கல்வி உதவித் தொகை மோசடி: தமிழக அரசுக்கு நீதிமன்றம் நோட்டீஸ்
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ஆதிதிராவிடர் நல பள்ளிகளில்ஏழை மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகை ரூ.81லட்சத்தை மோசடி செய்த 77 தலைமை ஆசிரியர்கள் மீது விசாரணை நடத்தக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்
செய்யப்பட்டுள்ளது. இந்த மனுவுக்கு ஜூலை 9-ஆம் தேதிக்குள் பதில் மனு தாக்கல்
செய்யுமாறு தமிழக பள்ளி கல்வித் துறைச் செயலருக்கு நோட்டீஸ் அனுப்ப
நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக முன்னாள் ராணுவ வீரர் ஆர்.கண்ணன் கோவிந்தராஜுலு உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு விவரம்: நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ஆதிதிராவிடர் நலப் பள்ளிகளில் பயிலும் ஏழை மாணவர்களுக்கான, 2011-12 ஆம் ஆண்டு கல்வி உதவித் தொகை ரூ. 81லட்சத்தில் முறைகேடு நடந்தது. இது தொடர்பாக, 77 பள்ளி தலைமை ஆசிரியர்களை நாமக்கல் மாவட்டத்தெடக்கக் கல்வி அதிகாரி கடந்த 2012-ஆம் ஆண்டு பணியிடை நீக்கம்செய்து உத்தரவிட்டார். அதன் பிறகு கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் அந்தஉத்தரவுக்கு தடை விதிக்கப்பட்டது. அந்த 77 தலைமை ஆசிரியர்கள் மீதான குற்றச்சாட்டு 21 மாதங்களாகநிலுவையில் உள்ளது. அது தொடர்பாக விசாரணை ஏதும் செய்யப்படவில்லை.
இது குறித்து பள்ளி கல்வித் துறைச் செயலருக்கு மனு அளித்தேன். பணியிடை நீக்கம் செய்யப்பட்ட உத்தரவுக்கு தடை விதித்ததை நீக்கி விட்டு,உடனடியாக விசாரணை நடத்தக் கோரினேன். ஆனால்,எனது மனு தொடர்பாக இதுவரை பதில் அளிக்கவில்லை. எனவே, ஏழை மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகை ரூ. 81லட்சத்தை மோசடி செய்த 77 பள்ளி தலைமை ஆசிரியர்கள்மீது விசாரணை நடத்த பள்ளி கல்வித் துறைச் செயலருக்கு உத்தரவிடவேண்டும் என மனுவில் கோரப்பட்டது.
இந்த மனு தலைமை நீதிபதி (பொறுப்பு) சதீஷ் கே.அக்னிஹோத்ரி, நீதிபதிஎம்.எம்.சுந்தரேஷ் ஆகியோர் அடங்கியமுதன்மை அமர்வு முன்பு புதன்கிழமை (ஜூன் 25) விசாரணைக்கு வந்தது.
இந்த மனுவுக்கு ஜூலை 9-ஆம் தேதிக்குள் பதில் மனு தாக்கல் செய்யுமாறு பள்ளி கல்வித் துறைச் செயலருக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக