செவ்வாய், 17 ஜூன், 2014

'உயிரியல்' ஆசிரியர்களை சோதிக்கும் 'கவுன்சிலிங்': 19 ஆண்டுகளாக தொடருது குழப்பம்

அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 'உயிரியல்' பாடத்திற்கு ஆசிரியர் பணியிடங்கள்
ஒதுக்குவதில், கடந்த 19 ஆண்டுகளாக நீடிக்கும் குழப்பத்திற்கு, இந்தாண்டு நடக்கும்
கலந்தாய்வில் முற்றுப்புள்ளி வைக்கவேண்டும் என ஆசிரியர்கள் எதிர்பார்க்கின்றனர்.

தமிழகத்தில் 3,000 மேல்நிலை பள்ளிகள் உள்ளன. 1995ம் ஆண்டுக்குமுன்
ஒவ்வொரு பள்ளிகளிலும், தாவரவியல் மற்றும் விலங்கியலுக்கு என தனித்தனி ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டனர். ஆனால், 1995க்கு பின், தரம் உயர்த்தப்பட்ட மேல்நிலைப் பள்ளிகளில்,இப்பணியிடத்தை 'உயிரியல்' என மாற்றி, தாவரவியல் அல்லது விலங்கியல் ஆசிரியர்கள் யாராவது ஒருவர்மட்டுமே பணிநியமனம் செய்யப்பட்டனர். இதனால், ஒவ்வொரு ஆண்டும் மாறுதல் 'கவுன்சிலிங்'கின் போதும்,இப்பாடப் பிரிவு ஆசிரியர்கள் பேராட்டம் நடத்தி வருகின்றனர். இதன் எதிரொலியாக,கடந்தாண்டு இப்பிரச்னைக்கு தீர்வு காணப்படும் என, கல்வி அதிகாரிகள் உறுதி அளித்தனர்.
இந்தாண்டு வெளியிடப்பட்ட 'கவுன்சிலிங்' அறிவிப்பில், 'பொதுமாறுதல் கோரும் ஆசிரியர், உயிரியியல் பாட ஆசிரியர் என்றால், 'உயிரியல்' என்றும் ஆசிரியரின் முதன்மை பாடம் 'தாவரவியலா' அல்லது 'விலங்கியலா'என்பதையும் இணையதள விண்ணப்பத்தில் குறிப்பிட வேண்டும்' என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால், விண்ணப்பப்பதிவின்போது அந்த வசதி இணையதளத்தில் இல்லாததால் ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதனால்,
இந்தாண்டும் 'கவுன்சிலிங்' போது குழப்பம் நீடிக்கும் வாய்ப்பு உள்ளதாக ஆசிரியர்கள் கவலையில் உள்ளனர்.
தமிழ்நாடு மேல்நிலை பள்ளி முதுகலை ஆசிரியர் கழக மாநில அமைப்பு செயலாளர் பிரபாகரன், மாவட்டத்தலைவர் சரவணமுருகன் கூறியதாவது: இப்பிரச்னை 1995 முதல் 2,000 பள்ளிகளில் உள்ளது.மதுரை மாவட்டத்தில் 40 பள்ளிகளில் 'உயிரியல்' பணியிடம் எனவும்; 19 பள்ளிகளில் 'தாவரவியல்'அல்லது 'விலங்கியல்' பணியிடங்கள் என்றும் உள்ளன. இதனால், உயிரியல் பாடத்தில் காலிப்பணியிடம் ஏற்படும் போது அதில் தாவரவியல் ஆசிரியருக்கு மாறுதல் பெற்றால், அது தாவரவியல்பணியிடமாகவே காண்பிக்கப்பட்டு விலங்கியல் ஆசிரியர் பெற முடியாத சூழ்நிலை ஏற்படுகிறது. இதை சரிசெய்ய, தாவரவியல் அல்லது விலங்கியல் ஆசிரியர் மாறுதல் பெறும்போது உயிரியியல் மற்றும் அவர்களின் முதன்மை பாடத்தில் ஏற்படும் காலிப்பணியிடமும் காண்பிக்க கல்வி அதிகாரிகள்
நடவடிக்கை எடுக்கவேண்டும். இவ்வாறு கூறினர்.


Sent from my iPad

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக