பிளஸ்–2 விடைத்தாள் நகலில்,கணக்கு பாடத்தில், கணக்கு தப்பிய
மதிப்பெண் கூட்டலால்குளறுபடி ஏற்பட்டுள்ளது. கலந்தாய்வுக்கு முன்
மறுமதிப்பீட்டு மதிப்பெண் வழங்கப்பட வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. 'தினத்தந்தி' செய்தி வெளியீடு பிளஸ்–2 விடைத்தாள் நகல் வெளியீட்டில்நடந்த குளறுபடி குறித்து 'தினத்தந்தி'நாளிதழில செய்தி வெளியிடப்பட்டது.
இதனை பார்த்த, சென்னை சின்மையா நகர்அருகே உள்ள பாரதியார் நகரை சேர்ந்த பிளஸ்–2 மாணவர் வே.மகேஸ்வரன்தனது சகோதரர் வே.மதன்குமாருடன் 'தினத்தந்தி' அலுவலகம் வந்து, தனக்கு கணக்கு பாடத்தில், மதிப்பெண் கூட்டல் கணக்கு தப்பி உள்ளதாகதெரிவித்தார். இது குறித்து மகேஸ்வரன் கூறியதாவது:– நாமக்கல் மாவட்டத்தில், பிளஸ்–2 மாணவர்களுக்கு நன்கு பயிற்சி அளிக்கப்படுவதால், சென்னையில்இருந்து நாமக்கல் மாவட்டம் வளையப்பட்டியில் உள்ள ஜெயம் மெட்ரிக்குலேஷன் பள்ளியில் விடுதியில்தங்கி பிளஸ்–2 படித்தேன். எனக்கு பிளஸ்–2 தேர்வில், தமிழ் 180, ஆங்கிலத்தில் 180, கணக்கு 176,இயற்பியல் 188, வேதியியல் 197, கம்ப்யூட்டர் சயின்ஸ் 189 மதிப்பெண்கள் என மொத்தம் 1,110 மதிப்பெண்கள்கிடைத்தன. இதில், கணக்கு, இயற்பியல், வேதியியல் பாடங்களில் 184.3 'கட் ஆப்' மதிப்பெண்கள் பெற்றேன். விடைத்தாள் நகலுக்கு விண்ணப்பம் அதைத் தொடர்ந்து, கணக்கு, இயற்பியல் மற்றும் வேதியியல் பாடங்களுக்கு விடைத்தாள் நகல்வேண்டி விண்ணப்பித்திருந்தேன். இதற்கான விடைத்தாள் நகல்கள் கடந்த 4–ந் தேதி இணையதளத்தில் வெளியிடப்பட்டன. நான் வெள்ளிக்கிழமை மாலையில் விடைத்தாள் நகல்களை பதிவிறக்கம்செய்து பார்த்தேன். அதில், இயற்பியல், வேதியியல் பாடங்களில் மதிப்பெண்கள் சரியாக மதிப்பிடப்பட்டு இருந்தன.கணக்கு பாடத்திலும் சரியாக மதிப்பிடப்பட்டுள்ளது. எனது கணக்கு பாட விடைத்தாளை திருத்தியகணக்கு ஆசிரியர் மிகவும் சிறப்பாக ஒரு வரி விடாமல், மிகவும் தெளிவாக திருத்தி உள்ளார். மதிப்பெண் கூட்டலில் தவறு அதன்பிறகு, ஒவ்வொரு கேள்விக்கும் நான் பெற்ற மதிப்பெண்கள், ஒவ்வொரு பக்கத்தில் நான் பெற்ற
மதிப்பெண்கள் என அந்த மதிப்பெண்களையும் தெளிவாக எழுதி உள்ளார். ஆனால்,
அவற்றை கூட்டி மதிப்பெண் போடும்போது, கூட்டலில் கணக்கு தப்பி, 186–க்கு பதில் 176
மதிப்பெண்கள் போட்டுள்ளார். இந்த 10 மதிப்பெண்கள் அதிகமாக கிடைப்பதால் எனது 'கட் ஆப்' மதிப்பெண் 189.3 ஆக உயரும். நான் மாநிலஅளவில் 1500 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் கலந்து கொண்டிருக்கிறேன். எனவே எனக்கு விளையாட்டுக்கான
முன்னுரிமைப்படி, அண்ணா பல்கலைக்கழகத்தில், ஏதாவது என்ஜினீயரிங் கல்லூரியில் இடம்
கிடைப்பதற்கான வாய்ப்பு உள்ளது. இதற்கான கலந்தாய்வு வருகிற 16–ந் தேதி நடைபெற உள்ளது. கவனமாக செயல்பட வேண்டும் அதற்கு முன், எனக்கு மறுமதிப்பீடு செய்து உரிய மதிப்பெண் போட்டு, மதிப்பெண் பட்டியல் வழங்கப்பட வேண்டும். . இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Sent from my iPad
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக