அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை குறைந்து வருவதால், 'சர்பிளஸ்' ஆசிரியர்கள்
எண்ணிக்கை அதிகரிக்கும் அச்சத்தில் ஆசிரியர்கள் உள்ளனர்.அரசு விதிப்படி, ஆசிரியர்,
மாணவர் விகிதம் தொடக்கப்பள்ளியில் 1:30, உயர்நிலை பள்ளியில் 1:35, 9 மற்றும் பத்தாம்
வகுப்புகளில் 1:40 என இருக்க வேண்டும். ஆனால், இந்த ஆண்டு பெரும்பாலான
அரசுப்பள்ளிகளில், மாணவர் எண்ணிக்கை குறைந்து விட்டது. மாறாக, ஆசிரியர்கள்
எண்ணிக்கை அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது, மாநில அளவில் 3,000 ஆசிரியர்கள் 'சர்பிளஸ்' ஆக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில்,
'பணிநிரவல்' அடிப்படையில் மாறுதலுக்கு ஆளாக நேரிடும் என்ற அச்சம்
ஆசிரியர்களிடையே ஏற்பட்டுஉள்ளது.தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழக மதுரை மாவட்ட செயலாளர் முருகன் கூறுகையில், ''அரசுப் பள்ளிகளில் ஆங்கில வகுப்புகள் துவங்கப்படுவதால், அங்கு 'சர்பிளஸ்'ஆசிரியர்களை நியமிக்கவும், மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் வகுப்பறைகள் எண்ணிக்கைக்கு ஏற்ப சரியான விகிதத்தில் ஆசிரியர்கள் எண்ணிக்கை இருக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கவும் வேண்டும்,'' என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக