திங்கள், 23 ஜூன், 2014

தமிழகத்தில், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளுக்கான முதற்கட்ட கலந்தாய்வு,நேற்றுடன் முடிவடைந்தது

தமிழகத்தில், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளுக்கான முதற்கட்ட கலந்தாய்வு,
நேற்றுடன் முடிவடைந்தது. 2,521 பேர், எம்.பி.பி.எஸ்., இடங்களை பெற்றனர். இரண்டாம் கட்டகலந்தாய்வு, ஜூலை இரண்டாவது வாரத்தில் தொடங்கும்' என, மருத்துக்கல்வி இயக்ககம்அறிவித்துள்ளது.
தமிழகத்தில், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கான, முதற்கட்ட கலந்தாய்வு, இம்மாதம், 18ம் தேதி தொடங்கியது. 19 அரசுக் கல்லுாரிகளில் உள்ள, 2,023எம்.பி.பி.எஸ்., இடங்கள் மற்றும், 85 பி.டி.எஸ்., இடங்களுக்கும் கலந்தாய்வு
நடந்தது. இரண்டு நாட்களிலேயே, பெரும்பாலான அரசுக் கல்லுாரிகளில் முக்கிய இடங்கள் நிரம்பின. அதன்பின், அரசு கல்லுாரிகளில் காலியாக உள்ள இடங்கள், ஏழு சுய நிதி கல்லுாரிகளில் இருந்து,மாநிலத்திற்கு கிடைத்த, 498 இடங்களுக்கும் கலந்தாய்வு நடந்தது. முதற்கட்ட கலந்தாய்வு நேற்றுடன் முடிந்தது. 3,500 மாணவர்கள் பங்கேற்றனர். 2,521 பேர், எம்.பி.பி.எஸ்; 85 பேர்,பி.டி.எஸ்., இடங்களையும் தேர்வு செய்தனர். முதற்கட்ட கலந்தாய்வில் எல்லா இடங்களும் நிரம்பி விட்டன. மருத்துவ மாணவர் சேர்க்கை செயலர் சுகுமார் கூறியதாவது:அரசு கல்லுாரிகளில் அனுமதி பெற உள்ள, 175இடங்கள், பிற சுயநிதி கல்லுாரிகளில் இருந்து மாநிலத்திற்கு கிடைக்கும் இடங்களுக்கும் சேர்த்து, ஜூலை,2ம் வாரத்தில், இரண்டாம் கட்ட கலந்தாய்வு நடக்கும்.காலியாக உள்ள இடங்கள், கலந்தாய்வு விவரங்கள், tnhealth.org என்ற, இணையதளத்தில்வெளியிடப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.


V

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக