக்கு வரி பிடித்தம் செய்யும் அளவு ரூ. 10 ஆயிரத்திலிருந்து ரூ. 20 ஆயிரமாக உயர்த்துவது குறித்தும் பரிசீலிக்கப்பட்டது.
பங்குச் சந்தையில் எல்ஐசி நுழைவது நிதித்துறையில் மிகப் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் என்று கோடக் மஹிந்திரா வங்கியின் செயல் துணைத் தலைவர் உதய் கோடக் கூறினார்.
மேலும் பங்குச் சந்தையில் எல்ஐசி பங்குகள் பட்டிய லிடப்பட்டால் அது இந்திய பங்குச் சந்தையின் போக்கையே பெருமளவில் மாற்றியமைக்கும் என்று குறிப்பிட்டார்.
இந்த முடிவானது எதிர்வரும் பட்ஜெட்டில் இடம்பெற வேண்டும் என்று அவசியமில்லை. இருப்பினும் அடுத்த சில ஆண்டுகளில் இது மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் கோடக் குறிப்பிட்டார்.
பங்குச் சந்தையில் பட்டியலிடப் படுவதால் மத்திய அரசு எல்ஐசி-யை முற்றிலுமாக கைவிட வேண்டி யதில்லை. குறைந்தபட்சம் 5 சதவீத பங்குகளை அரசு வைத்திருக்க வேண்டும் என்றும் அவர் ஆலோசனை கூறினார். மேலும் இத்தகைய முடிவால் அரசின் வருமானம் பெருகும் என்றும் அவர் கூறினார்.
வருமான வரி விலக்கு
ராஜீவ் காந்தி மியூச்சுவல் ஃபண்ட் சேமிப்பு திட்டத்தில் (இ.எல்.எஸ்.எஸ்.) மிகப் பெரிய மாற்றங்களைக் கொண்டு வரவேண்டும் என்று உதய் கோடக் வலியுறுத்தினார்.
வருமான வரி விலக்கு வரம்புக்கான 80சி பிரிவில் இரண்டு பிரிவு உருவாக்கப்பட வேண்டும். வரம்பு அளவு ரூ. 1 லட்சத்திலிருந்து ரூ. 2 லட்சமாக உயர்த்த வேண்டும் என்றும் அவர் கூறினார்.
80 சிசிஎப் என்ற பிரிவை மீண்டும் கொண்டு வருவதன் மூலம் அடிப்படைக் கட்டமைப்புக்கான கடன் பத்திரங்களில் முதலீடு பெருகும் என்று வங்கியாளர்கள் ஆலோசனை கூறினர்.
வங்கிகளின் வாராக் கடனை வசூலிக்க சட்டத்தில் உரிய திருத்தங்களை செய்ய வேண்டும் என்று ஹெச்எஸ்பிசி வங்கித் தலைவர் நினா லாக் கித்வாய் வலியுறுத்தினார்.
கடன் மீட்பு தீர்ப்பாயங்களின் செயல்பாடுகளை மேம்படுத்தலாம் என்ற ஆலோசனையும் இந்தக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
சொத்து மீட்பு அமைப்பானது கட்டமைப்பு சொத்துகளை மீட்க உதவாது. எனவே பிரத்யேகமாக சொத்து மீட்பு அமைப்பை உருவாக்க வேண்டும் என்றும் வங்கியாளர்கள் வலியுறுத்தினர்.
அரசு மேல்நிலைப் பள்ளிகளில் ஆங்கிலவழி வகுப்புகளை துவக்க அரசு திட்டமிட்டுள்ளது
ஒவ்வொரு மாவட்டத்திலும் ஆங்கில வழி வகுப்பு செயல்படுகிறது. தற்போதுள்ள ஆசிரியர்களே ஆங்கில வழிக்கல்வி வகுப்புகளை எடுக்கின்றனர். ஒன்றியம் வாரியாக, ஆங்கில வழி வகுப்புகளை துவங்க கோரி, பள்ளிக்கல்வித்துறையை அரசு அறிவுறுத்தி உள்ளது.
இந்நிலையில், மெட்ரிக்., பள்ளிகளில் பத்தாம் வகுப்பு படித்து, குறைந்த மதிப்பெண், கல்வி கட்டணம் செலுத்த முடியாத நிலையில் இருக்கும் மாணவர்களுக்காக மேல்நிலையிலும் ஆங்கில வழி வகுப்புகளை துவக்கலாமா என, அரசு திட்டமிட்டுள்ளது.இதற்காக மாவட்டவாரியாக முதன்மைக்கல்வி அலுவலகம் மூலம் கருத்துக்கேட்டு, பள்ளிக் கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. கல்வித்துறை அலுவலர் ஒருவர் கூறுகையில், " விருப்பம் கேட்டு கடிதம் வந்துள்ளது. மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மூலம் ஆய்வு செய்து, தேவை இருக்கும்பட்சத்தில், அதற்கான இடங்களை தேர்வு செய்து கல்வித்துறைக்கு அறிக்கை அனுப்புவோம்;அரசு பள்ளி ஆங்கில வழிக்கல்விக்கென கூடுதல் ஆசிரியர்களை நியமித்தால் தான் இத்திட்டம் வெற்றிபெறவாய்ப்புஉள்ளது," என்றார்.
செவ்வாய், 10 ஜூன், 2014
தொடக்கக் கல்வித்துறையில் ஆசிரியர்கள் மாறுதல் பதவி உயர்வு கலந்தாய்வு விவரம்
பள்ளிக்கல்வி - ஆசிரியர் பொது மாறுதல் - ஊராட்சி ஒன்றியம் / நகராட்சி/
மாநகராட்சி தொடக்க மற்றும் நடு நிலைப் பள்ளிகள் - 2014-15ம் ஆண்டில் ு
தொடக்கக் கல்வித்துறையில் ஆசிரியர்கள் மாறுதல் பதவி உயர்வு கலந்தாய்வு அரசாணை எண்.137 பள்ளிக்கல்வித் துறை, நாள்:9.6.14
விண்ணப்பங்கள் பெறுதல்: 9.6.2014 முதல் 13.6.2014
16 - காலை: உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் மாறுதல்
16 - மாலை: உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் பதவி உயர்வு
17 - காலை: நடுநிலைப் பள்ளி த.ஆ மாறுதல், மாலை: நடுநிலைப் பள்ளி த.ஆ பதவிஉயர்வு
18 - காலை: ப.ஆ பணிநிரவல், மாலை: ப.ஆ மாறுதல் மற்றும் பதவி உயர்வு
19 - ப.ஆ ஒன்றியம் விட்டு மாறுதல்
21 - ப.ஆ மாவட்ட மாறுதல்
23 - காலை: தொடக்கப்பள்ளி த.ஆ மாறுதல்,
மாலை: தொடக்கப்பள்ளி த.ஆ பதவி உயர்வு
24 - இ.நி.ஆ பணிநிரவல்
25 - இ.நி.ஆ மாறுதல்
26 - இ.நி.ஆ ஒன்றியம் விட்டு ஒன்றியம் மாறுதல்
28 - இ.நி.ஆ மாவட்ட மாறுதல்
Sent from my iPad
பள்ளிக்கல்வி - ஆசிரியர் பொது மாறுதல் 2014-15ம் ஆண்டில் கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள். வெளியிடப்பட்டது
மாநகராட்சி தொடக்க மற்றும் நடு நிலைப் பள்ளிகள் மற்றும் அரசு / நகராட்சி /
மாநகராட்சி உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகள் - 2014-15ம் ஆண்டில் கடைபிடிக்க
வேண்டிய நெறிமுறைகள். வெளியிடப்பட்டது
டி.இ.டி இம்மாத இறுதிக்குள், ஆசிரியர் தேர்வு பட்டியலை எதிர்பார்க்கலாம்?
டி.இ.டி., சான்றிதழ் சரிபார்ப்பில் 'ஆப்சென்ட்' : டி.ஆர்.பி.,கடைசி வாய்ப்பு அறிவிப்பு டி.இ.டி., (ஆசிரியர் தகுதி தேர்வு) தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பில், பங்கேற்காமல், 'ஆப்சென்ட்' ஆனவர்கள், கடைசி வாய்ப்பாக, இன்று முதல், 13ம் தேதி வரை நடக்கும் முகாம்களில் கலந்து கொள்ளலாம்' என, டி.ஆர்.பி., (ஆசிரியர் தேர்வு வாரியம்) அறிவித்து உள்ளது.
அறிவிப்பு விவரம்: கடந்த, 2013ல் நடந்த டி.இ.டி., தேர்வில், தேர்ச்சி பெற்றவர்களுக்கும், தேர்ச்சி மதிப்பெண்ணில்,தமிழக அரசு அளித்த, 5 சதவீத சலுகையினால், தேர்ச்சி பெற்றவர்களுக்கும், ஏற்கனவே, சான்றிதழ்சரிபார்ப்பு நடத்தப்பட்டு விட்டது. இதில், 1,429 பேர் பங்கேற்கவில்லை. இவர்களுக்கு, கடைசி வாய்ப்பாக, இன்று முதல்,
13ம் தேதி வரை நடக்கும் சான்றிதழ் சரிபார்ப்பு முகாம்களில் பங்கேற்க, வாய்ப்பு வழங்கப்படுகிறது. மதுரை, சேலம்,திருச்சி, விழுப்புரம் ஆகிய, நான்கு மண்டலங்களில், சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கிறது. இது குறித்த விவரங்களை,www.trb.tn.nic.in என்ற, டி.ஆர்.பி., இணையதளத்தில் பார்க்கலாம். இவ்வாறு, டி.ஆர்.பி., தெரிவித்துள்ளது.'
இந்த சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்தபின், புதிய அரசாணையின்படி, 'ரேங்க்' பட்டியல் தயாரிக்கப்படும்' என, துறை வட்டாரம் தெரிவித்தது.
எனவே, இம்மாத இறுதிக்குள், ஆசிரியர் தேர்வு பட்டியலை எதிர்பார்க்கலாம்.
TAMIL B SERIES. CASE TODAY ( 10.06 2014 ) LISTED IN MADURAI BENCH
COURT NO. 2 HON'BLE MR.JUSTICE V.RAMASUBRAMANIAN HON'BLE MS.JUSTICE V.M.VELUMANI BEFORE THE MADURAI BENCH OF MADRAS HIGH COURT TO BE HEARD ON TUESDAY THE 10TH DAY OF JUNE 2014 AT 10.30 A.M. ----------------------------------------------------------------------------------------- FOR STAY IN WA(MD).1089 AND 1090/2013 41. MP(MD).1/2013 SPL. GOVT. PLEADER M/S.T.LAJAPATHI ROY FOR CAVEATOR (R1) WA(MD).1089 AND 1090/2013 ----------------------- COURT NOTICE SERVED REG R2 ANDR5 ------------------------------ R2. R. SANTHAKUMAR R5. T. BALAMURUGAN M/S.G.THALAIMUTHARASU FOR R3 AND R4 IN BOTH PETITIONER M/S.J.JEYAKUMARAN M.SURESH FOR R1 IN WA(MD).1090/2013 MP(MD).2/2013 INWA(MD).1089/13 ------------------------------ COURT NOTICE SERVED REG R5 AND R8 R5 - R. SANTHAKUMAR R8 - T. BALAMURUGAN AND MP(MD).1/2013 - DO - AND To Implead MP(MD).1/2014 M/S. P. MAHENDRAN AND MP(MD).2/2014 M/S.P.SARAVANA KUMAR P.KALAIYARASI BHARATHI AND MP(MD).3/2014 M/S.A.RAJINI AND MP(MD).2/2013 M/S.T.PON RAMKUMAR M. SANKAR CONTD ... AND WP(MD).38/2014 M/S.T.M.MADASAMY AND WP(MD).507/2014 M/S.T. PON RAMKUMAR M.SANKAR AND For Direction MP(MD).1/2014 - DO - AND WP(MD).1333/2014 M/S.D.VENKATESH P.CHELLAPANDIAN AND Interim directions MP(MD).1/2014 - DO - AND WP(MD).1403/2014 M/S.M.THIRUNAVUKKARASU V.B. SUNDARESHWAR For Direction MP(MD).1/2014 - DO - For Direction MP(MD).2/2014 - DO - AND WP(MD).1575/2014 M/S. LAJAPATHI ROY S. RAJASEKAR AND For Direction MP(MD).1/2014 - DO - AND WP(MD).1589/2014 M/S.A.JAYARAMACHANDRAN S. RAJENDRAN For Direction MP(MD).1/2014 - DO - AND WP(MD).1658/2014 M/S.S.C.HEROLD SINGH T.JEEN JOSEPH For Direction MP(MD).1/2014 - DO - AND WP(MD).1720/2014 M/S.V.RAJIV RUFUS N. SOBANABAI For Direction MP(MD).1/2014 - DO - AND WP(MD).1818/2014 M/S.M.P. SENTHIL G.VENUGOPAL For Direction MP(MD).1/2014 - DO - AND WP(MD).1882/2014 M/S S.C.HEROLD SINGH A.JOHN XAVIER For Direction MP(MD).1/2014 - DO - AND WP(MD).2084/2014 M/S B.JEYAKUMAR S.BALAKARTHICK For Direction MP(MD).1/2014 - DO - AND WP(MD).2213/2014 M/S J.KARL JACOB B. BALACHANDAR AND WP(MD).2271/2014 M/S J.KARTHIKEYAN S.VARATHRAJAN AND WP(MD).2394/2014 M/S D.SELVANAYAGAM K. SANKAR For Direction MP(MD).1/2014 - DO - AND WP(MD).4038/2014 M/S A.RAJINI M.SENTHILKUMAR For Direction MP(MD).1/2014 - DO - CONTD ... and WP(MD).3304/2014 M/S V.RAJIV RUFUS N. SOBANABAI For Direction MP(MD).1/2014 - DO - and WP(MD).946/2014 M/S.S.C.HEROLD SINGH R3 - THE SECRETARY A. JOHN XAVIER TEACHERS RECRUITMENT BOARD COLLEGE ROAD, CHENNAI-6 R1 AND R2 - TAPAL DUE PRIVATE NOTICE -------------- PROOF NOT FILED For Direction MP(MD).1/2014 - DO - and WP(MD).5828/2014 M/S.T.LAJAPATHI ROY S. RAJASEKAR For Direction MP(MD).1/2014 - DO -
திங்கள், 9 ஜூன், 2014
பிளஸ்–2 விடைத்தாள் நகலில்,கணக்கு பாடத்தில், கணக்கு தப்பிய மதிப்பெண் கூட்டலால் குளறுபடி
மதிப்பெண் கூட்டலால்குளறுபடி ஏற்பட்டுள்ளது. கலந்தாய்வுக்கு முன்
மறுமதிப்பீட்டு மதிப்பெண் வழங்கப்பட வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. 'தினத்தந்தி' செய்தி வெளியீடு பிளஸ்–2 விடைத்தாள் நகல் வெளியீட்டில்நடந்த குளறுபடி குறித்து 'தினத்தந்தி'நாளிதழில செய்தி வெளியிடப்பட்டது.
இதனை பார்த்த, சென்னை சின்மையா நகர்அருகே உள்ள பாரதியார் நகரை சேர்ந்த பிளஸ்–2 மாணவர் வே.மகேஸ்வரன்தனது சகோதரர் வே.மதன்குமாருடன் 'தினத்தந்தி' அலுவலகம் வந்து, தனக்கு கணக்கு பாடத்தில், மதிப்பெண் கூட்டல் கணக்கு தப்பி உள்ளதாகதெரிவித்தார். இது குறித்து மகேஸ்வரன் கூறியதாவது:– நாமக்கல் மாவட்டத்தில், பிளஸ்–2 மாணவர்களுக்கு நன்கு பயிற்சி அளிக்கப்படுவதால், சென்னையில்இருந்து நாமக்கல் மாவட்டம் வளையப்பட்டியில் உள்ள ஜெயம் மெட்ரிக்குலேஷன் பள்ளியில் விடுதியில்தங்கி பிளஸ்–2 படித்தேன். எனக்கு பிளஸ்–2 தேர்வில், தமிழ் 180, ஆங்கிலத்தில் 180, கணக்கு 176,இயற்பியல் 188, வேதியியல் 197, கம்ப்யூட்டர் சயின்ஸ் 189 மதிப்பெண்கள் என மொத்தம் 1,110 மதிப்பெண்கள்கிடைத்தன. இதில், கணக்கு, இயற்பியல், வேதியியல் பாடங்களில் 184.3 'கட் ஆப்' மதிப்பெண்கள் பெற்றேன். விடைத்தாள் நகலுக்கு விண்ணப்பம் அதைத் தொடர்ந்து, கணக்கு, இயற்பியல் மற்றும் வேதியியல் பாடங்களுக்கு விடைத்தாள் நகல்வேண்டி விண்ணப்பித்திருந்தேன். இதற்கான விடைத்தாள் நகல்கள் கடந்த 4–ந் தேதி இணையதளத்தில் வெளியிடப்பட்டன. நான் வெள்ளிக்கிழமை மாலையில் விடைத்தாள் நகல்களை பதிவிறக்கம்செய்து பார்த்தேன். அதில், இயற்பியல், வேதியியல் பாடங்களில் மதிப்பெண்கள் சரியாக மதிப்பிடப்பட்டு இருந்தன.கணக்கு பாடத்திலும் சரியாக மதிப்பிடப்பட்டுள்ளது. எனது கணக்கு பாட விடைத்தாளை திருத்தியகணக்கு ஆசிரியர் மிகவும் சிறப்பாக ஒரு வரி விடாமல், மிகவும் தெளிவாக திருத்தி உள்ளார். மதிப்பெண் கூட்டலில் தவறு அதன்பிறகு, ஒவ்வொரு கேள்விக்கும் நான் பெற்ற மதிப்பெண்கள், ஒவ்வொரு பக்கத்தில் நான் பெற்ற
மதிப்பெண்கள் என அந்த மதிப்பெண்களையும் தெளிவாக எழுதி உள்ளார். ஆனால்,
அவற்றை கூட்டி மதிப்பெண் போடும்போது, கூட்டலில் கணக்கு தப்பி, 186–க்கு பதில் 176
மதிப்பெண்கள் போட்டுள்ளார். இந்த 10 மதிப்பெண்கள் அதிகமாக கிடைப்பதால் எனது 'கட் ஆப்' மதிப்பெண் 189.3 ஆக உயரும். நான் மாநிலஅளவில் 1500 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் கலந்து கொண்டிருக்கிறேன். எனவே எனக்கு விளையாட்டுக்கான
முன்னுரிமைப்படி, அண்ணா பல்கலைக்கழகத்தில், ஏதாவது என்ஜினீயரிங் கல்லூரியில் இடம்
கிடைப்பதற்கான வாய்ப்பு உள்ளது. இதற்கான கலந்தாய்வு வருகிற 16–ந் தேதி நடைபெற உள்ளது. கவனமாக செயல்பட வேண்டும் அதற்கு முன், எனக்கு மறுமதிப்பீடு செய்து உரிய மதிப்பெண் போட்டு, மதிப்பெண் பட்டியல் வழங்கப்பட வேண்டும். . இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Sent from my iPad
சனி, 7 ஜூன், 2014
தமிழை ஒரு பாடமாக கற்பிக்க வேண்டும் என்ற உத்தரவை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு
தமிழ்நாடு தமிழ் கற்கும் சட்டம் 2006-ம் ஆண்டு இயற்றப்பட்டது. இந்த சட்டத்தின்படி ஒன்றாம் வகுப்பு முதல் பகுதி-1ல் தமிழை ஒரு மொழிப் பாடமாகக் கற்பிப்பது கட்டாயமாகும். இதன்படி 2013-14-ம் கல்வியாண்டு வரை தமிழை ஒரு பாடமாகக் கற்பிப்பது 8-ம் வகுப்பு வரை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் 2015-16-ம் கல்வியாண்டில் 10-ம் வகுப்பில் பகுதி-1-ல் தமிழை மொழிப் பாடமாகக் கட்டாயம் கற்பிப்பது தொடர்பாக தமிழ்நாடு மெட்ரிகுலேஷன் பள்ளிகளின் இயக்குநர் கடந்த 10.2.2014 அன்று ஒரு கடிதம் அனுப்பியுள்ளார்.
2015-16-ம் கல்வியாண்டில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதுபவர்கள் பகுதி-1ல் தமிழ் மொழிப் பாடத்தில் மட்டுமே தேர்வு எழுத இயலும் என்று இயக்குநர் கூறியுள்ளார்.
இதனை எதிர்த்து தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் எஸ்.கே.வெங்கடாசல பாண்டியன் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
தற்போது மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் மொழிப் பாடங்களைத் தவிர மற்ற அனைத்து பாடங்களும் ஆங்கில மொழியில் கற்பிக்கப்படுகின்றன. மொழிப் பாடங்களைப் பொருத்தமட்டில் தமிழ், இந்தி, ஜெர்மன், பிரெஞ்சு போன்ற பாடங்களை தேர்ந்தெடுத்துப் படிக்க மாணவர்களுக்கு வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன.
எங்கள் சங்கத்தில் உறுப்பினராக உள்ள பெரும்பாலான பள்ளிகளின் மாணவர்கள் தமிழ் அல்லாத மொழியை பாடமாக எடுத்துப் பயின்று வருகின்றனர். இந்நிலையில் மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குநரின் உத்தரவால் அந்த மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள். மேலும், தமிழை ஒரு பாடமாக கற்பிக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்துவது கல்வி நிறுவனங்களின் அடிப்படை உரிமைகளுக்கு எதிராக உள்ளது.
ஆகவே, கடந்த பிப்ரவரி 10-ம் தேதி மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குநர் அனுப்பிய கடிதத்தில் கூறியுள்ளவற்றை செயல்படுத்த இடைக்காலத் தடை விதிப்பதோடு, அதனை ரத்து செய்யவும் நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கோரப்பட்டுள்ளது.
இந்த மனு நீதிபதி பி.ராஜேந்திரன் முன்னிலையில் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது, இந்த மனு தொடர்பாக அரசுத் தரப்பில் பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை வரும் செவ்வாய்க் கிழமைக்கு (ஜூன் 10) ஒத்தி வைத்தார்.
வெள்ளி, 6 ஜூன், 2014
யார் மீதாவது கோபமா ?
யார் மீதாவது கோபம் வந்தால் ஆபிரகாம் லிங்கன் அவருடைய பெயருக்குக் கோபமாக ஒரு கடிதம் எழுதுவாராம். தன்னுடைய ஆத்திரத்தையெல்லாம் கொட்டி, எல்லா வசவுச் சொற்களையும் போட்டு அந்தக் கடிதத்தை எழுதி முடிப்பாராம். கோபமெல்லாம் எழுத்தில் வெளிப்பட்டுக் கரைந்தவுடன், அந்தக் கடிதத்தை எடுத்து அப்படியே தனியே வைத்துவிடுவாராம். இத்தகைய கடிதங்களில் அவர் எப்போதும் கையெழுத்திட்டதும் இல்லை, யாருக்கு எழுதினாரோ அவருக்கு அனுப்பியதும் இல்லை.
லிங்கனின் கடிதம்
அமெரிக்காவில் நடந்த உள்நாட்டுப் போரின் போது கெட்டிஸ்பர்க் என்ற இடத்தில் யூனியன் படைகளுக்குத் தலைமை தாங்கிய ஜெனரல் ஜார்ஜ் மீடே, கான்ஃபடரேட் படைகளுக்குத் தலைமை தாங்கிய ராபர்ட் லீயைத் தோற்கடிக்க தாமதித்ததல்லாமல், தப்பிக்கவும் விட்டதற்காக ஆபிரகாம் லிங்கனுக்கு அவர்மீது ஏகப்பட்ட கோபம். ஆனால், கோபமாக எழுதிய கடிதத்தை அவருக்கு அனுப்பாமல் விட்டதால், ஜார்ஜ் மீடேவுக்குக் கடைசிவரை லிங்கனின் கோபமே தெரியாமல்போனது.
ஒரே நாளில் முடிந்திருக்க வேண்டிய அந்தப் போர், மூன்று நாட்கள் தொடர்ந்ததல்லாமல், சுமார் 56,000 பேர் அதில் இறந்தனர்.
என்ன பேசுகிறோம், எப்படிப் பேசுகிறோம் என்று நிதானித்துப் பேச வேண்டிய உயர் தலை வர்கள் லிங்கனிடமிருந்து இந்தக் கலையைக் கற்றுக்கொள்ள வேண்டும். இப்படி, கோபமாக இருக்கும்போது கடிதம் எழுதுவதும் பிறகு அதை உரிய நபருக்கு அனுப்பாமல் வைத்துக்கொள்வதும் லிங்கனுக்கு மட்டுமல்ல, வேறு பலருக்கும் அந்த நாளில் வழக்கமாக இருந்திருக்கிறது. இப்படி எழுதுவது கோப உணர்ச்சிகளுக்கு வடிகாலாக அமைவதுடன், கடிதம் எழுதும்போதே அவர் என்ன தவறு செய்தார், நாம் எப்படி அவருடைய தவறைத் தடுத்திருக்கலாம் என்ற யோசனைகளும் தோன்றும்.
ஹாரி ட்ரூமேன், சர்ச்சில்…
இப்படிக் கடிதம் எழுதும்போது வார்த்தைகளைப் பயன்படுத்தவும் வசைபாடவும் அளவற்ற சுதந்திரம் கிடைப்பதாக மார்க் ட்வைன் கூறியிருக்கிறார். அவருக்கும் இந்தப் பழக்கம் உண்டு.
"அமெரிக்காவின் நிதிநிலைமை என்ன என்பதை, அந்த ஆண்டவனுக்கே நிதி ஆலோசகராக இருக்கக் கூடியவர் வந்து உங்களுடைய அறிக்கையைப் படித்தால்கூட ஒன்றும் புரியாதய்யா" என்று அமெரிக்க அதிபர் ஹாரி ட்ரூமேன் ஒருமுறை தன்னுடைய நிதியமைச்சருக்குக் கடிதம் எழுதினார். பிறகு, அதை அவருக்கு அனுப்பாமல் சட்டைப் பையிலேயே நீண்டகாலம் வைத்திருந்தார்.
1922-ல் பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் லாயிட் ஜார்ஜுக்கு எழுதிய (அனுப்பப்படாத) கடிதத்தில், இராக் பிரச்சினையில் தலையிடுவதன் மூலம் ஆண்டுதோறும் 80 லட்சம் பவுண்டுகள் தண்டமாகச் செலவாகிறது என்று எச்சரித்திருந்தார் வின்ஸ்டன் சர்ச்சில்.
இப்படிக் கோபமாக இருக்கும்போது கடிதம் எழுதிவிட்டு, பிறகு அதை அனுப்பாமல் வைத் திருக்கும் ஏகபோகம் அரசியல் தலைவர்களுக்கும் எழுத்தாளர்களுக்கும் மட்டுமே உரியதல்ல. காதலர்கள்கூட ஒருவருக்கொருவர் ஏற்படும் ஏமாற்றங்கள், கோபதாபங்களைப் பட்டியலிட்டு இப்படிக் கடிதமாக எழுதிக்கொள்வார்கள். பிறகு, அதை அனுப்பாமல் தங்களுடனேயே வைத்துக் கொண்டுவிடுவார்கள். (இல்லாவிட்டால் காதல் பிழைக்காதே?)
அப்பா-மகன் கடிதங்கள்
குடும்பங்களிலும் இது சகஜம். கல்லூரியில் படிக்கிறேன் பேர்வழி என்று ஊரைச் சுற்றிக்கொண்டு சினிமா, நாடகம் என்று பார்த்துக்கொண்டு பணத்தைக் கரைக்கும் மகனுக்கு அப்பாவும், கல்லூரியில் போய்ப் படி என்று அனுப்பிவிட்டு, சாப்பாட்டுக்கு மட்டுமே கட்டுப்படியாகும் அளவுக்குப் பணம் அனுப்பும் கஞ்ச அப்பாவுக்கு மகனும் இப்படிக் கோபத்துடன் கடிதம் எழுதி அனுப்பாமல் தங்களுடனேயே வைத்துக்கொள்வதும் உண்டு.
தெருவில் போகும்போது மாடு மாதிரி நம்மீது வந்து மோதிவிட்டுத் திரும்பிப் பார்க்காமல் செல்லும் 'ஜென்மத்தை' நாம் சிறிது நேரம் நின்று திரும்பிப்பார்த்து, அவன் காதுக்கு எட்டாது என்று தெரிந்ததும் துணிச்சலாகத் திட்டுவதில்லையா அதுவும் இந்தக் கடித ரகத்தில்தான் சேர்த்தி.
பத்திரிகைக்காகக் கட்டுரை எழுதும்போது எனக்கும் இந்தப் பழக்கம் உண்டு. நான் எழுதிய வற்றை இப்படி இப்படி மாற்ற வேண்டும் என்றும் இது சரியில்லை என்று அடித்தும் தரும் ஆசிரியரின் போக்கைக் கணித்து, என்னுடைய கணினியிலேயே சில வாசகங்களைத் தயாராக வைத்திருப்பேன். என்னுடைய கோபமும் ஆத்திரமும் தணிந்த பிறகு அதையெல்லாம் நீக்கிவிடுவேன். எனக்குத் தெரிந்து என்னுடைய கட்டுரையில் ஆசிரியர் கைவைக்காமல் இருந்ததே கிடையாது.
லிங்கன் காலத்திலிருந்த இந்தப் பழக்கத்தில் சிறிதே இப்போது மாற்றங்கள் ஏற்பட்டிருக்கலாம். இப்போதெல்லாம் யாரும் யாருக்கும் கடிதம் எழுதுவதே கிடையாது. எல்லாமே மின்னஞ்சலாக மாறிவிட்டதே!
மாறியது யுகம்
கணினியில் நம் எண்ணத்தை, கோபத்தை, ஆத்திரத்தையெல்லாம் கொட்டிப் பதில் தயாரித்து ஒருமுறைக்கு இருமுறை படித்து கோபம் தீர்ந்ததும் அப்படியே சேமிப்பதோ அல்லது அழிப்பதோதான் நடக்கிறது.
சமூக வலைத்தளங்கள் நல்லதொரு வடிகாலாக இப்போது இருக்கிறது. தங்களுடைய நெருங்கிய நட்பு வட்டத்தினர் மட்டும் படிக்கும் வகையில் எல்லாவற்றையும் கொட்டி எழுத முடிகிறது. நாம் யாரென்றே தெரியாமல் உலகம் முழுக்கப் படிப்பதற்கும் நம்மால் எழுத முடிகிறது, கிட்டத்தட்ட மொட்டைக் கடிதாசிபோல!
காதலித்து பிறகு ஏமாற்றிய காதலிக்கு, வாழ்க்கையில் நாம் ஒருமுறை சந்தித்த அந்த நபருக்கு, சிற்றுண்டிச் சாலையில் பணியாற்றும் அந்த ஊழியர்களுக்கு என்று அவர்களுடைய பெயர், அடையாளத்தை வெளிப்படுத்தாமலும் - அதே சமயம் - சம்பந்தப்பட்டவர்கள் அந்த சமூக வலைத்தளத்தைப் படிக்க நேர்ந்தால் அது தங்களுக்குத்தான் என்று தெரிந்துகொள்ளவும் - இயலும் வகையில் சமூக வலைத்தளங்கள் இருக்கின்றன.
நீங்கள் கைபேசியில் போன் செய்யும் நபர் இரண்டு மூன்றுமுறை கால் செய்தும் எடுக்காவிட்டால் உங்களுக்கு வரும் கோபத்தினைக்காட்ட இருக்கவே இருக்குது எஸ்எம்எஸ் மெஸ்சேஜ்...அப்புறம் என்ன மெஸ்சேஜ்ஜை படித்துவிட்டு அவர் பாடு திண்டாட்டம்தான்....
இதில் ஆபத்தும் இருக்கிறது. முற்காலத்தில் கோபம் வந்தால் உடனே செயலாளரை அழைத்துக் கடிதத்தைத் தயாரிக்கச் சொல்ல வேண்டும் அல்லது நாமே பேனாவால் எழுத வேண்டும். இதற்குச் சற்று நேரம் ஆகும் என்பதால் கொதிப்பு அடங்கி, கோபம் குறைந்து நிதானம் பிறக்க வழியுண்டு. இப்போது கணினியை முடுக்கினால் திரை வந்து விடுகிறது, படபடவென்று மின்னல் வேகத்தில் கோபத்தைக் கொட்டவும் முடிகிறது. அதே வேகத்தில் எதிராளிக்குக் கடிதத்தை மின்னஞ்சலில் அனுப்பிவிட்டால் வேறு வினையே வேண்டாம். முன்பெல்லாம், கடிதங்கள் சம்பந்தப்பட்ட நபர் கையில் மட்டும்தான் கிடைக்கும், இப்போதோ எல்லோராலும் படிக்கப்பட்டு பரவிவிடும் ஆபத்தும் சேர்ந்திருக்கிறதே!
இப்படி மின்னஞ்சலில் எழுதுவதிலும் இன்னொரு சுகக் குறைவு இருக்கிறது. கையால் பேனா பிடித்துக் காகிதத்தில் எழுதும்போது, யாரைக் குற்றம் சாட்டுகிறோமோ அவரே நேரில் வந்து கைகட்டி தண்டனையை வாங்கிக்கொள்வது போன்ற திருப்தி ஏற்படும். இங்கோ நொடிக்கு நூறு எழுத்துகள் என்று திரை எல்லாவற்றையும் வாங்கி ஏப்பம்விட்டு அப்படியே எதிராளிக்கு அனுப்பிப் பகையை வளர்த்துவிடும்.
கைபேசியில்கூட எதிரில் இருப்பவர் பேசுவது பிடிக்கவில்லையென்றால், "சரி… சரி… போனை வை" என்று சொல்லிவிட்டுப் பொத்தானை அழுத்தத் தான் முடியும். இதே பழைய காலத் தொலைபேசி என்றால் ரிசீவரை ஓங்கி அறைந்து கோபத்தைத் தணித்துக்கொள்ள முடியும்!
ஆறு மாதம் போகட்டும்.....
தமிழகத்தில் 1967-ல் காங்கிரஸ் தோற்று தி.மு.க. அரசு பதவிக்கு வந்த சில நாட்களில், "புதிய அரசைப் பற்றி உங்கள் கருத்து என்ன?" என்று காமராஜரிடம் கேட்டபோது, "ஆறு மாதம் போகட்டும்; பேசலாம்" என்றாராம். அரசியல் பெருந்தன்மை மட்டுமல்ல இது. ஒரு புதிய அரசாங்கத்தின் நிர்வாகிகள் தங்களை ஸ்திரப்படுத்திக்கொள்ளவும் அரசு இயந்திரத்தின் செயல்பாடுகளைப் புரிந்துகொள்ளவும் கொஞ்சம் அவகாசம் தேவைப்படுகிறது. இந்த அவகாசத்தையும் அதற்குள் நடக்கும் தடுமாற்றப் பிழைகளையும் நாம் ஏற்றுக்கொண்டுதான் ஆக வேண்டியிருக்கிறது. ஆனால், அதற்காகவே எல்லா விஷயங்களையும் அப்படியே மௌனமாகப் பார்த்து அனுமதித்துவிட முடியாதல்லவா?
நிர்வாகத்தை ஸ்தம்பிக்கவைத்திருந்த மன்மோகன் சிங் ஆட்சிக்குப் பிறகு, வேகத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கும் இந்த ஆட்சி நிச்சயம் மக்களுக்கு உற்சாகத்தைத் தந்திருக்கிறது. அதேசமயம், மத்திய அரசின் சர்வ இயக்கங்களும் பிரதமர் அலுவலகத்தை மட்டுமே சுற்றியிருக்கும் வகையில், மோடி மேற்கொள்ளும் மாற்றங்கள் நல்ல அறிகுறியாகப் படவில்லை.
முன்னதாக, பல்வேறு துறைகளை ஒருங்கிணைத்து, ஒரு அமைச்சரின் கீழ் அவர் சம்பந்தப்பட்ட ஏனைய துறைகளையும் உள்ளடக்கி அமைச்சரவையை அமைத்தார். இந்திரா காந்தியும்கூட இப்படிச் செய்தார். அது ஓரளவுக்குப் பலனையும் தந்தது. அடுத்து, அதிகாரமளிக்கப்பட்ட அமைச்சர்கள் குழு முறையை மோடி ஒழித்தார். வாஜ்பாய் காலத்தில் கொண்டுவரப்பட்டு, மன்மோகன் ஆட்சியிலும் நீடித்த முறை இது. கூட்டாட்சித் தத்துவத்துக்கு வலு சேர்க்கும் வகையிலும், கூட்டணிக்குப் பிரதிநிதித்துவம் அளிக்கும் வகையிலும் அரசின் முக்கியமான முடிவுகளை மேற்பார்வையிடும் அமைப்பாக இது உருவாக்கப்பட்டது. ஆனால், இந்தக் குழுக்களைக் கலைப்பது முடிவுகளை விரைந்து எடுக்க உதவும் என்றது பிரதமர் அலுவலகம். இப்போது, எந்தப் பிரதமரும் மேற்கொள்ளாத ஒரு நடைமுறையைத் தொடங்கியிருக்கிறார் மோடி. அதாவது, ஒரு துறையின் அமைச்சர் இல்லாமல் அமைச்சரவைச் செயலர்களுடன் ஆலோசனை நடத்தும் நடைமுறை.
தனிநபர் சாகச உணர்வு அல்ல; கூட்டுத் தலைமை உணர்வும் அணிச் செயல்பாடுமே ஒரு பெரிய அமைப்பில், நீடித்த சாதனைகளுக்கு வழிவகுக்கும் என்பது திரும்பத்திரும்ப நிரூபிக்கப்பட்ட மேலாண்மை மந்திரம். மோடி முழுச் சுதந்திரத்துடனேயே தன்னுடைய அமைச்சரவைச் சகாக்களைத் தேர்ந்தெடுத்திருக்கிறார். எனில், அவர்கள் மீது முழு நம்பிக்கை வைப்பது அவசியம் இல்லையா? துறையின் தற்போதைய நிலை, புதிய இலக்கு, அதற்கான தேவைகள் என ஒவ்வொன்றையும் அந்தந்தத் துறையின் அமைச்சர்களை அருகில் வைத்துக்கொண்டே விவாதிப்பதுதானே சரியான நடைமுறை?
ஜனநாயகத்தில் அமைச்சர்கள்தான் அரசுக்கும் மக்கள் பிரதிநிதிகளுக்குமான பாலம். அதிகாரிகளைப் பிரதமர் நேரடியாகச் சந்தித்து ஆலோசனை கலக்கத் தொடங்கினால், நாளடைவில் அது அமைச்சர்களை அதிகாரிகள் அலட்சியம் செய்யவும், அவர்களுக்கு அப்பாற்பட்டுச் செயல்படவும் வழிவகுக்காதா? மோடி இன்று எதை நினைத்து இந்த நடைமுறையைத் தொடங்குகிறாரோ தெரியவில்லை; ஆனால், அது நல்லதல்ல என்பது மட்டும் நிச்சயம்!
ஆசிரியர்களே, குழந்தைகளைக் கரையேற்றுவதற்கு உங்களைத் தவிர வேறு யார் இருக்கிறார்கள்?
உலகிலேயே மிகப் பெரிய சொத்து, மனித வளம். ஒவ்வொரு நாட்டின் மிகப் பெரிய பலம், அதன் அறிவார்ந்த சமுதாயம்தான். இந்த அறிவார்ந்த சமுதாயத்தின் அடித்தளம், பள்ளிக்கூடங்கள்தான் என்பது அனைவருமே அறிந்த விஷயம்தான். ஆனால், இந்தியாவில், குறிப்பாகத் தமிழகத்தில் கல்வி நிலவரம் கவலைக்கிடமான நிலையில் இருப்பதையும் இதற்குப் புத்துயிர் அளிப்பதற்கான முனைப்பான செயல்திட்டங்கள் மேற்கொள்ளப்படாததையும், பள்ளிக் கல்வித் துறை சார்ந்தவர்கள், முழுமையாக உணர்ந்ததாகத் தெரியவில்லை.
தமிழகத்தின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கப்போகும் பதின்பருவ மாணவ சமுதாயத்தின் எதிர்காலத்தை முடிவுசெய்வது பன்னிரண்டு ஆண்டுகாலப் பள்ளிக் கல்விதான்.
ஒவ்வொரு ஆண்டும் 12-ம் வகுப்பு தேர்ச்சி விகிதம் அதிகரித்துவருகிறது. 2010-ல் 85.2% இருந்த தேர்ச்சி விகிதம் 2011-ல் 85.9%, 2012-ல் 86.7%, 2013-ல் 88.1%, 2014-ல் 90.6 என அதிகரித்த வண்ணம் உள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் 12-ம் வகுப்பு தேர்ச்சி விகிதம் உயர வேண்டும், அதாவது உயர்த்திக் காட்டப்பட வேண்டும் என்பது தமிழக அரசின் எழுதப்படாத ஒரு சட்டம். எந்தக் கட்சி ஆட்சியில் இருந்தாலும் பின்பற்றப்படும் சட்டம் இது. இதே நிலை நீடித்தால், அதிகபட்சம் இன்னும் 10 வருடங்களில் 12-ம் வகுப்புத் தேர்வில் 100 சதவீதத் தேர்ச்சியை எட்டி இமாலய சாதனை படைத்த ஒரே மாநிலம் தமிழ்நாடுதான் என வெற்றி முரசு கொட்டிக்கொள்ளும் புரட்சிகரமான நிலையும் வரலாம். ஆனால், இப்படிப்பட்ட சாதனை முழக்கம் பள்ளிக் கல்வியின் உண்மையான நிலையை, குறிப்பாக 12-ம் வகுப்பு மாணவர்களின் உண்மையான கல்வித் தகுதியைப் பிரதிபலிக்கவில்லை என்பதுதான் கவலை தரும் நிலவரம்.
தாராளமயக் கொள்கை
10-ம் வகுப்பில் 500 மதிப்பெண்களுக்குத் தேர்வு எழுதியவர்கள், 12-ம் வகுப்பில் 1,200 மதிப்பெண்களுக்குத் தேர்வு எழுதுகின்றனர். 11-ம் வகுப்பின் பாடங்கள் அடியோடு புறக்கணிக்கப்படுகின்றன. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளைப் பொறுத்தவரை பள்ளிக்கல்வித் துறைச் செயலாளர்கள் தொடங்கி, ஆசிரியர்கள் வரையிலான அனைவரின் அக்கறையும் கவனமும் 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் மட்டுமே மையம் கொண்டுள்ளது. இதனால், 11-ம் வகுப்புப் பாடங்கள்குறித்தோ அந்த வகுப்பு மாணவர்களின் கல்வித் தரம் குறித்தோ யாருமே பொருட்படுத்துவதில்லை.
தனியார் பள்ளிகளிலோ காலாண்டுத் தேர்வு முடிந்ததுமே 11-ம் வகுப்புகளில் 12-ம் வகுப்புப் பாடங்களை நடத்தி மதிப்பெண்களைக் குவிப்பதற்கான 'வித்தைகளை' ஆரம்பித்துவிடுகின்றனர். தமிழக அரசின் கல்வித் துறையும் மாணவ, மாணவியரை சுலபமாகத் தேர்வுகளை எழுத வைப்பதற்கான அனைத்து வழிமுறைகளையும் பின்பற்றுகிறது. அதிக எண்ணிக்கையில், அதிக மதிப்பெண்களுடன் தேர்ச்சியடைய வைப்பதற்கு ஏற்பதான் வினாத்தாள்களும் தயாரிக்கப்படுகின்றன. விடைத்தாள்களைத் திருத்து வதிலும் 'தாராளமயக் கொள்கைதான்' பின்பற்றப் படுகிறது.
200/200 அல்லது 199/200, 198/200 மதிப்பெண்கள் பெறும் விடைத்தாள்கள் மட்டும் கூடுதல் கவனத்துடன் சரிபார்க்கப்படுகின்றன. தேர்ச்சி பெறுவதற்கான மதிப்பெண்ணில் 5, 6 மதிப்பெண்கள் குறைவாகப் பெறுவோரின் விடைத்தாள்கள் மீண்டும் மதிப்பிடப்பட்டுச் சலுகை மதிப்பெண்கள் வழங்கப்படுகின்றன. இந்த இரண்டு நிலைக்கும் இடைப்பட்டோரின் விடைத்தாள்கள் திருத்தப்படுவது, சம்பந்தப்பட்ட ஆசிரியரின் திறன், மனநிலை ஆகியவற்றைப் பொறுத்தது எனச் சொல்லப்படுகிறது. மதிப்பெண் கூட்டலில் தவறு செய்வது ஆண்டுக்கு ஆண்டு அதிகரிக்கிறது.
இதன் எதிரொலியாகத்தான் மறுமதிப்பீடு கோருவோரின் எண்ணிக்கையும் அதிகரிக்கிறது. இதெல்லாம் ஒருபக்கம் இருக்கட்டும். பன்னிரண்டாண்டு பள்ளிக் கல்வி முடித்து, அதிக மதிப்பெண்களுடன், சென்னை அண்ணா பல்கலைக்கழகம் போன்ற முதன்மையான பொறியியல் கல்லூரிகளில் சேரும் 'பிரைட் ஸ்டூடண்ட்ஸ்' எனப்படும் தலைசிறந்த மாணவ, மாணவியரில் பெரும்பாலோர் முதல் பருவத் தேர்வில் பல பாடங்களில் வெற்றி பெறுவதில்லை. அடுத்தடுத்த தோல்விகள் காரணமாக, ஒரு சிலர் தற்கொலையை நாடும் அளவுக்குப் போய்விடுகின்றனர்.
செக்கு மாடுகளைப் போல மாணவர்களை நடத்தி, 12-ம் வகுப்புத் தேர்வில் அதிக மதிப்பெண் பெறும் வித்தைகளில் தேர்ச்சி அடைய வைத்ததன் விளைவுதான் இந்தத் துயர நிலவரம்.
படித்ததெல்லாம் வீணா?
சென்னையில் சர்வசாதாரணமாக, மாநில அளவில் அதிக மதிப்பெண்கள் எடுக்கும் பிரபலமான ஒரு மேல்நிலைப் பள்ளியில் கடந்த ஆண்டு 1,147 மதிப்பெண்களுடன் காமர்ஸ் பிரிவில் தேர்ச்சி அடைந்த ஒரு மாணவர், ஒரு முன்னணிக் கல்லூரியில் மாலை நேர வகுப்பில் தற்போது பி.காம். முதலாண்டில் பயில்கிறார். பகலில் சி.ஏ. பயிற்சி வகுப்புக்குச் செல்கிறார். 'இன்டர் தேர்வில்' வெற்றி நிச்சயம் என்று உறுதியுடன் சொல்கிறார்.
"12-ம் வகுப்பில் கடம் தட்டி மனப்பாடம் செய்ய வைத்தனர். பாடம் எங்கே நடத்தினார்கள்? பொருளா தார வளர்ச்சி என்றால் என்ன? அதற்கான அடிப்படை விஷயங்கள் என்ன என்பது பற்றியெல்லாம் பொருளா தார வகுப்பு ஆசிரியர் கற்றுத்தரவும் இல்லை, இதுபற்றி யோசிக்க வேண்டும் என்றுகூட எங்களுக்கு வழிகாட்டவும் இல்லை" என்று கவலையுடன் குறிப்பிட்டார்.
கிட்டத்தட்ட எல்லாப் பள்ளிக்கூடங்களிலும் இதுதான் நிலவரம். பள்ளிக்கல்வி என்ற அடித்தளத்தை வலுவாக்காமல், கல்லூரிகளில், பல்கலைக்கழகங்களில் அறிவார்ந்த சமுதாயத்தை, துறை சார்ந்த நிபுணர்களை, மேதைகளை எப்படி உருவாக்க முடியும்?
கடந்த ஜனவரி மாதம் வெளியிடப்பட்ட ஏ.எஸ்.ஈ.ஆர். புள்ளிவிவரத்தில் தமிழகத்தில் எட்டாம் வகுப்பு படிக்கும் குழந்தைகளில் பாதிக்கும் மேற்பட்டோருக்குச் சாதாரண வகுத்தல் கணக்குத் தெரியவில்லை எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஒன்றாம் வகுப்பு குழந்தைகளில் 53.4% பேருக்கு மட்டுமே தமிழ் எழுத்துகளை அடையாளம் காணத் தெரிகிறது. மூன்றாம் வகுப்பிலிருந்து ஐந்தாம் வகுப்பு வரையிலான குழந்தைகளில், இரண்டு எழுத்து, மூன்றெழுத்து தமிழ்ச் சொற்களை வாசிக்கத் தெரிந்தோர் 10.3% மட்டுமே. இவர்கள்தான் இன்னும் எட்டு அல்லது பத்து ஆண்டுகளில் 12-ம் வகுப்புத் தேர்வை எதிர்கொள்ளப்போகிறார்கள்.
ஒவ்வொரு ஆண்டும் 12-ம் வகுப்புத் தேர்வு எழுதும் மொத்த மாணவ, மாணவியரில் 90% பேர், அரசு, மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயில்கின்றனர். இவர்களில் சுமார் 85 சதவீதத்தினர் தாழ்த்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள். இவர்களின் கல்வித் தரம் உயராவிட்டால், சமூக முன்னேற்றத்தை எப்படி எட்ட முடியும்? இதற்குப் பொறுப்பேற்க வேண்டியவர்கள் யார்?
எண்ணையும் எழுத்தையும் கற்றுக்கொடுத்துக் குழந்தைகளின் அறிவுக் கண்ணைத் திறக்க வேண்டிய ஆசிரியர்களே… எத்தனையோ நூற்றாண்டுகளாகக் கல்வி வாய்ப்பு மறுக்கப்பட்டு இப்போதுதான் பள்ளிக்கூட வாசலில் அடியெடுத்து வைத்திருக்கும், படிப்பறிவு இல்லாத பரம்பரையைச் சேர்ந்த எங்கள் குழந்தைகளைக் கரையேற்றுவதற்கு உங்களைத் தவிர வேறு யார் இருக்கிறார்கள்?
10மற்றும் 12–ம் வகுப்பு பொதுத்தேர்வில்சாதனை படைத்த 469 மாணவ– மாணவிகளுக்கு பரிசுத்தொகை சான்றிதழ் வழங்கப்படுகிறது
தி.மு.க. தலைவர் கருணாநிதியின் பிறந்தநாளினையொட்டி, 6–வது ஆண்டாக
தி.மு.க. இளைஞர் அணி அறக்கட்டளை சார்பில் தமிழகம் முழுவதும் 10 மற்றும் 12–ம் வகுப்புகளில் மாநில அளவில் முதல் 3இடங்களில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ–மாணவிகளுக்கு வழங்கப்பட்டு வரும் பரிசுத்தொகை,தி.மு.க. தலைவர் கருணாநிதியின் 91–வது பிறந்தநாளையொட்டி, இந்த கல்வி ஆண்டான 2013–14–ல்நடைபெற்ற தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ–மாணவிகளுக்கு வழங்கப்படுகிறது. கோவையில், 22–ந்தேதி... கோவை அவினாசி சாலை, சின்னியம்பாளையம், ''பிருந்தாவன்ஆடிட்டோரியத்தில்'' வரும் 22–ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 9 மணிக்கு நடைபெறும் பரிசு தொகை வழங்கும் விழாவில் தி.மு.க.பொருளாளரும் இளைஞர் அணி செயலாளருமான மு.க.ஸ்டாலின், மாணவ–மாணவிகளுக்கு பரிசுத்தொகையினை வழங்கி வாழ்த்துரை வழங்குகிறார். இவ்விழாவில் மாநில அளவில் அதிக மதிப்பெண் பெற்ற 469 மாணவ–
மாணவிகளுக்கு பரிசுத்தொகை மற்றும் சான்றிதழ் வழங்கப்படுகிறது.
ஆசிரியர் காலிப்பணியிடங்கள் எப்போது நிரப்பப்படும் என்றஅறிவிப்பு வருகிற சட்டசபை கூட்டத்தில் வெளிவர வாய்ப்பு
காலிப்பணியிடங்கள் தமிழ்நாட்டில் உள்ள அரசுப்பள்ளிகளில்காலியாக 15 ஆயிரம் ஆசிரியர்
பணியிடங்கள் உள்ளன. அவற்றில்இடை நிலை ஆசிரியர் பணியிடங்கள் 2ஆயிரமும், பட்டதாரி ஆசிரியர்பணியிடங்கள் 13 ஆயிரமும் உள்ளன. இந்த இடங்களுக்கு ஆசிரியர்களை தேர்வு செய்வதற்காக ஆசிரியர் தேர்வு வாரியம் முதல் கட்டமாக ஆசிரியர்தகுதி தேர்வை நடத்தி முடித்தது. தேர்வு முடிவையும் வெளியிட்டது. இதில் தேர்ச்சி சதவீதத்தில் 5 சதவீதத்தை முதல்–அமைச்சர் ஜெயலலிதா தளர்த்தி உத்தரவிட்டார்.அதன்படி 150 மதிப்பெண்ணுக்கு 82 மதிப்பெண் எடுத்தாலே தேர்ச்சி பெற்றதாகும். ஆனால்தேர்ச்சி பெற்றுவிட்டதால் ஆசிரியர் வேலை கிடைத்துவிடும் என்பது கிடையாது. மதிப்பெண் வெயிட்டேஜ் அவர்கள் பிளஸ்–2 தேர்வில் எடுத்த மதிப்பெண், ஆசிரியர் பயிற்சியில் எடுத்த மதிப்பெண், ஆசிரியர்தகுதி தேர்வில் பெற்ற மார்க் ஆகியவற்றின் அடிப்படையிலும் இட ஒதுக்கீடு அடிப்படையிலும்இடை நிலை ஆசிரியர்களை ஆசிரியர் தேர்வு வாரியம் தேர்வு செய்ய உள்ளது.
ஆசிரியர்களை தேர்வு செய்ய எப்படி மதிப்பெண் வெயிட்டேஜ் வழங்குவது என்று புதிய
முறை கொண்டுவரப்பட்டுள்ளது. பட்டதாரி ஆசிரியர்களை தேர்வு செய்ய மேற்கொண்ட
அதே முறையுடன் கூடுதலாக பட்டப்படிப்பில் பெற்ற மதிப்பெண்ணையும் சேர்த்து கணக்கில்
எடுத்துக்கொள்ளப்பட உள்ளது. இந்தநிலையில் இந்த வருடம் அரசு பள்ளிகளில் ஆசிரியர்கள் பலர் பணியில்இருந்து ஓய்வு பெற்றுள்ளனர்.அதனால் காலிப்பணியிடங்கள் புதிதாக எவ்வளவு அதிகரித்து உள்ளனஎன்பதை பள்ளிகல்வித்துறை அதிகாரிகள் எடுத்து வருகிறார்கள்.
மேலும் பாட வாரியாக அதாவது தமிழ், ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல், தாவரவியல்,விலங்கியல், வரலாறு முதலிய பாடங்களுக்கு வகுப்பு நடத்திய ஆசிரியர்கள் காலிப்பணியிடங்கள்எத்தனை உள்ளன என்று கணக்கிட்டு வருகிறார்கள். சட்டசபை கூட்டம் ஆசிரியர் பணியிடங்கள் எத்தனை காலியாக கிடக்கின்றன. எப்போது நிரப்பப்படும் என்ற
அறிவிப்பு வருகிற சட்டசபை கூட்டத்தில் வெளிவர வாய்ப்பு உள்ளது. அதன் பின்னர் ஆசிரியர்தேர்வு வாரியத்திற்கு இந்த தகவல் கொடுக்கப்பட்டு ஆசிரியர்களை தேர்வு செய்யும்
பணி தொடங்கும்.
ஆசிரியர் தேர்வு வாரியம் முதல் கட்டமாக இடை நிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள்
காலிப்பணியிடங்களை நிரப்ப ஆசிரியர் தகுதி தேர்வு எழுதி அதிக மதிப்பெண் மற்றும் இட
ஒதுக்கீட்டு அடிப்படையில் ஆசிரியர்களை தேர்வு செய்வார்கள். பின்னர் ஆசிரியர் தேர்வு வாரியம் அந்த பட்டியலை பள்ளிக்கல்வி இயக்குனரகம், தொடக்ககல்வி இயக்குனரகம் ஆகியவற்றில் ஒப்படைக்கும். கல்லூரி ஆசிரியர்களுக்கு நேர்முகத்தேர்வு அடுத்த கட்டமாக கலை அறிவியல் கல்லூரி ஆசிரியர்களை தேர்வு செய்யநேர்முகத்தேர்வு நடத்தி பணி நியமனத்திற்கான ஏற்பாட்டை ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்த உள்ளது.
பத்தாம் வகுப்பில் செய்முறை தேர்வுகளுக்கான 'சோதனைகள்' (எக்ஸ்பிரிமிண்ட்) அதிகரிக்கப்பட்டுள்ளது
பத்தாம்வகுப்பு அரசு பொதுத்தேர்வில், இயற்பியல், வேதியியல், தாவரவியல் மற்றும் விலங்கியல் பாடத்தேர்வுகளுக்கு, எழுத்துத் தேர்விற்கு முன் செய்முறை தேர்வுகள் நடத்தப்படும். இதில், அகத்தேர்விற்கு (இன்டர்னல்) 5 மதிப்பெண்களும், புறத்தேர்விற்கு (எக்ஸ்டர்னல்) 20 மதிப்பெண்களும் வழங்கப்படும். செய்முறை தேர்வில் கிடைக்கும் 25 மதிப்பெண்ணில், அதிகபட்சமதிப்பெண்ணை பெரும்பாலான மாணவர்கள் பெற்றுவிடுவர்.கடந்தாண்டு வரை இயற்பியல், வேதியியல்,தாவரவியல், விலங்கியல் தேர்வுகளுக்கு, தலா 4 'சோதனைகள்' வீதம் மொத்தம் 16 'சோதனைகள்' தான்பாடத்திட்டத்தில் இடம் பெற்றன. 'இச்சோதனைகள்' தான் தற்போது 26 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளன.இத்தகவல்,
மாணவர்களுக்கு தற்போது வழங்கப்பட்ட இலவச புத்தகங்களில் இடம்பெற்றிருப்பது தெரியவந்துள்ளது. இப்புதிய பாடத்திட்டப்படி, செய்முறைத் தேர்வுகளுக்கான 'சோதனைகள்' 'பகுதி அ' மற்றும் 'பகுதி ஆ' எனஇருவகையாக பிரிக்கப்பட்டுள்ளன. இயற்பியல், வேதியியல், தாவரவியலில் தலா 3 சோதனைகளும்,விலங்கியலில் 4 என, இரு பகுதிகளிலும் (13+13) 26 'சோதனைகள்' இடம்பெற்றுள்ளன.
இதுகுறித்து உயர்நிலை பள்ளி அறிவியல் ஆசிரியர்கள் கூறுகையில், "செய்முறை தேர்வில்அதிகரித்துள்ள சோதனைகள் குறித்து அதிகாரிகள் இதுவரை எங்களுக்கு தெரிவிக்கவில்லை.புத்தகங்களை பார்த்து தான் நாங்களே தெரிந்துகொண்டோம். அதிகாரிகள் உத்தரவுப்படி செய்முறை தேர்வுகளை நடத்துவோம்," என்றனர்.
1800 அரசு நடுநிலைப் பள்ளிகளை தரம் உயர்த்தும் அனைவருக்கும் இடைநிலை கல்வித் திட்ட இலக்கில் தொய்வு
உயர்த்தும் என்ற அனைவருக்கும் இடைநிலை கல்வித் திட்ட இலக்கில் தொய்வு
ஏற்பட்டுள்ளது.'இத்திட்டத்தின் கீழ் (ஆர்.எம். எஸ்.ஏ.,) 5 கி.மீ.,க்கு ஒரு உயர்நிலைப் பள்ளி என்றஅடிப்படையில் 2015க்குள் தமிழகம் முழுவதும் 1800க்கும் மேற்பட்ட அரசு நடுநிலைப்பள்ளிகள்தரம் உயர்த்தப்படும்' என, அறிவிக்கப்பட்டது. இதன்படி, 2009-10ல் 200; 2011-12ல் 345; 2012-13ல்710; கடந்த ஆண்டு 50 பள்ளிகள் என, 1,300 பள்ளிகள் மட்டுமே தரம் உயர்த்தப்பட்டுள்ளன. வரும் கல்வி ஆண்டில் இலக்கு நிறைவேறுமா என சந்தேகம் எழுந்துஉள்ளது. இதற்கான நடவடிக்கை தொய்வாக
இருக்கிறது என ஆசிரியர்கள் சங்கங்கள் கூறுகின்றன.சங்க நிர்வாகி ஒருவர் கூறுகையில், 'தமிழகத்தில்இத்திட்டத்திற்கான நிதியை அதிகரித்து, கல்வியை ஊக்குவிக்க வேண்டும்.
ஏற்கனவே அறிவித்தப்படி 2015க்குள் 1800க்கும் மேற்பட்ட பள்ளிகளை தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்கவேண்டும்' என்றார்.
'சர்பிளஸ்' ஆசிரியர்கள் அச்சத்தில் ஆசிரியர்கள்
எண்ணிக்கை அதிகரிக்கும் அச்சத்தில் ஆசிரியர்கள் உள்ளனர்.அரசு விதிப்படி, ஆசிரியர்,
மாணவர் விகிதம் தொடக்கப்பள்ளியில் 1:30, உயர்நிலை பள்ளியில் 1:35, 9 மற்றும் பத்தாம்
வகுப்புகளில் 1:40 என இருக்க வேண்டும். ஆனால், இந்த ஆண்டு பெரும்பாலான
அரசுப்பள்ளிகளில், மாணவர் எண்ணிக்கை குறைந்து விட்டது. மாறாக, ஆசிரியர்கள்
எண்ணிக்கை அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது, மாநில அளவில் 3,000 ஆசிரியர்கள் 'சர்பிளஸ்' ஆக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில்,
'பணிநிரவல்' அடிப்படையில் மாறுதலுக்கு ஆளாக நேரிடும் என்ற அச்சம்
ஆசிரியர்களிடையே ஏற்பட்டுஉள்ளது.தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழக மதுரை மாவட்ட செயலாளர் முருகன் கூறுகையில், ''அரசுப் பள்ளிகளில் ஆங்கில வகுப்புகள் துவங்கப்படுவதால், அங்கு 'சர்பிளஸ்'ஆசிரியர்களை நியமிக்கவும், மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் வகுப்பறைகள் எண்ணிக்கைக்கு ஏற்ப சரியான விகிதத்தில் ஆசிரியர்கள் எண்ணிக்கை இருக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கவும் வேண்டும்,'' என்றார்.
தேர்வு செய்யப்படும் ஆசிரியர் எண்ணிக்கை, மேலும்அதிகரிக்கும்' - டி.ஆர்.பி
வந்து கொண்டிருக்கின்றன. எனவே, தேர்வு செய்யப்படும் ஆசிரியர் எண்ணிக்கை, மேலும்
அதிகரிக்கும்' என, ஆசிரியர் தேர்வு வாரியமான - டி.ஆர்.பி., வட்டாரம்,
நேற்று தெரிவித்தது.நடந்து முடிந்த ஆசிரியர் தகுதி தேர்வான - டி.இ.டி., தேர்வு மூலம்,
பள்ளி கல்வித்துறை, தொடக்க கல்வித்துறை உள்ளிட்ட, பல்வேறு துறைகளின் கீழ் இயங்கும்பள்ளிகளில், 15 ஆயிரம் புதிய ஆசிரியர்கள், விரைவில் நியமிக்கப்பட உள்ளனர்.ஆசிரியர் தேர்வுக்கு, புதிய அரசாணை வெளியிடப்பட்டதை தொடர்ந்து, தேர்வுப் பணியை, டி.ஆர்.பி., வேகப்படுத்தி உள்ளது. இதற்கிடையே, பல்வேறு துறைகளில்
இருந்து, கூடுதல் காலி பணியிடங்கள் வந்து கொண்டிருப்பதாக, டி.ஆர்.பி., வட்டாரம்,
நேற்று தெரிவித்தது
.இதுகுறித்து, அந்த வட்டாரம் கூறியதாவது:துறை வாரியாக, ஆசிரியர்
காலி பணியிடங்களை, ஏற்கனவே பெற்றுள்ளோம். பாட வாரியாக, எத்தனை ஆசிரியரை நியமிக்க வேண்டும் என்பதையும், கணக்கு எடுத்துள்ளோம். இந்நிலையில், பல துறைகளில் இருந்து, கூடுதல்காலி பணியிடங்கள் வருகின்றன. எனவே, அந்த பணியிடங்களையும் சேர்த்தால் தான், பாட வாரியாக, தேர்வு செய்யப்பட உள்ள ஆசிரியர்
எண்ணிக்கை தெரிய வரும். கூடுதல் இடங்கள் வரவால், தேர்வு செய்யப்படும் ஆசிரியர் எண்ணிக்கை, மேலும்அதிகரிக்கும்.இவ்வாறு, டி.ஆர்.பி., வட்டாரம் தெரிவித்தது.ஆசிரியர் பணி வழங்குவதில், பள்ளி கல்வித்துறை,தொடக்க கல்வித்துறை, முக்கிய பங்கு வகிக்கின்றன. இதன்பின், மாநகராட்சிகள், வனத்துறை, சமூகநலத்துறை, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, ஆதிதிராவிடர் நலத்துறை ஆகியவற்றின் கீழ் இயங்கும்பள்ளிகளுக்கும், ஆசிரியர் தேர்வு செய்யப்படுகின்றனர்.மேற்கண்ட துறைகளில் இருந்து தான், கூடுதல் ஆசிரியர் பணியிடங்கள் வருவதாக கூறப்படுகிறது.
வியாழன், 5 ஜூன், 2014
தனியார் பள்ளிகளில் ஏழைக் குழந்தைகளுக்கு 25 சதவீத இட ஒதுக்கீடு கோரி வழக்கு: தமிழக அரசு பதில்தர உயர் நீதிமன்றம் உத்தரவு
தமிழ்நாடு பொதுநல வழக்கு மைய அமைப்பாளர் கே.கே.ரமேஷ், உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனு:
2009-ல் மத்திய அரசு கொண்டு வந்த கட்டாயக் கல்விச் சட்டத்தை பின்பற்றி, தமிழக பள்ளி கல்வித் துறை 2013 ஏப்.1-ம் தேதி ஒரு அரசாணையைப் பிறப்பித்தது. அதில், கட்டாயக் கல்விச் சட்டத்தின் கீழ் ஏழைக் குழந்தைகளுக்கு மாண வர் சேர்க்கையில் அனைத்துப் பள்ளி களிலும் 25 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.
இந்த அரசாணையை பெரும்பா லான பள்ளிகள் அமல்படுத்த வில்லை. சில பள்ளிகளில் இட ஒதுக்கீட்டில் சேரும் மாணவர் களை ஆசிரியர்கள் கவனிப்பதே இல்லை. இந்தப் பிரச்சினையைத் தடுக்க அனைத்து மாவட்டங்களி லும், மாவட்டக் கல்வி அதிகாரி தலைமையில் குழு அமைத்து, 25 சதவீத ஒதுக்கீட்டு இடங்களுக்கு வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள மாணவர்களிடமிருந்து விண்ணப் பம் பெற்று, அனைத்து பள்ளிகளி லும் சேர்க்க உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதிகள் ராமசுப்பிரமணியன், வேலுமணி ஆகியோர் முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. மனுவை ஏற்ற நீதிபதிகள், மனுவுக்கு பதிலளிக்க தலைமைச் செயலர், பள்ளிக்கல்வி முதன்மைச் செயலர், பள்ளிக்கல்வி இயக்குநர்கள், மெட்ரிக் பள்ளிகள் இயக்குநர் மற்றும் அனைவருக்கும் கல்வி இயக்ககத் திட்ட அதிகாரி ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.
ஆசிரியர் நியமனத்துக்கு புதிய தேர்வு முறையை தமிழக அரசு அறிவித்துள்ளது
அரசுப் பள்ளிகளில் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் நியமனத்துக்கு புதிய தேர்வு முறையை தமிழக அரசு அறிவித்துள்ளது. இதன்படி, வெயிட்டேஜ் மதிப்பெண்ணில் ஒவ்வொரு கல்வித்தகுதி மற்றும் தகுதித்தேர்வில் பெற்றுள்ள மதிப்பெண் சதவீதத்துக்கு ஏற்ப மதிப்பெண் வழங்கப்படும்.
கடந்த ஆண்டு ஆகஸ்டில் நடத்தப்பட்ட ஆசிரியர் தகுதித் தேர்வில் முதலில் 29 ஆயிரம் பேரும், 5 சதவீத மதிப்பெண் சலுகைக்குப் பிறகு கூடுதலாக 45 ஆயிரம் பேரும் தேர்ச்சி பெற்றனர். ஆசிரியர் நியமனத்தைப் பொறுத்தவரை, இடைநிலை ஆசிரியர்களை பிளஸ் 2, ஆசிரியர் பயிற்சித் தேர்வு, தகுதித்தேர்வு மதிப்பெண் அடிப்படையிலும், பட்டதாரி ஆசிரியர்களை பிளஸ் 2, பட்டப் படிப்பு, பி.எட். தகுதித்தேர்வு மதிப்பெண் அடிப்படையிலும் வெயிட்டேஜ் மதிப்பெண் முறையில் தேர்வு செய்ய அரசு முடிவு செய்தது.
உயர் நீதிமன்றத்தில் வழக்கு
இதற்கிடையே, தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்கு பல்வேறு கட்டங்களாக சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தி முடிக்கப்பட்டது. இந்நிலையில், வெயிட்டேஜ் மதிப்பெண் முறையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதி மன்றம், 'வெயிட்டேஜ் மதிப்பெண் வழங்கும் தற்போதைய முறை பாகுபாடு நிறைந்தது. இந்த முறை செல்லாது. ஒவ்வொன்றிலும் விண்ணப்பதாரர்கள் பெற்றி ருக்கும் மதிப்பெண்ணுக்கு ஏற்ப வெயிட்டேஜ் மதிப்பெண் வழங்க வேண்டும்' என்று உத்தரவிட்டது.
இதையடுத்து தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளர் டி.சபீதா புதன்கிழமை வெளியிட்ட அரசாணையில், 'இடைநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர் நியமனத்துக்கான வெயிட்டேஜ் மதிப்பெண்ணில் ஒவ்வொரு கல்வித் தகுதியிலும், ஆசிரியர் தகுதித் தேர்விலும் எடுத்துள்ள மதிப்பெண்ணுக்கு ஏற்ப வழங்கப்படும்' என்று குறிப்பிட்டுள்ளார்.
ஒரே கட் ஆப் வந்தால்..
இந்த தகுதித்தேர்வு மூலமாக ஏறத்தாழ 16 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப தேர்வு வாரியம் திட்டமிட்டுள்ளது. ஒரே கட் ஆப் மதிப்பெண்ணை ஒன்றுக்கும் மேற்பட்டவர்கள் பெற்றால், வயதில் மூத்தவர்களுக்கு (பிறந்த தேதி அடிப்படையில்) முன்னுரிமை அளிக்கப்படும் என்று அரசாணையில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
இடைநிலை ஆசிரியர் வெயிட்டேஜ் மதிப்பெண்
கல்வித்தகுதி | வெயிட்டேஜ் மதிப்பெண் | கல்வித்தகுதி மதிப்பெண் சதவீதம் | மதிப்பெண் |
பிளஸ்-2 | 15 | P% | P*15/100 |
இடைநிலை ஆசிரியர் பயிற்சி | 25 | Q% | Q*25/100 |
ஆசிரியர் தகுதித்தேர்வு | 60 | R% | R*60/100 |
பட்டதாரி ஆசிரியர் வெயிட்டேஜ் மதிப்பெண்
கல்வித்தகுதி | வெயிட்டேஜ் மதிப்பெண் | கல்வித்தகுதி மதிப்பெண் சதவீதம் | மதிப்பெண் |
பிளஸ்-2 | 10 | P% | P*10/100 |
பட்டப் படிப்பு | 15 | Q% | Q*15/100 |
பி.எட். | 15 | R% | R*15/100 |
ஆசிரியர் தகுதித்தேர்வு | 60 | S% | S*60/100 |
புதன், 4 ஜூன், 2014
புதிய முறைப்படி weightage மதிப்பெண் கணக்கிடும்போது பலர் ஒரே மதிப்பெண் பெற்றிருப்பின் வயதில் மூத்தவருக்கு முன்னுரிமை அளிக்கப்படும்
புதிய முறைப்படி weightage மதிப்பெண் கணக்கிடும்போது பலர் ஒரே மதிப்பெண் பெற்றிருப்பின் வயதில் மூத்தவருக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News in detail :ஆசிரியர் தகுதித்தேர்வு உயர்நீதிமன்ற உத்தரவினை பின்பற்றி புதிய அரசானைGO MS. 71. நாள் 30.05.14 வெளியீடு
ஆசிரியர் தகுதித்தேர்வு உயர்நீதிமன்ற உத்தரவினை பின்பற்றி புதிய அரசானை GO MS. 71. நாள் 30.05.14 வெளியிடப்பட்டுள்ளது
TNTET 2013 வெயிட்டேஜ் மதிப்பீடு செய்வது குறித்து நீதியரசர் நாகமுத்துவின் பரிந்துரை
Illustration (1) :- [For Graduate Assistant]
86.1. Let us assume that a candidate has secured 1020 marks in Higher Secondary Examination out of 1200. It is equivalent to 85%. Similarly, he has secured 80% in Degree Examination; 75% in B.Ed., Examination; and 70% in TET Examination. As per the computation of marks for Graduate Assistant in terms of the Government Order, 10 marks is awarded to Higher Secondary Examination, 15 is awarded to Degree Examination, 15 is awarded to B.Ed., Examination and 60 is awarded to TET Examination. This would go to show that more weightage mark is given to TET. This ratio namely 10:15:15:60 for Higher Secondary, Degree, B.Ed., and TET respectively should be adhered to while awarding weightage marks. This proportion can be maintained in the following manner, i.e., the percentage of marks secured can be further reduced to the above proportion. For example, in the illustration above,
(a) for 85% of marks secured in Higher Secondary Examination, weightage marks shall be as follows:-
85 X 10 w 100 = 8.50
(b) For 80% of marks secured in Degree Examination, the weightage marks shall be as follows:
80 X 15 w 100 = 12.00
(c) For 75% of marks secured in B.Ed., Examination the weightage marks shall be as follows:
75 X 15 w 100 = 11.25
(d) For 70% of marks secured in TET Examination, the weightage marks shall be as follows:
70 X 60 w 100 = 42.00
Total weightage marks = 73.75
86.2 In this method, for every one percentage of mark in Higher Secondary, the weightage mark is 0.10, for every one percentage of mark in Degree, the weightage mark is 0.15, for every one percentage of mark in B.Ed., the weightage mark is 0.15 and for every one percentage of mark in TET, the weightage mark is 0.60.
Illustration (2) :- [For Secondary Grade Teachers]
87.1. Let us assume that a candidate has secured the following marks:-
Higher Secondary Exam :85%
D.T.Ed.,/D.E.Ed., Exam:80%
TET: 75%
87.2. As per G.O.Ms.No.252, the weightage marks to be awarded are as follows:-
Higher Secondary Exam:15
D.T.Ed.,/D.E.Ed., Exam:25
TET: 60
Total 100
Thus, the ratio is 15:25:60
87.3. Applying the said ratio, for 85% of marks in Higher Secondary Examination, the weightage mark shall be
85 X 15 w 100 = 12.75
For 80% of marks in D.T.Ed., / D.E.Ed., Examination the weightage mark shall be
80 X 25 w 100 = 20.00
For 70% of marks in TET Examination, the weightage mark shall be
70 X 60 w 100 = 42.00
Thus the total weightage mark is 74.75
87.4. In this method, for every one percentage of mark in Higher Secondary, the weightage mark is 0.15, for every one percentage of mark in D.T.Ed.,/D.E.Ed., the weightage mark is 0.25 and for every percentage of mark in TET, the weightage mark is 0.60.
87.5. If this method is adopted, in my considered opinion, there will be no anomaly or inconsistency or discrimination. In my opinion, this method clearly distributes the appropriate weightage marks as per the ratio. This method is scientific, flawless and reasonable. This is only a suggestion from this court and it is for the Government of Tamil Nadu to consider the same as to whether this method can be followed or any other better method can be followed. At any rate, it is made clear that the present grading system is highly arbitrary and discriminatory and, therefore, the same cannot be the basis for selection
ஆசிரியர் தகுதித்தேர்வு உயர்நீதிமன்றத்தின் உத்தரவினை முழுமையாக பின்பற்றி புதிய அரசானை GO MS. 71. நாள் 30.05.14 ஐ தமிழக அரசின் கல்வித்துறை முதன்மைச் செயலர் சபிதா வெளியிட்டுள்ளார்
ஆசிரியர் தகுதித்தேர்வு உயர்நீதிமன்ற உத்தரவினை பின்பற்றி புதிய அரசானை வெளியீடு
ஆசிரியர் தகுதித்தேர்வு உயர்நீதிமன்ற உத்தரவினை பின்பற்றி புதிய அரசானை GO MS. 71. நாள் 30.05.14 வெளியிடப்பட்டுள்ளது
திங்கள், 2 ஜூன், 2014
பிளஸ் 2 தேர்வு முறையில் மாற வேண்டும் அணுகுமுறை!
சமச்சீர் கல்வி அடிப்படையிலான தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளிகளுக்கும்
அனுப்புவதிலிருந்தே கல்வியின் தரம் எத்தகையது என்பது வெளிப்படுகிறது.
இந்த நிலை தொடருமேயானால் விரைவிலேயே அரசு பள்ளிகளில்சேருவதற்குக்கூட மாணவர்கள் இல்லாத நிலை ஏற்படக்கூடும். கல்வி, அரசின் கட்டுப்பாட்டில் இயங்குவதா அல்லது அதை தனியார்துறையிடம் விட்டுவிடுவதா என்பதல்ல பிரச்னை. தரமான
கல்வி உறுதிப்படுத்தப்படுகிறதா, அனைவருக்கும் தரமான கல்விக்கான சம
வாய்ப்பு வழங்கப்படுகிறதா என்பதுதான் கேள்வி. தனியார் பள்ளிகளின்
தரத்துக்கு நிகராக அரசுப் பள்ளிகளும், அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளும்
அர்ப்பணிப்பு உணர்வுடன் செயல்பட்டால் தரமான கல்வியை அனைத்துத் தரப்பு மக்களுக்கும் கிடைக்கச் செய்வதில் பிரச்னை எதுவும் இருக்காது.
தமிழகத்தில் கடந்த 2010-11ஆம் கல்வியாண்டில் 1 மற்றும் 6 ஆம் வகுப்புகளில்
அறிமுகப்படுத்தப்பட்ட சமச்சீர் கல்வித் திட்டம் தற்போது 1 முதல் 10ஆம்
வகுப்பு வரை விரிவுபடுத்தப்பட்டுள்ளது. ஆனால், இந்தக்கல்வி முறை அறிமுகப்படுத்தப்பட்டு நான்கு ஆண்டுகள் கடந்த பிறகும்,இதற்கான பாடப் புத்தகங்களில் இன்னமும் நிறைய பிழைகள் உள்ளதாகவும்,இத்தகைய புத்தகங்களைப் படித்து தேர்ச்சி பெறும் மாணவர்களின் கல்வித் தரம் பாதிக்கப்படுவதாகவும் பெற்றோர்கள் கவலை தெரிவிக்கின்றனர். பாடப்
புத்தகங்களில் காணப்படும் பிழைகளை நீக்கி, ஒவ்வோர் ஆண்டும்மேம்படுத்தி வெளியிட்டால்தான் இந்தக் கல்வி முறை தொடர்ந்து நீடிக்கமுடியும் என்ற அவர்களது ஆதங்கம் நியாயமானது.
உச்சநீதிமன்றத் தீர்ப்பைத் தொடர்ந்து காலதாமதம் ஏற்பட்டதால் 2011-12ஆம்
கல்வியாண்டில் பல பிழைகளுடன் சமச்சீர் கல்விப் பாடப் புத்தகங்கள் அவசரகதியில் வெளியிடப்பட்டன. ஆனால், அந்தப் புத்தகங்கள் இன்னமும் பலபிழைகளுடனேயே அச்சிடப்பட்டு வெளியாவதாக பரவலாகப் புகார்எழுந்திருப்பதுதான் வேடிக்கையாக இருக்கிறது.பாடப்புத்தங்களிலேயே பிழை காணப்படுகிறது எனும்போது, சென்னை உள்ளிட்ட பெருநகரங்களைச் சேர்ந்த பெற்றோர்தங்களது பிள்ளைகளை மத்திய கல்வி வாரியத்தின் கீழ் செயல்படும்சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் சேர்க்க ஆர்வம் காட்டுவதில்
வியப்பொன்றுமில்லை.
பெற்றோர்களின் இந்த ஆர்வத்தைச் சாதகமாகப் பயன்படுத்தி, பணத்தை வாரிக்குவிக்கும் நோக்குடன் புதிது புதிதாக சி.பி.எஸ்.இ. பள்ளிகளைத்தொடங்குவதில் மெட்ரிகுலேஷன் பள்ளிகளை நடத்தி வருபவர்கள் அதீத கவனம்செலுத்தி வருகின்றனர். புற்றீசல் போலப் பெருகி வரும் இத்தகையசி.பி.எஸ்.இ. பள்ளிகளால், தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் சமச்சீர்கல்வித் திட்டத்துக்கு வெகுவிரைவில் பாதிப்புகள் ஏற்படலாம்.
அகில இந்திய அளவில் நடத்தப்படும் ஐ.ஐ.டி. போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் சேருவதற்கான நுழைவுத் தேர்வுகளில் சி.பி.எஸ்.இ.கல்வித் திட்டத்தின் கீழ் படித்து வெளிவரும் மாணவர்கள்தான் எளிதாகவெற்றி பெறுகின்றனர். இத்தகைய அகில இந்திய நுழைவுத் தேர்வுகளில்வெற்றி பெறும் தமிழக மாணவர்களின் எண்ணிக்கை மிகச் சொற்ப அளவில்தான்உள்ளது.
இதற்கு பாடப் புத்தகங்கள் மட்டுமல்லாது, பள்ளித் தேர்வு முறையும் முக்கியக் காரணமாகும். பாடப் புத்தகங்களில் உள்ளவற்றை மனனம் செய்து, அதிக மதிப்பெண்கள் பெறும்வகையிலான தேர்வு முறைதான் தமிழக பள்ளிக் கல்வித் திட்டத்தில் உள்ளது.இதை மாற்றி, பாடப் புத்தகங்களில் உள்ளவற்றுக்கு அப்பாலும் மாணவர்களின்
திறனை சோதிக்கும் வகையில் தேர்வு முறையை மாற்றியமைக்க வேண்டும். இந்த நிலைமையை மாற்ற வேண்டுமெனில் சிபிஎஸ்இ பாடத் திட்டத்துக்கு இணையாகப் பாடப் புத்தகங்களை மேம்படுத்தி வெளியிட வேண்டும்.
அதைவிட முக்கியமானது பிளஸ் 2 தேர்வு முறையில் மிகப் பெரிய அளவில் மாற்றத்தைக் கொண்டு வர வேண்டியது. இது குறித்து கல்வியாளர்களைக்கொண்டு பொது விவாதம் நடத்தி, சிறந்த தேர்வு முறையை அமல்படுத்த தமிழக கல்வித் துறை முன்முயற்சிகளை உடனே தொடங்க வேண்டும்.
Sent from my iPad
தமிழகம் முழுவதும் மேலும் 360 புதிய அம்மா உணவகங்கள்
சென்னையில் ஒவ்வொரு வார்டிலும் கூடுதலாக தலா ஒரு அம்மா உணவகம்திறக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு: விலைவாசி உயர்விலிருந்து ஏழை, எளிய மக்களைப் பாதுகாக்கும் இந்தஉணவகங்கள் திட்டம் உலக அளவில் கவனத்தைப் பெற்றுள்ளது. பிறமாநிலங்களும் இந்தத் திட்டத்தைச் செயல்படுத்துவதில் ஆர்வம்காட்டி வருகின்றன. இந்த உணவகங்களின் பயன் பிற நகர்ப்புற மக்களையும் சென்றடைய வேண்டும் என்பதற்காக, அடுத்த கட்டமாக சென்னை மாநகராட்சிக்குள்பட்ட 200
வார்டுகளில் கூடுதலாக தலா ஒரு அம்மா உணவகம் வீதம் 200 அம்மா உணவகங்கள், ஏற்கெனவே அம்மா உணவகம் உள்ள மதுரை, வேலூர், திருநெல்வேலி, தூத்துக்குடி தவிர்த்து, ஏனைய மாவட்ட தலைநகரங்களில்உள்ள அரசுப் பொது மருத்துவமனைகளில் தலா ஒன்று வீதம் 27 அம்மா உணவகங்கள், 124 நகராட்சிகளில் 129 அம்மா உணவகங்கள், திண்டுக்கல், தஞ்சாவூர் மாநகராட்சிகளில் தலா ஒன்று வீதம் 2 உணவகங்கள்,கோவை, மதுரையில் தலா ஒரு உணவகம் மூலம் 2 உணவகங்கள் என மொத்தம்
360 புதிய அம்மா உணவகங்களைத் திறக்க உத்தரவிட்டுள்ளேன்.
இந்த அம்மா உணவகங்கள் விரைவில் செயல்படத் தொடங்கும்என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழ்நாட்டில் ஏற்கெனவே செயல்பட்டு வரும் அம்மா உணவகங்களுடன் இவற்றையும்சேர்த்து மொத்தம் 654 அம்மா உணவகங்கள் மக்களின்தேவையை நிறைவு செய்யும். இந்த நடவடிக்கை பல லட்சம் ஏழை, எளிய மக்கள் மலிவான விலையில் தரமான உணவை உண்ண வழிவகுக்கும் என்று ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
அனைத்து பள்ளிகளும், கோடை விடுமுறை முடிந்து, இன்று முதல் வழக்கம்போல் செயல்படும்.
கோடை விடுமுறை முடிந்து, இன்று முதல் அனைத்து பள்ளிகளும் திறக்கப்பட உள்ளன. .
அனைத்து பள்ளி மாணவ, மாணவியரும், சீருடையில் தான் பள்ளிக்கு வரவேண்டும். இதில், ஆறு முதல், எட்டாம்வகுப்பு வரை கல்வி பயிலும் மாணவ, மாணவியரில், சத்துணவு சாப்பிடும் குழந்தைகளுக்கு, இலவச சீருடைகள் வழங்கப்படும். தமிழக அரசால் வழங்கப்படும் இலவச நோட்டு, புத்தகங்கள் பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளன. இந்தப்புத்தகங்கள் அந்தந்த
அரசு பள்ளிகளில், தலைமை ஆசிரியர் கண்காணிப்பில், வகுப்பு ஆசிரியர்கள் மூலம், இன்று நடக்கும் முதல்பாட வேளையில் வழங்கப்படும். இதனை பெற்று, மாணவ, மாணவியர் பயனடைய வேண்டும்
மாணவர் செல்லும் பஸ்சில் பாடல் ஒலிபரப்ப தடை : போக்குவரத்து துறைக்கு தர்மபுரி கலெக்டர் உத்தரவு
பாடல்கள் ஒலிபரப்பவதையும் தடுக்க, கலெக்டர் விவேகானந்தன்,
போக்குவரத்து துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.
தர்மபுரி கலெக்டர் அலுவலகவளாகத்தில், சமூகப் பாதுகாப்பு துறையின் கீழ் இயங்கும், மாவட்ட குழந்தைகள்பாதுகாப்பு ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம், கலெக்டர் விவேகானந்தன் தலைமையில் நடந்தது.இதில், நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள போலீஸ் ஸ்டேஷன்களில், குழந்தைகளுக்கு எதிரான பாலியல்
வன்கொடுமை தடுப்புச் சட்டம், 2012 ன் கீழ் பதிவாகும் வழக்குகளை, மாவட்ட குழந்தைகள்
பாதுகாப்பு அலுவலகத்திற்கு, கடிதம் மூலம் தெரியப்படுத்த வேண்டும்.
பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்படும் குழந்தைகளுக்கு, சமூகப் பாதுகாப்புத் துறையின் கீழ்வழங்கப்படும் மறுவாழ்வு நிதியை பெற்றுத் தர உதவிட வேண்டும். ஒவ்வொறு யூனியன் அளவில்,குழந்தைகளின் உரிமைகள், குழந்தைகளின் பாதுகாப்பு சட்டங்கள் குறித்து வட்டார வள மைய பயிற்றுநர்கள், ஆசிரியர்களுக்கு, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலம் மூலம் பயிற்சி அளிக்க, நடவடிக்கை எடுக்கவேண்டும்.
டவுன் பஸ்களில், பெண் குழந்தைகளுக்கும், பெண்களுக்கும், முன்பகுதியில் இருக்கைகள்
ஒதுக்கித்தரவும், மாணவ, மாணவிகள், பள்ளிக்கு செல்லும் பஸ்களில் படம் ஒளிபரப்புவதையும் மற்றும் பாடல்கள்ஒலிபரப்புவதையும் தடை விதிக்க, போக்குவரத்து துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.
குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தடுப்புச் சட்டம், 2012 குறித்து, போலீஸ் துறையில்செயல்படும் சிறப்பு இளைஞர் போலீஸாருக்கும், ஒவ்வொரு போலீஸ் ஸ்டேஷன்களில் நியமிக்கப்பட்டு குழந்தைகள் நல அலுவலராக பணியாற்றும் போலீஸாருக்கும் பயிற்சி அளிக்க வேண்டும்.
மாவட்டத்தில், இடையில் நின்ற குழந்தைகளை, பள்ளிக்கு அனுப்ப ஏற்பாடு செய்வது, அனைத்து குழந்தைகள்இல்லங்கள், பள்ளிகள், அங்கன்வாடி மையங்கள், அரசு விடுதிகளில் குழந்தைகளின்பிரச்னைகளை தெரியப்படுத்த, 24 மணி நேரமும் செயல்படும், கலெக்டரின்
நேரடி கட்டணமில்லா தொலைபேசி எண், 1077 என்ற எண்ணையும், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகதொலைபேசி எண், 04342-232234 ஆகிய எண்களை தெளிவாக ஒட்டி வைக்க வேண்டும்.
மக்கள் கூடும் இடங்களான கலெக்டர் அலுவலகம், மருத்துவமனைகள், பள்ளிகள், தாலுகா அலுவலகங்கள்,சார்நிலை அலுவலகம் ஆகிய இடங்களில் குழந்தைகளுக்கு ஏற்படும் பிரச்னைகள் மற்றும் குழந்தை திருமணம்,குழந்தை தொழிலாளர், பாலியல் வன்கொடுமை ஆகியவற்றில் ஈடுபடும் நபர்களுக்கு தரப்படும் தண்டனையை,விவரத்துடன், விழிப்புணர்வு பேனர்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் உள்ள,எட்டு யூனியன்களில் செயல்படும் ஒன்றிய குழந்தைகள் பாதுகாப்பு குழு மற்றும், 251 பஞ்சாயத்துகளில்செயல்படும் கிராம அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு குழு ஆகியவற்றை புதுப்பிக்க வேண்டும். தன்னார்வ தொண்டு நிறுவனங்களால் நடத்தப்படும், ஆதரவற்ற குழந்தைகள் இல்லங்களில், பதிவு பெறாத இல்லங்களை,மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் இளஞ்சிறார் நீதிச் சட்டம், 2012 கீழ் உடனடியாக பதிவு செய்ய
வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
Sent from my iPad
அரசு உயர்நிலைப் பள்ளிகளில் ஆங்கில வழி பள்ளி கல்வி திட்டம்
அரசு பள்ளிகளில் மாணவரின் சேர்க்கை நாளுக்கு நாள் சரிந்து வரும் நிலையில், 2011ம் ஆண்டு முதல்,தமிழகத்தின் ஒவ்வொரு யூனியன் எல்லையிலும், தலா ஐந்து ஆங்கில வழி பள்ளி துவங்கப்பட்டு,நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. துவக்கப்பள்ளியில் துவங்கப்பட்ட ஆங்கில வழித்திட்டம், கடந்தகல்வி ஆண்டு முதல், உயர்நிலைப் பள்ளிகளிலும் அமல்படுத்தப்பட்டது.அதற்காக, ஆங்கிலவழி வகுப்பு எடுக்கும் ஆசிரியர்களுக்கு, சிறப்பு முகாம் நடத்தப்பட்டு, ஆங்கில போதனை எடுக்கப்பட்டது.
ஆனால், தனியார் பள்ளிகளுக்கு இணையாக, அரசு பள்ளியில் ஆங்கில வழி படிக்கும் மாணவர்கள், ஆங்கில புலமை பெற்றவர்களாக இல்லை. அதற்கு முக்கிய காரணம், ஆசிரியர்கள், ஆங்கில புலமையுடன் பாடம் எடுப்பதில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது.பெயரளவில் நடத்தப்படும் ஆங்கில வழி அரசு பள்ளிகளில், தமிழ்வழி வகுப்பு எடுக்கும் ஆசிரியர்களே, ஆங்கில வழி வகுப்பும் எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதில்,
பெரும்பாலான ஆசிரியர்கள், தமிழ்வழி ஆசிரியர் பட்டப்படிப்புகளை படித்துவிட்டு, தமிழில் போட்டித் தகுதித் தேர்வையும் எழுதிவிட்டு, பணியில் சேர்ந்தவர்கள் தான்.துவக்கப் பள்ளியில், ஆங்கிலபாடங்களை எடுப்பது எளிதாக இருந்தாலும், உயர்நிலை வகுப்புகளில் ஆங்கில வழிப்பாடங்கள் எடுப்பது சிரமம். அதனால், ஆங்கில அறிவு மற்றும் புலமை இல்லாத தமிழ்வழி பாடம் எடுக்கும் ஆசிரியர்கள், ஆங்கிலவழி வகுப்புகளை எடுக்க முடியாமல் தவிக்க வேண்டிய நெருக்கடிக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
கல்வி அதிகாரிகள் கூறியதாவது:தமிழக அரசு, மாணவர்களின் புத்தகச் சுமையை குறைப்பதற்காக,தமிழ்வழி மாணவருக்கு, சமச்சீர் கல்வி பாடத்திட்டத்தை மூன்றாக பிரித்து, முப்பருவ கல்வி திட்டத்தை, ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரை நடைமுறைப்படுத்தி, ஒவ்வொரு பாடத்திட்டத்திற்கும் அக மற்றும் புறமதிப்பீட்டின் கீழ், மாணவரின் தேர்ச்சி கணக்கில் எடுத்துக் கொண்டது.அதேபோல், ஆங்கிலவழி வகுப்புக்கும்முப்பருவ கல்வி முறையை அமல்படுத்தி வருகிறது. நடப்பு கல்வி ஆண்டில், ஆறு, ஏழு, ஒன்பதாம்வகுப்புகளுக்கு முப்பருவ ஆங்கில வழிக்கல்வி திட்டத்தைஅமல்படுத்தி உள்ளது. அதற்காக, ஆங்கில வழி புத்தகங்கள் அச்சடிக்கப்பட்டு, அவை பள்ளிக்கு அனுப்பும் பணி துவங்கிவிட்டது.
முன்னதாக, ஒவ்வொரு தலைமை ஆசிரியருக்கும் ஒரு உத்தரவு போடப்பட்டுள்ளது. அதில், மேற்கண்ட மூன்று வகுப்புக்கும், ஆங்கிலவழிக் கல்வி வகுப்பை துவங்கி, தமிழ்வழி வகுப்பு எடுத்தஆசிரியர்களை கொண்டு, ஆங்கில வகுப்பை எடுக்க வேண்டும். அதனால், கோடை விடுமுறையில், ஆங்கிலவழி மாணவர் சேர்க்கையை தீவிரப்படுத்த வேண்டும் என, கூறப்பட்டுள்ளது. அதிகாரிகளின் உத்தரவு நடைமுறைப்படுத்துவது ஒருபக்கம் இருந்தாலும், அவை முழுமையடையாத உத்தரவாகவே உள்ளது.
அரசு பள்ளிகளில் பணியாற்றும் 90 சதவீத ஆசிரியர் தமிழ்வழி படித்து, ஆசிரியர் பணிக்கு வந்தவர்கள்.அவர்களுக்கு, ஆங்கில வழிப்புலமை, துவக்கப்பள்ளி குழந்தைக்கு எடுப்பதற்கு மட்டுமே வாய்ப்புண்டு. உயர்நிலை வகுப்புக்கு ஆங்கில பாடத்தை எடுக்க அறிவுறுத்துவது இயலாத காரியம். அவர்களுக்கு என்னதான் பயிற்சி கொடுத்தாலும், ஆங்கில புலமையின்றி வகுப்பு எடுக்க முடியாது. அவர்கள் மீது, கல்வித்துறை ஆங்கில திணிப்பு செய்வதால், ஆங்கில வழியில் மாணவரை சேர்க்க விரும்பும்பெற்றோரும்,அதிருப்தி அடைகின்றனர்.ஆங்கில வழி புலமை பெற்ற ஆசிரியர்களை கொண்டு, ஆங்கிலவழித்திட்டத்தை அமல்படுத்தினால் மட்டுமே, தனியார் பள்ளி மாணவருக்கு இணையாக, அரசு பள்ளி மாணவரும் ஆங்கில புலமை பெற முடியும். இவ்வாறு அவர் கூறினார்.
News Dinamalar