மதுரை காமராஜ்பல்கலை துணைவேந்தராக, யு.ஜி.சி.,விதிகளுக்கு புறம்பாககல்யாணி மதிவாணன்
நியமிக்கப்பட்டுள்ளதை ஏற்க முடியாது.நியமனம் ரத்து செய்யப்படுகிறது என, மதுரை ஐகோர்ட்
கிளை உத்தரவிட்டது.
மதுரையை சேர்ந்த ஜெயராஜ் என்பவர்தாக்கல் செய்த மனு: இணைப்பேராசிரியராக பணிபுரிந்த கல்யாணி மதிவாணன், மதுரை காமராஜ்பல்கலை துணைவேந்தராக நியமிக்கப்பட்டார்.
மானியக்குழு (யு.ஜி.சி.,) விதிகள்படி,ஏதாவது ஒரு பல்கலையில் 10 ஆண்டுகள் பேராசிரியராக பணிபுரிந்திருக்க வேண்டும். அல்லது புகழ்பெற்றஆராய்ச்சி மையத்தில், பணியாற்றிய அனுபவம் இருக்க வேண்டும். மதுரை காமராஜ் பல்கலை யில்விரிவுரையாளராக பணிபுரிந் தேன். எம்.லிட்.,- பி.எச்.டி.,படித்துள்ளேன். துணைவேந்தர் நியமனத்திற்கான அனைத்து தகுதிகளும் எனக்கு உள்ளது. துணைவேந்தர் தேர்வுக்குழுவிற்கு,எனது பெயரை தேர்வு செய்யுமாறு விண்ணப்பித்தேன். இணைப் பேராசிரியராக இருந்தகல்யாணியை நியமித்தது சட்டவிரோதம். அவர் துணைவேந்தராக பணியாற்ற தடை விதித்து,நியமனத்தை சட்டவிரோதம் என அறிவிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார். இதுபோல்பேராசிரியர்கள் இஸ்மாயில், சந்திரன்பாபு மனுக்கள் தாக்கல் செய்தனர். நீதிபதிகள் வி.ராமசுப்பிரமணியன்,வி.எம்.வேலுமணி பெஞ்ச் முன், விசாரணைக்கு வந்தது.
மனுதாரர்களின் வக்கீல்கள் ஜி.ஆர்.சாமிநாதன், லஜபதிராய், கிருஷ்ணன் ஆஜராகினர். நீதிபதிகள் உத்தரவு: மதுரை காமராஜ் பல்கலையில் 2011--12 ல்துணைவேந்தர் பதவி காலியாக இருந்தது. இதற்கு தகுதியானவர்களை தேர்வு செய்யஅரசு தேர்வுக்குழு அமைத்தது. மொத்தம் 104 பேரை தேர்வுக்குழு பரிசீலனை செய்து பேராசிரியர் ஜெயராமன், சென்னை எத்திராஜ் பெண்கள் கல்லூரி ஆங்கிலத்துறைத் தலைவர் கல்யாணி மதிவாணன், பேராசிரியர் டி.ராமசாமியை துணைவேந்தர் பதவிக்கு தேர்வுக்குழு பரிந்துரைத்தது. கல்யாணி மதிவாணனை துணைவேந்தராக நியமித்து, 2012 ஏப்.,9 ல் தமிழக அரசின் உயர்கல்வித்துறை உத்தரவிட்டது. மனுதாரர்கள், 'கல்யாணி தனது முழுப் பணிக்காலத்தில் பேராசிரியராகபணிபுரியவில்லை. யு.ஜி.சி.,விதிகள்படி, 10 ஆண்டுகள் பேராசிரியராக பணிபுரிந்தவர்களைத்தான்,துணைவேந்தராக நியமிக்க வேண்டும்,' என்கின்றனர்.
எத்திராஜ் கல்லூரியில் 1981ல் உதவி பேராசிரியராக,கல்யாணி பணிபுரிந்துள்ளார். அவர், 1994ல் ஆங்கிலத்தில் பி.எச்.டி.,முடித்துள்ளார். அதே கல்லூரியில்,இணைப் பேராசிரியர், ஆங்கிலத்துறை தலைவராக இருந்துள்ளார். பேராசிரியர் பணியை இணைப் பேராசிரியர்பணிக்கு சமமானதாக கருத முடியாது. பேராசிரியராக 10 ஆண்டுகள், இணைப் பேராசிரியராக 8 ஆண்டுகள் முன் அனுபவம் இருக்க வேண்டும். இரண்டிற்கும் சம்பளத்தில் வேறுபாடு உள்ளது. பேராசிரியர் 10 புத்தகங்கள்,
இணைப் பேராசிரியர் 5 புத்தகங்கள் வெளியிட்டிருக்க வேண்டும். 'அரசு மற்றும் அரசு உதவி பெறும்
கல்லூரிகளில் பேராசிரியர் பணி இடம் இல்லை,' என அரசுத் தரப்பில் கூறுவதை ஏற்க முடியாது.
கல்யாணியைத் தவிர, துணைவேந்தர் பதவிக்கு விண்ணப்பித்த 104 பேரில், 103 பேர் பேராசிரியர்கள். இவ்விபரம்,கவர்னர் அலுவலகத்தில் தகவல் உரிமைச் சட்டம் மூலம் பெறப்பட்டுள்ளது. நிபுணத்துவம் பெற்ற தரமானகல்வியாளர்களை, துணைவேந்தர்களாக நியமிக்க வேண்டும். சென்னை பல்கலையில் பல்வேறு நீதிபதிகள், துணைவேந்தர் பதவியை அலங்கரித்துள்ளனர். கோல்கட்டா ஐகோர்ட் தலைமை நீதிபதியாக இருந்த ஜான் ஜார்ஜ்உட்ராப், சர்.சுப்பிரமணிய அய்யர், சர்.சிவசாமி அய்யர், நீதிபதி ஓல்டு பீல்டு உட்பட பலர் துணைவேந்தர்களாகபதவி வகித்துள்ளனர். 'இன்றைய நிலையில், தரமான மனிதர்களை துணைவேந்தர்களாக நியமிக்கக்கூடிய சூழல்இல்லை,' என மனுதாரர்கள் கூறுகின்றனர்.
எனவே, இத்துறையை சட்டத்தால் ஒழுங்குபடுத்த வேண்டியுள்ளது. யு.ஜி.சி., விதிகள்படி துணைவேந்தர், தனித்துவமிக்க, சிறந்த கல்வியாளராக இருக்க வேண்டும். இன்றைய நிலையில் யு.ஜி.சி., விதிகள்படி, விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் கூட துணைவேந்தராக வரமுடியாது. ஆனால், கல்யாணியை கல்வியாளர் இல்லை என கூறவில்லை. துணைவேந்தருக்கான தகுதிகள் பற்றி யு.ஜி.சி.,விதிகளில் குறிப்பிட்டுள்ளபோது, மதுரை காமராஜ் பல்கலை விதிகளில் துணைவேந்தர்நியமனம் பற்றி எந்த தகுதிகளும் வரையறை செய்யப்படவில்லை என்பதை ஏற்க முடியாது. அப்படியானால்,
யாரை வேண்டுமானாலும் துணைவேந்தராக நியமிக்கக்கூடிய நிலை ஏற்படும். இவ்வழக்கைப் பொறுத்தவரை, அப்படி ஒரு மோசமான நிலை ஏற்படவில்லை. பல்கலை சட்டம், விதிகளைவிட பல்கலையை நிர்வகிக்கும் யு.ஜி.சி.,யின் விதிகளை பின்பற்ற வேண்டும். தற்போதைய துணைவேந்தர் யு.ஜி.சி., விதிகள்படி தகுதியானவர்தானா? பல்கலை விதிகளில் ஏதாவது ஒன்று யு.ஜி.சி., விதிகளுக்கு பொருந்தும்வகையில் உள்ளதா? என வேந்தர் அல்லது தேர்வுக்குழு கண்டறிய வாய்ப்பில்லை. பலர் பி.எச்.டி.,பட்டம் பெற,கல்யாணி வழிகாட்டியாக இருந்துள்ளார்; அதையே துணைவேந்தருக்குரிய தகுதியாக கருத வேண்டும் என்ற வாதத்தை ஏற்க முடியாது. அவரது தகுதிகளைப் பொறுத்தவரை, யு.ஜி.சி.,யின் எந்த ஒரு விதியையும் பூர்த்தி செய்யவில்லை. யு.ஜி.சி., விதிகளுக்கு புறம்பாக நியமிக்கப்பட்டுள்ளதை ஏற்க முடியாது. அவரது நியமனம் ரத்து செய்யப்படுகிறது, என்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக